517. وَعَنْهُ: {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الْعِيدَ بِلَا أَذَانٍ، وَلَا إِقَامَةٍ} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ. وَأَصْلُهُ فِي الْبُخَارِيِّ.
517. இறைத்தூதர்(ஸல்) பெருநாள் தொழுகையை பாங்கு மற்றும் `இகாமத்' இன்றி தொழுதார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இதன் மூலம் புகாரீயில் உள்ளது.
518. وَعَنْ أَبِي سَعِيدٍ قَالَ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُصَلِّي قَبْلَ الْعِيدِ شَيْئًا، فَإِذَا رَجَعَ إِلَى مَنْزِلِهِ صَلَّى رَكْعَتَيْنِ} رَوَاهُ اِبْنُ مَاجَهْ بِإِسْنَادٍ حَسَنٍ.
518. இறைத்தூதர்(ஸல்) பெருநாள் தொழுகைக்கு முன்பு எதுவும் தொழ மாட்டார்கள். அவர்கள் தம் இல்லத்திற்குத் திரும்பினால் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள் என அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
நூல்: இப்னு மாஜா
இமாம் இப்னு மாஜா இதனை `ஹஸன்' எனும் தரம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
519. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ يَوْمَ الْفِطْرِ وَالْأَضْحَى إِلَى الْمُصَلَّى، وَأَوَّلُ شَيْءٍ يَبْدَأُ بِهِ الصَّلَاةُ، ثُمَّ يَنْصَرِفُ فَيَقُومُ مُقَابِلَ النَّاسِ - وَالنَّاسُ عَلَى صُفُوفِهِمْ- فَيَعِظُهُمْ وَيَأْمُرُهُمْ} مُتَّفَقٌ عَلَيْهِ.
519. நோன்புப் பெருநாளிலும், குர்பானிப் பெருநாளிலும் இறைத்தூதர்(ஸல்) தொழுகை தொழும் திடலிற்குச் செல்வார்கள். முதன்முதலில் தொழுகையைத்தான் தொடங்குவார்கள். பின்னர், எழுந்து, மக்களுக்கு முன்பு நிற்பார்கள். இன்னும், மக்கள் தங்களின் வரிசையிலேயே அமர்ந்திருப்பார்கள். அப்போது, அவர்களுக்கு உரை நிகழ்த்தி கட்டளை இடுவார்கள் என அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
520. وَعَنْ عَمْرِوِ بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ: قَالَ نَبِيُّ اللهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اَلتَّكْبِيرُ فِي الْفِطْرِ سَبْعٌ فِي الْأُولَى وَخَمْسٌ فِي الْآخِرَةِ، وَالْقِرَاءَةُ بَعْدَهُمَا كِلْتَيْهِمَا} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ.وَنَقَلَ التِّرْمِذِيُّ عَنِ الْبُخَارِيِّ تَصْحِيحَهُ.
520. ``நோன்புப் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீரும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீரும் உள்ளன. அவை இரண்டிற்கும் பின்னரும் கிராஅத் (குர்ஆனை ஓதுதல்) உண்டு'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அம்ரு இப்னு ஷுஐப் தம் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இமாம் புகாரீ(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார் என்பதை இமாம் திர்மிதீ(ரஹ்) பதிவிட்டுள்ளார்.
521. وَعَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ قَالَ: {كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الْأَضْحَى وَالْفِطْرِ بِـ (ق)، وَ (اقْتَرَبَتْ).} أَخْرَجَهُ مُسْلِمٌ.
521. இறைத்தூதர்(ஸல்) நோன்புப் பெருநாள் மற்றும் குர்பானிப் பெருநாளில் `காஃப்' மற்றும் `இக்தரபாத்' ஆகிய அத்தியாயங்களை ஓதுவார்கள் என அபூ வாகித் அல் லைஸி(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
குறிப்பு: குர்ஆனின் 50 வது அத்தியாயம் காஃப் ஆகும். 54 வது அத்தியாயம் இக்தரபத் எனப்படும்.
522. وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ يَوْمُ الْعِيدِ خَالَفَ الطَّرِيقَ} أَخْرَجَهُ الْبُخَارِيُّ.
