351. وَعَنْ أَبِي هُرَيْرَةَ -رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ- قَالَ: {صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِحْدَى صَلَاتِي اَلْعَشِيّ ِرَكْعَتَيْنِ، ثُمَّ سَلَّمَ، ثُمَّ قَامَ إِلَى خَشَبَةٍ فِي مُقَدَّمِ الْمَسْجِدِ، فَوَضَعَ يَدَهُ عَلَيْهَا، وَفِي الْقَوْمِ أَبُو بَكْرٍ وَعُمَرُ، فَهَابَا أَنْ يُكَلِّمَاهُ، وَخَرَجَ سَرَعَانُ النَّاسِ، فَقَالُوا: أَقُصِرَتْ.الصَّلَاةُ، وَرَجُلٌ يَدْعُوهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَا الْيَدَيْنِ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، أَنَسِيتَ أَمْ قُصِرَتْ ؟ فَقَالَ: " لَمْ أَنْسَ وَلَمْ تُقْصَرْ " فَقَالَ: بَلَى، قَدْ نَسِيتُ، فَصَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ، ثُمَّ كَبَّرَ، فَسَجَدَ مِثْلَ سُجُودِهِ، أَوْ أَطْوَلَ ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَكَبَّرَ، ثُمَّ وَضَعَ رَأْسَهُ، فَكَبَّرَ، فَسَجَدَ مِثْلَ سُجُودِهِ، أَوْ أَطْوَلَ .ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَكَبَّرَ} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِلْبُخَارِيِّ.وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ: {صَلَاةُ الْعَصْرِ}.
351. மாலைத் தொழுகைகளில் ஒரு தொழுகையை நடத்திய இறைத்தூதர்(ஸல்) இரண்டு ரக்அத்திலேயே ஸலாம் கொடுத்து (தொழுகையை முடித்து) விட்டார்கள். பின்னர், எழுந்து இறைஇல்லத்தின் முற்பகுதியில் இருந்த மரக்கட்டையின் பக்கம் சென்று அதன் மேல் தம் கையை ஊன்றி நின்றார்கள். அங்கே இருந்தவர்களில் அபூ பக்ர்(ரலி) உமர்(ரலி) இருவரும் நபி(ஸல்) அவர்களிடம் அது குறித்துப் பேசப் பயந்து கொண்டு இருந்தபோது, இறைஇல்லத்திலிருந்து வேகமாக வெளியேறிய மக்கள் `தொழுகை சுருக்கப்பட்டு விட்டதா?'' எனப் பேசிக் கொண்டார்கள்.
அப்போது, நபி(ஸல்) அவர்களால் `துல்யதைன்' (நீண்ட கைகளை உடையவர்) என அழைக்கப்படும் (அவர்களின் தோழர்) ஒருவர், ``இறைத்தூதர் அவர்களே! மறந்துவிட்டீர்களா?'' அல்லது தொழுகை சுருக்கப்பட்டு விட்டதா?'' எனக் கேட்டார்.
இறைத்தூதர்(ஸல்), ``நான் மறக்கவும் இல்லை. (தொழுகை) சுருக்கப்படவும் இல்லை'' என்றவுடன், ``இல்லை. தாங்கள் மறந்தே விட்டீர்கள்!'' என அவர் கூறினார்.
உடனே, விடுபட்ட இரண்டு ரக்அத்துகளையும் இறைத்தூதர்(ஸல்) தொழுது பின்னர் ஸலாம் கொடுத்தார்கள். பின்னர் தக்பீர் கூறித் தம் வழக்கமான ஸஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட நீண்டதாகவோ ஸஜ்தாச் செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தி தக்பீர் கூறினார்கள். மீண்டும் தலையை (பூமியில்) வைத்துத் தக்பீர் கூறினார்கள். தம் வழக்கமான ஸஜ்தாவைப் போன்றோ, அல்லது அதைவிட நீண்டதாகவோ ஸஜ்தாச் செய்து பின்னர் தலையை உயர்த்தியவாறே தக்பீர் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இங்கு புகாரீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில், ``அஸா தொழுகை'' என உள்ளது.
352. وَلِأَبِي دَاوُدَ، فَقَالَ: {أَصَدَقَ ذُو الْيَدَيْنِ؟ " فَأَوْمَئُوا: أَيْ نَعَمْ}.وَهِيَ فِي " الصَّحِيحَيْنِ " لَكِنْ بِلَفْظِ: فَقَالُوا.
