57. وَعَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ رَضِيَ اللهُ عَنْهُ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: {رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْصِلُ بَيْنَ الْمَضْمَضَةِ وَالِاسْتِنْشَاقِ.} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ بِإِسْنَادِ ضَعِيفٍ.
57. இறைத்தூதர்(ஸல்) தண்ணீரை, வாய் கொப்பாளிப்பதற்கும், நாசிக்கும் தனித்தனியாக எடுத்தார்கள் என தல்ஹா இப்னு முஸர்ரிஃப் தம் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இது அபூ தாவூதில் பலவீனமான அறிவிப்புத் தொடரில் பதிவிடப்பட்டுள்ளது.
58. وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ -فِي صِفَةِ الْوُضُوءِ- {ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْثَرَ ثَلَاثًا، يُمَضْمِضُ وَيَنْثِرُ مِنَ الْكَفِّ الَّذِي يَأْخُذُ مِنْهُ الْمَاءَ} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ.
58. நபி(ஸல்) அவர்களின் `உளூ' குறித்து அலீ(ரலி) கூறுகையில், ``இறைத்தூதர்(ஸல்) மும்முறை வாய் கொப்பளித்தார்கள். இன்னும் மும்முறை மூக்கைச் சிந்தினார்கள். (வாய் கொப்பளிக்க எடுத்த) அதே தண்ணீரால் நாசியையும் சுத்தம் செய்தார்கள்'' என கூறினார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ.
59. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ زَيْدٍ رَضِيَ اللهُ عَنْهُ -فِي صِفَةِ الْوُضُوءِ- {ثُمَّ أَدْخَلَ يَدَهُ، فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ مِنْ كَفٍّ وَاحِدَةٍ، يَفْعَلُ ذَلِكَ ثَلَاثًا} مُتَّفَقٌ عَلَيْهِ.
59. நபி(ஸல்) அவர்களின் `உளூ' குறித்து அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) கூறுகையில், ``இறைத்தூதர்(ஸல்) `உளூ'வுக்காகப் பாத்திரத்தினுள் தம் கையை நுழைத்தார்கள். பின்னர் ஒரு கை தண்ணீரால் வாய் கொப்பளித்து, நாசிக்கும் தண்ணீர் செலுத்தினார்கள். இவ்வாறு மும்முறை செய்தார்கள்'' எனக் கூறினார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
60. وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {رَأَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا، وَفِي قَدَمِهِ مِثْلُ الظُّفْرِ لَمْ يُصِبْهُ الْمَاءُ. فَقَالَ: "اِرْجِعْ فَأَحْسِنْ وُضُوءَكَ"} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ.
60. தம் குதிக்காலில் நகத்தளவு மட்டும் தண்ணீர் படாத (வாறு `உளூ'ச் செய்த) ஒரு நபரைப் பார்த்த இறைத்தூதர்(ஸல்), ``திரும்பச் செல்! உன்னுடைய `உளூ'வை நல்ல முறையில் செய்!'' என்று கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ
61. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ بِالْمُدِّ، وَيَغْتَسِلُ بِالصَّاعِ إِلَى خَمْسَةِ أَمْدَادٍ} مُتَّفَقٌ عَلَيْهِ.
