1435. وَآخَرُ: مِنْ حَدِيثِ أَبِي سَعِيدٍ عِنْدَ اِبْنِ مَاجَه.
1435. இப்னு மாஜாவில் அபூ ஸயீத்(ரலி) வாயிலாக இதற்குச் சான்றாக ஹதீஸ் உள்ளது.
1436. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: {" يُدْعَى بِالْقَاضِي الْعَادِلِ يَوْمَ الْقِيَامَةِ، فَيَلْقَى مِنْ شِدَّةِ الْحِسَابِ مَا يَتَمَنَّى أَنَّهُ لَمْ يَقْضِ بَيْنَ اِثْنَيْنِ فِي عُمْرِهِ"} رَوَاهُ اِبْنُ حِبَّانَوَأَخْرَجَهُ الْبَيْهَقِيُّ، وَلَفْظُهُ: {فِي تَمْرَةٍ}.
1436. ``மறுமை நாளில் (உலகில்) நீதி செலுத்திய நீதிபதி விசாரணைக்கு அழைக்கப்படுவார். அவரிடம் கடுமையான முறையில் கணக்கு வாங்கப்படும். அப்போது, ``நான் என் வாழ்நாளில் எந்த இருவருக்கு இடையிலும், தீர்ப்பளிக்ககாமல் இருந்ததிருந்தால், நன்றாக இருந்திருக்குமே!'' என அவர் கூறுவார் என்று இறைத்தூதர்(ஸல்) கூற, நான் செவியுற்றுள்ளேன் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: இப்னு ஹிப்பான், பைஹகீ
பைஹகீயில், ``எந்த இருவருக்கு இடையிலும்'' என்பதற்குப் பதிலாக ``ஒரு காய்ந்த பேரீச்சம் பழம் தொடர்பாகவும்'' எனும் வாசகம் உள்ளது.
1437. وَعَنْ أَبِي بَكْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {"لَنْ يُفْلِحَ قَوْمٌ وَلَّوْا أَمْرَهُمْ اِمْرَأَةً"} رَوَاهُ الْبُخَارِيُّ.
1437. ``பெண்ணிடம் தன் விவகாரங்களை (முழுவதுமாக) ஒப்படைக்கும் சமுதாயம் எப்போதும் உருப்படாது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
1438. وَعَنْ أَبِي مَرْيَمَ اَلْأَزْدِيِّ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ {قَالَ: "مَنْ وَلَّاهُ اللهُ شَيْئًا مِنْ أَمْرِ الْمُسْلِمِينَ، فَاحْتَجَبَ عَنْ حَاجَتِهِمْ وَفَقِيرِهِم، اِحْتَجَبَ اللهُ دُونَ حَاجَتِهِ"} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَالتِّرْمِذِيُّ.
1438. ``முஸ்லிம்களின் விவகாரங்களில் சிலவற்றுக்குப் பொறுப்பாளராய் அல்லாஹ் ஒருவரை நியமித்திருக்க, முஸ்லிம்களில் தேவை உள்ளவர்களையும், ஏழை எளிய மக்களையும் அவர்களின் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்குத் தடையாக அவர் இருப்பாரானால், அல்லாஹ் அவரின் தேவையை நிறைவேற்றிக் கொள்ளவிடாமல் தடுத்துவிடுவான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ மர்யம் அல் அஸ்தீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், திர்மிதீ
1439. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {لَعَنَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَلرَّاشِيَ وَالْمُرْتَشِيَ فِي الْحُكْمِ} رَوَاهُ الْخَمْسَةُ، وَحَسَّنَهُ التِّرْمِذِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.
1439. (மார்க்க மற்றும் நீதிமன்றத்) தீர்ப்புக்காக இலஞ்சம் வாங்குபவரையும், இலஞ்சம் கொடுப்பவரையும் இறைத்தூதர்(ஸல்) சபித்தார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னு மாஜா மற்றும் அஹ்மத்
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை `ஹஸன்' எனக் குறிப்பிட்டுள்ளார். இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1440. وَلَهُ شَاهِدٌ: مِنْ حَدِيثِ عَبْدِ اللهِ بنِ عَمْرٍو. عِنْدَ الْأَرْبَعَةِ إِلَّا النَّسَائِيَّ.
