563. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا: {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ تُوُفِّيَ سُجِّيَ بِبُرْدٍ حِبَرَةٍ} مُتَّفَقٌ عَلَيْهِ.
563. ``இறைத்தூதர்(ஸல்) இறந்தவுடன் அவர்கள் மீது `ஹிப்ரா' எனும் (யமன் நாட்டின் ஒரு வகை) சால்வை போட்டு மூடப்பட்டது'' என்று ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
564. وَعَنْهَا {أَنَّ أَبَا بَكْرٍ اَلصِّدِّيقَ رَضِيَ اللهُ عَنْهُ قَبَّلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ مَوْتِهِ} رَوَاهُ الْبُخَارِيُّ.
564. இறைத்தூதர்(ஸல்) இறந்தப் பின்னர் அவர்களை அபூ பக்ர்(ரலி) முத்தமிட்டார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
565. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {نَفْسُ الْمُؤْمِنِ مُعَلَّقَةٌ بِدَيْنِهِ، حَتَّى يُقْضَى عَنْهُ} رَوَاهُ أَحْمَدُ، وَالتِّرْمِذِيُّ وَحَسَّنَهُ.
565. ``இறைநம்பிக்கையாளனின் உயிர் (அவன் கடன்பட்டவனாய் இருப்பின்) அவனுடைய கடன் அடைக்கப்படும் வரை அதனுடன் தொங்கிக் கொண்டிருக்கும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், திர்மிதீ
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை `ஹஸன்' தரம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
566. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي الَّذِيْ سَقَطَ عَنْ رَاحِلَتِهِ فَمَاتَ: {اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
566. ``அவரை இலந்தை இலை கலந்த தண்ணீரால் குளிப்பாட்டுங்கள். மேலும், அவரின் (இஹ்ராமின்) இரண்டு துணிகளினால் அவருக்குக் கஃபனிடுங்கள்'' என்று (ஹஜ்ஜின்போது) ஒட்டகத்திலிருந்து விழுந்து இறந்தவர் தொடர்பாக இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
567. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {لَمَّا أَرَادُوا غَسْلَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا: وَاللهِ مَا نَدْرِي، نُجَرِّدُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا نُجَرِّدُ مَوْتَانَا، أَمْ لَا؟} اَلْحَدِيثَ، رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ.
567. இறைத்தூதர்(ஸல்) மரணமடைந்த பின்னர்) நபித்தோழர்கள் அவர்களைக் குளிப்பாட்ட நாடியபோது, ``நாங்கள் மற்ற மனிதர்களின் ஆடைகளைப் போன்று அவிழ்ப்பதா, அல்லது அப்படியே விட்டுவிடுவதா என்பதை அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாங்கள் அறிய மாட்டோம்'' என்று கூறினர் என ஆயிஷா(ரலி) அறிவித்தார். (ஹதீஸ் சுருக்கம்)
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத்
குறிப்பு: இந்த ஹதீஸின் பிற்பகுதி முழுவதுமாய் இங்கு கீழே தரப்படுகிறது.
...அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது, அல்லாஹ் அவர்களுக்கு சிறு உறக்கத்தை ஏற்படுத்தினான். அப்போது யாரென்றே தெரியாத ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களை அவர்களின் ஆடைகளுடனேயே குளிப்பாட்டுங்கள் எனக் கூற, இறைத்தூதர்(ஸல்) ஆடைகளுடனேயே குளிப்பாட்டப்பட்டார்கள்.
568. وَعَنْ أُمِّ عَطِيَّةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {دَخَلَ عَلَيْنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نُغَسِّلُ ابْنَتَهُ، فَقَالَ: "اغْسِلْنَهَا ثَلَاثًا، أَوْ خَمْسًا، أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ، إِنْ رَأَيْتُنَّ ذَلِكَ، بِمَاءٍ وَسِدْرٍ، وَاجْعَلْنَ فِي الْآخِرَةِ كَافُورًا، أَوْ شَيْئًا مِنْ كَافُورٍ"، فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ، فَأَلْقَى إِلَيْنَا حِقْوَهُ.فَقَالَ: "أَشْعِرْنَهَا إِيَّاهُ"} مُتَّفَقٌ عَلَيْهِ. وَفِي رِوَايَةٍ: {ابْدَأْنَ بِمَيَامِنِهَا وَمَوَاضِعِ الْوُضُوءِ مِنْهَا}. وَفِي لَفْظٍ ِللْبُخَارِيِّ: {فَضَفَّرْنَا شَعْرَهَا ثَلَاثَةَ قُرُونٍ، فَأَلْقَيْنَاهُ خَلْفَهَا}.
568. இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (இறந்த) மகளை நாங்கள் குளிப்பாட்டிக் கொண்டிருக்கும் நிலையில் இறைத்தூதர்(ஸல்) வந்தார்கள். இன்னும், ``நீங்கள் அவரை மூன்று அல்லது ஐந்து முறை அல்லது உங்களுக்குச் சரியாகப்படும் வரை அதற்கும் அதிகமான முறை (ஒற்றைப்படை எண்ணிக்கையில்) குளிப்பாட்டுங்கள். இன்னும் இலந்தை இலை கலந்த தண்ணீரால் குளிப்பாட்டுங்கள். இறுதியில் கற்பூரத்தைப் பயன்படுத்துங்கள்'' என்று கூறினார்கள். நாங்கள் (அவரைக் குளிப்பாட்டி) முடித்ததும் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குத் தகவல் கொடுத்தோம். அவர்கள் தம்முடைய கீழங்கியைக் கொடுத்து ``அதை உள்ளாடையாக ஆக்கிக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
மற்றோர் அறிவிப்பின்படி அவரின் (குளிப்பாட்டுதலை) வலப்புறம் மற்றும் `உளூ'ச் செய்யக் கூடிய பகுதிகளைக் கொண்டு தொடங்குங்கள் எனக் கூறியதாக உள்ளது.
புகாரீயின் மற்றோர் அறிவிப்பின்படி நாங்கள் அவரின் தலைமுடியை மூன்று சடைகளாகப் பிண்ணி அவருக்கு பின்னால் முதுகுப் பகுதியில் போட்டோம் என உள்ளது.
569. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {كُفِّنَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ثَلَاثَةِ أَثْوَابٍ بِيضٍ سَحُولِيَّةٍ مِنْ كُرْسُفٍ، لَيْسَ فِيهَا قَمِيصٌ وَلَا عِمَامَةٌ.} مُتَّفَقٌ عَلَيْهِ.
569. பருத்தியால் ஆன வெள்ளைத் துணியால் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு கஃபனிடப்பட்டது அதில் சட்டையோ தலைப்பாகையோ இல்லை என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
570. وَعَنِ ابْنِ عُمَرَ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: {لَمَّا تُوُفِّيَ عَبْدُ اللهُ بْنِ أُبَيٍّ جَاءٍ اِبْنُهُ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقَالَ: أَعْطِنِي قَمِيصَكَ أُكَفِّنْهُ فِيهِ، فَأَعْطَاه ُ إِيَّاهُ } مُتَّفَقٌ عَلَيْهِ.
570. (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இறந்ததும் அவனுடைய மகன் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ``தாங்கள் தங்களின் ஆடையைக் கொடுங்கள். நான் அதில் அவருக்குக் கஃபனிட்டுக் கொள்கிறேன்'' எனக் கேட்டார். இறைத்தூதர்(ஸல்) கொடுத்தார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
571. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {الْبَسُوا مِنْ ثِيَابِكُمُ الْبَيَاضَ، فَإِنَّهَا مِنْ خَيْرِ ثِيَابِكُمْ، وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ} رَوَاهُ الْخَمْسَةُ إِلَّا النَّسَائِيَّ، وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ.
571. ``நீங்கள் வெள்ளை ஆடை அணியுங்கள். ஏனெனில், அதுவே உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும். உங்களின் மய்யித்துகளுக்கும் (இறந்ததோருக்கும்) வெள்ளை ஆடையில் கஃபனிடுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
572. وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا كَفَّنَ أَحَدُكُمْ أَخَاهُ فَلْيُحْسِنْ كَفَنَهُ} رَوَاهُ مُسْلِمٌ.
572. ``உங்களில் ஒருவர் தன் (முஃமினான) சகோதரனுக்குக் கஃபனிட்டால், அதனை நல்ல முறையில் செய்யட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
573. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجْمَعُ بَيْنَ الرَّجُلَيْنِ مِنْ قَتْلَى أُحَدٍ فِي ثَوْبٍ وَاحِدٍ، ثُمَّ يَقُولُ: "أَيُّهُمْ أَكْثَرُ أَخْذًا لِلْقُرْآنِ؟"، فَيُقَدِّمُهُ فِي اللَّحْدِ، وَلَمْ يُغَسَّلُوا، وَلَمْ يُصَلِّ عَلَيْهِمْ} رَوَاهُ الْبُخَارِيُّ.