61. இறைத்தூதர்(ஸல்) ஒரு `முத்' அளவு தண்ணீரில் `உளூ'ச் செய்வார்கள். இன்னும் ஒரு `ஸாவு' அளவிலிருந்து ஐந்து `முத்' அளவு தண்ணீரில் குளிப்பார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
62. وَعَنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ، فَيُسْبِغُ الْوُضُوءَ، ثُمَّ يَقُولُ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، إِلَّا فُتِحَتْ لَهُ أَبْوَابُ الْجَنَّةِ"} أَخْرَجَهُ مُسْلِمٌ.وَالتِّرْمِذِيُّ، وَزَادَ: {اَللَّهُمَّ اِجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ، وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ}.بَابُ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ
62. உங்களில் நிறைவாக `உளூ'ச் செய்தப் பின்னர், ``நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணைதுணை இல்லை என நான் சாட்சி அளிக்கிறேன். இன்னும் முஹம்மத்(ஸல்) அவனுடைய அடியார் மற்றும் தூதர் என்றும் நான் சாட்சி அளிக்கிறேன்'' எனக் கூறுபவருக்கு சுவர்க்கத்தின் எட்டு வாயில்கள் திறக்கப்படுகின்றன. அவற்றில் விரும்பிய வாயிலில் அவர் நுழைந்து கொள்ளலாம் என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம், திர்மிதீ
``யா அல்லாஹ்! பாவமன்னிப்பு (தவ்பா) கோருபவர்களின் , குழுவிலும், தூயவர்களின் குழுவிலும் என்னைச் சேர்ப்பாயாக!'' எனும் வாசகம் திர்மிதீயில் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
காலுறைகளில் மஸஹ் செய்வது விளக்கம்
63. عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَوَضَّأَ، فَأَهْوَيْتُ لِأَنْزِعَ خُفَّيْهِ، فَقَالَ: "دَعْهُمَا، فَإِنِّي أَدْخَلْتُهُمَا طَاهِرَتَيْنِ" فَمَسَحَ عَلَيْهِمَا} مُتَّفَقٌ عَلَيْهِ.
63. நபி(ஸல்) அவர்களுடன் நான் இருந்தபோது, அவர்கள் `உளூ'ச் செய்தார்கள். அப்போது நான் அவர்களின் காலுறைகளைக் கழற்ற முயன்றேன். (அதற்கு) ``அவை இரண்டையும் விட்டுவிடு. ஏனெனில், தூய்மையான நிலையிலேயே அவை இரண்டையும் நான் அணிந்துள்ளேன்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறி, அவற்றின் மீது மஸஹ் செய்தார்கள் என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
குறிப்பு: `உளூ' உடன் இருக்கும் நிலையில் காலுரைகள் அணியப்பட்டிருந்தால் மட்டுமே அதன் மீது மஸஹ் செய்து கொள்ளலாம். பின்வரும் 67 ஆம் ஹதீஸ் பார்க்க!
64. وَلِلْأَرْبَعَةِ عَنْهُ إِلَّا النَّسَائِيَّ: {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَسَحَ أَعْلَى الْخُفِّ وَأَسْفَلَهُ} وَفِي إِسْنَادِهِ ضَعْفٌ.
64. ``இறைத்தூதர்(ஸல்) காலுறையின் மேலும், கீழும் மஸஹ் செய்தார்கள்'' எனும் வாசகம் முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அவர்களின் வாயிலாகவே அபூ தாவூத் திர்மிதீ மற்றும் இப்னு மாஜா ஆகிய மூன்றிலும் பதிவிடப்பட்டுள்ளது.
இதன் அறிப்பாளர் தொடர் பலவீனமானது
65. وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {لَوْ كَانَ اَلدِّينُ بِالرَّأْيِ لَكَانَ أَسْفَلُ الْخُفِّ أَوْلَى بِالْمَسْحِ مِنْ أَعْلَاهُ، وَقَدْ رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ عَلَى ظَاهِرِ خُفَّيْهِ} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ بِإِسْنَادٍ حَسَنٍ.
65. ``மார்க்கம், அறிவை (மட்டும்) அடிப்படையாகக் கொண்டிருப்பின், காலுறைகளின் கீழ்ப் பக்கம் மஸஹ் செய்வது சிறப்பானதாய் இருக்கலாம். ஆனால், பி(ஸல்) அவர்களை காலுறைகளின் மேல் பக்கம் மஸஹ் செய்யக் நான் கண்டுள்ளேன்'' என அலீ(ரலி) கூறினார்.
நூல்: அபூ தாவூத்
இமாம் அபூ தாவூத்(ரஹ்) இதனை `ஹஸன்' எனும் தரத்தில் பதிவிட்டுள்ளார்.
