161. وَعَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {كَانَتِ النُّفَسَاءُ تَقْعُدُ فِي عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ نِفَاسِهَا أَرْبَعِينَ} رَوَاهُ الْخَمْسَةُ إِلَّا النَّسَائِيَّ، وَاللَّفْظُ لِأَبِي دَاوُدَ.
161. ``நபி(ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் (நிஃபாஸ் என்னும்) பிரசவ கால உதிரப்போக்குக்குப் பின்னர் நாற்பது நாள்கள் தனித்திருப்பார்கள்'' என உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், அஹ்மத், திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இங்கு அபூ தாவூதின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
குறிப்பு: பிரசவ உதிரப்போக்கு எல்லாப் பெண்களுக்கும் நாற்பது நாள்கள் இருக்கும் எனக் கூறமுடியாது. உண்மையில் இது அவரவர் உடற்கூறுக்கு ஏற்ற வகையில் அமைகிறது. அதிகப்படியாக நாற்பது நாள்களை மட்டுமே பிரசவ உதிரப்போக்கிற்கான காலமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
162. وَفِي لَفْظٍ لَهُ: {وَلَمْ يَأْمُرْهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَضَاءِ صَلَاةِ النِّفَاسِ} وَصَحَّحَهُ الْحَاكِمُ.كِتَابُ الصَّلَاةِبَابُ الْمَوَاقِيتِ
162. அபூ தாவூதின் மற்றோர் அறிவிப்பில், இறைத்தூதர்(ஸல்) பிரசவ உதிரப்போக்கில் இருக்கும் காலத்தின் தொழுகையை களாச் செய்யுமாறு பெண்களுக்குக் கட்டளையிடவில்லை என்றும் இடம் பெறுகிறது.
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் கூறியுள்ளார்.
163. عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِوٍ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ أَنَّ نَبِيَّ اللهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {وَقْتُ الظُّهْرِ إِذَا زَالَتِ الشَّمْسُ، وَكَانَ ظِلُّ الرَّجُلِ كَطُولِهِ مَا لَمْ يَحْضُرِ الْعَصْرُ، وَوَقْتُ الْعَصْرِ مَا لَمْ تَصْفَرَّ الشَّمْسُ، وَوَقْتُ صَلَاةِ الْمَغْرِبِ مَا لَمْ يَغِبِ الشَّفَقُ، وَوَقْتُ صَلَاةِ الْعِشَاءِ إِلَى نِصْفِ اللَّيْلِ الْأَوْسَطِ، وَوَقْتُ صَلَاةِ الصُّبْحِ مِنْ طُلُوعِ الْفَجْرِ مَا لَمْ تَطْلُعِ الشَّمْسُ} رَوَاهُ مُسْلِمٌ.
163. ``லுஹரின் (தொழுகை) நேரம் சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து, ஒரு மனிதனின் நிழல் அவனுக்குச் சமமாக ஆகி, அஸரின் நேரம் வராத வரையிலாகும். இன்னும் அஸரின் (தொழுகை) நேரம் சூரியன் மஞ்சள் நிறத்தை அடையாத வரையாகும். இன்னும் மக்ரிப் தொழுகையின் நேரம் செவ்வானம் மறையாத வரையாகும். மேலும், இஷா தொழுகையின் நேரம் நள்ளிரவு வரையாகும். இன்னும், சுப்ஹு தொழுகையின் நேரம் கிழக்கு வெளுத்ததிலிருந்து சூரியன் உதயமாகும் வரையாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
164. وَلَهُ مِنْ حَدِيثِ بُرَيْدَةَ فِي الْعَصْرِ: {وَالشَّمْسُ بَيْضَاءُ نَقِيَّةٌ}.
164. ``அஸரின் (தொழுகை) நேரம் சூரியன் சுத்த வெள்iயாய் இருக்கும் வரை'' என்று புரைதா(ரலி) வாயிலாக முஸ்லிமில் பதிவிடப்பட்டுள்ளது.
165. وَمِنْ حَدِيثِ أَبِي مُوسَى رَضِيَ اللهُ عَنْهُ: {وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ}.
