1417. وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {نَذَرَتْ أُخْتِي أَنْ تَمْشِيَ إِلَى بَيْتِ اللهُ حَافِيَةً، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "لِتَمْشِ وَلْتَرْكَبْ"} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِمُسْلِمٍ.
1417. கஅபத்துல்லாஹ்விற்கு (செருப்பில்லாமல்) வெறுங்காலால் நடந்து செல்வதாக என் சகோதரி நேர்ச்சை செய்திருந்தார். இது குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சட்டம் கேட்குமாறு என்னிடம் கூறினார். நானும் அவ்வாறே இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சட்டம் கேட்டேன்.
``அவர் நடந்து செல்லட்டும்'' என்று கூறினார்கள் என உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
1418. وَلِلْخَمْسَةِ.فَقَالَ: {"إِنَّ اللهُ لَا يَصْنَعُ بِشَقَاءِ أُخْتِكَ شَيْئاً، مُرْهَا: فَلْتَخْتَمِرْ ، وَلْتَرْكَبْ، وَلْتَصُمْ ثَلَاثَةَ أَيَّامٍ"}.
1418. உன் சகோதரி (இதனால்) கஷ்டப்படுவதை வைத்து அல்லாஹ் ஏதும் செய்யப் போவதில்லை. பர்தா அணிந்து கொண்டு வாகனத்தில் செல்லச் சொல்! மேலும், மூன்று நோன்புகள் நோற்கும்படி கட்டளையிடு! என அஹ்மத், அபூ தாவூத், திர்மிரீ, நஸயீ மற்றும் இப்னு மாஜாவில் உள்ளது.
குறிப்பு: பர்தா அணியாமல் செல்வேன் என அப்பெண் நோர்ச்கை செய்திருந்ததாக மற்றோர் அறிவிப்பில் உள்ளது. எனவேதான், நபி(ஸல்) இவ்வாறு கூறினார்கள் என்பதை அறிக!
1419. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {اِسْتَفْتَى سَعْدُ بْنُ عُبَادَةَ رَضِيَ اللهُ عَنْهُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَذْرٍ كَانَ عَلَى أُمِّهِ، تُوُفِّيَتْ قَبْلِ أَنْ تَقْضِيَهُ ؟ فَقَالَ: "اِقْضِهِ عَنْهَا"} مُتَّفَقٌ عَلَيْهِ.
1419. தம் தாயார் ஒரு நேர்ச்சை செய்திருந்து அதனை நிறைவேற்றாமலேயே இறந்துபோனது குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஸஅத் இப்னு உபாதா(ரலி) சட்டம் கேட்டார்.
``அவர் சார்பாக அதனை நீங்கள் நிறைவேற்றுங்கள்!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1420. وَعَنْ ثَابِتِ بْنِ الضَّحَّاكِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {نَذَرَ رَجُلٌ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنْحَرَ إِبِلاً بِبُوَانَةَ، فَأَتَى رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ: فَقَالَ: "هَلْ كَانَ فِيهَا وَثَنٌ يُعْبَدُ ؟". قَالَ: لَا. قَالَ: "فَهَلْ كَانَ فِيهَا عِيدٌ مِنْ أَعْيَادِهِمْ ؟" فَقَالَ: لَا.فَقَالَ: "أَوْفِ بِنَذْرِكَ؛ فَإِنَّهُ لَا وَفَاءَ لِنَذْرٍ فِي مَعْصِيَةِ اللهِ، وَلَا فِي قَطِيعَةِ رَحِمٍ، وَلَا فِيمَا لَا يَمْلِكُ اِبْنُ آدَمَ"} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَالطَّبَرَانِيُّ وَاللَّفْظُ لَهُ، وَهُوَ صَحِيحُ الْإِسْنَادِ.
1420. இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில், சில ஒட்டகங்களை `புவானா' எனும் இடத்தில் அறுப்பபதாக ஒருவர் நேர்ச்சை செய்தார். பின்னர், அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கேட்டார்.