66. وَعَنْ صَفْوَانَ بْنِ عَسَّالٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُنَا إِذَا كُنَّا سَفْرًا أَنْ لَا نَنْزِعَ خِفَافَنَا ثَلَاثَةَ أَيَّامٍ وَلَيَالِيَهُنَّ، إِلَّا مِنْ جَنَابَةٍ وَلَكِنْ مِنْ غَائِطٍ، وَبَوْلٍ، وَنَوْمٍ} أَخْرَجَهُ النَّسَائِيُّ، وَالتِّرْمِذِيُّ وَاللَّفْظُ لَهُ، وَابْنُ خُزَيْمَةَ وَصَحَّحَاهُ.
66. பயணத்தில், குளிப்பு கடமையானவர்களைத் தவிர்த்து, மூன்று பகல் மற்றும் மூன்று இரவுகளுக்கு மலஜலம் கழித்தல் மற்றும் தூங்குதல் போன்றவற்றிற்காக எங்கள் காலுறைகளை கழற்ற வேண்டாம் என இறைத்தூதர்(ஸல்) எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் என ஸஃப்வான் இப்னு அஸ்ஸால் (ரலி) அறிவித்தார்.
நூல்கள்: நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு குஸைமா.
இங்கு திர்மிதீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது. இமாம் திர்மிதீ மற்றும் இப்னு குஸைமா(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
67. وَعَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {جَعَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَةَ أَيَّامٍ وَلَيَالِيَهُنَّ لِلْمُسَافِرِ، وَيَوْمًا وَلَيْلَةً لِلْمُقِيمِ. يَعْنِي: فِي الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ} أَخْرَجَهُ مُسْلِمٌ.
67. ``மூன்று பகல் மற்றும் மூன்று இரவுகள் பயணிகளுக்கும், ஒரு பகல் ஓர் இரவு பயணி அல்லாதோருக்கும் காலுறைகளில் மஸஹ் செய்து கொள்ள இறைத்தூதர்(ஸல்) அனுமதி அளித்துள்ளார்கள்'' என அலீ(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
68. وَعَنْ ثَوْبَانَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {بَعَثَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَرِيَّةً، فَأَمَرَهُمْ أَنْ يَمْسَحُوا عَلَى الْعَصَائِبِ - يَعْنِي: اَلْعَمَائِمَ -وَالتَّسَاخِينِ- يَعْنِي: اَلْخِفَافَ} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
68. ஒரு சிறு படையை இறைத்தூதர்(ஸல்) அனுப்பியபோது, தலைப்பாகைகளிலும், காலுறைகளிலும் மஸஹ் செய்து கொள்ளுமாறு அவர்களுக்கு (நபி(ஸல்) கட்டளையிட்டார்கள் என ஸல்பான்(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
69. وَعَنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ -مَوْقُوفًا- وَعَنْ أَنَسٍ -مَرْفُوعًا-: {إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ وَلَبِسَ خُفَّيْهِ فَلْيَمْسَحْ عَلَيْهِمَا، وَلْيُصَلِّ فِيهِمَا، وَلَا يَخْلَعْهُمَا إِنْ شَاءَ إِلَّا مِنْ جَنَابَةٍ"} أَخْرَجَهُ الدَّارَقُطْنِيُّ، وَالْحَاكِمُ وَصَحَّحَهُ.
69. ``உங்களில் குளிப்புக் கடமையாக அல்லாத ஒருவர், காலுறைகள் அணிந்து நிலையில் `உளூ'ச் செய்தால், அவர் விரும்பினால் அவற்றின் மீது மஸஹ் செய்து, அவற்றை அணிந்தவாறே தொழட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உமர்(ரலி) வாயிலாக `மவ்கூஃப்' எனும் தரத்திலும், அனஸ்(ரலி) வாயிலாக ``மர்ஃபூஃ'' எனும் தரத்திலும் தாரகுத்னீயில் பதிவிடப்பட்டுள்ளது.
