662. وَعَنِ اَلزُّبَيْرِ بْنِ اَلْعَوَّامِ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {لَأَنْ يَأْخُذَ أَحَدُكُمْ حَبْلَهُ، فَيَأْتِي بِحُزْمَةِ الْحَطَبِ عَلَى ظَهْرِهِ، فَيَبِيعَهَا، فَيَكُفَّ اللهُ بِهَا وَجْهَهُ، خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَسْأَلَ النَّاسَ أَعْطَوهُ أَوْ مَنَعُوهُ} رَوَاهُ الْبُخَارِيُّ.
662. ``உங்களில் ஒருவர் ஒரு கயிற்றை எடுத்து (விறகு) கட்டைகளை கட்டி, அதனை தன் முதுகில் சுமந்து கொண்டு வந்து, விற்பனை செய்கிறார். அது மக்களிடம் யாசிப்பதை விட்டும் அவரைத் தடுக்கிறது என்றால், அதுவே மக்களிடம் கேட்பதைவிட அவருக்குச் சிறந்ததாகும். மக்கள் கொடுத்தாலும் சரி. கொடுக்காவிட்டாலும் சரி'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜுபைர் இப்னு அல் அவ்வாம்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
663. وَعَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اَلْمَسْأَلَةُ كَدٌّ يَكُدُّ بِهَا الرَّجُلُ وَجْهَهُ، إِلَّا أَنْ يَسْأَلَ الرَّجُلُ سُلْطَانًا، أَوْ فِي أَمْرٍ لَا بُدَّ مِنْهُ} رَوَاهُ التِّرْمِذِيُّ وَصَحَّحَهُ.بَابُ قَسْمِ الصَّدَقَاتِ
663. ``அதிகாரம் உள்ளவரிடம் (பொறுப்பாளர், ஆட்சியாளர்கள்) அல்லது தவிர்க்க முடியாத விஷயத்திற்காகவும் தவிர யாசிப்பவனின் யாசகம், அவன் தன் முகத்தில் தானே ஏற்படுத்திக் கொள்ளும் வடுவாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என சமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
664. عَنْ أَبِي سَعِيدٍ اَلْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا تَحِلُّ الصَّدَقَةُ لِغَنِيٍّ إِلَّا لِخَمْسَةٍ: لِعَامِلٍ عَلَيْهَا، أَوْ رَجُلٍ اِشْتَرَاهَا بِمَالِهِ، أَوْ غَارِمٍ، أَوْ غَازٍ فِي سَبِيلِ اَللهِ، أَوْ مِسْكِينٍ تُصُدِّقَ عَلَيْهِ مِنْهَا، فَأَهْدَى مِنْهَا لِغَنِيٍّ} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ، وَابْنُ مَاجَهْ، وَصَحَّحَهُ الْحَاكِمُ، وَأُعِلَّ بِالْإِرْسَالِ.
664. ``1 `ஜகாத்' பொருட்களைச் சேகரிக்க உழைப்பவர் 2 தன்னுடைய பொருளைப் பகரமாகக் கொடுத்து `ஜகாத்' பொருளை (விலைக்கு) வாங்குபவர் 3. கடன் பெற்றிருப்பவர் 4. அல்லாஹ்வின் பாதையில் போராடுபவர் 5. `ஜகாத்'தைப் பெற்ற ஏழையிடமிருந்து அன்பளிப்புப் பெறுபவர் ஆகிய ஐந்து நபர்களைத் தவிர `ஜகாத்' பொருட்களைப் பெறும் தகுதி, எந்தச் செல்வந்தருக்கும் இல்லை.'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், இப்னு மாஜா
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இது `முர்ஸல்' ஹஞத;! என குறை கூறப்பட்டுள்ளது.
665. وَعَنْ عُبَيْدِ اللهُ بْنِ عَدِيِّ بْنِ اَلْخِيَارِ؛ {أَنَّ رَجُلَيْنِ حَدَّثَاهُ أَنَّهُمَا أَتَيَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلَانِهِ مِنَ الصَّدَقَةِ، فَقَلَّبَ فِيهِمَا الْبَصَرَ، فَرَآهُمَا جَلْدَيْنِ، فَقَالَ: "إِنْ شِئْتُمَا، وَلَا حَظَّ فِيهَا لِغَنِيٍّ، وَلَا لِقَوِيٍّ مُكْتَسِبٍ".} رَوَاهُ أَحْمَدُ وَقَوَّاهُ، وَأَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ.
