1122. وَعَنْ عَائِشَةَ -رَضِيَ اللهُ عَنْهَا- {أَنَّ اِبْنَةَ الْجَوْنِ لَمَّا أُدْخِلَتْ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَدَنَا مِنْهَا. قَالَتْ: أَعُوذُ بِاللهُ مِنْكَ، قَالَ: " لَقَدْ عُذْتِ بِعَظِيمٍ، اِلْحَقِي بِأَهْلِكِ} رَوَاهُ الْبُخَارِيُّ.
1122. ஜவ்னின் மகள் நபி(ஸல்) அவர்களுக்குத் நிக்காஹ் செய்து வைக்கப்பட்டு, அவரை இறைத்தூதர்(ஸல்) நெருங்கியபோது, ``நான் உங்களிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன் எனக் கூறினார். மிகப் பெரியவனிடம் நீ பாதுகாப்புத் தேடிக் கொண்டாய். எனவே, நீ உன் குடும்பத்தாரிடம் சென்று சேர்ந்துகொள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
குறிப்பு: இதன் முழு விபரத்தை அறிந்திடக் காண்க புகாரீ ஹதீஸ் எண்: 5637
1123. وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {لَا طَلَاقَ إِلَّا بَعْدَ نِكَاحٍ، وَلَا عِتْقَ إِلَّا بَعْدَ مِلْكٍ} رَوَاهُ أَبُو يَعْلَى، وَصَحَّحَهُ الْحَاكِمُ، وَهُوَ مَعْلُولٌ.
1123. ``திருமணத்திற்கு முன்பு `தலாக்' இல்லை. இன்னும் (ஓர் அடிமையின்) உரிமையாளராவதற்கு முன்னால் அவனை விடுதலை செய்தல் என்பதும் இல்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ யஃலா
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் இது மஃலூல் எனும் குறைபாடு உள்ளதாகும்.
1124. وَأَخْرَجَ اِبْنُ مَاجَهْ: عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ مِثْلَهُ، وَإِسْنَادُهُ حَسَنٌ، لَكِنَّهُ مَعْلُولٌ أَيْضًا.
1124. மேற்கண்ட ஹதீஸ் போன்றே மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) வாயிலாக இப்னு மாஜாவில் உள்ளது. இது `ஹஸன்' எனும் தரத்தில் உள்ளது. ஆனால் இதுவும் மஃலூல் எனும் குறைபாடு உள்ளதே ஆகும்.
1125. وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا نَذْرَ لِابْنِ آدَمَ فِيمَا لَا يَمْلِكُ، وَلَا عِتْقِ لَهُ فِيمَا لَا يَمْلِكُ، وَلَا طَلَاقَ لَهُ فِيمَا لَا يَمْلِكُ} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَصَحَّحَهُ، وَنُقِلَ عَنِ الْبُخَارِيِّ أَنَّهُ أَصَحُّ مَا وَرَدَ فِيهِ.
1125. ``எந்தப் பொருளுக்கு, தான் உரிமையாளன் இல்லையோ, அந்தப் பொருளை நேர்ச்சை செய்ய ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) உரிமையில்லை. எந்த அடிமைக்கு அவன் உரிமையாளன் இல்லையோ அந்த அடிமையை விடுதலை செய்யவும் அவனுக்கு உரிமை இல்லை. எந்தப் பெண்ணுக்கு (மணபந்தத்தின் வாயிலாக) அவன் உரிமையாளனாக இல்லையோ அவளைத் தலாக் செய்யவும் அவனுக்கு உரிமை இல்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு தம் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், திர்மிதீ
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார். இது சம்பந்தமான சட்டங்களில் இந்த ஹதீஸ் மிகவும் ஆதாரப்பூர்வமானது என இமாம் புகாரீ(ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.
