371. وَعَنْ أَبِي بَكْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {كَانَ إِذَا جَاءَهُ أَمْرٌ يَسُرُّهُ خَرَّ سَاجِداً لِلَّهِ} رَوَاهُ الْخَمْسَةُ إِلَّا النَّسَائِيَّ.
371. நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வருமானால், இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காக நிலத்தில் தம் தலையை வைத்து ஸஜ்தா செய்வார்கள் என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
குறிப்பு: இந்நூலில், இங்கிருந்து ஸஜ்தா ஷுக்ர் தொடர்பான நபிமொழிகள் தொடங்குகின்றன.
372. وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {سَجَدَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَطَالَ السُّجُودَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَقَالَ: " إِنَّ جِبْرِيلَ آتَانِي، فَبَشَّرَنِي، فَسَجَدْت لِلَّهِ شُكْرًا"} رَوَاهُ أَحْمَدُ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
372. இறைத்தூதர்(ஸல்) நீண்ட ஸஜ்தாச் செய்தார்கள். பின்னர், தம் தலையை உயர்த்தி ``என்னிடம் ஜிப்ரீல் வந்து எனக்கு நற்செய்தி கூறினார்'' (எனவே), அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் வண்ணமாக நான் ஸஜ்தாச் செய்தேன்'' என்று அவர்கள் கூறினார்கள் என அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார்.
நூல்: அஹ்மத்
இமாம் ஹாகிம்(ரஹ்) ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுளளார்.
373. وَعَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ -رَضِيَ اللهُ عَنْهُمَا- {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ عَلِيًّا إِلَى اَلْيَمَنِ - فَذَكَرَ اَلْحَدِيثَ - قَالَ: فَكَتَبَ عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ بِإِسْلَامِهِمْ، فَلَمَّا قَرَأَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَلْكِتَابَ خَرَّ سَاجِدًا} رَوَاهُ الْبَيْهَقِيُّ.وَأَصْلُهُ فِي الْبُخَارِيِّ.بَابُ صَلَاةِ التَّطَوُّعِ
373. அலீ(ரலி) அவர்களை யமன் நாட்டிற்கு இறைத்தூதர்(ஸல்) அனுப்பினார்கள். (ஹதீஸ் முழுவதும் சொல்லப்பட்டது அந்த ஹதீஸில்) அந்த மக்கள் இஸ்லாமை ஏற்ற செய்தியை, அலீ(ரலி) (நபி(ஸல்) அவர்களுக்கு) எழுதினார். இறைத்தூதர்(ஸல்) அக்கடிதத்தைப் படித்ததும் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் முகமாக ஸஜ்தாவில் விழுந்தார்கள் என பரா இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
நூல்: பைஹகீ
இதன் மூலம் புகாரீயில் உள்ளது.
உபரியான தொழுகைகள்
374. عَنْ رَبِيعَةَ بْنِ كَعْبٍ الْأَسْلَمِيِّ -رِضَى اللهُ عَنْهُ- قَالَ: {قَالَ لِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَلْ. فَقُلْتُ: أَسْأَلُكَ مُرَافَقَتَكَ فِي الْجَنَّةِ. فَقَالَ: أَوَ غَيْرَ ذَلِكَ ؟، قُلْتُ: هُوَ ذَاكَ، قَالَ: " فَأَعِنِّي عَلَى نَفْسِكَ بِكَثْرَةِ السُّجُودِ} رَوَاهُ مُسْلِمٌ.
374. இறைத்தூதர்(ஸல்)என்னை நோக்கி, `என்னிடம் (ஏதாவது) கேள்!'' எனக் கூறினார்கள்.
``சுவர்க்கத்தில் தங்களின் தோழமையை வேண்டுகிறேன்'' என நான் கூறினேன்.
``இதுவல்லாமல் (வேறு ஏதும் கேள்!)'' என அவர்கள் கூறினார்கள்.
``அதுவே (எனக்கு வேண்டும்)'' என நான் கூறினேன்.
