1488. وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {يُجْزِئُ عَنِ الْجَمَاعَةِ إِذَا مَرُّوا أَنْ يُسَلِّمَ أَحَدُهُمْ، وَيُجْزِئُ عَنِ الْجَمَاعَةِ أَنْ يَرُدَّ أَحَدُهُمْ} رَوَاهُ أَحْمَدُ، وَالْبَيْهَقِيُّ.
1488. ``(ஒரு கூட்டத்தார் மற்றொரு கூட்டத்தாரைக் கடந்து செல்லும்போது) கூட்டத்தார் அனைவரின் சார்பாகவும் அவர்களில் ஒருவர் ஸலாம் சொல்வதும் மற்றொரு கூட்டத்தாரின் சார்பாக அவர்களில் ஒருவர் பதில் சொல்வதும் போதுமானது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அலீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், பைஹக்கீ
1489. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا تَبْدَؤُوا الْيَهُودَ وَالنَّصَارَى بِالسَّلَامِ، وَإِذَا لَقَيْتُمُوهُمْ فِي طَرِيقٍ، فَاضْطَرُّوهُمْ إِلَى أَضْيَقِهِ} أَخْرَجَهُ مُسْلِمٌ.
1489. ``நீங்கள் கிறித்தவர்களையும், யூதர்களையும் சந்தித்தால் (முதலில்) நீங்கள் ஸலாம் சொல்லாதீர்கள். மேலும், குறுகிய பாதையில் அவர்களைச் செல்லச் செய்யுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அலீ(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1490. وَعَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَقُلْ: اَلْحَمْدُ لِلَّهِ، وَلْيَقُلْ لَهُ أَخُوهُ يَرْحَمُكَ اللهُ، فَإِذَا قَالَ لَهُ: يَرْحَمُكَ اللهُ، فَلْيَقُلْ: يَهْدِيكُمُ اللهُ، وَيُصْلِحُ بَالَكُمْ} أَخْرَجَهُ الْبُخَارِيُّ.
1490. ``உங்களில் ஒருவர் தும்மினால் அவர் அல்ஹம்துலில்லாஹ் (அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்)'' எனக் கூறட்டும். அவரின் சகோதரர் அவருக்காக ``யர்ஹமுகல்லாஹ் (அல்லாஹ் உன் மீது கிருபை செய்யட்டும்)'' எனக் கூறட்டும். தும்மியவர் அதைக் கேட்டு, ``யஹ்தீகுமுல்லாஹு வயுஸ்லிஹ் பாலகும் (அல்லாஹ் உமக்கு நேர்வழியைத் தந்து உம் நிலையைச் சீராக்கட்டும்) எனக் கூறட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அலீ(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
1491. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا يَشْرَبَنَّ أَحَدٌ مِنْكُمْ قَائِمًا} أَخْرَجَهُ مُسْلِمٌ.
1491. ``உங்களில் யாரும் நின்று கொண்டு குடிக்க வேண்டாம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அலீ(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1492. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا اِنْتَعَلَ أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِالْيَمِينِ، وَإِذَا نَزَعَ فَلْيَبْدَأْ بِالشِّمَالِ، وَلْتَكُنِ الْيُمْنَى أَوَّلَهُمَا تُنْعَلُ، وَآخِرَهُمَا تُنْزَعُ}. مُتَّفَقٌ عَلَيْهِ.
1492. ``உங்களில் ஒருவர் காலணியை அணிந்தால் தம் வலக் காலில் முதலில் அணியட்டும்.'' பின்னர், அதைக் கழற்றும்போது இடக் காலிலிருந்து முதலில் கழற்றட்டும். மேலும், அணியும்போது வலக் காலை முதலில் நுழைந்து; அதைக் கழற்றும்போது இடக்காலிலிருந்து முதலில் கழற்றட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அலீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1493. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا يَمْشِ أَحَدُكُمْ فِي نَعْلٍ وَاحِدَةٍ، وَلْيُنْعِلْهُمَا جَمِيعًا، أَوْ لِيَخْلَعْهُمَا جَمِيعًا} مُتَّفَقٌ عَلَيْهِ.
