141. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {التَّيَمُّمُ ضَرْبَتَانِ ضَرْبَةٌ لِلْوَجْهِ، وَضَرْبَةٌ لِلْيَدَيْنِ إِلَى الْمِرْفَقَيْنِ} رَوَاهُ الدَّارَقُطْنِيُّ، وَصَحَّحَ الْأَئِمَّةُ وَقْفَهُ.
141. ``தயம்மும் என்பது இரண்டு அடிகளாகும். (அவற்றில்) ஒன்று முகத்திற்கும் மற்றொன்று முழங்கை வரையில் இரண்டு ககைளுக்கும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: தார குத்னீ
இது `மவ்கூஃப்' எனும் தரம் என இமாம்கள் கூறியுள்ளார்கள். (அதாவது இது இப்னு உமர்(ரலி) அவர்களின் கூற்றாகும்.)
142. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {الصَّعِيدُ وُضُوءُ الْمُسْلِمِ، وَإِنْ لَمْ يَجِدِ الْمَاءَ عَشْرَ سِنِينَ، فَإِذَا وَجَدَ الْمَاءَ فَلْيَتَّقِ اللهَ، وَلْيُمِسَّهُ بَشَرَتَهُ} رَوَاهُ الْبَزَّارُ، وَصَحَّحَهُ اِبْنُ الْقَطَّانِ، ولَكِنْ صَوَّبَ الدَّارَقُطْنِيُّ إِرْسَالَهُ.
142. ``பத்து ஆண்டுகளுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டாலும் ஒரு முஸ்லிமிற்குத் தூய்மையான மண் (மூலம் தயம்மும் செய்வதே) `உளூ'விற்கு ஒப்பாகும். ஆனால், தண்ணீர் கிடைத்துவிட்டால், அவர் அல்லாஹ்வை அஞ்சட்டும்! அவர் தன் மேனியைத் தண்ணீரால் தீண்ட (சுத்தம்) செய்யட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: பஜ்ஜார்
இப்னு கத்தான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமான எனக் குறிப்பிட்டுள்ளார். இது `முர்ஸல்' என்பதே சரி என இமாம் தார குத்னீ(ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.
143. وَلِلتِّرْمِذِيِّ: عَنْ أَبِي ذَرٍّ نَحْوُهُ، وَصَحَّحَهُ. وَالْحَاكِمُ أيْضًا.
143. மேற்கண்ட கருத்தில் உள்ள ஹதீஸ் அபூ தர்(ரலி) வாயிலாக திர்மிதீயில் பதிவிடப்பட்டுள்ளது.
இதனை இமாம் திர்மிதீ மற்றும் ஹாகிம்(ரஹ்) ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
144. وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {خَرَجَ رَجُلَانِ فِي سَفَرٍ، فَحَضَرَتِ الصَّلَاةَ -وَلَيْسَ مَعَهُمَا مَاءٌ- فَتَيَمَّمَا صَعِيدًا طَيِّبًا، فَصَلَّيَا، ثُمَّ وَجَدَا الْمَاءَ فِي الْوَقْتِ. فَأَعَادَ أَحَدُهُمَا الصَّلَاةَ وَالْوُضُوءَ، وَلَمْ يُعِدِ الْآخَرُ، ثُمَّ أَتَيَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَا ذَلِكَ لَهُ، فَقَالَ لِلَّذِي لَمْ يُعِدْ: "أَصَبْتَ السُّنَّةَ وَأَجْزَأَتْكَ صَلَاتُكَ" وَقَالَ لِلْآخَرِ: "لَكَ الْأَجْرُ مَرَّتَيْنِ"} رَوَاهُ أَبُو دَاوُدَ، والنَّسَائِيُّ.