665. ``நாங்கள் இருவரும் `ஜகாத்'திலிருந்து (உதவி) பெறுவதற்காக இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றோம். அப்போது, இறைத்தூதர்(ஸல்) எங்களின் பக்கம் பார்வையைத் திருப்பினார்கள்; எங்களை வளமானவர்களாகக் கண்ட அவர்கள், ``நீங்கள் விரும்பினால், நான் உங்களுக்குத் தருகிறேன். ஆனால், இது செல்வந்தர் மற்றும் சம்பாதிக்கும் திறன் உள்ளவர்களுக்கு உரியதன்று'' என்று கூறினார்கள் என இரு நபர்களும் தம்மிடம் கூறினார்கள் என உபைதுல்லாஹ் இப்னு அதீ இப்னு அல் கியார்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத்
இமாம் அபூ தாவூத் மற்றும் இமாம் நஸயீ(ரஹ்) இதனை பலமான ஹதீஸ் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
666. وَعَنْ قَبِيصَةَ بْنِ مُخَارِقٍ اَلْهِلَالِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِنَّ الْمَسْأَلَةَ لَا تَحِلُّ إِلَّا لِأَحَدِ ثَلَاثَةٍ: رَجُلٌ تَحَمَّلَ حَمَالَةً، فَحَلَّتْ لَهُ الْمَسْأَلَةُ حَتَّى يُصِيبَهَا، ثُمَّ يُمْسِكَ، وَرَجُلٌ أَصَابَتْهُ جَائِحَةٌ، اِجْتَاحَتْ مَالَهُ، فَحَلَّتْ لَهُ الْمَسْأَلَةُ حَتَّى يُصِيبَ قِوَامًا مِنْ عَيْشٍ، وَرَجُلٌ أَصَابَتْهُ فَاقَةٌ حَتَّى يَقُومَ ثَلَاثَةٌ مِنْ ذَوِي الْحِجَى مِنْ قَومِهِ: لَقَدْ أَصَابَتْ فُلَانًا فَاقَةٌ؛ فَحَلَّتْ لَهُ الْمَسْأَلَةُ حَتَّى يُصِيبَ قِوَامًا مِنْ عَيْشٍ، فَمَا سِوَاهُنَّ مِنَ الْمَسْأَلَةِ يَا قَبِيصَةُ سُحْتٌ يَأْكُلُهَا صَاحِبُهَا سُحْتًا} رَوَاهُ مُسْلِمٌ، وَأَبُو دَاوُدَ، وَابْنُ خُزَيْمَةَ، وَابْنُ حِبَّانَ.
666. மூன்று மனிதர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் (தம் தேவையைக்) கேட்பது ஹலால் (அனுமதிக்கப்பட்டது) அல்ல. 1. பிணைப் பொறுப்யை ஏற்று (மாட்டிக்) கொண்டவர் அதை, நிவர்த்தி, செய்யும் அளவு கேட்டுக் கொண்டு நிறுத்திக் கொள்ளவும். 2. ஏதோ ஆபத்து ஏற்பட்டு தன் உடமைகள் எல்லாம் இழந்து நிற்பவர் தன் சொந்தக் காலில் நிற்கும் வரை கேட்கலாம். 3. ஒருவருக்கு பஞ்சம் (பெரும் நட்டம்) ஏற்பட்டு, அவரின் சமூகத்தாரில் அறிவு மிக்க மூவர் உண்மையில் அவருக்கு நட்டம் ஏற்பட்டுவிட்டது என சாட்சி அளிக்க முன்வந்தால் அவரின் பஞ்சம் தீரும் வரை, தர்மம் கேட்பது அவருக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
கபீஸாவே! மேற்கண்ட மூன்று நிலைகளைத் தவிர்த்து யாசிப்பது விலக்கப்பட்டதாகும். அதனை (யாசித்து) உண்டால் அது ஆகுமானதல்ல'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என கபீஸா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: முஸ்லிம், அபூ தாவூத், இப்னு குஸைமா மற்றும் இப்னு ஹிப்பான்.
