277. وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {عُرِضَتْ عَلَيَّ أُجُورُ أُمَّتِي، حَتَّى اَلْقَذَاةُ يُخْرِجُهَا الرَّجُلُ مِنَ الْمَسْجِدِ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَالتِّرْمِذِيُّ وَاسْتَغْرَبَهُ، وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ.
277. இறைஇல்லத்திலிருந்து குப்பை கூளத்தை ஒருவர் வெளியேற்றுவது உட்பட என் சமுதாயத்தாரின் நற்செயல்களுக்கான நற்கூலிகள் எனக்குக் காண்பிக்கப்பட்டன'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை கரீப் என்றும், இமாம் இப்னு குஸைமா(ரஹ்) ஆதாரப்பூர்வமானது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
278. وَعَنْ أَبِي قَتَادَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلَا يَجْلِسْ حَتَّى يُصَلِّيَ رَكْعَتَيْنِ} مُتَّفَقٌ عَلَيْهِ.بَابُ صِفَةِ الصَّلَاةِ
278. ``உங்களில் ஒருவர் இறைஇல்லத்தினுள் நுழைந்தால் இரண்டு ரக்அத்கள் தொழாமல் (அங்கு) அமர வேண்டாம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
279. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {إِذَا قُمْتُ إِلَى الصَّلَاةِ فَأَسْبِغِ الْوُضُوءَ، ثُمَّ اِسْتَقْبِلِ الْقِبْلَةَ، فَكَبِّرْ، ثُمَّ اِقْرَأْ مَا تَيَسَّرَ مَعَكَ مِنَ الْقُرْآنِ، ثُمَّ اِرْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا، ثُمَّ اِرْفَعْ حَتَّى تَعْتَدِلَ قَائِمًا، ثُمَّ اُسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ اِرْفَعْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا، ثُمَّ اُسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ اِرْفَعْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا، ثُمَّ اُسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ اِفْعَلْ ذَلِكَ فِي صَلَاتِكَ كُلِّهَا} أَخْرَجَهُ السَّبْعَةُ، وَاللَّفْظُ لِلْبُخَارِيِّ.وَلِابْنِ مَاجَهْ بِإِسْنَادِ مُسْلِمٍ: {حَتَّى تَطْمَئِنَّ قَائِمًا}
279. நீ தொழுகைக்குத் தயாரானால் `உளூ'வை முழுமைப்படுத்து! பின்னர், கிப்லாபை நோக்கி நின்று, `அல்லாஹு அக்பர்' எனக் தக்பீர் கூறிக் கொள்! பின்னர், குர்ஆனிலிருந்து உனக்குத் தெரிந்தததை ஓதிக் கொள்! பின்னர், நிதானமாக ருகூவு செய்கொள்! பின்னர், எழுந்து நேராக உனக்குத் திருப்தி ஏற்படும் வகையில் நிதானமாக நின்றுகொள்! பின்னர், நிதானமாக ¹ஸஜ்தாச் செய்து கொள்! பின்னர், தலையை உயர்த்தி நன்றாக அமர்ந்து கொள்! பின்னர், நிதானமாக ஸஜ்தாச் செய்து கொள்! பின்னர், இதேபோன்று உனக்குத் திருப்தி ஏற்படும் வரையில் தொழுகை முழுவதும் (ஒவ்வொரு ரக்அத்திலும்) செய்து கொள்! என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம், அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ, நஸயீ மற்றும் இப்னு மாஜா
உனக்குத் திருப்தி ஏற்படும் வகையில் ``நின்று கொள்!'' என்பது இப்னு மாஜாவில் முஸ்லிமின் அறிவிப்பாளர் தொடருடன் பதிவிடப்பட்டுள்ளது.
280. وَمِثْلُهُ فِي حَدِيثِ رِفَاعَةَ عِنْدَ أَحْمَدَ وَابْنِ حِبَّانَ.
280. ரிஃபாஆ இப்னு ராஃபிஃ இப்னி மாலிக் வாயிலாக மேற்கண்டவாறே அஹ்மத் மற்றும் இப்னு ஹிப்பானில் நிதானமாக நின்றுகொள் எனப் பதிவிடப்பட்டுள்ளது.
281. وَفِي لَفْظٍ لِأَحْمَدَ: {فَأَقِمْ صُلْبَكَ حَتَّى تَرْجِعَ الْعِظَامُ}
281. ``எலும்புகள் அதனிடத்தில் மீண்டு வரும் அளவிற்கு உன் முதுகை நேராக்கிக் கொள்!'' என அஹ்மதில் உள்ளது.