144. இரண்டு நபர்கள் பயணித்தார்கள்: தொழுகையின் நேரம் வந்துவிட்டது. ஆனால், அவர்களிடம் (`உளூ'விற்கான) தண்ணீர் இல்லை. எனவே, அவர்கள் தூய்மையான மண்ணில் தயம்மும் செய்தார்கள். பின்னர் தொழுதார்கள். பின்னர் அந்த (தொழுகையின்) நேரத்திற்குள் இருவருக்கும் தண்ணீர் கிடைத்தது. ஒருவர் `உளூ' (செய்து) உடன் (தன் தொழுகையை) மீண்டும் தொழுதார். மற்றவர் மீண்டும் தொழவில்லை. பின்னர் இருவரும் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, நடந்ததை விவரித்தனர்.
மீண்டும் தொழாதவரை நோக்கி, ``நீயே சுன்னத்தை நிலை நிறுத்திவிட்டாய்! உனக்கு உன் தொழுகை போதுமானது'' என்றும், (மீண்டும் தொழுத) மற்றவரை நோக்கி, ``உனக்கு இருமுறை நன்மை உண்டு'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
145. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا فِي قَوْلِهِ تعالى وَإِنْ كُنْتُمْ مَرْضَى أَوْ عَلَى سَفَرٍ قَالَ: "إِذَا كَانَتْ بِالرَّجُلِ الْجِرَاحَةُ فِي سَبِيلِ اللهُ وَالْقُرُوحُ، فَيُجْنِبُ، فَيَخَافُ أَنْ يَمُوتَ إِنْ اِغْتَسَلَ: تَيَمَّمَ". رَوَاهُ الدَّارَقُطْنِيُّ مَوْقُوفًا، وَرَفَعَهُ الْبَزَّارُ، وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ، وَالْحَاكِمُ.
145. ``நீங்கள் பயணத்திலிருந்தாலோ அல்லது நோய்வாய்ப்பட்டிருந்தாலோ'' என்று தொடங்கும் குர்ஆனின் அந்த (4:43) வசனத்திற்கு இப்னு அப்பாஸ்(ரலி) விளக்கமளிக்கையில், ``ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் (போரில்) காயப்பட்டு பின் அவருக்குக் குளிப்புக் கடமையாகி தண்ணீர் ஊற்றுவதால் மரணம் ஏற்படும் என தயம்மும் செய்து கொள்ளலாம்'' என விளக்கம் அளித்தார்கள்.
இது தாரகுத்னீயில் `மவ்கூஃப்' எனும் தரத்திலும், பஸ்ஸாரில் ``மர்ஃபூஃ'' எனும் தரத்திலும் பதிவிடப்பட்டுள்ளது. இமாம் இப்னு குஸைமா மற்றும் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
146. وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {اِنْكَسَرَتْ إِحْدَى زَنْدَيَّ فَسَأَلَتْ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَنِي أَنْ أَمْسَحَ عَلَى الْجَبَائِرِ} رَوَاهُ اِبْنُ مَاجَه بِسَنَدٍ وَاهٍ جِدًّا.
146. என் கையின் மணிக்கட்டுப் பகுதி உடைந்திருந்தது. நபி(ஸல்) அவர்களிடம் நான் இது குறித்துக் கேட்டேன். அதன் மருந்துக் கட்டின் மீது மஸஹ் செய்யுமாறு என்னைப் பணித்தார்கள் என அலீ(ரலி) அறிவித்தார்.
இமாம் இப்னு மாஜா(ரஹ்) இதனை முற்றிலும் பலவீனமான அறிவிப்புத் தொடரில் பதிவிட்டுள்ளார்.
147. {وَعَنْ جَابِرٍ بْنُ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُمَا فِي الرَّجُلِ الَّذِي شُجَّ، فَاغْتَسَلَ فَمَاتَ -: "إِنَّمَا كَانَ يَكْفِيهِ أَنْ يَتَيَمَّمَ، وَيَعْصِبَ عَلَى جُرْحِهِ خِرْقَةً، ثُمَّ يَمْسَحَ عَلَيْهَا وَيَغْسِلَ سَائِرَ جَسَدِهِ"} رَوَاهُ أَبُو دَاوُدَ بِسَنَدٍ فِيهِ ضَعْفٌ، وَفِيهِ اِخْتِلَافٌ عَلَى رُوَاتِهِ.
