739. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: خَطَبَنَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: {"إِنَّ اللهُ كَتَبَ عَلَيْكُمُ اَلْحَجَّ" فَقَامَ اَلْأَقْرَعُ بْنُ حَابِسٍ فَقَالَ: أَفِي كَلِّ عَامٍ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: " لَوْ قُلْتُهَا لَوَجَبَتْ، اَلْحَجُّ مَرَّةٌ، فَمَا زَادَ فَهُوَ تَطَوُّعٌ"} رَوَاهُ الْخَمْسَةُ، غَيْرَ التِّرْمِذِيِّ.
739. இறைத்தூதர்(ஸல்) ஒருமுறை) எங்களுக்கு உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, ``அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை விதியாக்கியுள்ளான்'' எனக் கூறினார்கள்.
அப்போது, அக்ரவு இப்னு ஹாபிஸ்(ரலி) எழுந்து, ``இறைத்தூதர் அவர்களே! இது ஒவ்வோர் ஆண்டுமா?'' என வினவினார்.
``நான் அப்படிச் சொன்னால் அது கடமையாகிவிடும். ஹஜ் என்பது ஒருமுறைதான். அதற்கு மேல் செய்வது உபரியாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) பதிலளித்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ மற்றும் இப்னு மாஜா
740. وَأَصْلُهُ فِي مُسْلِمٍ مِنْ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ.بَابُ الْمَوَاقِيتِ
740. இதன் (739வது ஹதீஸின்) மூலம் அபூ ஹுரைரா(ரலி) வாயிலாக முஸ்லிமில் உள்ளது.
741. عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَّتَ لِأَهْلِ الْمَدِينَةِ: ذَا الْحُلَيْفَةِ، وَلِأَهْلِ الشَّامِ: اَلْجُحْفَةَ، وَلِأَهْلِ نَجْدٍ: قَرْنَ الْمَنَازِلِ، وَلِأَهْلِ الْيَمَنِ: يَلَمْلَمَ، هُنَّ لَهُنَّ وَلِمَنْ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِهِنَّ مِمَّنْ أَرَادَ الْحَجَّ وَالْعُمْرَةَ، وَمَنْ كَانَ دُونَ ذَلِكَ فَمِنْ حَيْثُ أَنْشَأَ، حَتَّى أَهْلُ مَكَّةَ مِنْ مَكَّةَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
741. மதீனா வாசிகளுக்கு துல்ஹுலைஃபா எனும் இடத்தையும், சிரியா வாசிகளுக்கு ஜுஹ்ஃபா எனும் இடத்தையும், நஜ்த் வாசிகளுக்கு கர்ன் அல்மனாஸில் எனும் இடத்தையும் இன்னும் யமன் வாசிகளுக்கு யலம்லம் எனும் இடத்தையும் இஹ்ராம் கட்டும் இடமாக இறைத்தூதர்(ஸல்) ஆக்கினார்கள். இவை அவர்களுக்கும் இவற்றின் வழியாக ஹஜ் மற்றும் உம்ராவிற்கு வருபவர்களுக்கும் அங்கு இஹ்ராம் கட்டும் இடங்கள் ஆகும். இந்த எல்லைகளுக்குள் இருப்போர் தாம் வசிக்கும் இடங்களில் எங்கேனும் இஹ்ராம் அணியலாம். மக்காவாசிகள் இஹ்ராம் கட்டுமிடம் மக்காவே ஆகும் என இஹ்ராம் கட்டும் இடத்தை இறைத்தூதர்(ஸல்) நிர்ணயித்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
742. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا: {أَنَّ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَّتَ لِأَهْلِ اَلْعِرَاقِ ذَاتَ عِرْقٍ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ.
742. இராக் வாசிகளின் இஹ்ராம் கட்டுமிடம் `தாத்து இர்க்' எனும் மலைக்குன்று அருகே என இறைத்தூதர்(ஸல்) நிர்ணயித்தார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ
743. وَأَصْلُهُ عِنْدَ مُسْلِمٍ مِنْ حَدِيثِ جَابِرٍ إِلَّا أَنَّ رَاوِيَهُ شَكَّ فِي رَفْعِهِ.
743. ஹதீஸ் 742 வது ஹதீஸின் மூலம் ஜாபிர்(ரலி) வாயிலாக முஸ்லிமில் உள்ளது. அதன் அறிவிப்பாளர் இது ``மர்ஃபூஃ'' எனும் தரத்தில் உள்ளதா என சந்தேகிக்கிறார்.
