ஆழம்
12:10   قَالَ قَآٮِٕلٌ مِّنْهُمْ لَا تَقْتُلُوْا يُوْسُفَ وَاَلْقُوْهُ فِىْ غَيٰبَتِ الْجُـبِّ يَلْتَقِطْهُ بَعْضُ السَّيَّارَةِ اِنْ كُنْتُمْ فٰعِلِيْنَ‏
12:10. அவர்களில் ஒருவர்: "நீங்கள் யூஸுஃபைக் கொலை செய்யாதீர்கள்; நீங்கள் (ஏதாவது) செய்தே ஆகவேண்டுமென்றால் - அவரை ஓர் ஆழமான பாழ்க்கிணற்றில் போட்டுவிடுங்கள்; (அப்போது அவ்வழி செல்லும்) பயணிகளில் சிலர் அவரை எடுத்துக்கொள்ளக்கூடும்" என்று கூறினார்.
12:15   فَلَمَّا ذَهَبُوْا بِهٖ وَاَجْمَعُوْۤا اَنْ يَّجْعَلُوْهُ فِىْ غَيٰبَتِ الْجُبِّ‌ۚ وَاَوْحَيْنَاۤ اِلَيْهِ لَـتُنَـبِّئَـنَّهُمْ بِاَمْرِهِمْ هٰذَا وَهُمْ لَا يَشْعُرُوْنَ‏
12:15. (இவ்வாறாக) அவர்கள் அவரை அழைத்துச் சென்று ஓர் ஆழமான பாழ்க்கிணற்றில் தள்ளிவிட ஒன்றுசேர்ந்து முடிவுசெய்தபோது, "அவர்கள் (உம்மை) அறியாதவர்களாக இருக்க, நீர் அவர்களின் இச்செயலைப்பற்றி அவர்களுக்கு (ஒரு காலத்தில்) நிச்சயமாகத் தெரிவிப்பீர்" என்று நாம் யூஸுஃபுக்கு 'வஹீ' அறிவித்தோம்.