1497. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ أَحَبَّ أَنْ يُبْسَطَ عَلَيْهِ فِي رِزْقِهِ، وَأَنْ يُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ، فَلْيَصِلْ رَحِمَهُ} أَخْرَجَهُ الْبُخَارِيُّ.
1497. ``தன் வாழ்வாதாரத்தில் அபிவிருத்தியையும், நீண்ட ஆயுளையும் விரும்புபவர் தன் உறவினர்களுடன் உறவை வலுப்படுத்தட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
1498. وَعَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ} يَعْنِي: قَاطِعَ رَحِمٍ. مُتَّفَقٌ عَلَيْهِ.
1498. ``உறவுகளைத் தூண்டிப்பவன் சுவர்க்கம் புகமாட்டான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜுபைர் இப்னு முத்இ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1499. وَعَنِ الْمُغِيرَةِ بْنِ سَعِيدٍ رَضِيَ اللهُ عَنْهُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {إِنَّ اللهُ حَرَّمَ عَلَيْكُمْ عُقُوقَ الْأُمَّهَاتِ، وَوَأْدَ الْبَنَاتِ، وَمَنْعًا وَهَاتِ، وَكَرِهَ لَكُمْ قِيلَ وَقَالَ، وَكَثْرَةَ السُّؤَالِ وَإِضَاعَةَ الْمَالِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1499. ``தாய்மாரைத் துன்புறுத்துவதையும், பெண் பிள்ளைகளை உயிருடன் புதைப்பதையும், (பிறரின் உரிமையை) நிறைவேற்றாமல் இருப்பதையும், (பிறர் செல்வத்தை) அபகரிப்பதையும் அல்லாஹ் தடை செய்துள்ளான். வீண்பேச்சுக்களையும், அதிகமாகக் கேள்வி கேட்பதையும், செல்வத்தை வீணடிப்பதையும், அல்லாஹ் உங்கள் மீது ஹராமாக்கி (விலக்கி) விட்டான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என முகீரா இப்னு ஷுஃபா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1500. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ -رَضِيَ اللهُ عَنْهُمَا-، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {رِضَا اللهُ فِي رِضَا الْوَالِدَيْنِ، وَسَخَطُ اللهُ فِي سَخَطِ الْوَالِدَيْنِ} أَخْرَجَهُ التِّرْمِذِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ وَالْحَاكِمُ.
1500. ``அல்லாஹ்வின் மகிழ்ச்சி பெற்றோரின் மகிழ்ச்சியில் உள்ளது. அல்லாஹ்வின் கோபம் பெற்றோரின் கோபத்தில் உள்ளது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இமாம் இப்னு ஹிப்பான் மற்றும் இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1501. وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {وَالَّذِيْ نَفْسِي بِيَدِهِ لَا يُؤْمِنُ عَبْدٌ حَتَّى يُحِبَّ لِجَارِهِ - أَوْ لِأَخِيهِ- مَا يُحِبُّ لِنَفْسِهِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1501. ``என் உயிரைத் தன் கையில் கொண்டவன் மீது ஆணையாக, ஒருவர் தனக்கு விரும்புவதையே தன் அண்டைவீட்டாருக்கு விரும்பாதவரை இறைநம்பிக்கை கொண்டவராக மாட்டார்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1502. وَعَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ سَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الذَّنْبِ أَعْظَمُ؟ قَالَ: {أَنْ تَجْعَلَ لِلَّهِ نِدًّا، وَهُوَ خَلَقَكَ. قُلْتُ ثُمَّ أَيُّ؟ قَالَ: ثُمَّ أَنْ تَقْتُلَ وَلَدَكَ خَشْيَةَ أَنْ يَأْكُلَ مَعَكَ. قُلْتُ: ثُمَّ أَيُّ؟ قَالَ: ثُمَّ أَنْ تُزَانِيَ حَلِيلَةَ جَارِكَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1502. ``எந்தப் பாவம் பெரியது?'' என நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்டேன்.
``அல்லாஹ் உன்னைப் படைத்திருயீகக நீ அவனுக்கு இணைகற்பிப்பது'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
``பின்பு, எது?'' என நான் கேட்டேன்.
``உன்னுடன் சாப்பிடும் என்ற அச்சத்தில் உன் குழந்தையைக் கொல்வது'' எனக் கூறினார்கள்.
``பின்னர் எது?'' என நான் கேட்டேன்.