1440. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) வாயிலாக திர்மிதீ அபூ தாவூத் மற்றும் இப்னு மாஜாவில் இதற்குச் சான்றாக ஹதீஸ் உள்ளது.
1441. وَعَنْ عَبْدِ اللهِ بنِ الزُّبَيْرِ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {قَضَى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ الْخَصْمَيْنِ يَقْعُدَانِ بَيْنَ يَدَيِ الْحَاكِمِ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.بَابُ الشَّهَادَاتِ
1441. நீதிவிசாரணையின்போது வாதியும், பிரதிவாதியும் நீதிபதிக்கு முன்பு (சரிசமமாக) அமர வேண்டும் என்று இறைத்தூதர்(ஸல்) தீர்ப்பளித்தார்கள் என அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1442. عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ اَلْجُهَنِيِّ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {"أَلَا أُخْبِرُكُمْ بِخَيْرِ الشُّهَدَاءِ؟ الَّذِيْ يَأْتِي بِشَهَادَتِهِ قَبْلَ أَنْ يُسْأَلَهَا"} رَوَاهُ مُسْلِمٌ.
1442. ``சாட்சி அளிப்பவர்களில் சிறந்தவர் யாரென உங்களுக்கு அறிவிக்கட்டுமா? கேட்பதற்கு முன்பே சாட்சி அளிப்பவரே அவர்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனீ(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1443. وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {"إِنَّ خَيْرَكُمْ قَرْنِي، ثُمَّ اَلَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ اَلَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ يَكُونُ قَوْمٌ يَشْهَدُونَ وَلَا يُسْتَشْهَدُونَ، وَيَخُونُونَ وَلَا يُؤْتَمَنُونَ، وَيَنْذُرُونَ وَلَا يُوفُونَ، وَيَظْهَرُ فِيهِمُ السِّمَنُ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
1443. ``உங்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையை சேர்ந்தவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள், பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். அதன் பின்பு ஒரு கூட்டத்தார் வருவார்கள்; அவர்களிடம் சாட்சியம் கேட்காமலேயே சிலர் சாட்சி சொல்வர், அவர்கள் அதில் மோசடி செய்வார்கள். அவர்கள் மீது நம்பிக்கை வைக்கப்படாது. (ஏனெனில்) அவர்கள் நேர்ச்சை செய்வார்கள். ஆனால், அதை நிறைவேற்ற மாட்டார்கள். அதில் அவர்களின் உண்மை நிலை வெளிப்பட்டுவிடும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இம்ரான் இப்னு ஹுசைன்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1444. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {"لَا تَجُوزُ شَهَادَةُ خَائِنٍ، وَلَا خَائِنَةٍ، وَلَا ذِي غِمْرٍ عَلَى أَخِيهِ، وَلَا تَجُوزُ شَهَادَةُ الْقَانِعِ لِأَهْلِ الْبَيْتِ"} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ.
1444. ``மோசக்காரன், மோசக்காரியின் சாட்சியம் செல்லாது. பொறாமைக்காரன் தன் (முஸ்லிம்) சகோதரனுக்கு எதிராகச் சொல்லும் சாட்சியமும் செல்லாது. ஒரு வீட்டாருக்கு ஆதரவாக அவர்களின் பணியாள் (அல்லது ஊழியர்) சொல்லும் சாட்சியமும் செல்லாது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத்
குறிப்பு: முஸ்லிம் அல்லாதவருக்கு எதிராக ஒருவர் சாட்சி அளித்தாலும், கொள்கை தவிர வேறு காரணத்திற்காக இருவரிடையே பகைமை இருக்குமானால், அப்போது அந்த முஸ்லிம் அல்லாதவருக்கு எதிராக அந்த சாட்சியம் ஏற்கப்படாது.
1445. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {"لَا تَجُوزُ شَهَادَةُ بَدَوِيٍّ عَلَى صَاحِبِ قَرْيَةٍ"} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَابْنُ مَاجَهْ.