``உன் நாட்டம் நிறைவேறிட அதிகம் ஸஜ்தாச் செய்து எனக்கு உதவி செய்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ரபீஆ இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
375. وَعَنِ ابْنِ عُمَرَ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: {حَفِظْتُ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ رَكَعَاتٍ: رَكْعَتَيْنِ قَبْلَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَهَا، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ فِي بَيْتِهِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ فِي بَيْتِهِ، وَرَكْعَتَيْنِ قَبْلَ الصُّبْحِ} مُتَّفَقٌ عَلَيْهِ.وَفِي رِوَايَةٍ لَهُمَا: {وَرَكْعَتَيْنِ بَعْدَ الْجُمْعَةِ فِي بَيْتِهِ}.
375. லுஹர் தொழுகைக்கு முன்பு இரண்டு ரக்அத்துக்கள், அதற்குப் பின்பு இரண்டு ரக்அத்துக்கள், இன்னும் மக்ரிப் தொழுகைக்குப் பின்பு தம் வீட்டில் இரண்டு ரக்அத்துக்கள், இஷாவிற்குப் பின்பு வீட்டில் இரண்டு ரக்அத்துகள் இன்னும் ஸுப்ஹுவிற்கு முன்பு இரண்டு ரக்அத்துக்கள் (ஆகிய சுன்னத் தொழுகைகளை தொழவேண்டும் என்பதை) நான் நபி(ஸல்) அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டேன் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
புகாரீ, முஸ்லிம் மற்றோர் அறிவிப்பில், ஜுமுஆவிற்குப் பின்பு தம் வீட்டில் இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார்கள் என்பதும் உள்ளது.
376. وَلِمُسْلِمٍ: {كَانَ إِذَا طَلَعَ اَلْفَجْرُ لَا يُصَلِّي إِلَّا رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ}
376. ஃபஜ்ரின் நேரம் வந்துவிட்டால் இறைத்தூதர்(ஸல்) சுருக்கமான இரண்டு ரக்அத்துக்களைத் தவிர வேறு எதும் (கடமையான தொழுகையைத் தவிர்த்து வேறு எதுவும்) தொழ மாட்டார்கள் என முஸ்லிமில் உள்ளது.
குறிப்பு: ஃபஜ்ரின் முன் சுன்னத் இரண்டு ரக்அத்துகளை மிகமிகச் சுருக்கமாகவே நபி(ஸல்) தொழுதுள்ளார்கள். எனவே, நீண்ட நேரம் தொழுதல் கூடாது. nலும் விளக்கத்திற்கு ஹதீஸ் எண் 388 காண்க!
377. وَعَنْ عَائِشَةَ - رَضِيَ اللهُ عَنْهَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {كَانَ لَا يَدَعُ أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ قَبْلَ الْغَدَاةِ} رَوَاهُ الْبُخَارِيُّ.
377. `லுஹர்' தொழுகைக்கு முன்பு (இரண்டிரண்டாக) நான்கு ரக்அத்துகளையும், ஃபஜ்ர்' தொழுகைக்கு முன்பு இரண்டு ரக்அத்துக்களையும் இறைத்தூதர்(ஸல்) (தொழாமல்) விடமாட்டார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
378. وَعَنْهَا قَالَتْ: {لَمْ يَكُنِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى شَيْءٍ مِنَ النَّوَافِلِ أَشَدَّ تَعَاهُدًا مِنْهُ عَلَى رَكْعَتَي الْفَجْرِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
378. ஃபஜ்ரின் இரண்டு ரக்அத்துக்களுக்கு இறைத்தூதர்(ஸல்) ஆர்வம் காட்டிய அளவு வேறு எந்த உபரித் தொழுகைக்கும் ஆர்வம் காட்டியதில்லை என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
379. وَلِمُسْلِمٍ: {رَكْعَتَا الْفَجْرِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا}
379. ஃபஜ்ரின் (சுன்னத்) இரண்டு ரக்அத்துகள், உலகம் மற்றும் அதிலுள்ள அனைத்தையும் விடச் சிறந்தவையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்துள்ளனர்.