.``உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் விபச்சாரம் செய்வது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1503. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ -رَضِيَ اللهُ عَنْهُمَا- أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {مِنَ الْكَبَائِرِ شَتْمُ الرَّجُلِ وَالِدَيْهِ. قِيلَ: وَهَلْ يَسُبُّ الرَّجُلُ وَالِدَيْهِ؟ قَالَ: نَعَمْ. يَسُبُّ أَبَا الرَّجُلِ، فَيَسُبُّ أَبَاهُ، وَيَسُبُّ أُمَّهُ، فَيَسُبُّ أُمَّهُ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1503. தன் பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் உள்ளதாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறியபோது,
``மனிதன் தன் பெற்றோரைத் திட்டுவானா?'' என இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது.
``ஆம்! ஒருவன் மற்றொருவரின் தந்தையைத் திட்டுகிறான்; அவன்(பதிலுக்கு) இவனுடைய தந்தையைத் திட்டுகிறான். மேலும், அவன் அவனுடைய தாயைத் திட்டுகிறான்; பதிலுக்கு அவன் இவனுடைய தாயைத் திட்டுகிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1504. وَعَنْ أَبِي أَيُّوبَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثِ لَيَالٍ يَلْتَقِيَانِ، فَيُعْرِضُ هَذَا، وَيُعْرِضُ هَذَا، وَخَيْرُهُمَا الَّذِيْ يَبْدَأُ بِالسَّلَامِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1504. ``ஒரு முஸ்லிம் தன் சகோதரனை மூன்று நாள்களுக்கு மேல் வெறுத்து விலகி இருப்பது அனுமதிக்கப்பட்டதல்ல. இருவரும் சந்திக்கும்போது அவரை விட்டு இவரும்; இவரை விட்டு அவரும் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள். இந்நிலையில், முதலில் ஸலாம் சொல்பவரே சிறந்தவர்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ அய்யூப்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1505. عَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {كُلُّ مَعْرُوفٍ صَدَقَةٌ} أَخْرَجَهُ الْبُخَارِيُّ.
1505. ``ஒவ்வொரு நல்ல காரியமும் தர்மமாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
1506. وَعَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا تَحْقِرَنَّ مِنَ الْمَعْرُوفِ شَيْئًا، وَلَوْ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ}
1506. ``நல்ல காரியம் எதையுமே இழிவாகக் கருதாதே! நீ உன் சகோதரனைச் சிரித்த முகத்துடன் சந்தித்தால் அதுவும் நல்ல காரியமே!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ தர்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1507. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا طَبَخْتَ مَرَقَةً، فَأَكْثِرْ مَاءَهَا، وَتَعَاهَدْ جِيرَانَكَ} أَخْرَجَهُمَا مُسْلِمٌ.
1507. ``நீ (நல்ல) குழம்பு வைத்தால் அதில் தண்ணீரை அதிகமாக்கி உன் அண்டை வீட்டாருக்கும் கொடு!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ தர்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1508. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا، نَفَّسَ اللهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ، وَمَنْ يَسَّرَ عَلَى مُعْسِرٍ، يَسَّرَ اللهُ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، وَمَنْ سَتَرَ مُسْلِمًا، سَتَرَهُ اللهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، وَاللهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ} أَخْرَجَهُ مُسْلِمٌ.
1508. ``ஒரு முஸ்லிமின் உலகத் துன்பங்களில் ஒன்றை நீக்குபவருக்கு, மறுமை நாளில் அல்லாஹ் அவரின் துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் காரியத்தை எளிதாக்குபவரின் காரியத்தை உலகத்திலும் மறுமையிலும் அல்லாஹ் எளிதாக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறையை மறைப்பவருக்கு மறுமையில் அல்லாஹ் அவரின் குறையை மறைக்கிறான். அடியான் எதுவரை தன் சகோதரனுக்கு உதவியாய் இருக்கிறானோ அதுவரை அல்லாஹ் அவனுக்கு உதவியாய் இருக்கிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1509. وَعَنْ أَبِي مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ دَلَّ عَلَى خَيْرٍ، فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ} أَخْرَجَهُ مُسْلِمٌ.
