1011. وَرَوَى الإمَامُ أحْمَدُ، عَنِ الْحَسَنِ، عَنْ عِمْرَانِ ابْنِ الْحُصَيْنِ مَرْفُوعًا: لاَ نَكاَحَ إلاَّ بِوَلِيٍّ وَشَاهِدَيْنِ.
1011. ``பொறுப்பாளர் (பெண்ணிற்கு வலீ) மற்றும் இரண்டு சாட்சிகள் இல்லாமல் திருமணம் இல்லை''என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இம்ரான் இப்னு ஹுசைன் வாயிலாக ``மர்ஃபூஃ'' எனும் தரத்தில் அஹ்மதில் பதிவிடப்பட்டுள்ளது.
1012. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَيُّمَا اِمْرَأَةٍ نَكَحَتْ بِغَيْرِ إِذْنِ وَلِيِّهَا، فَنِكَاحُهَا بَاطِلٌ، فَإِنْ دَخَلَ بِهَا فَلَهَا الْمَهْرُ بِمَا اِسْتَحَلَّ مِنْ فَرْجِهَا، فَإِنِ اشْتَجَرُوا فَالسُّلْطَانُ وَلِيُّ مَنْ لَا وَلِيَّ لَهُ} أَخْرَجَهُ الأَرْبَعَةُ إِلَّا النَّسَائِيَّ، وَصَحَّحَهُ أَبُو عَوَانَةَ، وَابْنُ حِبَّانَ وَالْحَاكِمُ.
1012. தன் வலீயின் (பொறுப்பாளரின்) அனுமதி இன்றி திருமணம் செய்து கொள்கிறவளின் திருமணம் செல்லாது. அவளின் கணவன் இல்லறத்தில் ஈடுபட்டு விட்டால் அவளின் மறைவிடத்தை அவன் ஹலாலாக்கிக் கொண்டதால், அவளுக்கு மஹர் உண்டு. அவர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அப்போது, வலீ (பொறுப்பாளர்) இல்லாதவருக்கு ஆட்சியாளரே வலீ (பொறப்பாளர்) ஆவார்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இமாம் அபூ ஹவானா, இமாம் இப்னு ஹிப்பான் மற்றும் இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
1013. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {لَا تُنْكَحُ الْأَيِّمُ حَتَّى تُسْتَأْمَرَ، وَلَا تُنْكَحُ الْبِكْرُ حَتَّى تُسْـتَأْذَنَ" قَالُوا: يَا رَسُولَ اللهِ، وَكَيْفَ إِذْنُهَا ؟ قَالَ: " أَنْ تَسْكُتَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1013. ``விதவைப் பெண்ணிடம் அவளின் கட்டளையைப் பெறாமலும், கன்னிக் பெண்ணிடம் சம்மதத்தைப் பெறாமலும் அவர்களை திருமணம் செய்து வைக்கக் கூடாது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
``இறைத்தூதர் அவர்களே! அவளின் (கன்னிப் பெண்ணின்) சம்மதம் எவ்வாறு? எனக் கேட்டார்கள்.
``அவள் மௌனமாக இருப்பது'' என்று பதில் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1014. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ {الثَّيِّبُ أَحَقُّ بِنَفْسِهَا مِنْ وَلِيِّهَا، وَالْبِكْرُ تُسْتَأْمَرُ، وَإِذْنُهَا سُكُوتُهَا} رَوَاهُ مُسْلِمٌ.وَفِي لَفْظٍ: {لَيْسَ لِلْوَلِيِّ مَعَ الثَّيِّبِ أَمْرٌ، وَالْيَتِيمَةُ تُسْتَأْمَرُ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.
1014. ``விதவைப் பெண் (தன் திருமணத்தில்) தன் வலீயை (பொறுப்பாளரை) விட அதிகம் உரிமை பெற்றிருக்கிறான். மேலும், கன்னிப் பெண்ணிடம் சம்மதம் பெற வேண்டும். அவளின் அனுமதி மௌனமாய் இருப்பதாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
மற்றோர் அறிவிப்பில், ``விதவைப் பெண்ணுக்கும், வலீ (பொறுப்பாளரு)க்கும் இடையே எந்தப் அதிகாரமும் இல்லை. இன்னும், அநாதைப் பெண்ணிடம் அவளின் அனுமதியைப் பெற வேண்டும்'' என உள்ளது.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பு: விதவைப் பெண்ணின் பொறுப்பாளர் அவளின் மறுமணத்திற்குத் தடையாய் இருந்தால், அவள் தன் பொறுப்பாளரைத் தானே தேர்வு செய்துகொண்டு, சாட்சிகளின் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ளும் உரிமையைப் பெறுகிறாள் என்பது இந்த ஹதீஸின் கருத்தாகும்.
