1477. وَعَنِ ابْنِ عَبَّاسٍ -رَضِيَ اللهُ عَنْهُمَا- أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {يُودَى الْمُكَاتَبُ بِقَدْرِ مَا عَتَقَ مِنْهُ دِيَةَ الْحُرِّ، وَبِقَدْرِ مَا رَقَّ مِنْهُ دِيَةَ الْعَبْدِ} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ.
1477. ``விடுதலைப்பத்திரம் எழுதிக் கொடுக்கப்பட்ட அடிமை கொல்லப்பட்டுவிட்டால், அவன் எந்த அளவிற்கு (ஒப்பந்தப் பணத்தைச்ச செலுத்தி) சுதந்திரமானவனாகி உள்ளானோ அந்த அளவிற்கு சுதந்திரமானவனுக்குரிய இரத்த ஈட்டுத் தொகை (அவனுடைய வாரிசுகளுக்கு வழங்கப்பட வேண்டும். எந்த அளவிற்கு தொகை செலுத்தப்படாமல் இன்னும், (விடுவிக்கப்படாமல்) அடிமையாய் இருக்கிறானோ, அந்த அளவிற்கு அடிமைக்குரிய இரத்த ஈட்டுத் தொகை (அவனுடைய வாரிசுகளுக்கு) வழங்கப்பட வேண்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத் மற்றும் நஸயீ
1478. وَعَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ- أَخِي جُوَيْرِيَةَ أُمِّ الْمُؤْمِنِينَ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: {مَا تَرَكَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ مَوْتِهِ دِرْهَمًا، وَلَا دِينَارًا، وَلَا عَبْدًا، وَلَا أَمَةً، وَلَا شَيْئًا، إِلَّا بَغْلَتَهُ الْبَيْضَاءَ، وَسِلَاحَهُ، وَأَرْضًا جَعَلَهَا صَدَقَةً} رَوَاهُ الْبُخَارِيُّ.
1478. இறைத்தூதர்(ஸல்) மரணம் எய்தியபோது தம்முடைய வெள்ளை நிறம் கோவேறுக் கழுதை, ஆயுதம் மற்றும் அவர்கள் தர்மம் செய்த நிலம் இவற்றைத் தவிர திர்ஹம், தீனார், அடிமைப் பெண், அடிமை இது போன்ற எதையுமே விட்டுச் செல்லவில்லை என உம்முல் மூஃமினீன் (இறைநம்பிக்கையாளர்களின் தாய்) ஜுவைரியாவின் சகோதரர் அம்ர் இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
1479. وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَيُّمَا أَمَةٍ وَلَدَتْ مِنْ سَيِّدِهَا، فَهِيَ حُرَّةٌ بَعْدَ مَوْتِهِ} أَخْرَجَهُ اِبْنُ مَاجَهْ، وَالْحَاكِمُ بِإِسْنَادٍ ضَعِيفٍ.وَرَجَّحَ جَمَاعَةٌ وَقْفَهُ عَلَى عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ.
1479. ``தன் எஜமானனுக்குக் குழந்தை பெறுகிற அடிமைப் பெண், அவனுடைய மரணத்திற்குப் பின் சுதந்திரம் பெற்றவளாவாள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இது இப்னு மாஜா மற்றும் ஹாகிமில் `ளயீஃப்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது. ஒரு சாரார் இதனை உமர்(ரலி) அவர்களின் மீது `மவ்கூஃப்' செய்துள்ளனர்.
1480. وَعَنْ سَهْلِ بْنِ حُنَيْفٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {مَنْ أَعَانَ مُجَاهِدًا فِي سَبِيلِ اللهِ، أَوْ غَارِمًا فِي عُسْرَتِهِ، أَوْ مُكَاتَبًا فِي رَقَبَتِهِ، أَظَلَّهُ اللهُ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ} رَوَاهُ أَحْمَدُ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.كِتَابُ الْجَامِعِبَابُ الْأَدَبِ
1480. ``அல்லாஹ்வின் பாதையில் போராடுபவனுக்கு யார் உதவுகிறாரோ அல்லது கடன்பட்டிருப்பவரின் கஷ்ட நிலையை நீக்குகிறாரோ அல்லது சுதந்திரப் பத்திரம் எழுதிக் கொடுக்கப்பட்ட அடிமையை விடுதலை செய்கிறாரோ அவருக்கு நிழலே இல்லாத அந்த மறுமை நாளில் அல்லாஹ் தன் நிழலை அளிக்கிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஸஹ்ல் ஹுனைஃபி(ரலி) அறிவித்தார்.