282. وَلِلنَّسَائِيِّ، وَأَبِي دَاوُدَ مِنْ حَدِيثِ رِفَاعَةَ بْنِ رَافِعٍ: {إِنَّهَا لَنْتَتِمُّ صَلَاةُ أَحَدِكُمْ حَتَّى يُسْبِغَ الْوُضُوءَ كَمَا أَمَرَهُ اللهُ، ثُمَّ يُكَبِّرَ اللهَ، وَيَحْمَدَهُ، وَيُثْنِيَ عَلَيْهِ}.وَفِيهَا{فَإِنْ كَانَ مَعَكَ قُرْآنٌ فَاقْرَأْ وَإِلَّا فَاحْمَدِ اللهَ، وَكَبِّرْهُ، وهلِّلْهُ}
282. ``அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிட்டபடி நன்றாக `உளூ'ச் செய்து, பின்னர் அல்லாஹு அக்பர் (அல்லாஹ் பெரியவன்) என (தக்பீர்) கூறி, அவனைப் புகழ்ந்து போற்றாத வரை உங்கள் தொழுகை முழுமையடையாது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என்று ரிஃபாஆ இப்னு ராஃபிவு வாயிலாக நஸயீ மற்றும் அபூ தாவூதில் பதிவிடப்பட்டுள்ளது.
மேலும், அவ்விரண்டு நூல்களிலும், ``உன்னுடன் குர்ஆன் இருந்தால் அதனை ஓதிக் கொள்! (இல்லையெனில்) ``அல்ஹம்து லில்லாஹ்'' `அல்லாஹு அக்பர்' மற்றும் ``லா இலாஹ இல்லல்லாஹ்'' எனக் கூறிக்கொள்!'' என்றும் உள்ளது.
குறிப்பு: 282 வதாக இடம் பெற்றுள்ள இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்து குர்ஆன் வசனங்களை ஓதாமல் இவ்வாறே தொடர்ந்து ``அல்ஹம்து லில்லாஹ்'' `அல்லாஹு அக்பர்' மற்றும் ``லா இலாஹ இல்லல்லாஹ்'' ஓதிவந்தால் போதுமானது எனக் கருதக் கூடாது. குர்ஆனைக் கற்றுக் கொள்ள மனனம் செய்ய விரைந்து செயல்பட்டு பின்னர் குர்ஆன் வசனங்களை ஓத ஆரம்பிக்க வேண்டும்.
283. وَلِأَبِي دَاوُدَ: {ثُمَّ اِقْرَأْ بِأُمِّ الْقُرْآنِ وَبِمَا شَاءَ اللهُ}
283. ``பின்னர், சூரத்துல் ஃபாத்திஹாவை ஒதிக் கொள்! பின்னர், இறைவனின் நாட்டப்படி (நீ விரும்பியதை) ஓதிக் கொள்'' என்றும் இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ தாவூதில் பதிவிடப்பட்டுள்ளது.
284. وَلِابْنِ حِبَّانَ: {ثُمَّ بِمَا شِئْتَ}
284. ``பின்னர், நீ விரும்பியதை (ஓதிக்கொள்!)'' என்று இப்னு ஹிப்பானில் பதிவிடப்பட்டுள்ளது.
285. وَعَنْ أَبِي حُمَيْدٍ اَلسَّاعِدِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَبَّرَ جَعَلَ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ، وَإِذَا رَكَعَ أَمْكَنَ يَدَيْهِ مِنْ رُكْبَتَيْهِ، ثُمَّ هَصَرَ ظَهْرِهِ، فَإِذَا رَفَعَ رَأْسَهُ اِسْتَوَى حَتَّى يَعُودَ كُلُّ فَقَارٍ مَكَانَهُ، فَإِذَا سَجَدَ وَضَعَ يَدَيْهِ غَيْرَ مُفْتَرِشٍ وَلَا قَابِضِهِمَا، وَاسْتَقْبَلَ بِأَطْرَافِ أَصَابِعِ رِجْلَيْهِ الْقِبْلَةَ، وَإِذَا جَلَسَ فِي الرَّكْعَتَيْنِ جَلَسَ عَلَى رِجْلِهِ الْيُسْرَى وَنَصَبَ الْيُمْنَى، وَإِذَا جَلَسَ فِي الرَّكْعَةِ الْأَخِيرَةِ قَدَّمَ رِجْلَهُ الْيُسْرَى وَنَصَبَ الْأُخْرَى، وَقَعَدَ عَلَى مَقْعَدَتِهِ} أَخْرَجَهُ الْبُخَارِيُّ.