1493. ``உங்களில் யாரும் ஒரு காலில் மட்டும் செருப்பணிந்து நடக்க வேண்டாம். இரண்டு கால்களிலுமே அணிந்து கொள்ளட்டும். அல்லது இரண்டையும் கழற்றி விடட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அலீ(ரலி) அறவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1494. وَعَنِ ابْنِ عُمَرَ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا يَنْظُرُ اللهُ إِلَى مَنْ جَرَّ ثَوْبَهُ خُيَلَاءَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1494. ``பெருமையடித்தவனாக தன்னுடைய ஆடையை பூமியில் பரவவிட்டு நடப்பவனை அல்லாஹ (மறுமையில்) ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1495. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَأْكُلْ بِيَمِينِهِ، وَإِذَا شَرِبَ فَلْيَشْرَبْ بِيَمِينِهِ، فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِشِمَالِهِ، وَيَشْرَبُ بِشِمَالِهِ} أَخْرَجَهُ مُسْلِمٌ.
1495. ``நீங்கள் சாப்பிடும்போது வலக்கையால் சாப்பிடுங்கள். பருகும்போது வலக் கையால் பருகுங்கள். ஏனெனில், நிச்சயமாக ஷைத்தான் தன் இடக் கையால் சாப்பிடுகிறான். மேலும், தன் இடக் கையால் குடிக்கிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1496. وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {كُلْ، وَاشْرَبْ، وَالْبَسْ، وَتَصَدَّقْ فِي غَيْرِ سَرَفٍ، وَلَا مَخِيلَةٍ} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَأَحْمَدُ، وَعَلَّقَهُ الْبُخَارِيُّ.بَابُ الْبِرِّ وَالصِّلَةِ
1496. ``வீண் விரயம் மற்றும் பெருமை இன்றி சாப்பிடு, பருகு! உடுத்து! தர்மம் செய்!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், அஹ்மத்
இமாம் புகாரீ(ரஹ்) இதனை முஅல்லக் எனக் குறிப்பிட்டுள்ளார்.
1497. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ أَحَبَّ أَنْ يُبْسَطَ عَلَيْهِ فِي رِزْقِهِ، وَأَنْ يُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ، فَلْيَصِلْ رَحِمَهُ} أَخْرَجَهُ الْبُخَارِيُّ.
1497. ``தன் வாழ்வாதாரத்தில் அபிவிருத்தியையும், நீண்ட ஆயுளையும் விரும்புபவர் தன் உறவினர்களுடன் உறவை வலுப்படுத்தட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
1498. وَعَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ} يَعْنِي: قَاطِعَ رَحِمٍ. مُتَّفَقٌ عَلَيْهِ.
1498. ``உறவுகளைத் தூண்டிப்பவன் சுவர்க்கம் புகமாட்டான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜுபைர் இப்னு முத்இ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1499. وَعَنِ الْمُغِيرَةِ بْنِ سَعِيدٍ رَضِيَ اللهُ عَنْهُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {إِنَّ اللهُ حَرَّمَ عَلَيْكُمْ عُقُوقَ الْأُمَّهَاتِ، وَوَأْدَ الْبَنَاتِ، وَمَنْعًا وَهَاتِ، وَكَرِهَ لَكُمْ قِيلَ وَقَالَ، وَكَثْرَةَ السُّؤَالِ وَإِضَاعَةَ الْمَالِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1499. ``தாய்மாரைத் துன்புறுத்துவதையும், பெண் பிள்ளைகளை உயிருடன் புதைப்பதையும், (பிறரின் உரிமையை) நிறைவேற்றாமல் இருப்பதையும், (பிறர் செல்வத்தை) அபகரிப்பதையும் அல்லாஹ் தடை செய்துள்ளான். வீண்பேச்சுக்களையும், அதிகமாகக் கேள்வி கேட்பதையும், செல்வத்தை வீணடிப்பதையும், அல்லாஹ் உங்கள் மீது ஹராமாக்கி (விலக்கி) விட்டான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என முகீரா இப்னு ஷுஃபா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1500. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ -رَضِيَ اللهُ عَنْهُمَا-، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {رِضَا اللهُ فِي رِضَا الْوَالِدَيْنِ، وَسَخَطُ اللهُ فِي سَخَطِ الْوَالِدَيْنِ} أَخْرَجَهُ التِّرْمِذِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ وَالْحَاكِمُ.