522. இறைத்தூதர்(ஸல்) பெருநாளின்போது (தொழுகைக்கு) செல்லும் போதும், (தொழுவிட்டு) திரும்பும் போதும்) வெவ்வேறு வழிகளில் சென்று வருவார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
523. وَلِأَبِي دَاوُدَ: عَنِ ابْنِ عُمَرَ، نَحْوُهُ.
523. இப்னு உமர் வாயிலாக அபூ தாவூதில் 522-வது ஹதீஸ் போன்றே உள்ளது.
524. وَعَنْ أَنَسٍ قَالَ: {قَدِمَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَلْمَدِينَةَ، وَلَهُمْ يَوْمَانِ يَلْعَبُونَ فِيهِمَا. فَقَالَ: "قَدْ أَبْدَلَكُمُ اللهُ بِهِمَا خَيْرًا مِنْهُمَا: يَوْمَ الْأَضْحَى، وَيَوْمَ الْفِطْرِ} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ بِإِسْنَادٍ صَحِيحٍ.
524. இறைத்தூதர்(ஸல்) மதீனா வந்ததும் அவர்களுக்கு இரண்டு நாள்கள் இருந்தது. அதில் அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது, ``அல்லாஹ் அவை இரண்டிற்கும் பதிலாக அவ்விரண்டையும் விடச் சிறந்தவற்றை அளித்தான். அவை குர்பானிப் பெருநாள் மற்றும் நோன்புப் பெருநாளாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ
இதனை ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் தொடரில் இதனைப் பதிவிட்டுள்ளனர்.
525. وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {مِنَ السُّنَّةِ أَنْ يَخْرُجَ إِلَى الْعِيدِ مَاشِيًا} رَوَاهُ التِّرْمِذِيُّ، وَحَسَّنَهُ.
525. பெருநாள் தொழுகைக்கு நடந்து செல்வது சுன்னத்தாகும் என அலீ(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை `ஹஸன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
526. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّهُمْ أَصَابَهُمْ مَطَرٌ فِي يَوْمِ عِيدٍ. فَصَلَّى بِهِمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْعِيدِ فِي الْمَسْجِدِ} رَوَاهُ أَبُو دَاوُدَ بِإِسْنَادٍ لَيِّنٍ.بَابُ صَلَاةِ الْكُسُوفِ
526. ஒரு பெருநாளில் மழை பொழிந்தது; எனவே, அன்று இறைத்தூதர்(ஸல்) இறைஇல்லத்தில் (பெருநாள் தொழை) தொழவைத்தார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இமாம் அபூ தாவூத்(ரஹ்) இதனை `லய்யின்' எனும் பலவீனமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
கிரகணத் தொழுகை
527. عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {اِنْكَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ مَاتَ إِبْرَاهِيمُ، فَقَالَ النَّاسُ: اِنْكَسَفَتِ الشَّمْسُ لِمَوْتِ إِبْرَاهِيمَ، فَقَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "إِنَّ اَلشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللهِ لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمُوهُمَا، فَادْعُوا اللهَ وَصَلُّوا، حَتَّى تَنْكَشِفَ"} مُتَّفَقٌ عَلَيْهِ.وَفِي رِوَايَةٍ لِلْبُخَارِيِّ: حَتّى تَنْجَلِيْ.
527. இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களின் மகன்) இப்ராஹீம் அவர்கள் மரணமடைந்த நாளன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது, ``இப்ராஹீமின் மரணத்தால் சூரிய கிரகணம் ஏற்பட்டது'' எனக் மக்கள் கூறலாயினர்.
``சூரியனும், சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். யாரின் மரணத்திற்காகவும், வாழ்விற்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை. அதனை நீங்கள் கண்டால், அது உங்களை விட்டுவிலக்கும் வரை அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்; தொழுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என முகீரா இப்னு ஷுஅபா (ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
புகாரீயின் மற்றோர் அறிவிப்பில், ``அது விலகும் வரை'' என உள்ளது.
528. وَلِلْبُخَارِيِّ مِنْ حَدِيثِ أَبِي بَكْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ {فَصَلُّوا وَادْعُوا حَتَّى يُكْشَفَ مَا بِكُمْ}.
528. ``அது உங்கள் முன்பிருந்து விலகும் வரை தொழுங்கள்; துஆச் செய்யுங்கள்'' எனும் வாசகம் அபூ பக்ரா(ரலி) வாயிலாக புகாரீயில் உள்ளது.
529. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا: {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَهَرَ فِي صَلَاةِ الْكُسُوفِ بِقِرَاءَتِهِ، فَصَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ فِي رَكْعَتَيْنِ، وَأَرْبَعَ سَجَدَاتٍ} مُتَّفَقٌ عَلَيْهِ، وَهَذَا لَفْظُ مُسْلِمٍ.وَفِي رِوَايَةٍ لَهُ: فَبَعَثَ مُنَادِيًا يُنَادِي: اَلصَّلَاةُ جَامِعَةٌ.
529. இறைத்தூதர்(ஸல்) கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதினார்கள். இரண்டு ரக்அத்துக்களில் நான்கு ருகூஃகள் மற்றும் நான்கு ஸஜ்தாக்கள் செய்தார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது. மற்றோர் அறிவிப்பில், ``இறைத்தூதர்(ஸல்) ஓர் அழைப்பாளரை அனுப்பினார்கள். அவர் (கிரகணத்திற்காக) `ஜமாஅத் தொழுகை' உள்ளது என அழைப்பு விடுத்தார்'' என உள்ளது.
530. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {اِنْخَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى، فَقَامَ قِيَامًا طَوِيلًا، نَحْوًا مِنْ قِرَاءَةِ سُورَةِ الْبَقَرَةِ، ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا، ثُمَّ رَفَعَ فَقَامَ قِيَامًا طَوِيلًا وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ، ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا، وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ، ثُمَّ سَجَدَ، ثُمَّ قَامَ قِيَامًا طَوِيلاً، وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ، ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا، وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ، ثُمَّ رَفَعَ، فَقَامَ قِيَامًا طَوِيلًا، وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ، ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلاً، وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ، ثُمَّ سَجَدَ، ثُمَّ انْصَرَفَ وَقَدْ تَجَلَّتِ الشَّمْسُ. فَخَطَبَ النَّاسَ} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِلْبُخَارِيِّ.وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ: {صَلَّى حِينَ كَسَفَتِ الشَّمْسُ ثَمَانَ رَكَعَاتٍ فِي أَرْبَعِ سَجَدَاتٍ}.
530. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது, இறைத்தூதர்(ஸல்) அது நீங்குவதற்காக) தொழுதார்கள். சூரத்துல் பகரா ஓதும் அளவு நீண்டநேரம் நின்றார்கள். பின்னர், ஒரு நீண்ட ருகூஃ செய்தார்கள். பின்னர் தலையை உயர்த்தி, நீண்டநேரம் நின்றார்கள். அது முதலில் நின்றதைவிட சற்று குறைவான நேரமாய் இருந்தது. பின்னர், நீண்டதொரு ருகூஃ செய்தார்கள். அது முதல் ருகூஃவின் அளவைவிட சற்று குறைவான இருந்தது. பின்னர், ஸஜ்தாச் செய்தார்கள். பின்னர், எழுந்து நீண்ட நேரம் நின்றார்கள். அது முதலில் நின்ற நேரத்துக்கும் சற்று குறைவானதாய் இருந்தது. பின்னர் நீண்டதொரு ருகூஃ செய்தார்கள். அது முதல் ரக்அத்தின் ருகூஃவை விடசற்று குறைவானதாய் இருந்தது. பின்னர், தலையை உயர்த்தி நீண்ட நேரம் நின்றார்கள். அது முதலில் நின்ற நேரத்தை விட சற்று குறைவானதாய் இருந்தது. பின்னர், நீண்டதொரு ருகூஃ செய்தார்கள். அது முதல் ருகூஃவின் நேரத்தை விடச் சற்று குறைவானதாய் இருந்தது. பின்னர், தம் தலையை உயர்த்தி, பின்னர் ஸஜ்தா செய்தார்கள். பின்னர், தொழுகையை முடித்துத் திரும்பிபோது சூரியன் வெளிச்சமாகி கிரகணம் நீங்கி இருந்தது. அப்போது, இறைத்தூதர்(ஸல்) மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு புகாரீயீன் வாசகம் இடம் பெற்றுள்ளது.
முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது ``இறைத்தூதர்(ஸல்) எட்டு ருகூஃவுகளுடனும், நான்கு ஸஜ்தாக்களுடனும் தொழுதார்கள் என உள்ளது.
531. وَعَنْ عَلِيٍّ مِثْلُ ذَلِكَ.
