641. وَعَنْ عَتَّابِ بنِ أُسَيْدٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: أَمَرَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَنْ يُخْرَصَ الْعِنَبُ كَمَا يُخْرَصُ النَّخْلُ، وَتُؤْخَذَ زَكَاتُهُ زَبِيبًا} رَوَاهُ الْخَمْسَةُ، وَفِيهِ اِنْقِطَاعٌ.
641. பேரீச்சம் பழத்தில் `ஜகாத்' மதிப்பீடு செய்து (வசூலிப்பது) போன்றே திராட்சையிலும் `ஜகாத்' மதிப்பீடு செய்து (வசூலித்துக்) கொள்ளுமாறு இறைத்தூதர்(ஸல்) கட்டளையிட்டார்கள். அப்போது, அதற்குரிய `ஜகாத்' காய்ந்த திராட்சை (கிஸ்மிஸ்) ஆக வாங்கப்பட்டது என அத்தாப் இப்னு அஸீத்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இதன் அறிவிப்பாளர் தொடர் துண்டிக்கப்பட்டுள்ளது.
642. وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ؛ {أَنَّ اِمْرَأَةً أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهَا اِبْنَةٌ لَهَا، وَفِي يَدِ اِبْنَتِهَا مِسْكَتَانِ مِنْ ذَهَبٍ، فَقَالَ لَهَا: "أَتُعْطِينَ زَكَاةَ هَذَا؟" قَالَتْ: لَا. قَالَ: "أَيَسُرُّكِ أَنْ يُسَوِّرَكِ اللهُ بِهِمَا يَوْمَ الْقِيَامَةِ سِوَارَيْنِ مِنْ نَارٍ؟". فَأَلْقَتْهُمَا.} رَوَاهُ الثَّلَاثَةُ، وَإِسْنَادُهُ قَوِيٌّ. وَصَحَّحَهُ الْحَاكِمُ: مِنْ حَدِيثِ عَائِشَةَ.
642. இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்தார். அவரின் கையில் அவரின் மகள் இருந்தாள். அவளின் கையில் இரண்டு தங்க வளையங்கள் இருந்தன.
``இதற்கு நீ `ஜகாத்' கொடுத்துவிட்டாயா?'' என அப்பெண்ணிடம் இறைத்தூதர்(ஸல்) கேட்டார்கள்.
``இல்லை'' என அவர் கூறினார்.
``மறுமையில் அல்லாஹ் இதற்குப் பதிலாக நெருப்பினால் ஆன இரண்டு வளையங்கள் அணிவிப்பதை விரும்புகிறாயா?'' என இறைத்தூதர்(ஸல்) கேட்டார்கள்.
உடனே, அவர் அவற்றை உடனடியாக் கழற்றிக் கொடுத்து விட்டார் என அமீர் இப்னு ஷுஐபு தன் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ மற்றும் திர்மிதீ
ஆயிஷா(ரலி) அவர்களின் அறிவிப்பின் மூலம், இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
643. وَعَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهَا؛ {أَنَّهَا كَانَتْ تَلْبَسُ أَوْضَاحً امِنْ ذَهَبٍ فَقَالَتْ: يَا رَسُولَ اللهِ! أَكَنْزٌ هُوَ؟ فَـ قَالَ: "إِذَا أَدَّيْتِ زَكَاتَهُ، فَلَيْسَ بِكَنْزٍ".} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَالدَّارَقُطْنِيُّ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
643. தங்கத்தால் செய்யப்பட்டிருந்த ஒருவகை நகையை நான் அணிந்திருந்தேன். ``இறைத்தூதர் அவர்களே! இதுவும் (சேகரித்துப் பதுக்கி வைக்கும்) புதையல் ஆகுமா?'' என அது குறித்து நான் கேட்டேன்.
``அதற்கான `ஜகாத்' செலுத்தப்பட்டிருந்தால் அது பதுக்கிவைத்த புதையல் ஆகாது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், தாரகுத்னீ
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்..
644. وَعَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُنَا؛ أَنْ نُخْرِجَ الصَّدَقَةَ مِنَ الَّذِيْ نَعُدُّهُ لِلْبَيْعِ.} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَإِسْنَادُهُ لَيِّنٌ.
644. நாங்கள் வியாபாரத்திற்காகச் சேகரித்துள்ள பொருட்களிலிருந்து `ஜகாத்'தைக் கொடுக்குமாறு இறைத்தூதர்(ஸல்) எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் என ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இதன் அறிவிப்புத் தொடரில் `லய்யின்' எனும் பலவீனம் உள்ளது.
645. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: "وَفِي الرِّكَازِ: اَلْخُمُسُ".} مُتَّفَقٌ عَلَيْهِ.
645. ``புதையலில் (மற்றும் சுரங்கப் பொருட்களில்) ஐந்தில் ஒரு பங்கு (20 விழுக்காடு) `ஜகாத்' ஆகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
646. وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ؛ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ -فِي كَنْزٍ وَجَدَهُ رَجُلٌ فِي خَرِبَةٍ-: "إِنْ وَجَدْتَهُ فِي قَرْيَةٍ مَسْكُونَةٍ، فَعَرِّفْهُ، وَإِنْ وَجَدْتَهُ فِي قَرْيَةٍ غَيْرِ مَسْكُونَةٍ، فَفِيهِ وَفِي الرِّكَازِ: اَلْخُمُسُ ".} أَخْرَجَهُ اِبْنُ مَاجَهْ بِإِسْنَادٍ حَسَنٍ.
646. பாழடைந்த ஓர் இடத்திலிருந்து ஒருவருக்குக் கிடைத்த புதையல் குறித்து இறைத்தூதர்(ஸல்) கூறுகையில், ``அதை நீ மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து பெற்றிருந்தால் (அது யாருக்குரியது எனக் கேட்டு) அதனை அறிவிப்புச் செய்! மக்கள் வசிக்காத பகுதியிலிருந்து அதைப் பெற்றிருந்தால் அதன் ஐந்தில் ஒரு பங்கு (20 விழுக்காடு) `ஜகாத்' ஆகும்'' என்று கூறினார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு தம் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவித்தார்.
இமாம் இப்னு மாஜா(ரஹ்) இதனை `ஹஸன்' எனும் தரத்தில் பதிவிட்டுள்ளார்.
647. وَعَنْ بِلَالِ بْنِ اَلْحَارِثِ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ مِنَ الْمَعَادِنِ الْقَبَلِيَّةِ الصَّدَقَةَ.} رَوَاهُ أَبُو دَاوُدَ.بَابُ صَدَقَةِ الْفِطْرِ
647. `கபலிய்யா' எனும் தங்கச் சுரங்கத்திலிருந்து கிடைக்கும் தங்கத்திற்கு இறைத்தூதர்(ஸல்) `ஜகாத்' வாங்கினார்கள் என பிலால் இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
குறிப்பு: கபலிய்யா என்பது மதீனாவிலிருந்து ஐந்து நாள்கள் பயண தூரமுள்ள கடற்கரைப் பகுதியாகும். அங்கு குக்கிராமங்கள் பல உள்ளன.
648. عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {فَرَضَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الْفِطْرِ، صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ: عَلَى الْعَبْدِ وَالْحُرِّ، وَالذَّكَرِ، وَالْأُنْثَى، وَالصَّغِيرِ، وَالْكَبِيرِ، مِنَ الْمُسْلِمِينَ، وَأَمَرَ بِهَا أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلَاةِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
648. முஸ்லிம்களிலுள்ள அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், சிறியவர், பெரியவர் ஆகிய அனைவர் மீதும் தலா ஒரு `ஸாவு' பேரீத்தம் பழத்தை அல்லது ஒரு `ஸாவு' வாற்கோதுமையை `ஜகாத்துல் ஃபித்ர்' (பெருநாள் தர்மம்) கொடுக்க வேண்டும் என இறைத்தூதர்(ஸல்) கடமையாக்கினார்கள். மேலும், மக்கள் தொழுகைக்கு வெளியேறும் முன்பே அதைக் கொடுக்குமாறு கட்டளையிட்டார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
குறிப்பு: `முத்' என்பது ஒருவர் தம் இரண்டு கைகளையும் இணைத்து அள்ளும் ஓர் அளவைக் குறிக்கும். நான் `முத்'களை ஒன்றிணைத்தல் ஒரு `ஸாவு' எனப்படும்.
