759. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ زَيْدِ بْنِ عَاصِمٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {إِنَّ إِبْرَاهِيمَ حَرَّمَ مَكَّةَ وَدَعَا لِأَهْلِهَا، وَإِنِّي حَرَّمْتُ الْمَدِينَةَ كَمَا حَرَّمَ إِبْرَاهِيمُ مَكَّةَ، وَإِنِّي دَعَوْتُ فِي صَاعِهَا وَمُدِّهَا بِمِثْلَيْمَا دَعَا إِبْرَاهِيمُ لِأَهْلِ مَكَّةَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
759. ``இப்ராஹீம் (அலை) மக்கா வைப் புனித நகராக அறிவித்து அதில் வாழும் மக்களுக்காக பிரார்த்தித்தார்கள். மக்காவை இப்ராஹீம் புனிதமாக்கியது போன்றே நான் மதீனாவையும் புனித நகரமாய் ஆக்குகிறேன். மேலும், அதன் `முத்'திலும் `ஸாவு' விலும் அருள்வளம் வழங்கும்படி இப்ராஹீம்(அலை) மக்காவாசிகளுக்காக பிரார்த்தித்ததைப் போன்றே மதீனாவாசிகளுக்காக நான் பிரார்த்திக்கிறேன்'' என்று இறைத்தூதர்(ஸல்) உறுதியாகக் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு ஜைத் இப்னி ஆஸிம்(ரலி) அவிறித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
760. وَعَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اَلْمَدِينَةُ حَرَمٌ مَا بَيْنَ عَيْرٍ إِلَى ثَوْرٍ} رَوَاهُ مُسْلِمٌ.بَابُ صِفَةِ الْحَجِّ وَدُخُولِ مَكَّةَ
760. ``அய்ர் மலையிலிருந்து `ஸ்வர்' மலை வரையில் உள்ள மதீனாவின் நிலப்பரப்பு புனிதமானது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அலீ இப்னு அபீதாலீப்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
761. وَعَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُمَا: {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَجَّ، فَخَرَجْنَا مَعَهُ، حَتَّى أَتَيْنَا ذَا الْحُلَيْفَةِ، فَوَلَدَتْ أَسْمَاءُ بِنْتُ عُمَيْسٍ، فَقَالَ: "اِغْتَسِلِي وَاسْتَثْفِرِي بِثَوْبٍ، وَأَحْرِمِي" وَصَلَّى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ، ثُمَّ رَكِبَ الْقَصْوَاءَ حَتَّى إِذَا اِسْتَوَتْ بِهِ عَلَى الْبَيْدَاءِ أَهَلَّ بِالتَّوْحِيدِ: "لَبَّيْكَ اَللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لَا شَرِيكَ لَكَ". حَتَّى إِذَا أَتَيْنَا الْبَيْتَ اِسْتَلَمَ الرُّكْنَ، فَرَمَلَ ثَلَاثًا وَمَشَى أَرْبَعًا، ثُمَّ أَتَى مَقَامَ إِبْرَاهِيمَ فَصَلَّى، ثُمَّ رَجَعَ إِلَى الرُّكْنِ فَاسْتَلَمَهُ.ثُمَّ خَرَجَ مِنَ الْبَابِ إِلَى الصَّفَا، فَلَمَّا دَنَا مِنَ الصَّفَا قَرَأَ: "إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللهُ" "أَبْدَأُ بِمَا بَدَأَ اللهُ بِهِ" فَرَقِيَ اَلصَّفَا، حَتَّى رَأَى اَلْبَيْتَ، فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ فَوَحَّدَ اللهُ وَكَبَّرَهُ وَقَالَ: " لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ أَنْجَزَ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ". ثُمَّ دَعَا بَيْنَ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ نَزَلَ إِلَى الْمَرْوَةِ، حَتَّىاِنْصَبَّتْ قَدَمَاهُ فِي بَطْنِ الْوَادِي سَعَى حَتَّى إِذَا صَعَدَتَا مَشَى إِلَى الْمَرْوَةِ فَفَعَلَ عَلَى الْمَرْوَةِ، كَمَا فَعَلَ عَلَى الصَّفَا… - فَذَكَرَ الْحَدِيثَ. وَفِيهِ: فَلَمَّا كَانَ يَوْمَ التَّرْوِيَةِ تَوَجَّهُوا إِلَى مِنَى، وَرَكِبَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى بِهَا الظُّهْرَ، وَالْعَصْرَ، وَالْمَغْرِبَ، وَالْعِشَاءَ، وَالْفَجْرَ، ثُمَّ مَكَثَ قَلِيلاً حَتَّى طَلَعَتِ الشَّمْسُ، فَأَجَازَ حَتَّى أَتَى عَرَفَةَ، فَوَجَدَ الْقُبَّةَ قَدْ ضُرِبَتْ لَهُ بِنَمِرَةَ فَنَزَلَ بِهَا.حَتَّى إِذَا زَاغَتِ الشَّمْسُ أَمَرَ بِالْقَصْوَاءِ، فَرُحِلَتْ لَهُ، فَأَتَى بَطْنَ الْوَادِي، فَخَطَبَ النَّاسَ.ثُمَّ أَذَّنَ ثُمَّ أَقَامَ، فَصَلَّى الظُّهْرَ، ثُمَّ أَقَامَ فَصَلَّى الْعَصْرَ، وَلَمْ يُصَلِّ بَيْنَهُمَا شَيْئًا.ثُمَّ رَكِبَ حَتَّى أَتَى الْمَوْقِفَ فَجَعَلَ بَطْنَ نَاقَتِهِ الْقَصْوَاءِ إِلَى الصَّخَرَاتِ، وَجَعَلَ حَبْلَ الْمُشَاةِ بَيْنَ يَدَيْهِ وَاسْتَقْبَلَ الْقِبْلَةَ، فَلَمْ يَزَلْ وَاقِفاً حَتَّى غَرَبَتِ الشَّمْسُ، وَذَهَبَتِ الصُّفْرَةُ قَلِيلاً، حَتَّى غَابَ الْقُرْصُ، وَدَفَعَ، وَقَدْ شَنَقَ لِلْقَصْوَاءِ الزِّمَامَ حَتَّى إِنَّ رَأْسَهَا لَيُصِيبُ مَوْرِكَ رَحْلِهِ، وَيَقُولُ بِيَدِهِ الْيُمْنَى: "أَيُّهَا النَّاسُ، اَلسَّكِينَةَ، اَلسَّكِينَةَ "، كُلَّمَا أَتَى حَبْلاً أَرْخَى لَهَا قَلِيلاً حَتَّى تَصْعَدَ.حَتَّى أَتَى الْمُزْدَلِفَةَ، فَصَلَّى بِهَا الْمَغْرِبَ وَالْعِشَاءَ، بِأَذَانٍ وَاحِدٍ وَإِقَامَتَيْنِ، وَلَمْ يُسَبِّحْبَيْنَهُمَا شَيْئًا، ثُمَّ اِضْطَجَعَ حَتَّى طَلَعَ الْفَجْرُ، فَصَلَّى الْفَجْرَ، حِينَتَبَيَّنَ لَهُ الصُّبْحُ بِأَذَانٍ وَإِقَامَةٍ ثُمَّ رَكِبَ حَتَّى أَتَى الْمَشْعَرَ الْحَرَامَ، فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ، فَدَعَاهُ، وَكَبَّرَهُ، وَهَلَّلَهُ فَلَمْ يَزَلْ وَاقِفًا حَتَّى أَسْفَرَ جِدًّا.فَدَفَعَ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ، حَتَّى أَتَى بَطْنَ مُحَسِّرَ فَحَرَّكَ قَلِيلاً، ثُمَّ سَلَكَ الطَّرِيقَ الْوُسْطَى الَّتِي تَخْرُجُ عَلَى الْجَمْرَةِ الْكُبْرَى، حَتَّى أَتَى الْجَمْرَةَ الَّتِي عِنْدَ الشَّجَرَةِ، فَرَمَاهَا بِسَبْعِ حَصَيَاتٍ، يُكَبِّرُ مَعَ كُلِّ حَصَاةٍ مِنْهَا، مِثْلَ حَصَى الْخَذْفِ، رَمَى مِنْ بَطْنِ الْوَادِي، ثُمَّ اِنْصَرَفَ إِلَى الْمَنْحَرِ، فَنَحَرَ، ثُمَّ رَكِبَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَفَاضَ إِلَى الْبَيْتِ، فَصَلَّى بِمَكَّةَ الظُّهْرَ} رَوَاهُ مُسْلِمٌ مُطَوَّلاً.
