1217. وَأَصْلُهُ فِي "الصَّحِيحَيْنِ" مِنْ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ بِمَعْنَاهُ.بَابُ الدِّيَاتِ
1217. இதே பொருளில் அபூ ஹுரைரா(ரலி) வாயிலாக புகாரீ, முஸ்லிமில் இதன் மூலம் உள்ளது.
1218. عَنْ أَبِي بَكْرٍ بْنِ مُحَمَّدٍ بْنِ عَمْرِوِ بْنِ حَزْمٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَتَبَ إِلَى أَهْلِ الْيَمَنِ... فَذَكَرَ الْحَدِيثَ، وَفِيهِ: {أَنَّ مَنْ اِعْتَبَطَ مُؤْمِنًا قَتْلاً عَنْ بَيِّنَةٍ، فَإِنَّهُ قَوَدٌ، إِلَّا أَنْ يَرْضَى أَوْلِيَاءُ الْمَقْتُولِ، وَإِنَّ فِي النَّفْسِ الدِّيَةَ مِائَةً مِنَ الْإِبِلِ، وَفِي الْأَنْفِ إِذَا أُوعِبَ جَدْعُهُ الدِّيَةُ، وَفِي اللِّسَانِ الدِّيَةُ، وَفِي الشَّفَتَيْنِ الدِّيَةُ، وَفِي الذِّكْرِ الدِّيَةُ، وَفِي الْبَيْضَتَيْنِ الدِّيَةُ، وَفِي الصُّلْبِ الدِّيَةُ، وَفِي الْعَيْنَيْنِ الدِّيَةُ، وَفِي الرِّجْلِ الْوَاحِدَةِ نِصْفُ الدِّيَةِ، وَفِي الْمَأْمُومَةِ ثُلُثُ الدِّيَةِ، وَفِي الْجَائِفَةِ ثُلُثُ الدِّيَةِ، وَفِي الْمُنَقِّلَةِ خَمْسَ عَشْرَةَ مِنَ الْإِبِلِ، وَفِي كُلِّ إِصْبَعٍ مِنْ أَصَابِعِ الْيَدِ وَالرِّجْلِ عَشْرٌ مِنَ الْإِبِلِ، وَفِي السِّنِّ خَمْسٌ مِنَ الْإِبِلِ وَفِي المُوضِحَةِ خَمْسٌ مِنَ الْإِبِلِ، وَإِنَّ الرَّجُلَ يُقْتَلُ بِالْمَرْأَةِ، وَعَلَى أَهْلِ الذَّهَبِ الْفُ دِينَارٍ} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ فِي "الْمَرَاسِيلِ" وَالنَّسَائِيُّ، وَابْنُ خُزَيْمَةَ، وَابْنُ الْجَارُودِ، وَابْنُ حِبَّانَ، وَأَحْمَدُ، وَاخْتَلَفُوا فِي صِحَّتِهِ.