1015. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا تُزَوِّجُ الْمَرْأَةُ الْمَرْأَةَ، وَلَا تُزَوِّجُ الْمَرْأَةُ نَفْسَهَا} رَوَاهُ اِبْنُ مَاجَهْ، وَالدَّارَقُطْنِيُّ، وَرِجَالُهُ ثِقَاتٌ.
1015. ``எந்த ஒரு பெண்ணும் மற்றொரு பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கக் கூடாது. மேலும், எந்த ஒரு பெண்ணும் (பொறுப்பாளர் மற்றும் சாட்சிகள் இல்லாமல்) தானே திருமணம் செய்து கொள்ளக் கூடாது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: இப்னு மாஜா, தாரகுத்னீ
இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்.
1016. وَعَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: {نَهَى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الشِّغَارِ ؛ وَالشِّغَارُ: أَنْ يُزَوِّجَ الرَّجُلُ اِبْنَتَهُ عَلَى أَنْ يُزَوِّجَهُ الْآخَرُ اِبْنَتَهُ، وَلَيْسَ بَيْنَهُمَا صَدَاقٌ} مُتَّفَقٌ عَلَيْهِ. وَاتَّفَقَا مِنْ وَجْهٍ آخَرَ عَلَى أَنَّ تَفْسِيرَ الشِّغَارِ مِنْ كَلَامِ نَافِعٍ.
1016. ``ஷிகார்'' வகைத் திருமணத்தை இறைத்தூதர்(ஸல்) தடைசெய்தார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். `உன் மகளை எனக்கு மணமுடித்து வைக்க வேண்டும்' என்னும் நிபந்தனையுடன் ஒருவர் தன் மகளை ஒருவருக்கு மணமுடித்து வைப்பதும் அவர்கள் இருவருமே மஹர் ஏதும் கொடுக்காமல் இருந்துகொள்வதும் `ஷிகார்' ஆகும் என நாஃபிவு(ரஹ்) விளக்கம் அளிக்கிறார்கள்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
ஷிகார் என்பதற்கான நாஃபிவு அவர்கள் மூலம் புகாரீ மற்றும் முஸ்லிம் ஆகிய இருவரும் மற்றோர் அறிவிப்பில் அறிவித்துள்ளனர்.
1017. وَعَنِ ابْنِ عَبَّاسٍ - رَضِيَ اللهُ عَنْهُمَا- {أَنَّ جَارِيَةً بِكْرًا أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَتْ: أَنَّ أَبَاهَا زَوَّجَهَا وَهِيَ كَارِهَةٌ، فَخَيَّرَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ، وَابْنُ مَاجَهْ، وَأُعِلَّ بِالْإِرْسَالِ.
1017. நபி(ஸல்) அவர்களிடம் ஒரு கன்னிப் பெண் வந்து, ``என் தந்தை என் விருப்பமின்றியே என் திருமணத்தை நடத்திவிட்டார்'' என முறையிட்டார். அப்போது, அப்பெண்ணுக்கு (சேர்ந்து வாழும் அல்லது திருமணத்தை ரத்துச் செய்யும்) உரிமையை இறைத்தூதர்(ஸல்) அளித்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத் மற்றும் இப்னு மாஜா
இது ``முர்ஸல்'' எனும் தரத்திலுள்ளது என குறை கூறப்பட்டுள்ளது.
1018. وَعَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {أَيُّمَا اِمْرَأَةٍ زَوَّجَهَا وَلِيَّانِ، فَهِيَ لِلْأَوَّلِ مِنْهُمَا} رَوَاهُ أَحْمَدُ، وَالْأَرْبَعَةُ، وَحَسَّنَهُ التِّرْمِذِيُّ.