1126. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلَاثَةٍ: عَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ، وَعَنِ الصَّغِيرِ حَتَّى يَكْبُرَ، وَعَنِ الْمَجْنُونِ حَتَّى يَعْقِلَ، أَوْ يَفِيقَ} رَوَاهُ أَحْمَدُ، وَالْأَرْبَعَةُ إِلَّا التِّرْمِذِيَّ وَصَحَّحَهُ الْحَاكِمُ.بَابُ الرَّجْعَةِ
1126. ``மூன்று நபர்களின் குற்றங்கள் (அவர்களின் வினைச்சுவடியில்) எழுதப்படாது. 1. தூங்கிக் கொண்டிருப்பவர் கண்விழிப்பதற்கு முன்பு வரை 2, சிறியவர் பெரியவராகும் வரை 3, புத்தி சுவாதீனமிழந்தவன் புத்தி சுவாதீனமடையும் முன்பு அல்லது தெளிவடையும் முன்பு செய்யும் குற்றங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, இப்னு மாஜா மற்றும் இப்னு ஹிப்பான்
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பு: புத்திசுவாதீனம் இழந்தவர் என்பது போதையில் இருப்பவரைக் குறிக்காது.
1127. عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ {أَنَّهُ سُئِلَ عَنِ الرَّجُلِ يُطَلِّقُ، ثُمَّ يُرَاجِعُ، وَلَا يُشْهِدُ؟ فَقَالَ: أَشْهِدْ عَلَى طَلَاقِهَا، وَعَلَى رَجْعَتِهَا}. رَوَاهُ أَبُو دَاوُدَ هَكَذَا مَوْقُوفًا، وَسَنَدُهُ صَحِيحٌ.
1127. சாட்சி ஏதும் இல்லாமல் (மனைவியைத்) `தலாக்' செய்து, பின்னர் (சாட்சி ஏதும் இல்லாமலேயே) திருப்பி அழைத்துக் கொண்ட ஒருவர் குறித்து தம்மிடம் வினவப்பட்டதற்கு, ``தலாக்கின் போதும், அதைத் திரும்பப் பெறும் போதும் சாட்சியை ஏற்படுத்திக் கொள்க!'' எனத் தாம் பதிலளித்ததாக இம்ரான் இப்னு ஹுசைன்(ரலி) கூறினார்.
இமாம் அபூ தாவூத்(ரஹ்) இதனை `மவ்கூஃப்' எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதன் அறிவிப்புத் தொடர் ஆதாரப்பூர்வமானது.
1128. وَأخْرَجَهُ الْبَيْهَقِيُّ بِلَفْظٍ: (أنَّ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، سُئِلَ عَمَّنْ رَاجَعَ امْرَأتَهُ وَلَمْ يُشْهِدْ، فَقَالَ فِيْ غَيْرِ سُنَّةٍ؟ فَلْيُشْهِدِ الآنَ) وَزَادَ الطَّبْرَانِيُّ فِيْ رِوَايَةٍ (وَيَسْتَغْفِرُ الله)
1128. பைஹகீயின் மற்றோர் அறிவிப்பில், (தலாக் செய்துவிட்ட) தன் மனைவியை, சாட்சி ஏதுமில்லாமல் திரும்பப் பெற்றுக் கொண்ட ஒருவர் குறித்து வினவப்பட்டதற்கு,
``அது சரியான வழிமுறையல்ல. இனிமேல் சாட்சியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்று இம்ரான் இப்னு ஹுசைன் கூறினார்கள் என உள்ளது.
தப்ரானீயின் மற்றோர் அறிவிப்பில், ``அவர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரட்டும்'' என்ற வாசகம் அதிகப்படியாக உள்ளது.