285. `அல்லாஹு அக்பர்' என இறைத்தூதர்(ஸல்) கூறும்போது, தம் இரண்டு கைகளையும் தோள்கள் வரை உயர்த்தினார்கள். பின்னர் ருகூவு செய்தபோது, தம் இரண்டு கைகளையும் தம் இரண்டு கால்களின் முட்டியை பிடித்தார்கள். பின்னர், தம் முதுகை வளைத்தார்கள். பின்னர், தம் தலையை உயர்த்தும்போது, எலும்புகள் எல்லாம் அதனதன் இடத்திற்கு வரும் வரை நேராக நிற்பார்கள். பின்னர், ஸஜ்தா செய்யும்போது, (தரையில்) தம் கைகளை (விரல்களை) விரிக்காமலும், சேர்க்காமலும் வைப்பார்கள். தம் கால் விரல்களின் நுனிகளை கிப்லாவை நோக்கிதாய் இருக்குமாறு வைப்பார்கள். இரண்டாவது ரக்அத்தில் உட்காரும்போது இடக்காலில் அமர்ந்து வலக்காலை நிமிர்த்தி வைத்தார்கள். பின்னர், கடைசி ரக்அத்தில் அமர்ந்தபோது, இடக் காலை வலக் காலிற்கு கீழே நுழைத்து, வலக் காலை நிற்கவைத்து, தம் இருக்கையின் மீது அமர்ந்திருந்ததை நான் பார்த்தேன் என அபூ ஹுமைத் அஸ்ஸாயிதி(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
286. وَعَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَنَّهُ كَانَ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ قَالَ: "وَجَّهْتُ وَجْهِي لِلَّذِي فَطَّرَ السَّمَوَاتِ "... إِلَى قَوْلِهِ: "مِنَ الْمُسْلِمِينَ، اَللَّهُمَّ أَنْتَ الْمَلِكُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَنْتَ رَبِّي وَأَنَا عَبْدُكَ...} إِلَى آخِرِهِ. رَوَاهُ مُسْلِمٌ.وَفِي رِوَايَةٍ لَهُ: أَنَّ ذَلِكَ فِي صَلَاةِ اللَّيْلِ.
286. தொழுகைக்காக இறைத்தூதர்(ஸல்) நின்றால், ``வானங்களையும், பூமியையும் படைத்தவனை நோக்கி, சத்திய மார்க்கத்தை விரும்பியவனாக, என் முகத்தைத் திருப்பிவிட்டேன். மேலும், நான் முஸ்லிம்களில் ஒருவன். ``அல்லாஹ்வே! நீயே அரசன்! உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என் இரட்சகன்! நான் உன் அடிமை என்று இறுதி வரை ஓதுவார்கள் என அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் இது இரவுத் தொழுகையில் என உள்ளது.
குறிப்பு: என் தொழுகையும், என் இதர வணக்கங்களும், என் வாழ்வும், என் மரணமும் அகில உலகையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ் ஒருவனுக்கே உரியன. அவனுக்கு நிராக யாரும் இல்லை. இவ்வாறே நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.
எனக்கு நானே அநீதம் இழைத்துக் கொண்டேன்; என்னுடைய பாவங்களை நான் ஒப்புக் கொண்டேன். என்னுடைய பாவங்கள் அனைத்தையும் மன்னிதருள்வாயாக! ஏனெனில், உன்னைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் வேறு யாரும் இல்லை. நற்குணங்களின் பக்கம் எனக்கு வழிகாட்டுவாயாக! நற்குணங்களின் வழிகாட்டுபவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை.
287. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَبَّرَ لِلصَّلَاةِ سَكَتَ هُنَيَّةً، قَبْلِ أَنْ يَقْرَأَ، فَسَأَلْتُهُ، فَقَالَ: "أَقُولُ: اَللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ، اَللَّهُمَّ نقِّنِي مِنْ خَطَايَايَ كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ، اَللَّهُمَّ اِغْسِلْنِي مِنْ خَطَايَايَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
287. தொழுகைக்காக இறைத்தூதர்(ஸல்) தக்பீர் கூறினால், (குர்ஆன்) ஓதுவதற்கு முன்பு, சிறிது நேரம் அமைதியாய் இருப்பார்கள். நான் (அது குறித்து) அவர்களிடம் வினவினேன்.
