311. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي صَلَاةِ الْفَجْرِ يَوْمَ الْجُمْعَةِ: (الم تَنْزِيلُ ) اَلسَّجْدَةَ، و (هَلْ أَتَى عَلَى الْإِنْسَانِ)} مُتَّفَقٌ عَلَيْهِ.
311. இறைத்தூதர்(ஸல்) வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகையில் `அலிஃப் லாம் மீம் தன்ஸீல்' ஸஜ்தா சூராவும் `ஹல் அதா அலல் இன்ஸானி' சூராவும் ஓதுவார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
312. وَلِلطَّبَرَانِيِّ مِنْ حَدِيثِ اِبْنِ مَسْعُودٍ: {يُدِيمُ ذَلِكَ}
312. இப்னு மஸ்வூத் வாயிலாக தப்ரானீயில் இடம் பெறுள்ள ஹதீஸில், ``இறைத்தூதர்(ஸல்) தொடர்ந்து அவ்வாறே செய்து வந்தார்கள்'' என உள்ளது.
313. وَعَنْ حُذَيْفَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَا مَرَّتْ بِهِ آيَةُ رَحْمَةٍ إِلَّا وَقَفَ عِنْدَهَا يَسْأَلُ، وَلَا آيَةُ عَذَابٍ إِلَّا تَعَوَّذَ مِنْهَا} أَخْرَجَهُ الْخَمْسَةُ، وَحَسَّنَهُ التِّرْمِذِيُّ
313. நான் நபி(ஸல்) அவர்களுடன் தொழுதேன். இறைக்கருணை குறித்த வசனங்கள் ஓதப்படும் இடத்தை அவர்கள் கடந்து சென்றால் அங்கு நிறுத்தி துஆச் செய்வார்கள். மேலும், இறைத்தண்டனைக் குறித்த வசனங்கள் ஓதப்படும் இடத்தை அவர்கள் கடந்து சென்றால், (அதிலிருந்து அல்லாஹ்விடம்) அவர்கள் பாதுகாப்புக் கோருவார்கள் என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை `ஹஸன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
314. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَلَا وَإِنِّي نُهِيتُ أَنْ أَقْرَأَ الْقُرْآنَ رَاكِعًا أَوْ سَاجِدًا، فَأَمَّا اَلرُّكُوعُ فَعَظِّمُوا فِيهِ الرَّبَّ، وَأَمَّا السُّجُودُ فَاجْتَهِدُوا فِي الدُّعَاءِ، فَقَمِنٌ أَنْ يُسْتَجَابَ لَكُمْ} رَوَاهُ مُسْلِمٌ.
314. ``அறிந்து கொள்ளுங்கள்! நான் ருகூஃ மற்றும் ஸுஜூதுகளில் குர்ஆன் ஓத வேண்டாம் எனத் தடுக்கப்பட்டுள்ளேன். நீங்கள் ருகூஃவில் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள்! இன்னும் ஸஜ்தாவில், மன்றாடி துஆ கேளுங்கள். அது (இறைவனால்) ஏற்றுக் கொள்ளத் தக்கதாய் இருக்கும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
315. وَعَنْ عَائِشَةَ -رَضِيَ اللهُ عَنْهَا- قَالَتْ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: فِي رُكُوعِهِ وَسُجُودِهِ: "سُبْحَانَكَ اللَّهُمَّ (رَبَّنَا) وَبِحَمْدِكَ، اَللَّهُمَّ اغْفِرْ لِي} مُتَّفَقٌ عَلَيْهِ.
