295. وَعَنْ عُبَادَةَ بْنِ اَلصَّامِتِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِأُمِّ الْقُرْآنِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
295. ``உம்முல் குர்ஆன் (சூரத்துல் ஃபாத்திஹா) ஓதாதவருக்குத் தொழுகை இல்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உபாதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
296. وَفِي رِوَايَةٍ، لِابْنِ حِبَّانَ وَالدَّارَقُطْنِيِّ: {لَا تَجْزِي صَلَاةٌ لَا يُقْرَأُ فِيهَا بِفَاتِحَةِ الْكِتَابِ}
296. இப்னு ஹிப்பான் மற்றும் தாரகுத்னீயின் மற்றோர் அறிவிப்பில், `சூரத்துல் ஃபாத்திஹா ஓதாமல் தொழுகை முழுமையாவதில்லை' என உள்ளது.
297. وَفِي أُخْرَى، لِأَحْمَدَ وَأَبِي دَاوُدَ، وَالتِّرْمِذِيِّ، وَابْنِ حِبَّانَ: {لَعَلَّكُمْ تَقْرَءُونَ خَلْفَ إِمَامِكُمْ ؟ " قُلْنَا: نِعْمَ. قَالَ: "لَا تَفْعَلُوا إِلَّا بِفَاتِحَةِ الْكِتَابِ، فَإِنَّهُ لَا صَلَاةِ لِمَنْ لَمْ يَقْرَأْ بِهَا}
297. மற்றோர் அறிவிப்பின் படி, அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ, இப்னு ஹிப்பான் ஆகிய நூல்களில், ``நீங்கள் இமாமுக்குப் பின்னால் ஓதுகிறீர்கள் போலும்'' என இறைத்தூதர்(ஸல்) கேட்டார்கள்.
``ஆமாம்'' என நாங்கள் பதிலளித்தோம்.
``நீங்கள் சூரத்துல் ஃபாத்திஹாவைத் தவிர வேறு எதையும் ஓதவேண்டாம். ஏனெனில், சூரத்துல் ஃபாத்திஹா ஓதாதவருக்குத் தொழுகை இல்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உள்ளது.
298. وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ كَانُوا يَفْتَتِحُونَ الصَّلَاةِ بِـ (اَلْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ )} مُتَّفَقٌ عَلَيْهِ.
298. நபி(ஸல்) அவர்களும், அபூ பக்ர்(ரலி), இன்னும் உமர்(ரலி) ஆகியோரும், ``அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்'' ஓதித்தான் தொழுகையைத் தொடங்குவார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
299. زَادَ مُسْلِمٌ: {لَا يَذْكُرُونَ: (بِسْمِ اللهُ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي أَوَّلِ قِرَاءَةٍ وَلَا فِي آخِرِهَا}.
299. அவர்கள் அதன் (சூரத்துல ஃபாத்திஹாவின்) ஆரம்பத்திலும், இறுதியிலும், பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ஓதியதில்லை என்னும் வாசகம் முஸ்லிமில் அதிகப்படியாக உள்ளது.
300. وَفِي رِوَايَةٍ لِأَحْمَدَ، وَالنَّسَائِيِّ وَابْنِ خُزَيْمَةَ: {لَا يَجْهَرُونَ ‏بِبِسْمِ اللهُ الرَّحْمَنِ الرَّحِيمِ}
300. மற்றோர் அறிவிப்பின்படி, ``அவர்கள் பிஸ்மில்லாஹ்வை சப்தமிட்டு ஓதமாட்டார்கள்'' என அஹ்மத், நஸயீ மற்றும் இப்னு குஸைமாவில் பதிவிடப்பட்டுள்ளது.
301. وَفِي أُخْرَى لِابْنِ خُزَيْمَةَ: {كَانُوا يُسِرُّونَ}.وَعَلَى هَذَا يُحْمَلُ النَّفْيُ فِي رِوَايَةِ مُسْلِمٍ، خِلَافًا لِمَنْ أَعَلَّهَا.‏‏
301. மற்றோர் அறிவிப்பின் படி அவர்கள் (பிஸ்மில்லாஹ்) மெதுவாக ஓதுவார்கள் என இப்னு குஸைமாவில் உள்ளது.
முஸ்லிமின் அறிவிப்பில், (ஹதீஸ் எண் 299) ஓதமாட்டார்கள் என்றால், சப்தமாக ஓதமாட்டார்கள் எனக் கூறலாம். ஏனெனில், சிலர் அந்த ஹதீஸை குறையுள்ளது எனக் கூறுகின்றனர். இது தவறாகும்.
