505. وَمِثْلُهُ لِأَبِي دَاوُدَ، عَنْ أَبِي بَكْرَةَ.
505. அபூ தாவூதில் 504 வது ஹதீஸ் போன்றே அபூ பக்ரா(ரலி) வாயிலாக உள்ளது.
506. وَعَنْ حُذَيْفَةَ: {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى صَلَاةَ الْخَوْفِ بِهَؤُلَاءِ رَكْعَةً، وَبِهَؤُلَاءِ رَكْعَةً، وَلَمْ يَقْضُوا} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ، وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ.
506. இறைத்தூதர்(ஸல்) அச்ச நேரத் தொழுகையை ஓர் அணியினருக்கு ஒரு ரக் அத் தொழ வைத்தார்கள். மற்றோர் அணியினருக்கும் ஒரு ரக்அத் தொழ வைத்தார்கள். அவர்கள் தங்களின் தொழுகையை (அதற்கு) மேல் முழுமைப்படுத்தவில்லை என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத் மற்றும் நஸயீ
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
507. وَمِثْلُهُ عِنْدَ ابْنِ خُزَيْمَةَ: عَنِ ابْنِ عَبَّاسٍ.
507. இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாக 506வது ஹதீஸ் போன்றே இப்னு குஸைமாவில் உள்ளது.
508. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {صَلَاةُ الْخَوْفِ رَكْعَةٌ عَلَى أَيِّ وَجْهٍ كَانَ} رَوَاهُ الْبَزَّارُ بِإِسْنَادٍ ضَعِيفٍ.
508. ``அச்சநிலைத் தொழுகை எத்திசை நோக்கியாவது ஒரு ரக்அத் தொழுவதாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: பஸ் ஸார்
இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது என இமாம் பஸ் ஸார்(ரஹ்) குறிப்பிட்டுளளார்.
509. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ مَرْفُوعًا: {لَيْسَ فِي صَلَاةِ الْخَوْفِ سَهْوٌ} أَخْرَجَهُ الدَّارَقُطْنِيُّ بِإِسْنَادٍ ضَعِيفٍ.بَابُ صَلَاةِ الْعِيدَيْنِ
509. ``அச்சநிலைத் தொழுகையில் ஸஜ்தா ஸஹ்வு இல்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) வாயிலாக `மர்ஃபூஃ' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இமாம் தாரகுத்னீ(ரஹ்) இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு பெருநாள்களின் தொழுகை
510. عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اَلْفِطْرُ يَوْمَ يُفْطِرُ النَّاسُ، وَالْأَضْحَى يَوْمَ يُضَحِّي النَّاسُ} رَوَاهُ التِّرْمِذِيُّ.
510. ``மக்கள் நோன்பை துறந்து அதை நிறைவுசெய்யும் நாளே ஈதுல் ஃபித்ரின் நாளாகும். மக்கள் குர்பானி கொடுக்கும் நாளே குர்பானிப் பெருநாளாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
511. وَعَنْ أَبِي عُمَيْرِ بْنِ أَنَسٍ، عَنْ عُمُومَةٍ لَهُ مِنَ الصَّحَابَةِ، {أَنَّ رَكْبًا جَاءُوا، فَشَهِدُوا أَنَّهُمْ رَأَوُا الْهِلَالَ بِالْأَمْسِ، فَأَمَرَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُفْطِرُوا، وَإِذَا أَصْبَحُوا يَغْدُوا إِلَى مُصَلَّاهُمْ} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ -وَهَذَا لَفْظُهُ- وَإِسْنَادُهُ صَحِيحٌ.
511. நபி(ஸல்) அவர்களிடம் ஒரு சிறு பயணக் கூட்டத்தினர் வந்து தாங்கள் நேற்று இரவு பிறை தாங்கள் நேற்று இரவு பிறை பார்த்தாகச் சொன்னார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) நோன்பை விட்டுவிடுமாறும், மறுநாள் காலை தொழுமிடம் செல்லுமாறும் மக்களுக்குக் கட்டளையிட்டார்கள் என அபூ உமைர் இப்னு அனஸ் இப்னு மாலிக்(ரலி) நபித்தோழர்களாகத் திகழ்ந்த தன் சிறிய, பெரிய தந்தையிடமிருந்து அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத்
இங்கு அபூ தாவூதின் வாசகம் இடம் பெற்றுள்ளது. மேலும், இது `ஸஹீஹ்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
512. وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَغْدُو يَوْمَ الْفِطْرِ حَتَّى يَأْكُلَ تَمَرَاتٍ} أَخْرَجَهُ الْبُخَارِيُّ. وَفِي رِوَايَةٍ مُعَلَّقَةٍ. وَوَصَلَهَا أَحْمَدُ: وَيَأْكُلُهُنَّ افْرَادًا.
