779. وَعَنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {إِنَّ الْمُشْرِكِينَ كَانُوا لَا يُفِيضُونَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَيَقُولُونَ: أَشْرِقْ ثَبِيرُ وَأَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَالَفَهُمْ، ثُمَّ أَفَاضَ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ} رَوَاهُ الْبُخَارِيُّ.
779. இணைவைப்பாளர்கள் சூரியன் உதயமாகாதவரை (முஸ் தலிஃபாவிலிருந்து) திரும்பமாட்டார்கள். ``ஸபீர் மலை ஒளிரட்டும் (சூரியன் உதிக்கட்டும்)'' என்றும் அவர்கள் கூறுவார்கள். ஆனால், அவர்களுக்கு மாறாக, சூரியன் உதிக்கும் முன்பே இறைத்தூர்(ஸல்) திரும்பிவிடுவார்கள் என உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
780. وَعَنِ ابْنِ عَبَّاسٍ وَأُسَامَةَ بْنِ زَيْدٍ رَضِيَ اللهُ عَنْهُمْ قَالَا: {لَمْ يَزَلِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُلَبِّي حَتَّى رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ} رَوَاهُ الْبُخَارِيُّ.
780. இறைத்தூதர்(ஸல்) ஜம்ரத்துல் அகபா) கல் எறியும் வரை தொடர்ந்து, `லப்பைக்' என தல்பியா முழங்குபவர்களாய் இருந்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) மற்றும் உஸாமா(ரலி) அறிவித்தார்கள்.
நூல்: புகாரீ
781. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّهُ جَعَلَ الْبَيْتَ عَنْ يَسَارِهِ، وَمِنًى عَنْ يَمِينِهِ، وَرَمَى الْجَمْرَةَ بِسَبْعِ حَصَيَاتٍ وَقَالَ: هَذَا مَقَامُ الَّذِيْ أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ الْبَقَرَةِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
781. கஅபத்துல்லாஹ் தமக்கு இடப்புறமாகவும் மினாவை தமக்கு வலப்புறமாகவும் ஆக்கிக் கொண்டு நின்று, ஜம்ராவின மீது ஏழு கற்களை அப்துல்லாஹ் இப்னு மஸ் வூத்(ரலி) எறிந்தார்கள். பின்னர், ``இது சூரத்துல் பகரா இறக்கப்பட்டவர் நின்று கல்லெறிந்த இடமாகும்'' எனக் கூறினார்கள்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
782. وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {رَمَى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَلْجَمْرَةَ يَوْمَ النَّحْرِ ضُحًى، وَأَمَّا بَعْدَ ذَلِكَ فَإِذَا زَادَتِ الشَّمْسُ} رَوَاهُ مُسْلِمٌ.
782. குர்பானீ நாளன்று சூரியன் உயர்ந்த முற்பகல் நேரத்திலும், அதன் பின்னர் மற்ற நாள்களில், சூரியன் உச்சி சாய்ந்ததும் ஜம்ராவின் மீது இறைத்தூதர்(ஸல்) கல் எறிந்தார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
783. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا {أَنَّهُ كَانَ يَرْمِي الْجَمْرَةَ الدُّنْيَا، بِسَبْعِ حَصَيَاتٍ، يُكَبِّرُ عَلَى أَثَرِ كُلِّ حَصَاةٍ، ثُمَّ يَتَقَدَّمُ، ثُمَّ يُسْهِلُ، فَيَقُومُ فَيَسْتَقْبِلُ الْقِبْلَةَ، فَيَقُومُ طَوِيلاً، وَيَدْعُو وَيَرْفَعُ يَدَيْهِ، ثُمَّ يَرْمِي الْوُسْطَى، ثُمَّ يَأْخُذُ ذَاتَ الشِّمَالِ فَيُسْهِلُ، وَيَقُومُ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ، ثُمَّ يَدْعُو فَيَرْفَعُ يَدَيْهِ وَيَقُومُ طَوِيلاً، ثُمَّ يَرْمِي جَمْرَةَ ذَاتِ الْعَقَبَةِ مِنْ بَطْنِ الْوَادِي وَلَا يَقِفُ عِنْدَهَا، ثُمَّ يَنْصَرِفُ، فَيَقُولُ: هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُ} رَوَاهُ الْبُخَارِيُّ.
783. இப்னு உமர்(ரலி), முதல் ஜம்ராவில் ஏழு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல் எறிந்த பின்பும் `அல்லாஹு அக்பர்' எனக் கூறுவார்கள். பின்னர், முன்னால் வந்து கிப்லாவை முன்னோக்கி நீண்ட நேரம் சமதளத்தில நின்று; தம் கைகளை உயர்த்தி துஆச் செய்வார்கள். பின்னர், நடுவிலிருக்கும் இரண்டாவது ஜம்ராவின் மீது கல் எறிவார்கள். பின்னர், இடப்பக்கமாகச் சென்று கிப்லாவை முன்னோக்கி, தம் கைகளை உயர்த்தி, நீண்ட நேரம் சமதளத்தில நின்று துஆச் செய்தார்கள். பின்னர், ஜம்ரத்துல் அக்பா'வின் மீது கணவாயில் நின்று கல் எறிந்துவிட்டு அங்கு நிற்காமல் சென்றுவிடுவார்கள். (இவ்வாறு செய்த இப்னு உமர்(ரலி), ``இறைத்தூதர்(ஸல்) இவ்வாறு செய்ததை நான் பார்த்துள்ளேன் என அறிவித்தார்.