761. இறைத்தூதர்(ஸல்) ஹஜ் செய்தபோது நாங்கள் அவர்களுடன் சென்றோம். நாங்கள் துல்ஹுலைஃபா எனும் இடத்தை அடைந்தபோது, அஸ்மா பின்த்து உமைஸ் குழந்தை பெற்றெடுத்தார். ``குளித்துவிட்டு ஏதாவது துணியை இடுப்பில் (கோவணம்) கட்டிக் கொள்! இன்னும், இஹ்ராம் கட்டிக்கொள்!'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
பின்னர், இறைத்தூதர்(ஸல்) இறைஇல்லத்தில் தொழுதுவிட்டு, கஸ்வா எனும் தம்முடைய ஒட்டகத்தில் எறினார்கள். `பைதா' எனும் இடத்தை அடைந்ததும் அவர்கள் ஏகத்துவ முழக்கமிடத் தொடங்கினார்கள். ``யா அல்லாஹ்! நான் ஆஜராகி விட்டேன். உனக்கு இணை எதுவும் இல்லை. நான் ஆஜராகி விட்டேன். உண்மையில் அனைத்துப் புகழும், அருளும் இன்னும் ஆட்சியதிகாரம் அனைத்தும் உன் கைவசமே. இன்னும் உனக்கு இணை எதுவும் இல்லை'' எனக் கூறினார்கள்.
இதற்கிடையில் நாங்கள் பைத்துல் லாஹ்வில் நுழைந்தோம். இறைத்தூதர்(ஸல்) ஹஜ்ருல் அஸ்வத்தை முத்தமிட்டார்கள். பின்னர், மூன்று சுற்றுக்கள் ஓட்டமாகவும், நான்கு சுற்றுகள் நடையாகவும் தவாஃப் செய்தார்கள். பின்னர், மகாமு இப்ராஹீம் எனும் இடத்திற்கு வந்து (இரண்டு ரக்அத்துகள்) தொழுதார்கள். பின்னர், ஹஜ்ருல் அஸ் திற்கு வந்து அதை முத்தமிட்டார்கள். பின்னர், ஹரமின் வாயிற் கதவு வழியாக ஸஃபாவிற்குச் சென்றார்கள். அங்கே சென்றதும், ஸஃபா, மர்வா இரண்டும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவை என்ற வசனத்தை ஓதினார்கள்.
அல்லாஹ் தொடங்கிய இந்த இடத்திலிருந்து தொங்கோட்டத்தைத் தொடர்கிறேன் எனக் கூறிவிட்டு, கஅபா தெரியும் அளவுக்கு ஸஃபாவில் ஏறினார்கள். பின்னர், கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ் ஒருவன் என எடுத்துரைத்து அவனுடைய பெருமையை எடுத்தோதினார்கள். ``அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன், அவனுக்கு இணை துணை இல்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றல் மிக்கவன். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தன் வாக்குறுதியை முழுமையாக்கினான். இன்னும், தன் அடியாருக்கு உதவினான். இறைமறுப்பாளர்களின் கூட்டத்தை அவனே தனித்து நின்று (வென்றான்) தோல்வியடையச் செய்தான். பின்னர், இதற்கு நடுவில் பிரார்த்தித்தார்கள். மும்முறை இதே போன்று கூறினார்கள்.
பின்னர், ஸஃபாவிலிருந்து இறங்கி மர்வாவின் பக்கம் சென்றார்கள். தம் இரண்டு கால்களையும் பள்ளத்தில் பதித்து மர்வாவின் ஏறும் வரை ஓடினார்கள் ஸஃபாவில் தாம் செய்ததையே மர்வாவிலும் செய்தார்கள்.
தர்வியா நாள்: (துல்ஹஜ் எட்டாம் நாள்) அன்று மக்கள் மினாவுக்குத் திரும்பினார்கள். மேலும், இறைத்தூதர்(ஸல்) தம் சவாரியில் ஏறினார்கள். பின்னர், அங்கு சென்றதும் லுஹர் மற்றும் அஸ் ர் தொழுதார்கள். பின்னர், மக்ரிப் மற்றும் இஷா தொழுதார்கள். (மறுநாள்) அங்கு ஃபஜ்ர் தொழுதார்கள். பின்னர், அங்கு சூரியன் உதயமாகும் வரை சிறிது நேரம் தங்கினார்கள். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு அரஃபா மைதானம் வந்தார்கள். அங்கு `நமிரா' எனும் இடத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக ஒரு கூடாரம் அடிக்கப்பட்டிருந்தது. அங்கு அவர்கள் இறங்கினார்கள். சூரியன் உச்சி சாய்ந்தவுடன் `கஸ்வா' எனும் தம்முடைய ஒட்டகத்தின் மீது பயண இருக்கையை வைக்குமாறு கட்டளையிட்டார்கள். அதில் அவர்கள் ஏறி அரஃபா பள்ளத்தாக்கிற்கு வந்தார்கள். அங்கு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.