1218. இறைத்தூதர்(ஸல்) யமன்வாசிகளுக்கு (ஒரு கடிதம்) எழுதினார்கள். (அறிவிப்பாளர் ஹதீஸ் முழுவதையும் அறிவித்தார்) அதில், யாரேனும் குற்றமற்ற இறைநம்பிக்கையாளர் ஒருவரைக் கொலைசெய்து, அதற்கு ஆதாரமும் இருந்தால் அதற்காகப் பழிவாங்குவது கடமையாகும். கொலை செய்யப்பட்டவனின் பொறுப்பாளர்கள் (உயிரீட்டுத் தொகை பெற்றுக் கொண்டு) மன்னிக்க ஒப்புக் கொண்டாலே தவிர. உயிருக்கான நஷ்ட ஈடு 100 ஒட்டகங்களாகும். மேலும், மூக்கை அடியோடு அறுத்துவிட்டால் முழு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இரண்டு கண்கள், நாக்கு, உதடுகளுக்கு பதிலாக முழு நஷ்ட ஈடு தரப்பட வேண்டும். ஆண் குறிக்காவும் நஷ்ட ஈடு உண்டு; இரு விதர்களுக்காகவும் நஷ்ட ஈடு தரப்படவேண்டும். முதுகுத் தண்டு தாக்கப்பட்டாலும் நஷ்ட ஈடு தரப்படவேண்டும். ஒரு கால் வெட்டப்பட்டால் அரைப்பங்கு நஷ்ட ஈடாகும். மூளை மற்றும் வயிற்றுக் காயங்களுக்கு மூன்றில் ஒரு பங்கு நஷ்ட ஈடாகும். முதுகெலும்பைக் காயப்படுத்தியதற்கு நஷ்ட ஈடு பதினைந்து ஒட்டகங்களாகும். கை, கால்களின் ஒவ்வொரு விரலுக்கும் நஷ்ட பத்து ஒட்டகங்களாகும். ஒரு பல்லுக்குரிய நஷ்ட ஈடு ஐந்து ஒட்டகங்களாகும். எலும்பு தெரியும் அளவிற்குள்ள காயங்களுக்கு ஐந்து ஒட்டகங்கள் நஷ்ட ஈடாகும். பெண்ணுக்குப் பதிலாக ஆணை கொலை செய்பவர்களுக்குரிய நஷ்ட ஈடு அவரிடம் தங்கம் இருந்தால் ஆயிரம் தீனார்கள் ஆகும் என்று எழுதப்பட்டிருந்தது என அபூ பக்கர் இப்னு முஹம்மத் இப்னு அம்ர் இப்னி ஹஜம் தம் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவித்தார்.
நூல்கள்: நஸயீ, இப்னு குஸைமா, இப்னு ஸ்ஜாரூத், இப்னு ஹிப்பான் மற்றும் அஹ்மத்
இது `ஸஹீஹ்' என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.
1219. وَعَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {دِيَةُ الْخَطَأَ أَخْمَاسًا: عِشْرُونَ حِقَّةً، وَعِشْرُونَ جَذَعَةً، وَعِشْرُونَ بَنَاتِ مَخَاضٍ، وَعِشْرُونَ بَنَاتِ لَبُونٍ، وَعِشْرُونَ بَنِي لَبُونٍ} أَخْرَجَهُ الدَّارَقُطْنِيُّ. وَأَخْرَجَهُ الْأَرْبَعَةُ، بِلَفْظٍ: {وَعِشْرُونَ بِنِي مَخَاضٍ}، بَدَلَ: {بُنِيَ لَبُونٍ}. وَإِسْنَادُ الْأَوَّلِ أَقْوَى. وَأَخْرَجَهُ اِبْنُ أَبِي شَيْبَةَ مِنْ وَجْهٍ آخَرَ مَوْقُوفًا، وَهُوَ أَصَحُّ مِنَ الْمَرْفُوعِ.
1219. தவறுதலாகக் கொலை செய்தவன், 1. மூன்று ஆண்டுகள் பூர்த்தியான ஒட்டகங்கள் இருபது 2. நான்கு ஆண்டுகள் பூர்த்தியான ஒட்டகங்கள் இருபது 3. ஓராண்டு பூர்த்தியான பெண் ஒட்டகங்கள் பத்து 4 இரண்டு ஆண்டுகள் பூர்த்தியான ஒட்டகங்கள் இருபது 5. இரண்டு ஆண்டுகள் பூர்த்தியான ஒட்டகங்கள் இருபது, ஆகிய ஐந்து வகையான இழப்பீட்டுத் தொகை கொடுக்க வேண்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நூல்: தாரகுத்னீ
திர்மீதி, நஸயீ, இப்னு மாஜா, அபூ தாவூத் ஆகிய நூல்களில் ``இரண்டு ஆண்டுகள் பூர்த்தியான ஒட்டகங்கள் என்பதற்குப் பதிலாக ஓராண்டு பூர்த்தியான ஒட்டகங்கள்'' என உள்ளது. இருப்பினும், முதற்கூற்றே பலமானது.
