543. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا؛ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَأَى الْمَطَرَ قَالَ: {اَللَّهُمَّ صَيِّبًا نَافِعًا} أَخْرَجَاهُ.
543. இறைத்தூதர்(ஸல்) மழை பொழிவதைக் கண்டால், ``அல்லாஹ்வே! எங்களுக்குப் பலன் தரக்கூடிய மழையைப் பொழிவாயாக!'' என்று கூறுவார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
544. وَعَنْ سَعْدٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعَا فِي اَلِاسْتِسْقَاءِ: {اَللَّهُمَّ جَلِّلْنَا سَحَابًا، كَثِيفًا، قَصِيفًا، دَلُوقًا، ضَحُوكًا، تُمْطِرُنَا مِنْهُ رَذَاذًا، قِطْقِطًا، سَجْلًا، يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ} رَوَاهُ أَبُو عَوَانَةَ فِي "صَحِيحِهِ".
544. இறைத்தூதர்(ஸல்) மழைக்காகப் பிரார்த்தனை செய்யும்போது, ``இரட்சகனே! எங்களுக்காக அடர்த்தியான, இடி இடிக்கக் கூடிய, விரைந்து வரக் கூடிய, சிரித்தவாறு (ரஹ்மத்தாக) வரக் கூடியதைக் கொண்டு வருவாயாக! (கல் மழை பொழியாமல்) சின்னஞ்சிறு துளிகளாக, நீர் அதிகம் வரக் கூடிய, பலன் தரக்கூடிய மழையைப் பொழியச் செய்வாயாக! நீயே கண்ணியமிக்கவன், கொடையாளன்'' என்று கூறினார்கள் என ஸஅத்(ரலி) அறிவித்தார்.
இதனை இமாம் அபூ அவானா தம்முடைய ஸஹீஹில் பதிவிடப்பட்டுள்ளார்.
545. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {خَرَجَ سُلَيْمَانُ عَلَيْهِ السَّلَامُ يَسْتَسْقِي، فَرَأَى نَمْلَةً مُسْتَلْقِيَةً عَلَى ظَهْرِهَا رَافِعَةً قَوَائِمَهَا إِلَى السَّمَاءِ تَقُولُ: اَللَّهُمَّ إِنَّا خَلْقٌ مِنْ خَلْقِكَ، لَيْسَ بِنَا غِنًى عَنْ سُقْيَاكَ، فَقَالَ: ارْجِعُوا لَقَدْ سُقِيتُمْ بِدَعْوَةِ غَيْرِكُمْ} رَوَاهُ أَحْمَدُ وَصَحَّحَهُ الْحَاكِمُ.
545. சுலைமான்(அலை) மழை பொழிய வேண்டுவதற்காக நகரை விட்டு வெளியேறினார்கள். அப்போது, ஓர் எறும்பு மல்லாக்காகப்படுத்து, தன் கால்களை வானத்தின் பால் தூக்கிய நிலையில், ``இரட்சகனே! நாங்கள் உன் படைப்புகளில் ஒரு படைப்பாக உள்ளோம். உன் மழை எங்களுக்கு அவசியம் தேவை'' எனக் கூறிக் கொண்டிருந்ததைக் கண்டார்கள். பின்னர், ``நீங்கள் எல்லோரும் திரும்பிச் செல்லுங்கள். உங்களை அல்லாத ஓர் உயிரினத்தின் துஆவால் நீர் புகட்டப்பட்டு விட்டீர்கள்'' என சுலைமான்(அலை) கூறினார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.
நூல்: அஹ்மத்
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
546. وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَسْقَى فَأَشَارَ بِظَهْرِ كَفَّيْهِ إِلَى السَّمَاءِ} أَخْرَجَهُ مُسْلِمٌ.بَابُ اللِّبَاسِ
546. இறைத்தூதர்(ஸல்) மழைக்காக துஆச் செய்தபோது வானத்தை நோக்கித் தம் புறங்கைகளை உயர்த்தினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
547. عَنْ أَبِي عَامِرٍ اَلْأَشْعَرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْحِرَ وَالْحَرِيرَ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَأَصْلُهُ فِي الْبُخَارِيِّ.