பின்னர், பாங்கும், `இகாமத்'தும் சொல்லப்பட்டது. பிறகு லுஹர் தொழுகையை நிறைவேற்றினார்கள். பின்னர், (மறுபடியும்) `இகாமத்' சொல்லச் செய்து அஸ் ர் தொழுகையை நிறைவேற்றினார்கள். அவை இரண்டிற்கும் இடையில் எத்தொழுகையும் தொழவில்லை.
பின்னர், தம் சவாரியில் ஏறி இருப்பிடம் வந்தார்கள். பின்னர், கஸ்வா எனும் தம்முடைய ஒட்டகத்தின் வயிறு ஸகராத் எனும் இடத்தை நோக்கியும், ஹப்லு முஷாத்தை தமக்கு முன்பாக்கியும், கிப்லாவை எதிர்நோக்கியும் இறைத்தூதர்(ஸல்) இருந்தார்கள். சூரியன் சற்று மஞ்சள் நிறத்தை அடைந்து மறையும் வரை நின்றே இருந்தார்கள்.
ஒட்டகத்தின் (வேகத்தை குறைப்பதற்காக அதன் தலை, நெஞ்சோடு ஒன்றிணையும் அளவிற்கு கடிவாளத்தை பிடித்து இழுத்துவாறு இறைத்தூதர்(ஸல்) அங்கிருந்து புறப்பட்டார்கள்.
``மக்களே! மிதமாக செல்லுங்கள்! மிதமாகச் செல்லுங்கள்'' என்று தம் வலக்கையால் சைகை செய்தார்கள். மணற் குன்றுகளில் ஒட்டகம் ஏறும் போதெல்லாம் அதன் கடிவாளத்தை விட்டவாறே, முஸ்தலிஃபா வந்தடைந்தார்கள். அங்கு, ஒரு பாங்கு, இரண்டு `இகாமத்'துடன் மக்ரிப் மற்றும் இஷா தொழுகையை நிறைவேற்றினார்கள். அவ்விரண்டு தொழுகைக்கும் இடையில் வேறு எந்த தொழுகையும் தொழவில்லை.
பின்னர், கிழக்கு வெளுக்கும் வரை சாய்ந்துவிட்டு, பாங்கு `இகாமத்' கூறி ஃபஜர் தொழுதார்கள். பின்னர், தம்முடைய கஸ்வாவில் அமர்ந்து முஸ்தலிஃபாவில் உள்ள மஷ்அருல் ஹராம் எனும் இடத்திற்கு வந்தார்கள். அங்கு கிப்லாவை முன்னோக்கி, பிரார்த்தித்து, தக்பீர், தஹ்லீல் கூறியவாறு நன்கு விடியும் வரை அங்கேயே நின்றிருந்தார்கள். பின்னர், சூரியன் உதயமாகும் முன்பு அங்கிருந்து புறப்பட்டு சற்று விரைந்து பத்னு முஹஸ்ஸர் எனும் இடத்தை வந்தடைந்தார்கள். பின்னர், அங்கிருந்து ஐம்ரத்துல் குப்ரா சென்றடையும் தரீகுல் உஸ்தா வழியாக ஜம்ராவை வந்தடைந்தார்கள். அங்கு ஏழு கற்களை (ஒவ்வொரு கல்லிற்கும்) தக்பீர் சொல்லிக் கொண்டே பத்னுல் வாத் எனும் பள்ளத்தாக்கிலிருந்து எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லும் பட்டாணிக் கடலைக்கும் சிறியதாக இருந்தது.
பின்னர், குர்பானி கொடுக்கும் இடத்திற்குத் திரும்பிச் சென்று குர்பானி கொடுத்தார்கள். பின்னர், வாகனத்தில் அமர்ந்து, கஅபத்துல்லாஹ் சென்று தவாஃபுல் இஃபாளவை முடித்துவிட்டு மக்காவில் லுஹர் தொழுதார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
இமாம் முஸ்லிம்(ரஹ்) இந்த ஹதீஸை விரிவாகப் பதிவிடப்பட்டுள்ளார்.
