123. وَعَنْ سَمُرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ تَوَضَّأَ يَوْمَ الْجُمُعَةِ فَبِهَا وَنِعْمَتْ، وَمَنْ اِغْتَسَلَ فَالْغُسْلُ أَفْضَلُ} رَوَاهُ الْخَمْسَةُ، وَحَسَّنَهُ التِّرْمِذِيُّ.
123. ``வெள்ளிக்கிழமையன்று `உளூ'ச் செய்தவர் சிறப்பான காரியத்தைச் செய்தார். அன்று குளித்தவர் அதைவிட சிறப்பான காரியத்தைச் செய்தார்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், நஸயீ, அபூ தாவூத், திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை `ஹஸன்' எனும் தரத்தில் அமைந்துளளது எனக் கூறியுள்ளார்.
124. وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقْرِئُنَا الْقُرْآنَ مَا لَمْ يَكُنْ جُنُبًا} رَوَاهُ الْخَمْسَةُ، وَهَذَا لَفْظُ التِّرْمِذِيِّ وَحَسَّنَةُ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.
124. ``இறைத்தூதர்(ஸல்) குளிப்பு கடமை அல்லாத காலங்களில் எங்களுக்கு குர்ஆன் கற்றுக் கொடுப்பார்கள்'' என அலி(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத் நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இங்கு திர்மிதீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது. இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை `ஹஸன்' எனக் கூறியுள்ளார். இமாம் இப்னு ஹிப்பான் இதனை ஆதாரப்பூர்வமானது எனக் கருதுகிறார்.
125. وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا أَتَى أَحَدُكُمْ أَهْلَهُ، ثُمَّ أَرَادَ أَنْ يَعُودَ فَلْيَتَوَضَّأْ بَيْنَهُمَا وُضُوءًا} رَوَاهُ مُسْلِمٌ.
125. ``உங்களில் ஒருவர் மனைவியிடம் சென்று (பாலுறவு கொண்டு) விட்டு, பின்னர் மீண்டும் (பாலுறவு கொள்ள) விரும்பினால் அவர் அவ்விரண்டிற்கும் இடையே `உளூ'ச் செய்து கொள்ளட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
126. وَزَادَ الْحَاكِمُ: {فَإِنَّهُ أَنْشَطُ لِلْعَوْدِ}.
126. ``ஏனெனில், மீண்டும் `உளூ'ச் செய்வதால் (மீண்டும் பாலுறவுக்கு) புத்துணர்ச்சி ஏற்படுகிறது'' எனும் வாசகம் ஹாகிமில் அதிகப்படியாக உள்ளது.
127. وَلِلْأَرْبَعَةِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنَامُ وَهُوَ جُنُبٌ، مِنْ غَيْرِ أَنْ يَمَسَّ مَاءً} وَهُوَ مَعْلُولٌ.
127. இறைத்தூதர்(ஸல்) குளிப்புக் கடமையான நிலையில் தண்ணீரை (கையால்) தொடாமலேயே (`உளூ'ச் செய்யாமலேயே) தூங்கிவிடுவார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இது மஃலூல் எனும் குறைபாடு உள்ள ஹதீஸ் ஆகும்.
128. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اِغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ يَبْدَأُ فَيَغْسِلُ يَدَيْهِ، ثُمَّ يُفْرِغُ بِيَمِينِهِ عَلَى شِمَالِهِ، فَيَغْسِلُ فَرْجَهُ، ثُمَّ يَتَوَضَّأُ، ثُمَّ يَأْخُذُ الْمَاءَ، فَيُدْخِلُ أَصَابِعَهُ فِي أُصُولِ الشَّعْرِ، ثُمَّ حَفَنَ عَلَى رَأْسِهِ ثَلَاثَ حَفَنَاتٍ، ثُمَّ أَفَاضَ عَلَى سَائِرِ جَسَدِهِ، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِمُسْلِمٍ.