649. وَلِابْنِ عَدِيٍّ مِنْ وَجْهٍ آخَرَ، وَالدَّارَقُطْنِيِّ بِإِسْنَادٍ ضَعِيفٍ: {اغْنُوهُمْ عَنِ الطَّوَافِ فِي هَذَا الْيَوْمِ}.
649. ``அந்நாளில் (பெருநாளில்) ஏழைகள் (உணவில்லாமல்) அலைந்து திரிவதைப் போக்கிவிடுங்கள்'' என இப்னு அதீ எனும் நூலிலும், தார குத்னீயிலும் `ளயீஃப்' எனும் பலவீனமான தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
650. وَعَنْ أَبِي سَعِيدٍ اَلْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كُنَّا نُعْطِيهَا فِي زَمَانِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَاعًا مِنْ طَعَامٍ، أَوْ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ، أَوْ صَاعًا مِنْ زَبِيبٍ.} مُتَّفَقٌ عَلَيْهِ.وَفِي رِوَايَةٍ: {أَوْ صَاعًا مِنْ أَقِطٍ}. قَالَ أَبُو سَعِيدٍ: أَمَّا أَنَا فَلَا أَزَالُ أُخْرِجُهُ كَمَا كُنْتُ أُخْرِجُهُ فِي زَمَنِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. وَلِأَبِي دَاوُدَ: {لَا أُخْرِجُ أَبَدًا إِلَّا صَاعًا}.
650. இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில், பெருநாள் தர்மமாக, உணவு பொருட்களில், ஒரு `ஸாவு' அல்லது பேரீத்தம் பழத்தில் ஒரு `ஸாவு' அல்லது வாற்கோதுமையில் ஒரு `ஸாவு' அல்லது காய்ந்த திராட்சையில் ஒரு `ஸாவு' என நாங்கள் கொடுத்துக் கொண்டிருந்தோம் என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
மற்றோர் அறிவிப்பின்படி அல்லது ஒரு `ஸாவு' பால் கட்டி என உள்ளது.
``இறைத்தூதர்(ஸல்) காலத்தில் நான் எதைக் கொடுத்துக் கொண்டிருந்தேனோ, அதையே கொடுத்து கொண்டிருப்பேன்'' என அபூ ஸயீத் கூறினார்.
அபூ தாவூதின் அறிவிப்பில் நான் ஒருபோதும் ஒரு ஸாவுவைத் தவிர (அதிகமாக) கொடுக்க மாட்டேன் என உள்ளது.
651. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {فَرَضَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الْفِطْرِ؛ طُهْرَةً لِلصَّائِمِ مِنَ اللَّغْوِ، وَالرَّفَثِ، وَطُعْمَةً لِلْمَسَاكِينِ، فَمَنْ أَدَّاهَا قَبْلَ الصَّلَاةِ فَهِيَ زَكَاةٌ مَقْبُولَةٌ، وَمَنْ أَدَّاهَا بَعْدَ الصَّلَاةِ فَهِيَ صَدَقَةٌ مِنَ الصَّدَقَاتِ.} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَابْنُ مَاجَهْ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.بَابُ صَدَقَةِ التَّطَوُّعِ
651. இறைத்தூதர்(ஸல்) பெருநாள் தர்மத்தைக்க கடமையாக்கி, ``நோன்பாளிகளின் வீண் மற்றும் ஆபாசப் பேச்சுகளைத் தூய்மைப்படுத்தும் முகமாகவும், ஏழைகளின் உணவாகவும் (பெருநாள் தர்மம்) உள்ளது. அதைப் பெருநாள் தொழுகைக்கு முன்பே செலுத்தியவரிடமிருந்து, அது ஏற்றுக் கொள்ளப்பட்ட தர்மமாகும். அதைத் தொழுகைக்கு முன்பே செலுத்தியவரிடமிருந்து, அது ஏற்கப்பட்ட தர்மமாகும். அதைத் தொழுகைக்குப் பின்பு செலுத்துபவருககு, அது தர்மங்களில் ஒரு தர்மமாகும்'' என்று கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், இப்னு மாஜா
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
652. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {سَبْعَةٌ يُظِلُّهُمُ اللهُ فِي ظِلِّهِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ....} فَذَكَرَ الْحَدِيثَ وَفِيهِ: {وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّى لَا تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ} مُتَّفَقٌ عَلَيْهِ.
652. ``இறைவனின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்த (மறுமை) நாளில், அல்லாஹ் தன் நிழலில் ஏழு நபர்களுக்கு இடம் அளிப்பான். (ஹதீஸ் முழுவதும் சொல்லப்பட்டது) அவர்களில் ஒருவர் தன் வலக் கை செய்யும் தர்மத்தை தன் இடக் கை அறியாதவாறு இரகசியமாக தர்மம் செய்தவர்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
குறிப்பு: மேற்கண்ட ஹதீஸை முழுவதுமாக அறிந்திட, ஸஹீஹ் அல் புகாரீ ஹதீஸ் எண் 1423 காண்க!
653. وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: {كُلُّ اِمْرِئٍ فِي ظِلِّ صَدَقَتِهِ حَتَّى يُفْصَلَ بَيْنَ النَّاسِ} رَوَاهُ اِبْنُ حِبَّانَ وَالْحَاكِمُ.
653. ``(மறுமையில்) மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கப்படும் வரை ஒவ்வொரு மனிதனும், தன் தர்மத்தின் நிழலில் இருப்பான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூற நான் செவியுற்றுள்ளேன் என உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: இப்னு ஹிப்பான், ஹாகிம்
654. وَعَنْ أَبِي سَعِيدٍ اَلْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {أَيُّمَا مُسْلِمٍ كَسَا مُسْلِمًا ثَوْبًا عَلَى عُرْيٍ كَسَاهُ اللهُ مِنْ خُضْرِ اَلْجَنَّةِ، وَأَيُّمَا مُسْلِمٍ أَطْعَمَ مُسْلِمًا عَلَى جُوعٍ أَطْعَمَهُ اللهُ مِنْ ثِمَارِ الْجَنَّةِ، وَأَيُّمَا مُسْلِمٍ سَقَى مُسْلِمًا عَلَى ظَمَإٍ سَقَاهُ اللهُ مِنَ الرَّحِيقِ الْمَخْتُومِ} رَوَاهُ أَبُو دَاوُدَ وَفِي إِسْنَادِهِ لَيِّنٌ.
654. ``ஆடை இல்லாதிருக்கும் தன் முஸ்லிம் சகோதரனுக்கு ஆடை அணியச் செய்யும் முஸ்லிமிற்குச் சுவர்க்கத்தின் பச்சை நிற ஆடையை அல்லாஹ் அணிவிப்பான். பசியில் இருக்கும் தன் முஸ்லிம் சகோதரனுக்கு உணவளிக்கும் முஸ்லிமிற்கு சுவர்க்கத்தின் பழவகைகளை அல்லாஹ் உண்ணச் செய்வான். தாகத்தில் இருக்கும் தன் முஸ்லிம் சகோதரனுக்கு நீர் புகட்டுபவருக்கு `அர்ரஹீக்குல் மக்தூம்' எனும் பானத்தை சுவர்க்கத்தில் அல்லாஹ் புகட்டுவான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
இமாம் அபூ தாவூத்(ரஹ்) இதனை பலவீனமான அறிவிப்பாளர் தொடருடன் பதிவிட்டுள்ளார்.
655. وَعَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {اَلْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى، وَابْدَأْ بِمَنْ تَعُولُ، وَخَيْرُ الصَّدَقَةِ عَنْ ظَهْرِ غِنًى، وَمَنْ يَسْتَعْفِفْ يُعِفَّهُ اللهُ، وَمَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللهُ.} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِلْبُخَارِيِّ.
655. மேலே இருக்கும் கை (கொடுக்கும்) கீழே இருக்கும் (வாங்கும்) கையைவிடச் சிறந்தது. மேலும், நீ தர்மத்தை உன் சொந்தபந்தங்களிலிருந்து தொடங்கு தேவைக்குப் போக (மீதம்) உள்ளதை தர்மம் செய்வதே சிறந்ததாகும். (பிறரிடம் தர்மம் கேட்காமல்) தன் சுயமரியாதையைப் பாதுகாக்க முயல்பவரின் சுயமரியாமையை அல்லாஹ் பாதுகாக்கிறான். (கிடைத்ததை வைத்துப்) போதும் என்ற எண்ணத்துடன் (தர்மத்தை ஏற்காமலேயே) இருப்பவருக்கு, அல்லாஹ்வும் அவருக்குப் போதும் என்ற எண்ணத்தை அளிக்கிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஹக்கிம் இப்னு ஹிஜாம்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு புகாரீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
656. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {قِيلَ يَا رَسُولَ اللهِ: أَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ: "جُهْدُ الْمُقِلِّ، وَابْدَأْ بِمَنْ تَعُولُ"} أَخْرَجَهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ، وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ، وَابْنُ حِبَّانَ، وَالْحَاكِمُ.
656. ``தர்மத்தில் சிறந்தது எது?'' என மக்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வினவினர்.
``குறைந்த செல்வமே உள்ளவர் அதிலிருந்து தர்மம் செய்வது. நீங்கள் உங்கள் தர்மத்தை உங்கள் வீட்டாரிலிருந்து தொடங்குங்கள்!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், அஹ்மத்
இமாம் ஹிப்பான், இமாம் இப்னு குஸைமா மற்றும் இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
657. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {"تَصَدَّقُوا " فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللهِ، عِنْدِي دِينَارٌ؟ قَالَ: "تَصَدَّقْ بِهِ عَلَى نَفْسِكَ" قَالَ: عِنْدِي آخَرُ، قَالَ: " تَصَدَّقْ بِهِ عَلَى وَلَدِكَ "قَالَ: عِنْدِي آخَرُ، قَالَ: "تَصَدَّقْ بِهِ عَلَى خَادِمِكَ" قَالَ: عِنْدِي آخَرُ، قَالَ: "أَنْتَ أَبْصَرُ".} رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ وَالْحَاكِمُ.
657. ``தர்மம் செய்யுங்கள்!'' என (ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
``இறைத்தூதர் அவர்களே! என்னிடம் ஒரு தீனார் உள்ளது?'' என அப்போது ஒருவர் கூறினார்.
``நீ அதனை உன் செலவுக்கு வைத்துக் கொள்! என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
பின்னர், ``என்னிடம் மேலும் ஒன்று உள்ளது'' என அவர் கூறினார்.
``நீ உன் பிள்ளைகளுக்கு செலவிடு!'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
பின்னர், ``என்னிடம் மேலும் ஒன்று உள்ளது'' எனக் கூறினார்.
``நீ உன் மனைவிக்கு செலவிடு!'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
நீ அதனை என் ஊழியர்களுக்குச் செலவிடு'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
பின்னர், ``என்னிடம் மேலும் ஒன்று உள்ளது'' எனக் கூறினார்.
