1397. وَأَخْرَجَ اِبْنُ حِبَّانَ: مِنْ حَدِيثِ أَنَسٍ نَحْوَه ُ.
1397. அனஸ்(ரலி) வாயிலாக இப்னு ஹிப்பானில் இதே போன்று ஹதீஸ் பதிவிடப்பட்டுள்ளது.
1398. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا؛ {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمْرَهُمْ؛ أَنْ يُعَقَّ عَنِ الْغُلَامِ شَاتَانِ مُكَافِئَتَانِ، وَعَنِ الْجَارِيَةِ شَاةٌ} رَوَاهُ التِّرْمِذِيُّ وَصَحَّحَهُ.
1398. ``ஆண் குழந்தைக்கு இரண்டு ஆடுகளுக்கு, பெண் குழந்தைக்கு ஓர் ஆடும் அகீகா கொடுக்குமாறு இறைத்தூதர்(ஸல்) தம் தோழர்களுக்குக் கட்டளையிட்டாகள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1399. وَأَخْرَجَ الْخَمْسَة ُعَنْ أُمِّ كُرْزٍ الْكَعْبِيَّةِ نَحْوَهُ.
1399. உம்மு குர்ஸ் அல்கஅபிய்யாஹ் வாயிலாக அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ மற்றும் இப்னு மாஜாவில் இது போன்று ஹதீஸ் உள்ளது.
1400. وَعَنْ سَمُرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {"كُلُّ غُلَامٍ مُرْتَهَنٌ بِعَقِيقَتِهِ، تُذْبَحُ عَنْهُ يَوْمَ سَابِعِهِ، وَيُحْلَقُ، وَيُسَمَّى"} رَوَاهُ الْخَمْسَةُ، وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ.كِتَاب الْأَيْمَانُ وَالنُّذُورُ
1400. ``ஒவ்வொரு குழந்தையும் அதன் ஆகீகாவுக்குப் பிணையாக வைக்கப்பட்டுள்ளது. அதன் சார்பாக அது பிறந்த ஏழாவது நாளில் (ஆடு) அறுக்கப்பட வேண்டும். அதன் (குழந்தைiயின்) தலையை மழித்து அதற்குப் பெயர் சூட்ட வேண்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என சமுரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னுமாஜா.
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்..

1401. عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا، {عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ أَدْرَكَ عُمَرَ بْنَ الْخَطَّابِ فِي رَكْبٍ، وَعُمَرَ يَحْلِفُ بِأَبِيهِ، فَنَادَاهُمْ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "أَلَا إِنَّ اللهُ يَنْهَاكُمْ أَنْ تَحْلِفُوا بِآبَائِكُمْ، فَمَنْ كَانَ حَالِفاً فَلْيَحْلِفْ بِاللَّهِ، أَوْ لِيَصْمُتْ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
1401. வாகனக் கூட்டத்தில் இருந்த உமர்(ரலி) தம் தந்தையின் மீது சத்தியம் செய்ததைக் கண்ட இறைத்தூதர்(ஸல்), அவரை அழைத்து, ``எச்சரிக்கையாய் இருங்கள்! உங்கள் தந்தையர் மீது நீங்கள் சத்தியம் செய்வதை அல்லாஹ் தடைசெய்துள்ளான்! யாரேனும் சத்தியம் செய்ய நேர்ந்தால் அவர் அல்லாஹ்வின் மீது (மட்டும்) சத்தியம் செய்யட்டும்; அல்லது மௌனமாக இருக்கட்டும்!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1402. وَفِي رِوَايَةٍ لِأَبِي دَاوُدَ، وَالنَّسَائِيِّ: عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ {لَا تَحْلِفُوا بِآبَائِكُمْ، وَلَا بِأُمَّهَاتِكُمْ، وَلَا بِالْأَنْدَادِ، وَلَا تَحْلِفُوا إِلَّا بِاللَّهِ، وَلَا تَحْلِفُوا بِاللهُ إِلَّا وَأَنْتُمْ صَادِقُونَ"}.