667. وَعَنْ عَبْدِ الْمُطَّلِبِ بْنِ رَبِيعَةَ بْنِ اَلْحَارِثِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِنَّ الصَّدَقَةَ لَا تَنْبَغِي لِآلِ مُحَمَّدٍ، إِنَّمَا هِيَ أَوْسَاخُ النَّاسِ}.وَفِي رِوَايَةٍ: {وَإِنَّهَا لَا تَحِلُّ لِمُحَمَّدٍ وَلَا آلِ مُحَمَّدٍ} رَوَاهُ مُسْلِمٌ.
667. ``முஹம்மதின் குடும்பத்தாருக்கு `ஜகாத்' தேவையற்றது. ஏனெனில், அது மக்களின் அழுக்கே தவிர வேறில்லை'' (மற்றோர் அறிவிப்பின்படி) ``முஹம்மதுக்கும், முஹம்மதின் குடும்பத்தாருக்கு `ஜகாத்' ஹலால் (அனுமதிக்கப்பட்டது) அல்ல'' என்றும் உள்ளது என அப்துல் முத்தலிப் இப்னு ரபீஆ இப்னு அல்ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
குறிப்பு: இங்கு மக்களின் அழுக்கு எனக் கூறப்பட்டதன் நோக்கம், ஜகாத் மற்றும் தர்மப் பொருள் அசுத்தமானது என்பதல்ல; மாறாக இறைத்தூதர்(ஸல்) அவர்களின் குடும்பத்தாரில் யாரும் அதனை வாங்கக் கூடாது என்பற்காக ஆகும். அவ்வாறு வாங்குவதற்கு அன்று நபி(ஸல்) அனுமதித்திருந்தால், இன்று `ஜகாத்' மற்றும் தர்மப் பொருள்கள் ஏழைகளுக்குப் போய்ச் சேராமல் நபியவர்களின் வாரிசுகளுக்கு மட்டும் போய்ச் சேர்வதற்கான வாய்ப்பு உள்ளது. இதை நபி(ஸல்) தமக்கும் தம் வாரிசுகளுக்கும் தடுத்துக் கொண்டது இதன் காரணமாகவும் இருக்கலாம். அல்லாஹ் மிக அறிந்தவன்.
668. وَعَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {مَشَيْتُ أَنَا وَعُثْمَانُ بْنُ عَفَّانَ رَضِيَ اللهُ عَنْهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْنَا: يَا رَسُولَ اللهِ، أَعْطَيْتَ بَنِي الْمُطَّلِبِ مِنْ خُمُسِ خَيْبَرَ وَتَرَكْتَنَا، وَنَحْنُ وَهُمْ بِمَنْزِلَةٍ وَاحِدَةٍ، فَقَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "إِنَّمَا بَنُو اَلْمُطَّلِبِ وَبَنُو هَاشِمٍ شَيْءٌ وَاحِدٌ".} رَوَاهُ الْبُخَارِيُّ.
668. நானும் உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) இருவரும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று! ``இறைத்தூதர் அவர்களே! கைபர் போர்ப் பொருட்களில் குமுஸிலிருந்து (ஐந்தில் ஒரு பகுதியிலிருந்து) அப்துல் முத்தலிபின் சந்ததியினருக்கு அளித்துள்ளீர்கள்; தங்களுடன் (எங்கள்) இருவரின் பந்தமும் ஒரே மாதிரியாய் இருந்தும் கூட எங்களைத் தவிர்த்துவிட்டீர்களே'' எனக் கேட்டோம்.
``முத்தலிப் மற்றும் பனூ ஹாஷிமின் மக்கள் இரண்டு சாராரும் ஒன்றே என்பதைத் தவிர்த்து வேறு எதுவும் (காரணம்) அல்ல'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜுபைர் இப்னு முத்இம்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
669. وَعَنْ أَبِي رَافِعٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ رَجُلًا عَلَى الصَّدَقَةِ مِنْ بَنِي مَخْزُومٍ، فَقَالَ لِأَبِي رَافِعٍ: اِصْحَبْنِي، فَإِنَّكَ تُصِيبُ مِنْهَا، قَالَ: حَتَّى آتِيَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَسْأَلَهُ. فَأَتَاهُ فَسَأَلَهُ، فَقَالَ: " مَوْلَى الْقَوْمِ مِنْ أَنْفُسِهِمْ، وَإِنَّا لَا تَحِلُّ لَنَا الصَّدَقَةُ".} رَوَاهُ أَحْمَدُ، وَالثَّلَاثَةُ، وَابْنُ خُزَيْمَةَ، وَابْنُ حِبَّانَ.