531. அலீ(ரலி) வாயிலாக 530 வது ஹதீஸ் போன்றே அறிவிக்கப்பட்டுள்ளது.
532. وَلَهُ: عَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ {صَلَّى سِتَّ رَكَعَاتٍ بِأَرْبَعِ سَجَدَاتٍ}.
532. ஆறு ருகூஃவுகளுடனும், நான்கு ஸஜ்தாக்களுடனும் தொழுதார்கள் என ஜாபிர்(ரலி) வாயிலாக முஸ்லிமில் உள்ளது.
533. وَلِأَبِي دَاوُدَ: عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ: {صَلَّى، فَرَكَعَ خَمْسَ رَكَعَاتٍ وَسَجَدَ سَجْدَتَيْنِ، وَفَعَلَ فِي الثَّانِيَةِ مِثْلَ ذَلِكَ}.
533. இறைத்தூதர்(ஸல்) ஐந்து ருகூவுடகளுடனும் நான்கு ஸஜ்தாக்களுடனும் தொழுதார்கள். இரண்டாவது ரக்அத்திலும் அவ்வாறே செய்தார்கள் என உபய் இப்னு கஅப்(ரலி) வாயிலாக அபூ தாவூதில் உள்ளது.
534. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {مَا هَبَّتْ رِيحٌ قَطُّ إِلَّا جَثَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رُكْبَتَيْهِ، وَقَالَ: "اللَّهُمَّ اجْعَلْهَا رَحْمَةً، وَلَا تَجْعَلَهَا عَذَابًا"} رَوَاهُ اَلشَّافِعِيُّ وَالطَّبَرَانِيُّ.وَعَنْهُ: {أَنَّهُ صَلَّى فِي زَلْزَلَةٍ سِتَّ رَكَعَاتٍ، وَأَرْبَعَ سَجَدَاتٍ، وَقَالَ: هَكَذَا صَلَاةُ الْآيَاتِ} رَوَاهُ الْبَيْهَقِيُّ. وَذَكَرَ الشَّافِعِيُّ عَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ مِثْلَهُ دُونَ آخِرِهِ.بَابُ صَلَاةِ الِاسْتِسْقَاءِ
534. பலத்த காற்று வீசியபோது நபி(ஸல்), மண்டியிட்டு அமர்ந்து, ``யா அல்லாஹ்! இதனை (எங்களுக்குக்) கருணையாய் ஆக்கியருள்! தண்டனையாய் ஆக்கிவிடாதே!''என்று பிரார்த்திப்பார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: அஷ்ஷாஃபியீ, தப்ரானீ
535. وَذَكَرَ اَلشَّافِعِيُّ عَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ مِثْلَهُ دُونَ آخِرِهِ.
535. நிலநடுக்கத்தின்போது, ஆறு ருகூவுகளுடனும் நான்கு ஸஜ்தாக்களுடனும் இறைத்தூதர்(ஸல்) இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார்கள். இன்னும், அத்தாட்சிகளுக்கான தொழுகை இவ்வாறுதான்'' என்று கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: பைஹகீ
மேற்கண்டவாறே அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) வாயிலாக ஷாஃபியீயில் உள்ளது. அதில் கடைசி வாசகம் மட்டும் இல்லை.
536. عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَوَاضِعًا، مُتَبَذِّلًا، مُتَخَشِّعًا، مُتَرَسِّلًا، مُتَضَرِّعًا، فَصَلَّى رَكْعَتَيْنِ، كَمَا يُصَلِّي فِي الْعِيدِ، لَمْ يَخْطُبْ خُطْبَتَكُمْ هَذِهِ} رَوَاهُ الْخَمْسَةُ، وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ، وَأَبُو عَوَانَةَ، وَابْنُ حِبَّانَ.
536. இறைத்தூதர்(ஸல்) எளிய உடையணிந்து, பணிந்தவர்களாக, நிதானமான நடையுடன், இறைவனிடம் மன்றாடியவர்களாக (மதீனா நகரை விட்டு) வெளியே சென்றார்கள். மேலும், பெருநாள் தொழுகை தொழுவது போன்று (மழை வேண்டி பிரார்த்தித்தவர்களாக) இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். உங்களின் இந்த உரை போன்று உரையாற்றவில்லை என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இமாம் திர்மிதீ, அபூ அவானா மற்றும் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளனர்.