1018. ``ஒரு பெண்ணை இரண்டு வலீகள் (தனித்தனியாக இரண்டு ஆண்களுக்கு) திருமணம் செய்து வைத்திருந்தால் அப்பெண் அவர்களில் முதல் நபருக்கே (முதலில் திருமணம் செய்தவருக்கே) உரியவள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஹஸன் என்பவர் சமூரா(ரலி) அவர்களிடமிருந்து அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ``ஹஸன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பு: தன்னை முதலாவதாக மணந்தவருடன் பாலுறவு கொள்ளாத நிலையில், இரண்டாவதாக மணந்தவருடன் பாலுறவு கொண்டால், அவள் இரண்டாம் நபருக்கே உரியவள் ஆகிறாள். (காண்க சுபுலுஸ் ஸலாம்)
1019. وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَيُّمَا عَبْدٍ تَزَوَّجَ بِغَيْرِ إِذْنِ مَوَالِيهِ أَوْ أَهْلِهِ، فَهُوَ عَاهِرٌ} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ، وَالتِّرْمِذِيُّ وَصَحَّحَهُ، وَكَذَلِكَ اِبْنُ حِبَّانَ.
1019. ``தன் எஜமானர்கள் அல்லது வீட்டாரிடம் அனுமதி பெறாமல் திருமணம் செய்கிற அடிமை விபச்சாரம் புரிபவனாவான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார். அஹ்மத், அபூ தாவூத், நஸயீ மற்றும் திர்மிதீ இதனை `ஸஹீஹ்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளனர். இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) அவர்களும் இவ்வாறே குறிப்பிட்டுள்ளார்.
1020. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {لَا يُجْمَعُ بَيْنَ الْمَرْأَةِ وَعَمَّتِهَا، وَلَا بَيْنَ الْمَرْأَةِ وَخَالَتِهَا} مُتَّفَقٌ عَلَيْهِ.
1020. ``ஒரு பெண்ணையும் அவளின் அத்தையையும், ஒரு பெண்ணையும் அவளின் சிற்றன்னையையும் சம காலத்தில் மணமுடிக்க வேண்டாம் (சமகாலத்தில் மனைவியாக வைத்திருக்க வேண்டாம்)'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1021. وَعَنْ عُثْمَانَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا يَنْكِحُ الْمُحْرِمُ، وَلَا يُنْكَحُ} رَوَاهُ مُسْلِمٌ. وَفِي رِوَايَةٍ لَهُ: {وَلَا يَخْطُبُ}. وَزَادَ اِبْنُ حِبَّانَ: {وَلَا يُخْطَبُ عَلَيْهِ}.
1021. ``இஹ்ராம் அணிந்தவர் திருமணம் செய்து கொள்வதும் (பிறருக்கு) திருமணம் செய்து வைப்பதும் கூடாது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உஸ்மான்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
மற்றோர் அறிவிப்பில் ``(நிக்காஹ்) உரையாற்ற வேண்டாம் என்றும் இப்னு ஹிப்பானில் அவர் தனக்காகவோ, பிறருக்காவோ பெண் பேசவும் கூடாது; அவரிடம் பெண் கேட்கவும் கூடாது'' என்றும் உள்ளது.
1022. وَعَنِ ابْنِ عَبَّاسٍ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: {تَزَوَّجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَيْمُونَةَ وَهُوَ مُحْرِمٌ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1022. இறைத்தூதர்(ஸல்) இஹ்ராம் கட்டிய நிலையில் மைமூனா(ரலி) அவர்களை நிக்காஹ் செய்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1023. وَلِمُسْلِمٍ: عَنْ مَيْمُونَةَ نَفْسِهَا {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزَوَّجَهَا وَهُوَ حَلَالٌ}.
1023. இறைத்தூதர்(ஸல்) இஹ்ராம் கட்டாத (ஹலாலான) நிலையில்தான் என்னை மணந்தார்கள் என்று மைமூனா(ரலி) கூறினார்கள் என ஓர் அறிவிப்பு முஸ்லிமில் உள்ளது.
குறிப்பு: 1021 ஆம் ஹதீஸிற்கு விளக்கமாகவே 1022 ஆம் ஹதீஸ் உள்ளது; இதுவே சரியானதாகும்.
1024. وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِنَّ أَحَقَّ الشُّرُوطِ أَنْ يُوَفَّى بِهِ، مَا اِسْتَحْلَلْتُمْ بِهِ الْفُرُوجَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1024. ``எதன் வாயிலாக மறைவிடங்களை (உங்களுக்கு) அனுமதிக்கப்பட்டதாக நீங்கள் ஆக்கிக் கொள்கிறீர்களோ அந்த மஹர் தொகைதான் நிபந்தனைகளிலேயே நிறைவேற்றுவதற்கு அதிகத் தகுதி வாய்ந்ததாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1025. وَعَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {رَخَّصَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ أَوْطَاسٍ فِي الْمُتْعَةِ، ثَلَاثَةَ أَيَّامٍ، ثُمَّ نَهَى عَنْهَا} رَوَاهُ مُسْلِمٌ.