669. தர்மப் பொருட்களை வசூலிப்பதற்காக பனூ மக்ஸூம் கூட்டத்திலிருந்து ஒருவரை இறைத்தூதர்(ஸல்) நியமித்தார்கள் ``நீயும் என்னுடன் சேர்ந்து கொள்! அதனால் நீ (பலன்) பெறுவாய்!'' என அவர் அபூ ராஃபிவுவிடம் கூறினார்.
``இது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்'' என அவர் கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து (இது குறித்து) அவர் வினவினார்.
``அடிமையாய் இருந்து விடுதலை செய்யப்பட்டவர் விடுதலை செய்த கூட்டத்தைச் சேர்ந்தவராவார். நிச்சயமாக நமக்கு `ஜகாத்' ஹலால் (அனுமதிக்கப்பட்டது) அல்ல என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ராஃபிவு(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ இப்னு மாஜா மற்றும் இப்னு ஹிப்பான்
670. وَعَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ؛ {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعْطِي عُمَرَ الْعَطَاءَ، فَيَقُولُ: أَعْطِهِ أَفْقَرَ مِنِّي، فَيَقُولُ: "خُذْهُ فَتَمَوَّلْهُ، أَوْ تَصَدَّقْ بِهِ، وَمَا جَاءَكَ مِنْ هَذَا الْمَالِ، وَأَنْتَ غَيْرُ مُشْرِفٍ وَلَا سَائِلٍ فَخُذْهُ، وَمَا لَا فَلَا تُتْبِعْهُ نَفْسَكَ".} رَوَاهُ مُسْلِمٌ.كِتَابُ الصِّيَامِ
670. உமர்(ரலி) அவர்களுக்கு ஒரு பொருளை இறைத்தூதர்(ஸல்) கொடுத்தபோது, ``என்னைவிடத் தேவையுள்ளவருக்கு இதனைக் கொடுங்கள்!'' என உமர்(ரலி) கூறினார்கள்.
``நீங்கள் இதனை வாங்கிக் வைத்துக் கொள்ளுங்கள். இதனை உங்களுக்காக எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது தர்மம் செய்யுங்கள். இந்த போரில் கிடைத்த ஐந்தில் ஒரு பங்கு செல்வத்திலிருந்து நீங்களாக ஆசைப்படாமலும் நீங்களாகக் கேட்காமலும் உங்களுக்குக் கிடைப்பதை எடுத்துக் கொள்ளுங்கள்! தானாக வராததை நீங்களாகத் தேடிச் செல்லாதீர்கள்!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஸாலிம் இப்னு அப்தில்லாஹ் இப்னு உமர் தம் தந்தையிடமிருந்து அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்

671. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا تَقَدَّمُوا رَمَضَانَ بِصَوْمِ يَوْمٍ وَلَا يَوْمَيْنِ، إِلَّا رَجُلٌ كَانَ يَصُومُ صَوْمًا، فَلْيَصُمْهُ} مُتَّفَقٌ عَلَيْهِ.
671. ``ஓரிரு நாள்கள் நோன்புடன் ரமளானை எதிர்கொள்ளாதீர்கள்! ஒருவர் (வழக்கமாக) வேறு நோன்பு நோற்பவராய் இருப்பின் அவர் நோற்கட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
672. وَعَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {مَنْ صَامَ الْيَوْمَ الَّذِيْ يُشَكُّ فِيهِ فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ} وَذَكَرَهُ الْبُخَارِيُّ تَعْلِيقًا، وَوَصَلَهُ الْخَمْسَةُ، وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ، وَابْنُ حِبَّانَ.
672. ``ஐயத்திற்குரிய நாளில் நோன்பு நோற்றவர், அபுல் காஸிமுக்கு (எனக்கு) மாறுசெய்தார்'' என அம்மார் இப்னு யாஸிர்(ரலி) அறிவித்தார்.