744. وَفِي اَلْبُخَارِيِّ: {أَنَّ عُمَرَ هُوَ الَّذِيْ وَقَّتَ ذَاتَ عِرْقٍ}.
744. `தாத்து இர்க்' என்னும் இடத்தை இஹ்ராம் கட்டும் இடமாக உமர்(ரலி) அவர்களே ஆக்கினார்கள் என புகாரீயில் உள்ளது.
745. وَعِنْدَ أَحْمَدَ، وَأَبِي دَاوُدَ، وَاَلتِّرْمِذِيِّ: عَنِ ابْنِ عَبَّاسٍ: {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَّتَ لِأَهْلِ اَلْمَشْرِقِ: اَلْعَقِيقَ}.بَابُ وُجُوهِ الْإِحْرَامِ وَصِفَتِهِ
745. கீழை நாட்டவர்களின் இஹ்ராம் கட்டுமிடமாக `அகீக்' எனும் இடத்தை இறைத்தூதர்(ஸல்) ஆக்கினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாக அஹ்மத், அஹ்மத், திர்மிதீயில் உள்ளது.
746. عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ حَجَّةِ الْوَدَاعِ، فَمِنَّا مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ، وَمِنَّا مَنْ أَهَلَّ بِحَجٍّ وَعُمْرَةٍ، وَمِنَّا مَنْ أَهَلَّ بِحَجٍّ، وَأَهَلَّ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحَجِّ، فَأَمَّا مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ فَحَلَّ، وَأَمَّا مَنْ أَهَلَّ بِحَجٍّ، أَوْ جَمَعَ الْحَجَّ وَالْعُمْرَةَ فَلَمْ يَحِلُّوا حَتَّى كَانَ يَوْمَ النَّحْرِ} مُتَّفَقٌ عَلَيْهِ.بَابُ الْإِحْرَامِ وَمَا يَتَعَلَّقُ بِهِ
746. ஹஜ்ஜதுல் வதா ஆண்டில், இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நாங்கள் சென்றோம். அப்போது, எங்களில் சிலர் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினார்கள். மற்றும் சிலர் ஹஜ்ஜுக்காகவும் உம்ராவுக்காவும் இஹ்ராம் கட்டினார்கள். வேறு சிலர் ஹஜ்ஜுக்காக (மட்டும்) இஹ்ராம் கட்டினர். இறைத்தூதர்(ஸல்) ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினார்கள். உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியவர்கள் மக்காவை அடைந்தவுடன் (உம்ரா செய்து) இஹ்ராமைக் கலைந்தார்கள். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியவர்கள் அல்லது ஹஜ் உம்ரா இரண்டையும் ஒன்று சேர்த்து கிரான் எனும் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டியவர்கள், குர்பானீ கொடுக்கும் நாள் வரை இஹ்ராமைக் கலைந்து ஹலால் ஆகவில்லை என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
747. عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {مَا أَهَلَّ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا مِنْ عِنْدِ الْمَسْجِدِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
747. துல்ஹுலைஃபா இடத்திலுள்ள மஸ்ஜிதைத் தவிர்த்து, இறைத்தூதர்(ஸல்) வேறு எங்கும் இஹ்ராம் கட்டியதில்லை என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
748. وَعَنْ خَلَّادِ بْنِ اَلسَّائِبِ عَنْ أَبِيهِ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {أَتَانِي جِبْرِيلُ، فَأَمَرَنِي أَنْ آمُرَ أَصْحَابِي أَنْ يَرْفَعُوا أَصْوَاتَهُمْ بِالْإِهْلَالِ} رَوَاهُ الْخَمْسَةُ، وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ، وَابْنُ حِبَّانَ.
748. ``என்னிடம் ஜிப்ரீல்(அலை) வந்து, என் தோழர்கள். அவர்களின் லப்பைக் முழக்கத்தை உயர்த்தும்படி நான் கட்டளையிட வேண்டுமாறு எனக்குக் உத்தரவிட்டார்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என கல்லாத் இப்னு அஸ்ஸாயிபு தம் தந்தையிடமிருந்து அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இமாம் திர்மிதீ மற்றும் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
749. وَعَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَجَرَّدَ لِإِهْلَالِهِ وَاغْتَسَلَ} رَوَاهُ التِّرْمِذِيُّ وَحَسَّنَهُ.