நூல்: அஹ்மத்
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

1481. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ سِتٌّ: إِذَا لَقِيتَهُ فَسَلِّمْ عَلَيْهِ، وَإِذَا دَعَاكَ فَأَجِبْهُ، وَإِذَا اِسْتَنْصَحَكَ فَانْصَحْهُ، وَإِذَا عَطَسَ فَحَمِدَ اللهُ فَسَمِّتْهُوَإِذَا مَرِضَ فَعُدْهُ، وَإِذَا مَاتَ فَاتْبَعْهُ} رَوَاهُ مُسْلِمٌ.
1481. ``ஒரு முஸ்லிமிற்கு மற்றொரு முஸ்லிம் மீது ஆறு உரிமைகள் உள்ளன. 1. நீ அவனைச் சந்திக்கும்போது ஸலாம் கூறுவது. 2. அவன் உன்னை விருந்திற்கு அழைத்தால் அதற்கு பதிலளிப்பது (ஏற்றுக் கொள்வது) 3. அவன் உன்னிடம் அறிவுரை கேட்டால் சரியான அறிவுரை கூறுவது 4. அவன் தும்மி ``அல்ஹம்து லில்லாஹ்'' எனக் கூறினால், அதற்கு, (யர்ஹமுக்கல்லாஹ் என) பதிலளிப்பது. 5 அவன் நோய்வாய்ப்பட்டால், அவனை நலம் விசாரிப்பது. 6. அவன் மரணித்தால் அவனைப் பின்தொடர்ந்து (அடக்கம் செய்யச்) செல்வது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1482. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {انْظُرُوا إِلَى مَنْ هُوَ أَسْفَلَ مِنْكُمْ، وَلَا تَنْظُرُوا إِلَى مَنْ هُوَ فَوْقَكُمْ، فَهُوَ أَجْدَرُ أَنْ لَا تَزْدَرُوا نِعْمَةَ اللهُ عَلَيْكُمْ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1482. வாழ்க்கைத் தரத்தில்) உங்களுக்குக் கீழிருப்போரைப் பாருங்கள். உங்களுக்கு மேலிருப்போரை பார்க்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ் உங்கள் மீது புரிந்துள்ள அருட்கொடைகளை நீங்கள் சாதாரணமாகக் கருதாமலிருக்க அதுவே சரியானதாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1483. وَعَنِ النَوَّاسِ بْنِ سَمْعَانَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: سَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْبِرِّ وَالْإِثْمِ؟ فَقَالَ: {اَلْبِرُّ: حُسْنُ الْخُلُقِ، وَالْإِثْمُ: مَا حَاكَ فِي صَدْرِكَ، وَكَرِهْتَ أَنْ يَطَّلِعَ عَلَيْهِ النَّاسُ} أَخْرَجَهُ مُسْلِمٌ.
1483. நல்லவை மற்றும் பாவம் குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான்கேட்டேன்.
``நற்குணமே, நற்செயலும் நன்மையாகும். எது உன் உள்ளத்தில் நெருடலை ஏற்படுத்துமோ மற்றும் (உன் செயலில் ஒன்றை) மக்கள் அறிவதை நீ விரும்ப மாட்டாயோ அதுவே பாவமாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என நவாஸ் இப்னு ஸம்ஆன்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1484. وَعَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا كُنْتُمْ ثَلَاثَةً، فَلَا يَتَنَاجَى اِثْنَانِ دُونَ الْآخَرِ، حَتَّى تَخْتَلِطُوا بِالنَّاسِ؛ مِنْ أَجْلِ أَنَّ ذَلِكَ يُحْزِنُهُ} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِمُسْلِمٍ.