இமாம் இப்னு அபீ ஷைபா(ரஹ்) இதனை மற்றொரு வழியில் `மவ்கூஃப்' எனும் தரத்தில் பதிவிட்டுள்ளார். இன்னும் இது `மர்ஃபூஃ'வை விட அதிகமாக `ஸஹீஹ்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
1220. وَأَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَالتِّرْمِذِيُّ: مِنْ طَرِيقِ عَمْرِوِ بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ رَفَعَهُ: {الدِّيَةُ ثَلَاثُونَ حِقَّةً، وَثَلَاثُونَ جَذَعَةً، وَأَرْبَعُونَ خَلِفَةً. فِي بُطُونِهَا أَوْلَادُهَا}.
1220. அம்ர் இப்னு ஷுஐபு தம் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக `மர்ஃபூஃ' எனும் தரத்தில் ``உயிரீட்டுத் தொகை மூன்று ஆண்டுகள் பூர்த்தியான முப்பது ஒட்டகங்களும், நான்கு ஆண்டுகள் பூர்த்தியான முப்பது ஒட்டகங்களும், இன்னும் வயிற்றில் குட்டியிருக்கும் நாற்பது கர்ப்பிணி ஒட்டகங்கள்'' என அபூ தாவூத் மற்றும் திர்மிதீயின் மற்றோர் அறிவிப்பில் உள்ளது.
1221. وَعَنِ ابْنِ عَمْرٍورَضِيَ اللهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {إِنَّ أَعْتَى النَّاسِ عَلَى اللهُ ثَلَاثَةٌ: مَنْ قَتَلَ فِي حَرَمَ اللهِ، أَوْ قَتَلَ غَيْرَ قَاتِلِهِ، أَوْ قَتَلَ لِذَحْلِ الْجَاهِلِيَّةِ} أَخْرَجَهُ اِبْنُ حِبَّانَ فِي حَدِيثٍ صَحَّحَهُ.
1221. 1. அல்லாஹ் புனிதமாக்கிய இடத்தில் கொலை செய்பவன். 2. கொலைசெய்யாத நிரபராதியைக் கொல்பவன். 3. அறியாமைக் கால பகையை மனதில் வைத்து கொலைசெய்பவன் ஆகிய மூன்று விதமான மக்கள் அல்லாஹ்விடம் அதிகம் வரம்பு மீறியவர்களாவர் என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: இப்னு ஹிப்பான்
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1222. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {أَلَا إِنَّ دِيَةَ الْخَطَأِ شِبْهِ الْعَمْدِ -مَا كَانَ بِالسَّوْطِ وَالْعَصَا- مَائَةٌ مِنَ الْإِبِلِ، مِنْهَا أَرْبَعُونَ فِي بُطُونِهَا أَوْلَادُهَا} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ، وَابْنُ مَاجَهْ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.
1222. ``மக்களே! தவறுதலாக செய்யப்பட்ட கொலைக்கும், வேண்டுமென்றே செய்யப்பட்டதற்கு ஒப்பாக உள்ள தவறிச் செய்த கொலைக்கும் - அதாவது கசை மற்றும் கம்பால் அடிக்கப்பட்டு நிகழ்ந்த கொலைக்கும் உரிய இழப்பீட்டுத் தொகை நூறு ஒட்டகங்களாகும்; அவற்றில் நாற்பது கர்ப்பிணி ஒட்டகங்களாய் இருக்க வேண்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ மற்றும் இப்னு மாஜா
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1223. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {هَذِهِ وَهَذِهِ سَوَاءٌ -يَعْنِي: الْخُنْصَرَ وَالْإِبْهَامَ} رَوَاهُ الْبُخَارِيُّ.وَلِأَبِي دَاوُدَ وَالتِّرْمِذِيَّ: {دِيَةُ الْأَصَابِعِ سَوَاءٌ، وَالْأَسْنَانُ سَوَاءٌ: اَلثَّنِيَّةُ وَالضِّرْسُ سَوَاءٌ}. وَلِابْنِ حِبَّانَ: {دِيَةُ أَصَابِعِ الْيَدَيْنِ وَالرِّجْلَيْنِ سَوَاءٌ، عَشَرَةٌ مِنَ الْإِبِلِ لِكُلِّ إصْبَعٍ}.
