1605. وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ أَكْثَرُ دُعَاءِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الْآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1605. ``இறைவா! இம்மையிலும், மறுமையிலும் எங்களுக்கு நல்லதைக் கொடு!'' என்பதுதான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் பிரார்த்தனைகளில் அதிகமானதாக இருந்து என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1606. وَعَنْ أَبِي مُوسَى اَلْأَشْعَرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو: اَللَّهُمَّ اغْفِرْ لِي خَطِيئَتِي، وَجَهْلِي، وَإِسْرَافِي فِي أَمْرِي، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي، اَللَّهُمَّ اِغْفِرْ لِي جِدِّي، وَهَزْلِي، وَخَطَئِي، وَعَمْدِي، وَكُلُّ ذَلِكَ عِنْدِي، اَللَّهُمَّ اِغْفِرْ لِي مَا قَدَّمْتُ، وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ، وَمَا أَعْلَنْتُ، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي، أَنْتَ الْمُقَدِّمُ وَالْمُؤَخِّرُ، وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1606. ``என் இரட்சகனே! என் பாவங்களை எனக்கு மன்னிப்பாயாக! என் அறியாமை மற்றும் என் காரியங்களில் நான் செய்யும் வீண்விரயம் மற்றும் என்னிடமிருந்து எழுகிற நான் அறிந்த குற்றங்களை மன்னித்தருள்! என் இரட்சகனே! நான் வேண்டுமென்றே செய்த பிழைகளையும் விளையாட்டாகச் செய்த பிழைகளையும் தவறிச் செய்த குற்றத்தையும், அறிந்தே செய்த குற்றத்தையும் மன்னிப்பாயாக! என் இரட்சகனே! நான் முன்னர் செய்தவற்றையும் பின்னர் செய்தவற்றையும் மறைமுகமாகச் செய்தவற்றையும், பகிரங்கமாகச் செய்தவற்றையும், இன்னும் எதை எல்லாம் நீ என்னிடமிருந்து அறிந்த தவறுகள் அனைத்தையும் மன்னித்தருள்! நீயே உயர்த்துபவன். மேலும் நீயே தாழ்த்துபவன். ஒவ்வொன்றின் மீதும் நீ ஆற்றல் மிக்கவன்'' என்று இறைத்தூதர்(ஸல்) பிரார்த்தனை செய்வார்கள் என அபூ மூஸா அல் அஷ்அரி(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1607. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: اَللَّهُمَّ أَصْلِحْ لِي دِينِي الَّذِيْ هُوَ عِصْمَةُ أَمْرِي، وَأَصْلِحْ لِي دُنْيَايَ الَّتِيْ فِيهَا مَعَاشِي، وَأَصْلِحْ لِي آخِرَتِي الَّتِيْ إِلَيْهَا مَعَادِي، وَاجْعَلِ الْحَيَاةَ زِيَادَةً لِي فِي كُلِّ خَيْرٍ، وَاجْعَلِ الْمَوْتَ رَاحَةً لِي مِنْ كُلِّ شَرٍّ} أَخْرَجَهُ مُسْلِمٌ.
1607. ``என் இரட்சகனே! என் மார்க்கத்தை எனக்காக சீர்திருத்து! ஏனெனில், அதில்தான் என் காரியங்களுக்கான பாதுகாப்பு உள்ளது. என் உலகை எனக்காக அலங்கரித்திடு. ஏனெனில், அதில்தான் என் வாழ்க்கை இருக்கிறது. எனக்காக என் மறுமையை அலங்கரித்திடு. ஏனெனில், நான் அதன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது. மேலும், என் வாழ்க்கையில் ஒவ்வொரு நல்ல காரியத்தையும் அதிகப்படுத்துவாயாக! மேலும் என் மரணத்தை ஒவ்வொரு தீங்கிலிருந்தும் மாற்றிவிடுவாயாக!'' என்று இறைத்தூதர்(ஸல்) பிரார்த்திப்பார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1608. وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:" اَللَّهُمَّ اِنْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي، وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي، وَارْزُقْنِي عِلْمًا يَنْفَعُنِي} رَوَاهُ النَّسَائِيُّ، وَالْحَاكِمُ.