352. ``துல்யதைன் கூறுவது உண்மையா?'' என நபி(ஸல்) வினவியதற்கு, மக்கள், ``ஆமாம்'' என சைகை செய்தனர்'' என அபூ தாவூதில் உள்ளது.
புகாரீ மற்றும் முஸ்லிமில் ஆம் என வாய்மொழியாகக் கூறிதாக உள்ளது.
353. وَهِيَ فِي رِوَايَةٍ لَهُ: {وَلَمْ يَسْجُدْ حَتَّى يَقَّنَهُ اللهُ تَعَالَى ذَلِكَ}.
353. அபூ தாவூதின் மற்றோர் அறிவிப்பில், (இரண்டு ரக்அத்துடன் ஸலாம் சொல்லிவிட்டோம் என்ற) உறுதியை, அல்லாஹ் ஏற்படுத்தியப் பின்னரே அவர்கள் ஸஜ்தா ஸஹ்வு செய்தார்கள்'' என உள்ளது.
354. وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ -رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ- {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِهِمْ، فَسَهَا فَسَجَدَ سَجْدَتَيْنِ، ثُمَّ تَشَهَّدَ، ثُمَّ سَلَّمَ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَالتِّرْمِذِيُّ وَحَسَّنَهُ، وَالْحَاكِمُ وَصَحَّحَهُ.
354. இறைத்தூதர்(ஸல்) மக்களுக்குத் தொழ வைத்தார்கள். தொழுகையில் மறதிக்கு ஆளாகி, (அதற்குப் பரிகாரமாக) இரண்டு ஸஜ்தாக்கள் செய்தார்கள். பின்னர், தஷ்ஹ்ஹுதை ஓதிவிட்டு ஸலாம் கொடுத்தார்கள் என இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், திர்மிதீ
இமாம் திர்மிதீ இதனை `ஹஸன்' தரத்தில் பதிவிட்டுள்ளார். இமாம் ஹாகிம்(ரஹ்) ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
355. وَعَنْ أَبِي سَعِيدٍ اَلْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ، فَلَمْ يَدْرِ كَمْ صَلَّى أَثْلَاثًا أَوْ أَرْبَعًا ؟ فَلْيَطْرَحِ الشَّكَّ وَلْيَبْنِ عَلَى مَا اسْتَيْقَنَ، ثُمَّ يَسْجُدُ سَجْدَتَيْنِ قَبْلَ أَنْ يُسَلِّمَ، فَإِنْ كَانَ صَلَّى خَمْساً شَفَعْنَ لَهُ صَلَاتَهُ، وَإِنْ كَانَ صَلَّى تَمَامً اكَانَتَا تَرْغِيمًا لِلشَّيْطَانِ"} رَوَاهُ مُسْلِمٌ.
355. ``உங்களில் ஒருவருக்கு, அவருடைய தொழுகையில் ஐயம் ஏற்பட்டு நாம் மூன்று ரக்அத் தொழுதோமா அல்லது நான்கு ரக்அத்துகள் தொழுதோமா எனத் தெரியாமல் போனால், ஐயமானதை (ரக்அத்தை) விட்டுவிட்டு உறுதியானதன் (மூன்று ரக்அத்தின்) அடிப்படையில் செயல்படட்டும். (மீதமுள்ள ஒரு ரக்அத்தைத் தொழுது) பின்னர், ஸலாம் கொடுப்பதற்கு முன்னதாக இரண்டு ஸஜ்தாக்கள் செய்யட்டும். அவர் (இவ்வாறு) ஐந்து ரக்அத்கள் தொழுதிருந்தாலும், அந்த இரண்டு ஸஜ்தாக்களும் (ஒரு ரக்அத்தாய் அமைந்து) அவரின் தொழுகையை இரட்டைப்படை (ஆறு ரக்அத்) எண்ணிக்கையுடையதாய் ஆக்கிவிடும். அவர் (இந்த இரண்டு ஸஜ்தாக்கள் செய்ததன் மூலம்) தொழுகையை (3+1 ஆக) நிறைவு செய்திருந்தால் அது ஷைத்தானின் மூக்கை மண்ணாக்கி (அவமானப்படுத்தி)தாய் அமையும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ சயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்கள்.