1223. ``இதுவும் இதுவும் அதாவது பெருவிரலும் கண்டு விரலும் சமமாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
விரல்கள் மற்றும் முன் பற்களின் நஷ்ட ஈடு சமமானதாகும். இன்னும், பின் வரிசைப் பற்களுக்கான நஷ்டயீடு சமமானதாகும்'' என்று அபூ தாவூத் மற்றும் திர்மிதீயிலும் உள்ளது.
``இரண்டு கைகளின் விரல்கள் மற்றும் இரண்டு கால்களின் விரல்களுக்கான நஷ்ட ஈடு சமமாகும். ஒவ்வொரு விரலுக்கும் பத்து ஒட்டகங்கள் (நஷ்ட ஈடு) ஆகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு ஹிப்பானில் உள்ளது.
1224. وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ رَفَعَهُ قَالَ: {مَنْ تَطَبَّبَ -وَلَمْ يَكُنْ بِالطِّبِّ مَعْرُوفًا- فَأَصَابَ نَفْسًا فَمَا دُونَهَا، فَهُوَ ضَامِنٌ} أَخْرَجَهُ الدَّارَقُطْنِيُّ، وَصَحَّحَهُ الْحَاكِمُ، وَهُوَ عِنْدَ أَبِي دَاوُدَ، وَالنَّسَائِيِّ وَغَيْرِهِمَا؛ إِلَّا أَنَّ مَنْ أَرْسَلَهُ أَقْوَى مِمَّنْ وَصَلَهُ.
1224. ``ஒருவர் மருத்துவம் அறியாதவராக (தேர்ச்சியும் அனுபவமும் அற்றவராக) இருக்கும் நிலையில், அவர் யாருக்கேனும் சிகிச்சை அளித்து சிகிச்சை பெற்றவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அதற்கான (இழப்பீடு தரும்) பொறுப்பை அவரே ஏற்க வேண்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு தம் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக மர்ஃபூவு எனும் தரத்தில் அறிவித்தார்.
நூல்: தாரகுத்னீ
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார். அபூ தாவூத் நஸயீயிலும் உள்ளது. ஆனால், இதனை முர்ஸலாக அறிவித்தவர்களே மவ்ஸூலாக அறிவித்தவர்களைவிட பலமானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
1225. 1213 – وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ؛ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {فِي الْمَوَاضِحِ خَمْسٌ، خَمْسٌ مِنَ الْإِبِلِ} رَوَاهُ أَحْمَدُ. وَالْأَرْبَعَةُ. وَزَادَ أَحْمَدُ: {وَالْأَصَابِعُ سَوَاءٌ، كُلُّهُنَّ عَشْرٌ، عَشْرٌ مِنَ الْإِبِلِ} وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ، وَابْنُ الْجَارُودِ.
1225. ``எலும்புகள் வெளியில் தெரியும் அளவுள்ள காயங்களுக்கு இழப்பீடு ஐந்து, ஐந்து ஒட்டகங்களாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
``விரல்கள் எல்லாம் சமமாகும். அவற்றிற்கான இழப்பீடு பத்து பத்து ஒட்டகங்களாகும்'' என அஹ்மதில் அதிகப்படியாக உள்ளது.
இமாம் இப்னு குஸைமா மற்றும் இப்னுல் ஜாரூத்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
1226. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {عَقْلُ أَهْلِ الذِّمَّةِ نِصْفُ عَقْلِ الْمُسْلِمِينَ} رَوَاهُ أَحْمَدُ وَالْأَرْبَعَةُ. وَلَفْظُ أَبِي دَاوُدَ: {دِيَةُ الْمُعَاهِدِ نِصْفُ دِيَةِ الْحُرِّ} وَلِلنِّسَائِيِّ: {عَقْلُ الْمَرْأَةِ مِثْلُ عَقْلِ الرَّجُلِ، حَتَّى يَبْلُغَ الثُّلُثَ مِنْ دِيَتِهَا} وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ.