1608. ``என் இரட்சகனே! நீ எனக்குக் கற்றுக் கொடுத்ததை எனக்குப் பயனுள்ளதாய் ஆக்குவாயாக! மேலும், எனக்குப் பயன் தரக் கூடியதைக் கற்றுத் தருவாயாக! மேலும், எனக்குப் பயன் தரக்கூடிய கல்வியை எனக்கு அருள்வாயாக!'' என்று இறைத்தூதர்(ஸல்) பிரார்த்திப்பார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: நஸயீ, ஹாகிம்
1609. وَلِلتِّرْمِذِيِّ: مِنْ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ نَحْوُهُ، وَقَالَ فِي آخِرِهِ: {وَزِدْنِي عِلْمًا، وَالْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ، وَأَعُوذُ بِاللهُ مِنْ حَالِ أَهْلِ النَّارِ} وَإِسْنَادُهُ حَسَنٌ.
1609. அபூ ஹுரைரா(ரலி) வாயிலாக திர்மிதீயில் 1608வது ஹதீஸ் போன்றே உள்ளது. மேலும் அதன் இறுதியில், ``என் அறிவை அதிகப்படுத்துவாயாக! ஒவ்வொரு நிலையிலும் அல்லாஹ்விற்கே புகழனைத்தும்! மேலும் நரகவாசிகளின் நிலையிலிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்றும் அபூ ஹுரைரா(ரலி) அறிவித்துள்ளார்.
1610. وَعَنْ عَائِشَةَ -رَضِيَ اللهُ عَنْهَا- أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَّمَهَا هَذَا الدُّعَاءَ: {اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنَ الْخَيْرِ كُلِّهِ، عَاجِلِهِ وَآجِلِهِ، مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمْ، وَأَعُوذُ بِكَ مِنَ الشَّرِّ كُلِّهِ، عَاجِلِهِ وَآجِلِهِ، مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمْ، اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ عَبْدُكَ وَنَبِيُّكَ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَاذَ بِهِ عَبْدُكَ وَنَبِيُّكَ، اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ، وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ، وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ، وَمَا قَرَّبَ مِنْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ، وَأَسْأَلُكَ أَنْ تَجْعَلَ كُلَّ قَضَاءٍ قَضَيْتَهُ لِي خَيْرًا} أَخْرَجَهُ اِبْنُ مَاجَهْ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ، وَالْحَاكِمُ.
1610. ``இரட்சகனே! விரைவான, தாமதமான, நான் அறிந்துள்ள, இன்னும் நான் அறியாதிருக்கும் அனைத்துவித நன்மைகளையும் நான் உன்னிடம் கோருகிறேன். மேலும் விரைவான, தாமதமான, நான் அறிந்துள்ள, நான் அறியாது இருக்கிற அனைத்துவிதத் தீமைகளிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். இரட்சகனே! உன் அடியாரும், தூதரும் உன்னிடம் வேண்டிய நன்மைகளில் சிலவற்றை வேண்டுகிறேன். மேலும், உன் அடியார், உன் தூதர் பாதுகாப்புத் தேடிய தீமைகளிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இரட்சகனே! நான் உன்னிடம் சுவர்க்கத்தை வேண்டுகிறேன். மேலும் என்னை அதனிடம் கொண்டு செல்லக் கூடிய வார்த்தை மற்றும் செயலைக் கோருகிறேன். மேலும், நான் நரகத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அதனிடம் கொண்டு செல்லக் கூடிய சொல், செயலிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். இன்னும் எனக்கு நீ நிர்ணயித்துள்ள விதிகள் அனைத்தையும் எனக்கு நல்லதாய் ஆக்கித் தருமாறு உன்னிடம் வேண்டுகிறேன்'' என்ற இந்தப் பிரார்த்தனையை இறைத்தூதர்(ஸல்) எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: இப்னு மாஜா
இமாம் இப்னு ஹிப்பான் மற்றும் இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
1611. وَأَخْرَجَ الشَّيْخَانِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {كَلِمَتَانِ حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ، خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ، ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ، سُبْحَانَ اللهُ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللهُ الْعَظِيمِ}
1611. text