411. وَعَنْ أَبِي سَعِيدٍ اَلْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {أَوْتِرُوا قَبْلَ أَنْ تُصْبِحُوا} رَوَاهُ مُسْلِمٌ.
411. ``நீங்கள் அதிகாலைப் பொழுதை அடையும் முன்பு வித்ருத் தொழுதுவிடுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
412. وَلِابْنِ حِبَّانَ: {مَنْ أَدْرَكَ الصُّبْحَ وَلَمْ يُوتِرْ فَلَا وِتْرَ لَهُ}.
412. `` சுப்ஹ் (அதிகாலைப் பொழுதை) அடைந்தும் வித்ருத் தொழாதவருக்கு வித்ரு இல்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு ஹிப்பானில் உள்ளது.
413. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ نَامَ عَنِ الْوِتْرِ أَوْ نَسِيَهُ فَلْيُصَلِّ إِذَا أَصْبَحَ أَوْ ذَكَرَ} رَوَاهُ الْخَمْسَةُ إِلَّا النَّسَائِيَّ.
413. ``வித்ருத் தொழாமல் தூங்கியவர் அல்லது அதனை மறந்தவர் சுப்ஹ் (அதிகாலையை) அடைந்ததும் அல்லது ஞாபகம் வந்ததும் தொழட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
414. وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ خَافَ أَنْ لَا يَقُومَ مِنْ آخِرِ اللَّيْلِ فَلْيُوتِرْ أَوَّلَهُ، وَمَنْ طَمِعَ أَنْ يَقُومَ آخِرَهُ فَلْيُوتِرْ آخِرَ اللَّيْلِ، فَإِنَّ صَلَاةَ آخِرِ اللَّيْلِ مَشْهُودَةٌ، وَذَلِكَ أَفْضَلُ} رَوَاهُ مُسْلِمٌ.
414. ``இரவின் இறுதிப் பகுதியில் எழமுடியாது என அஞ்சுபவர் இரவின் முதல் பகுதியில் வித்ரைத் தொழுது கொள்ளட்டும். இரவின் இறுதிப்பகுதியில் எழும் நம்பிக்கை உள்ளவர் வித்ரை இரவின் இறுதிப் பகுதியில் தொழட்டும். ஏனெனில், இரவின் இறுதிப் பகுதியின் தொழுகை (இரவு பகல் இரண்டின் வானவர்களாலும்) சாட்சி அளிக்கப்படத் தக்கதாகும்; அதுவே சிறந்ததாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
415. وَعَنِ ابْنِ عُمَرَ -رَضِيَ اللهُ عَنْهُمَا-، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {إِذَا طَلَعَ الْفَجْرُ فَقَدْ ذَهَبَ كُلُّ صَلَاةِ اللَّيْلِ وَالْوَتْرُ، فَأَوْتِرُوا قَبْلَ طُلُوعِ الْفَجْرِ} رَوَاهُ التِّرْمِذِيُّ.
415. ``ஃபஜ்ர் உதித்துவிட்டால் இரவுத் தொழுகை மற்றும் வித்ரின் எல்லா நேரமும் போய்விட்டது. நீங்கள் ஃபஜ்ர் உதிப்பதற்கு முன்பு வித்ருத் தொழுது விடுங்கள்!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
குறிப்பு: 413 வது ஹதீஸிற்கு, வித்ரை ஞாபகம் வந்தால் எப்போது வேண்டுமானாலும் தொழலாம் என்பது பொருள் அல்ல. தொழும் அந்த நேரம் ஃபஜ்ர் - அதிகாலை உதிப்பதற்கு முன்னதாக இருக்க வேண்டும் என்பதை 415 வது ஹதீஸ் விளக்குகிறது.
416. وَعَنْ عَائِشَةَ -رَضِيَ اللهُ عَنْهَا- قَالَتْ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الضُّحَى أَرْبَعًا، وَيَزِيدُ مَا شَاءَ اللهُ} رَوَاهُ مُسْلِمٌ.
416. இறைத்தூதர்(ஸல்) ளுஹா தொழுகை நான்கு ரக்அத்துக்கள் தொழுபவர்களாய் இருந்தார்கள். இன்னும், அல்லாஹ் நாடிய அளவு அதிகப்படுத்தவும் செய்வார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
குறிப்பு: முற்பகல் தொழுகைக்கு ளுஹாத் தொழுகை எனப்படும்.
417. وَلَهُ عَنْهَا: {أَنَّهَا سُئِلَتْ: هَلْ كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الضُّحَى؟ قَالَتْ: لَا، إِلَّا أَنْ يَجِيءَ مِنْ مَغِيبِهِ}.
417. ஆயிஷா(ரலி) வாயிலாக அவர்களிடம் ``இறைத்தூதர் அவர்கள் ளுஹா தொழுவார்களா?'' என வினவப்பட்டது.