1129. وَعَنِ ابْنِ عُمَرَ، {أَنَّهُ لَمَّا طَلَّقَ اِمْرَأَتَهُ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعُمَرَ: "مُرْهُ فَلْيُرَاجِعْهَا.} مُتَّفَقٌ عَلَيْهِ.بَابُ الْإِيلَاءِ وَالظِّهَارِ وَالْكَفَّارَةِ
1129. நான் என் மனைவியை தலாக் செய்தபோது, என் தந்தை உமர்(ரலி) அவர்களிடம், ``அவளைத் திருப்பி அழைத்துக் கொள்ளும்படி அவருக்குக் கட்டளை இடுங்கள்'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1130. عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {آلَى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ نِسَائِهِ وَحَرَّمَ، فَجَعَلَ الْحَرَامَ حَلَالًا، وَجَعَلَ لِلْيَمِينِ كَفَّارَةً.} رَوَاهُ التِّرْمِذِيُّ، وَرُوَاتُهُ ثِقَاتٌ.وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {إِذَا مَضَتْ أَرْبَعَةُ أَشْهُرٍ وَقَفَ الْمُؤْلِ يحَتَّى يُطَلِّقَ، وَلَا يَقَعُ عَلَيْهِ الطَّلَاقُ حَتَّى يُطَلِّقَ}. أَخْرَجَهُ الْبُخَارِيُّ.وَعَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ قَالَ: {أَدْرَكْتُ بِضْعَةَ عَشَرَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّهُمْ يَقِفُونَ الْمُؤْلِي}. رَوَاهُ الشَّافِعِيّ ُ. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {كَانَ إِيلَاءُ الْجَاهِلِيَّةِ السَّنَةَ وَالسَّنَتَيْنِ، فَوَقَّتَ اللهُ أَرْبَعَةَ أَشْهُرٍ، فَإِنْ كَانَ أَقَلَّ مِنْ أَرْبَعَةِ أَشْهُرٍ، فَلَيْسَ بِإِيلَاءٍ} أَخْرَجَهُ الْبَيْهَقِيُّ..
1130. இறைத்தூதர்(ஸல்) தம் மனைவியரில் சிலரை ஈலா செய்து, அவர்களுடன் இல்லறம் நடத்துவதை விலக்கிக் கொண்டார்கள். பின்னர், தாம் விலக்கியதை மீண்டும் ஆகுமானதாய் ஆக்கினார்கள். இன்னும், (இதற்காக) சத்தியம் செய்ததற்கான (பரிகாரம் செய்வதுபோல்) பரிகாரம் செய்தார்கள்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்
1131. وَعَنِ اِبْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: {إِذَا مَضَتْ أَرْبَعَةُ أَشْهُرٍ وَقَفَ اَلْمُؤْلِ يحَتَّى يُطَلِّقَ، وَلَا يَقَعُ عَلَيْهِ اَلطَّلَاقُ حَتَّى يُطَلِّقَ}. أَخْرَجَهُ اَلْبُخَارِيُّ.
1131. ஈலா செய்தவன் (அதே நிலையில்) நான்கு மாதங்களை கழித்துவிட்டால், அவர் ஆட்சியாளர் முன்பு கொண்டு வரப்பட்டு, ஆட்சியாளர் முன்பே `தலாக்' செய்யவேண்டும். அவர் தலாக் மொழியாதவரை `தலாக்' நிறைவேறாது என இப்னு உமர்(ரலி) கூறினார்.
நூல்: புகாரீ
1132. وَعَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ قَالَ: {أَدْرَكْتُ بِضْعَةَ عَشَرَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّهُمْ يَقِفُونَ اَلْمُؤْلِي}. رَوَاهُ اَلشَّافِعِيّ ُ.
1132. `நான் நபித்தோழர்களில், பத்துக்கும் மேற்பட்டோரை ஈலாவை நான்கு மாதம் முடிந்த உடன் நிறுத்தி விடுபவர்களாகக் கண்டுள்ளேன்'' என சுலைமான் இப்னு யஸார்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஷ் ஷாஃபியீ
1133. وَعَنِ اِبْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: {كَانَ إِيلَاءُ اَلْجَاهِلِيَّةِ اَلسَّنَةَ وَالسَّنَتَيْنِ، فَوَقَّتَ اللَّهُ أَرْبَعَةَ أَشْهُرٍ، فَإِنْ كَانَ أَقَلَّ مِنْ أَرْبَعَةِ أَشْهُرٍ، فَلَيْسَ بِإِيلَاءٍ} أَخْرَجَهُ اَلْبَيْهَقِيُّ.
1133. ``அறியாமைக் காலத்தில் `ஈலா' ஓராண்டு, இரண்டு ஆண்டுகள் என்று இருந்தது (இஸ்லாமில்) அது நான்கு மாதங்கள்தான் என அல்லாஹ் அதற்கு கால நிர்ணயம் செய்துவிட்டான். நான்கு மாதங்களுக்குக் குறைந்ததில் `ஈலா' இல்லை'' என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.