1226. ``திம்மிகளுக்கான (இஸ் லாமிய அரசின் கீழ் வாழ்பவர்கள்) இழப்பீட்டுத் தொகை முஸ்லிம்களுக்கான இழப்பீட்டுத் தொகையிலிருந்து பாதியாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
``ஒப்பந்தம் செய்து வாழ்பவர்களுக்கான இழப்பீடு சுதந்திரமான அசல் குடிமக்களுக்கான இழப்பீட்டிலிருந்து பாதியாகும்'' என அபூ தாவூதில் உள்ளது.
``பெண்ணுக்குரிய இழப்பீடு ஆணுக்குரியது போன்றே ஆகும். அதில் மூன்றில் ஒரு பகுதி மையத்திற்குச் சாரும்'' என நஸயீயில் உள்ளது.
இதனை இமாம் இப்னு குஸைமா ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1227. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {عَقْلُ شِبْهِ الْعَمْدِ مُغَلَّظٌ مِثْلُ عَقْلِ الْعَمْدِ، وَلَا يَقْتَلُ صَاحِبُهُ، وَذَلِكَ أَنْ يَنْزُوَ الشَّيْطَانُ، فَتَكُونُ دِمَاءٌ بَيْنَ النَّاسِ فِي غَيْرِ ضَغِينَةٍ، وَلَا حَمْلِ سِلَاحٍ} أَخْرَجَهُ الدَّارَقُطْنِيُّ وَضَعَّفَهُ.
1227. `வேண்டுமென்றே செய்யப்பட்ட கொலைக் குற்றத்திற்கு, தவறுதலாக நிகழ்ந்த கொலைக் குற்றத்திற்குரியது போல் தண்டனை கடுமையானதே. இரண்டிற்கும் இடையிலுள்ள வேறுபாடு என்னவென்றால், தவறுதலாக நிகழ்ந்த கொலைக் குற்றத்தில் குற்றவாளி கொல்லப்படமாட்டார். ஆனால், வேண்டுமென்றே செய்யும் கொலைக்கு ஒப்பானது என்பது ஏனெனில் குரோதம் ஏதுமின்றியும் ஆயுதம் ஏந்தாமல் இருக்கும் நிலையிலும் (தாக்கும் எண்ணமின்றி) இருக்கும்போது ஷைத்தானின் தூண்டுதலால் மக்கள் தமக்கிடையே ஒருவரையொவருவர் அடித்துக் கொண்டு உயிரைப் மாய்ப்பதாகும் என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு(ரலி) அறிவித்தார்.
நூல்: தாரகுத்னீ
இது `ளயீஃப்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
1228. عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {قَتَلَ رَجُلٌ رَجُلًا عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَفَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دِيَتَهُ اِثْنَيْ عَشَرَ أَلْفًا} رَوَاهُ الْأَرْبَعَةُ، وَرَجَّحَ النَّسَائِيُّ وَأَبُو حَاتِمٍ إِرْسَالَهُ.
1228. இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் ஒருவர் மற்றொருவரைக் கொன்றுவிட்டார். கொல்லப்பட்டவருக்குரிய இழப்பீட்டுத் தொகையாக இறைத்தூதர்(ஸல்) பனிரெண்டு ஆயிரம் திர்ஹம் விதித்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இமாம் நஸயீ மற்றும் அபூ ஹாதிம்(ரஹ்) இதனை `முர்ஸல்' எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
1229. وَعَنْ أَبِي رِمْثَةَ قَالَ: {أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعِي اِبْنِي. فَقَالَ: "مَنْ هَذَا؟" قُلْتُ: اِبْنِي. أَشْهَدُ بِهِ. قَالَ: "أَمَّا إِنَّهُ لَا يَجْنِي عَلَيْكَ، وَلَا تَجْنِي عَلَيْهِ} رَوَاهُ النَّسَائِيُّ، وَأَبُو دَاوُدَ، وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ، وَابْنُ الْجَارُودِ.بَابُ دَعْوَى الدَّمِ وَالْقَسَامَةِ
1229. நான் என் மகனுடன் நபி(ஸல்) அவர்களிடம் ஆஜரானேன். அப்போது, ``இவர் யார்?'' என இறைத்தூதர்(ஸல்) வினவினார்கள்.