573. உஹதுப் போரில் ஷஹீதான இரண்டு ஆண் மய்யித்துக்களை ஒரே கஃபனில் `இறைத்தூதர்(ஸல்) இணைத்தார்கள். ``இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?'' என்று கேட்டு அவரை குழிக்குள் முதலாவதாக வைத்தார்கள். இந்த ஷஹீத்களில் யாரும் குளிப்பாட்டப்படவில்லை. தொழுகையும் நடத்தப்படவில்லை என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
574. وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: "لَا تُغَالُوا فِي الْكَفَنِ، فَإِنَّهُ يُسْلُبُ سَرِيعًا"} رَوَاهُ أَبُو دَاوُدَ.
574. ``கஃபன் துணிகளில் அதிக விலை போடாதீர்கள். ஏனெனில், அது அதிவிரைவில் (மண்ணில் மக்கி) அழிக்கப்படும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அலீ(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
575. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا؛ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهَا: {لَوْ مُتِّ قَبْلِي فَغَسَّلْتُكِ} اَلْحَدِيثَ. رَوَاهُ أَحْمَدُ، وَابْنُ مَاجَهْ، وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ.
575. ``நீ எனக்கு முன்னால் இறந்துவிட்டால் நான் உன்னைக் குளிப்பாட்டுவேன்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், இப்னு மாஜா
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
576. وَعَنْ أَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ رَضِيَ اللهُ عَنْهَا: {أَنَّ فَاطِمَةَ عَلَيْهَا اَلسَّلَامُ أَوْصَتْ أَنْ يُغَسِّلَهَا عَلِيٌّ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ} رَوَاهُ الدَّارَقُطْنِيُّ.
576. என்னை அலீ(ரலி) குளிப்பாட்ட வேண்டும் என ஃபாத்திமா(ரலி) வஸிய்யத் (மரண சாசனம்) செய்தார் என அஸ்மா பின்த் உமைஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: தாரகுத்னீ
577. وَعَنْ بُرَيْدَةَ رَضِيَ اللهُ عَنْهُ -فِي قِصَّةِ الْغَامِدِيَّةِ الَّتِي أَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجْمِهَا فِي الزِّنَا- قَالَ: {ثُمَّ أَمَرَ بِهَا فَصُلِّيَ عَلَيْهَا وَدُفِنَتْ} رَوَاهُ مُسْلِمٌ.
577. புரைதா(ரலி), காமிதீ குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் சம்பவம் பற்றிக் குறிப்பிடுகையில், இறைத்தூதர்(ஸல்) அவளின் விபச்சாரக் குற்றத்திற்காக அவளைக் கல்லேறிந்து கொள்ளுமாறு கட்டளையிட்டார்கள். பின்னர், கட்டளையிட்டார்கள். அவளுக்குத் தொழுகை நடத்தப்பட்டது. அவள் அடக்கம் செய்யப்பட்டாள் என்று குறிப்பிட்டார்.
நூல்: முஸ்லிம்
578. وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ قَتَلَ نَفْسَهُ بِمَشَاقِصَ، فَلَمْ يُصَلِّ عَلَيْهِ} رَوَاهُ مُسْلِمٌ.
578. நீண்ட ஈட்டியால் குத்தி தற்கொலை செய்துகொண்ட ஒருவரின் ஜனாஸா இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. இறைத்தூதர்(ஸல்) அதற்குத் தொழுகை நடத்தவில்லை என்று ஜாபிர் இப்னு ஸம்ரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
579. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ -فِي قِصَّةِ الْمَرْأَةِ الَّتِي كَانَتْ تَقُمُّ الْمَسْجِدَ- قَالَ: {فَسَأَلَ عَنْهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا: مَاتَتْ، فَقَالَ: "أَفَلَا كُنْتُمْ آذَنْتُمُونِي"؟ فَكَأَنَّهُمْ صَغَّرُوا أَمْرَهَا. فَقَالَ: "دُلُّونِي عَلَى قَبْرِهَا"، فَدَلُّوهُ، فَصَلَّى عَلَيْهَا} مُتَّفَقٌ عَلَيْهِ.وَزَادَ مُسْلِمٌ، ثُمَّ قَالَ: {إِنَّ هَذِهِ اَلْقُبُورَ مَمْلُوءَةٌ ظُلْمَةً عَلَى أَهْلِهَا، وَإِنَّ اللهُ يُنَوِّرُهَا لَهُمْ بِصَلَاتِي عَلَيْهِمْ}
579. இறைஇல்லத்தைக் கூட்டி (பெருக்கி)க் கொண்டிருந்த ஒரு பெண்ணின் சம்பவம் பற்றிக் குறிப்பிடுகையில், இறைத்தூதர்(ஸல்) (நபித்தோழர்களிடம்) அப்பெண்ணைக் குறித்து விசாரித்தார்கள்.