நூல்: பைஹகீ
குறிப்பு: ஈலா என்பதற்கான முழுமையான விளக்கத்தைக் காண்க திருக்குர்ஆன் வசனம் 2:226
ளிஹார் என்பதற்கு முழுமையான விளக்கத்தைக் காண்க திருக்குர்ஆன் 58:2-4 மேலும் காண்க புகாரீ ஹதீஸ் எண் 5291
1134. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمَا؛ {أَنَّ رَجُلًا ظَاهَرَ مِنِ اِمْرَأَتِهِ، ثُمَّ وَقَعَ عَلَيْهَا، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنِّي وَقَعْتُ عَلَيْهَا قَبْلَ أَنْ أُكَفِّرَ، قَالَ: "فَلَا تَقْرَبْهَا حَتَّى تَفْعَلَ مَا أَمَرَكَ اللهُ".} رَوَاهُ الْأَرْبَعَةُ وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ، وَرَجَّحَ النَّسَائِيُّ إِرْسَالَه ُ. وَرَوَاهُ الْبَزَّارُ: مِنْ وَجْهٍ آخَرَ، عَنِ ابْنِ عَبَّاسٍ وَزَادَ فِيهِ: {كَفِّرْ وَلَا تَعُدْ}.
1134. ஒருவர் தன் மனைவியை `ளிஹார்' செய்தார். பின்னர், அவளுடன் உறவு கொண்டார், பின்னர், இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ``நான் பரிகாரம் செய்வதற்கு முன்பே அவளுடன் உறவு கொண்டுவிட்டேன்'' எனக் கூறினார்.
``அல்லாஹ் உனக்கு அளித்துள்ள சட்டத்தை நீ நிறைவேற்றாதவரை (பரிகாரம் செய்யாத வரை) நீ அவளை நெருங்கக் கூடாது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார். இதில் `முர்ஸல்' எனும் தரமே சரியானது என இமாம் நஸயீ(ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.
இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாக பஸ்ஸாரின் மற்றோர் அறிவிப்பில் `பரிகாரம்' செய்துகொள்! இனிமேல் இவ்வாறு செய்யாதே!'' என உள்ளது.
குறிப்பு: பரிகாரம் குறித்து அறிவதற்கு திருக்குர்ஆனின் 58:2,3 வசனங்களைக் காண்க!
1135. وَعَنْ سَلَمَةَ بْنِ صَخْرٍ قَالَ: {دَخَلَ رَمَضَانُ، فَخِفْتُ أَنْ أُصِيبَ اِمْرَأَتِي، فَظَاهَرْتُ مِنْهَا، فَانْكَشَفَ لِي مِنْهَا شَيْءٌ لَيْلَةً، فَوَقَعَتْ عَلَيْهَا، فَقَالَ لِي رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "حَرِّرْ رَقَبَةً" قُلْتُ: مَا أَمْلِكُ إِلَّا رَقَبَتِي. قَالَ: "فَصُمْ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ"، قُلْتُ: وَهَلْ أَصَبْتُ الَّذِيْ أَصَبْتُ إِلَّا مِنَ الصِّيَامِ؟ قَالَ: "أَطْعِمْ عِرْقًا مِنْ تَمْرٍ بَيْنَ سِتِّينَ مِسْكِينًا".} أَخْرَجَهُ أَحْمَدُ، وَالْأَرْبَعَةُ إِلَّا النَّسَائِيَّ، وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ، وَابْنُ الْجَارُودِ.بَابُ اللِّعَانِ
1135. ரமளான் வந்துவிட்டதால், அதில் என் மனைவியுடன் உறவு கொண்டு விடுவனோ எனப் பயந்தவனாக நான் என் மனைவியை `ளிஹார்' செய்துவிட்டேன். ஒர் இரவில் அவளின் அங்கம் ஒன்று வெளிப்பட்டு (என்னைக் கவர்ந்து) விட்டதால், நான் அவளுடன் உறவு கொண்டேன். அதற்காகப் பரிகாரமாக, ``நீ ஓர் அடிமையை விடுதலை செய்!'' என்று இறைத்தூதர்(ஸல்) என்னிடம் கூறினார்கள்.
``என் தலையைத் தவிர வேறு எந்தத் தலைக்கும் நான் உரிமையாளன் இல்லை'' என நான் கூறினேன்.