``அங்கு ஏதேனும் சிலை வணங்கப்பட்டு வந்ததா?'' என இறைத்தூதர்(ஸல்) கேட்டார்கள்.
``இல்லை'' என அவர் கூறினார்.
``அறியாமைக்கால விழாக்களில் ஏதேனும் ஒரு திருவிழா அங்கு நடத்தப்பட்டு வந்ததா?'' என இறைத்தூதர்(ஸல்) கேட்டார்கள்.
``இல்லை'' என அவர் கூறினார். ``(அப்படியானால்) நீ உன் நேர்ச்சையை நிறைவேற்றிக் கொள்! அல்லாஹ்விற்குமாறு செய்வதாக உள்ள நேர்ச்சையைத்தான் நிறைவேற்றக் கூடாது. மேலும், உறவை முறிக்கும் நேர்ச்சையை நிறைவேற்றக் கூடாது. மேலும். ஆதமின் மகனால் இயலாதவற்றில் நேர்ச்சை இல்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஸாபித் இப்னு ளஹ்ஹாக்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், தபரானீ
இங்கு தப்ரானீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
இதன் அறிவிப்புத் தொடர் ஆதாரப்பூர்வமானது.
1421. وَلَهُ شَاهِدٌ: مِنْ حَدِيثِ كَرْدَمٍ. عِنْدَ أَحْمَدَ.
1421. கர்தம் வாயிலாக அஹ்மதில் இதற்கு சான்றாக ஹதீஸ் உள்ளது.
1422. وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ رَجُلاً قَالَ يَوْمَ الْفَتْحِ: يَا رَسُولَ اللهِ! إِنِّي نَذَرْتُ إِنْ فَتَحَ اللهُ عَلَيْكَ مَكَّةَ أَنْ أُصَلِّيَ فِي بَيْتِ الْمَقْدِسِ، فَقَالَ: "صَلِّ هَا هُنَا". فَسَأَلَهُ، فَقَالَ: "صَلِّ هَا هُنَا". فَسَأَلَهُ، فَقَالَ: "شَأْنُكَ إِذًا"} رَوَاهُ أَحْمَدُ، أَبُو دَاوُدَ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
1422. மக்கா வெற்றி நாளன்று ஒருவர் எழுந்து நின்று ``இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு அல்லாஹ் மக்காவின் வெற்றியை அளித்தால் பைத்துல் மக்தஸில் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவதாக நான் நேர்ச்சை செய்திருந்தேன்'' எனக் கூறினார்.
``இங்கேயே தொழுது கொள்!'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
அவர் மறுபடியும் கேட்டதற்கு, ``இங்கு தொழுது கொள்!'' என்றே இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
அவர் மூன்றாம் முறை கேட்டதும், ``அப்படியானால் நீ உன் விருப்பப்படி செய்து கொள்! என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத்
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1423. وَعَنْ أَبِي سَعِيدٍ اَلْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {"لَا تُشَدُّ الرِّحَالُ إِلَّا إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ: مَسْجِد الْحَرَامِ، وَمَسْجِدِ الْأَقْصَى، وَمَسْجِدِي"} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِلْبُخَارِيِّ.
1423. ``1, மஸ்ஜிதுல் ஹராம் 2. மஸ்ஜிதுல் அக்ஸா (பைத்துல் முகத்தஸ்) 3. என்னுடைய இந்த இறைஇல்லம் (மஸ்ஜிதுன் நபவீ எனும் மதீனாவில் உள்ள இறைஇல்லம்) ஆகிய மூன்று இறைஇல்லங்களைத் தவிர, வேறு எதை நோக்கியும் (புனிதப்) பயணம் மேற்கொள்ளாதீர்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு புகாரீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
1424. وَعَنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {قُلْتُ: يَا رَسُولَ اللهِ! إِنِّي نَذَرْتُ فِي الْجَاهِلِيَّةِ؛ أَنْ أَعْتَكِفَ لَيْلَةً فِي الْمَسْجِدِ الْحَرَامِ. قَالَ: "فَأَوْفِ بِنَذْرِكَ"} مُتَّفَقٌ عَلَيْهِوَزَادَ الْبُخَارِيُّ فِي رِوَايَةٍ {فَاعْتَكَفَ لَيْلَةً}.كِتَاب الْقَضَاءِ
1424. ``இறைத்தூதர் அவர்களே! மஸ்ஜிதுல் ஹராமில் ஓர் இரவு (தங்கி) இஃதிகாஃப் இருப்பதாக நான் அறியாமைக் காலத்தில் நேர்ச்சை செய்திருந்தேன்'' என தாம் கூறினேன் என்றும், அதற்கு, ``உன் நேர்ச்சை நிறைவேற்றிக் கொள்!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என்றும் உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
``அவ்வாறே உமர்(ரலி) ஓர் இரவு மஸ்ஜிதுல் ஹராமில் இஃதிகாஃப் இருந்தார்'' என்னும் வாசகம் புகாரீயில் அதிகப்படியாக உள்ளது.

1425. عَنْ بُرَيْدَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {"اَلْقُضَاةُ ثَلَاثَةٌ: اِثْنَانِ فِي النَّارِ، وَوَاحِدٌ فِي الْجَنَّةِ. رَجُلٌ عَرَفَ الْحَقَّ، فَقَضَى بِهِ، فَهُوَ فِي الْجَنَّةِ. وَرَجُلٌ عَرَفَ الْحَقَّ، فَلَمْ يَقْضِ بِهِ، وَجَارَ فِي الْحُكْمِ، فَهُوَ فِي النَّارِ. وَرَجُلٌ لَمْ يَعْرِفِ الْحَقَّ، فَقَضَى لِلنَّاسِ عَلَى جَهْلٍ، فَهُوَ فِي النَّارِ"} رَوَاهُ الْأَرْبَعَةُ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
1425. ``நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் புகுவர். 1. நீதியை அறிந்து அதன் படி செயல்படுபவர். இவர் சுவர்க்கத்தில் புகுவார். 2. நீதியை அறிந்தும் அதன் படி தீர்ப்பளிக்காமல், தீர்ப்பில் அநீதி செய்தவர். இவர் நரகத்தில் புகுவார். 3. உண்மையை அறியாமல் தன் அறியாமையுடனேயே மக்களுக்குத் தீர்ப்பு வழங்கியவர் நரகத்தில் புகுவார்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என புரைதா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1426. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: {"مَنْ وَلِيَ الْقَضَاءَ فَقَدْ ذُبِحَ بِغَيْرِ سِكِّينٍ"} رَوَاهُ الْخَمْسَةُوَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ، وَابْنُ حِبَّانَ.
1426. ``யாரிடம் தீர்ப்பளிக்கும் பொறுப்பு தரப்பட்டதோ அவர் கத்தி இல்லாமல் அறுக்கப்பட்டவர் போல் ஆகிறார்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னுமாஜா
இமாம் இப்னு குஸைமா மற்றும் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
குறிப்பு: தீர்ப்பு வழங்குவதில் மிகவும் எச்சரிக்கையாக இருந்து நியாயத்தை மட்டுமே நிலைநிறுத்த வேண்டும் என்பதை அறிக!
1427. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {"إِنَّكُمْ سَتَحْرِصُونَ عَلَى الْإِمَارَةِ، وَسَتَكُونُ نَدَامَةً يَوْمَ الْقِيَامَةِ، فَنِعْمَ الْمُرْضِعَةُ، وَبِئْسَتِ الْفَاطِمَةُ"} رَوَاهُ الْبُخَارِيُّ.