நூல்: முஸ்லிம்
356. وَعَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {صَلَّى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا سَلَّمَ قِيلَ لَهُ: يَا رَسُولَ اللهِ، أَحَدَثَ فِي الصَّلَاةِ شَيْءٌ ؟ قَالَ: " وَمَا ذَلِكَ ؟ ".قَالُوا: صَلَّيْتَ كَذَا، قَالَ: فَثَنَى رِجْلَيْهِ وَاسْتَقْبَلَ اَلْقِبْلَةَ، فَسَجَدَ سَجْدَتَيْنِ، ثُمَّ سَلَّمَ، ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ فَقَالَ: " إِنَّهُ لَوْ حَدَثَ فِي الصَّلَاةِ شَيْءٌ أَنْبَأْتُكُمْ بِهِ، وَلَكِنْ إِنَّمَا أَنَا بَشَرٌ أَنْسَى كَمَا تَنْسَوْنَ، فَإِذَا نَسِيتُ فَذَكِّرُونِي، وَإِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ فَلْيَتَحَرَّ الصَّوَابَ، فلْيُتِمَّ عَلَيْهِ، ثُمَّ لِيَسْجُدْ سَجْدَتَيْنِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
356. இறைத்தூதர்(ஸல்) தொழுது ஸலாம் கொடுத்தார்கள். ``இறைத்தூதர் அவர்களே! தொழுகையில் புதிதாக ஏதேனும் சேர்த்துள்ளீர்களா?'' என வினவப்பட்டது.
``அது என்ன?'' என நபி(ஸல்) வினவினார்கள்.
``தாங்கள் இத்தனை இத்தனை (ரக்அத்கள்) தொழ வைத்தீர்கள்'' என மக்கள் (குறிப்பிட்டுக்) கூறினார்கள்.
உடனே, தம் கால்களை திருப்பி கிப்லாவை முன்னோக்கி இரண்டு ஸஜ்தாக்கள் செய்து, ஸலாம் கொடுத்தார்கள். பின்னர் மக்களின் பக்கம் திரும்பி, ``தொழுகையில் எதுவும் அதிகப்படுத்தப்பட்டால் நான் உங்களுக்குத் தெரிவித்தே இருப்பேன். நானும் உங்களைப் போல ஒரு மனிதனே. எனவே, நீங்கள் மறப்பது போன்றே நானும் மறந்துவிடுகிறேன். நான் மறந்துவிடும்போது நீங்கள் எனக்கு நினைவூட்டுங்கள்! உங்களில் ஒருவருக்குத் தொழுகையில் ஐயம் ஏற்பட்டால் அவர் உறுதியானதை ஆராய்ந்து எடுத்துக் கொண்டு, மறதிக்காக இரண்டு ஸஜ்தாக்கள் செய்து கொள்ளட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
357. وَفِي رِوَايَةٍ لِلْبُخَارِيِّ: {فَلْيُتِمَّ، ثُمَّ يُسَلِّمْ، ثُمَّ يَسْجُدْ}.
357. ``தொழுகையை முழுமைப்படுத்தி, பின்னர் ஸலாம் கொடுத்து, (இரண்டு) ஸஜ்தாக்கள் மறதிக்காகச் செய்யட்டும்'' என புகாரீயின் மற்றோர் அறிவிப்பில் உள்ளது.
358. وَلِمُسْلِمٍ: {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَجَدَ سَجْدَتَي السَّهْوِ بَعْدَ السَّلَامِ وَالْكَلَامِ}
358. முஸ்லிமின் அறிவிப்பில் ஸலாம் மற்றும் பேச்சுக்களுக்குப் பின்பு, மறதிக்காக இரண்டு ஸஜ்தாக்கள் செய்தார்கள் என உள்ளது.
359. وَلِأَحْمَدَ، وَأَبِي دَاوُدَ، وَالنَّسَائِيِّ ؛ مِنْ حَدِيثِ عَبْدِ بْنِ جَعْفَرٍ مَرْفُوعاً: {مَنْ شَكَّ فِي صَلَاتِهِ، فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ بَعْدَمَا يُسَلِّمُ} وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ.
359. ``தன் தொழுகையில் ஐயம் கொள்பவர் ஸலாம் கொடுத்தப் பின்பு, இரண்டு ஸஜ்தாக்கள் (மறதிக்காக) செய்து கொள்ளட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர்(ரலி) வாயிலாக ``மர்ஃபூஃ'' எனும் தரத்தில் அஹ்மத், அபூ தாவூத் மற்றும் நஸயீயில் உள்ளது.
இமாம் இப்னு குஸைமா(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
360. وَعَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ {إِذَا شَكَّ أَحَدُكُمْ، فَقَامَ فِي الرَّكْعَتَيْنِ، فَاسْتَتَمَّ قَائِمًا، فَلْيَمْضِ، وَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ، وَإِنْ لَمْ يَسْتَتِمْ قَائِمًا فَلْيَجْلِسْ وَلَا سَهْوَ عَلَيْهِ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَابْنُ مَاجَهْ، وَالدَّارَقُطْنِيُّ، وَاللَّفْظُ لَهُ بِسَنَدٍ ضَعِيفٍ.