1500. ``அல்லாஹ்வின் மகிழ்ச்சி பெற்றோரின் மகிழ்ச்சியில் உள்ளது. அல்லாஹ்வின் கோபம் பெற்றோரின் கோபத்தில் உள்ளது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இமாம் இப்னு ஹிப்பான் மற்றும் இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1501. وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {وَالَّذِيْ نَفْسِي بِيَدِهِ لَا يُؤْمِنُ عَبْدٌ حَتَّى يُحِبَّ لِجَارِهِ - أَوْ لِأَخِيهِ- مَا يُحِبُّ لِنَفْسِهِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1501. ``என் உயிரைத் தன் கையில் கொண்டவன் மீது ஆணையாக, ஒருவர் தனக்கு விரும்புவதையே தன் அண்டைவீட்டாருக்கு விரும்பாதவரை இறைநம்பிக்கை கொண்டவராக மாட்டார்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1502. وَعَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ سَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الذَّنْبِ أَعْظَمُ؟ قَالَ: {أَنْ تَجْعَلَ لِلَّهِ نِدًّا، وَهُوَ خَلَقَكَ. قُلْتُ ثُمَّ أَيُّ؟ قَالَ: ثُمَّ أَنْ تَقْتُلَ وَلَدَكَ خَشْيَةَ أَنْ يَأْكُلَ مَعَكَ. قُلْتُ: ثُمَّ أَيُّ؟ قَالَ: ثُمَّ أَنْ تُزَانِيَ حَلِيلَةَ جَارِكَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1502. ``எந்தப் பாவம் பெரியது?'' என நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்டேன்.
``அல்லாஹ் உன்னைப் படைத்திருயீகக நீ அவனுக்கு இணைகற்பிப்பது'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
``பின்பு, எது?'' என நான் கேட்டேன்.
``உன்னுடன் சாப்பிடும் என்ற அச்சத்தில் உன் குழந்தையைக் கொல்வது'' எனக் கூறினார்கள்.
``பின்னர் எது?'' என நான் கேட்டேன்.
.``உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் விபச்சாரம் செய்வது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1503. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ -رَضِيَ اللهُ عَنْهُمَا- أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {مِنَ الْكَبَائِرِ شَتْمُ الرَّجُلِ وَالِدَيْهِ. قِيلَ: وَهَلْ يَسُبُّ الرَّجُلُ وَالِدَيْهِ؟ قَالَ: نَعَمْ. يَسُبُّ أَبَا الرَّجُلِ، فَيَسُبُّ أَبَاهُ، وَيَسُبُّ أُمَّهُ، فَيَسُبُّ أُمَّهُ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1503. தன் பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் உள்ளதாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறியபோது,
``மனிதன் தன் பெற்றோரைத் திட்டுவானா?'' என இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது.
``ஆம்! ஒருவன் மற்றொருவரின் தந்தையைத் திட்டுகிறான்; அவன்(பதிலுக்கு) இவனுடைய தந்தையைத் திட்டுகிறான். மேலும், அவன் அவனுடைய தாயைத் திட்டுகிறான்; பதிலுக்கு அவன் இவனுடைய தாயைத் திட்டுகிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1504. وَعَنْ أَبِي أَيُّوبَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثِ لَيَالٍ يَلْتَقِيَانِ، فَيُعْرِضُ هَذَا، وَيُعْرِضُ هَذَا، وَخَيْرُهُمَا الَّذِيْ يَبْدَأُ بِالسَّلَامِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1504. ``ஒரு முஸ்லிம் தன் சகோதரனை மூன்று நாள்களுக்கு மேல் வெறுத்து விலகி இருப்பது அனுமதிக்கப்பட்டதல்ல. இருவரும் சந்திக்கும்போது அவரை விட்டு இவரும்; இவரை விட்டு அவரும் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள். இந்நிலையில், முதலில் ஸலாம் சொல்பவரே சிறந்தவர்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ அய்யூப்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1505. عَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {كُلُّ مَعْرُوفٍ صَدَقَةٌ} أَخْرَجَهُ الْبُخَارِيُّ.
1505. ``ஒவ்வொரு நல்ல காரியமும் தர்மமாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
1506. وَعَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا تَحْقِرَنَّ مِنَ الْمَعْرُوفِ شَيْئًا، وَلَوْ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ}
1506. ``நல்ல காரியம் எதையுமே இழிவாகக் கருதாதே! நீ உன் சகோதரனைச் சிரித்த முகத்துடன் சந்தித்தால் அதுவும் நல்ல காரியமே!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ தர்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1507. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا طَبَخْتَ مَرَقَةً، فَأَكْثِرْ مَاءَهَا، وَتَعَاهَدْ جِيرَانَكَ} أَخْرَجَهُمَا مُسْلِمٌ.
1507. ``நீ (நல்ல) குழம்பு வைத்தால் அதில் தண்ணீரை அதிகமாக்கி உன் அண்டை வீட்டாருக்கும் கொடு!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ தர்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்