391. وَعَنِ ابْنِ عُمَرَ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {صَلَاةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيَ أَحَدُكُمُ الصُّبْحِ صَلَّى رَكْعَةً وَاحِدَةً، تُوتِرُ لَهُ مَا قَدْ صَلَّى} مُتَّفَقٌ عَلَيْهِ.
391. ``இரவுத் தொழுகை, இரண்டிரண்டு ரக்அத்களாகும். காலையாகிவிடும் என அஞ்சுவர் ஒரு ரக்அத் (வித்ரு) தொழுது கொள்ளட்டும். அது அவர் (முன்பு) தொழுத தொழுகையை ஒற்றையாக்கிவிடும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
392. وَلِلْخَمْسَةِ - وَصَحَّحَهُ اِبْنِ حِبَّانَ -: {صَلَاةُ اللَّيْلِ وَالنَّهَارِ مَثْنَى مَثْنَى"} وَقَالَ النَّسَائِيُّ: "هَذَا خَطَأٌ".
392. ``இரவு மற்றும் பகல் தொழுகைகள் (கடமையல்லாத தொழுகைகள்) இரண்டிரண்டு ரக்அத்கள் ஆகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, நஸயீ.
இமாம் இப்னு ஹிப்பான் இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இமாம் நஸயீ(ரஹ்) இதனை (பகலில் என்பதை) தவறு எனக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பு: சுன்னத்தான எந்தத் தொழுகையையும் நான்கு ரக்அத்துகள் மொத்தமாகத் தொழக்கூடாது. இரண்டிரண்டாகப் பிரித்தே தொழவேண்டும்.
393. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَفْضَلُ الصَّلَاةِ بَعْدَ الْفَرِيضَةِ صَلَاةُ اللَّيْلِ} أَخْرَجَهُ مُسْلِمٌ.
393. ``கடமையான தொழுகைகளுக்குப் பிறகு சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
394. وَعَنْ أَبِي أَيُّوبَ اَلْأَنْصَارِيِّ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {اَلْوِتْرُ حَقٌّ عَلَى كُلِّ مُسْلِمٍ، مَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِخَمْسٍ فَلْيَفْعَلْ، وَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِثَلَاثٍ فَلْيَفْعَلْ، وَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِوَاحِدَةٍ فَلْيَفْعَلْ} رَوَاهُ الْأَرْبَعَةُ إِلَّا التِّرْمِذِيَّ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ، وَرَجَّحَ النَّسَائِيُّ وَقْفَهُ.
394. வித்ருத் தொழுகை முஸ்லிம் மீது அவசியமானதாகும். ஐந்து ரக்அத்துக்கள் வித்ரு தொழ விரும்புபவர் தொழுது கொள்ளட்டும். மூன்று ரக்அத்துக்கள் தொழ விரும்புபவர் தொழுது கொள்ளட்டும். ஒரு ரக்அத் தொழ விரும்புவர் தொழுது கொள்ளட்டும் என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ அய்யூப் அன்சாரி(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத், நஸயீ மற்றும் இப்னு மாஜா.
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார். இமாம் நஸயீ(ரஹ்) `மவ்கூஃப்' எனும் தரம் என்பதை உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார்.
395. وَعَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {لَيْسَ الْوِتْرُ بِحَتْمٍ كَهَيْئَةِ الْمَكْتُوبَةِ، وَلَكِنْ سُنَّةٌ سَنَّهَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ} رَوَاهُ النَّسَائِيُّ وَالتِّرْمِذِيُّ وَحَسَّنَهُ وَالْحَاكِمُ وَصَحَّحَهُ.
395. வித்ருத் தொழுகை கடமையாக்கப்பட்ட (ஃபர்ளு) தொழுகை போன்றதல்ல. ஆனால், நபி(ஸல்) அவர்களால் நிறுவப்பட்ட சுன்னத் ஆகும் என்று அலீ அப்னு அபீதாலிப்(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ, நஸயீ மற்றும் ஹாகிம்
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை `ஹஸன்' எனக் குறிப்பிட்டுள்ளார். இமாம் நஸயீ மற்றும் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளனர்
396. وَعَنْ جَابِرٍ {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ فِي شَهْرِ رَمَضَانَ، ثُمَّ اِنْتَظَرُوهُ مِنَ الْقَابِلَةِ فَلَمَّا يَخْرُجْ، وَقَالَ: " إِنِّي خَشِيتُ أَنْ يُكْتَبَ عَلَيْكُمُ الْوِتْرُ} رَوَاهُ اِبْنُ حِبَّانَ.