1445. ``நகரவாசிக்கு எதிராக கிராமவாசி அளிக்கும் சாட்சியம் ஏற்கப்படாது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், இப்னு மாஜா
குறிப்பு: கிராமவாசி முரட்டுத்தனம் கொண்டவனாகவோ, எதையும் சரியான முறையில் நினைவில் வைக்காமல் பேசுபவனாகவோ குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில் அவனுடைய சாட்சியம் ஒப்புக் கொள்ளப்படுவதில்லை.
1446. وَعَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّهُ خَطَبَ فَقَالَ: إِنَّ أُنَاسً اكَانُوا يُؤْخَذُونَ بِالْوَحْيِ فِي عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِنَّ الْوَحْيَ قَدْ اِنْقَطَعَ، وَإِنَّمَا نَأْخُذُكُم ْالْآنَ بِمَا ظَهَرَ لَنَا مِنْ أَعْمَالِكُمْ} رَوَاهُ الْبُخَارِيُّ.
1446. உமர்(ரலி) உரை நிகழ்த்தியபோது, ``நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சிலர் (தவறிழைத்தவர்கள்) வஹீ மூலம் கண்டித்துத் தண்டிக்கப்பட்டார்கள். இப்போது வஹீ அறிவிக்கப்படுவது நின்றுவிட்டதால், உங்கள் செயல்களில் எது வெளிப்படுகிறதோ, அதற்காகவே இப்போது நாம் உங்களைப் பிடிப்போம்'' எனக் கூறினார்கள்.
நூல்: புகாரீ
1447. وَعَنْ أَبِي بَكْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ {عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ عَدَّ شَهَادَةَ الزُّورِ فِ يأَكْبَرِ الْكَبَائِرِ} مُتَّفَقٌ عَلَيْهِ فِي حَدِيثٍ طَوِيْلٍ.
1447. ``பொய் சாட்சியைப் பெரும் பாவங்களில் மிகப் பெரியதாய் இறைத்தூதர்(ஸல்) கருதினார்கள்'' என அபூ பக்ராஹ்(ரலி) அறிவித்தார். (நீண்ட ஹதீஸ்)
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
குறிப்பு: இந்த ஹதீஸை முழுவதுமாக அறிந்திட புகாரீ 2654 ஹதீஸ் எண்ணைக் காண்க!
1448. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِرَجُلٍ: "تَرَى الشَّمْسَ؟" قَالَ: نَعَمْ. قَالَ: "عَلَى مِثْلِهَا فَاشْهَدْ، أَوْ دَعْ"} أَخْرَجَهُ اِبْنُ عَدِيٍّ بِإِسْنَادٍ ضَعِيفٍ، وَصَحَّحَهُ الْحَاكِمُ فَأَخْطَأَ.
1448. இறைத்தூதர்(ஸல்) ஒரு மனிதரிடம், ``நீ சூரியனைப் பார்க்கிறாயா?'' எனக் கேட்டார்கள்.
``ஆம்'' என அவர் கூறினார்.
``அதைப்போன்று தெளிவானவற்றில் சாட்சி சொல்! இல்லையேல் விட்டுவிடு!'' என்று கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இமாம் இப்னு அதீ(ரஹ்) இதனை பலவீனமான அறிவிப்பாளர் தொடரில் பதிவிடப்பட்டுள்ளார்.
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் தவறுதலாக இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
1449. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى بِيَمِينٍ وَشَاهِدٍ} أَخْرَجَهُ مُسْلِمٌ. وَأَبُو دَاوُدَ. وَالنَّسَائِيُّ وَقَالَ: إِسْنَادُ[هُ جَيِّدٌ.
1449. ஒரு சத்தியம் மற்றும் ஒரு சாட்சியைக் கொண்டு இறைத்தூதர்(ஸல்) தீர்ப்பளித்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: முஸ்லிம், அபூ தாவூத் மற்றும் நஸயீ
இதன் அறிவிப்புத் தொடர் சரியானது என இமாம் நஸயீ(ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பு: வாதியிடமிருந்து சாட்சியத்தையும், பிரதிவாதியிடமிருந்து சத்தியத்தையும் பெற்று அதன்படி தீர்ப்பளித்தார்கள்.