நூல்: முஸ்லிம்
380. وَعَنْ أُمِّ حَبِيبَةَ أُمِّ الْمُؤْمِنِينَ -رَضِيَ اللهُ عَنْهَا- قَالَتْ: سَمِعْتَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: {مَنْ صَلَّى اِثْنَتَا عَشْرَةَ رَكْعَةً فِي يَوْمٍ وَلَيْلَةٍ بُنِيَ لَهُ بِهِنَّ بَيْتٌ فِي الْجَنَّةِ} رَوَاهُ مُسْلِمٌ. وَفِي رِوَايَةٍ " تَطَوُّعًا".
380. ``இரவிலும் பகலிலும் (கடமையான தொழுகைகளின் முன்பின் சுன்னத்தாக உள்ள) பன்னிரெண்டு ரக்அத்துக்கள் தொழுதவருக்கு, அதன் காரணமாக சுவர்க்கத்தில் ஒரு வீடு, கட்டப்படுகிறது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உம்முல் முஃமினீன் உம்மு ஹபீபா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
மற்றோர் அறிவிப்பில் ``சுன்னத்தான தொழுகை'' என உள்ளது.
381. وَلِلتِّرْمِذِيِّ نَحْوُهُ، وَزَادَ: {أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ، وَرَكْعَتَيْنِ قَبْلَ صَلَاةِ الْفَجْرِ}
381. திர்மிதீயில் 380 வது ஹதீஸ் போன்றே உள்ளது. மேலும், (அந்த பனிரெண்டு ரக்அத்துகள் எவையெவை என்பதன் விள்ளமாக) லுஹருக்கு முன்பு (இரண்டிரண்டாக) நான்கு ரக்அத்துகள். அதற்குப் பின்பு இரண்டு ரக்அத்துகள். இன்னும், மக்ரிபிற்குப் பின்பு இரண்டு ரக்அத்துகள், இன்னும் இஷாவிற்குப் பின்பு இரண்டு ரக்அத்துகள், இன்னும், ஃபஜ்ர் தொழுகைக்கு முன்பு இரண்டு ரக்அத்துக்கள் என்ற செய்தி அதிகமாக உள்ளது.
382. وَلِلْخَمْسَةِ عَنْهَا: {مَنْ حَافَظَ عَلَى أَرْبَعٍ قَبْلَ الظُّهْرِ وَأَرْبَعٍ بَعْدَهَا حَرَّمَهُ اللهُ عَلَى النَّارِ}
382. ``லுஹர் தொழுகைக்கு முன்பு (இரண்டிரண்டாக) நான்கு ரக்அத்துக்களையும், அதற்குப் பின்பு (இரண்டிரண்டாக) நான்கு ரக்அத்துகளையும் பேணித் தொழுபவருக்கு, நரக நெருப்பை அல்லாஹ் விலக்கிவிட்டான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உம்மு ஹபீபா(ரலி) அறிவித்தார்கள்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
383. وَعَنِ ابْنِ عُمَرَ - رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {رَحِمَ اللهُ اِمْرَأً صَلَّى أَرْبَعًا قَبْلَ الْعَصْرِ} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَحَسَّنَهُ، وَابْنُ خُزَيْمَةَ وَصَحَّحَهُ.
383. அஸரு (தொழுகை)க்கு முன்பு நான்கு ரக்அத்துக்கள் தொழுபவருக்கு அல்லாஹ் அருள் செய்யட்டும் என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத் மற்றும் திர்மிதீ
இது திர்மிதீயில் `ஹஸன்' எனும் தரத்திலும் இப்னு குஸைமாவில் `ஸஹீஹ்' எனும் தரத்திலும் பதிவிடப்பட்டுள்ளது.
384. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ مُغَفَّلٍ الْمُزَنِيِّ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {صَلُّوا قَبْلَ الْمَغْرِبِ، صَلُّوا قَبْلَ الْمَغْرِبِ " ثُمَّ قَالَ فِي الثَّالِثَةِ: " لِمَنْ شَاءَ " كَرَاهِيَةَ أَنْ يَتَّخِذَهَا النَّاسُ سُنَّةً} رَوَاهُ الْبُخَارِيُّ.