512. இறைத்தூதர்(ஸல்) நோன்புப் பெருநாளில் பேரீச்சம் பழங்கள் சிலவற்றை சாப்பிடாமல் (பெருநாள் தொழுகைக்குக்) காலையில் செல்ல மாட்டார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
மற்றோர் அறிவிப்பின்படி இது முஅல்லக் எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இன்னும் அவர்கள் உண்ணும் (பேரீச்சம்பழம்) ஒற்றைப்படையாய் இருக்கும் என அஹ்மதில் உள்ளது.
513. وَعَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ قَالَ: {كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَخْرُجُ يَوْمَ الْفِطْرِ حَتَّى يَطْعَمَ، وَلَا يَطْعَمُ يَوْمَ الْأَضْحَى حَتَّى يُصَلِّيَ} رَوَاهُ أَحْمَدُ، وَالتِّرْمِذِيُّ، وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ.
513. இறைத்தூதர்(ஸல்) நோன்புப் பெருநாளன்று சாப்பிடாமல் (தொழுகைக்காக) வெளியேற மாட்டார்கள். குர்பானிப் பெருநாளில் தொழாதவரை சாப்பிட மாட்டார்கள் என்று இப்னு புரைதா தம் தந்தையின் வாயிலாக அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், திர்மிதீ
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
514. وَعَنْ أُمِّ عَطِيَّةَ قَالَتْ: {أُمِرْنَا أَنْ نُخْرِجَ الْعَوَاتِقَ، وَالْحُيَّضَ فِي الْعِيدَيْنِ؛ يَشْهَدْنَ الْخَيْرَ وَدَعْوَةَ الْمُسْلِمِينَ، وَيَعْتَزِلُ الْحُيَّضُ الْمُصَلَّى} مُتَّفَقٌ عَلَيْهِ.
514. பருவமடைந்த மற்றும் மாதவிலக்கான (அனைத்துப்) பெண்களையும் பெருநாள் தொழுகைக்கு வெளியே அனுப்புமாறு இறைத்தூதர்(ஸல்) எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். நற்பணிகளில் மற்றும் முஸ்லிம்களின் அழைப்புப் பணியில் அவர்கள் பங்கு பெறுவதற்காக. ஆனால், மாத விலக்கான பெண்கள், தொழும் இடத்திலிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும். என உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
குறிப்பு: பெருநாள் தொழுகை இறைஇல்லங்களில் நடத்தப்பட்டால் மாதவிடாய்ப் பெண்களையும், பிரசவத் தீட்டுள்ள பெண்களையும் அழைத்து வரவேண்டியதில்லை. அப்படி வந்துவிட்டாலும் அவர்கள் இறைஇல்லத்திற்கு வெளியில் அமரவேண்டும்.
515. وَعَنِ ابْنِ عُمَرَ: {كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ، وَعُمَرُ: يُصَلُّونَ الْعِيدَيْنِ قَبْلَ الْخُطْبَةِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
515. நபி(ஸல்), அபூ பக்ர்(ரலி) மற்றும் உமர்(ரலி) ஆகியோர் உரை நிகழ்த்துவதற்கு முன்பு இரண்டு பெருநாள்களிலும் தொழுது வந்தார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
516. وَعَنِ ابْنِ عَبَّاسٍ: {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى يَوْمَ الْعِيدِ رَكْعَتَيْنِ، لَمْ يُصَلِّ قَبْلَهَا وَلَا بَعْدَهَا} أَخْرَجَهُ السَّبْعَةُ.
516. இறைத்தூதர்(ஸல்) பெருநாளன்று இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அதற்கு முன்போ அல்லது அதற்குப் பின்போ (எதுவும்) தொழவில்லை என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம், அபூ தாவூத், இப்னுமாஜா, நஸயீ, திர்மிதீ மற்றும் முஸ்னத் அஹ்மத்
517. وَعَنْهُ: {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الْعِيدَ بِلَا أَذَانٍ، وَلَا إِقَامَةٍ} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ. وَأَصْلُهُ فِي الْبُخَارِيِّ.
517. இறைத்தூதர்(ஸல்) பெருநாள் தொழுகையை பாங்கு மற்றும் `இகாமத்' இன்றி தொழுதார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இதன் மூலம் புகாரீயில் உள்ளது.
518. وَعَنْ أَبِي سَعِيدٍ قَالَ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُصَلِّي قَبْلَ الْعِيدِ شَيْئًا، فَإِذَا رَجَعَ إِلَى مَنْزِلِهِ صَلَّى رَكْعَتَيْنِ} رَوَاهُ اِبْنُ مَاجَهْ بِإِسْنَادٍ حَسَنٍ.