``பயணத்திலிருந்து அவர்கள் திரும்பினால் தவிர (தொழுதது) இல்லை'' என முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் உள்ளது.
418. وَلَهُ عَنْهَا: {مَا رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي سُبْحَةَ اَلضُّحَى قَطُّ، وَإِنِّي لَأُسَبِّحُهَا}.
418. ``இறைத்தூதர்(ஸல்) ளுஹா தொழுகை தொழுததை நான் கண்டதே இல்லை. நிச்சயமாக இப்போது நான் இந்த (தொழுகையைத்) தொழுகிறேன்'' என்று ஆயிஷா(ரலி) அறிவித்தார் என முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் உள்ளது.
419. وَعَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ؛ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {صَلَاةُ اَلْأَوَّابِينَ حِينَ تَرْمَضُ اَلْفِصَالُ} رَوَاهُ التِّرْمِذِيُّ.
419. ``வெயிலின் காரணமாக சூடேறிய மணல் (ஒட்டகக் குட்டிகள் கால் வைக்க முடியாத அளவு வெப்பமாக) உள்ள நேரமே அவ்வாபீன் (ளுஹா) தொழுகைக்குரிய நேரமாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜைத் இப்னு அர்கம்(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
குறிப்பு: மக்ரிப் மற்றும் இஷாவிற்கு இடைப்பட்ட நேரத்தில் தொழும் தொழுகைக்கு அவ்வாபீன் எனச் சொல்லப்படுகிறது. ஆனால், இது தவறானதாகும். அவ்வாபீன் என்பதும் ளுஹா என்பதும் ஒன்றுதான் என்பதை அறிக!
420. وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ صَلَّى اَلضُّحَى ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً بَنَى اللهُ لَهُ قَصْرًا فِي اَلْجَنَّةِ} رَوَاهُ التِّرْمِذِيُّ وَاسْتَغْرَبَهُ.
420. ``ளுஹாவை பன்னிரெண்டு ரக்அத்துக்களாகத் தொழுதவருக்காக அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இமாம் திர்மிதீ இதனை கரீப் எனும் குறைபாடு உள்ளது எனக் குபிப்பிட்டுள்ளார்.
421. وَعَنْ عَائِشَةَ -رَضِيَ اللهُ عَنْهَا- قَالَتْ: {دَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْتِي، فَصَلَّى الضُّحَى ثَمَانِيَ رَكَعَاتٍ} رَوَاهُ اِبْنُ حِبَّانَ فِي "صَحِيحِهِ".بَابُ صَلَاةِ الْجَمَاعَةِ وَالْإِمَامَةِ
421. இறைத்தூதர்(ஸல்) என் வீட்டில் நுழைந்தார்கள். பின்னர், எட்டு ரக்அத்துக்கள் ளுஹா தொழுதார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: இப்னு ஹிப்பான்.
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை தம்முடைய `ஸஹீஹ்' நூலில் பதிவிட்டுள்ளார்.
422. عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {صَلَاةُ الْجَمَاعَةِ أَفْضَلُ مِنْ صَلَاةِ الْفَذِّ بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً} مُتَّفَقٌ عَلَيْهِ.
422. ``தனித்துத் தொழுவதைவிட ஜமாஅத்தாக தொழுவது இருபத்தி ஏழு மடங்கு சிறப்பானதாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
423. وَلَهُمَا عَنْ أَبِي هُرَيْرَةَ: {بِخَمْسٍ وَعِشْرِينَ جُزْءًا}.
423. அபூ ஹுரைரா(ரலி) வாயிலாக புகாரீ, முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில், ``இருபத்தைந்து மட்டும் சிறந்ததாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உள்ளது.
424. وَكَذَا لِلْبُخَارِيِّ: عَنْ أَبِي سَعِيدٍ، وَقَالَ: "دَرَجَةً ".
424. இதே (423 வது) ஹதீஸ் போன்றே அபூ ஸயீத்(ரலி) வாயிலாக புகாரீயில் (மற்றோர் அறிவிப்பும்) உள்ளது. அதில் பங்கு என இல்லாமல் இருபத்து ஐந்து தகுதிகள் படித்தரங்கள் உயர்ந்தது என உள்ளது.
425. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {وَالَّذِيْ نَفْسِي بِيَدِهِ لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ بِحَطَبٍ فَيُحْتَطَبَ، ثُمَّ آمُرَ بِالصَّلَاةِ فَيُؤَذَّنَ لَهَا، ثُمَّ آمُرَ رَجُلًا فَيَؤُمَّ النَّاسَ، ثُمَّ أُخَالِفُ إِلَى رِجَالٍ لَا يَشْهَدُونَ الصَّلَاةَ، فَأُحَرِّقَ عَلَيْهِمْ بُيُوتَهُمْ، وَالَّذِيْ نَفْسِي بِيَدِهِ لَوْ يَعْلَمُ أَحَدُهُمْ أَنَّهُ يَجِدُ عَرْقًا سَمِينًا أَوْ مِرْمَاتَيْنِ حَسَنَتَيْنِ لَشَهِدَ الْعِشَاءَ} مُتَّفَقٌ عَلَيْهِ وَاللَّفْظُ لِلْبُخَارِيِّ.
425. ``என் உயிரைத் தன் கையில் கொண்டவன் மீது ஆணையாக! விறகுக் கட்டைகளை ஒன்று சேர்க்குமாறும், பாங்கு சொல்லுமாறும் கட்டளையிட்ட நிலையில், யாரேனும் ஒருவரை இமாமத் செய்யுமாறு கட்டளையிட்ட நிலையில், தொழுகைக்கு வராதவர்களின் வீடுகளுக்குச் சென்று; அவர்களின் இல்லங்களை தீக்கிரையாக்கிட நான் விரும்புகிறேன். என் உயிரைத் தன் கையில் கொண்டவன் மீது ஆணையாக! (ஜமாஅத் தொழுகைக்கு வராமலிருக்கும்) அவர்கள் கொழுத்த சதைப்பற்றுள்ள எலும்போ, அல்லது அழகான இரண்டு குளம்புக் கறியோ தமக்குக் கிடைக்கும் என அறிவார்களாயின் இஷா தொழுகையில் கட்டாயம் கலந்து கொள்வார்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு புகாரீயீன் வாசகம் இடம் பெற்றுள்ளது.
426. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَثْقَلُ الصَّلَاةِ عَلَى الْمُنَافِقِينَ: صَلَاةُ الْعِشَاءِ، وَصَلَاةُ الْفَجْرِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِيهِمَا لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا} مُتَّفَقٌ عَلَيْهِ.
426. ``நயவஞ்சகர்களுக்கு இஷா மற்றும் ஃபஜ்ர் தொழுகைகள் பெரும் சுமையாக உள்ளன. அவை இரண்டிலும் எவ்வளவு நன்மையுள்ளது என்பதை அவர்கள் அறிந்தால் (நடக்க இயலாவிட்டாலும்) தவழ்ந்தபடியாவது வருவார்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
427. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ أَعْمَى فَقَالَ: يَا رَسُولَ اللهِ! لَيْسَ لِي قَائِدٌ يَقُودُنِي إِلَى الْمَسْجِدِ، فَرَخَّصَ لَهُ، فَلَمَّا وَلَّى دَعَاهُ، فَقَالَ: "هَلْ تَسْمَعُ النِّدَاءَ بِالصَّلَاةِ؟" قَالَ: نَعَمْ. قَالَ: "فَأَجِبْ"} رَوَاهُ مُسْلِمٌ.
427. நபி(ஸல்) அவர்களிடம் பார்வையற்ற ஒருவர் வந்து, ``இறைத்தூதர் அவர்களே! என்னை இறைஇல்லத்திற்குச் அழைத்துச் செல்ல ஒரு வழிகாட்டி இல்லை'' எனக் கூறினார்.
எனவே, இறைத்தூதர்(ஸல்) அவருக்கு (வீட்டில் தொழ) சலுகை அளித்தார்கள். அவர் திரும்பிச் சென்றபோது அவரை (மறுபடியும்) அழைத்தார்கள். பின்னர், ``தொழுகைக்கான பாங்கை நீ செவியுறுகிறீரா?'' என இறைத்தூதர்(ஸல்) கேட்டார்கள்.
``ஆமாம்'' என அவர் கூறினார்.
``அப்படியானால் அதற்கு பதிலளிப்பீராக! (இறைஇல்லத்தில் வந்து தொழுவீராக!) என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
428. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {مَنْ سَمِعَ النِّدَاءَ فَلَمْ يَأْتِ فَلَا صَلَاةَ لَهُ إِلَّا مِنْ عُذْرٍ} رَوَاهُ اِبْنُ مَاجَهْ، وَالدَّارَقُطْنِيُّ، وَابْنُ حِبَّانَ، وَالْحَاكِمُ، وَإِسْنَادُهُ عَلَى شَرْطِ مُسْلِمٍ، لَكِنْ رَجَّحَ بَعْضُهُمْ وَقْفَهُ.
428. ``பாங்கைச் செவியுற்று (தவிர்க்க முடியாத) காரணம் இன்றி, இறைஇல்லத்திற்கு வராதவருக்குத் தொழுகை இல்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: இப்னு மாஜா, தாரகுத்னீ, இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிம்.