``அப்படியானால் தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் நோன்பு நோற்றுக்கொள்!'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
``எனக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை நோன்பினால்தானே ஏற்பட்டுள்ளது? என நான் கூறினேன்.
``ஏழைகளுக்கு ஒரு ஃபரக்'' அளவு பேரீச்சம் பழத்தை உணவளி'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஸலமா இப்னு ஸக்ர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இமாம் இப்னு குஸைமா மற்றும் இப்னுல் ஜாரூத்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
குறிப்பு: அறுபது ஸாவு அளவையைக் கொண்டது ஒரு ஃபரக் எனப்படும்.
1136. عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {سَأَلَ فُلَانٌ فَقَالَ: يَا رَسُولَ اللهِ! أَرَأَيْتَ أَنْ لَوْ وَجَدَ أَحَدُنَا اِمْرَأَتَهُ عَلَى فَاحِشَةٍ، كَيْفَ يَصْنَعُ؟ إِنْ تَكَلَّمَ تَكَلَّمَ بِأَمْرٍ عَظِيمٍ، وَإِنْ سَكَتَ سَكَتَ عَلَى مِثْلِ ذَلِكَ! فَلَمْ يُجِبْهُ، فَلَمَّا كَانَ بَعْدَ ذَلِكَ أَتَاهُ، فَقَالَ: إِنَّ الَّذِيْ سَأَلْتُكَ عَنْهُ قَدِ ابْتُلِيتُ بِهِ، فَأَنْزَلَ اللهُ الْآيَاتِ فِي سُورَةِ النُّورِ، فَتَلَاهُنَّ عَلَيْهِ وَوَعَظَهُ وَذَكَّرَهُ، وَأَخْبَرَهُ أَنَّ عَذَابَ الدُّنْيَا أَهْوَنُ مِنْ عَذَابِ الْآخِرَةِ. قَالَ: لَا، وَالَّذِيْ بَعَثَكَ بِالْحَقِّ مَا كَذَبْتُ عَلَيْهَا، ثُمَّ دَعَاهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَعَظَهَا كَذَلِكَ، قَالَتْ: لَا، وَالَّذِيْ بَعَثَكَ بِالْحَقِّ إِنَّهُ لَكَاذِبٌ، فَبَدَأَ بِالرَّجُلِ، فَشَهِدَ أَرْبَعَ شَهَادَاتٍ، ثُمَّ ثَنَّى بِالْمَرْأَةِ، ثُمَّ فَرَّقَ بَيْنَهُمَا.} رَوَاهُ مُسْلِمٌ.
1136. இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இன்னார் ஒருவர் வந்து, ``இறைத்தூதர் அவர்களே!'' எங்களில் ஒருவர் தன் மனைவியை மானக்கேடான செயலில் ஈடுபட்டிருக்கக் கண்டால், அவர் என்ன செய்வது?'' என வினவினார்.
இறைத்தூதர்(ஸல்) பேசினாலும், மிகப்பெரியதொரு விஷயத்திற்காகத்தான் பேசுவார்கள்; மௌனமாய் இருந்தாலும் அப்படிப்பட்டதொரு விஷயத்திற்காகத்தான் மௌனமாய் இருப்பார்கள். இறைத்தூதர்(ஸல்) அவருக்கு எந்தப் பதிலும் கூறவில்லை. அவர் மறுபடியும் வந்து, ``நான் தங்களிடம் கேட்ட விஷயத்திலே, நானே பாதிக்கப்பட்டுள்ளேன்'' எனக் கூறினார்.
ஏற்கனவே அல்லாஹ் இது தொடர்பான சூரத்துன்னூர் வசனங்களை அவருக்கு ஓதிக் காண்பித்து உபதேசம் செய்தார்கள். இன்னும், உலகத் தண்டனை மறுமைத் தண்டனையைவிட லேசானது என்றும் தெரிவித்தார்கள்.
``இல்லை தங்களைச் சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! நான் அவர்களுக்கு எதிராகப் பொய்யுரைக்கவில்லை'' என அவர் கூறினார்.
பின்னர், அவரின் மனைவியை அழைத்து அவளுக்கும் அவ்வாறே உபதேசம் செய்தார்கள். அவள் ``இல்லை, தங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அவர் பொய்யர்'' எனக் கூறினாள்.