இது ஹாகிமிலும் பதிவிடப்பட்டுள்ளது. இதனை இமாம் ஹாகிம்(ரஹ்) ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
70. وَعَنْ أَبِي بَكْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَنَّهُ رَخَّصَ لِلْمُسَافِرِ ثَلَاثَةَ أَيَّامٍ وَلَيَالِيَهُنَّ، وَلِلْمُقِيمِ يَوْمًا وَلَيْلَةً، إِذَا تَطَهَّرَ فَلَبِسَ خُفَّيْهِ: أَنْ يَمْسَحَ عَلَيْهِمَا} أَخْرَجَهُ الدَّارَقُطْنِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ.
70. ``மூன்று பகல் மற்றும் மூன்று இரவுகள் பயணிகளுக்கும், ஒரு பகல் ஓர் இரவு பயணி அல்லாதோருக்கும் காலுறைகளில் மஸஹ் செய்வதற்கு இறைத்தூதர்(ஸல்) அனுமதி அளித்தார்கள். அவர்கள் அவற்றைத் தூய்மையான நிலையில் (`உளூ'வுடன்) அணிந்திருந்தால்தான் இச்சலுகை என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.
நூல்: தாரகுத்னீ
இமாம் இப்னு குஸைமா(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
71. وَعَنْ أُبَيِّ بْنِ عِمَارَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ قَالَ: {يَا رَسُولَ اللهِ أَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ؟ قَالَ: "نَعَمْ" قَالَ: يَوْمًا؟ قَالَ: "نَعَمْ"، قَالَ: وَيَوْمَيْنِ؟ قَالَ: "نَعَمْ"، قَالَ: وَثَلَاثَةً؟ قَالَ: "نَعَمْ، وَمَا شِئْتَ" أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَقَالَ: لَيْسَ بِالْقَوِيِّ}.بَابُ نَوَاقِضِ الْوُضُوءِ
71. ``இறைத்தூதர் அவர்களே! காலுறைகளில் மஸஹ் செய்து கொள்ளட்டுமா?'' என நான் கேட்டேன்.
``ஆம்!'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
``ஒரு நாள் (முழுவதும்)?'' என நான் கேட்டேன்.
``ஆம்!'' என்றார்கள்.
``இரண்டு நாள்கள்?'' என நான் கேட்டேன்.
``ஆம்!'' என்றார்கள்.
``மூன்று நாள்கள்?'' என நான் கேட்டேன்.
``ஆம்! நீ விரும்பிய வரை'' என்று கூறினார்கள் என உபை இப்னு இமாரா(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இது பலமானது அல்ல என இமாம் அபூ தாவூத்(ரஹ்) கூறியுள்ளார்.
`உளூ'வை முறிக்கக் கூடியவை
72. عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ أَصْحَابُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - عَلَى عَهْدِهِ- يَنْتَظِرُونَ الْعِشَاءَ حَتَّى تَخْفِقَ رُؤُوسُهُمْ، ثُمَّ يُصَلُّونَ وَلَا يَتَوَضَّئُونَ} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَصَحَّحَهُ الدَّارَقُطْنِيُّ.وَأَصْلُهُ فِي مُسْلِمٍ.
72. இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் அவர்களின் தோழர்கள் இஷாத் தொழுகைக்காகக் காத்திருப்பார்கள். அப்போது (தூக்க மிகுதியால்) அவர்களின் தலைகள் (மேலும் கீழுமாக) ஆடிக் கொண்டிருக்கும். அவர்கள் (மீண்டும்) `உளூ'ச் செய்யாமல் அப்படியே தொழுவார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத்
இமாம் தார குத்னீ(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் முஸ்லிமில் உள்ளது.
குறிப்பு: படுத்தோ அல்லது எதன் மீதேனும் சாய்ந்தோ அல்லது கையைத் தரையில் ஊன்றியோ தூங்கினால் மட்டுமே `உளூ' முறிந்துவிடும். தலை நன்கு சாய்ந்த நிலையில் உணர்வுடன் தூங்கினால் `உளூ' முறியாது.
73. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {جَاءَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللهِ! إِنِّي اِمْرَأَةٌ أُسْتَحَاضُ فَلَا أَطْهُرُ، أَفَأَدَعُ الصَّلَاةَ؟ قَالَ: "لَا. إِنَّمَا ذَلِكَ عِرْقٌ، وَلَيْسَ بِحَيْضٍ، فَإِذَا أَقْبَلَتْ حَيْضَتُكِ فَدَعِي الصَّلَاةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ، ثُمَّ صَلِّي} مُتَّفَقٌ عَلَيْهِ.
73. ஃபாத்திமா பின்த் அபீஹ &பைஷ்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ``இறைத்தூதர் அவர்களே! நான் தொடர்ந்து இரத்தப்போக்குள்ள (இஸ்திஹாளா) பெண்ணாய் இருக்கிறேன். நான் தூய்மை அடைவதே இல்லை. எனவே, நான் தொழுகையை விட்டுவிடலாமா?'' எனக் கேட்டார்.
``கூடாது! அது மாதவிடாய் இரத்தமல்ல. ஒரு நரம்பு நோய். எனவே, (வழக்கப்படி) உனக்கு மாதவிடாய் ஏற்படும்போது நீ தொழுகையை விட்டுவிடு! அது சென்றதும் இரத்தத்தைக் கழுவிவிட்டுத் தொழுது கொள்!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
74. وَلِلْبُخَارِيِّ: {ثُمَّ تَوَضَّئِي لِكُلِّ صَلَاةٍ}.وَأَشَارَ مُسْلِمٌ إِلَى أَنَّهُ حَذَفَهَا عَمْدًا.
74. பிறகு, நீ ஒவ்வொரு தொழுகைக்கும் `உளூ'ச் செய்து கொள்!'' என்று கூறினார்கள் எனவும் புகாரீயில் உள்ளது.
இதனை ஹம்மாத் என்ற அறிவிப்பாளர் வேண்டு என்றே அறிவிக்காமல் விட்டுவிட்டார் என இமாம் முஸ்லிம்(ரஹ்) சுட்டிக் காட்டுகிறார்.
75. وَعَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كُنْتُ رَجُلاً مَذَّاءً، فَأَمَرْتُ الْمِقْدَادَ بْنَ الْأَسْوَدِ أَنْ يَسْأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ ؟ فَقَالَ: "فِيهِ الْوُضُوءُ} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِلْبُخَارِيِّ.
75. நான் இச்சைநீர் சுரக்கும் தன்மையுள்ளனாய் இருந்தேன். இது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கேட்குமாறு மிக்தாதிற்குக் கட்டளையிட்டேன். அவரும் கேட்டார்.
``அதற்காக (இச்சைநீருக்காகக் குளிப்புக் கடமையாகாது. ஆனால்,) `உளூ'ச் செய்தல் கட்டாயமாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அலீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு புகாரீயின் வாசகம் இடம்பெற்றுள்ளது.
76. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا؛ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبَّلَ بَعْضَ نِسَائِهِ، ثُمَّ خَرَجَ إِلَى الصَّلَاةِ وَلَمْ يَتَوَضَّأْ} أَخْرَجَهُ أَحْمَدُ، وَضَعَّفَهُ الْبُخَارِيُّ.
76. இறைத்தூதர்(ஸல்) தம் மனைவியரில் ஒருவரை முத்தமிட்டு, பிறகு தொழுகைக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் (அதற்காக மறுபடியும்) `உளூ'ச் செய்யவில்லை'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: அஹ்மத்
இதனை இமாம் புகாரீ(ரஹ்) `ளயீஃப்' - பலவீனமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
குறிப்பு: பெண்ணைத் தொடுவதாலோ முத்தமிடுவதாலோ `உளூ' முறிந்துவிடாது. ஆனால், தொடும்போது இச்சை ஏற்படுமானால் `உளூ' முறிந்துவிடும்.