762. وَعَنْ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا فَرَغَ مِنْ تَلْبِيَتِهِ فِي حَجٍّ أَوْ عُمْرَةٍ سَأَلَ اللهُ رِضْوَانَهُ وَالْجَنَّةَ وَاسْتَعَاذَ بِرَحْمَتِهِ مِنَ النَّارِ} رَوَاهُ الشَّافِعِيُّ بِإِسْنَادٍ ضَعِيفٍ.
762. இறைத்தூதர்(ஸல்) தல்பிய்யா சொல்லி முடித்தவுடன் அல்லாஹ்விடம் ``அவனுடைய திருப்தியையும், சுவர்க்கத்தையும் வேண்டுவார்கள். இன்னும், அவனுடைய கருணையைக் கொண்டு நரகத்திலிருந்து பாதுகாப்புத் தேடுவார்கள்'' என குஸைமா இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.
இதனை `ளயீஃப்' எனும் பலவீனமான அறிவிப்பாளர் தொடருடன் இமாம் ஷாஃபியீ(ரஹ்) பதிவிட்டுள்ளார்.
763. وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {نَحَرْتُ هَاهُنَا، وَمِنًى كُلُّهَا مَنْحَرٌ، فَانْحَرُوا فِي رِحَالِكُمْ، وَوَقَفْتُ هَاهُنَا وَعَرَفَةُ كُلُّهَا مَوْقِفٌ، وَوَقَفْتُ هَاهُنَا وَجَمْعٌ كُلُّهَا مَوْقِفٌ} رَوَاهُ مُسْلِمٌ.
763. ``நான் இந்த இடத்தில் குர்பானீ கொடுத்தேன். மினாவில் எல்லா இடங்களிலும் குர்பானீ கொடுக்கலாம். நீங்கள் உங்கள் இருப்பிடங்களிலேயே குர்பானீ கொடுத்துக் கொள்ளுங்கள். நான் இங்கு தங்கினேன். அரஃபா மைதானம் முழுவதும் தங்கும் இடம்தான். நான் இங்கு தங்கினேன். முஸ்தலிஃபா முழுவதுமே தங்கும் இடம்தான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
764. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا: {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا جَاءَ إِلَى مَكَّةَ دَخَلَهَا مِنْ أَعْلَاهَا، وَخَرَجَ مِنْ أَسْفَلِهَا} مُتَّفَقٌ عَلَيْهِ.
764. ``இறைத்தூதர்(ஸல்) மக்காவில் அதன் மேல் திசையில் நுழைந்து கீழ்த்திசை வழியாக வெளியேறினார்கள்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
765. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا: {أَنَّهُ كَانَ لَا يَقْدُمُ مَكَّةَ إِلَّا بَاتَ بِذِي طُوَى حَتَّى يُصْبِحَ وَيَغْتَسِلَ، وَيَذْكُرُ ذَلِكَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
765. மக்காவில், தாம் நுழையும் போதெல்லாம் `தூத்துவா' எனும் இடத்தில் தங்கி இரவைக் கழித்துவிட்டு காலையானதும் குளித்தப் பின்னரே, மக்காவில் நுழைந்ததாகவும், அது குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கூறியதாகவும் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
766. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا: {أَنَّهُ كَانَ يُقَبِّلُ الْحَجَرَ الْأَسْوَدَ وَيَسْجُدُ عَلَيْهِ} رَوَاهُ الْحَاكِمُ مَرْفُوعًا، وَالْبَيْهَقِيُّ مَوْقُوفًا.