1427. ``நீங்கள் தலைமைப் பதவிக்கு ஆசைப்படவீர்களானால், மறுமையில் அதுவே உங்களுக்கு வருத்தத்தை உண்டாக்கும். அது உலக வாழ்வில் இனிமையானது; மறுமையில் கசப்பானது; பாலூட்டுபவை தரும் இன்பங்களிலேயே பதவிப் பாலே இன்பமானது; பாலை மறக்கடிப்பதிலேயே பதவிதான் மோசனமாது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
1428. وَعَنْ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: {"إِذَا حَكَمَ الْحَاكِمُ، فَاجْتَهَدَ، ثُمَّ أَصَابَ، فَلَهُ أَجْرَانِ. وَإِذَا حَكَمَ، فَاجْتَهَدَ، ثُمَّ أَخْطَأَ، فَلَهُ أَجْرٌ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
1428. ``தீர்ப்பளிப்பவர் நன்கு ஆராய்ந்து பின்னர் சரியான முடிவை அடைந்தால், அவருக்கு இரண்டு நன்மைகள் உள்ளன. தீர்ப்பளிப்பவர் நன்கு ஆராய்ந்து தீர்ப்பளித்தும் (அவரையும் அறியாமல்) அதில் தவறு நிகழ்ந்தால், அவருக்கு ஒரு நன்மை உண்டு'' என்று இறைத்தூதர்(ஸல்) கூற நான் செவியுற்றேன் என அம்ர் இப்னு ஆஸ்ர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1429. وَعَنْ أَبِي بَكْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: {" لَا يَحْكُمُ أَحَدٌ بَيْنَ اِثْنَيْنِ، وَهُوَ غَضْبَانُ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
1429. ``கோபமாய் இருப்பவர், அந்நிலையில் இருவருக்கு மத்தியில் தீர்ப்பளிக்க வேண்டாம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூற நான் செவியுற்றுள்ளேன் என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1430. وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {" إِذَا تَقَاضَى إِلَيْكَ رَجُلَانِ، فَلَا تَقْضِ لِلْأَوَّلِ، حَتَّى تَسْمَعَ كَلَامَ الْآخَرِ، فَسَوْفَ تَدْرِي كَيْفَ تَقْضِي". قَالَ. عَلِيٌّ: فَمَا زِلْتُ قَاضِيًا بَعْدُ} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ، وَالتِّرْمِذِيُّ وَحَسَّنَهُ، وَقَوَّاهُ اِبْنُ الْمَدِينِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.
1430. ``உன்னிடம் யாரேனும் தீர்ப்பு கேட்டு வந்தால் மற்றவரின் (பிரதி வாதியின்) பேச்சைக் கேட்காமல் தீர்ப்பளிக்காதே! (ஏனெனில்) அப்போதுதான் எவ்வாறு தீர்ப்பு அளிப்பது என்பதை நீ அறிவாய்!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள். ``அதற்குப் பின் நான் அவ்வாறே தீர்ப்பளித்து வந்தேன்'' என அலீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத் மற்றும் திர்மிதீ
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை `ஹஸன்' எனக் குறிப்பிட்டுள்ளார். இப்னு மதீனீயில் இது `பலமானது' எனக் கூறப்பட்டுள்ளது.
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1431. وَلَهُ شَاهِدٌ عِنْدَ الْحَاكِمِ: مِنْ حَدِيثِ اِبْنِ عَبَّاسٍ.
1431. இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாக ஹாகிமில் இதற்குச் சான்றாக ஒர் அறிவிப்பு உள்ளது.