1484. ``நீங்கள் மூன்றுபேர் (ஒன்றாக) இருக்கும்போது மக்களுடன் கலந்துவிடும் வரை மூன்றாமவரை விட்டுவிட்டு இருவர் மட்டும் இரகசியமாக எதையும் பேசவேண்டாம். ஏனெனில், அது அவருக்கு வருத்தத்தை (கவலையை) ஏற்படுத்தும்`` என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
1485. وَعَنِ ابْنِ عُمَرَ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا يُقِيمُ الرَّجُلُ الرَّجُلَ مِنْ مَجْلِسِهِ، ثُمَّ يَجْلِسُ فِيهِ، وَلَكِنْ تَفَسَّحُوا، وَتَوَسَّعُوا} مُتَّفَقٌ عَلَيْهِ.
1485. ``ஒருவர் அமர்ந்திருக்கும் இடத்தில் நீங்கள் அமர்வதற்காக அவரை அந்த இடத்தை விட்டு எழுப்பாதீர்கள். மாறாக, சிறிது இடம் விட்டு விசாலமாக்கிக் கொள்ளுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1486. وَعَنِ ابْنِ عَبَّاسٍ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا أَكَلَ أَحَدُكُمْ طَعَامًا، فَلَا يَمْسَحْ يَدَهُ، حَتَّى يَلْعَقَهَا، أَوْ يُلْعِقَهَا} مُتَّفَقٌ عَلَيْهِ.
1486. ``உங்களுடன் ஒருவர் உணவு உண்டால் கைவிரல்களைச் சுவைக்காத அல்லது சுவைக்கச் செய்யாதவரை தன் கையைக் கழுவ வேண்டாம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1487. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لِيُسَلِّمِ الصَّغِيرُ عَلَى الْكَبِيرِ، وَالْمَارُّ عَلَى الْقَاعِدِ، وَالْقَلِيلُ عَلَى الْكَثِيرِ} مُتَّفَقٌ عَلَيْهِ.وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ: {وَالرَّاكِبُ عَلَى الْمَاشِي}.
1487. ``சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்கள் அதிகமான எண்ணிக்கையில் உள்ளவர்களுக்கும் ஸலாம் சொல்லட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் ``சவாரியில் செல்பவர் நடந்து செல்பவருக்கு (ஸலாம் சொல்லட்டும்)'' என உள்ளது.
1488. وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {يُجْزِئُ عَنِ الْجَمَاعَةِ إِذَا مَرُّوا أَنْ يُسَلِّمَ أَحَدُهُمْ، وَيُجْزِئُ عَنِ الْجَمَاعَةِ أَنْ يَرُدَّ أَحَدُهُمْ} رَوَاهُ أَحْمَدُ، وَالْبَيْهَقِيُّ.
1488. ``(ஒரு கூட்டத்தார் மற்றொரு கூட்டத்தாரைக் கடந்து செல்லும்போது) கூட்டத்தார் அனைவரின் சார்பாகவும் அவர்களில் ஒருவர் ஸலாம் சொல்வதும் மற்றொரு கூட்டத்தாரின் சார்பாக அவர்களில் ஒருவர் பதில் சொல்வதும் போதுமானது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அலீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், பைஹக்கீ
1489. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا تَبْدَؤُوا الْيَهُودَ وَالنَّصَارَى بِالسَّلَامِ، وَإِذَا لَقَيْتُمُوهُمْ فِي طَرِيقٍ، فَاضْطَرُّوهُمْ إِلَى أَضْيَقِهِ} أَخْرَجَهُ مُسْلِمٌ.
1489. ``நீங்கள் கிறித்தவர்களையும், யூதர்களையும் சந்தித்தால் (முதலில்) நீங்கள் ஸலாம் சொல்லாதீர்கள். மேலும், குறுகிய பாதையில் அவர்களைச் செல்லச் செய்யுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அலீ(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1490. وَعَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَقُلْ: اَلْحَمْدُ لِلَّهِ، وَلْيَقُلْ لَهُ أَخُوهُ يَرْحَمُكَ اللهُ، فَإِذَا قَالَ لَهُ: يَرْحَمُكَ اللهُ، فَلْيَقُلْ: يَهْدِيكُمُ اللهُ، وَيُصْلِحُ بَالَكُمْ} أَخْرَجَهُ الْبُخَارِيُّ.