749. இறைத்தூதர்(ஸல்) இஹ்ராம் கட்டியபோது தம்முடைய ஆடைகளைக் களைந்து குளித்தார்கள் என ஜைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை `ஹஸன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
750. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا: {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ: مَا يَلْبَسُ الْمُحْرِمُ مِنَ الثِّيَابِ؟ فَقَالَ: " لَا تَلْبَسُوا الْقُمُصَ، وَلَا الْعَمَائِمَ، وَلَا السَّرَاوِيلَاتِ، وَلَا الْبَرَانِسَ، وَلَا الْخِفَافَ، إِلَّا أَحَدٌ لَا يَجِدُ النَّعْلَيْنِ فَلْيَلْبَسِ الْخُفَّيْنِ وَلْيَقْطَعْهُمَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ، وَلَا تَلْبَسُوا شَيْئًا مِنَ الثِّيَابِ مَسَّهُ الزَّعْفَرَانُ وَلَا الْوَرْسُ"} مُتَّفَقٌ عَلَيْهِ وَاللَّفْظُ لِمُسْلِمٍ.
750. ``இஹ்ராம் கட்டுபவர்கள், எத்தகைய ஆடை அணிய வேண்டும்? என இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது.
``சட்டை, தலைப்பாகை, காலுறை மற்றும் தலையில் மூடும் அளவிற்கான நீண்ட அங்கி ஆகியவற்றை அணியவேண்டாம். காலணி இல்லாதவர் காலுறை அணிந்து கொள்ளட்டும். ஆனால், அதனை (மேலிருந்து) கரண்டைக் காலுக்குக் கீழ் கத்தரித்துக் கொள்ளட்டும். காவி (அல்லது குங்குமப்பூச்சாயம்) மேலும், `வர்ஸ்' எனும் செடியின் இலையின் சாயம் பூசப்பட்ட ஆடைகளை அணிய வேண்டாம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
751. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {كُنْتُ أُطَيِّبُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِإِحْرَامِهِ قَبْلَ أَنْ يُحْرِمَ، وَلِحِلِّهِ قَبْلَ أَنْ يَطُوفَ بِالْبَيْتِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
751. இறைத்தூதர்(ஸல்) இஹ்ராம் நுழைவதற்காக அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு முன்பும், (துல்ஹஜ் பத்தாம் நாள்) இஹ்ராமைக் களைந்தபோதும், கஅபத்துல்லாஹ்வை வலம் வருவதற்கு முன்பும் நான் அவர்களுக்கு நறுமணம் பூசினேன் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
குறிப்பு: இஹ்ராம் கட்டுவதற்கு முன்பு நறுமணம் பூசுதல் சுன்னா (நபிவழி) ஆகும். இஹ்ராம் நிலையில் நறுமணம் பூசுதல் தடைசெய்யப்பட்டதாகும். இங்கு கஅபத்துல்லாஹ்வை வலம் வருவதற்கு முன்பு நபி(ஸல்) அவர்களுக்கு நறுமணம் பூசியதாக அன்னை ஆயிஷா(ரலி) குறிப்பிடுகிறார். இது, துல்ஹஜ் மாதம் பத்தாம் நாளன்று ஜம்ராவிற்குக் கல்லெறிந்து, குர்பானீ கொடுத்து, தலையை மழித்தப் பின்பு நபி(ஸல்) கபஅத்துல்லாஹ்வை வலம் வருவதற்குச் செல்லும் முன்பு நறுமணம் பூசியதைக் குறிக்கிறது. துல்ஹஜ் மாதம் பத்தாம் நாளன்று மேற்குறிப்பிட்டுள்ள காரியங்களைச் செய்து முடித்தப் பின்பு ஹாஜிகள் இஹ்ராமிலிருந்து விடுபடுவர். ஆனால், மனைவியுடன் உறவு கொள்ளுதல் மட்டும் கூடாது.
752. وَعَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {لَا يَنْكِحُ الْمُحْرِمُ، وَلَا يُنْكِحُ، وَلَا يَخْطُبُ} رَوَاهُ مُسْلِمٌ.
752. இஹ்ராம் கட்டியவர் நிக்காஹ் (திருமணம்) செய்யவோ திருமணம் செய்து வைக்கவோ, இன்னும் அதற்காக உரை நிகழ்த்தவோ கூடாது என்று நபி(ஸல்) கூறினார்கள் என உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அறிவித்தார்கள்.