547. ``என் சமுதாயத்தில் சில கூட்டத்தார், வெட்கத்தலத்தையும் (விபச்சாரத்தையும்), பட்டாடையையும் (ஆண்கள் அணிவது) ஹலால் (அனுமதிக்கப்பட்டது) என எண்ணுவர். (ஆனால், அவையோ விலக்கப்பட்டவை)'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஆமிர் அல் அஷ் அரீ(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இதன் மூலம் புகாரீயில் உள்ளது.
548. وَعَنْ حُذَيْفَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَشْرَبَ فِي آنِيَةِ الذَّهَبِ وَالْفِضَّةِ، وَأَنْ نَأْكُلَ فِيهَا، وَعَنْ لُبْسِ الْحَرِيرِ وَالدِّيبَاجِ، وَأَنْ نَجْلِسَ عَلَيْهِ} رَوَاهُ الْبُخَارِيُّ.
548. நாங்கள் தங்கம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் உண்ணக் கூடாது என்றும், பருகக் கூடாது என்றும், பட்டாடைகள் அணியக் கூடாது என்றும், அதன் மீது நாங்கள் உட்கார வேண்டாம் என்றும் இறைத்தூதர்(ஸல்) எங்களுக்குத் தடை விதித்தார்கள் என ஹுதைபா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
549. وَعَنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لُبْسِ الْحَرِيرِ إِلَّا مَوْضِعَ إِصْبَعَيْنِ، أَوْ ثَلَاثٍ، أَوْ أَرْبَعٍ} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِمُسْلِمٍ.
549. இரண்டு விரற்கடை அல்லது மூன்று அல்லது நான்கு விரற்கடைகள் அளவு பட்டுத்துணி சேர்ந்த மற்ற துணிகளைத் தவிர (முழுக்க முழுக்க) பட்டினால் ஆன ஆடைகள் அணிவதை இறைத்தூதர்(ஸல்) தடை செய்தார்கள் என உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
550. وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَخَّصَ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، وَالزُّبَيْرِ فِي قَمِيصِ الْحَرِيرِ، فِي سَفَرٍ، مِنْ حَكَّةٍ كَانَتْ بِهِمَا} مُتَّفَقٌ عَلَيْهِ.
550. ஒரு பயணத்தில் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் மற்றும் ஸுபைர்(ரலி) ஆகிய இருவருக்கும் ஒரு வகை அரிப்புநோய் இருந்த காரணத்தால் பட்டுச்சட்டை அணிவதற்கு இறைத்தூதர்(ஸல்) சலுகையளித்தார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
551. وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَسَانِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حُلَّةً سِيَرَاءَ، فَخَرَجْتُ فِيهَا، فَرَأَيْتُ الْغَضَبَ فِي وَجْهِهِ، فَشَقَقْتُهَا بَيْنَ نِسَائِي} مُتَّفَقٌ عَلَيْهِ، وَهَذَا لَفْظُ مُسْلِمٍ.
551. இறைத்தூதர்(ஸல்) எனக்கு ஒரு பட்டாடை கொடுத்தார்கள். நான் அதனை அணிந்தவாறு வெளியில் வந்தபோது, நபி(ஸல்) அவர்களின் முகத்தில் கோபத்தின் அறிகுறியைக் கண்டேன். உடனே, நான் அதைக் கிழித்து என் வீட்டுப் பெண்களுக்குப் பங்கிட்டேன் என அலீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
552. وَعَنْ أَبِي مُوسَى رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {أُحِلَّ الذَّهَبُ وَالْحَرِيرُ لِإِنَاثِ أُمَّتِي، وَحُرِّمَ عَلَى ذُكُورِهِمْ.}. رَوَاهُ أَحْمَدُ، وَالنَّسَائِيُّ، وَالتِّرْمِذِيُّ وَصَحَّحَهُ.
552. ``தங்கமும், பட்டும் என் சமுதாயத்தின் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆண்களுக்கு விலக்கப்பட்டுள்ளன'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், நஸயீ மற்றும் திர்மிதீ
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
553. وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {إِنَّ اللهُ يُحِبُّ إِذَا أَنْعَمَ عَلَى عَبْدٍ أَنْ يَرَىأَثَرَ نِعْمَتِهِ عَلَيْهِ} رَوَاهُ الْبَيْهَقِيُّ.