315. இறைத்தூதர்(ஸல்) தம் ருகூஃவிலும், தம் ஸுஜூதிலும் ``எங்கள் இரட்சகனே! உன்னைப் புகழ்ந்த நிலையில் உன் தூய்மையை நான் எடுத்துரைக்கிறேன். இறைவா! எனக்கு மன்னிப்பை அருள்வாயாக!'' என்று பிரர்த்திப்பவர்களாக இருந்தார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
316. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ يُكَبِّرُ حِينَ يَقُومُ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْكَعُ، ثُمَّ يَقُولُ: "سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ" حِينَ يَرْفَعُ صُلْبَهُ مِنَ الرُّكُوعِ، ثُمَّ يَقُولُ وَهُوَ قَائِمٌ: "رَبَّنَا وَلَكَ الْحَمْدُ" ثُمَّ يُكَبِّرُ حِينَ يَهْوِي سَاجِدًا، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْفَعُ رَأْسَهُ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَسْجُدُثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْفَعُ، ثُمَّ يَفْعَلُ ذَلِكَ فِي الصَّلَاةِ كُلِّهَا، وَيُكَبِّرُ حِينَ يَقُومُ مِنْ اِثْنَتَيْنِ بَعْدَ الْجُلُوسِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
316. தொழுகைக்காக இறைத்தூதர்(ஸல்) நிற்கும்போது, `அல்லாஹு அக்பர்' எனக் கூறுபவர்களாய் இருந்தார்கள். பின்னர் ருகூஃ செய்யும்போது `அல்லாஹு அக்பர்' எனக் கூறுவார்கள். பின்னர், தம் முதுகை ருகூஃவிலிருந்து உயர்த்தும்போது, `ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா' எனக் கூறுவார்கள். பின்னர், அவர்கள் நின்ற நிலையில், `ரப்பனாவ லகல் ஹம்து' எனக் கூறுவார்கள். பின்னர், ஸஜ்தாச் செய்யும்போது `அல்லாஹு அக்பர்' எனக் கூறுவார்கள், பின்னர், (ஸஜ்தாவிலிருந்து) தன் தலையை உயர்த்தும்போது `அல்லாஹு அக்பர்' எனக் கூறுவார்கள், பின்னர், தொழுகை முழுவதும் இவ்வாறே செய்வார்கள். மேலும், இரண்டு ரக்அத்களுக்குப் பின்னர் (தஷஹ்ஹுதில்) அமர்ந்து எழும் போதும், `அல்லாஹு அக்பர்' என்று கூறுவார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
317. وَعَنْ أَبِي سَعِيدٍ اَلْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ قَالَ: " اَللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَوَاتِ وَمِلْءَ الْأَرْضِ، وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ، أَهْلَ الثَّنَاءِ وَالْمَجْدِ، أَحَقُّ مَا قَالَ الْعَبْدُ - وَكُلُّنَا لَكَ عَبْدٌ - اَللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ} رَوَاهُ مُسْلِمٌ.
317. இறைத்தூதர்(ஸல்) ருகூஃவிலிருந்து தம் தலையை உயர்த்தியதும், (அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து...) இறைவா! வானங்கள் நிறைய, பூமி நிறைய, இன்னும் எதை நீ நாடுகிறாயோ, அது நிறைய உனக்கே புகழனைத்தும்! நீயே உயர்வு மற்றும் புகழுக்குரியவன்! இன்னும் நாங்கள் ஒவ்வொருவரும் உனக்கு அடிமை எனக் கூறுவதே அடிமைகளுக்குப் பொருத்தமானது. எங்கள் இறைவா! நீ எதைக் கொடுக்கிறாயோ அதனை யாரும் தடுக்க முடியாது. நீ எதைத் தடுக்கிறாயோ அதனை யாரும் கொடுக்க முடியாது. இன்னும் நீயே தன்னிறைவானவன். உன்னைத் தவிர வேறு யாராலும் எவிவிதப் பலனும் அளிக்க முடியாது.'' என்று கூறுவார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
318. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ: عَلَى الْجَبْهَةِ - وَأَشَارَ بِيَدِهِ إِلَى أَنْفِهِ - وَالْيَدَيْنِ، وَالرُّكْبَتَيْنِ، وَأَطْرَافِ الْقَدَمَيْنِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
318. ``ஏழு எலும்புகளின் மீது ஸஜ்தா செய்யுமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறிவிட்டு, நெற்றியின் மீது தம் மூக்கு, தம் கைகள், தம் முட்டிக் கால்கள், தம் கால்கள் (கால் விரல்கள்) ஆகியவற்றை தம் கையால் சுட்டிக் காண்பித்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
319. وَعَنِ ابْنِ بُحَيْنَةَ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا صَلَّى فَرَّجَ بَيْنَ يَدَيْهِ، حَتَّى يَبْدُوَ بَيَاضُ إِبِطَيْهِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
319. இறைத்தூதர்(ஸல்) ஸஜ்தாச் செய்யும்போது, தம் ஆக்குள்களின் வெண்மை தெரியும் அளவிற்கு தம் கைகளுக்கு இடையில் இடைவெளி விடுவார்கள் என இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார்
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
320. وَعَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا سَجَدْتَ فَضَعْ كَفَّيْكَ، وَارْفَعْ مِرْفَقَيْكَ} رَوَاهُ مُسْلِمٌ.
320. ``நீ ஸஜ்தாச் செய்தால் உன் உள்ளங்கைகளைத் தரையில் வைத்து முழங்கைகளை (தரையில்படாமல்) உயர்த்திக் கொள்!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என பரா இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
321. وَعَنْ وَائِلِ بْنِ حُجْرٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَكَعَ فَرَّجَ بَيْنَ أَصَابِعِهِ، وَإِذَا سَجَدَ ضَمَّ أَصَابِعَهُ} رَوَاهُ الْحَاكِمُ.
