485. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا صَلَّى أَحَدُكُمُ الْجُمُعَةَ فَلْيُصَلِّ بَعْدَهَا أَرْبَعًا} رَوَاهُ مُسْلِمٌ.
485. ``உங்களில் ஒருவர் ஜுமுஆ தொழுதுவிட்டால், அதன் பின்னர், நான்கு ரக்அத்துகள் (சுன்னத்) தொழட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
நூல்: முஸ்லிம்
486. وَعَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، أَنَّ مُعَاوِيَةَ قَالَ لَهُ: {إِذَا صَلَّيْتَ الْجُمُعَةَ فَلَا تَصِلْهَا بِصَلَاةٍ، حَتَّى تُكَلَّمَ أَوْ تَخْرُجَ، فَإِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَنَا بِذَلِكَ: أَنْ لَا نُوصِلَ صَلَاةً بِصَلَاةٍ حَتَّى نَتَكَلَّمَ أَوْ نَخْرُجَ} رَوَاهُ مُسْلِمٌ.
486. ``நீ ஜுமுஆ தொழுதுவிட்டால், நீ பேசாத வரை அல்லது (இறைஇல்லத்தை விட்டு) வெளியேறாத வரை அதனுடன் வேறு எந்தத் தொழுகையையும் இணைக்காதே! நாங்கள் பேசாத வரை அல்லது வெளியேறாத வரை ஒரு தொழுகையுடன் மற்றொரு தொழுகையை இணைக்கக் கூடாது என்றே இறைத்தூதர்(ஸல்) எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்பதையும் ஸாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
487. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنِ اغْتَسَلَ، ثُمَّ أَتَى الْجُمُعَةَ، فَصَلَّى مَا قُدِّرَ لَهُ، ثُمَّ أَنْصَتَ، حَتَّى يَفْرُغَ اَلْإِمَامُ مِنْ خُطْبَتِهِ، ثُمَّ يُصَلِّي مَعَهُ: غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الْأُخْرَى، وَفَضْلُ ثَلَاثَةِ أَيَّامٍ} رَوَاهُ مُسْلِمٌ.
487. ``குளித்து, பின்னர் ஜுமுஆவிற்கு வந்து, தம்மால் இயன்ற அளவு தொழுதுவிட்டு, பின்னர் இமாம் உரையை முடிக்கும் வரையிலும் அமைதியாய் இருந்து, பின்னர், அவருடன் தொழுபவரின் அந்த ஜுமுஆவிற்கும் அதற்கு அடுத்து வரும் ஜுமுஆவிற்கும் இடையில் அவர் செய்யும் சிறுபிழைகள் மற்றும் மேலதிகமாக மூன்று நாள்கள் அவர் செய்யும் சிறுபிழைகள் அவருக்காக மன்னிக்கப்படுகின்றன'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
488. وَعَنْهُ؛ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ يَوْمَ الْجُمُعَةِ فَقَالَ: {فِيهِ سَاعَةٌ لَا يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ وَهُوَ قَائِمٌ يُصَلِّي، يَسْأَلُ اللهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ، وَأَشَارَ بِيَدِهِ يُقَلِّلُهَا} مُتَّفَقٌ عَلَيْهِ. وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ: {وَهِيَ سَاعَةٌ خَفِيفَةٌ}.
488. ``இதில் ஒரு நேரம் இருக்கிறது; ஒரு முஸ்லிம் அடியான் தொழுதபடி நின்றிருக்கும் நேரம் அதன் நேரத்துடன் ஒத்து அமைந்துவிடுமாயின், அப்போது அவன் அல்லாஹ்விடம் அவன் கேட்பதை அடல்லாஹ் அவனுக்குக் கொடுக்காமல் இருப்பதில்லை என்று ஜுமுஆ நாள் குறித்து இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள். இன்னும் தம் கையால் அதன் அளவைக் குறைவாகக் சுட்டிக் காண்பித்தார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
``அந்த நேரம் சொற்பமான நேரம்'' என முஸ்லிமில் உள்ளது.
489. وَعَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِيهِ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: {هِيَ مَا بَيْنَ أَنْ يَجْلِسَ الْإِمَامُ إِلَى أَنْ تُقْضَى الصَّلَاةُ} رَوَاهُ مُسْلِمٌ، وَرَجَّحَ اَلدَّارَقُطْنِيُّ أَنَّهُ مِنْ قَوْلِ أَبِي بُرْدَةَ.