553. ``அல்லாஹ் தன் அடியான் மீது அருள்செய்தால், அவனிடம் அந்த அருளின் அடையாளத்தைக் காண விரும்புகிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார்.
நூல்: பைஹகீ
554. وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ لُبْسِ الْقَسِيِّ وَالْمُعَصْفَرِ} رَوَاهُ مُسْلِمٌ.
554. (எகிப்து மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் தயாரிக்கப்பட்ட ஒருவகை) பட்டு மற்றும் காவி நிற ஆடையை (அணிவதை) இறைத்தூதர்(ஸல்) தடை செய்தார்கள் என அலீ(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
555. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِوٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالَ: {رَأَى عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَوْبَيْنِ مُعَصْفَرَيْنِ، فَقَالَ: "أُمُّكَ أَمَرَتْكَ بِهَذَا؟"} رَوَاهُ مُسْلِمٌ.
555. இறைத்தூதர்(ஸல்) என் உடலில் இரண்டு காவியாடைகளைக் கண்டதும் (கோபத்தால்), ``இதனை அணிவதற்கு உன் தாயா உனக்குக் கட்டளையிட்டார்?'' என்று (கோபமாக) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
556. وَعَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُمَا {أَنَّهَا أَخْرَجَتْ جُبَّةَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكْفُوفَةَ الْجَيْبِ وَالْكُمَّيْنِ وَالْفَرْجَيْنِ، بِالدِّيبَاجِ} رَوَاهُ أَبُو دَاوُدَ. وَأَصْلُهُ فِي "مُسْلِمٍ"، وَزَادَ: {كَانَتْ عِنْدَ عَائِشَةَ حَتَّى قُبِضَتْ، فَقَبَضْتُهَا، وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلْبَسُهَا، فَنَحْنُ نَغْسِلُهَا لِلْمَرْضَى نَسْتَشْفِي بِهَا}. وَزَادَ الْبُخَارِيُّ فِي "اَلْأَدَبِ الْمُفْرَدِ". {وَكَانَ يَلْبَسُهَا لِلْوَفْدِ وَالْجُمُعَةِ}.كِتَابُ الْجَنَائِزِ
556. (சட்டையிலுள்ள) பை மற்றும் காலரில் பட்டுத் துணியால் இரண்டு ஒட்டுப் போடப்பட்டிருந்த, நபி(ஸல்) அவர்களின் ஜிப்பா ஒன்றை அஸ்மா பின்த்து அபீ பக்ர்(ரலி) எடுத்தார்.
நூல்: அபூ தாவூத்
இதன் மூலம் முஸ்லிமில் உள்ளது.
அது ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்தது. அவர் இறந்தபின் நாங்கள் அதைப் பெற்றுக் கொண்டோம். அதனை இறைத்தூதர்(ஸல்) அணிவார்கள். அதனை நாங்கள் நோய் நிவாரணம் தேடுவதற்காகத் தண்ணீரில் அலசுவோம் என்றும் அஸ்மா பின்த்து அபீ பக்ர்(ரலி) வாயிலாகவே முஸ்லிமில் உள்ளது.
``அவர்கள் அதனை வெள்ளிக் கிழமையன்றும், தூதுக் குழுவினர் யாரேனும் வரும் போதும் அணிந்து கொள்வார்கள்'' என இமாம் புகாரீ(ரஹ்) தம்முடைய அல் அதபுல் முஃப்ரத் நூலில் பதிவிட்டுள்ளார்.

557. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَكْثِرُوا ذِكْرَ هَاذِمِ اللَّذَّاتِ: الْمَوْتِ} رَوَاهُ التِّرْمِذِيُّ، وَالنَّسَائِيُّ، وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ.
557. ``விருப்பங்களை (எல்லாம்) அகற்றக் கூடிய மரணத்தை அதிகம் நினைவு கூருங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: திர்மிதீ, நஸயீ
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
558. وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا يَتَمَنَّيَنَّ أَحَدُكُمُ الْمَوْتَ لِضُرٍّ يَنْزِلُ بِهِ، فَإِنْ كَانَ لَا بُدَّ مُتَمَنِّيًا فَلْيَقُلْ: اَللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِي، وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِي} مُتَّفَقٌ عَلَيْهِ.