165. இன்னும் (முஸ்லிமில்), ``சூரியன் (சற்று) உயர்ந்திருக்கும் வரை'' என அபூ மூஸா(ரலி) வாயிலாக பதிவிடப்பட்டுள்ளது.
166. وَعَنْ أَبِي بَرْزَةَ الْأَسْلَمِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّيَ الْعَصْرَ، ثُمَّ يَرْجِعُ أَحَدُنَا إِلَى رَحْلِهِ فِي أَقْصَى الْمَدِينَةِ وَالشَّمْسُ حَيَّةٌ، وَكَانَ يَسْتَحِبُّ أَنْ يُؤَخِّرَ مِنَ الْعِشَاءِ، وَكَانَ يَكْرَهُ النَّوْمَ قَبْلَهَا وَالْحَدِيثَ بَعْدَهَا، وَكَانَ يَنْفَتِلُ مِنْ صَلَاةِ الْغَدَاةِ حِينَ يَعْرِفُ الرَّجُلُ جَلِيسَهُ، وَيَقْرَأُ بِالسِّتِّينَ إِلَى الْمِائَةِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
166. இறைத்தூதர்(ஸல்) அஸ் ர் தொழுவார்கள். பின்னர் சூரியன் வெளிச்சமாக உள்ள நிலையில் நாங்கள் எங்களுடைய நகரின் மறு ஓரத்தில் (உள்ள) தம் வீட்டிற்குத் திரும்பச் சென்று விடுவோம். இன்னும் இஷா தொழுகையைப் பிற்படுத்துவதை விரும்புபவர்களாகவும், இஷாவிற்கு முன் தூங்குவதையும் இஷாவிற்குப் பின் (வீண் பேச்சுக்கள்) பேசுவதையும் வெறுப்பவர்களாகவும் இருந்தார்கள். நாங்கள் எங்கள் அருகில் அமர்ந்திருப்பவரை அறிய முடிகிற வேளையில் தொழுகையை முடித்துக் கொள்வார்கள். இன்னும் இறைத்தூதர்(ஸல்) (ஃபஜ்ர் தொழுகையில்) அறுபது முதல் நூறு வசனங்கள் வரை ஓதுவார்கள் என பர்ஸா அஸ்லமி(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
167. وَعِنْدَهُمَا مِنْ حَدِيثِ جَابِرٍ: {وَالْعِشَاءَ أَحْيَانًا وَأَحْيَانًا: إِذَا رَآهُمْ اِجْتَمَعُوا عَجَّلَ، وَإِذَا رَآهُمْ أَبْطَئُوا أَخَّرَ، وَالصُّبْحَ: كَانَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّيهَا بِغَلَسٍ}.
167. இறைத்தூதர்(ஸல்) இஷா தொழுகையை சில நேரங்களில் விரைவாகவும், சில நேரங்களில் தாமதமாகவும் தொழுவார்கள். மக்கள் விரைவாக ஒன்று திரளக் கண்டால் விரைவாகவும், தாமதமாக வரக் கண்டால் தாமதமாகவும் (இஷாத்) தொழுவார்கள். இன்னும் ஃபஜ்ர் தொழுகையை இறைத்தூதர்(ஸல்) இருட்டில் தொழுவார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
168. وَلِمُسْلِمٍ مِنْ حَدِيثِ أَبِي مُوسَى: {فَأَقَامَ الْفَجْرَ حِينَ اِنْشَقَّ الْفَجْرُ، وَالنَّاسُ لَا يَكَادُ يَعْرِفُ بَعْضُهُمْ بَعْضًا}
168. இறைத்தூதர்(ஸல்) கிழக்கு வெளுத்ததும் ஃபஜர் தொழுகையை தொழுவார்கள் (அப்போது) மக்கள் ஒருவரையொருவர் (இருளின் காரணமாக) அறிய முடியாத நிலையில் இருப்பார்கள் என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
169. وَعَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كُنَّا نُصَلِّي الْمَغْرِبَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَنْصَرِفُ أَحَدُنَا وَإِنَّهُ لَيُبْصِرُ مَوَاقِعَ نَبْلِهِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
169. நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் மக்ரிப் தொழுவோம். (அதன் பின்) எங்களில் எவராவது சென்றால் அவர் (தன்னால் வீசப்பட்ட) தம்முடைய அம்பின் இலக்கினை (அந்நேர வெளிச்சத்தில்) பார்ப்பர் என ராஃபிஃ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
170. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {أَعْتَمَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ بِالْعَشَاءِ، حَتَّى ذَهَبَ عَامَّةُ اللَّيْلِ، ثُمَّ خَرَجَ، فَصَلَّى، وَقَالَ: "إِنَّهُ لَوَقْتُهَا لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي"} رَوَاهُ مُسْلِمٌ.
