1375. وَعَنْ أَبِي ثَعْلَبَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {" إِذَا رَمَيْتَ بِسَهْمِكَ، فَغَابَ عَنْكَ، فَأَدْرَكْتَهُ فَكُلْهُ، مَا لَمْ يُنْتِنْ"} أَخْرَجَهُ مُسْلِمٌ.
1375. ``நீ அம்பை எய்து, உன்னால் வேட்டையாடப்பட்ட பிராணி, உன்னை விட்டு மறைந்து பின்னர், அதனை (சில நாள்களில்) நீ கண்டால் அது துர்வாடை வீசவில்லை எனில் சாப்பிட்டுக் கொள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஸஅலபா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1376. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا؛ {أَنَّ قَوْمًا قَالُوا لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ قَوْماً يَأْتُونَنَا بِاللَّحْمِ، لَا نَدْرِي أَذُكِرَ اِسْمُ اللهُ عَلَيْهِ أَمْ لَا؟ فَقَالَ: " سَمُّوا اللهُ عَلَيْهِ أَنْتُمْ، وَكُلُوهُ"} رَوَاهُ الْبُخَارِيُّ.
1376. ``எங்களிடம் சிலர் கறியைக் கொடுத்து அனுப்புகிறார்கள். அவர்கள், அதன் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறினார்களா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது'' என ஒரு கூட்டத்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கூறினர். (சட்டம் கேட்டனர்).
``நீங்கள் அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி உண்ணுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
1377. وَعَنْ عَبْدِ اللهِ بنِ مُغَفَّلٍ الْمُزَنِيِّ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْخَذْفِ، وَقَالَ: "إِنَّهَا لَا تَصِيدُ صَيْدًا، وَلَا تَنْكَأُ عَدُوًّا، وَلَكِنَّهَا تَكْسِرُ السِّنَّ، وَتَفْقَأُ الْعَيْنَ"} مُتَّفَقٌ عَلَيْهِ. وَاللَّفْظُ لِمُسْلِمٍ.
1377. (கூர்மையற்ற கல் போன்றவற்றை) எறிந்து வேட்டையாடுவதை இறைத்தூதர்(ஸல்) தடுத்தார்கள். இன்னும் ``அது எப்பிராணியையும் வேட்டையாடவும் செய்யாது; எதிரிக்குத் தண்டனையையும் கொடுக்காது. ஆனால், அது பல்லை உடைக்கும்; கண்ணைத் தோண்டி எடுத்துவிடும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
1378. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {"لَا تَتَّخِذُوا شَيْئاً فِيهِ الرُّوحُ غَرَضًا"} رَوَاهُ مُسْلِمٌ.
1378. ``உயிருள்ள எவற்றையும், (வேட்டையாடப் பழகுவதற்காகக்) குறி வைக்காதீர்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1379. وَعَنْ كَعْبِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنّ امْرَأَةً ذَبَحَتْ شَاةً بِحَجَرٍ، فَسُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ، فَأَمَرَ بِأَكْلِهَا} رَوَاهُ الْبُخَارِيُّ.
1379. பெண்ணொருத்தி ஆடு ஒன்றைக் கல்லால் அறுத்துவிட்டாள். அது குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (சட்டம்) கேட்கப்பட்டதற்கு, அதனை உண்ணுமாறு கட்டளையிட்டார்கள் என கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
1380. وَعَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {"مَا أُنْهِرَ الدَّمُ، وَذُكِرَ اِسْمُ اللهُ عَلَيْهِ، فَكُلْ لَيْسَ السِّنَّ وَالظُّفْرَ؛ أَمَّا السِّنُّ؛ فَعَظْمٌ؛ وَأَمَّا الظُّفُرُ: فَمُدَى الْحَبَشِ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
1380. ``பல் மற்றும் நகத்தைத் தவிர்த்து அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டு எதுவெல்லாம் இரத்தத்தை ஓட்டுகிறதோ, அதனால் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டதை உண்ணுங்கள். ஏனெனில், பல் எலும்பாகும். நகமோ அபி சீனியர்களின் ஆயுதமாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ராஃபிவு இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1381. وَعَنْ جَابِرِ بنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {نَهَى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُقْتَلَ شَيْءٌ مِنَ الدَّوَابِّ صَبْرًا} رَوَاهُ مُسْلِمٌ.
1381. ``கால்நடைககைளைக் கட்டி வைத்து அதன் மீது ஏதாவது ஒன்றை எறிந்து கொல்வதை இறைத்தூதர்(ஸல்) தடைசெய்தார்கள்'' என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1382. وَعَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {"إِنَّ اللهُ كَتَبَ الْإِحْسَانَ عَلَى كُلِّ شَيْءٍ، فَإِذَا قَتَلْتُمْ فَأَحْسِنُوا الْقِتْلَةَ، وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذِّبْحَةَ، وَلْيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهُ، وَلْيُرِحْ ذَبِيحَتَهُ"} رَوَاهُ مُسْلِمٌ.