396. ரமளான் மாதத்தின் ஓர் இரவில், இறைத்தூதர்(ஸல்) இறைஇல்லத்தில்) நின்று வணங்கினார்கள். பின்னர், அடுத்துவரும் இரவில் மக்கள் அவர்களை எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், அவர்கள் (வீட்டைவிட்டு) வெளியே வரவில்லை. மேலும், ``உங்கள் மீது வித்ரு கடமையாக்கப்பட்டுவிடும் என நான் அஞ்சுகிறேன்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நூல்: இப்னு ஹிப்பான்
397. وَعَنْ خَارِجَةَ بْنِ حُذَافَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِنَّ اللهُ أَمَدَّكُمْ بِصَلَاةٍ هِيَ خَيْرٌ لَكُمْ مِنْ حُمُرِ النَّعَمِ " قُلْنَا: وَمَا هِيَ يَا رَسُولَ اللهِ ؟ قَالَ: "الْوِتْرُ، مَا بَيْنَ صَلَاةِ الْعِشَاءِ إِلَى طُلُوعِ الْفَجْرِ} رَوَاهُ الْخَمْسَةُ إِلَّا النَّسَائِيَّ وَصَحَّحَهُ الْحَاكِمُ.
397. ``அல்லாஹ் உங்களுக்கு ஒரு தொழுகையை (உங்களின் மற்ற தொழுகைகளுக்கு) வலு சேர்க்கும் விதத்தில் கொடுத்துள்ளான். அது உங்களுக்குச் சிவப்பு ஒட்டகங்களைவிட ச் சிறந்ததாகும்'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
``இறைத்தூதர் அவர்களே! அது எந்தத் தொழுகை?'' என நாங்கள் வினவினோம்.
``இஷாவிற்கு, ஃபஜ்ரு நேரம் வருவதற்கும் இடையிலுள்ள வித்ருத் தொழுகை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என காரிஜா இப்னு ஹுதாஃபா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
398. وَرَوَى أَحْمَدُ: عَنْ عَمْرِوِ بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ نَحْوَهُ.
398. அம்ர் இப்னு ஷுஐபு தம் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கும் ஹதீஸ் அஹ்மதில் உள்ளது. அது 397வது ஹதீஸ் போன்றே கருத்தைக் கொண்டுள்ளது.
399. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اَلْوِتْرُ حَقٌّ، فَمَنْ لَمْ يُوتِرْ فَلَيْسَ مِنَّا} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ بِسَنَد لَيِّنٍ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
399. வித்ருத் தொழுகை அவசியமானதாகும்; வித்ருத் தொழாதவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு புரைதா தம் தந்தையின் வாயிலாக அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது என அபூ தாவூத்(ரஹ்) குறிப்பிட்டுள்ளார். இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
400. وَلَهُ شَاهِدٌ ضَعِيفٌ عَنْ أَبِيْ هُرَيْرَةَ عِنْدَ أَحْمَدَ.
400. அபூ ஹுரைரா(ரலி) வாயிலாக அஹமதில் உள்ள ஹதீஸ் 399வது ஹதீஸிற்குச் சான்றாக ஒரு ஹதீஸ் உள்ளது. அது `ளயீஃப்' எனும் பலவீனமானதாகும்.
401. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {مَا كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَزِيدُ فِي رَمَضَانَ وَلَا فِي غَيْرِهِ عَلَى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً، يُصَلِّي أَرْبَعًا، فَلَا تَسْأَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي أَرْبَعًا، فَلَا تَسْأَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي ثَلَاثًا. قَالَتْ عَائِشَةُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ، أَتَنَامُ قَبْلَ أَنْ تُوتِرَ؟ قَالَ: "يَا عَائِشَةُ، إِنَّ عَيْنَيَّ تَنَامَانِ وَلَا يَنَامُ قَلْبِي".} مُتَّفَقٌ عَلَيْهِ.
401. ரமலான் மாதத்திலும், அதுவல்லாத மற்ற நாள்களிலும் பதினோரு ரக்அத்திற்கு மேல் இறைத்தூதர்(ஸல்) தொழுததில்லை. அவர்கள் நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள்; அதன் அழகையும், நீளத்தையும் பற்றிக் கேட்க வேண்டியதில்லை. பின்னர், நான்கு ரக்அத்துக்கள் தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தையும் பற்றிக் கேட்க வேண்டியதில்லை. பின்னர், மூன்று ரக்அத்துக்கள் தொழுவார்கள். ``இறைத்தூதர் அவர்களே! வித்ருக்கு முன்பு தாங்கள் தூங்குகிறீர்களே!'' என நான் (ஒருமுறை) வினவினேன்.
``ஆயிஷாவே! என் இரண்டு கண்களும் தூங்குகின்றன;. என் இதயம் தூங்குவதில்லை'' என்று கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
402. وَفِي رِوَايَةٍ لَهُمَا عَنْهَا: {كَانَ يُصَلِّي مِنَ اللَّيْلِ عَشْرَ رَكَعَاتٍ، وَيُوتِرُ بِسَجْدَةٍ، وَيَرْكَعُ رَكْعَتَي الْفَجْرِ، فَتِلْكَ ثَلَاثُ عَشْرَةَ}.
402. இறைத்தூதர்(ஸல்) இரவில் பத்து ரக்அத்துக்கள் தொழுவார்கள். இன்னும், ஒரு ரக்அத் வித்ருத் தொழுவார்கள். இன்னும், ஃபஜ்ரின் (சுன்னத்) இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள். இவை தாம் பதிமூன்று ரக்அத்களாகும் என புகாரீ, முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் ஆயிஷா(ரலி) வாயிலாக உள்ளது.