1402. ``உங்கள் தந்தையர் மீதும், தாய்மார்கள் மீதும் இணைவைத்து வணங்கப்படும் பொய்க் கடவுள்கள் மீதும் சத்தியம் செய்யாதீர்கள். நீங்கள் உண்மையாளராய் இருந்தாலே தவிர, அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யாதீர்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ
1403. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {"يَمِينُكَ عَلَى مَا يُصَدِّقُكَ بِهِ صَاحِبُكَ"}
1403. ``உன்னிடம் சத்தியம் வாங்குபவர் (நீதிபதி அல்லது பிரதிவாதி) நீ எதற்காக சத்தியம் செய்ததாக நம்புகிறாரோ, அதற்காக செய்ததாகவே உன் சத்தியம் நிகழும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1404. وَفِي رِوَايَةٍ: {"اَلْيَمِينُ عَلَى نِيَّةِ الْمُسْتَحْلِفِ"} أَخْرَجَهُمَا مُسْلِمٌ.
1404. மற்றோர் அறிவிப்பில், ``சத்தியத்தைக் கேட்டு வாங்கியவரின் (நீதிபதியின்) நோக்கத்தின் அடிப்படையிலேயே அந்த சத்தியத்திற்குப் பொருள் கொள்ளப்படும்'' என உள்ளது.
நூல்: முஸ்லிம்
1405. وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {وَإِذَا حَلَفْتَ عَلَى يَمِينٍ، فَرَأَيْتُ غَيْرَهَا خَيْراً مِنْهَا، فَكَفِّرْ عَنْ يَمِينِكَ، وَائْتِ الَّذِيْ هُوَ خَيْرٌ"} مُتَّفَقٌ عَلَيْهِ. وَفِي لَفْظٍ لِلْبُخَارِيِّ: {" فَائِت الَّذِيْ هُوَ خَيْرٌ، وَكَفِّرْ عَنْ يَمِينِكَ"}. وَفِي رِوَايَةٍ لِأَبِي دَاوُدَ: {" فَكَفِّرْ عَنْ يَمِينِكَ، ثُمَّ اِئْتِ الَّذِيْ هُوَ خَيْرٌ"} وَإِسْنَادُهَا صَحِيحٌ.
1405. ``நீ ஓர் உறுதிப் பிரமாணத்திற்காக சத்தியம் செய்து, பின்னர் அதைவிடச் சிறந்ததைக் கண்டால் (அதை முறித்து) உன் சத்தியத்திற்குப் பரிகாரம் செய்துகொள்! பின்னர், அந்த நல்லதைச் செய்து கொள்!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அப்துர் ரஹ்மான் இப்னு ஸமுரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
புகாரீயில், ``நல்லதைச் செய்துவிட்டு உன் சத்தியத்திற்கு, பரிகாரம் செய்துகொள்!'' என உள்ளது.
அபூ தாவூதின் மற்றோர் அறிவிப்பில், ``உன் சத்தியத்திற்குப் பரிகாரம் செய்துவிட்டு பின்னர், நல்லதைச் செய்துகொள்!'' என உள்ளது. அபூ தாவூதில் வரும் இரண்டு அறிவிப்பாளர் தொடரும் சரியானதே.
1406. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {"مَنْ حَلِفِ عَلَى يَمِينٍ فَقَالَ: إِنْ شَاءَ اللهُ، فَلَا حِنْثَ عَلَيْهِ"} رَوَاهُ الْخَمْسَةُ. وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.
1406. ``அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து, அல்லாஹ் நாடினால் என்பதையும் கூறியவர் (அவர் அதை மீறிவிட்டால்) அதற்காகப் பரிகாரம் செய்யத் தேவை இல்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1407. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {كَانَتْ يَمِينُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "لَا، وَمُقَلِّبِ الْقُلُوبِ"} رَوَاهُ الْبُخَارِيُّ.
1407. ``உள்ளங்களை புரட்டுபவன் மீது ஆணையாக!'' என்று இறைத்தூதர்(ஸல்) சத்தியம் செய்பவர்களாய் இருந்தார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
1408. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِوٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللهِ! مَا الْكَبَائِرُ؟. … فَذَكَرَ الْحَدِيثَ، وَفِيهِ قُلْتُ: وَمَا الْيَمِينُ الْغَمُوسُ؟ قَالَ: " الَّذِيْ يَقْتَطِعُ مَالَ امْرِئٍ مُسْلِمٍ، هُوَ فِيهَا كَاذِبٌ"} أَخْرَجَهُ الْبُخَارِيُّ.