128. இறைத்தூதர்(ஸல்) கடமையான குளிப்பைக் குளிக்க ஆரம்பித்தால், தம் கைகளைக் கழுவுவார்கள். பின்னர் தம் வலக் கையால் இடக் கையின் மீது தண்ணீர் ஊற்றி தம் மர்ம உறுப்பைக் கழுவுவார்கள். பின்னர் `உளூ'ச் செய்வார்கள். பின்னர் தண்ணீரை எடுத்துத் தம் கை விரல்களை (தலை) முடியின் அடிப்பகுதியில் நுழைத்து (கோதி), தம் தலை மீது தண்ணீரை மும்முறை (இரண்டு கைகளையும் கூட்டி அள்ளி) ஊற்றுவார்கள். பிறகு உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்கள். பின்னர் தம் இரண்டு கால்களையும் கழுவுவார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
129. وَلَهُمَا فِي حَدِيثِ مَيْمُونَةَ: {ثُمَّ أَفْرَغَ عَلَى فَرْجِهِ، فَغَسَلَهُ بِشِمَالِهِ، ثُمَّ ضَرَبَ بِهَا الْأَرْضَ}
129. புகாரீ, முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் மைமூனா(ரலி) வாயிலாக, ``பின்னர், அவர்கள் தம் மர்ம உறுப்பின் மீது தண்ணீர் ஊற்றி அதைத் தம் இடக் கையால் கழுவுவார்கள். பின்னர் அதனை (இடக் கையை) தரையில் தேய்த்துக் கழுவுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
130. وَفِي رِوَايَةٍ: {فَمَسَحَهَا بِالتُّرَابِ}وَفِي آخِرِهِ: {ثُمَّ أَتَيْتُهُ بِالْمِنْدِيلِ} فَرَدَّهُ، وَفِيهِ: {وَجَعَلَ يَنْفُضُ الْمَاءَ بِيَدِهِ}.
130. புகாரீ, முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் ``தரையில் (மர்ம உறுப்பை சுத்தம் செய்தப் பின்) கையைத் துடைத்தார்கள்'' என்றும், (`உளூ'ச் செய்தப் பின்) அதன் இறுதியில் அவர்களிடம் நான் கைக்குட்டையைக் கொண்டு சென்றேன். அதனை அவர்கள் மறுத்து விட்டு, (துடைக்காமல்) தம் கையால் தண்ணீரை வழித்தார்கள்'' என்றுள்ளது.
131. وَعَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {قُلْتُ: يَا رَسُولَ اللهِ إِنِّي اِمْرَأَةٌ أَشُدُّ شَعْرَ رَأْسِي، أَفَأَنْقُضُهُ لِغُسْلِ الْجَنَابَةِ؟ وَفِي رِوَايَةٍ: وَالْحَيْضَةِ؟ فَقَالَ: "لَا، إِنَّمَا يَكْفِيكِ أَنْ تَحْثِي عَلَى رَأْسِكِ ثَلَاثَ حَثَيَاتٍ"} رَوَاهُ مُسْلِمٌ.
131. ``இறைத்தூதர் அவர்களே! நான் (முடி அதிகம் உள்ளவளாய் இருப்பதால்) என் தலை முடியினைக் கட்டிக் கொள்கிறேன். குளிப்புக் கடமையாகி நான் குளிக்கும்போது என் முடியை அவிழ்க்க வேண்டுமா?'' என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள், ``(தேவை) இல்லை. மும்முறை உன் தலையில் தண்ணீர் ஊற்றினால் போதுமானது'' என்று கூறினார்கள் என உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
மற்றோர் அறிவிப்பின்படி, ``மாதவிடாய் குளிப்பிற்கும் என் முடியை அவிழ்க்க வேண்டுமா?'' எனக் கேட்டதற்கு, ``வேண்டாம்'' எனக் கூறி, மேற்கண்டவாறே கூறினார்கள் என உள்ளது.
132. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِنِّي لَا أُحِلُّ الْمَسْجِدَ لِحَائِضٍ وَلَا جُنُبٌ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ.
132. ``குளிப்புக் கடமையானவர்களும், மாதவிடாய் பெண்களும், இறைஇல்லத்திற்குள் (தங்குவதை) நான் அனுமதிக்க மாட்டேன்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இமாம் இப்னு குஸைமா(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் கூறியுள்ளார்.
133. وَعَنْهَا قَالَتْ: {كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ، تَخْتَلِفُ أَيْدِينَا فِيهِ مِنَ الْجَنَابَةِ} مُتَّفَقٌ عَلَيْهِ. وَزَادَ اِبْنُ حِبَّانَ: وَتَلْتَقِي.