நூல்: முஸ்லிம்
753. وَعَنْ أَبِي قَتَادَةَ اَلْأَنْصَارِيِّ رَضِيَ اللهُ عَنْهُ {فِي قِصَّةِ صَيْدِهِ الْحِمَارَ الْوَحْشِيَّ، وَهُوَ غَيْرُ مُحْرِمٍ، قَالَ: فَقَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَصْحَابِهِ، وَكَانُوا مُحْرِمِينَ: "هَلْ مِنْكُمْ أَحَدٌ أَمَرَهُ أَوْ أَشَارَ إِلَيْهِ بِشَيْءٍ ؟" قَالُوا: لَا. قَالَ: "فَكُلُوا مَا بَقِيَ مِنْ لَّحْمِهِ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
753. தான் இஹ்ராம் கட்டாத நிலையில் இருக்கும்போது காட்டுக் கழுதையை வேட்டையாடிய சம்பவம் குறித்து அபூ கதாதா அல் அன்ஸாரி(ரலி) அறிவித்தார்.
இஹ்ராம் கட்டிய தம் தோழர்களைப் நோக்கி, உங்களில் யாரேனும் (இதற்காக) கட்டளையிட்டாரா? அல்லது சமிக்ஞை செய்தாரா? என இறைத்தூதர்(ஸல்) வினவினார்கள்.
``இல்லை'' என அவர்கள் கூறினார்கள்.
(அதன் பின்னரே) ``எஞ்சி இருக்கும் அதன் கறியை உண்ணுங்கள்'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
754. وَعَنِ الصَّعْبِ بْنِ جَثَّامَةَ اَللَّيْثِيِّ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّهُ أَهْدَى لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِمَارًا وَحْشِيًّا، وَهُوَ بِالْأَبْوَاءِ، أَوْ بِوَدَّانَ، فَرَدَّهُ عَلَيْهِ، وَقَالَ: "إِنَّا لَمْ نَرُدَّهُ عَلَيْكَ إِلَّا أَنَّا حُرُمٌ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
754. இறைத்தூதர்(ஸல்) அப்வா அல்லது வத்தான் எனும் இடத்தில் இருந்தபோது அவர்களுக்கு ஒரு காட்டுக் கழுதையை அன்பளிப்பாகக் கொடுத்தேன். அதனை அவர்கள் என்னிடமே திருப்பிக் கொடுத்து, நாங்கள் இஹ்ராம் கட்டியிருப்பதாலேயே இதனைத் திரும்பத் தருகிறோம்'' என்று கூறினார்கள் என ஸஅப் இப்னு ஜஸ்ஸலாமா அல் லைஸி(ரலி) அறிவித்தார்கள்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
755. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {خَمْسٌ مِنَ الدَّوَابِّ كُلُّهُنَّ فَاسِقٌ، يُقْتَلْنَ فِي اَلْحِلِّ وَالْحَرَمِ: اَلْغُرَابُ، وَالْحِدَأَةُ، وَالْعَقْرَبُ، وَالْفَأْرَةُ، وَالْكَلْبُ الْعَقُورُ} مُتَّفَقٌ عَلَيْهِ.
755. மிகத் தீய ஐந்து உயிரினங்களை இஹ்ராம் கட்டியிருக்கும் நிலையிலும் சொல்ல வேண்டும். அவை 1. தேள் 2. பருந்து 3. காகம் 4. எலி 5. வெறிநாய் என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
குறிப்பு: பருந்து மற்றும் காகத்தை இஹ்ராம் நிலையில் கொல்வதற்கு அனுமதித்த காரணம் என்ன?
756. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اِحْتَجَمَ وَهُوَ مُحْرِمٌ} مُتَّفَقٌ عَلَيْهِ.