489. ``அந்நேரம் இமாம் (மிம்பரில்) அமர்ந்ததிலிருந்து தொழுகையை முடிக்கும் வரை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூற நான் செவியுற்றேன். என அபூ புர்தா தம் தந்தை வாயிலாக அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
இது அபூ புர்தாவின் கூற்று என்பதே சரி என இமாம் தாரகுத்னீ(ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.
490. وَفِي حَدِيثِ عَبْدِ اللهِ بْنِ سَلَامٍ عِنْدَ ابْنِ مَاجَهْ.
490. ``அந்நேரம் அஸ் ர் தொழுகையிலிருந்து சூரியன் மறையும் வரை'' என அப்துல்லாஹ் இப்னு ஸலாம் வாயிலாக இப்னு மாஜாவில் உள்ளது.
491. وَعَنْ جَابِرِ عِنْدَ أَبِي دَاوُدَ، وَالنَّسَائِيّ ِ: {أَنَّهَا مَا بَيْنَ صَلَاةِ الْعَصْرِ إِلَى غُرُوبِ الشَّمْسِ}. وَقَدْ اِخْتُلَفَ فِيهَا عَلَى أَكْثَرَ مِنْ أَرْبَعِينَ قَوْلًا، أَمْلَيْتُهَا فِي "شَرْحِ الْبُخَارِيِّ".
491. ``அந்நேரம் அஸ் ர் தொழுகையிலிருந்து சூரியன் மறையும் வரை'' என ஜாபிர்(ரலி) வாயிலாக அபூ தாவூத் மற்றும் நஸயீயில் உள்ளது.
இது சம்பந்தமாக 40க்கும் மேற்பட்ட மாறுபட்ட கூற்றிரனை புகாரீயின் விரிவுரையில் நான் இடம் பெறச் செய்துள்ளேன் என தொகுப்பாசிரியர் இமாம் இப்னு ஹஜர்(ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.
492. وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {مَضَتِ السُّنَّةُ أَنَّ فِي كُلِّ أَرْبَعِينَ فَصَاعِدًا جُمُعَةً} رَوَاهُ الدَّارَقُطْنِيُّ بِإِسْنَادٍ ضَعِيفٍ.
492. நாற்பது அல்லது அதற்கும் அதிகமான நபர்கள் இருந்தாலே ஜுமுஆத் தொழுகை உண்டு என்பது சுன்னத்தாய் இருந்தது என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்: தாரகுத்னீ
இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது என இமாம் தாரகுத்னீ(ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.
493. وَعَنْ سَمُرَةَ بنِ جُنْدُبٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَسْتَغْفِرُ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ كُلَّ جُمُعَةٍ} رَوَاهُ الْبَزَّارُ بِإِسْنَادٍ لَيِّنٍ.
493. ஒவ்வொரு ஜுமுஆவிலும், முஃமினான (இறைநம்பிக்கையுள்ள) ஆண்களுக்கும், பெண்களுக்கும் இறைத்தூதர்(ஸல்) பாவமன்னிப்புக் கோருபவர்களாய் இருந்தார்கள் என ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார்.
நூல்: பஸ்ஸார்
இதன் அறிவிப்பாளர் தொடர் `லய்யின்' எனும் பலவீனமானது என இமாம் பஸ் ஸார்(ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.
494. وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ رَضِيَ اللهُ عَنْهُمَا {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ فِي الْخُطْبَةِ يَقْرَأُ آيَاتٍ مِنَ الْقُرْآنِ، وَيُذَكِّرُ النَّاسَ} رَوَاهُ أَبُو دَاوُدَ. وَأَصْلُهُ فِي مُسْلِمٍ.
494. குத்பா எனும் உரையில், இறைத்தூதர்(ஸல்) குர்ஆன் வசனங்களில் சிலவற்றை ஓதுவார்கள். மேலும், மக்களுக்கு அறிவுரை வழங்குவார்கள் என ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இதன் மூலம் முஸ்லிமில் உள்ளது.
495. وَعَنْ طَارِقِ بْنِ شِهَابٍ؛ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {الْجُمُعَةُ حَقٌّ وَاجِبٌ عَلَى كُلِّ مُسْلِمٍ فِي جَمَاعَةٍ إِلَّا أَرْبَعَةً: مَمْلُوكٌ، وَاِمْرَأَةٌ، وَصَبِيٌّ، وَمَرِيضٌ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَقَالَ: لَمْ يَسْمَعْ طَارِقٌ مِنَ اَلنَّبِيِّ.وَأَخْرَجَهُ الْحَاكِمُ مِنْ رِوَايَةِ طَارِقٍ اَلْمَذْكُورِ عَنْ أَبِي مُوسَى.