133. ``நானும், நபி(ஸல்) அவர்களும் ஒரு பாத்திரத்தில் (சம நேரத்தில்) கடமையான குளிப்பை குளித்துக் கொண்டிருந்தபோது, எங்கள் இருவரின் கைகளும் மாறிமாறி (பாத்திரத்தில்) போய் வந்து கொண்டிருந்தன'' என ஆயியஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
``எங்கள் கைகள் ஒன்றோடொன்று சந்தித்துக் கொண்டும் இருந்தன'' எனும் வாசகம் இப்னு ஹிப்பானில் அதிகப்படியாக உள்ளது.
134. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِنَّ تَحْتَ كُلِّ شَعْرَةٍ جَنَابَةً، فَاغْسِلُوا الشَّعْرَ، وَأَنْقُوا الْبَشَرَ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَالتِّرْمِذِيُّ وَضَعَّفَاهُ.
134. ``நிச்சயமாக ஒவ்வொரு முடியின் அடிப்பாகமும், குளிப்புக்கடமையானதாக உள்ளது. எனவே, முடியை (நன்றாகக்) கழுவிக் கொள்ளுங்கள். இன்னும் மேனியை (உடலை) நன்றாகச் சுத்தம் செய்யுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், திர்மிதீ.
இதனைப் பதிவிட்டுள்ள இந்த இரண்டு இமாம்களும் இதனை பலவீனமானது எனக் கூறியுள்ளார்கள்.
135. وَلِأَحْمَدَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهُ نَحْوُهُ، وَفِيهِ رَاوٍ مَجْهُولٌ.بَابُ التَّيَمُّمِ
135. ஆயிஷா(ரலி) வாயிலாக அஹ்மதிலும் இது போன்ற ஹதீஸ் இடம் பெறுகிறது. ஆனால், அங்கு அறிவிப்பாளர் வரிசைத் தொடரில் யாரென்றே அறியப்படாத ஒருவர் இடம் பெற்றுள்ளார்.
தயம்மும்
136. عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {أُعْطِيتُ خَمْسًا لَمْ يُعْطَهُنَّ أَحَدٌ قَبْلِي: نُصِرْتُ بِالرُّعْبِ مَسِيرَةَ شَهْرٍ، وَجُعِلَتْ لِيَ الْأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا، فَأَيُّمَا رَجُلٍ أَدْرَكَتْهُ الصَّلَاةُ فَلْيُصَلِّ} وَذَكَرَ الْحَدِيثَ.
136. ``எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஐந்து (அருட் கொடைகள்) போன்று எனக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படவில்லை. இன்னும் பூமி முழுவதும் எனக்கு தொழுமிடமாகவும், தூய்மையானதாகவும் ஆக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு தொழுகை நேரம் எங்கு வந்துவிட்டாலும், அவர் அங்கு தொழுது கொள்ளலாம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார். (ஹதீஸ் சுருக்கம்)
நூல்கள்: அஹ்மத், பைஹகீ
137. وَفِي حَدِيثِ حُذَيْفَةَ عِنْدَ مُسْلِمٍ: {وَجُعِلَتْ تُرْبَتُهَا لَنَا طَهُورًا، إِذَا لَمْ نَجِدِ الْمَاءَ}.
137. ``நமக்குத் தண்ணீர் கிடைக்காத பட்சத்தில், அதன் மண் நமக்குத் தூய்மையான தாக்கப்பட்டுள்ளது'' எனும் வாசகம் ஹுதைஃபா(ரலி) வாயிலாக முஸ்லிமில் உள்ளது.
138. وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ عِنْدَ أَحْمَدَ: {وَجُعِلَ التُّرَابُ لِي طَهُورًا}.
138. ``(பூமியின்) மண் எனக்காகத் தூய்மையாக்கப்பட்டுள்ளது'' எனும் வாசகம் அலீ(ரலி) வாயிலாக அஹ்மதில் இடம் பெற்றுள்ளது.
139. وَعَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {بَعَثَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَاجَةٍ، فَأَجْنَبْتُ، فَلَمْ أَجِدِ الْمَاءَ، فَتَمَرَّغْتُ فِي الصَّعِيدِ كَمَا تَمَرَّغُ الدَّابَّةُ، ثُمَّ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرْتُ ذَلِكَ لَهُ، فَقَالَ: "إِنَّمَا كَانَ يَكْفِيكَ أَنْ تَقُولَ بِيَدَيْكَ هَكَذَا" ثُمَّ ضَرَبَ بِيَدَيْهِ الْأَرْضَ ضَرْبَةً وَاحِدَةً، ثُمَّ مَسَحَ اَلشِّمَالَ عَلَى الْيَمِينِ، وَظَاهِرَ كَفَّيْهِ وَوَجْهَهُ} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِمُسْلِمٍ.