இது இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்களின் நிபந்தனைகளுக்கு உட்பட்ட ஹதீஸாகும். இருப்பினும் சிலர் இதனை `மவ்கூஃப்' எனக் கூறியுள்ளார்கள்.
429. وَعَنْ يَزِيدَ بْنِ اَلْأَسْوَدِ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّهُ صَلَّى مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الصُّبْحِ، فَلَمَّا صَلَّى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا هُوَ بِرَجُلَيْنِ لَمْ يُصَلِّيَا، فَدَعَا بِهِمَا، فَجِيءَ بِهِمَا تَرْعَدُ فَرَائِصُهُمَا، فَقَالَ لَهُمَا: "مَا مَنَعَكُمَا أَنْ تُصَلِّيَا مَعَنَا؟" قَالَا: قَدْ صَلَّيْنَا فِي رِحَالِنَا. قَالَ: "فَلَا تَفْعَلَا، إِذَا صَلَّيْتُمَا فِي رِحَالِكُمْ، ثُمَّ أَدْرَكْتُمُ الْإِمَامَ وَلَمْ يُصَلِّ، فَصَلِّيَا مَعَهُ، فَإِنَّهَا لَكُمْ نَافِلَةٌ"} رَوَاهُ أَحْمَدُ، وَاللَّفْظُ لَهُ، وَالثَّلَاثَةُ، وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ، وَابْنُ حِبَّانَ.
429. நான் நபி(ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் தொழுதேன். இறைத்தூதர்(ஸல்) தொழுகையை முடித்தபோது, தொழாமல் இரண்டு மனிதர்கள் நின்றிருந்தார்கள். அவர்கள் இருவரையும் இறைத்தூதர்(ஸல்) அழைத்து வரச் சொன்னார்கள். அவர்கள் இருவரும் இதயம் படபடத்தவர்களாக (பயந்த நிலையில்) வந்தார்கள். அவர்கள் இருவரிடமும், ``எங்களுடன் தொழுவதிலிருந்து உங்களைத் தடுத்தது எது?'' என்று இறைத்தூதர்(ஸல்) கேட்டார்கள்.
``நாங்கள் எங்கள் இல்லத்தில் தொழுதுவிட்டோம்'' என அவ்விருவரும் கூறினர்.
``நீங்கள் இருவரும் இவ்வாறு செய்யாதீர்கள். நீங்கள் இருவரும் உங்களின் இல்லங்களில் தொழுதுவிட்டு வந்தப் பின்பு இமாம் தொழுவதைக் காண்பீர்களாயின், அவருடனும் தொழுது கொள்ளுங்கள். அது உங்கள் இருவருக்கும் உபரியானதாகி (நஃபிலாகி) விடும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என யஸீத் இப்னு அல் அஸ்வத்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத் அபூ தாவூத், நஸயீ மற்றும் திர்மிதீ
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) மற்றும் திர்மிதீ(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இங்கு அஹமதின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
430. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا، وَلَا تُكَبِّرُوا حَتَّى يُكَبِّرَ، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَلَا تَرْكَعُوا حَتَّى يَرْكَعَ، وَإِذَا قَالَ سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ، فَقُولُوا: اَللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ، وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا، وَلَا تَسْجُدُوا حَتَّى يَسْجُدَ، وَإِذَا صَلَّى قَائِمًا فَصَلُّوا قِيَامًا، وَإِذَا صَلَّى قَاعِدًا فَصَلُّوا قُعُودًا أَجْمَعِينَ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَهَذَا لَفْظُهُ. وَأَصْلُهُ فِي الصَّحِيحَيْنِ.
430. ``பின்பற்றுவதற்காகவே இமாம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தக்பீர் கூறும்போது, நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் தக்பீர் கூறாதவரை, நீங்களும் தக்பீர் கூறாதீர்கள். அவர் ருகூஃ செய்யும்போது நீங்களும் ருகூஃ செய்யுங்கள். அவர் ருகூஃ செய்யாதவரை நீங்களும் ருகூஃ செய்யாதீர்கள். அவர் `சமி அல்லாஹு லிமன் ஹமிதா' எனக் கூறினால், நீங்கள் `அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து' எனக் கூறுங்கள். அவர் ஸஜ்தாச் செய்யும்போது நீங்களும் ஸஜ்தாச் செய்யுங்கள்! அவர் ஸஜ்தாச் செய்யாத வரை நீங்களும் ஸஜ்தாச் செய்யாதீர்கள்! அவர் நின்று தொழும்போது நீங்களும் நின்று தொழுங்கள்! அவர் உட்கார்ந்து தொழும்போது நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இங்கு அபூ தாவூதின் வாசகம் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் புகாரீ, முஸ்லிமில் உள்ளது.