321. இறைத்தூதர்(ஸல்) ருகூஃ செய்யும்போது தம் விரல்களை விரித்தும், ஸஜ்தாச் செய்யும்போது தம் விரல்களை இணைத்தும் வைத்திருப்பார்கள் என வாயில் இப்னு ஹுஜ்ர்(ரலி) அறிவித்தார்.
நூல்: ஹாகிம்
322. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مُتَرَبِّعًا} رَوَاهُ النَّسَائِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ.
322. இறைத்தூதர்(ஸல்) சம்மணமிட்டுத் தொழுததை நான் பார்த்துள்ளேன் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: நஸயீ
இமாம் இப்னு குஸைமா(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிடுகிறார்.
323. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ: {اَللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَاهْدِنِي، وَعَافِنِي، وَارْزُقْنِي} رَوَاهُ الْأَرْبَعَةُ إِلَّا النَّسَائِيُّ، وَاللَّفْظُ لِأَبِي دَاوُدَ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
323. இறைத்தூதர்(ஸல்) இரண்டு ஸஜ்தாவிற்கிடையே ``இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்குக் கருணை காட்டுவாயாக! எனக்கு நேர்வழி காட்டுவாயாக! எனக்கு (நோயிலிந்து) நிவாரணமளிப்பாயாக! எனக்கு வாழ்வாதாரங்களை நல்குவாயாக!'' என்று கூறுவார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், திர்மிதீ மற்றும் இப்னுமாஜா
இங்கு அபூ தாவூதின் வாசகம் இடம் பெற்றுள்ளது. இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
324. وَعَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي، فَإِذَا كَانَ فِي وِتْرٍ مِنْ صَلَاتِهِ لَمْ يَنْهَضْ حَتَّى يَسْتَوِيَ قَاعِدًا} رَوَاهُ الْبُخَارِيُّ.
324. இறைத்தூதர்(ஸல்) தொழுததை நான் பார்த்துள்ளேன். அவர்கள் ஒற்றைப் படை ரக்அத்திலிருந்து (அடுத்த ரக்அத்துக்காக) எழும்போது சரியாக அமராதவரை எழமாட்டார்கள் என மாலிக் இப்னு அல் ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
325. وَعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَنَتَ شَهْرًا بَعْدَ الرُّكُوعِ، يَدْعُو عَلَى أَحْيَاءٍ مِنْ أَحْيَاءِ الْعَرَبِ، ثُمَّ تَرَكَهُ} مُتَّفَقٌ عَلَيْهِ.
325. தொழுகையில் ருகூஃவிற்குப் பின்பு (எழுந்து நிற்கையில்) சில அரபு குலத்தாரைச் சபித்தபடி இரண்டு மாதகாலம் இறைத்தூதர்(ஸல்) குனூத் ஓதினார்கள் பின்னர் அதை விட்டுவிட்டார்கள் என அனஸ் (ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ, முஸ்லிம்
326. وَلِأَحْمَدَ وَالدَّارَقُطْنِيِّ نَحْوُهُ مِنْ وَجْهٍ آخَرَ، وَزَادَ: {فَأَمَّا فِي الصُّبْحِ فَلَمْ يَزَلْ يَقْنُتُ حَتَّى فَارَقَ الدُّنْيَا}.
326. அஹ்மத் மற்றும் தாரகுத்னீயில் இவ்வாறே மற்றோர் அறிவிப்பு உள்ளது. அதில், இது நடந்தது குப்ஹுத் தொழுகையில் என்றும், இறைத்தூதர்(ஸல்) மரணிக்கும் வரை குனூத் ஓதினார்கள் என்றும் உள்ளது.
327. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {كَانَ لَا يَقْنُتُ إِلَّا إِذَا دَعَا لِقَوْمٍ، أَوْ دَعَا عَلَى قَوْمٍ} صَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ.
327. ஒரு கூட்டத்தாருக்குச் சாதகமாக துஆச் செய்தாலோ அல்லது ஒரு கூட்டத்தாருக்குப் பாதகமாக துஆ செய்தாலோ தவிர இறைத்ரததர்(ஸல்) குனூத் ஓதமாட்டார்கள் என அனஸ் (ரலி) அறிவித்தார்.