558. ``தனக்கேற்படும் தீங்கின் காரணமாக உங்களில் யாரும் மரணத்தை விரும்ப வேண்டாம். அப்படியே ஒருவர் நிர்பந்தத்திற்கு உள்ளானால் ``இறைவா! நான் உயிர் வாழ்வது எதுவiரை எனக்கு நல்லதாய் இருக்குமோ அதுவரை எனக்கு வாழ்க்கையை அளிப்பாயாக! மேலும், எப்போது மரணமே எனக்கு நல்லதாய் இருக்குமோ அப்போது என்னை உலகிலிருந்து எடுத்துக் கொள்வாயாக! எனக் கூறட்டும் (பிரார்த்திக்கட்டும்)'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
559. وَعَنْ بُرَيْدَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {اَلْمُؤْمِنُ يَمُوتُ بِعَرَقِ الْجَبِينِ} رَوَاهُ الثَّلَاثَةُ وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ.
559. ``இறைநம்பிக்கையாளன் நெற்றி வேர்வையுடன் இறக்கிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என புரைதா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ மற்றும் திர்மிதீ
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
560. وَعَنْ أَبِي سَعِيدٍ وَأَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَا: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَقِّنُوا مَوْتَاكُمْلَا إِلَهَ إِلَّا اللهُ} رَوَاهُ مُسْلِمٌ، وَالْأَرْبَعَةُ.
560. ``இறக்கும் தருவாயில் இருப்பவனுக்கு `லா இலாஹ இல்லல்லாஹ்' அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை'' என்ற உறுதியை ஊட்டுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஸயீத் மற்றும் அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: முஸ்லிம், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
561. وَعَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {اقْرَؤُوا عَلَى مَوْتَاكُمْ يس} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ، وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ.
561. ``உங்களில் இறந்தோருக்கு யாஸீன் (சூரா) ஓதுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என மஃகில் இப்னு யஸார்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பு: இது பலவீனமான ஹதீஸ் ஆகும்.
562. وَعَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {دَخَلَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَبِي سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهُ وَقَدْ شُقَّ بَصَرُهُفَأَغْمَضَهُ، ثُمَّ قَالَ: "إِنَّ الرُّوحَ إِذَا قُبِضَ، اتَّبَعَهُ الْبَصَرُ" فَضَجَّ نَاسٌ مِنْ أَهْلِهِ، فَقَالَ: "لَا تَدْعُوا عَلَى أَنْفُسِكُمْ إِلَّا بِخَيْرٍ. فَإِنَّ الْمَلَائِكَةَ تُؤَمِّنُ عَلَى مَا تَقُولُونَ". ثُمَّ قَالَ: "اَللَّهُمَّ اغْفِرْ لِأَبِي سَلَمَةَ، وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ، وَافْسِحْ لَهُ فِي قَبْرِهِ، وَنَوِّرْ لَهُ فِيهِ، وَاخْلُفْهُ فِي عَقِبِهِ} رَوَاهُ مُسْلِمٌ.
562. அபூ ஸலமா(ரலி) அவர்களின் மரண தருவாயில் இறைத்தூதர்(ஸல்) அங்கு வந்தார்கள். அவரின் கண் திறந்தவாறு இருந்தன. அவரின் கண்ணை இறைத்தூதர்(ஸல்) மூடிவிட்டார்கள். பின்னர், ``உயிர் கைப்பற்றப்பட்டால் பார்வை அதைப் பின்தொடர்கிறது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
அப்போது அவரின் குடும்பத்தாரில் சிலர் அழத்தொடங்கினர். அதற்கு, ``உங்கள் உயிர்களுக்கு நல்லதைத் தவிர வேறு எதையும் கேட்காதீர்கள். ஏனெனில், (இப்போது) மலக்குகள் நீங்கள் சொல்வதற்கெல்லாம் ஆமீன் கூறுகிறார்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
பின்னர், ``யா அல்லாஹ்! அபூ ஸல்மாவை மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களில் அவரின் நிலையை உயர்த்தி அருள்வாயாக! அவரின் கப்ரை (மண்ணறையை) அவருக்கு விசாலமாக்கி அருள்வாயாக! மேலும், அதில் வெளிச்சத்தை உண்டாக்கி அருள்வாயாக! அவரின் அடிச்சுவட்டில் (அவரைப் பின்பற்றிப்) பணியாற்றுபவரை நியமிப்பாயாக'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்