756. இறைத்தூதர்(ஸல்) இஹ்ராம் கட்டிய நிலையில், இரத்தம் குத்தி எடுத்துக் கொண்டார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
757. وَعَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {حُمِلْتُ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْقَمْلُ يَتَنَاثَرُ عَلَى وَجْهِي، فَقَالَ: "مَا كُنْتُ أَرَى اَلْوَجَعَ بَلَغَ بِكَ مَا أَرَى، تَجِدُ شَاةً؟ قُلْتُ: لَا. قَالَ: "فَصُمْ ثَلَاثَةَ أَيَّامٍ، أَوْ أَطْعِمْ سِتَّةَ مَسَاكِينَ، لِكُلِّ مِسْكِينٍ نِصْفُ صَاعٍ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
757. இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் தூக்கி வரப்பட்டேன். அப்போது, என் முகத்தில் பேன்கள் உதிர்ந்து கொண்டிருந்தன. ``நான் உன்னை இப்போது பார்க்கும் அளவுக்கு உனக்கு நோய் இருக்கும் என நான் கருத வில்லை'' என இறைத்தூதர்(ஸல்) கூறி, ``உன்னிடம் ஆடு (எதுவும்) இருக்கிறதா?'' எனக் கேட்டார்கள்.
``இல்லை'' என நான் கூறினேன்.
``அப்படியானால், நீ (தலையை மழித்தப்பின்பு) மூன்று நாள்கள் நோன்பு நோற்றுக் கொள்! அல்லது ஆறு ஏழைகளுக்கு (நபர் ஒன்றுக்கு) அரை ஸாவு அளவு உணவளித்திடு!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என கஅப் இப்னு உஜ்ரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
758. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {لَمَّا فَتَحَ اللهُ عَلَى رَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ، قَامَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّاسِ، فَحَمِدَ اللهُ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: "إِنَّ اللهُ حَبَسَ عَنْ مَكَّةَ الْفِيلَ، وَسَلَّطَ عَلَيْهَا رَسُولَهُ وَالْمُؤْمِنِينَ، وَإِنَّهَا لَمْ تَحِلَّ لِأَحَدٍ كَانَ قَبْلِي، وَإِنَّمَا أُحِلَّتْ لِي سَاعَةٌ مِنْ نَهَارٍ، وَإِنَّهَا لَنْ تَحِلَّ لِأَحَدٍ بَعْدِي، فَلَا يُنَفَّرُ صَيْدُهَا، وَلَا يُخْتَلَى شَوْكُهَا، وَلَا تَحِلُّ سَاقِطَتُهَا إِلَّا لِمُنْشِدٍ، وَمَنْ قُتِلَ لَهُ قَتِيلٌ فَهُوَ بِخَيْرِ النَّظَرَيْنِ " فَقَالَ اَلْعَبَّاسُ: إِلَّا الْإِذْخِرَ، يَا رَسُولَ اللهِ، فَإِنَّا نَجْعَلُهُ فِي قُبُورِنَا وَبُيُوتِنَا، فَقَالَ: "إِلَّا اَلْإِذْخِرَ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
758. அல்லாஹ் தன் தூதருக்கு மக்கா வெற்றியை அளித்ததும், அவர்கள் எழுந்து நின்று, அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றி, அல்லாஹ் யானைகளை மக்காவை விட்டுத் தடுத்தான். இன்னும், தன் தூதர் மற்றும் முஸ்லிம்களுக்கு அதன் மீது வெற்றியைக் கொடுத்தான். நிச்சயமாக மக்காவில் போர் புரிவது எனக்கு முன்பு யாருக்கும் அனுமதிக்கப்படவில்லை. நிச்சயமாக எனக்குப் பின்னரும் மக்காவில் போர் புரிதல் யாருக்கும் அனுமதிக்கப்படாது.
அதன் வேட்டைப் பிராணிகளை விரட்டக் கூடாது. அதில் முள் மரங்களையும் வெட்டக் கூடாது. அங்கு கீழே விழும் பொருளை பொது அறிவிப்புச் செய்பவர் தவிர, வேறு யாரும் எடுக்கக் கூடாது.
கொலை செய்யப்பட்டவனின் சாராருக்கு (ஈட்டுத் தொகை வாங்கிக் கொள்ளும் அல்லது பழிதீர்க்கும்) இரண்டு உரிமைகளில் சிறந்தது ஒன்று தரப்பட்டுள்ளது எனக் கூறினார்கள்.
அப்போது, ``நம் இல்லங்கள், அடக்க ஸ்தலங்களில் நாம் பயன்படுத்தக் கூடிய `இத்கிர்' எனும் புல்லில் மட்டும் சலுகை அளியுங்கள் இறைத்தூதர் அவர்களே!'' என அப்பாஸ்(ரலி) கேட்டார்.
``இத்கிரைத் தவிர'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்