360. உங்களில் ஒருவர் இரண்டு ரக்அத்துகள் தொழும்போது (இரண்டாவது ரக்அத்தில்) தஷஹ்ஹுதில் அமராமல்) ஐயம் கொண்டு எழுந்திருந்தால், அவர் அப்படியே நிற்கட்டும். திரும்ப அமரவேண்டாம். இரண்டு ஸஜ்தாக்கள் (இறுதியில்) செய்யயட்டும். அவர் முழுமையாக எழுந்திருக்க வில்லை எனில், அப்படியே அமர்ந்து (தொழுகையை முடித்து) கொள்ளட்டும். அதற்காக ஸஜ்தாச் செய்ய வேண்டியதில்லை என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், இப்னு மாஜா மற்றும் தாரகுத்னீ
இங்கு தாரகுத்னீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது. இது `ளயீஃப்' எனும் பலவீனமான அறிவிப்பாளர் தொடரில் பதிவிடப்பட்டுள்ளது.
361. وَعَنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {لَيْسَ عَلَى مَنْ خَلَفَ الْإِمَامَ سَهْوٌ فَإِنْ سَهَا الْإِمَامُ فَعَلَيْهِ وَعَلَى مَنْ خَلْفَهُ"} رَوَاهُ الْبَزَّارُ وَالْبَيْهَقِيُّ بِسَنَدٍ ضَعِيفٍ.
361. ``இமாமைப் பின்பற்றித் தொழுபவர் தனிப்பட்ட முறையில் மறதிக்கு ஆளானால் அவர் மீது (ஸஜ்தா) ஸஹ்வு இல்லை. ஆனால், இமாம் மறந்துவிட்டால் இமாம் மீதும் அவரைப் பின்பற்றித் தொழுவோர் மீதும் ஸஜ்தா ஸஹ்வு கடமையாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ, பைஹகீ
இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது என இமாம் பைஹகீ மற்றும் பஸ் ஸார்(ரஹ்) குறிப்பிட்டுள்ளனர்.
362. وَعَنْ ثَوْبَانَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {لِكُلِّ سَهْوٍ سَجْدَتَانِ بَعْدَمَا يُسَلِّمُ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَابْنُ مَاجَهْ بِسَنَدٍ ضَعِيفٍ.فَصْــلٌ
362. ``(தொழுகையில் ஏற்படும்) ஒவ்வொரு மறதிக்காகவும் ஸலாமிற்குப் பின்பு இரண்டு ஸஜ்தாக்கள் உள்ளன'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஸவ்பான்(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத், இப்னு மாஜா
இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பு: இதன் அறிவிப்பாளர் தொடரில், இஸ் மாயீல் இப்னு அய்யாஷ் இடம் பெற்றுள்ளார். அவர் ஷாம் வாசிகள் மூலம் அறிவித்தால் அது ஆதாரப்பூர்வமானதாகும். இது ஷாம் வாசிகளிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இது பலவீனமானது அல்ல என்பதே சரியாகும்.
363. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {سَجَدْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي: (إِذَا السَّمَاءُ انْشَقَّتْ)، و: (اِقْرَأْ بِاسْمِ رَبِّكَ)} رَوَاهُ مُسْلِمٌ.
363. ``இதஸ் ஸமாவுன் ஷக்கத்'' மற்றும் `இக்ரஃ பிஸ்மி ரப்பிக் கல்லதீ ஃகலக்' ஆகிய திருக்குர்ஆனின் அத்தியாயங்கள் ஓதப்பட்டபோது நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஸஜ்தா செய்துள்ளோம் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
குறிப்பு: குர்ஆனில் ஸஜ்தா திலாவத் வசனங்களை ஓதும்போது, ஸஜ்தா திலாவத் செய்யவேண்டும் என்பது குறித்த நபிமொழிகள் இந்நூலில் இங்கிருந்து தொடங்குகின்றன.
364. وَعَنِ ابْنِ عَبَّاسٍ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: {( ص ) لَيْسَتْ مِنْ عَزَائِمِ السُّجُودِ، وَقَدْ رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْجُدُ فِيهَا} رَوَاهُ الْبُخَارِيُّ.
