1517. وَعَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: {إِنَّ اللهُ يُحِبُّ الْعَبْدَ التَّقِيَّ، اَلْغَنِيَّ، الْخَفِيَّ} أَخْرَجَهُ مُسْلِمٌ.
1517. ``மக்களிடமிருந்து தன் தேவைகளை எதிர்பார்க்காதவனாக அந்தரங்க வாழ்க்கையில் சிறந்தவனாக வாழும் அடியானை அல்லாஹ் நேசிக்கிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1518. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ، تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ} رَوَاهُ التِّرْمِذِيُّ، وَقَالَ حَسَنٌ.
1518. ``தனக்கு தேவையில்லாதவற்றை (தனக்கு சம்பந்தமில்லாதவற்றை) விட்டுவிடுவதே முஸ்லிமின் சிறந்த பண்பாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ஹஸன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
1519. وَعَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِيكَرِبَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَا مَلَأَ ابْنُ آدَمَ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ} أَخْرَجَهُ التِّرْمِذِيُّ وَحَسَّنَهُ.
1519. ``ஆதமின் மகன் தன் வயிற்றைவிட அதிகமாக ஒரு தீய பாத்திரத்தை நிரப்புவதில்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என மிக்தாம் இப்னு மஃதீ யகரிப்(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ஹஸன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
1520. وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {كُلُّ بَنِي آدَمَ خَطَّاءٌ، وَخَيْرُ الْخَطَّائِينَ التَّوَّابُونَ} أَخْرَجَهُ التِّرْمِذِيُّ، وَابْنُ مَاجَهْ، وَسَنَدُهُ قَوِيٌّ.
1520. ``ஆதமின் மக்கள் அனைவரும் தவறு செய்யக் கூடியவர்களே! அவர்களில் சிறந்தவர்கள் தம் பாவங்களுக்காக மனம் வருந்தி திருந்துபவர்களே'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அனஸ்(ரலி) அறவிக்கிறார்.
நூல்கள்: திர்மிதீ, இப்னு மாஜா
இதன் அறிவிப்பாளர் தொடர் பலமானது.
1521. وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اَلصَّمْتُ حِكْمَةٌ، وَقَلِيلٌ فَاعِلُهُ} أَخْرَجَهُ الْبَيْهَقِيُّ فِي" الشُّعَبِ" بِسَنَدٍ ضَعِيفٍ.وَصَحَّحَ أَنَّهُ مَوْقُوفٌ مِنْ قَوْلِ لُقْمَانَ الْحَكِيمِ.بَابُ الرَّهَبِمِنْ مَسَاوِئِ الْأَخْلَاقِ
1521. ``அமைதியாய் இருப்பது அறிவுடைய செயலாகும். மேலும், இதனை மிகக் குறைந்த மக்களே விரும்புவர்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: பைஹகீ
இமாம் பைஹகீ இதனை தம்முடைய ஷுஅபுல் ஈமான் எனும் நூலில் பலவீனமான அறிவிப்புத் தொடரில் பதிவிட்டுள்ளார். இது லுக்மான்(அலை) அவர்களின் கூற்று என்பதே சரியாகும்.
1522. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِيَّاكُمْ وَالْحَسَدَ، فَإِنَّ الْحَسَدَ يَأْكُلُ الْحَسَنَاتِ، كَمَا تَأْكُلُ النَّارُ الْحَطَبَ} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ.
1522. ``பொறாமை கொள்ளாது இருக்கும்படி உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், நெருப்பு விறகைத் தின்பதைப் போன்று பொறாமை நற்செயல்களைத் தின்றுவிடும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
1523. وَلِابْنِ مَاجَهْ: مِنْ حَدِيثِ أَنَسٍ نَحْوُهُ.
1523. அனஸ்(ரலி) வாயிலாக இப்னு மாஜாவில் 1522 வது ஹதீஸ் போன்றே பதிவாகியுள்ளது.
1524. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَيْسَ الشَّدِيدُ بِالصُّرَعَةِ، إِنَّمَا الشَّدِيدُ الَّذِيْ يَمْلِكُ نَفْسَهُ عِنْدَ الْغَضَبِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1524. ``கோபத்தில் ஆதிக்கம் செலுத்துபவன் வீரனல்ல. மாறாக கோபமூட்டப்படும்போது தன்னைத் தானே அடக்கிக் கொள்பவனே வீரன்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1525. وَعَنِ ابْنِ عُمَرَ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اَلظُّلْمُ ظُلُمَاتٌ يَوْمَ الْقِيَامَةِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1525. ``அநீதி மறுமை நாளில் (அதைச் செய்பவருக்கு, அது அடுக்கடுக்கான) பல இருள்களாக வந்து நிற்கும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1526. وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ: {اِتَّقُوا الظُّلْمَ، فَإِنَّ الظُّلْمَ ظُلُمَاتٌ يَوْمَ الْقِيَامَةِ، وَاتَّقُوا الشُّحَّ، فَإِنَّهُ أَهْلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ} أَخْرَجَهُ مُسْلِمٌ.
1526. ``அநீதி இழைத்தலை அஞ்சுங்கள். ஏனெனில், அது மறுமை நாளில் (உங்கள் முன்பு) இருளாக வந்து நிற்கும், இன்னும், கஞ்சத்தனத்தை அஞ்சுங்கள்! ஏனெனில், அது உங்களுக்கு முன்பிருந்தோரை அழித்துள்ளது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1527. وَعَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمُ الشِّرْكُ الْأَصْغَرُ: اَلرِّيَاءُ} أَخْرَجَهُ أَحْمَدُ بِسَنَدٍ حَسَنٍ.