495. ``அடிமைகள், பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் ஆகிய நான்கு நபர்களைத் தவிர்த்து ஜுமுஆ தொழுகை, ஜமாஅத்துடன் தொழுதல் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என தாரிக் இப்னு ஷிஹாப்(ரஹ்) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இதனை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து தாரிக் செவியுறவில்லை என இமாம் அபூ தாவூத்(ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.
மேற்கண்ட அறிவிப்பை அபூ மூஸா(ரலி) வாயிலாக தாரிக் அறிவித்தார் என இமாம் ஹாகிம்(ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.
496. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَيْسَ عَلَى مُسَافِرٍ جُمُعَةٌ} رَوَاهُ الطَّبَرَانِيُّ بِإِسْنَادٍ ضَعِيفٍ.
496. ``பயணி மீது ஜுமுஆ (கடமை) இல்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: தபரானீ
இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது என இமாம் தப்ரானீ(ரஹ்) பதிவிட்டுள்ளார்.
497. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اسْتَوَى عَلَى الْمِنْبَرِ اسْتَقْبَلْنَاهُ بِوُجُوهِنَا} رَوَاهُ التِّرْمِذِيُّ، بِإِسْنَادٍ ضَعِيفٍ.
497. இறைத்தூதர்(ஸல்) மிம்பரில் நின்றால், நாங்கள் எங்கள் முகங்களை அவர்களை நோக்கி வைத்துக் கொள்வோம் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: திர்மிதீ
இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது என இமாம் திர்மிதீ(ரஹ்) குறிப்பிட்டுள்ளார்..
498. وَلَهُ شَاهِدٌ مِنْ حَدِيثِ الْبَرَاءِ عِنْدَ اِبْنِ خُزَيْمَةَ.
498. 497வது ஹதீஸிற்கு சான்றாக பராவு(ரலி) வாயிலாக இப்னு குஸைமாவில் ஒர் அறிவிப்பு உள்ளது.
499. وَعَنِ الْحَكَمِ بْنِ حَزْنٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {شَهِدْنَا الْجُمُعَةَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَامَ مُتَوَكِّئًا عَلَى عَصًا أَوْ قَوْسٍ} رَوَاهُ أَبُو دَاوُدَ.بَابُ صَلَاةِ الْخَوْفِ
499. நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஜுமுஆவில் பங்கேற்றோம். அப்போது, இறைத்தூதர்(ஸல்) தடி அல்லது வில்லைப் பிடித்தவர்களாய் நிற்பார்கள் என ஹகீம் இப்னு `ஹஸன்'(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
500. عَنْ صَالِحِ بْنِ خَوَّاتٍ، {عَمَّنْ صَلَّى مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ ذَاتِ الرِّقَاعِ صَلَاةَ الْخَوْفِ: أَنَّ طَائِفَةً صَلَّتْ مَعَهُ وَطَائِفَةٌ وِجَاهَ الْعَدُوِّ، فَصَلَّى بِالَّذِينَ مَعَهُ رَكْعَةً، ثُمَّ ثَبَتَ قَائِمًا وَأَتَمُّوا لِأَنْفُسِهِمْ، ثُمَّ اِنْصَرَفُوا فَصَفُّوا وِجَاهَ الْعَدُوِّ، وَجَاءَتِ الطَّائِفَةُ الْأُخْرَى، فَصَلَّى بِهِمُ الرَّكْعَةَ الَّتِي بَقِيَتْ، ثُمَّ ثَبَتَ جَالِسًا وَأَتَمُّوا لِأَنْفُسِهِمْ، ثُمَّ سَلَّمَ بِهِمْ} مُتَّفَقٌ عَلَيْهِ، وَهَذَا لَفْظُ مُسْلِمٍ.وَوَقَعَ فِي "الْمَعْرِفَةِ" لِابْنِ مَنْدَهْ، عَنْ صَالِحِ بْنِ خَوَّاتٍ، عَنْ أَبِيهِ.
500. நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தாத்துர் ரிகாஃ போரின்போது ஸலாத்துல் கவ்ஃப் (அச்சத் தொழுகை) தொழுதோம். அப்போது, நபித்தோழர்களின் ஒரு கூட்டம் ஸஃப்ஃபை சரி செய்தது. மற்றொரு கூட்டம் எதிரிகளுடன் போரிட்டுக் கொண்டிருந்தது. இறைத்தூதர்(ஸல்) அந்தக் கூட்டத்திற்கு ஒரு ரக்அத் தொழுகை நடத்தினார்கள். பின்னர், அவர்கள் நின்றே இருந்தார்கள். பின்னர், அந்தக் கூட்டம் எழுந்து நின்று அவர்களாக மீதித் தொழுகையை நிறைவேற்றினார்கள். பின்னர், அவர்கள் எதிரிகள் முன்பு அணியாக நின்றார்கள். பின்னர், (எதிரிகளை முன்னோக்கி நின்றிருந்த) இரண்டாவது அணி தொழுகைக்கு வந்தது. அவர்களுக்கு இறைத்தூதர்(ஸல்) முன்புள்ளவர்களுக்குத் தொழுகை நடத்தியது போன்றே) ஒரு ரக்அத் தொழ வைத்தார்கள். பின்னர், அமர்ந்து கொண்டார்கள். அவர்களும் தங்களின் தொழுகையைப் முழுமையாக்கினார்கள். பின்னர், இறைத்தூதர்(ஸல்) ஸலாம் கொடுத்தார்கள் என ஸாலிஹ் இப்னு ஃகவ்வாத்(ரலி) நபி(ஸல்) அவர்களுடன் தொழுத தோழர் ஒருவரிடமிருந்து அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது. ஸாலிஹ் இப்னு ஃகவ்வாத்(ரலி) தம் தந்தையின் வாயிலாக இதனை அறிவித்தார் என இப்னு மன்தஹ் தம்முடைய `கிதாபுல் மஅரிஃபா' எனும் நூலில் பதிவிட்டுள்ளார்.
501. وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: {غَزَوْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قِبَلَ نَجْدٍ، فَوَازَيْنَا الْعَدُوَّ، فَصَافَفْنَاهُمْ، فَقَامَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِنَا، فَقَامَتْ طَائِفَةٌ مَعَهُ، وَأَقْبَلَتْ طَائِفَةٌ عَلَى الْعَدُوِّ، وَرَكَعَ بِمَنْ مَعَهُ، وَسَجَدَ سَجْدَتَيْنِ، ثُمَّ انْصَرَفُوا مَكَانَ الطَّائِفَةِ الَّتِي لَمْ تُصَلِّ فَجَاءُوا، فَرَكَعَ بِهِمْ رَكْعَةً، وَسَجَدَ سَجْدَتَيْنِ، ثُمَّ سَلَّمَ، فَقَامَ كُلُّ وَاحِدٍ مِنْهُمْ، فَرَكَعَ لِنَفْسِهِ رَكْعَةً، وَسَجَدَ سَجْدَتَيْنِ} مُتَّفَقٌ عَلَيْهِ، وَهَذَا لَفْظُ الْبُخَارِيِّ.
501. நஜ்து கூட்டத்தாருடன் நடந்த போரில், இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நானும் பங்கேற்றேன். அப்போது, நாங்கள் எதிரிகளின் முன்பு நேருக்கு நேர் அணிவகுத்து நின்றோம். அப்போது, இறைத்தூதர்(ஸல்) எழுந்து நின்று எங்கள் அணிக்குத் தொழுகை நடத்தினார்கள். மற்றோர் அணி எதிரிகளுடன் போரிட்டுக் கொண்டிருந்தது. இறைத்தூதர்(ஸல்) தம்முடன் (தொழுகையில்) நின்றோருக்கு ஒரு ருகூஃ மற்றும் இரண்டு ஸஜ்தாக்களை நிறைவேற்றினார்கள். பின்னர், அந்த அணியினர் அதுவரை தொழாமலிருந்த அணியினரின் இடத்திற்குச் சென்றார்கள். அடுத்த அணியினர் வந்தனர். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஒரு ருகூஃ மற்றும் இரண்டு ஸஜ்தாக்களை நிறைவு செய்து ஸலாம் கொடுத்தார்கள். பின்னர், அவர்கள் எழுந்து நின்று தனித்தனியாக ஒரு ருகூஃ மற்றும் இரண்டு ஸஜ்தாக்கள் செய்து தொழுகையை நிறைவு செய்தனர் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு புகாரீயின் வாசகம் இடம்பெற்றுள்ளது.