364. `ஸாத்' எனும் அத்தியாயத்தை ஓதும்போது ஸஜ்தா அவசியமில்லை. (ஆனால்) அதில் இறைத்தூதர்(ஸல்) ஸஜ்தாச் செய்ய நான் பார்த்துள்ளேன் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
365. وَعَنْهُ: {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَجَدَ بِالنَّجْمِ} رَوَاهُ الْبُخَارِيُّ.
365. இறைத்தூதர்(ஸல்) சூரத்துன் நஜ்மில் ஸஜ்தா செய்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
366. وَعَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {قَرَأْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَلنَّجْمَ، فَلَمْ يَسْجُدْ فِيهَا} مُتَّفَقٌ عَلَيْهِ.
366. நபி(ஸல்) அவர்களிடம் சூரத்துன் நஜ்மை ஓதிக் காண்பித்தபோது, அவர்கள் அதற்காக ஸஜ்தா செய்யவில்லை என ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
367. وَعَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {فُضِّلَتْ سُورَةُ الْحَجِّ بِسَجْدَتَيْنِ}. رَوَاهُ أَبُو دَاوُدَ فِي " الْمَرَاسِيلِ ".
367. சூரத்துல் ஹஜ்ஜிற்கு (திலாவத்திற்கான) இரண்டு ஸஜ்தாக்களால் சிறப்பு வழங்குப்பட்டுள்ளது என ஃகாலித் இப்னு மஅதான்(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இமாம் அபூ தாவூத் தம்முடைய மராஸில் எனும் ஹதீஸ் தொகுப்பில் இதனைப் பதிவிட்டுள்ளார்கள்.
368. وَرَوَاهُ أَحْمَدُ، وَالتِّرْمِذِيُّ مَوْصُولًا مِنْ حَدِيثِ عُقْبَةَ بْنِ عَامِرٍ، وَزَادَ: {فَمَنْ لَمْ يَسْجُدْهُمَا، فَلَا يَقْرَأْهَا} وَسَنَدُهُ ضَعِيفٌ.
368. ``இந்த இரண்டு ஸஜ்தாக்களை (சூரத்துல் ஹஜ்ஜில்) செய்யாதவர், இந்த சூராவை ஓதவேண்டாம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உக்பா இப்னு ஆமிர்(ரலி) வாயிலாக அஹ்மத் மற்றும் திர்மிதீயில் மவ்சூல் எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது.
369. وَعَنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {يَا أَيُّهَا النَّاسُ إِنَّا نَمُرُّ بِالسُّجُودِ فَمَنْ سَجَدَ فَقَدْ أَصَابَ، وَمَنْ لَمْ يَسْجُدْ فَلَا إِثْمَ عَلَيْهِ}. رَوَاهُ الْبُخَارِيُّ. وَفِيهِ: {إِنَّ اللهَ تَعَالَى لَمْ يَفْرِضِ السُّجُودَ إِلَّا أَنْ نَشَاءَ}.وَهُوَ فِي " الْمُوَطَّأِ.
369. ``மக்களே! நிச்சயமாக நாம் ஸஜ்தாவுக்கான இறைவசனங்களைக் கடந்து செல்கிறோம். அப்போது ஸஜ்தாச் செய்தவர் சரியாகச் செய்தார். (ஸஜ்தா) செய்யாதவர் மீது குற்றமில்லை'' என உமர்(ரலி) கூறினார்கள்.
நூல்: புகாரீ
``(ஸஜ்தா வசனத்தை ஓதும்போது) விரும்பிச் செய்பவரைத் தவிர மற்றவர் மீது அல்லாஹ் ஸஜ்தாவைக் கடமையாக்கவில்லை என்றும் அவர்கள் கூறினார்கள் என முஅத்தாவில் பதிவிடப்பட்டுள்ளது.
370. وَعَنِ ابْنِ عُمَرَ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: {كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ عَلَيْنَا الْقُرْآنَ، فَإِذَا مَرَّ بِالسَّجْدَةِ، كَبَّرَ، وَسَجَدَ، وَسَجَدْنَا مَعَهُ} رَوَاهُ أَبُو دَاوُدَ بِسَنَدٍ فِيهِ لِيِنٌ.
370. இறைத்தூதர்(ஸல்) எங்கள் முன்பு குர்ஆன் ஓதும்போது ஸஜ்தா வசனங்களைக் கடந்து சென்றால் `அல்லாஹு அக்பர்' எனக் கூறி ஸஜ்தாச் செய்வார்கள். நாங்களும் அவர்களுடன் ஸஜ்தாச் செய்வோம் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இதனை இமாம் அபூ தாவூத்(ரஹ்) பலவீனமான அறிவிப்பாளர் தொடருடன் பதிவிட்டுள்ளார்.