147. தலை உடைக்கப்பட்டிருந்த ஒருவர் குளித்து இறந்து போனார். (இறைத்தூதர்(ஸல்) அவரைப் பற்றிக் கூறுகையில்), ``அவர் தன் காயத்திற்கு கட்டுக்கட்டி, அதன் மீது மஸஹ் செய்து, உடல் முழுவதும் மட்டும் குளித்திருந்தாலே போதுமானதாய் ஆகி இருக்கும்'' என்று கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இதன் அறிவிப்பாளர்கள் குறித்த கருத்து வேறுபாட்டினால் இது `ளயீஃப்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
148. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {مِنَ السُّنَّةِ أَنْ لَا يُصَلِّيَ الرَّجُلُ بِالتَّيَمُّمِ إِلَّا صَلَاةً وَاحِدَةً، ثُمَّ يَتَيَمَّمُ لِلصَّلَاةِ الْأُخْرَى} رَوَاهُ الدَّارَقُطْنِيُّ بِإِسْنَادٍ ضَعِيفٍ جِدًّا.بَابُ الْحَيْضِ
148. ஒருவர் ஒரு தயம்முமை கொண்டு ஒரு தொழுகையைத் தொழுவதே. சுன்னத்தாகும். பின்னர் மறு தொழுகைக்கும் தயம்மும் செய்து கொள்ள வேண்டும் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: தாரகுத்னீ
இது `ளயீஃப்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
மாதவிடாய்
149. عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {إِنَّ فَاطِمَةَ بِنْتَ أَبِي حُبَيْشٍ كَانَتْ تُسْتَحَاضُ، فَقَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "إِنَّ دَمَ الْحَيْضِ دَمٌ أَسْوَدُ يُعْرَفُ، فَإِذَا كَانَ ذَلِكَ فَأَمْسِكِي مِنَ الصَّلَاةِ، فَإِذَا كَانَ الْآخَرُ فَتَوَضَّئِي، وَصَلِّي"} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ، وَالْحَاكِمُ، وَاسْتَنْكَرَهُ أَبُو حَاتِمٍ.
149. ஃபாத்திமா பின்து அபீ ஹுபைஷ் அவர்களுக்கு தொடர் உதிரப்போக்கு இருந்து வந்தது. இறைத்தூதர்(ஸல்) அவரிடம், ``மாதவிடாய் இரத்தம் கறுப்பாக இருப்பதைக் கொண்டு அறியப்படும். உனக்கு அது ஏற்பட்டால் தொழுகையை விட்டுவிடு. அதுவல்லாத மற்றேதும் (இரத்தம்) ஏற்படுமாயின் `உளூ'ச் செய்து தொழுது கொள்'' என்று கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ.
இப்னு ஹிப்பான்(ரஹ்) மற்றும் ஹாகிம்(ரஹ்) இதனை ஆததரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இதனை நிராகரிக்கத் தக்கது என அபூ ஹாதிம்(ரஹ்) கருதுகிறார்.
150. وَفِي حَدِيثِ أَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ عِنْدَ أَبِي دَاوُدَ: {لِتَجْلِسْ فِي مِرْكَنٍ، فَإِذَا رَأَتْ صُفْرَةً فَوْقَ الْمَاءِ، فَلْتَغْتَسِلْ لِلظُّهْرِ وَالْعَصْرِ غُسْلاً وَاحِدًا، وَتَغْتَسِلْ لِلْمَغْرِبِ وَالْعِشَاءِ غُسْلاً وَاحِدًا، وَتَغْتَسِلْ لِلْفَجْرِ غُسْلاً، وَتَتَوَضَّأْ فِيمَا بَيْنَ ذَلِكَ}.