384. ``மக்ரிபிற்கு முன்பு தொழுங்கள! மக்ரிபிற்கு முன்பு தொழுங்கள்!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள். மூன்றாவது முறை கூறும்போது ``விரும்பியவர் (தொழட்டும்) '' எனக் கூறினார்கள். மக்கள் அதனை (கண்டிப்பான) சுன்னத்தாய் ஆக்கிக் கொள்வதை விரும்பாமலேயே இவ்வாறு கூறினார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் அல்முஸ்னீ(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
385. وَفِي رِوَايَةِ اِبْنِ حِبَّانَ: {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى قَبْلَ الْمَغْرِبِ رَكْعَتَيْنِ}
385. இப்னு ஹிப்பானின் மற்றோர் அறிவிப்பில் மக்ரிபிற்கு முன்பு இறைத்தூதர்(ஸல்) இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார்கள் என உள்ளது.
386. وَلِمُسْلِمٍ عَنْ أَنَسٍ قَالَ: {كُنَّا نُصَلِّي رَكْعَتَيْنِ بَعْدَ غُرُوبِ الشَّمْسِ، فَكَانَ يَرَانَا فَلَمْ يَأْمُرْنَا وَلَمْ يَنْهَانَا}
386. சூரியன் மறைந்ததும் நாங்கள் இரண்டு ரக்அத்துக்கள் தொழுபவர்களாய் இருந்தோம். இறைத்தூதர்(ஸல்) (அதைக் காணும் போதெல்லாம்) அவற்றைத் தொழுதாக வேண்டும் எனக் கட்டளை இடவுமில்லை; தொழவேண்டாம் என எங்களைத் தடுப்பவர்களாகவும் இல்லை என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்கள் என முஸ்லிமில் உள்ளது.
387. وَعَنْ عَائِشَةَ -رَضِيَ اللهُ عَنْهَا- قَالَتْ: {كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُخَفِّفُ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ قَبْلَ صَلَاةِ الصُّبْحِ، حَتَّى إِنِّي أَقُولُ: أَقَرَأَ بِأُمِّ الْكِتَابِ؟} مُتَّفَقٌ عَلَيْهِ.
387. ``சூரத்துல் ஃபாத்திஹா ஓதினார்களா (ஓதவில்லையா)?'' என நான் எண்ணும் அளவிற்கு, இறைத்தூதர்(ஸல்) சுப்ஹு தொழுகையின் முன் (சுன்னத்) இரண்டு ரக்அத்துக்களையும் மிகச் சுருக்கமாகத் தொழுவார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
388. وَعَنْ أَبِي هُرَيْرَةَ-رَضِيَ اللهُ عَنْهُ-: {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ فِي رَكْعَتَي الْفَجْرِ: ( قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ ) و: ( قُلْ هُوَ اللهُ أَحَدٌ )} رَوَاهُ مُسْلِمٌ.
388. இறைத்தூதர்(ஸல்) ஃபஜ்ரின் (முன் சுன்னத்) இரண்டு ரக்அத்துக்களில் `குல்யா அய்யுஹல் காஃபிரூன்' மற்றும் `குல் ஹுவல்லாஹு அஹத்' ஓதுவார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
389. وَعَنْ عَائِشَةَ -رَضِيَ اللهُ عَنْهَا- قَالَتْ: {كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى رَكْعَتَي الْفَجْرِ اِضْطَجَعَ عَلَى شِقِّهِ الْأَيْمَنِ} رَوَاهُ الْبُخَارِيُّ.
389. இறைத்தூதர்(ஸல்) ஃபஜ்ரின் (சுன்னத்) இரண்டு ரக்அத்துக்கள் தொழுதுவிட்டால், வலப்பக்கமாகச் சாய்ந்து படுப்பார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
390. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا صَلَّى أَحَدُكُمُ الرَّكْعَتَيْنِ قَبْلَ صَلَاةِ الصُّبْحِ، فَلْيَضْطَجِعْ عَلَى جَنْبِهِ الْأَيْمَنِ} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ، وَالتِّرْمِذِيُّ وَصَحَّحَهُ.
390. ``உங்களில் ஒருவர் சுப்ஹுத் தொழுகைக்கு முன்பு இரண்டு ரக்அத்துக்கள் (சுன்னத்) தொழுதுவிட்டால், வலப் பக்கமாக ஒருக்களித்து(சிறிது நேரம்) படுக்கட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், அஹ்மத் மற்றும் திர்மிதீ
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.