170. இரவின் பெரும் பகுதி, கழியும் அளவிற்கு இஷா தொழுகையை இறைத்தூதர்(ஸல்) பிற்படுத்தி, பின்னர் சென்று ஒரு இரவுத் தொழுகை நடத்திவிட்டு ``என் சமுதாயத்திற்குச் சிரமம் ஏற்படும என நான் அஞ்சவில்லை எனில், இதுவே இஷாவின் நேரமாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
171. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا اِشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا بِالصَّلَاةِ، فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
171. ``கடும் வெப்ப காலத்தில், (வெப்பம் குறையும் வரை சற்று பிற்படுத்தி) குளிர்ந்த நேரத்தில் (லுஹரை) தொழுங்கள். ஏனெனில், கடும் வெப்பம் நிச்சயமாக நரகத்தின் பெருமூச்சினால் உண்டாவதாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
172. وَعَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَصْبِحُوا بِالصُّبْحِ فَإِنَّهُ أَعْظَمُ لِأُجُورِكُمْ} رَوَاهُ الْخَمْسَةُ، وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ، وَابْنُ حِبَّانَ.
172. ``ஃபஜ்ரின் நேரம் வந்துவிட்டது எனத் தெளிவாகத் தெரிந்தபின்பு தொழுங்கள். ஏனெனில், நிச்சயமாக அது உங்களுக்கு மகத்தான கூலியைப் பெற்றுத்தரும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ராஃபி இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, நஸயீ மற்றும் அஹ்மத்.
இமாம் திர்மிதீ மற்றும் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
173. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {مَنْ أَدْرَكَ مِنَ الصُّبْحِ رَكْعَةً قَبْلِ أَنْ تَطْلُعَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ الصُّبْحَ، وَمَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الْعَصْرِ قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ الْعَصْرَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
173. ``சூரிய உதயத்திற்கு முன்பு ஃபஜ்ரின் ஒரு ரக்அத்தை அடைந்தவர் ஃபஜ்ர் தொழுகையை (அதன் நேரத்தில்) அடைந்து விட்டார். இன்னும், அஸரின் ஒரு ரக் அத்தை சூரியன் மறைவதற்குள் அடைந்தவர், அஸ் ர் தொழுகையை (அதன் நேரத்தில்) அடைந்துவிட்டார்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
174. وَلِمُسْلِمٍ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا نَحْوَهُ، وَقَالَ: "سَجْدَةً" بَدَلَ "رَكْعَةً". ثُمَّ قَالَ: وَالسَّجْدَةُ إِنَّمَا هِيَ الرَّكْعَةُ.
174. முஸ்லிமில் ஆயிஷா(ரலி) வாயிலாக இதே போன்று ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. ஆனால், அங்கு ரக்அத்திற்குப் பதிலாக ஸஜ்தா எனப் பதிவாகியுள்ளது. பின்னர் ஸஜ்தா என்பது ரக்அத்(தில் உள்ளது) என ஆயிஷா(ரலி) விளக்கியதாகவும் உள்ளது.
175. وَعَنْ أَبِي سَعِيدٍ اَلْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: سَمِعْتَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: {لَا صَلَاةَ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ اَلشَّمْسُ وَلَا صَلَاةَ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغِيبَ الشَّمْسُ} مُتَّفَقٌ عَلَيْهِ. وَلَفْظُ مُسْلِمٍ: {لَا صَلَاةَ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ}.