518. இறைத்தூதர்(ஸல்) பெருநாள் தொழுகைக்கு முன்பு எதுவும் தொழ மாட்டார்கள். அவர்கள் தம் இல்லத்திற்குத் திரும்பினால் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள் என அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
நூல்: இப்னு மாஜா
இமாம் இப்னு மாஜா இதனை `ஹஸன்' எனும் தரம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
519. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ يَوْمَ الْفِطْرِ وَالْأَضْحَى إِلَى الْمُصَلَّى، وَأَوَّلُ شَيْءٍ يَبْدَأُ بِهِ الصَّلَاةُ، ثُمَّ يَنْصَرِفُ فَيَقُومُ مُقَابِلَ النَّاسِ - وَالنَّاسُ عَلَى صُفُوفِهِمْ- فَيَعِظُهُمْ وَيَأْمُرُهُمْ} مُتَّفَقٌ عَلَيْهِ.
519. நோன்புப் பெருநாளிலும், குர்பானிப் பெருநாளிலும் இறைத்தூதர்(ஸல்) தொழுகை தொழும் திடலிற்குச் செல்வார்கள். முதன்முதலில் தொழுகையைத்தான் தொடங்குவார்கள். பின்னர், எழுந்து, மக்களுக்கு முன்பு நிற்பார்கள். இன்னும், மக்கள் தங்களின் வரிசையிலேயே அமர்ந்திருப்பார்கள். அப்போது, அவர்களுக்கு உரை நிகழ்த்தி கட்டளை இடுவார்கள் என அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
520. وَعَنْ عَمْرِوِ بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ: قَالَ نَبِيُّ اللهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اَلتَّكْبِيرُ فِي الْفِطْرِ سَبْعٌ فِي الْأُولَى وَخَمْسٌ فِي الْآخِرَةِ، وَالْقِرَاءَةُ بَعْدَهُمَا كِلْتَيْهِمَا} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ.وَنَقَلَ التِّرْمِذِيُّ عَنِ الْبُخَارِيِّ تَصْحِيحَهُ.
520. ``நோன்புப் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீரும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீரும் உள்ளன. அவை இரண்டிற்கும் பின்னரும் கிராஅத் (குர்ஆனை ஓதுதல்) உண்டு'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அம்ரு இப்னு ஷுஐப் தம் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இமாம் புகாரீ(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார் என்பதை இமாம் திர்மிதீ(ரஹ்) பதிவிட்டுள்ளார்.
521. وَعَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ قَالَ: {كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الْأَضْحَى وَالْفِطْرِ بِـ (ق)، وَ (اقْتَرَبَتْ).} أَخْرَجَهُ مُسْلِمٌ.
521. இறைத்தூதர்(ஸல்) நோன்புப் பெருநாள் மற்றும் குர்பானிப் பெருநாளில் `காஃப்' மற்றும் `இக்தரபாத்' ஆகிய அத்தியாயங்களை ஓதுவார்கள் என அபூ வாகித் அல் லைஸி(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
குறிப்பு: குர்ஆனின் 50 வது அத்தியாயம் காஃப் ஆகும். 54 வது அத்தியாயம் இக்தரபத் எனப்படும்.
522. وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ يَوْمُ الْعِيدِ خَالَفَ الطَّرِيقَ} أَخْرَجَهُ الْبُخَارِيُّ.
522. இறைத்தூதர்(ஸல்) பெருநாளின்போது (தொழுகைக்கு) செல்லும் போதும், (தொழுவிட்டு) திரும்பும் போதும்) வெவ்வேறு வழிகளில் சென்று வருவார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
523. وَلِأَبِي دَاوُدَ: عَنِ ابْنِ عُمَرَ، نَحْوُهُ.
523. இப்னு உமர் வாயிலாக அபூ தாவூதில் 522-வது ஹதீஸ் போன்றே உள்ளது.
524. وَعَنْ أَنَسٍ قَالَ: {قَدِمَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَلْمَدِينَةَ، وَلَهُمْ يَوْمَانِ يَلْعَبُونَ فِيهِمَا. فَقَالَ: "قَدْ أَبْدَلَكُمُ اللهُ بِهِمَا خَيْرًا مِنْهُمَا: يَوْمَ الْأَضْحَى، وَيَوْمَ الْفِطْرِ} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ بِإِسْنَادٍ صَحِيحٍ.
524. இறைத்தூதர்(ஸல்) மதீனா வந்ததும் அவர்களுக்கு இரண்டு நாள்கள் இருந்தது. அதில் அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது, ``அல்லாஹ் அவை இரண்டிற்கும் பதிலாக அவ்விரண்டையும் விடச் சிறந்தவற்றை அளித்தான். அவை குர்பானிப் பெருநாள் மற்றும் நோன்புப் பெருநாளாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ
இதனை ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் தொடரில் இதனைப் பதிவிட்டுள்ளனர்.