139. என்னை இறைத்தூதர்(ஸல்) ஒரு தேவையின் நிமித்தம் அனுப்பி இருந்தார்கள். அப்போது எனக்குக் குளிப்புக் கடமையாயிற்று. எனவே, கால்நடைகள் மண்ணில் படுத்துப் புரளுவது போன்று நான் மண்ணில் படுத்துப் புரண்டேன். பின்னர் நபி(ஸல்) அவர்களிடம் நான் சென்று. நடந்ததைக் கூறினேன்.
``நீ உன் கைகளை இவ்வாறு செய்திருந்தாலே போதுமானது'' எனக் கூறி, பின்னர் தம் இரண்டு கைகளையும் பூமியில் ஒரேயொருமுறை அடித்தார்கள் பின்னர் மணிக்கட்டு வரையிலான வலக்கையின் மீது இடக் கையால் துடைத்தார்கள். தம் இரண்டு ககைளின் வெளிப்பக்கத்தையும் தம் முகத்தையும் மஸஹ் செய்தார்கள் என்று அம்மார் இப்னு யாசிர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
140. وَفِي رِوَايَةٍ لِلْبُخَارِيِّ: وَضَرَبَ بِكَفَّيْهِ الْأَرْضَ، وَنَفَخَ فِيهِمَا، ثُمَّ مَسَحَ بِهِمَا وَجْهَهُ وَكَفَّيْهِ.
140. புகாரீயின் மற்றோர் அறிவிப்பில் தம் உள்ளங்கையை பூமியில் அடித்தார்கள். இன்னும் அதில் ஊதினார்கள். பின்னர் தம் முகத்தையும், இரண்டு கைகளையும் மஸஹ் செய்தார்கள் என்றும் இடம் பெற்றுள்ளது.
141. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {التَّيَمُّمُ ضَرْبَتَانِ ضَرْبَةٌ لِلْوَجْهِ، وَضَرْبَةٌ لِلْيَدَيْنِ إِلَى الْمِرْفَقَيْنِ} رَوَاهُ الدَّارَقُطْنِيُّ، وَصَحَّحَ الْأَئِمَّةُ وَقْفَهُ.
141. ``தயம்மும் என்பது இரண்டு அடிகளாகும். (அவற்றில்) ஒன்று முகத்திற்கும் மற்றொன்று முழங்கை வரையில் இரண்டு ககைளுக்கும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: தார குத்னீ
இது `மவ்கூஃப்' எனும் தரம் என இமாம்கள் கூறியுள்ளார்கள். (அதாவது இது இப்னு உமர்(ரலி) அவர்களின் கூற்றாகும்.)
142. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {الصَّعِيدُ وُضُوءُ الْمُسْلِمِ، وَإِنْ لَمْ يَجِدِ الْمَاءَ عَشْرَ سِنِينَ، فَإِذَا وَجَدَ الْمَاءَ فَلْيَتَّقِ اللهَ، وَلْيُمِسَّهُ بَشَرَتَهُ} رَوَاهُ الْبَزَّارُ، وَصَحَّحَهُ اِبْنُ الْقَطَّانِ، ولَكِنْ صَوَّبَ الدَّارَقُطْنِيُّ إِرْسَالَهُ.
142. ``பத்து ஆண்டுகளுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டாலும் ஒரு முஸ்லிமிற்குத் தூய்மையான மண் (மூலம் தயம்மும் செய்வதே) `உளூ'விற்கு ஒப்பாகும். ஆனால், தண்ணீர் கிடைத்துவிட்டால், அவர் அல்லாஹ்வை அஞ்சட்டும்! அவர் தன் மேனியைத் தண்ணீரால் தீண்ட (சுத்தம்) செய்யட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: பஜ்ஜார்
இப்னு கத்தான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமான எனக் குறிப்பிட்டுள்ளார். இது `முர்ஸல்' என்பதே சரி என இமாம் தார குத்னீ(ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.