1408. நபி(ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து, ``இறைத்தூதர் அவர்களே! பெரும் பாவங்கள் எவை?'' எனக் கேட்டார். (அறிவிப்பாளர் முழு ஹதீஸையும் கூறினார்) அதில், `பொய் சத்தியம் (பெரும் பாவங்களில் ஒன்று)'' என்றும் உள்ளது.
``இறைத்தூதர் அவர்களே! பொய் சத்தியம் என்றால் என்ன?'' என நான் வினவினேன்.
``ஒரு முஸ்லிமின் செல்வத்தைப் பொய் சொல்லியபடி சத்தியமிட்டுப் பறித்துக் கொள்கிறானே, அந்த மோசடியான சத்தியம்தான் அது'' எனக் கூறினார்கள் என்றும் அதில் உள்ளது. இதனை அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
1409. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا {فِي قَوْلِهِ تَعَالَى: لَا يُؤَاخِذُكُمُ اللهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْقَالَتْ: هُوَ قَوْلُ الرَّجُلِ: لَا وَاللهِ. بَلَى وَاللهِ} أَخْرَجَهُ الْبُخَارِيُّ. وَأَوْرَدَهُ أَبُو دَاوُدَ مَرْفُوعاً.
1409. ``நீங்கள் விளையாட்டாகச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றை முறித்தால்) உங்களை அல்லாஹ் தண்டிக்க மாட்டான்'' என்னும் (2:225) இறைவசனத்திற்கு விளக்கம் தரும்போது, அதாவது இல்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! `ஏனில்லை? அல்லாஹ்வின் மீது சத்தியமாக!' என்றெல்லாம் (பழக்கத்தின் காரணமாக) கூறுவதைத்தான் விளையாட்டாகச் செய்யும் சத்தியம் என்று இறைவன் குறிப்பிடுகிறான் என ஆயிஷா(ரலி) கூறினார்.
நூல்: புகாரீ
இமாம் அபூ தாவூத்(ரஹ்) இதனை `மர்ஃபூஃ' எனக் குறிப்பிட்டுள்ளார்.
1410. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {"إِنَّ لِلَّهِ تِسْعًا وَتِسْعِينَ اِسْماً، مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ"} مُتَّفَقٌ عَلَيْهِ. وَسَاقَ التِّرْمِذِيُّ وَابْنُ حِبَّانَ الْأَسْمَاءِ، وَالتَّحْقِيقُ أَنَّ سَرْدَهَا إِدْرَاجٌ مِنْ بَعْضِ الرُّوَاةِ.
1410. ``அல்லாஹ்வுக்கு மொத்தம் 99 பெயர்கள் உள்ளன. அவற்றை மனனம் செய்தவர் சுவர்க்கம் புகுவார்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
திர்மிதீ மற்றும் இப்னு ஹிப்பானில் அந்த 99 பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், சில அறிவிப்பாளர்கள், அவற்றைச் சேர்த்துள்ளனர் என்பதே சரியான கருத்தாகும்.
1411. وَعَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {"مَنْ صُنِعَ إِلَيْهِ مَعْرُوفٌ، فَقَالَ لِفَاعِلِهِ: جَزَاكِ اللهُ خَيْراً. فَقَدْ أَبْلَغَ فِي الثَّنَاءِ"} أَخْرَجَهُ التِّرْمِذِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.