இமாம் புகாரீ(ரஹ்) இதனை `முஅல்லக்' எனக் குறிப்பிட்டுள்ளார். அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ, இப்னு மாஜா மற்றும் நஸயீ(ரஹ்) ஆகியோர் இதனை `மவ்ஸூல்' எனக் குறிப்பிட்டுள்ளனர். இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
673. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: {إِذَا رَأَيْتُمُوهُ فَصُومُوا، وَإِذَا رَأَيْتُمُوهُ فَأَفْطِرُوا، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ} مُتَّفَقٌ عَلَيْهِ. وَلِمُسْلِمٍ: {فَإِنْ أُغْمِيَ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ. ثَلَاثِينَ}.وَلِلْبُخَارِيِّ: {فَأَكْمِلُوا الْعِدَّةَ ثَلَاثِينَ}.
673. ``நீங்கள் அதை (பிறையை) பார்த்து நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். இன்னும், அதை (பிறையை) பார்த்து நோன்பைத் துறந்து கொள்ளுங்கள். உங்கள் மீது மேகம் சூழ்ந்திருந்தால் அதற்குரிய (மாதத்திற்குரிய நாள்களைக்) கணக்கிட்டுக் கொள்ளுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
``உங்களுக்கு மேகமூட்டதால் ஐயம் ஏற்படுமாயின் அதற்குரிய (அந்த மாதத்திற்குரிய நாள்களை) முப்பதாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்'' என முஸ்லிமிலும், ``முப்பது நாள்களை முழுமையாக்கிக் கொள்ளுங்கள்'' என புகாரீயிலும் உள்ளது.
674. وَلَهُ فِي حَدِيثِ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ {فَأَكْمِلُوا عِدَّةَ شَعْبَانَ ثَلَاثِينَ}.
674. புகாரீயின் மற்றோர் அறிவிப்பில், அபூ ஹுரைரா(ரலி) வாயிலாக, ``ஷஅபான் மாதத்தின் முப்பது நாள்களைக் முழுமையாக்கிக் கொள்ளுங்கள்'' என உள்ளது.
675. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {تَرَاءَى النَّاسُ الْهِلَالَ، فَأَخْبَرْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنِّي رَأَيْتُهُ، فَصَامَ، وَأَمَرَ النَّاسَ بِصِيَامِهِ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ، وَالْحَاكِمُ.
675. மக்கள் பிறையைப் பார்த்தார்கள். எனவே, நானும் உறுதியாக அதைப் பார்த்தேன் என இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குச் செய்தி கொடுத்தேன். எனவே, இறைத்தூதர்(ஸல்) நோன்பு நோற்றார்கள். மக்களையும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இமாம் ஹாகிம் மற்றும் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுளளனர்.
676. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّ أَعْرَابِيًّا جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: {إِنِّي رَأَيْتُ الْهِلَالَ، فَقَالَ: " أَتَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ؟ " قَالَ: نَعَمْ. قَالَ: " أَتَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُوْلُ اللهِ؟ " قَالَ: نَعَمْ. قَالَ: " فَأَذِّنْ فِي النَّاسِ يَا بِلَالُ أَنْ يَصُومُوا غَدًا"} رَوَاهُ الْخَمْسَةُ، وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ، وَابْنُ حِبَّانَ وَرَجَّحَ النَّسَائِيُّ إِرْسَالَهُ.
676. இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு நாட்டுப் புறத்தார் வந்து, ``இறைத்தூதர் அவர்களே! நான் பிறையைப் பார்த்தேன்'' எனக் கூறினார்.
``அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என நீ சாட்சி அளிக்கிறாயா?''
``ஆம்'' என அவர் கூறினார்.
``முஹம்மத் அல்லலாஹ்வின் தூதர் என நீ சாட்சி அளிக்கிறாயா?'' என இறைத்தூதர்(ஸல்) கேட்டார்கள்.
``ஆம்'' என அவர் கூறினார்.