1450. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ مِثْلَهُ. أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَالتِّرْمِذِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ. بَابُ الدَّعْوَى وَالْبَيِّنَاتِ
1450. அபூ தாவூத் மற்றும் திர்மிதீயில் அபூ ஹுரைரா(ரலி) வாயிலாக மேற்கண்ட ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1451. عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {"لَوْ يُعْطَى النَّاسُ بِدَعْوَاهُمْ، لَادَّعَى نَاسٌ دِمَاءَ رِجَالٍ، وَأَمْوَالَهُمْ، وَلَكِنِ الْيَمِينُ عَلَى الْمُدَّعَى عَلَيْهِ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
1451. ``மக்களுக்கு, அவர்களின் வாதத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் கோருவதை எல்லாம் (பிரதிவாதியை விசாரிக்காமல்) கொடுத்தோம் என்றால் மக்கள், பலரின் உயிருக்கும் உடமைக்கும் உரிமை கொண்டாடத் தொடங்கிவிடுவார்கள். எனினும், பிரதிவாதியின் மீது (தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை மறுப்பதற்கு) சத்தியம் செய்யும் கடமை உள்ளது'' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1452. وَلِلْبَيْهَقِيِّ بِإِسْنَادٍ صَحِيحٍ: {"اَلْبَيِّنَةُ عَلَى الْمُدَّعِي، وَالْيَمِينُ عَلَى مَنْ أَنْكَرَ}.
1452. ``வழக்காடுபவன் (வாதி) ஆதாரம் கொண்டு வரவேண்டும். அதனை மறுப்பவன் (பிரதிவாதி) சத்தியம் செய்ய வேண்டும்'' என பைஹகீயில் உள்ளது.
இதன் அறிவிப்புத் தொடர் ஆதாரப்பூர்வமானது.
1453. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَرَضَ عَلَى قَوْمٍ الْيَمِينَ، فَأَسْرَعُوا، فَأَمَرَ أَنْ يُسْهَمَ بَيْنَهُمْ فِي الْيَمِينِ، أَيُّهُمْ يَحْلِفُ} رَوَاهُ الْبُخَارِيُّ.
1453. ஒரு கூட்டத்தை இறைத்தூதர்(ஸல்) சத்தியம் செய்யுமாறும் கட்டளையிட்டார்கள். அவர்கள் சத்தியம் செய்வதில் விரைவதைக் கண்ட இறைத்தூதர்(ஸல்), ``யார் சத்தியம் செய்வது?'' என்பதைக் குலுக்கல் போடுமாறு கட்டளையிட்டார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
1454. وَعَنْ أَبِي أُمَامَةَ الْحَارِثِيُّ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {"مَنْ اِقْتَطَعَ حَقَّ امْرِئٍ مُسْلِمٍ بِيَمِينِهِ، فَقَدْ أَوْجَبَ اللهُ لَهُ النَّارَ، وَحَرَّمَ عَلَيْهِ الْجَنَّةَ". فَقَالَ لَهُ رَجُلٌ: وَإِنْ كَانَ شَيْئًا يَسِيرًا يَا رَسُولَ اللهِ؟ قَالَ: "وَإِنْ قَضِيبٌ مِنْ أَرَاكٍ"} رَوَاهُ مُسْلِمٌ.
1454. ``பொய் சத்தியம் செய்து ஒரு முஸ்லிமின் உரிமையைப் பறித்தவருக்கு அல்லாஹ் நரகத்தை விதித்துவிட்டான். மேலும், சுவர்க்கத்தை விலக்கிவிட்டான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
(இதனைச் செவியுற்ற ஒருவர்), ``இறைத்தூதர் அவர்களே! சாதாரணப் ஒரு பொருளுக்காகவுமா?'' என வினவினார்.
``அராக் மரத்தின் ஒரு கிளையாய் இருப்பினும்தான்'' என்று இறைத்தூதர்(ஸல்) பதிலுரைத்தார்கள் என அபூ உமாமா அல்ஹாரிஸிய்யீ(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்