502. وَعَنْ جَابِرٍ قَالَ: {شَهِدْتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْخَوْفِ، فَصَفَّنَا صَفَّيْنِ: صَفٌّ خَلْفَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْعَدُوُّ بَيْنَنَا وَبَيْنَ الْقِبْلَةِ، فَكَبَّرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَبَّرْنَا جَمِيعًا، ثُمَّ رَكَعَ وَرَكَعْنَا جَمِيعًا، ثُمَّ رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ وَرَفَعْنَا جَمِيعًا، ثُمَّ اِنْحَدَرَ بِالسُّجُودِ وَالصَّفُّ الَّذِيْ يَلِيهِ، وَقَامَ الصَّفُّ الْمُؤَخَّرُ فِي نَحْرِ الْعَدُوِّ، فَلَمَّا قَضَى السُّجُودَ، قَامَ الصَّفُّ الَّذِيْ يَلِيهِ...} فَذَكَرَ الْحَدِيثَ.وَفِي رِوَايَةٍ: {ثُمَّ سَجَدَ وَسَجَدَ مَعَهُ الصَّفُّ الْأَوَّلُ، فَلَمَّا قَامُوا سَجَدَ الصَّفُّ الثَّانِي، ثُمَّ تَأَخَّرَ الصَّفُّ الْأَوَّلِ وَتَقَدَّمَ الصَّفُّ الثَّانِي...} فَذَكَرَ مِثْلَهُ.وَفِي آخِرِهِ: {ثُمَّ سَلَّمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسَلَّمْنَا جَمِيعًا} رَوَاهُ مُسْلِمٌ.
502. இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் அச்சத் தொழுகையில் நான் பங்கேற்றேன். அப்போது நாங்கள் இரண்டு அணிகளை அமைத்தோம். ஒன்று இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்றது. அப்போது எதிரிகள் கிப்லாவிற்கும் எங்களுக்கும் இடையில் இருந்தனர். இறைத்தூதர்(ஸல்), `அல்லாஹு அக்பர்' எனத் தக்பீர் கூறினார்கள்; நாங்களும் தக்பீர் கூறினோம். பின்னர், இறைத்தூதர்(ஸல்) ருகூஃ செய்தார்கள். நாங்களும் ருகூஃ செய்தோம். பின்னர், அவர்கள் தம் தலையை உயர்த்தினார்கள். நாங்களும் தலையை உயர்த்தினோம். பின்னர், அவர்களும் அவர்களை அடுத்திருந்த அணியினரும் ஸஜ்தா செய்தார்கள். மற்றோர் அணியினர் எதிரிகளின் நெஞ்சிற்கு முன் நின்றிருந்தனர். ஸஜ்தா முடிந்தவுடன் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடனிருந்த அணியினர் எழுந்தனர் என ஜாபிர்(ரலி) அறிவித்தார். (ஹதீஸ் சுருக்கம்)
மற்றோர் அறிவிப்பின் படி, பின்னர் இறைத்தூதர்(ஸல்) ஸஜ்தாச் செய்தார்கள். முதல் அணியினரும் ஸஜ்தாச் செய்தனர். அந்த முதல் எழுந்த உடன் இரண்டாவது அணியினர் ஸஜ்hச் செய்தனர். பின்ன, முதல் அணியினர் (தொழுகைக்காக) பின் தங்கினர். இரண்டாவது அணி போருக்காக முன்னால் சென்றனர்.
அறிவிப்பாளர் இவ்வாறே அறிவித்தார். இறுதியில் இறைத்தூதர்(ஸல்) ஸலாம் சொடுத்தார்கள் நாங்களும் ஸலாம் கொடுத்தோம்.
நூல்: முஸ்லிம்
503. وَلِأَبِي دَاوُدَ: عَنْ أَبِي عَيَّاشٍ الزُّرَقِيِّ مِثْلُهُ، وَزَادَ: {أَنَّهَا كَانَتْ بِعُسْفَانَ}.
503. அபூ அய்யாஷ் அஸ்ஸுரகீ(ரலி) வாயிலாக அபூ தாவூதில் 502 வது ஹதீஸ் போன்றே உள்ளது. அந்தத் தொழுகை உஸ்ஃபான் எனும் இடத்தில் நடந்தது என்றும் அதில் பதிவிடப்பட்டுள்ளது.
504. وَلِلنَّسَائِيِّ مِنْ وَجْهٍ آخَرَ عَنْ جَابِرٍ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِطَائِفَةٍ مِنْ أَصْحَابِهِ رَكْعَتَيْنِ، ثُمَّ سَلَّمَ، ثُمَّ صَلَّى بِآخَرِينَ أَيْضًا رَكْعَتَيْنِ، ثُمَّ سَلَّمَ}.
504. இறைத்தூதர்(ஸல்) தம் தோழர்களில் ஒரு அணியினருக்கு இரண்டு ரக்அத்துக்கள் தொழவைத்து ஸலாம் கொடுத்தார்கள். பின்னர், இரண்டாவது அணியினருக்கும் இரண்டு ரக்அத்துகள் தொழவைத்து ஸலாம் கொடுத்தார்கள் என ஜாபிர்(ரலி) வாயிலாக நஸயீயில் பதிவிடப்பட்டுள்ளது.