766. இறைத்தூதர்(ஸல்) ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டார்கள். இன்னும், அதன் மீது தலையை வைத்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ``மர்ஃபூஃ'' எனக் குறிப்பிட்டுள்ளார். இமாம் பைஹகீ(ரஹ்) இதனை `மவ்கூஃப்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
767. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: أَمَرَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَنْ يَرْمُلُوا ثَلَاثَةَ أَشْوَاطٍ وَيَمْشُوا أَرْبَعًا، مَا بَيْنَ الرُّكْنَيْنِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
767. (கஅபாவை தவாஃப் செய்யும்போது) மும்முறை விரைவாகவும், ஹஜருல் அஸ்வத்திற்கும், ருக்னுல் யமானிக்கும் நடுவில் நான்கு முறை சாதாரணமாக நடந்தும் வலம் வருமாறு இறைத்தூதர்(ஸல்) தம் தோழர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
768. عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا (أنَّهُ كَانَ إِذَا ظَافَ بِالْبَيْتِ الطَّوَافَ الْأَوَّلَ خَبَّ ثَلَاثًا وَمَشَى أَرْبَعًا. وَفِيْ رِوَايَةٍ: رَأيْتُ رَسُوُلَ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا ظَافَ فِي الْحَجِّ أوِ الْعُمْرَةِ أوَّلَ مَا يَقْدُمُ فَإنَّهُ يَسْعَى ثَلاَثَةَ أطْوافٍ بِالْبَيْتِ وَيَمْشِيْ أرْبَعَةً) مُتَّفَقٌ عَلَيْهِ.
768. இறைத்தூதர்(ஸல்) தவாஃப் செய்யும்போது முதல் மும்முறை வேகமாகவும், பின்னர், நான்கு முறை சாதாரணமாகவும் நடந்தார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
மற்றோர் அறிவிப்பின்படி, ஹஜ் மற்றும் உம்ராவில். இறைத்தூதர்(ஸல்) அவர்களை தவாஃப் செய்கையில் நான் பார்த்தேன். அவர்கள் முதல் மும்முறை வேகமாகவும், பின்னர் நான்கு முறை சாதாரணமாகவும் நடந்தார்கள் என உள்ளது.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
769. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {لَمْ أَرَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَلِمُ مِنَ الْبَيْتِ غَيْرَ الرُّكْنَيْنِ الْيَمَانِيَيْنِ} رَوَاهُ مُسْلِمٌ.
769. இறைத்தூதர்(ஸல்) ஹஜ்ருல் அஸ்வத் மற்றும் ருக்னுல் யமானியைத் தவிர வேறு எதையும் முத்தமிட நான் பார்க்கவில்லை என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
770. وَعَنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّهُ قَبَّلَ الْحَجَرَ الْأَسْوَدَ فَقَالَ: إِنِّي أَعْلَمُ أَنَّكَ حَجَرٌ لَا تَضُرُّ وَلَا تَنْفَعُ، وَلَوْلَا أَنِّي رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُكَ مَا قَبَّلْتُكَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
770. நிச்சயமாக உமர்(ரலி) ஹஜ்ருல் அஸ்வத்தை முத்தமிட்டபோது, ``நீ கல் என்பதை நான் நன்றாகவே அறிவேன். உன்னால் தீங்கும் செய்ய முடியாது. பலனும் தரமுடியாது. இறைத்தூதர்(ஸல்) உன்னை முத்தமிட நான் பார்க்கவில்லை என்றால் நான் உன்னை முத்தமிட மாட்டேன்'' என்று கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
771. وَعَنْ أَبِي الطُّفَيْلِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَطُوفُ بِالْبَيْتِ وَيَسْتَلِمُ الرُّكْنَ بِمِحْجَنٍ مَعَهُ، وَيُقْبِّلُ الْمِحْجَنَ} رَوَاهُ مُسْلِمٌ.
771. இறைத்தூதர்(ஸல்) பைத்துல்லாஹ்வை வலம் வரும்போது, அங்குள்ள கல்லைத் தம் கைத்தடியால் தொட்டு முத்தமிட்டத்தை நான் பார்த்தேன் என அபூ துஃபைல்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
772. وَعَنْ يَعْلَى بْنَ أُمَيَّةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {طَافَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُضْطَبِعًا بِبُرْدٍ أَخْضَرَ} رَوَاهُ الْخَمْسَةُ إِلَّا النَّسَائِيَّ، وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ.
772. இறைத்தூதர்(ஸல்) ஒரு பச்சை நிறப் போர்வையை இடத் தோளை மூடியபடி வலப்பக்க அக்குளில் நுழைந்து வலத் தோள் தெரிய தவாஃப் செய்தார்கள் என யஃலா இப்னு உமையா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
773. وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ يُهِلُّ مِنَّا اَلْمُهِلُّ فَلَا يُنْكِرُ عَلَيْهِ، وَيُكَبِّرُ مِنَّا الْمُكَبِّرُ فَلَا يُنْكِرُ عَلَيْهِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
773. எங்களில் `தஹ்லீல்' சொல்பவர்கள் தஹ்லீலும், `தக்பீர்' சொல்பவர்கள் தக்பீரும் கூறிக் கொண்டிருந்தார்கள். அதற்காக அவர்கள் கண்டிக்கப்படவில்லை என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
குறிப்பு: தஹ்லீல் என்பது லா இலாஹ இல்லல்லாஹ் என்பதாகும். தக்பீர் என்பது அல்லாஹு அக்பர் என்பதாகும்.
774. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {بَعَثَنِي رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي اَلثَّقَلِ، أَوْ قَالَ فِي اَلضَّعَفَةِ مِنْ جَمْعٍ بِلَيْلٍ} مُتَّفَقٌ عَلَيْهِ.
774. பயணச்சுமைகளுடன் (அதனைப் பராமரிக்கவும்) அல்லது பலவீனர்களுடன் முஸ்தலிஃபாவிலிருந்து இரவு நேரத்திலேயே என்னை இறைத்தூதர்(ஸல்) அனுப்பி வைத்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
775. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {اِسْتَأْذَنَتْ سَوْدَةُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ الْمُزْدَلِفَةِ: أَنْ تَدْفَعَ قَبْلَهُ، وَكَانَتْ ثَبِطَةً -تَعْنِي: ثَقِيلَةً- فَأَذِنَ لَهَا} مُتَّفَقٌ عَلَيْهِ.
775. இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு முன்னதாகத் மினா திரும்புவதற்கு முஸ்தலிஃபா இரவில் ஸவ்தா(ரலி) அனுமதி கேட்டார். ஏனெனில், அவர் மிகவும் தடித்தவராக (அதனால் நின்று நின்று செல்பவராக) இருந்தார். எனவே, அவருக்கு இறைத்தூதர்(ஸல்) சலுகை அளித்தார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
776. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ لَنَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا تَرْمُوا الْجَمْرَةَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ} رَوَاهُ الْخَمْسَةُ إِلَّا النَّسَائِيَّ، وَفِيهِ اِنْقِطَاعٌ.
776. ``சூரியன் உதயமாகாத வரை கல் எறியாதீர்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இது `முன்கதிஃ' எனும் அறிவிப்புத் தொடர் துண்டிக்கப்பட்டதாக உள்ளது.
777. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {أَرْسَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأُمِّ سَلَمَةَ لَيْلَةَ النَّحْرِ، فَرَمَتِ الْجَمْرَةَ قَبْلَ الْفَجْرِ، ثُمَّ مَضَتْ فَأَفَاضَتْ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَإِسْنَادُهُ عَلَى شَرْطِ مُسْلِمٍ.
777. உம்முல் முஃமினீன் உம்மு ஸலமா(ரலி) அவர்களை இறைத்தூதர்(ஸல்) குர்பானீ (துல்ஹஜ் 10ன்) இரவன்று அனுப்பினார்கள். அவர் ஃபஜ்ருக்கு முன்னதாக கல் எறிந்தார். பின்னர், சென்று அவர் `தவாஃபுல் இஃபாளா'ச் செய்தார் என ஆயிஷா (ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இது முஸ்லிமின் நிபந்தனைகளுக்குட்பட்ட ஹதீஸ் ஆகும்.
778. وَعَنْ عُرْوَةَ بْنِ مُضَرِّسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ شَهِدَ صَلَاتَنَا هَذِهِ -يَعْنِي: بِالْمُزْدَلِفَةِ- فَوَقَفَ مَعَنَا حَتَّى نَدْفَعَ، وَقَدْ وَقَفَ بِعَرَفَةَ قَبْلَ ذَلِكَ لَيْلاً أَوْ نَهَارًا، فَقَدْ تَمَّ حَجُّهُ وَقَضَى تَفَثَهُ} رَوَاهُ الْخَمْسَةُ، وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ، وَابْنُ خُزَيْمَةَ.
778. முஸ்தலிஃபாவில் நம்முடன் இந்தத் தொழுகையை (ஃபஜ்ரை) தொழுதவர், அதற்கு முன் நம்முடன் அரஃபா சென்று இரவு அல்லது பகலில் தங்கியிருந்தால் அவரின் ஹஜ் முழுமையாகிவிட்டது. அவர் தம் அழுக்குகளைப் போக்கிக் கொண்டார் என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உர்வா இப்னு முனர்ரஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இமாம் திர்மிதீ மற்றும் இப்னு குஸைமா(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்..