1382. ``ஒவ்வோர் உயிருக்கும் உபகாரம் செய்ய வேண்டும் என அல்லாஹ் விதியாக்கியுள்ளான். எனவே, நீங்கள் (ஓர் உயிரை உணவுக்காகக்) கொன்றால் நல்லவிதமாகக் கொன்றுவிடுங்கள். அறுத்தால் அதனை நல்லவிதமாக அறுத்துவிடுங்கள். நீங்கள் உங்கள் கத்தியை நன்றாகத் தீட்டிக் கொண்டு; அறுக்கப்படும் பிராணிக்கு சிரமம் ஏற்படாதவாறு அறுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1383. وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {"ذَكَاةُ الْجَنِينِ ذَكَاةُ أُمِّهِ"} رَوَاهُ أَحْمَدُ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.
1383. ``(சினையாக உள்ள) தாய்ப்பிராணியை அறுத்தாலே வயிற்றிலுள்ள குட்டியையும் அறுத்தாய் ஆகிவிடும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நூல்: அஹ்மத்
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1384. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {"اَلْمُسْلِمُ يَكْفِيهِ اِسْمُهُ، فَإِنْ نَسِيَ أَنْ يُسَمِّيَ حِينَ يَذْبَحُ، فَلْيُسَمِّ، ثُمَّ لِيَأْكُلْ"} أَخْرَجَهُ الدَّارَقُطْنِيُّ، وَفِي إِسْنَادِهِ مُحَمَّدُ بنُ يَزِيدَ بنِ سِنَانٍ، وَهُوَ صَدُوقٌ ضَعِيفُ الْحِفْظِ.
1384. ``(ஒரு பிராணியை அறுக்க) முஸ்லிமிற்கு அவன் பெயரே போதுமானது. அவன் அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயரைக் கூற மறந்துவிட்டால் அதைக் கூறிவிட்டுப் பிறகு உண்ணட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: தாரகுத்னீ
இதன் அறிவிப்பாளர் ஞாபகசக்தி குறைந்தவர் என்பதால் `ளயீஃப்' எனும் தரத்தில் இது பதிவிடப்பட்டுள்ளது. இதன் வரிசையில் முஹம்மத் இப்னு யஜீத் இப்னி ஸினான் என்பவர் உண்மையாளர் என்றாலும் ஞாபகசக்தி குன்றியவர்.
1385. وَأَخْرَجَهُ عَبْدُ الرَّزَّاقِ بِإِسْنَادٍ صَحِيحٍ إِلَى اِبْنِ عَبَّاسٍ، مَوْقُوفًا عَلَيْهِ.
1385. இன்னும், இது `ஸஹீஹ்' எனும் தரத்திலும் `மவ்கூஃப்' எனும் தரத்திலும் இப்னு அப்பாஸ் வாயிலாக அப்துர் ரஸ்ஸாக்கில் பதவிடப்பட்டுள்ளது.
1386. وَلَهُ شَاهِدٌ عِنْدَ أَبِي دَاوُدَ فِي "مَرَاسِيلِهِ" بِلَفْظِ: {"ذَبِيحَةُ الْمُسْلِمِ حَلَالٌ، ذَكَرَ اِسْمَ اللهُ عَلَيْهَا أَوْ لَمْ يَذْكُرْ"} وَرِجَالُهُ مُوَثَّقُونَ.بَاب الْأَضَاحِيِّ
1386. இதற்குச் சான்றாக அபூ தாவூதில் `முர்ஸல்' எனும் தரத்தில், ``முஸ்லிமால் அறுக்கப்பட்டது அல்லாஹ்வின் பெயர் சொல்லப்பட்டிருந்தாலும், சொல்லப்படாதிருந்தாலும் அனுமதிக்கப்பட்டதே'' என உள்ளது. இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்.
1387. عَنْ أَنَسِ بنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُضَحِّي بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ، أَقْرَنَيْنِ، وَيُسَمِّي، وَيُكَبِّرُ، وَيَضَعُ رِجْلَهُ عَلَى صِفَاحِهِمَا. وَفِي لَفْظٍ: ذَبَحَهُمَا بِيَدِهِ} مُتَّفَقٌ عَلَيْهِ. وَفِي لَفْظِ: {سَمِينَيْنِ} وَلِأَبِي عَوَانَةَ فِي "صَحِيحِهِ": {ثَمِينَيْنِ}. بِالْمُثَلَّثَةِ بَدَلَ السِّينِوَفِي لَفْظٍ لِمُسْلِمٍ، وَيَقُولُ: {بِسْمِ اللهِ. وَاللهُ أَكْبَرُ}.