403. وَعَنْهَا قَالَتْ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً، يُوتِرُ مِنْ ذَلِكَ بِخَمْسٍ، لَا يَجْلِسُ فِي شَيْءٍ إِلَّا فِي آخِرِهَا}.
403. இறைத்தூதர்(ஸல்) இரவில் பதிமூன்று ரக்அத்துக்கள் தொழுவார்கள். அவற்றில் வித்ரு ஐந்து தொழுவார்கள். இறுதி இருப்பில் தவிர இடையில் எங்கும் (வித்ருத் தொழுகையில்) அமரமாட்டார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
404. وَعَنْهَا قَالَتْ: {مِنْ كُلِّ اللَّيْلِ قَدْ أَوْتَرَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَانْتَهَى وِتْرُهُ إِلَى السَّحَرِ} مُتَّفَقٌ عَلَيْهِمَا.
404. இறைத்தூதர்(ஸல்) இரவு முழுவதும் (இரவின் முற்பகுதி, நடுப்பகுதி மற்றும் பிற்பகுதி ஆகியவற்றில்) வித்ருத் தொழுதுள்ளார்கள். அவர்களின் வித்ரு சஹ்ரு நேரத்தில் முடிவடையும் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
405. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ اَلْعَاصِ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {يَا عَبْدَ اللهِ! لَا تَكُنْ مِثْلَ فُلَانٍ، كَانَ يَقُومُ مِنَ اللَّيْلِ، فَتَرَكَ قِيَامَ النَّهَارِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
405. ``அப்துல்லாஹ்வே! இன்னாரைப் போல ஆகிவிடாதீர்! அவர் இரவில் நின்று வணங்கிக் கொண்டிருந்தார்; பின்னர், இரவில் நின்று வணங்குவதை அவர் விட்டுவிட்டார்'' என்று இறைத்தூதர்(ஸல்) எச்சரிக்கையாக) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அமர் இப்னி அல் ஆஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
406. وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَوْتِرُوا يَا أَهْلُ الْقُرْآنَ، فَإِنَّ اللهَ وِتْرٌ يُحِبُّ الْوِتْرَ} رَوَاهُ الْخَمْسَةُ، وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ.
406. ``குர்ஆன் வழங்கப்பட்டவர்களே! வித்ருத் தொழுங்கள். ஏனெனில், அல்லாஹ் ஒருவன்; அவன் ஒற்றையையே விரும்புகிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அலீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இமாம் இப்னு குஸைமா(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
407. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {اِجْعَلُوا آخِرَ صَلَاتِكُمْ بِاللَّيْلِ وِتْرًا} مُتَّفَقٌ عَلَيْهِ.
407. ``இரவில் உங்களின் தொழுகைகளில், வித்ரை இறுதியானதாய் ஆக்கிக் கொள்ளுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
408. وَعَنْ طَلْقٍ بْنِ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: سَمِعْتَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: {لَا وِتْرَانِ فِي لَيْلَةٍ} رَوَاهُ أَحْمَدُ، وَالثَّلَاثَةُ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.
408. ``ஒரே இரவில் இரண்டு வித்ருகள் இல்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூற நான் செவியுற்றுள்ளேன் என தல்க் இப்னு அலீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ மற்றும் திர்மிதீ
இமாம் இப்னு ஹிப்பான் இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
409. وَعَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوتِرُ بِـ "سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى" و "قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ" و "قُلْ هُوَ اللهُ أَحَدٌ"} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ. وَزَادَ: {وَلَا يُسَلِّمُ إِلَّا فِي آخِرِهِنَّ}.
409. வித்ருத் தொழுகையில் சப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா, குல்யா அய்யுஹல் காஃபிரூன், குல்ஹு வல்லாஹு அஹத் ஆகிய அத்தியாயங்களை இறைத்தூதர்(ஸல்) ஓதுவார்கள் என உபய் இப்னு கலஃப்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத் மற்றும் நஸயீ
அவற்றின் (மூன்று ரக்அத்துக்களின்) இறுதியில்தான் ஸலாம் கொடுப்பார்கள் என்பது நஸயீயில் அதிகப்படியாக உள்ளது.
410. وَلِأَبِي دَاوُدَ، وَالتِّرْمِذِيِّ نَحْوُهُ عَنْ عَائِشَةَ وَفِيهِ: {كُلَّ سُورَةٍ فِي رَكْعَةٍ، وَفِي الْأَخِيرَةِ: "قُلْ هُوَ اللهُ أَحَدٌ"، وَالْمُعَوِّذَتَيْنِ}.
410. அபூ தாவூத் மற்றும் திர்மிதீயின் (மற்றோர்) அறிவிப்பில் 409 வது ஹதீஸ் போன்றே ஆயிஷா(ரலி) வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் ஒவ்வொரு ரக்அத்திற்கும் ஒரு சூராவையும் மற்றும் இறுதி ரக்அத்தில் குல்ஹுவல்லாஹு அஹத் மற்றும் முஅவ்விதத்தைன் அத்தியாயங்களையும் ஓதுவார்கள் (அத்தியாயம் 113, 114) என்றும் உள்ளது.