1527. ``உங்களைக் குறித்து நான் மிகவும் அஞ்சுவதெல்லாம், நீங்கள் சிறிய இணைவைப்பில் ஈடுபட்டு விடுவீர்கள் என்பதுதான். பிறருக்குக் காட்டிக் கொள்வதறக்காக வணக்கத்திலும், நற்செயல்களிலும் ஈடுபடுவதே சிறிய இணைவைப்பாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என மஹ்மூத் இப்னு லபீத்(ரலி) அறிவித்தார்.
இது அஹ்மதில் `ஹஸன்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
1528. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {آيَةُ الْمُنَافِقِ ثَلَاثٌ: إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا ائْتُمِنَ خَانَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1528. ``நயவஞ்சகனின்அடையாளங்கiளை மூன்று 1. அவன் பேசினால் பொய்யே பேசுவான். 2. அவன் வாக்குறுதி கொடுத்தால் மாறு செய்வான். 3. அவனிடம் (ஒரு பொருள் அல்லது பணி தொடர்பான) பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால் அதில் மோசடி செய்வான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1529. وَلَهُمَا: مِنْ حَدِيثِ عَبْدِ اللهِ بْنِ عَمْرِوٍ: {وَإِذَا خَاصَمَ فَجَرَ}.
1529. ``அவன் சண்டையிட்டால் தீய வார்த்தைகளால் திட்டுவான்'' என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) வாயிலாக புகாரீ மற்றும் முஸ்லிமில் உள்ளது.
1530. وَعَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {سِبَابُ الْمُسْلِمِ فُسُوقٌ، وَقِتَالُهُ كُفْرٌ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1530. ``முஸ்லிமைத் திட்டுவது பாவமாகும். அவனுடன் போரிடுதல் (கொல்லுதல்) இறைமறுப்பாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்)கூறினார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1531. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِيَّاكُمْ وَالظَّنَّ، فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1531. ``சந்தேகப்பட வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கின்றேன். ஏனெனில், செய்திகளில் மிகவும் பொய்யானது சந்தேகமேயாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1532. وَعَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: {مَا مِنْ عَبْدِ يَسْتَرْعِيهِ اللهُ رَعِيَّةً، يَمُوتُ يَوْمَ يَمُوتُ، وَهُوَ غَاشٌّ لِرَعِيَّتِهِ، إِلَّا حَرَّمَ اللهُ عَلَيْهِ الْجَنَّةَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1532. ``குடிமக்களைப் பராமரிக்கும் பொறுப்பை ஒரு மனிதரிடம் அல்லாஹ் ஒப்படைத்திருக்க, தன் பிரஜைகளை மோசடி செய்தவனாய் அவன் மரணிக்கும் நாளில் உயிரைத் துறப்பானாயின், அவன் மீது சுவர்க்கத்தை அல்லாஹ் ஹராமாக்கி (விலக்கி) விடுகிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என மஅகில் இப்னு யஸ்ஸார்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1533. وَعَنْ عَائِشَةَ -رَضِيَ اللهُ عَنْهَا- قَالَتْ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اَللَّهُمَّ مَنْ وَلِيَ مِنْ أَمْرِ أُمَّتِي شَيْئًا، فَشَقَّ عَلَيْهِ، فَاشْقُقْ عَلَيْهِ} أَخْرَجَهُ مُسْلِمٌ.
1533. ``என் இரட்சகனே! ஒரு வேலைக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் (தன் பொறுப்பில் கவனமற்று) அதில் துன்பத்தை ஏற்படுத்தினால், அவர் மீது நீ துனத்தை ஏற்படுத்துவாயாக!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1534. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا قَاتَلَ أَحَدُكُمْ، فَلْيَتَجَنَّبِ الْوَجْهَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1534. ``உங்களில் யாரேனும் சண்டையிட்டால் (எதிரியின்) முகத்தை (சேதப்படுத்தாமல்) தவிர்த்துக் கொள்ளுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1535. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَجُلاً قَالَ: {يَا رَسُولَ اللهِ! أَوْصِنِي. فَقَالَ: لَا تَغْضَبْ، فَرَدَّدَ مِرَارًا. قَالَ: لَا تَغْضَبْ} أَخْرَجَهُ الْبُخَارِيُّ.
1535. இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ``இறைத்தூதர் அவர்களே! எனக்கு உபதேசம் செய்யுங்கள்'' எனக் கூறனார்.
``கோபம் கொள்ளாதே! என அவர்கள் கூறினார்கள்.
அவர் மறுபடியும் அவர் (அவ்வாறே) கேட்டார்.
``கோபம் கொள்ளாதே!'' என்றே இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
1536. وَعَنْ خَوْلَةَ الْأَنْصَارِيَّةَ -رَضِيَ اللهُ عَنْهَا- قَالَتْ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِنَّ رِجَالاً يتخوَّضون فِي مَالِ اللهُ بِغَيْرِ حَقٍّ، فَلَهُمُ النَّارُ يَوْمَ الْقِيَامَةِ} أَخْرَجَهُ الْبُخَارِيُّ.
1536. ``நிச்சயமாக சிலர் அல்லாஹ்வின் சொத்தில் நியாயமின்றி நுழைகிறார்கள். அவர்களுக்கு மறுமையில் நரகம்தான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என கவ்லா அன்ஸாரி(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
குறிப்பு: இஸ் லாமிய அரசில் பொது சொத்துகள் அனைத்துமே அல்லாஹ்வின் சொத்தாகும். அவ்வாறே முஸ்லிம்களின் கூட்டமைப்பின் சொத்தும் அல்லாஹ்வின் சொத்தே ஆகும். இவற்றைத் தவறான முறையில் பயன்படுத்துதல் கூடாது என்பதை அறிக!