1509. ``நன்மை செய்பவருக்குக் கொடுக்கப்படும் பிரதிபலனைப் போன்றே, அவருக்கு நன்மைக்கான வழியைக் காட்டியவருக்கும் (பிரதிபலன்) கொடுக்கப்படும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1510. وَعَنِ ابْنِ عُمَرَ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {مِنْ اسْتَعَاذَكُمْ بِاللهُ فَأَعِيذُوهُ، وَمَنْ سَأَلَكُمْ بِاللهُ فَأَعْطُوهُ، وَمَنْ أَتَى إِلَيْكُمْ مَعْرُوفًا فَكَافِئُوهُ، فَإِنْ لَمْ تَجِدُوا، فَادْعُوا لَهُ} أَخْرَجَهُ الْبَيْهَقِيُّ.بَابُ الزُّهْدِ وَالْوَرَعِ
1510. ``அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் பாதுகாப்புக் கோருபவருக்கு பாதுகாப்பு அளியுங்கள். மேலும், அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் (தன் தேவையைக்) கேட்பவருக்குக் கொடுங்கள். மேலும், உங்களுக்கு நன்மை செய்பவருக்கு, நீங்களும் பதிலுக்கு அவருக்கு நன்மை செய்யுங்கள். உங்களிடம் எதுவும் இல்லை எனில், அவருக்காக (இறைவனிடம்) பிரார்த்தியுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: பைஹகீ
1511. عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ- وَأَهْوَى النُّعْمَانُ بِإِصْبَعَيْهِ إِلَى أُذُنَيْهِ: {إِنَّ الْحَلَالَ بَيِّنٌ، وَإِنَّ الْحَرَامَ بَيِّنٌ، وَبَيْنَهُمَا مُشْتَبِهَاتٌ، لَا يَعْلَمُهُنَّ كَثِيرٌ مِنَ النَّاسِ، فَمَنِ اتَّقَى الشُّبُهَاتِ، فَقَدِ اِسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ، وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ وَقَعَ فِي الْحَرَامِ، كَالرَّاعِي يَرْعَى حَوْلَ الْحِمَى، يُوشِكُ أَنْ يَقَعَ فِيهِ، أَلَا وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى، أَلَا وَإِنَّ حِمَى اللهُ مَحَارِمُهُ، أَلَا وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً، إِذَا صَلَحَتْ، صَلَحَ الْجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ، أَلَا وَهِيَ الْقَلْبُ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1511. ``நிச்சயமாக ஹலால் (அனுமதிக்கப்பட்டது) தெளிவாக்கப்பட்டுள்ளது'' ஹராம் (விலக்கப்பட்டது) தெளிவாக்கப்பட்டுள்ளது. இவை இரண்டிற்கும் இடையில் ஐயமானவை பல உள்ளன. மக்களில் பெரும்பாலோர் இது குறித்து அறியா மாட்டார். ஐயத்திற்கிடமானதை விட்டுவிலகியவர் தன் மார்க்கத்தையும், தன் மானத்தையும் காத்துக் கொண்டார். ஐயத்திற்கிடமானதில் வீழ்ந்தவர் ஹராமில் வீழ்ந்துவிடுகிறார். எப்படி என்றால் மேய்ப்பாளன் (தன்னுடைய ஆடுகளை) வேலி வேயப்பட்ட வயல்களை சுற்றி மேய்க்கிறான். அப்போது, (அந்த ஆடுகள் வேலியைத் தாண்டி வயலில்) இறங்கிவிடக் கூடும். அறிந்து கொள்ளுங்கள்! ஒவ்வோர் அரசனுக்கும் ஒரு வேலி உள்ளது. அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வினால் வேலி வேயப்பட்ட வயல்கள் அவனால் தடை செய்யப்பட்ட ஹராமான காரியங்களாகும். அறிந்து கொள்ளுங்கள்! உடலில் ஒரு சதைத்துண்டு உள்ளது. உடல் முழுவதும் சரியாய் இருக்கும். அது கெட்டுவிட்டால் உடல் முழுவதும் கெட்டுவிடும். அறிந்து கொள்ளுங்கள்! அது இதயமாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூற நான் செவியுற்றுள்ளேன் என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.
நுஃமான் இதனைக் கூறியபோது தம் இரண்டு விரல்களையும் தம் இரண்டு காதுகளின்பால் சுட்டிக் காண்பித்து உணர்த்தினார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1512. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {تَعِسَ عَبْدُ الدِّينَارِ، وَالدِّرْهَمِ، وَالْقَطِيفَةِ، إِنْ أُعْطِيَ رَضِيَ، وَإِنْ لَمْ يُعْطَ لَمْ يَرْضَ} أَخْرَجَهُ الْبُخَارِيُّ.