1387. இறைத்தூதர்(ஸல்) கொம்புகள் உடைய இரண்டு செம்மறியாட்டுக் கிடாய்களை அவற்றின் கழுத்தின் மீது தன் காலை வைத்து அல்லாஹ்வின் பெயர் சொல்லி, தக்பீர் கூறி; அறுத்து குர்பானீ கொடுப்பார்கள்'' என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிப்பில் தம் கையால் அவற்றை அறுப்பார்கள்'' என உள்ளது.
மற்றோர் அறிவிப்பில், ``கொழுத்த இரண்டு ஆடுகளை'' என உள்ளது. அபூ அவானாவின் ஸஹீஹில், ``விலை உயர்ந்த இரண்டு ஆடுகள்'' என உள்ளது. முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் ``பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்'' என்று கூறுவார்கள் என உள்ளது.
1388. وَلَهُ: مِنْ حَدِيثِ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا؛ {أَمَرَ بِكَبْشٍ أَقْرَنَ، يَطَأُ فِي سَوَادٍ، وَيَبْرُكُ فِي سَوَادٍ، وَيَنْظُرُ فِي سَوَادٍ؛ لِيُضَحِّيَ بِهِ، فَقَالَ: "اِشْحَذِي الْمُدْيَةَ"، ثُمَّ أَخَذَهَا، فَأَضْجَعَهُ، ثُمَّ ذَبَحَهُ، وَقَالَ: "بِسْمِ اللهِ، اَللَّهُمَّ تَقَبَّلْ مِنْ مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ، وَمِنْ أُمّةِ مُحَمَّدٍ"}.
1388. காலும், முட்டியும், கண்ணைச் சுற்றியுள்ள இடமும் கருப்பு நிறமாயுள்ள செம்மறி ஆட்டுக் கிடாய் ஒன்றைக் குர்பானீ கொடுப்பதற்காகக் கொண்டுவருமாறு இறைத்தூதர்(ஸல்) கட்டளை இட்டார்கள். அப்போது, ``ஆயிஷாவே! கல்லில் கத்தியைத் தீட்டிக் கூராக்கு!'' எனக் கூறினார்கள். அவ்வாறே நானும் அதைக் கூர் தீட்டி பிறகு எடுத்துக் கொடுக்க, இறைத்தூதர்(ஸல்) அதைக் கையில் எடுத்து (ஆட்டைப்) படுக்கவைத்து, பின்னர் அறுத்தார்கள் (அப்போது) அல்லாஹ்வின் பெயரால் முஹம்மதிடமிருந்தும், முஹம்மதின் குடும்பத்தாரிடமிருந்தும், முஹம்மதின் சமுதாயத்திடமிருந்தும், ``இரட்சகனே! இதனை ஏற்றுக் கொள்வாயாக!'' என்று கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்; இது முஸ்லிமில் உள்ளது.
1389. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {"مَنْ كَانَ لَهُ سَعَةٌ وَلَمْ يُضَحِّ، فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا"} رَوَاهُ أَحْمَدُ، وَابْنُ مَاجَه، وَصَحَّحَهُ الْحَاكِمُ، لَكِنْ رَجَّحَ الْأَئِمَّةُ غَيْرُهُ وَقْفَهُ.
1389. ``வசதி இருந்தும் குர்பானீ கொடுக்காதவர் நம் தொழும் இடத்திற்கு வரவேண்டாம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், இப்னு மாஜா
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார். மற்ற இமாம்கள் இதனை `மவ்கூஃப்' தரம் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளனர்.
1390. وَعَنْ جُنْدُبِ بْنِ سُفْيَانَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {شَهِدْتُ الْأَضْحَى مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا قَضَى صَلَاتَهُ بِالنَّاسِ، نَظَرَ إِلَى غَنَمٍ قَدْ ذُبِحَتْ، فَقَالَ: "مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلَاةِ فَلْيَذْبَحْ شَاةً مَكَانَهَا، وَمَنْ لَمْ يَكُنْ ذَبَحَ فَلْيَذْبَحْ عَلَى اسْمِ اللهِ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
1390. ஈதுல் அல்ஹா தொழுகையில் நான் நபி(ஸல்) அவர்களுடன் கலந்து கொண்டேன். தொழுகை முடிந்ததும், ஏற்கனவே அறுக்கப்பட்டிருந்த ஓர் ஆட்டைக் கண்டார்கள். உடனே, ``தொழுகைக்கு, முன் அறுத்தவர் அதற்குப் பதில் மற்றோர் ஆட்டை அறுக்கட்டும். இன்னும், அறுக்காதவர் அல்லாஹ்வின் பெயர் கூறி இப்போது அறுக்கட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜுன்துப் இப்னு ஸுஃப்யான்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1391. وَعَنِ الْبَرَاءِ بنِ عَازِبٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَامَ فِينَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: {"أَرْبَعٌ لَا تَجُوزُ فِي الضَّحَايَا: الْعَوْرَاءُ الْبَيِّنُ عَوَرُهَا، وَالْمَرِيضَةُ الْبَيِّنُ مَرَضُهَا، وَالْعَرْجَاءُ الْبَيِّنُ ظَلْعُهَ اوَالْكَسِيرَةُ الَّتِيْ لَا تُنْقِي"} رَوَاهُ الْخَمْسَة ُ. وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ، وَابْنُ حِبَّانَ.