1490. ``உங்களில் ஒருவர் தும்மினால் அவர் அல்ஹம்துலில்லாஹ் (அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்)'' எனக் கூறட்டும். அவரின் சகோதரர் அவருக்காக ``யர்ஹமுகல்லாஹ் (அல்லாஹ் உன் மீது கிருபை செய்யட்டும்)'' எனக் கூறட்டும். தும்மியவர் அதைக் கேட்டு, ``யஹ்தீகுமுல்லாஹு வயுஸ்லிஹ் பாலகும் (அல்லாஹ் உமக்கு நேர்வழியைத் தந்து உம் நிலையைச் சீராக்கட்டும்) எனக் கூறட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அலீ(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
1491. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا يَشْرَبَنَّ أَحَدٌ مِنْكُمْ قَائِمًا} أَخْرَجَهُ مُسْلِمٌ.
1491. ``உங்களில் யாரும் நின்று கொண்டு குடிக்க வேண்டாம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அலீ(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1492. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا اِنْتَعَلَ أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِالْيَمِينِ، وَإِذَا نَزَعَ فَلْيَبْدَأْ بِالشِّمَالِ، وَلْتَكُنِ الْيُمْنَى أَوَّلَهُمَا تُنْعَلُ، وَآخِرَهُمَا تُنْزَعُ}. مُتَّفَقٌ عَلَيْهِ.
1492. ``உங்களில் ஒருவர் காலணியை அணிந்தால் தம் வலக் காலில் முதலில் அணியட்டும்.'' பின்னர், அதைக் கழற்றும்போது இடக் காலிலிருந்து முதலில் கழற்றட்டும். மேலும், அணியும்போது வலக் காலை முதலில் நுழைந்து; அதைக் கழற்றும்போது இடக்காலிலிருந்து முதலில் கழற்றட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அலீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1493. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا يَمْشِ أَحَدُكُمْ فِي نَعْلٍ وَاحِدَةٍ، وَلْيُنْعِلْهُمَا جَمِيعًا، أَوْ لِيَخْلَعْهُمَا جَمِيعًا} مُتَّفَقٌ عَلَيْهِ.
1493. ``உங்களில் யாரும் ஒரு காலில் மட்டும் செருப்பணிந்து நடக்க வேண்டாம். இரண்டு கால்களிலுமே அணிந்து கொள்ளட்டும். அல்லது இரண்டையும் கழற்றி விடட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அலீ(ரலி) அறவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1494. وَعَنِ ابْنِ عُمَرَ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا يَنْظُرُ اللهُ إِلَى مَنْ جَرَّ ثَوْبَهُ خُيَلَاءَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1494. ``பெருமையடித்தவனாக தன்னுடைய ஆடையை பூமியில் பரவவிட்டு நடப்பவனை அல்லாஹ (மறுமையில்) ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1495. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَأْكُلْ بِيَمِينِهِ، وَإِذَا شَرِبَ فَلْيَشْرَبْ بِيَمِينِهِ، فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِشِمَالِهِ، وَيَشْرَبُ بِشِمَالِهِ} أَخْرَجَهُ مُسْلِمٌ.
1495. ``நீங்கள் சாப்பிடும்போது வலக்கையால் சாப்பிடுங்கள். பருகும்போது வலக் கையால் பருகுங்கள். ஏனெனில், நிச்சயமாக ஷைத்தான் தன் இடக் கையால் சாப்பிடுகிறான். மேலும், தன் இடக் கையால் குடிக்கிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1496. وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {كُلْ، وَاشْرَبْ، وَالْبَسْ، وَتَصَدَّقْ فِي غَيْرِ سَرَفٍ، وَلَا مَخِيلَةٍ} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَأَحْمَدُ، وَعَلَّقَهُ الْبُخَارِيُّ.بَابُ الْبِرِّ وَالصِّلَةِ
1496. ``வீண் விரயம் மற்றும் பெருமை இன்றி சாப்பிடு, பருகு! உடுத்து! தர்மம் செய்!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், அஹ்மத்
இமாம் புகாரீ(ரஹ்) இதனை முஅல்லக் எனக் குறிப்பிட்டுள்ளார்.