1512. ``திர்ஹம், தீனார் மற்றும் பூம்பட்டு போர்வையின் அடிமை நாசமாகட்டும்! (ஏனெனில்) அவை தனக்குக் கொடுக்கப்பட்டால் இவன் மகிழ்ச்சியடைகிறான். இல்லை எனில் அதிருப்தியடைகிறார்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
1513. وَعَنِ ابْنِ عُمَرَ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: أَخَذَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَنْكِبِي، فَقَالَ: {كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ، أَوْ عَابِرُ سَبِيلٍ} وَكَانَ اِبْنُ عُمَرَ يَقُولُ: إِذَا أَمْسَيْتَ فَلَا تَنْتَظِرِ الصَّبَاحَ، وَإِذَا أَصْبَحْتَ فَلَا تَنْتَظِرِ الْمَسَاءَ، وَخُذْ مِنْ صِحَّتِكَ لِسَقَمِك، وَمِنْ حَيَاتِكَ لِمَوْتِكَ. أَخْرَجَهُ الْبُخَارِيُّ.
1513. இறைத்தூதர்(ஸல்) என் தோளைப் பிடித்தார்கள். அப்போது, ``நீ உலகில் ஓர் அந்நியன் அல்லது வழிப்போக்கன் போன்றோ இருந்து கொள்'' என்று கூறினார்கள் என இப்னு உமர் அறிவித்தார்.
மேலும் இப்னு உமர், ``நீ மாலையையடைந்hல், காலைப்பொழுதை எதிர் பார்க்காதே! காலையை அடைந்து விட்டால் மாலையை எதிர் பார்க்காதே! ஆரோக்கியமாய் இருக்கும் போதே நோய்க் காலத்திற்காக எதையாவது தேடிக் கொள்! இன்னும் நீ உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே (உன் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கைக்காக) எதையாவது தேடிக்கொள்!'' எனக் கூறுபவராய் இருந்தார்.
நூல்: புகாரீ
1514. وَعَنِ ابْنِ عُمَرَ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ، فَهُوَ مِنْهُمْ} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.
1514. ``ஒரு சமூகத்தாருக்கு ஒப்பாகி (வாழ்வின் எந்த ஓர் அம்சத்திலும்) நடந்து கொள்பவரும் அவர்களைச் சேர்ந்தவரே'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1515. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: كُنْتُ خَلْفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا، فَقَالَ: {يَا غُلَامُ! اِحْفَظِ اللهُ يَحْفَظْكَ، اِحْفَظِ اللهُ تَجِدْهُ تُجَاهَكَ، وَإِذَا سَأَلْتَ فَاسْأَلِ اللهَ، وَإِذَا اِسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ} رَوَاهُ التِّرْمِذِيُّ، وَقَالَ: حَسَنٌ صَحِيحٌ.
1515. இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பின்னால் நான் இருந்தேன்.
``தம்பி! நீ அல்லாஹ்வின் கட்டளைகளை மனத்தில் வை! அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான். மேலும் நீ உன் கவனத்தை அல்லாஹ்வின் பக்கம் செலுத்து. நீ அவனை உன் முன் காண்பாய் (அறிவாய்). (உன் தேவை எதையேனும்) கேட்டால், அல்லாஹ்விடம் மட்டுமே கேள்! மேலும் நீ உதவி தேடினால் அல்லாஹ்விடமே மட்டுமே உதவி தேடு!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ஹஸனுன் ஸஹீஹுன் (ஆதாரப்பூர்வமானது) எனக் குறிப்பிட்டுள்ளார்.
1516. وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ: {جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللهِ! دُلَّنِي عَلَى عَمَلٍ إِذَا عَمِلْتُهُ أَحَبَّنِي اللهُ، وَأَحَبَّنِي النَّاسُ. فـ قَالَ: اِزْهَدْ فِي الدُّنْيَا يُحِبُّكَ اللهُ، وَازْهَدْ فِيمَا عِنْدَ النَّاسِ يُحِبُّكَ النَّاسُ} رَوَاهُ اِبْنُ مَاجَه، وَسَنَدُهُ حَسَنٌ.
1516. இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ``இறைத்தூதர் அவர்களே! எனக்கு ஒரு செயலைக் காட்டுங்கள். நான் அதைச் செய்தால் அல்லாஹ்வும், மக்களும் என்னை நேசிக்க வேண்டும்'' எனக் கூறினார்.
``உலக மோகத்தைக் குறைத்துக் கொள்! அல்லாஹ் உன்னை நேசிப்பான். மக்களிடம் உள்ளவற்றின் மீது உன் மோகத்தைக் குறைத்துக் கொள்! மக்கள் உன்னை விரும்புவார்கள்'' என்று கூறினார்கள் என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
நூல்: இப்னு மாஜா
இது `ஹஸன்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.