``இவன் என் மகன்! தாங்கள் இதற்கு சாட்சியாய் இருங்கள்!'' என நான் கூறினேன்.
``அவன் உனக்கு ஏதும் தீங்கு விளைவிக்க மாட்டான். நீயும் அவனுக்கு ஏதும் தீங்கு விளைவிக்கமாட்டாய்'' என்று கூறினார்கள்.
நூல்கள்: நஸயீ, அபூ தாவூத்
இமாம் இப்னு குஸைமா மற்றும் இப்னுல் ஜாரூத்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
1230. عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ، عَنْ رِجَالٍ مِنْ كُبَرَاءِ قَوْمِهِ، أَنَّ عَبْدَ اللهُ بْنَ سَهْلٍ ومُحَيِّصَةَ بْنَ مَسْعُودٍ خَرَجَا إِلَى خَيْبَرَ مِنْ جَهْدٍ أَصَابَهُمْ، فَأُتِيَ مَحَيِّصَةُ فَأُخْبِرَ أَنَّ عَبْدَ اللهُ بْنِ سَهْلِ قَدْ قُتِلَ، وَطُرِحَ فِي عَيْنٍ، فَأَتَى يَهُودَ، فَقَالَ: أَنْتُمْ وَاللهِ قَتَلْتُمُوهُ. قَالُوا: وَاللهِ مَا قَتَلْنَاهُ، فَأَقْبَلَ هُوَ وَأَخُوهُ حُوَيِّصَةُ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ سَهْلٍ، فَذَهَبَ مُحَيِّصَةُ لَيَتَكَلَّمَ، فَقَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {"كَبِّرْ كَبِّرْ" يُرِيدُ: السِّنَّ، فَتَكَلَّمَ حُوَيِّصَةُ، ثُمَّ تَكَلَّمَ مُحَيِّصَةُ، فَقَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "إِمَّا أَنْ يَدُوا صَاحِبَكُمْ، وَإِمَّا أَنْ يَأْذَنُوا بِحَرْبٍ". فَكَتَبَ إِلَيْهِمْ فِي ذَلِكَ كِتَابًا . فَكَتَبُوا: إِنَّا وَاللهِ مَا قَتَلْنَاهُ، فَقَالَ لِحُوَيِّصَةَ، وَمُحَيِّصَةُ، وَعَبْدِ الرَّحْمَنِ بْنَ سَهْلٍ: "أَتَحْلِفُونَ، وَتَسْتَحِقُّونَ دَمَ صَاحِبَكُمْ؟" قَالُوا: لَا. قَالَ: "فَتَحْلِفُ لَكُمْ يَهُودُ؟" قَالُوا: لَيْسُوا مُسْلِمِينَ فَوَدَاهُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ عِنْدِهِ، فَبَعَثَ إِلَيْهِمْ مَائَةَ نَاقَةٍ. قَالَ سَهْلٌ: فَلَقَدْ رَكَضَتْنِي مِنْهَا نَاقَةٌ حَمْرَاءُ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1230. அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல் மற்றும் முஹய்யிஸா இப்னு மஸ்வூத் ஆகிய இருவரும் தங்களுக்கு ஏற்பட்ட சில பிரச்னைகளின் காரணமாக கைபரின் பக்கம் சென்றார்கள். ஒரு நாள் முஹய்யிஸாவிடம் ஒருவர் வந்து அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல் கொல்லப்பட்டுவிட்டார். அவரின் உடல் ஓர் ஊற்றில் போடப்பட்டது என்ற செய்தியைத் தெரிவித்தார். முஹய்யிஸா யூதர்களிடம் சென்று, ``அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் அவரைக் கொன்று விட்டீர்கள்'' எனக் கூறினார்.
``அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவரை நாங்கள் கொல்லவில்லை'' என அவர்கள் கூறினார்கள்.