1432. وَعَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: {" إِنَّكُمْ تَخْتَصِمُونَ إِلَيَّ، وَلَعَلَّ بَعْضَكُمْ أَنْ يَكُونَ الْحَنَ بِحُجَّتِهِ مِنْ بَعْضٍ، فَأَقْضِيَ لَهُ عَلَى نَحْوٍ مِمَّا أَسْمَعُ، مِنْهُ فَمَنْ قَطَعْتُ لَهُ مِنْ حَقِّ أَخِيهِ شَيْئًا، فَإِنَّمَا أَقْطَعُ لَهُ قِطْعَةً مِنَ النَّارِ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
1432. ``நீங்கள் என்னிடம் வழக்குகளைக் கொண்டு வருகிறீர்கள். உங்களில் ஒருவர் மற்றொருவரைவிட வாக்கு சாதுர்ய மிக்கவராய் இருக்கக் கூடும். எனவே, அவரிடம் கேட்டதை அடிப்படையாக வைத்து, நான் அவருக்கு (சாதகமாக) தீர்ப்பளித்துவிடுகிறேன். ஆகவே, ஒருவருக்கு (உரிமையில்லாத) அவரின் சகோதரனின் உரிமையிலிருந்து சிறிதை (அவருக்குரியது என) நான் தீர்ப்பளித்துவிடுகிறேன். (இவ்வாறு நிகழ்ந்துவிட்டால்) அவருக்கு நான் நரக நெருப்பின் ஒரு துண்டைத்தான் துண்டித்துக் கொண்டிருக்கிறேன்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1433. وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: {"كَيْفَ تُقَدَّسُ أُمَّةٌ، لَا يُؤْخَذُ مِنْ شَدِيدِهِمْ لِضَعِيفِهِمْ؟"} رَوَاهُ اِبْنُ حِبَّانَ.
1433. ``எந்த சமுதாயத்தின் வலியவர்களிடமிருந்து அதிலுள்ள எளியவர்களுக்கு (அவர்களின்) உரிமை பெற்றுத் தரப்படுவதில்லையோ, அந்த சமுதாயத்தைத் தூய்மையானது என எவ்வாறு சொல்ல முடியும்?'' என்று இறைத்தூதர்(ஸல்) கூற நான் செவியுற்றுள்ளேன் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்: இப்னு ஹிப்பான்
1434. وَلَهُ شَاهِدٌ: مِنْ حَدِيثِ بُرَيْدَةَ، عِنْدَ الْبَزَّارِ.
1434. பஸ்ஸாரில் புரைதா(ரலி) வாயிலாக இதற்குச் சான்றாக ஹதீஸ் உள்ளது.
1435. وَآخَرُ: مِنْ حَدِيثِ أَبِي سَعِيدٍ عِنْدَ اِبْنِ مَاجَه.
1435. இப்னு மாஜாவில் அபூ ஸயீத்(ரலி) வாயிலாக இதற்குச் சான்றாக ஹதீஸ் உள்ளது.
1436. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: {" يُدْعَى بِالْقَاضِي الْعَادِلِ يَوْمَ الْقِيَامَةِ، فَيَلْقَى مِنْ شِدَّةِ الْحِسَابِ مَا يَتَمَنَّى أَنَّهُ لَمْ يَقْضِ بَيْنَ اِثْنَيْنِ فِي عُمْرِهِ"} رَوَاهُ اِبْنُ حِبَّانَوَأَخْرَجَهُ الْبَيْهَقِيُّ، وَلَفْظُهُ: {فِي تَمْرَةٍ}.
1436. ``மறுமை நாளில் (உலகில்) நீதி செலுத்திய நீதிபதி விசாரணைக்கு அழைக்கப்படுவார். அவரிடம் கடுமையான முறையில் கணக்கு வாங்கப்படும். அப்போது, ``நான் என் வாழ்நாளில் எந்த இருவருக்கு இடையிலும், தீர்ப்பளிக்ககாமல் இருந்ததிருந்தால், நன்றாக இருந்திருக்குமே!'' என அவர் கூறுவார் என்று இறைத்தூதர்(ஸல்) கூற, நான் செவியுற்றுள்ளேன் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: இப்னு ஹிப்பான், பைஹகீ
பைஹகீயில், ``எந்த இருவருக்கு இடையிலும்'' என்பதற்குப் பதிலாக ``ஒரு காய்ந்த பேரீச்சம் பழம் தொடர்பாகவும்'' எனும் வாசகம் உள்ளது.