பின்னர் இறைத்தூதர்(ஸல்) முதலில் அந்த மனிதரை அழைத்து சத்தியம் செய்யச் சொன்னார்கள். அவர் நான்கு முறை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தார். பின்னர் இறைத்தூதர்(ஸல்) இரண்டாவதாக அந்தப் பெண்ணை அழைத்து சத்தியம் செய்யச் சொன்னார்கள். பின்னர், இருவரையும் பிரித்து விட்டார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்.
குறிப்பு: தன் மனைவியைத் தவறான நடத்தையில் கண்ட கணவன் தன்னைத் தவிர சாட்சி யாரும் இல்லை எனில், நீதிபதி அல்லது ஆட்சியாளர் அல்லது ஜமாஅத் தலைவர் முன்னிலையில் நான்கு முறை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து ஐந்தாம் முறை அல்லாஹ்வின் சாப அழைப்பை ஏற்பதாகும்.
குறிப்பு: காண்க திருக்குர்ஆனின் 24:4-9 வசனங்களைக் காண்க!
1137. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا أَيْضًا {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِلْمُتَلَاعِنَيْنِ: "حِسَابُكُمَا عَلَى اللهُ تَعَالَى، أَحَدُكُمَا كَاذِبٌ، لَا سَبِيلَ لَكَ عَلَيْهَا" قَالَ: يَا رَسُولَ اللهِ! مَالِي؟ قَالَ: "إِنْ كُنْتَ صَدَقْتَ عَلَيْهَا، فَهُوَ بِمَا اِسْتَحْلَلْتَ مِنْ فَرْجِهَا، وَإِنْ كُنْتَ كَذَبْتَ عَلَيْهَا، فَذَاكَ أَبْعَدُ لَكَ مِنْهَا"} مُتَّفَقٌ عَلَيْهِ.
1137. சத்தியம் செய்த (கணவன் மனைவி ஆகிய) இருவரிடமும், ``உங்கள் கணக்கு அல்லாஹ்விடம் உள்ளது; ஏனெனில், உங்கள் இருவரில் ஒருவர் பொய்யராவார். இனி அப்பெண்ணுடன் உனக்கு எந்தத் தொடர்புமில்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள். அப்போது,
``இறைத்தூதர் அவர்களே! என் மஹர் தொகை என்னாவது?'' என அம்மனிதர் கேட்டார்.
``நீ உண்மை பேசியிருந்தால் அவளின் மறைவிடத்தை ஏற்கனவே அனுமதிக்கப்பட்டதாய் ஆக்கிக் கொண்டு அவளை நீ அனுபவித்ததற்கு அந்த மஹர் தொகை பகரமாகிவிடும். நீ பொய் சொல்லியிருந்தால் (அதற்கு தண்டனையாக) அப்பொய்யே அவளிடமிருந்து (மஹர் தொகையைத் திரும்பப் பெறவிடாமல்) உன்னை தூரமாக்கிவிடும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1138. وَعَنِ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {أَبْصِرُوهَا، فَإِنْ جَاءَتْ بِهِ أَبْيَضَ سَبِطًا فَهُوَ لِزَوْجِهَا، وَإِنْ جَاءَتْ بِهِ أَكْحَلَ جَعْدًا، فَهُوَ الَّذِيْ رَمَاهَا بِهِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1138. அந்தப் பெண்ணைப் பாருங்கள். அவள் கட்டழகான முழு வடிவம் கொண்ட வெண்மையான குழந்தையைப் பெற்றெடுத்தால், அது அவளின் கணவனின் பிள்ளையாகும். அவள் குட்டையான கருப்பான குழந்தையைப் பெற்று எடுத்தால், அந்தப் பிள்ளை, பழி சுமத்தப்பட்டவனின் பிள்ளையாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1139. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ رَجُلاً أَنْ يَضَعَ يَدَهُ عِنْدَ الْخَامِسَةِ عَلَى فِيهِ، وَقَالَ: "إِنَّهَا مُوجِبَةٌ"} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ، وَرِجَالُهُ ثِقَاتٌ.