பின்னர் அவரும் அவரின் சகோதரர் ஹுவய்யிஸாவும் அப்துர் ரஹ்மான் இப்னு ஸஹ்லும் (இதனைப் பற்றி பேசுவதற்காக) நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். முஹய்யிஸா நபி(ஸல்) அவர்களிடம் பேசத் தொடங்கினார். அப்போது, ``பெரியவரைப் பேசவிடுங்கள்'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள். வயதுக்குரிய மரியாதை தர நாடி இவ்வாறு இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள். உடனே ஹுவய்யிஸா பேசத் தொடங்கினார். பின்னர், முஹய்யிஸா பேசினார். அவர்கள் விஷயத்தைச் சொல்லி முடித்தனர்.
``அவர்கள் உங்கள் சகோதரருக்கான இழப்பீட்டை அவர்கள் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் போர்ப்பிரகடனத்தைப் பெறுவார்கள்'' என இறைத்தூதர்(ஸல்) கூறி, அவர்களுக்கு அது குறித்து ஒரு கடிதம் எழுதினார்கள். அதற்கு அவர்கள், ``அல்லாஹ்வின் மீது ஆணையாக அவரை நாங்கள் கொலை செய்யவில்லை'' எனப் பதில் எழுதினார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) ஹுவய்யிஸா, முஹய்யிஸா மற்றும் அப்துர் ரஹ்மான் இப்னு ஸஹ்ல் ஆகியோரிடம், ``நீங்கள் சத்தியம் செய்து உங்களின் நண்பரின் இரத்தத்திற்கு நீங்கள் உரிமை பெறுவீர்களா?'' எனக் கேட்டார்கள்.
``இல்லை'' என அவர்கள் கூறினார்கள்.
``உங்கள் மீது யூதர்கள் சத்தியம் செய்கிறார்களே?'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
``அவர்கள் முஸ்லிம்கள் இல்லையே'' என அவர்கள் (பதில்) கூறினர்.
எனவே, இறைத்தூதர்(ஸல்) தம் தரப்பிலிருந்து அவர்களுக்கு இழப்பீடு கொடுத்தார்கள். அவர்களுக்கு நூறு ஒட்டகங்களை அனுப்பினார்கள். அவற்றில் ஓர் ஒட்டகம் என்னை மிதித்துவிட்டது'' என ஸஹ்ல் கூறினார். இச்சம்பவத்தை ஸஹ்ல் இப்னு அபீ ஹஸ்மா(ரலி) தம் குலத்தின் பெரியவர்களிடமிருந்து அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1231. وَعَنْ رَجُلٍ مِنَ الْأَنْصَارِ؛ {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقَرَّ الْقَسَامَةَ عَلَى مَا كَانَتْ عَلَيْهِ فِي الْجَاهِلِيَّةِ، وَقَضَى بِهَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ نَاسٍ مِنَ الْأَنْصَارِ فِي قَتِيلٍ اِدَّعَوْهُ عَلَى الْيَهُودِ} رَوَاهُ مُسْلِمٌ.بَابُ قِتَالِ أَهْلِ الْبَغْيِ
1231. ``அறியாமைக் காலத்தின் ஒரு சத்தியத்தை இறைத்தூதர்(ஸல்) அப்படியே அங்கீகரித்து, அதன் அடிப்படையில் அன்ஸாரிகளில் சிலரிடையே யூதர்களால் கொல்லப்பட்டதாக அவர்கள் சொன்னவரின் விஷயத்தில் தீர்ப்பளித்தார்கள் என அன்ஸாரிகளில் ஒருவர் அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1232. عَنِ ابْنِ عُمَرَ رِضَيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلَاحَ، فَلَيْسَ مِنَّا} مُتَّفَقٌ عَلَيْهِ.
1232. ``நமக்கு எதிராக ஆயுதம் தூக்குபவன் நம்மைச் சேர்ந்தவன் அல்லன்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1233. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {مَنْ خَرَجَ عَنِ الطَّاعَةِ، وَفَارَقَ الْجَمَاعَةَ، وَمَاتَ، فَمِيتَتُهُ مِيتَةٌ جَاهِلِيَّةٌ} أَخْرَجَهُ مُسْلِمٌ.