175. ``ஃபஜ்ருக்குப் பின்னர் சூரியன் உதயமாகும் வரையிலும், அசருக்குப் பின்னர் சூரியன் மறையும் வரையிலும் எந்தத் தொழுகையும் இல்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறியதை நான் செவியுற்றேன் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின் எந்தத் தொழுகையுமில்லை என முஸ்லிமில் பதிவிடப்பட்டுள்ளது.
176. وَلَهُ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ: {ثَلَاثُ سَاعَاتٍ كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَانَا أَنْ نُصَلِّي فِيهِنَّ، وَأَنْنَقْبُرَ فِيهِنَّ مَوْتَانَا: حِينَ تَطْلُعُ الشَّمْسُ بَازِغَةً حَتَّى تَرْتَفِعَ، وَحِينَ يَقُومُ قَائِمُ الظَّهِيرَةِ حَتَّى تَزُولَ الشَّمْسُ، وَحِينَ تَتَضَيَّفُ الشَّمْسُ لِلْغُرُوبِ}.
176. சூரியன் ஒளிர்ந்து கொண்டு, உதயமாகி வரும் வேளையில், அது உயரும் வரையிலும், இன்னும் சூரியன் உச்சியிலிருந்து சாயும் வரையிலும், இன்னும் சூரியன் மறைவதற்காகத் தாழும் (மறையும்) வேளையிலும் ஆகிய மூன்று நேரங்களில் நாங்கள் தொழுவதையும், எங்களில் இறந்தவர்களை அடக்கம் செய்வதையும் இறைத்தூதர்(ஸல்) தடை செய்துவந்தார்கள் என உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
177. وَالْحُكْمُ الثَّانِي عِنْدَ "الشَّافِعِيِّ" مِنْ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ بِسَنَدٍ ضَعِيفٍ. وَزَادَ: {إِلَّا يَوْمَ الْجُمْعَةِ}.
177. தொழுவது தடை செய்யப்பட்ட வேளைகளில் இரண்டாவது வேளை(யான சூரியன் உச்சி சாயும் நேரம்) பற்றிய செய்தி ஷாஃபிஈயில் அபூ ஹுரைரா(ரலி) வாயிலாக `ளயீஃப்' எனும் பலவீனமான தரத்தில் இடம் பெற்றுள்ளது. அதில் ``ஜுமுஆ நாளைத் தவிர'' என்னும் வாசகம் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
ஜுமுஆ நாளில் மட்டும் சூரியனின் உச்சி நேரத்தில் தொழுதல் தடைசெய்யப்படவில்லை என்பது இதிலிருந்து தெரியவருகிறது. (சுபுலுஸ் ஸலாம்)
178. وَكَذَا لِأَبِي دَاوُدَ: عَنْ أَبِي قَتَادَةَ نَحْوُهُ.
178. இதே போன்று அபூ கதாதா(ரலி) வாயிலாக அபூ தாவூதிலும் பதிவாகியுள்ளது.
179. وَعَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {يَا بَنِي عَبْدِ مَنَافٍ، لَا تَمْنَعُوا أَحَدًا طَافَ بِهَذَا الْبَيْتِ وَصَلَّى أَيَّةَ سَاعَةٍ شَاءَ مِنْ لَيْلٍ أَوْ نَهَارٍ} رَوَاهُ الْخَمْسَةُ، وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ، وَابْنُ حِبَّانَ.
179. ``அப்து மனாஃப் உடைய மக்களே! இரவாயினும், பகலாயினும் எந்நேரத்திலும் இந்த இறையில்லத்தில் யாரும் தொழுவதையோ, வலம் வருவதையோ தடுக்காதீர்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இமாம் திர்மிதீ மற்றும் இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
180. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {اَلشَّفَقُ الْحُمْرَةُ} رَوَاهُ الدَّارَقُطْنِيُّ وَصَحَّحَ اِبْنُ خُزَيْمَةَ وَغَيْرُهُ وَقْفَهُ.
180. ``ஷஃபக் என்பது செவ்வானமாகும்'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: தாரகுத்னீ
இமாம் இப்னு குஸைமா இதனைஆதாரப்பூர்வமான ஹதீஸ் எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றவர்கள் இதனை இப்னு உமர்(ரலி) அவர்களின் கருத்து எனக் கூறியுள்ளார்கள்..