`அல்லாஹ்வே கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையில் வெகு தூரத்தை நீ ஏற்படுத்தியது போல எனக்கும் என் தவறுகளுக்கும் இடையில் வெகு தூரத்தை ஏற்படுத்துவாயாக! அல்லாஹ்வே! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்துவது போல தவறுகளிலிருந்து என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! அல்லாஹ்வே! தண்ணீராலும், பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவுவாயாக!'' என ஓதுகிறேன்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
288. وَعَنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ كَانَ يَقُولُ: {سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، تَبَارَكَ اسْمُكَ، وَتَعَالَى جَدُّكَ، وَلَا إِلَهُ غَيْرُكَ} رَوَاهُ مُسْلِمٌ بِسَنَدٍ مُنْقَطِعٍ، وَالدَّارَقُطْنِيُّ مَوْصُولاً وَهُوَ مَوْقُوفٌ.
288. உன்னைப் புகழ்ந்தவனாக உன் தூய்மையை நான் எடுத்துரைக்கிறேன். உன் பெயர் பாக்கிய மிக்கது. உன் நிலை உயர்வு மிக்கது. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை'' என உமர்(ரலி) ஓதுவார்கள்.
இது முஸ்லிமில் `முன்கதிஃ' எனும் அறிவிப்புத் தொடர் துண்டிக்கப்பட்டதாகவும், தாரகுத்னீயில் `மவ்ஸூல்' மற்றும் `மவ்கூஃப்' எனும் தரத்திலும் பதிவிடப்பட்டுள்ளது.
289. وَنَحْوُهُ عَنْ أَبِي سَعِيدٍ مَرْفُوعًا عِنْدَ الْخَمْسَةِ.وَفِيهِ: وَكَانَ يَقُولُ بَعْدَ التَّكْبِيرِ: {أَعُوذُ بِاللهُ اَلسَّمِيعِ اَلْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ، مِنْ هَمْزِهِ، وَنَفْخِهِ، وَنَفْثِهِ}
289. நபி(ஸல்) குறித்து இதே (ஹதீஸ் எண் 288) போன்றதை, அபூ சயீத் அல் குத்ரீ(ரலி) அவர்களின் அறிவிப்பில், ``இறைத்தூதர்(ஸல்) தக்பீர் கூறியப் பின்பு ``அவூது பில்லாஹிஸ் ஸமீயில் அலீம் மினஷ் ஷைத்தானிர் ரஜீம் மின் ஹமஸிஹி வ நஃப்ஃகிஹி வ நஃபிதிஹி' - விரட்டப்பட்டவனான ஷைத்தானின் வெறித்தனத்திலிருந்தும், அவனுடைய பெருமையிலிருந்தும், அவனுடைய பரிகாச வசை பாடலிலிருந்தும் நன்கறிந்தோன் மற்றும் நன்கு செவியுறுவோன் அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்'' என்று இறைத்தூதர்(ஸல்) ஓதினார்கள் என உள்ளது.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ, இப்னு மாஜா மற்றும் நஸயீ
290. وَعَنْ عَائِشَةَ -رَضِيَ اللهُ عَنْهَا- قَالَتْ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَفْتِحُ الصَّلَاةَ بِالتَّكْبِيرِ، وَالْقِرَاءَةَ: بِـ (اَلْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ) وَكَانَ إِذَا رَكَعَ لَمْ يُشْخِصْ رَأْسَهُ، وَلَمْ يُصَوِّبْهُ، وَلَكِنْ بَيْنَ ذَلِكَ. وَكَانَ إِذَا رَفَعَ مِنَ الرُّكُوعِ لَمْ يَسْجُدْ حَتَّى يَسْتَوِيَ قَائِمًا. وَإِذَا رَفَعَ مِنَ السُّجُودِ لَمْ يَسْجُدْ حَتَّى يَسْتَوِيَ جَالِسًا. وَكَانَ يَقُولُ فِي كُلِّ رَكْعَتَيْنِ التَّحِيَّةَ. وَكَانَ يَفْرِشُ رِجْلَهُ الْيُسْرَى وَيَنْصِبُ الْيُمْنَى. وَكَانَ يَنْهَى عَنْ عُقْبَةِ الشَّيْطَانِ، وَيَنْهَى أَنْ يَفْتَرِشَ الرَّجُلُ زِرَاعَيْهِ اِفْتِرَاشَ السَّبُعِ. وَكَانَ يُخْتَمُ الصَّلَاةَ بِالتَّسْلِيمِ} أَخْرَجَهُ مُسْلِمٌ، وَلَهُ عِلَّةٌ.