1233. ``தலைமைக்குக் கட்டுப்படுவதை விட்டு வெளியேறி, கூட்டமைப்பிலிருந்தும் பிரிந்து போனவரின் மரணம் அறியாமைக் கால (இறைமறுப்பாளரின்) மரணமாக ஆகிவிடுகிறது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1234. وَعَنْ أَمِّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {تَقْتُلُ عَمَّارًا اَلْفِئَةُ الْبَاغِيَةُ} رَوَاهُ مُسْلِمٌ.
1234. ``துரோகிகளின் ஒரு கூட்டம் அம்மாரைக் கொலை செய்யும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1235. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {هَلْ تَدْرِي يَا اِبْنَ أُمِّ عَبْدٍ، كَيْفَ حُكْمُ اللهُ فِيمَنْ بَغَى مِنْ هَذِهِ الْأُمَّةِ؟"، قَالَ: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ: "لَا يُجْهَزُ عَلَى جَرِيحِهَا، وَلَا يُقْتَلُ أَسِيرُهَا، وَلَا يُطْلَبُ هَارِبُهَا، وَلَا يُقْسَمُ فَيْؤُهَا} رَوَاهُ الْبَزَّارُ و الْحَاكِمُ وَصَحَّحَهُ فَوَهِمَ؛ فَإِنَّ فِي إِسْنَادِهِ كَوْثَرَ بْنَ حَكِيمٍ، وَهُوَ مَتْرُوكٌ. وَصَحَّ عَنْ عَلِيٍّ مِنْ طُرُقٍ نَحْوُهُ مَوْقُوفًا. أَخْرَجَهُ اِبْنُ أَبِي شَيْبَةَ، وَالْحَاكِمُ.
1235. ``உம்மு அப்தின் மகனே! (இப்னு மஸ் வூத் அவர்களே) இந்தச் சமுதாயத்திலிருந்து துரோகியாக மாறிவிடுபவர்களுக்கான இறைச் சட்டம் என்னவென்பதை நீர் அறிவீரா?'' என்று இறைத்தூதர்(ஸல்) வினவினார்கள்.
``அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிவர்'' என அவர் பதில் கூறினார்.
``அவர்களில் காயமுற்றவனின் காயத்திற்கு மருந்து கட்டக் கூடாது; ஆறவிடக் கூடாது.'' இன்னும் அவர்களில் கைதானவரைக் கொல்லக் கூடாது. அவர்களில் ஓடிப்போனவனைத் தேடிப் போகலாகாது. இன்னும், அவர்களின் போர்ச் செல்வங்களை பங்கிடவும் கூடாது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: பஸ்ஸார், ஹாகிம்
இது `ஸஹீஹ்' எனும் தரத்தில் உள்ளதாக இமாம் ஹாகிம்(ரஹ்) கூறியது தவறு; ஏனெனில், இதன் அறிவிப்பாளர் தொடரில் ஹதீஸ் கலை அறிஞர்களால் நிராகரிக்கப்பட்ட கௌஸர் இப்னு ஹகிம் என்பவர் இடம் பெறுகிறார்.
இது அலீ(ரலி) வாயிலாக மற்றோர் அறிவிப்பில் `மவ்கூஃப்' என வந்துள்ளது; இதுவே சரியாகும். இப்னு அபீ ஷைபா மற்றும் ஹாகிம் இதனைப் பதிவிட்டுள்ளனர்.
1236. وَعَنْ عَرْفَجَةَ بْنِ شُرَيْحٍ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: {مَنْ أَتَاكُمْ وَأَمَرَكُمْ جَمِيعٌ، يُرِيدُ أَنْ يُفَرِّقَ جَمَاعَتَكُمْ، فَاقْتُلُوهُ} أَخْرَجَهُ مُسْلِمٌ.بَابُ قِتَالِ الْجَانِي وَقَتْلُ الْمُرْتَدِّ
1236. ``ஒன்றுபட்டு இருக்கும் உங்கள் கூட்டமைப்பைப் பிரிக்கும் எண்ணத்துடன் உங்களிடம் வருபவரைக் கொன்றுவிடுங்கள்! (மரண தண்டனை கொடுங்கள்!)'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அர்ஃபஜ் இப்னு ஷுரைஹ்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்