1025. `அவ்தாஸ்' போரின்போது மூன்று நாள்களுக்கு முத்ஆ (தற்காலிகத் திருமணம்) செய்து கொள்ள இறைத்தூதர்(ஸல்) அனுமதி அளித்தார்கள். பின்னர், அதைத் தடை செய்தார்கள் என ஸலமா இப்னு அல்அக்வஃ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1026. وَعَنْ عَلَيٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {نَهَى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمُتْعَةِ عَامَ خَيْبَرَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1026. இறைத்தூதர்(ஸல்) `முத்ஆ' திருமணத்தை கைபர் போர் நடந்த ஆண்டில் தடைசெய்தார்கள் என அலீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1027. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ، أنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ مُتْعَةِ النِّسَآئِ، وَعَنْ أكْلِ الحُمُرِ الأهِلِيَّةِ يَوْمَ خَيْبَرٍ. أخْرَجَهُ السَّبْعَةُ إلاَّ أبَا دَاؤد.
1027. பெண்களை `முத்ஆ' (தற்காலிகமாக) மணப்பதையும், நாட்டுக் கழுதையை உண்பதையும் இறைத்தூதர்(ஸல்) கைபர் போரின்போது தடைசெய்தார்கள் என அலீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லீம், அஹ்மத் மற்றும் நஸயீ
1028. وَعَنْ رَبِيْعِ ابْنِ سَبْرَةَ، عَنْ أبِيْهِ أنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِنِّيْ كُنْتُ أذِنْتُ لَكُمْ فِي الإِسْتِمْتَاعِ مِنَ النِّسآءِ، وَ إنَّ اللهَ قَدْ حَرَّمَ ذَلِكَ إلَى يَوْمِ الْقِيَامَةِ، فَمَنْ كَانَ عِنْدَهُ مِنْهُنَّ شَيْئٌ فَالْيُخْلِيْ سَبِيْلَهَا، وَلاَ تَأْخُذُوْا مِمَّا آتَيْتُمُوْهُنَّ شَيْئًا). أخْرَجَهُ مُسْلِمٌ وَأبُو دَاؤُدَ وَالنَّسَائِي وَابْنُ مَاجَةَ وَأحْمَدُ وَابْنُ حِبَّانَ.
1028. ``பெண்களை `முத்ஆ' திருமணம் புரிவதை நான் உங்களுக்கு ஆகுமானதாக்கி இருந்தேன். இப்போது மறுமை நாள் வரை `அல்லாஹ அதனைத் தடைசெய்து விட்டான். எனவே, யாரிடமேனும் அப்படி எதுவும் இருந்தால் அவர் அவளின் வழியில் அவளை விட்டுவிடட்டும். அவளுக்குக் கொடுத்ததிலிருந்து எதையும் (திரும்ப) வாங்க வேண்டாம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ரபீஃ இப்னு ஸப்ரா(ரலி) அறிவித்தார்கள்.
நூல்கள்: முஸ்லிம், அபூ தாவூத், நஸயீ, இப்னு மாஜா, அஹ்மத் மற்றும் இப்னு ஹிப்பான்.
1029. وَعَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {لَعَنَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُحَلِّلَ وَالْمُحَلَّلَ لَهُ} رَوَاهُ أَحْمَدُ، وَالنَّسَائِيُّ، وَالتِّرْمِذِيُّ وَصَحَّحَهُ.
1029. மூன்று தலாக் நிறைவேறிய பின்பு, அதைத் திரும்பப் பெறுவதற்காக, பெயரளவில் அப்பெண்ணைத் திருமணம் செய்பவரையும், அவளை மீண்டும் மணக்கும் முந்தைய கணவனையும் இறைத்தூதர்(ஸல்) சபித்தார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், நஸயீ மற்றும் திர்மிதீ
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1030. وَفِي الْبَابِ: عَنْ عَلِيٍّ أَخْرَجَهُ الْأَرْبَعَةُ إِلَّا النَّسَائِيَّ.
1030. அலீ(ரலி) வாயிலாக அபூ தாவூத், திர்மிதீ மற்றும் இப்னு மாஜாவில் மேற்கண்ட ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.