1411. ``ஒருவருக்கு நன்மை புரியப்பட்டு, அவர் தனக்கு நன்மை புரிந்தவரை நோக்கி, ``ஜஸாக்கல்லாஹு கைரா (அல்லாஹ் உங்களுக்கு நல்ல பிரதிபலனைத் தரட்டும்)' எனக் கூறுவாராயின் அவர் நிறைவான முறையில் நன்றி செலுத்தியவராய் ஆகிறார்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1412. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا، {عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ نَهَى عَنِ النَّذْرِ وَقَالَ: " إِنَّهُ لَا يَأْتِي بِخَيْرٍ وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِهِ مِنَ الْبَخِيلِ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
1412. இறைத்தூதர்(ஸல்) நேர்ச்சை செய்வதைத் தடுத்து, ``அதன் மூலம் கஞ்சனிடமிருந்து (ஏழை எளியவர்களுக்காக) சிறிது பொருளை வெளியே கொண்டு வரலாம் என்பதைத் தவிர, வேறு எந்த நன்மையையும் அது தராது'' என்று கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1413. وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {"كَفَّارَةُ النَّذْرِ كَفَّارَةُ يَمِينٍ"} رَوَاهُ مُسْلِمٌ.. وَزَادَ التِّرْمِذِيُّ فِيهِ: {إِذَا لَمْ يُسَمِّ}، وَصَحَّحَهُ.
1413. ``சத்தியத்திற்குரிய பரிகாரமே நேர்ச்சைக்கும் உரியதாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
``இது அல்லாஹ்வுக்காக செய்யும் நேர்ச்சை எனக் குறிப்பிட்டுக் கூறாவிட்டால்'' என்னும் வாசகம் திர்மிதீயில் அதிகப்படியாக உள்ளது.
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
1414. وَلِأَبِي دَاوُدَ: مِنْ حَدِيثِ اِبْنِ عَبَّاسٍ مَرْفُوعاً: {"مِنْ نَذَرَ نَذْراً لَمْ يُسَمِّهِ، فَكَفَّارَتُهُ كَفَّارَةُ يَمِينٍ، وَمَنْ نَذَرَ نَذْراً فِي مَعْصِيَةٍ، فَكَفَّارَتُهُ كَفَّارَةُ يَمِينٍ، وَمَنْ نَذَرَ نَذْراً لَا يُطِيقُهُ، فَكَفَّارَتُهُ كَفَّارَةُ يَمِينٍ"} وَإِسْنَادُهُ صَحِيحٌ؛ إِلَّا أَنَّ الْحُفَّاظَ رَجَّحُوا وَقْفَهُ.
1414. `இது அல்லாஹ்வுக்காகச் செய்யும் நேர்ச்சை எனக் குறிப்பிடாமல் நேர்ச்சை செய்பவன் அதை முறிக்க விரும்பினால், அதற்குரிய பரிகாரம் சத்தியத்திற்குரிய பரிகாரமேயாகும். மேலும், ஒருவர் பாவமான காரியங்களில் நேர்ச்சை செய்தால் அதற்குரிய பரிகாரமும் சத்தியத்திற்குரிய பரிகாரமேயாகும். மேலும், தன்னால் இயலாதவற்றில் நேர்ச்சை செய்பவர் (அதை முறிக்கும்போது) அதற்குரிய பரிகாரமும் சத்தியத்திற்குரிய பரிகாரமேயாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாக அபூ தாவூதில் ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் தொடரில் பதிவிடப்பட்டுள்ளது.
நூல்கள்: அஹ்மத், அபூதாவூத், நஸயீ இப்னு மாஜா மற்றும் திர்மிதீ
இதில் மவ்கூஃப் எனும் தரம் மேலோங்கியுள்ளது என ஹதீஸ் கலை வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
1415. وَلِلْبُخَارِيِّ: مِنْ حَدِيثِ عَائِشَةَ: {"وَمَنْ نَذَرَ أَنْ يَعْصِيَ اللهُ فَلَا يَعْصِهِ"}.
1415. ``அல்லாஹ்விற்கு மாறு செய்ய நேர்ச்சை செய்ததவர் (அவ்வாறு) மாறுசெய்ய வேண்டாம் (நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டாம்)'' என ஆயிஷா(ரலி) வாயிலாக புகாரீயில் உள்ளது.
1416. وَلِمُسْلِمٍ: مِنْ حَدِيثِ عِمْرَانَ: {"لَا وَفَاءَ لِنَذْرٍ فِي مَعْصِيَةٍ"}.
1416. ``பாவகாரியத்தில் செய்யப்பட்ட நேர்ச்சையை நிறைவேற்றக் கூடாது என இம்ரான்(ரலி) வாயிலாக முஸ்லிமில் உள்ளது.