``அது குறித்து நீயே தீர்மானித்துக் கொள்!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ
இமாம் இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
658. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا أَنْفَقَتِ الْمَرْأَةُ مِنْ طَعَامِ بَيْتِهَا، غَيْرَ مُفْسِدَةٍ، كَانَ لَهَا أَجْرُهَا بِمَا أَنْفَقَتْ وَلِزَوْجِهَا أَجْرُهُ بِمَا اِكْتَسَبَوَلِلْخَازِنِ مِثْلُ ذَلِكَ، وَلَا يَنْقُصُ بَعْضُهُمْ أَجْرَ بَعْضٍ شَيْئًا} مُتَّفَقٌ عَلَيْهِ.
658. ``தன் வீட்டு உணவை வீணடிக்காமல் (தர்மமாக) செலவு செய்யும் பெண்ணுக்கு அதைச் செலவிட்ட அளவுக்கு நன்மை உண்டு. அதனை சம்பாதித்ததற்காக அவளின் கணவனுக்கும் நன்மை உண்டு. அதைப் பாதுகாக்கும் கருவூலக் காப்பாளருக்கும் அதே போன்ற நன்மை உண்டு. இது போன்றே மற்ற செலவினங்களிலும் நன்மை உண்டு. இவர்களில் யார் காரணத்தாலும் யாருக்குரிய நன்மையும் குறைக்கப்பட்டது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
659. وَعَنْ أَبِي سَعِيدٍ اَلْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {جَاءَتْ زَيْنَبُ اِمْرَأَةُ اِبْنِ مَسْعُودٍ، فَقَالَتْ: يَا رَسُولَ اللهِ، إِنَّكَ أَمَرْتَ الْيَوْمَ بِالصَّدَقَةِ، وَكَانَ عِنْدِي حُلِيٌّ لِي، فَأَرَدْتُ أَنْ أَتَصَدَّقَ بِهِ، فَزَعَمَ اِبْنُ مَسْعُودٍ أَنَّهُ وَوَلَدُهُ أَحَقُّ مَنْ تَصَدَّقْتُ بِهِ عَلَيْهِمْ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "صَدَقَ اِبْنُ مَسْعُودٍ، زَوْجُكِ وَوَلَدُكِ أَحَقُّ مَنْ تَصَدَّقْتِ بِهِ عَلَيْهِمْ".} رَوَاهُ الْبُخَارِيُّ.
659. இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் மனைவி ஜைனப்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ``இறைத்தூதர் அவர்களே! தர்மம் செய்யுமாறு இன்று தாங்கள் கட்டளையிட்டீர்கள். என்னிடம் சில நகைகள் உள்ளன. அவற்றை தர்மம் செய்வதைவிட நான் விரும்பினேன். ஆனால், இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களோ (அவற்றை அளிக்க நான் விரும்புவோரை விட) அவருக்கும் அவரின் பிள்ளைகளுக்கும் அதற்கு உரிமையுண்டு எனக் கூறினார்.'' (நான் என்ன செய்வது) என வினவினார்.
``மஸ்வூத் உண்மையே கூறினார். நீ செலவிட விரும்புவோரைவிட, உன் கணவர் மற்றும் உன் (அவரின்) பிள்ளைகளே அதிகம் உரிமை பெற்றவர்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
660. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَا يَزَالُ الرَّجُلُ يَسْأَلُ النَّاسَ حَتَّى يَأْتِيَ يَوْمَ الْقِيَامَةِ لَيْسَ فِي وَجْهِهِ مُزْعَةُ لَحْمٍ} مُتَّفَقٌ عَلَيْهِ.
660. ``மக்களிடம் (தன் தேவைகளை) எப்போதும் கேட்டுக் கொண்டே இருப்பவன் மறுமை நாளில் தன் முகத்தில் மாமிசத்தின் சிறு துண்டு கூட இல்லாமல் (எலும்புக் கூடாக) வருவான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்