1139. ஐந்தாவது முறை தன் வாயில் கையை வைக்குமாறு (சாப அழைப்பை ஏற்ற) ஆணுக்கு இறைத்தூதர்(ஸல்) கட்டளையிட்டார்கள். ``நிச்சயமாக இந்த முறை சத்தியம் செய்வது (தண்டனையை) விதித்துவிடும்'' என்றும் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ
இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்.
1140. وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللهُ عَنْهُ -فِي قِصَّةِ الْمُتَلَاعِنَيْنِ- قَالَ: {فَلَمَّا فَرَغَا مِنْ تَلَاعُنِهِمَا قَالَ: كَذَبْتُ عَلَيْهَا يَا رَسُولَ اللهِ! إِنْ أَمْسَكْتُهَا، فَطَلَّقَهَا ثَلَاثًا قَبْلَ أَنْ يَأْمُرَهُ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1140. `லிஆன்' செய்த இருவரைப் பற்றிக் குறிப்பிடுகையில், அவர்கள் தம் சத்தியத்தை முடித்துக் கொண்டதும், ``இறைத்தூதர் அவர்களே! நான் அவளை (ஒட்டுமொத்தமாக) மணவிலக்குச் செய்யாமல் இனியும் வைத்திருந்தால் நான் பொய்யுரைத்தவனாய் ஆகிவிடுவேன். அவளை என்னிடம் நிறுத்திக் கொண்டால், நான் மூன்று `தலாக்' செய்தாக வேண்டும். பின்னர், இறைத்தூதர்(ஸல்) அவருக்குக் கட்டளையிடும் முன்பு மூன்று தலாக் செய்துவிட்டார் என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
குறிப்பு: இதன் முழுமையான விளக்கத்தை அறிவதற்கு முஸ்லிம் 2985 ஹதீஸ் எண் காண்க! இங்கு மூன்று தலாக் எனக் குறிப்பிட்டுள்ளதால் ஒரே நேரத்தில் மூன்று தலாக் கூறலாம் என்ற அர்த்தமல்ல; மாறாக லிஆன் செய்துவிட்டாலே மூன்று தலாக்கில் பிரிவது போன்று கணவன் மனைவிக்கு இடையில் நிரந்தரமான பிரிவு ஏற்பட்டுவிடும். அவர்கள் மறுபடியும் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பே இல்லை.
1141. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا {أَنَّ رَجُلاً جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنَّ اِمْرَأَتِي لَا تَرُدُّ يَدَ لَامِسٍ. قَالَ: "غَرِّبْهَا". قَالَ: أَخَافُ أَنْ تَتْبَعَهَا نَفْسِي. قَالَ: "فَاسْتَمْتِعْ بِهَا".} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَالْبَزَّارُ، وَرِجَالُهُ ثِقَاتٌ. وَأَخْرَجَهُ النَّسَائِيُّ مِنْ وَجْهٍ آخَرَ: عَنِ ابْنِ عَبَّاسٍ بِلَفْظٍ {قَالَ: طَلِّقْهَا. قَالَ: لَا أَصْبِرُ عَنْهَا. قَالَ: فَأَمْسِكْهَا}
1141. நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ``நிச்சயமாக என் மனைவி அவளைத் தொடுபவர்களின் கையை விலக்குவதில்லை'' எனக் கூறினார்.
``அவளைத் தூரமாக்கிவிடு!'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
``என் உள்ளம் அவளைப் பின் தொடரும் என அஞ்சுகிறேன்'' என அவர் கூறினார்.
``அப்படியானால் அவளைக் கொண்டு பலன் பெற்றுக் கொள்!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், திர்மிதி மற்றும் பஸ்ஸார்
இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்.
இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாக நஸயீயின் மற்றோர்அறிவிப்பில் ``அவளை `தலாக்' செய்துவிடு!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
``அவளின் பிரிவை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது'' எனக் கூறினார்.
``அப்படியானால் அவளைக் கொண்டு பலன் பெற்றுக் கொள்!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், திர்மிதி மற்றும் பஸ்ஸார்
இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்
இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாக நஸயீயின் மற்றோர் அறிவிப்பில் ``அவளை `தலாக்' செய்துவிடு!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள். அதற்கவர், ``அவளுடைய பிரிவை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது'' என்று கூறினார். அதற்கு, ``அப்படியானால் அவளை வைத்துக் கொள்!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என்று உள்ளது.