302. وَعَنْ نُعَيْمٍ اَلْمُجَمِّرِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {صَلَّيْتُ وَرَاءَ أَبِي هُرَيْرَةَ فَقَرَأَ: (بِسْمِ اللهُ الرَّحْمَنِ الرَّحِيمِ). ثُمَّ قَرَأَ بِأُمِّ الْقُرْآنِ، حَتَّى إِذَا بَلَغَ: (وَلَا الضَّالِّينَ)، قَالَ: "آمِينَ" وَيَقُولُ كُلَّمَا سَجَدَ، وَإِذَا قَامَ مِنَ الْجُلُوسِ: اللهُ أَكْبَرُ. ثُمَّ يَقُولُ إِذَا سَلَّمَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لَأَشْبَهُكُمْ صَلَاةً بِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ} رَوَاهُ النَّسَائِيُّ وَابْنُ خُزَيْمَةَ.
302. நான் அபூ ஹுரைரா(ரலி) அவர்களுக்குப் பின்னால் தொழுதேன். அப்போது, அவர்கள் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ஓதினார்கள். பின்னர், சூரத்துல் ஃபாத்திஹா ஓதினார்கள். `வலள்ளால்லீன்' எனும் வசனத்தை அடைந்ததும் `ஆமீன்' எனக் கூறினார்கள். அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது, அமர்விலிருந்து எழும்போது `அல்லாஹு அக்பர்' எனக் கூறினார்கள். பின்னர், ஸலாம் கூறிவிட்டு, ``என் உயிரைத் தன் கையில் கொண்டவன் மீது ஆணையாக! உங்களில் நபி(ஸல்) அவர்களின் தொழுகைக்கு மிகவும் ஒப்பான முறையில் தொழுபவன் நானேயாவேன் என்று கூறினார்கள் என நுஅய்ம் அல் முஜ்மிர் அறிவித்தார்.
நூல்கள்: நஸயீ, இப்னு குஸைமா
303. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا قَرَأْتُمُ الْفَاتِحَةِ فَاقْرَءُوا: (بِسْمِ اللهُ الرَّحْمَنِ الرَّحِيمِ )، فَإِنَّهَا إِحْدَى آيَاتِهَا} رَوَاهُ الدَّارَقُطْنِيُّ، وَصَوَّبَ وَقْفَهُ.
303. ``நீங்கள் சூரத்துல் ஃபாத்திஹா ஓதினால், பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்! ஓதிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அதுவும் அதன் ஒரு வசனமாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: தாரகுத்னீ
இது அபூ ஹுரைரா(ரலி) அவர்களின் சொல் என்பதே சரியானது என இமாம் தாரகுத்னீ(ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.
304. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا فَرَغَ مِنْ قِرَاءَةِ أُمِّ الْقُرْآنِ رَفَعَ صَوْتَهُ وَقَالَ: "آمِينَ".} رَوَاهُ الدَّارَقُطْنِيُّ وَحَسَّنَهُ، وَالْحَاكِمُ وَصَحَّحَهُ.
304. இறைத்தூதர்(ஸல்) சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடித்தவுடன் தம் சப்தத்தை உயர்த்தி `ஆமீன்' என்று கூறுவார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இமாம் தாரகுத்னீ(ரஹ்) இதனை `ஹஸன்' எனக் குறிப்பிட்டுள்ளார். இமாம் ஹாகிம் ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
305. وَلِأَبِي دَاوُدَ وَالتِّرْمِذِيِّ مِنْ حَدِيثِ وَائِلِ بْنِ حُجْرٍ نَحْوُهُ.
305. அபூ தாவூத் மற்றும் திர்மிதீயில் வாயில் இப்னு ஹுஜ்ர்(ரலி) வாயிலாக இதே போன்ற ஹதீஸ் உள்ளது.
306. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي أَوْفَى -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: {جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنِّي لَا أَسْتَطِيعُ أَنْ آخُذَ مِنَ الْقُرْآنِ شَيْئًا، فَعَلِّمْنِي مَا يُجْزِئُنِيٌ مِنْهُ . قَالَ: "سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللهُ وَاللهُ أَكْبَرُ، وَلَا حَوْلٌ وَلَا قُوَّةً إِلَّا بِاللهُ الْعَلِيِّ الْعَظِيمِ...} الْحَدِيثَ. رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ، وَالدَّارَقُطْنِيُّ، وَالْحَاكِمُ.
306. நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ``நான் குர்ஆனிலிருந்து எதையும் எடுக்க (ஓத) முடியாத நிலையில் உள்ளேன். (எனவே) அதனை சரிக்கட்டும் வகையில் எனக்கு ஏதாவது கற்றுத் தருவீராக!'' எனக் கேட்டார்.
``சுப்ஹானல்லாஹ் - அல்லாஹ் தூயவன்'' என்றும், ``அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்'' என்றும், ``லா இலாஹ இல்லல்லாஹ் - அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை'' என்றும் ``அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன்'' என்றும், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யுல் அழீம் ``உயர்ந்தவனும் மகத்துவ மிக்கவன் அல்லாஹ்வைக் கொண்டே தவிர தீமையிலிருந்து தப்பும் சக்தியும், நன்மையடைவதற்கான ஆற்றலும் இல்லை'' என்றும் கூறிக்கொள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத் மற்றும் நஸயீ
இதனை இமாம் இப்னு ஹிப்பான், தாரகுத்னீ மற்றும் ஹாகிம்(ரஹ்) ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிடுகின்றனர்.
307. وَعَنْ أَبِي قَتَادَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِنَا، فَيَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ - فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ - بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَتَيْنِ، وَيُسْمِعُنَا اَلْآيَةَ أَحْيَانًا، وَيُطَوِّلُ الرَّكْعَةَ الْأُولَى، وَيَقْرَأُ فِي الْأُخْرَيَيْنِ بِفَاتِحَةِ الْكِتَابِ.} مُتَّفَقٌ عَلَيْهِ.
307. இறைத்தூதர்(ஸல்) எங்களுக்குத் தொழுகை நடத்துவார்கள். லுஹர் மற்றும் அஸ் ர் தொழுகையில் முதல் இரண்டு ரக்அத்களில் `சூரத்துல் ஃபாத்திஹாவையும், வேறு இரண்டு சூராக்களையும் ஓதுவார்கள். சில சமயங்களில் சில வசனங்கள் மட்டும் ஓதுவார்கள். முதல் ரக்அத்தை நீட்டியும் பிந்திய இரண்டு ரக்அத்துக்களில் `சூரத்துல் ஃபாத்திஹா' மட்டும் ஓதுவார்கள் என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
308. وَعَنْ أَبِي سَعِيدٍ اَلْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كُنَّا نَحْزُرُ قِيَامَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الظُّهْرِ وَالْعَصْرِ، فَحَزَرْنَا قِيَامَهُ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ مِنَ الظُّهْرِ قَدْرَ: (الم تَنْزِيلُ) اَلسَّجْدَةِ. وَفِي الْأُخْرَيَيْنِ قَدْرَ النِّصْفِ مِنْ ذَلِكَ. وَفِي الْأُولَيَيْنِ مِنَ الْعَصْرِ عَلَى قَدْرِ الْأُخْرَيَيْنِ مِنَ الظُّهْرِ، وَالْأُخْرَيَيْنِ مِنَ الظُّهْرِ} رَوَاهُ مُسْلِمٌ.
308. நாங்கள் லுஹா மற்றும் அஸ் ர் தொழுகைகளில் நபி(ஸல்) அவர்களின் தொழுகையை (நேரத்தை) கணித்திருக்கிறோம். அவர்கள் லுஹர் தொழுகையின் முந்திய இரண்டு ரக்அத்களில் `அலிஃப் லாம் மீம் தன்ஸீல்' ஸஜ்தா சூரா ஓதுமளவு நேரம் இருக்கும். பிந்திய இரண்டு ரக்அத்களில் அதில் பாதி (நேரம்) இருக்கும் என்பது எங்களின் கணிப்பாகும். பின்னர், அஸ் ர் தொழுகையின் முந்திய இரண்டு ரக்அத்கள், லஹர் தொழுகையின் பிந்திய ரக்அத்களின் (நேர) அளவும் அஸரின் பிந்திய இரண்டு ரக்அத்கள் அஸரின் முந்திய இரண்டு ரக்அத்களின் பாதி (நேர) அளவும் இருக்கும் என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
309. وَعَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ قَالَ: {كَانَ فُلَانٍ يُطِيلُ الْأُولَيَيْنِ مِنَ الظُّهْرِ، وَيُخَفِّفُ الْعَصْرَ، وَيَقْرَأُ فِي الْمَغْرِبِ بِقِصَارِ الْمُفَصَّلِ وَفِي الْعِشَاءِ بِوَسَطِهِ وَفِي الصُّبْحِ بِطُولِهِ. فَقَالَ أَبُو هُرَيْرَةَ: "مَا صَلَّيْتُ وَرَاءِ أَحَدٍ أَشْبَهَ صَلَاةِ بِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ هَذَا}. أَخْرَجَهُ النَّسَائِيُّ بِإِسْنَادٍ صَحِيحٍ.