290. இறைத்தூதர்(ஸல்) தொழுகையை `அல்லாஹு அக்பர்' எனக் கூறி ஆரம்பிப்பார்கள். `அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்' என்பதிலிருந்து குர்ஆன் ஓதத் தொடங்குவார்கள். அவர்கள் ருகூவு செய்யும்போது தம் தலையை உயர்த்தவும் மாட்டார்கள்; குனிந்து கொள்ளவும் மாட்டார்கள். நடுநிலையாக வைத்திருப்பார்கள். அவர்கள் ருகூஃவிலிருந்து எழுந்தால், நிமிர்ந்து நேராக நிற்காதவரை ஸஜ்தாச் செய்ய மாட்டார்கள். இன்னும், அவர்கள் ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தினால், சரியாக அமராதவரை (மறுபடியும்) ஸஜ்தாச் செய்ய மாட்டார்கள். இன்னும், அவர்கள் இரண்டு ரக்அத்களுக்கு ஒரு முறை `அத்தஹிய்யாத்' ஓதுவார்கள். இன்னும், அவர்கள் தம் இடக் காலைப் படுக்க வைத்தும்; வலக் காலை நிற்க வைத்தும் அமர்வார்கள். ஷைத்தானின் அமர்வு போல அமர்வதையும் மிருகங்களின் அமர்வு போல அமர்வதையும் தடை செய்தார்கள். மேலும், அவர்கள் ஸலாம் கூறித் தொழுகையை முடிப்பார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
இதில் மஃலூல் எனும் குறைபாடு உள்ளது.
291. وَعَنِ ابْنِ عُمَرَ -رَضِيَ اللهُ عَنْهُمَا- {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَرْفَعُ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ إِذَا اِفْتَتَحَ الصَّلَاةَ، وَإِذَا كَبَّرَ لِلرُّكُوعِ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
291. இறைத்தூதர்(ஸல்) (அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கூறி) தொழுகையை ஆரம்பம் செய்யும் போதும், ருகூஃவிற்காக `அல்லாஹு அக்பர்' என்று தக்பீர் கூறும் போதும், ருகூஃவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தம் இரண்டு கைகளையும் தம் தோள்களுக்கு நேராக உயர்த்துவார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
292. وَفِي حَدِيثِ أَبِي حُمَيْدٍ، عِنْدَ أَبِي دَاوُدَ: {يَرْفَعُ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ بِهِمَا مَنْكِبَيْهِ، ثُمَّ يُكَبِّرَ}
292. ``தம் இரண்டு கைகளையும் தம் தோள்களுக்குச் சமமாக உயர்த்துவார்கள். பின்னர் தக்பீர் கூறுவார்கள்'' என அபூ ஹுமைத் வாயிலாக அபூ தாவூதில் உள்ளது.
293. وَلِمُسْلِمٍ عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ رَضِيَ اللهُ عَنْهُ نَحْوُ حَدِيثِ اِبْنِ عُمَرَ، وَلَكِنْ قَالَ: {حَتَّى يُحَاذِيَ بِهِمَا فُرُوعَ أُذُنَيْهِ}.
293. முஸ்லிமில் மாலிக் இப்னு ஹுவைரிஸ் வாயிலாக இப்னு உமர்(ரலி) அவர்களின் ஹதீஸ் போன்றே உள்ளது. ஆனால், அதில் தம் இரண்டு காதுகளுக்குச் சமமாக உயர்த்துவார்கள் என்ற செய்தி உள்ளது.
294. وَعَنْ وَائِلِ بْنِ حُجْرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى يَدِهِ الْيُسْرَى عَلَى صَدْرِهِ} أَخْرَجَهُ اِبْنُ خُزَيْمَةَ.
294. நபி(ஸல்) அவர்களுடன் தொழுதேன். அப்போது அவர்கள் தம் நெஞ்சில் தம் இடக் கையை வைத்து, அதன் மீது தம் வலக் கையை வைத்தார்கள் என வாயில் இப்னு ஹுஜ்ர்(ரலி) அறிவித்தார்.
நூல்: இப்னு குஸைமா
295. وَعَنْ عُبَادَةَ بْنِ اَلصَّامِتِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِأُمِّ الْقُرْآنِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
295. ``உம்முல் குர்ஆன் (சூரத்துல் ஃபாத்திஹா) ஓதாதவருக்குத் தொழுகை இல்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உபாதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
296. وَفِي رِوَايَةٍ، لِابْنِ حِبَّانَ وَالدَّارَقُطْنِيِّ: {لَا تَجْزِي صَلَاةٌ لَا يُقْرَأُ فِيهَا بِفَاتِحَةِ الْكِتَابِ}
296. இப்னு ஹிப்பான் மற்றும் தாரகுத்னீயின் மற்றோர் அறிவிப்பில், `சூரத்துல் ஃபாத்திஹா ஓதாமல் தொழுகை முழுமையாவதில்லை' என உள்ளது.