``பிலாலே நாள் நோன்பு நோற்குமாறு மக்களுக்கு அறிவியுங்கள்!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இமாம் இப்னு குஸைமா மற்றும் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
இமாம் நஸயீ(ரஹ்) இதனை `முர்ஸல்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
677. وَعَنْ حَفْصَةَ أُمِّ الْمُؤْمِنِينَ رَضِيَ اللهُ عَنْهَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {مَنْ لَمْ يُبَيِّتِ الصِّيَامَ قَبْلَ الْفَجْرِ فَلَا صِيَامَ لَهُ} رَوَاهُ الْخَمْسَةُ، وَمَالَ النَّسَائِيُّ وَالتِّرْمِذِيُّ إِلَى تَرْجِيحِ وَقْفِهِ، وَصَحَّحَهُ مَرْفُوعًا اِبْنُ خُزَيْمَةَ وَابْنُ حِبَّانَ.وَلِلدَّارَقُطْنِيِّ: {لَا صِيَامَ لِمَنْ لَمْ يَفْرِضْهُ مِنَ اللَّيْلِ}.
677. ``ஃபஜ்ர் தொழுகைக்கு முன்னர் நோன்பிற்கான நிய்யத் (எண்ணம்) கொள்ளாதவருக்கு நோன்பு இல்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஹஃப்ஸா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இமாம் திர்மிதீ மற்றும் நஸயீ(ரஹ்) இதனை `மவ்கூஃப்' எனக் குறிப்பிட்டுள்ளனர். இமாம் இப்னு குஸைமா மற்றும் இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை `மர்ஃபூஃ' தரமுள்ள `ஸஹீஹ்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.
``இரவில் (நோன்பிற்கான) நிய்யத் செய்யாதவருக்கு நோன்பு இல்லை' எனும் வாசகம் தாரகுத்னீயில் உள்ளது.
678. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ. فَقَالَ: " هَلْ عِنْدَكُمْ شَيْءٌ؟ " قُلْنَا: لَا. قَالَ: "فَإِنِّي إِذًا صَائِمٌ" ثُمَّ أَتَانَا يَوْمًا آخَرَ، فَقُلْنَا: أُهْدِيَ لَنَا حَيْسٌ، فَقَالَ: "أَرِينِيهِ، فَلَقَدْ أَصْبَحْتُ صَائِمًا" فَأَكَلَ} رَوَاهُ مُسْلِمٌ.
678. ஒரு நாள் என் வீட்டில் நுழைந்த இறைத்தூதர்(ஸல்) ``(உண்பதற்கு) ஏதாவது உள்ளதா?'' என வினவினார்கள்.
``இல்லை'' எனக் கூறினோம்.
``அப்படியானால் நான் நோன்பாளியாய் இருந்துவிடுகிறேன்'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
பின்னர், மற்றொரு நாள் இறைத்தூதர்(ஸல்) வந்தார்கள். ``(பேரீத்தம் பழம், பாலாடைக் கட்டி மற்றும் நெய்யினால் தயாரிக்கப்பட்ட) பாயாசம் போன்ற ஒரு வகை உணவு அன்பளிப்பாக கொஞ்சம் வந்துள்ளது'' என நாங்கள் கூறினோம்.
``அதைக் கொண்டுவாருங்கள். நான் நோன்பாளியாகத்தான் காலைப்பொழுதை அடைந்தேன்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்; பின்னர், அதனை உண்டார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
679. وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {لَا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
679. ``நோன்பு துறப்பதை (சூரியன் மறைந்ததும்) விரைவுபடுத்தும் வரை மக்கள் நன்மையில் நிலைத்திருப்பார்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஸஹ்ல் இப்னு சஅத்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
680. وَلِلتِّرْمِذِيِّ: مِنْ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {قَالَ اللهُ: أَحَبُّ عِبَادِي إِلَيَّ أَعْجَلُهُمْ فِطْرًا}.
680. ``ஆரம்பநேரத்தில், (சூரியன் மறைந்ததும் விரைவாக) நோன்பைத் துறப்பவரே என் அடியார்களில் என்னிடம் அதிக அன்பிற்குரியவர்'' என அல்லாஹ் கூறுகிறான் என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
681. وَعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةً} مُتَّفَقٌ عَلَيْهِ.
681. ``ஸஹர் உணவு உண்ணுங்கள்! ஏனெனில், அதில் பரக்கத் (அருள்வளம்) உள்ளது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்