150. துணியை அலசும் விசாலமான ஒரு பாத்திரத்தில் அவள் அமரட்டும்; அப்பாத்திரத்தில் தண்ணீர் ஊற்ற அதன் மேற்புறத்தில் மஞ்சள் நிற நீரைப் பார்த்தால் லுஹர் மற்றும் அஸ் ர் தொழுகைக்கு ஒரு முறை குளித்துக் கொள்ளட்டும்! மேலும், மக்ரிப் மற்றும் இஷாவிற்கு, ஒரு முறையும், ஃபஜ்ருக்கு ஒரு முறையும் குளித்துக் கொள்ளட்டும்! இன்னும், இதற்கிடையில் `உளூ'ச் செய்து கொள்ளட்டும்! எனும் நபி(ஸல்) அவர்களின் சொல் அஸ்மா பின்த் உமைஸ் வாயிலாக அபூ தாவூதில் இடம் பெற்றுள்ளது.
151. وَعَنْ حَمْنَةَ بِنْتِ جَحْشٍ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {كُنْتُ أُسْتَحَاضُ حَيْضَةً كَبِيرَةً شَدِيدَةً، فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْتَفْتِيهِ، فَقَالَ: "إِنَّمَا هِيَ رَكْضَةٌ مِنَ الشَّيْطَانِ، فَتَحَيَّضِي سِتَّةَ أَيَّامٍ، أَوْ سَبْعَةً، ثُمَّ اِغْتَسِلِي، فَإِذَا اسْتَنْقَأْتِ فَصَلِّي أَرْبَعَةً وَعِشْرِينَ، أَوْ ثَلَاثَةً وَعِشْرِينَ، وَصُومِي وَصَلِّي، فَإِنَّ ذَلِكَ يُجْزِئُكَ، وَكَذَلِكَ فَافْعَلِي كَمَا تَحِيضُ النِّسَاءُ، فَإِنْ قَوِيتِ عَلَى أَنْ تُؤَخِّرِي الظُّهْرَ وَتُعَجِّلِي الْعَصْرَ، ثُمَّ تَغْتَسِلِي حِينَ تَطْهُرِينَ وَتُصَلِّينَ الظُّهْرَ وَالْعَصْرِ جَمِيعًا، ثُمَّ تُؤَخِّرِينَ الْمَغْرِبَ وَتُعَجِّلِينَ الْعِشَاءِ، ثُمَّ تَغْتَسِلِينَ وَتَجْمَعِينَ بَيْنَ الصَّلَاتَيْنِ، فَافْعَلِي. وَتَغْتَسِلِينَ مَعَ الصُّبْحِ وَتُصَلِّينَ. قَالَ: وَهُوَ أَعْجَبُ الْأَمْرَيْنِ إِلَيَّ} رَوَاهُ الْخَمْسَةُ إِلَّا النَّسَائِيَّ، وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ، وَحَسَّنَهُ الْبُخَارِيُّ.
151. எனக்கு அடிக்கடி கடும் தொடர் உதிரப்போக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. நான் (இது குறித்து) சட்டம் கேட்க நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். ``நிச்சயமாக அது ஷைத்தானின் வேலைகளில் ஒன்றாகும். ஆறு அல்லது ஏழு நாள்களை (வழமையாக) மாதவிடாய் நாள்களாகக் கணக்கிட்டுக் கொள்! பின்னர் குளித்துக் கொள்! நீ தூய்மையாகி விட்டால், இருபத்தி நான்கு அல்லது இருபத்தி மூன்று நாள்கள் தொழுது கொள்! நோன்பும் நோற்றுக் கொள்! நிச்சயமாக இது உனக்குப் போதுமானதாகிவிடும். (மற்ற) பெண்கள் எவ்வாறு மாதவிடாய்க் காலத்தைக் கழிக்கிறார்களோ, அதுபோன்று ஒவ்வொரு மாதமும் செய்து கொள்! லுஹரைப் பிற்படுத்தியும் அஸரை முற்படுத்தியும் தொழ உன்னால் முடியுமானால், நீ தூய்மையடையும் போது குளித்துவிட்டு, லுஹரையும் அஸரையும் (ஒன்றாக இணைத்துத்) தொழுது கொள். பின்னர் மக்ரிபைப் பிற்படுத்தி; இஷாவை முற்படுத்தி குளித்து விட்டு இரண்டையும் சேர்த்துத் தொழுது கொள்! பின்னர் ஃபஜ்ர் தொழுகையை குளித்து விட்டுத் தொழுது கொள்! இவை இரண்டிலும் இது எனக்கு மிகவும் பிடித்தமானது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஹம்னா பின்த்து ஜஹ்ஷ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், திர்மிதீ, இப்னு மாஜா மற்றும் அஹ்மத்
இதனை ஆதாரப்பூர்வமானது என இமாம் திர்மிதீ(ரஹ்) அவர்களும், `ஹஸன்' என இமாம் புகாரீ(ரஹ்) அவர்களும் கூறியுள்ளனர்.
152. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا؛ {أَنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ جَحْشٍ شَكَتْ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَلدَّمَ، فَقَالَ: "اُمْكُثِي قَدْرَ مَا كَانَتْ تَحْبِسُكِ حَيْضَتُكِ، ثُمَّ اِغْتَسِلِي" فَكَانَتْ تَغْتَسِلُ كُلَّ صَلَاةٍ} رَوَاهُ مُسْلِمٌ.
152. உம்மு ஹபீபா பின்த் ஐஹ்ஷ்(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் (தொடர்) உதிரப் போக்கு ஏற்படுவதைப் பற்றி முறையிட்டார்கள். அதற்கு, ``உனக்கு (மாதவிடாய்) இரத்தம் நிற்கும் வரை தொழுகையை நிறுத்திக் கொள்! பின்னர் குளித்து (தொழுது) கொள்! என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள். எனவே, அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் குளித்துக் கொண்டிருந்தார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
153. وَفِي رِوَايَةٍ لِلْبُخَارِيِّ: {وَتَوَضَّئِي لِكُلِّ صَلَاةٍ} وَهِيَ لِأَبِي دَاوُدَ وَغَيْرِهِ مِنْ وَجْهٍ آخَرَ.
153. உம்மு ஹபீபா பின்த்து ஜஹ்ஷ்(ரலி) அவர்களிடம் ``நீ ஒவ்வொரு தொழுகைக்கும் `உளூ'ச் செய்து கொள்!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என புகாரீயின் மற்றோர் அறிவிப்பில் உள்ளது. இதே கருத்து அபூ தாவூதிலும் வேறு ஓர் அறிவிப்பாளர் வாயிலாக வந்துள்ளது.
154. وَعَنْ أُمِّ عَطِيَّةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {كُنَّا لَا نَعُدُّ الْكُدْرَةَ وَالصُّفْرَةَ بَعْدَ الطُّهْرِ شَيْئًا} رَوَاهُ الْبُخَارِيُّ، وَأَبُو دَاوُدَ وَاللَّفْظُ لَهُ.
154. ``நாங்கள் (மாதவிடாயிலிருந்து) தூய்மையடைந்த பின் மண்நிறம் மற்றும் மஞ்சள் நிற (இரத்த)த்தைக் கண்டால் அவற்றைக் கணக்கில் கொள்ள மாட்டோம்'' என்று உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, அபூ தாவூத்
இங்கு அபூ தாவூதின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
155. وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ الْيَهُودَ كَانُوا إِذَا حَاضَتِ الْمَرْأَةُ لَمْ يُؤَاكِلُوهَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "اِصْنَعُوا كُلَّ شَيْءٍ إِلَّا النِّكَاحَ} رَوَاهُ مُسْلِمٌ.