``அவர் இறந்து விட்டார்'' என அவர்கள் கூறினார்கள்.
``நீங்கள் ஏன் எனக்கு செய்தி சொல்லவில்லை?'' என இறைத்தூதர்(ஸல்) வினவினார்கள்.
அந்த விஷயத்தைப் பற்றி அவர்கள் பெரிதாகக் கருதவில்லை. பின்னர் ``அவளின் மண்ணறையை எனக்குக் காண்பியுங்கள்'' எனக் இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள். அதனை அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குக் காட்டினார்கள். அவளுக்காக இறைத்தூதர்(ஸல்) தொழுதார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
பிறகு, ``இந்த மண்ணறைகள் அதில் இருப்பவர்களுக்கு இருள் நிரம்பியதாக உள்ளன. நிச்சயமாக (ஜனாஸா பாவமன்னிப்புத்) தொழுகையின் காரணமாக இவற்றில் வெளிச்சத்தை அவர்களுக்கு அல்லாஹ் உண்டாக்குகிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என்பதும் முஸ்லிமில் அதிகப்படியாக உள்ளது.
580. وَعَنْ حُذَيْفَةَ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَنْهَى عَنِ النَّعْيِ} رَوَاهُ أَحْمَدُ، وَالتِّرْمِذِيُّ وَحَسَّنَهُ.
580. மரணச் செய்தியை விளம்பரம் செய்வதை இறைத்தூதர்(ஸல்) தடைசெய்தார்கள் என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், திர்மிதீ
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை `ஹஸன்' எனக் குறிப்பிட்டுடள்ளார்.
குறிப்பு: இன்னார் மரணமடைந்துவிட்டார் என அறிவிப்பது தடைசெய்யப்பட்டது அல்ல. மாறாக அறியாமைக் கால வழக்கப்படி ஒப்பாரி வைத்து, மேல தாளங்களுடன் அவரின் பெருமை புகழ் பரம்பரைச் சிறப்புகளை எல்லாம் கூறி தற்காலத்தில் கண்ணீர் அஞ்சலி என்பது போன்று சுவரொட்டிகள், நோட்டீஸ் அச்சிட்டு வெளியிடுதல் போன்ற விளம்பரங்கள் கூடாது.
581. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَى النَّجَاشِيَّ فِي الْيَوْمِ الَّذِيْ مَاتَ فِيهِ، وَخَرَجَ بِهِمْ مِنَ الْمُصَلَّى، فَصَفَّ بِهِمْ، وَكَبَّرَ عَلَيْهِ أَرْبَعًا} مُتَّفَقٌ عَلَيْهِ.
581. நஜாஷி மன்னரின் மரணச் செய்தி அவரின் மரண தினத்தன்றே இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குச் சொல்லப்பட்டது. (அப்போது) இறைத்தூதர்(ஸல்) தங்கள் தோழர்களுடன் ஜனாஸா தொழுதும் இடம் சென்று அணிவகுப்பைச் சரி செய்தார்கள். இன்னும், அவருக்காக நான்கு தக்பீர்கள் கூறினார்கள் (தொழுகை நடத்தினார்கள்) என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
582. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: {مَا مِنْ رَجُلٍ مُسْلِمٍ يَمُوتُ، فَيَقُومُ عَلَى جَنَازَتِهِ أَرْبَعُونَ رَجُلًا، لَا يُشْرِكُونَ بِاللَّهِ شَيْئًا، إِلَّا شَفَّعَهُمُ اللهُ فِيهِ} رَوَاهُ مُسْلِمٌ.
582. இறந்த ஒரு முஸ்லிமின் ஜனாஸாவில், அல்லாஹ்விற்கு ஒருபோதும் இணைகற்பிக்காத நாற்பது நபர்கள் சேர்ந்து (தொழ) நின்றால் அவருக்காக அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்கிறான் என்று இறைத்தூதர்(ஸல்) கூற நான் செவியுற்றுள்ளேன் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்