நூல்: இப்னு குஸைமா
இமாம் இப்னு குiஸைமா(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
328. وَعَنْ سَعْدِ بْنِ طَارِقِ الْأَشْجَعِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {قُلْتُ لِأَبِي: يَا أَبَتِ ! إِنَّكَ قَدْ صَلَّيْتُ خَلْفَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ، وَعُمَرُ، وَعُثْمَانُ، وَعَلَيَّ، أَفَكَانُوا يَقْنُتُونَ فِي الْفَجْرِ؟ قَالَ: أَيْ بُنَيَّ، مُحْدَثٌ} رَوَاهُ الْخَمْسَةُ، إِلَّا أَبَا دَاوُدَ.
328. சஅத் இப்னு தாரிக் தம் தந்தையிடம் ``என் தந்தையே! தாங்கள், இறைத்தூதர்(ஸல்) அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) உஸ்மான்(ரலி), அலீ(ரலி) ஆகியோரின் பின்னால் (நின்று) தொழுதுள்ளீர்கள். அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் குனூத் ஓதினார்களா?'' என்று கேட்டதற்கு, ``என் மகனே! இது (மார்க்கத்தில்) புதிதாக உண்டாக்கப்பட்ட செயல்'' எனப் பதில் கூறினார் என சஅத் இப்னு தாரிக்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், திர்மிதீ, நஸயீ மற்றும் இப்னு மாஜா.
329. وَعَنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ -رَضِيَ اللهُ عَنْهُمَا-؛ قَالَ: {عَلَّمَنِي رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَلِمَاتٍ أَقُولُهُنَّ فِي قُنُوتِ اَلْوِتْرِ: " اَللَّهُمَّ اِهْدِنِي فِيمَنْ هَدَيْتَ، وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ، وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ، فَإِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ، إِنَّهُ لَا يَزِلُّ مَنْ وَّالَيْتَ، تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ} رَوَاهُ الْخَمْسَةُ.وَزَادَ الطَّبَرَانِيُّ وَالْبَيْهَقِيُّ: {وَلَا يَعِزُّ مَنْ عَادَيْتَ}.زَادَ النَّسَائِيُّ مِنْ وَجْهٍ آخَرَ فِي آخِرِهِ: {وَصَلَّى اللهُ عَلَى النَّبِيِّ}
329. நான் வித்ருடைய குனூத்தில் ஓதுவதற்காக, ``இறைவா! நீ நேர்வழி காட்டியவர்களுடன் சேர்த்து எனக்கும் நேர்வழி காட்டுவாயாக! நீ ஆரோக்கியம் அளித்தவர்களுடன் சேர்த்து எனக்கும் ஆரோக்கியம் அளிப்பாயாக! நீ பொறுப்பேற்றுக் கொண்டவர்களுடன் சேர்த்து எனக்கும் பொறுப்பேற்பாயாக! நீ எனக்கு அளித்திருப்பவற்றில் அபிவிருத்தியை வழங்குவாயாக! என் விஷயத்தில் நீ விதித்துள்ள தீங்குகளிலிருந்து என்னைக் காப்பாயாக! எதையும் விதியாக்குபவன் நீயே! உனக்கு யாரும் விதியை ஏற்படுத்த முடியாது. நீ யாருக்குப் பொறுப்பேற்றுக் கொண்டாயோ அவர் இழிவடையமாட்டார். எங்கள் இரட்சகனே! நீ வளம் பொருந்தியவன்; உயர்வு மிக்கவன்'' என்ற வாக்கியங்களை இறைத்தூதர்(ஸல்) எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள் என `ஹஸன்' இப்னு அலீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
தப்ரானீ மற்றும் பைஹகீயில் மேற்கண்டதைவிட ``நீ யாரை இழிவு படுத்தி விட்டாயோ! அவரை கண்ணியப்படுத்துபவர் யாரும் இல்லை!'' என்பது அதிகமாக உள்ளது.
நஸயீயின் மற்றோர் அறிவிப்பில், ``அல்லாஹு தஆலா இறைத்தூதர்(ஸல்) மீது சாந்தி ஏற்படுத்துவானாக!'' என்பது அதிகமாக உள்ளது.
330. وَلِلْبَيْهَقِيِّ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا دُعَاءً نَدْعُو بِهِ فِي الْقُنُوتِ مِنْ صَلَاةِ الصُّبْحِ} وَفِي سَنَدِهِ ضَعْفٌ.
330. இறைத்தூதர்(ஸல்) எங்களுக்கு ஒரு துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள். நாங்கள் அதனை ஃபஜ்ர் தொழுகையில் குனூத்தாக ஓதிக் கொண்டிருந்தோம் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: பைஹகீ
இதன் அறிவிப்பாளர் தொடரில் பலவீனம் உள்ளது.