155. ``நிச்சயமாக யூதர்கள் மாதவிடாயான பெண்களுடன் (சேர்ந்து) உண்ண மாட்டார்கள். நீங்கள் உடலுவைத் தவிர்த்து (விரும்பிய) மற்ற அனைத்தையும் செய்து கொள்ளுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
156. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُنِي فَأَتَّزِرُ، فَيُبَاشِرُنِي وَأَنَا حَائِضٌ} مُتَّفَقٌ عَلَيْهِ.
156. நான் மாதவிடாயில் இருக்கும்போது இறைத்தூதர்(ஸல்) என் கீழ் அங்கியைக் கட்டச் சொல்வார்கள். நான் கட்டிக் கொள்வேன். பின்னர் என்னைக் கட்டியணைத்துக் கொள்வார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
157. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الَّذِي يَأْتِي اِمْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ قَالَ: {يَتَصَدَّقُ بِدِينَارٍ، أَوْ نِصْفِ دِينَارٍ} رَوَاهُ الْخَمْسَةُ، وَصَحَّحَهُ الْحَاكِمُ وَابْنُ الْقَطَّانِ، وَرَجَّحَ غَيْرَهُمَا وَقْفَهُ.
157. தன் மனைவி மாதவிடாயாக இருக்கும் நிலையில் அவளுடன் உடலுறவு கொள்வோர் குறித்துக் கூறுகையில், ``அவர் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்யட்டும்!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், திர்மிதீ, அபூ தாவூத், நஸயீ, இப்னு மாஜா.
இமாம் ஹாகிம்(ரஹ்) மற்றும் இப்னு கத்தான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளனர். மற்றவர்கள் இதனை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்று எனக் கூறியுள்ளனர்.
158. وَعَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَلَيْسَ إِذَا حَاضَتْ لَمْ تُصَلِّ وَلَمْ تَصُمْ؟} مُتَّفَقٌ عَلَيْهِ فِي حَدِيثٍ.
158. ``பெண்ணுக்கு மாதவிடாய் வந்துவிட்டால் அவள் தொழுவதுமில்லை மற்றும் அவள் நோன்பு நோற்பதுமில்லை அல்லவா?'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார். (நீண்ட ஹதீஸின் சுருக்கம்)
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
குறிப்பு: விரிவாக அறிவதற்கு பார்க்க புகாரீ ஹதீஸ் எண் 304, 1462, 1951 மற்றும் 2658.
159. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {لَمَّا جِئْنَا سَرِفَ حِضْتُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "اِفْعَلِي مَا يَفْعَلُ الْحَاجُّ، غَيْرَ أَنْ لَا تَطُوفِي بِالْبَيْتِ حَتَّى تَطْهُرِي"} مُتَّفَقٌ عَلَيْهِ فِي حَدِيثٍ.
159. நாங்கள் ஸரிஃப எனும் இடத்தை அடைந்ததும், எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. ``நீ தூய்மையாகும் வரை தவாஃப்பை (பைத்துல்லாஹ்வை வலம் வருவதைத்) தவிர்த்து ஹாஜிகள் செய்கின்ற மற்ற அனைத்தையும் செய்துகொள்!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார். (நீண்ட ஹதீஸின சுருக்கம்)
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்.
குறிப்பு: விரிவாக அறிவதற்கு பார்க்க புகாரீ ஹதீஸ் எண் 305.
160. وَعَنْ مُعَاذٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّهُ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا يَحِلُّ لِلرَّجُلِ مِنِ اِمْرَأَتِهِ، وَهِيَ حَائِضٌ؟ قَالَ: "مَا فَوْقَ الْإِزَارِ"} رَوَاهُ أَبُو دَاوُدَ وَضَعَّفَهُ.
160. ``தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது ஓர் ஆணுக்கு (இல்லற சுகத்தில்) எதை இஸ்லாம் அனுமதித்துள்ளது?'' என்று நான் கேட்டதற்கு, ``கீழாடைக்கு மேல் அனைத்தும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இமாம் அபூ தாவூத்(ரஹ்) இதனை பலவீனமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.