1391. இறைத்தூதர்(ஸல்) எங்களிடையே எழுந்துநின்று, 1. நான்கு தெரியும் படியாக கண் பொட்டையான பிராணி 2. வெளிப்படையாகத் தெரியும்படியாக நோயுற்று இருக்கும் பிராணி 3. ஊனம் வெளிப்படையாகத் தெரியும் அளவிற்குள்ள நொண்டியான பிராணி 4. எலும்பு மஜ்ஜை பலவீனமான வயது முதிர்ந்த பிராணி ஆகிய நான்கு பிராணிகளை குர்பானிக்காக அறுப்பது கூடாது என்று கூறினார்கள் என பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இமாம் திர்மிதி மற்றும் இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1392. وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {"لَا تَذْبَحُوا إِلَّا مُسِنَّةً، إِلَّا أَنْ يَعْسُرَ عَلَيْكُمْ فَتَذْبَحُوا جَذَعَةً مِنَ الضَّأْنِ"} رَوَاهُ مُسْلِمٌ.
1392. ``குர்பானிக்காக பல் முளைத்த பிராணியையே அறுங்கள்; அது உங்களுக்குக் கிடைக்காவிட்டால் (அப்போது மட்டும்) மூன்று வயது செம்மறியாட்டை அறுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
குறிப்பு: ஆடாக இருந்தால் ஒரு வயது முழுமையானதாகவும், மாடாக இருந்தால் இரண்டு வயது முழுமையானதாகவும் இருக்க வேண்டும்.
1393. وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {أَمَرَنَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَشْرِفَ الْعَيْنَ وَالْأُذُنَ، وَلَا نُضَحِّيَ بِعَوْرَاءَ، وَلَا مُقَابَلَةٍ، وَلَا مُدَابَرَةٍ، وَلَا خَرْمَاءَ، وَلَا ثَرْمَاءَ"} أَخْرَجَهُ أَحْمَدُ، وَالْأَرْبَعَة ُ. وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ، وَابْنُ حِبَّانَ، وَالْحَاكِمُ.
1393. ``கூர்ந்து கவனித்து கண்ணிலும் காதிலும் குறை இல்லாத பிராணியையே குர்பானீ கொடுக்கத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், காதின் ஓரம் கிழிக்கப்பட்டு தொங்கிக் கொண்டிருக்கிற பிராணியையும், பின் காது கிழிக்கப்பட்டுத் தொங்கிக் கொண்டிருக்கும் பிராணியையும், காதுகள் இரண்டும் கிழிக்கப்பட்டுப் பிளந்திருக்கிற பிராணியையும், முன்பற்கள் விழுந்துள்ள பிராணியையும் குர்பானீ கொடுக்கக் கூடாது என்றும் எங்களுக்கு இறைத்தூதர்(ஸல்) கட்டளையிட்டார்கள்'' என அலீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், திர்மிதீ, நஸயீ இப்னு மாஜா மற்றும் அபூ தாவூத்
இமாம் திர்மிதீ, இமாம் இப்னு ஹிப்பான் மற்றும் இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
1394. وَعَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {أَمَرَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ أَقْوَمَ عَلَى بُدْنِهِ، وَأَنْ أُقَسِّمَ لُحُومَهَا وَجُلُودَهَا وَجِلَالَهَا عَلَى الْمَسَاكِينِ، وَلَا أُعْطِيَ فِي جِزَارَتِهَا مِنْهَا شَيْئاً} مُتَّفَقٌ عَلَيْهِ.
1394. இறைத்தூதர்(ஸல் - தம் ஹஜ்ஜின்போது) தம்முடைய ஒட்டகங்களை தம் சார்பாக அறுத்து குர்பானீ கொடுக்கும் பணியைக் கவனித்துக் கொள்ளுமாறும், அவற்றின் இறைச்சிகளையும், அவற்றின் தோல்களையும் (அப்பகுதி) ஏழைகளிடமே பங்கிடும் படியும் அதனை அறுப்பதற்காக (அறுப்பவருக்கு) அதிலிருந்து எதையும் (கூலியாகத்) தரக் கூடாது என்றும் எனக்குக் கட்டளை இட்டார்கள் என அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ, முஸ்லிம்