309. ``ஒருவர் லுஹரின் முதல் இரண்டு ரக்அத்களை நீட்டியும், அஸரைக் குறைத்தும், மக்ரிபில் சிறிய சூராக்களையும், இஷாவில் நடுத்தரமான சூராக்களையும், சுப்ஹில் நீண்ட சூராக்களையும் ஒதுகிறார்'' என்று நான் கூறியதற்கு, ``இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தொழுகைக்கு இதனைவிட அதிகமாக ஒப்பான ஒரு தொழுகையை வேறவர் பின்னாலும் நான் தொழுததில்லை'' என்று அபூ ஹுரைரா(ரலி) கூறினார்கள் என சுலைமான் இப்னு யஸார்(ரஹ்) அறிவித்தார்.
இமாம் நஸயீ(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமான அறிவிபபாளர் தொடரில் பதிவிட்டுள்ளார்.
310. وَعَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {سَمِعْتَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِالطُّورِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
310. இறைத்தூதர்(ஸல்) மக்ரிப் தொழுகையில் `சூரத்துத் தூர்' ஓத நான் செவியுற்றுள்ளேன் என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
311. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي صَلَاةِ الْفَجْرِ يَوْمَ الْجُمْعَةِ: (الم تَنْزِيلُ ) اَلسَّجْدَةَ، و (هَلْ أَتَى عَلَى الْإِنْسَانِ)} مُتَّفَقٌ عَلَيْهِ.
311. இறைத்தூதர்(ஸல்) வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகையில் `அலிஃப் லாம் மீம் தன்ஸீல்' ஸஜ்தா சூராவும் `ஹல் அதா அலல் இன்ஸானி' சூராவும் ஓதுவார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
312. وَلِلطَّبَرَانِيِّ مِنْ حَدِيثِ اِبْنِ مَسْعُودٍ: {يُدِيمُ ذَلِكَ}
312. இப்னு மஸ்வூத் வாயிலாக தப்ரானீயில் இடம் பெறுள்ள ஹதீஸில், ``இறைத்தூதர்(ஸல்) தொடர்ந்து அவ்வாறே செய்து வந்தார்கள்'' என உள்ளது.
313. وَعَنْ حُذَيْفَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَا مَرَّتْ بِهِ آيَةُ رَحْمَةٍ إِلَّا وَقَفَ عِنْدَهَا يَسْأَلُ، وَلَا آيَةُ عَذَابٍ إِلَّا تَعَوَّذَ مِنْهَا} أَخْرَجَهُ الْخَمْسَةُ، وَحَسَّنَهُ التِّرْمِذِيُّ
313. நான் நபி(ஸல்) அவர்களுடன் தொழுதேன். இறைக்கருணை குறித்த வசனங்கள் ஓதப்படும் இடத்தை அவர்கள் கடந்து சென்றால் அங்கு நிறுத்தி துஆச் செய்வார்கள். மேலும், இறைத்தண்டனைக் குறித்த வசனங்கள் ஓதப்படும் இடத்தை அவர்கள் கடந்து சென்றால், (அதிலிருந்து அல்லாஹ்விடம்) அவர்கள் பாதுகாப்புக் கோருவார்கள் என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை `ஹஸன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
314. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَلَا وَإِنِّي نُهِيتُ أَنْ أَقْرَأَ الْقُرْآنَ رَاكِعًا أَوْ سَاجِدًا، فَأَمَّا اَلرُّكُوعُ فَعَظِّمُوا فِيهِ الرَّبَّ، وَأَمَّا السُّجُودُ فَاجْتَهِدُوا فِي الدُّعَاءِ، فَقَمِنٌ أَنْ يُسْتَجَابَ لَكُمْ} رَوَاهُ مُسْلِمٌ.
314. ``அறிந்து கொள்ளுங்கள்! நான் ருகூஃ மற்றும் ஸுஜூதுகளில் குர்ஆன் ஓத வேண்டாம் எனத் தடுக்கப்பட்டுள்ளேன். நீங்கள் ருகூஃவில் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள்! இன்னும் ஸஜ்தாவில், மன்றாடி துஆ கேளுங்கள். அது (இறைவனால்) ஏற்றுக் கொள்ளத் தக்கதாய் இருக்கும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்