நூல்: புகாரீ
784. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: "اَللَّهُمَّ ارْحَمِ الْمُحَلِّقِينَ" قَالُوا: وَالْمُقَصِّرِينَ يَا رَسُولَ اللهِ. قَالَ فِي الثَّالِثَةِ: " وَالْمُقَصِّرِينَ "} مُتَّفَقٌ عَلَيْهِ.
784. ``மொட்டையடித்துக் கொள்பவர்கள் மீது அல்லாஹ் கருணை புரிவானாக!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறியபோது ``முடியை குறைத்துக் கொள்பவர்கள் மீது'' என மக்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள் மூன்றாவது முறை, ``இன்னும் முடியை வெட்டிக் கொள்பவர்கள் (மீதும் அல்லாஹ் கருணை புரிவானாக!) என்று கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
785. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِوِ بْنِ الْعَاصِ رَضِيَ اللهُ عَنْهُمَا {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَفَ فِي حَجَّةِ الْوَدَاعِ، فَجَعَلُوا يَسْأَلُونَهُ، فَقَالَ رَجُلٌ: لَمْ أَشْعُرْ، فَحَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ. قَالَ: "اِذْبَحْ وَلَا حَرَجَ" فَجَاءَ آخَرُ، فَقَالَ: لَمْ أَشْعُرْ، فَنَحَرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ، قَالَ: "اِرْمِ وَلَا حَرَجَ" فَمَا سُئِلَ يَوْمَئِذٍ عَنْ شَيْءٍ قُدِّمَ وَلَا أُخِّرَ إِلَّا قَالَ: "اِفْعَلْ وَلَا حَرَجَ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
785. இறைத்தூதர்(ஸல்) ஹஜ்ஜத்துல் வதாஃவில் நின்றிருந்தார்கள். (அப்போது) அவர்களிடம் மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். ``எனக்குத் தெரியவில்லை, நான் குர்பானீ கொடுக்கும் முன் மொட்டையடித்துக் கொண்டேன்'' என ஒருவர் கூறினார்.
``குர்பானீ கொடுங்கள் ஒன்றும் குறைவாகாது'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
பின்னர், மற்றொருவர் வந்து ``எனக்குத் தெரியவில்லை. நான் கல் எறியும் முன்பே குர்பானீ கொடுத்துவிட்டேன்'' எனக் கூறினார்.
``இப்போது எறிந்து கொள் குற்றமில்லை!'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
முன்னும், பின்னும் செய்யப்பட்ட பல விஷயங்கள் குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அன்று கேட்கப்பட்டன. ``குற்றமில்லை'' என்றே அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
786. وَعَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ رَضِيَ اللهُ عَنْهُمَا {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحَرَ قَبْلَ أَنْ يَحْلِقَ، وَأَمَرَ أَصْحَابَهُ بِذَلِكَ} رَوَاهُ الْبُخَارِيُّ.
786. இறைத்தூதர்(ஸல்) மொட்டையடித்துக் கொள்வதற்கு முன்பு குர்பானீ கொடுத்தார்கள். அவ்வாறே தம் தோழர்களுக்கும் கட்டளையிட்டார்கள் என மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
787. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا رَمَيْتُمْ وَحَلَقْتُمْ فَقَدَ حَلَّ لَكُمُ الطِّيبُ وَكُلُّ شَيْءٍ إِلَّا النِّسَاءَ} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ، وَفِي إِسْنَادِهِ ضَعْفٌ.
787. ``நீங்கள் கல் எறிந்துவிட்டு, மொட்டையடித்துக் கொண்டால், பெண்ணை (உறவு கொள்வதைத்) தவிர்த்து நறுமணம் உட்பட அனைத்தும் ஹலால் ஆகிவிடுகிறது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத்
இதன் அறிவிப்பாளர் தொடர் `ளயீஃப்' எனும் பலவீனமானது.
788. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {لَيْسَ عَلَى النِّسَاءِ حَلْقٌ، وَإِنَّمَا يُقَصِّرْنَ} رَوَاهُ أَبُو دَاوُدَ بِإِسْنَادٍ حَسَنٍ.
788. ``மொட்டையடித்தல் பெண்களுக்கு (கடமை) இல்லை. அவர்கள் முடியைக் குறைத்துக் கொண்டாலே போதும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இமாம் அபூ தாவூத்(ரஹ்) `ஹஸன்' எனும் தரத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.
789. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا: {أَنَّ الْعَبَّاسَ بْنَ عَبْدِ الْمُطَّلِبِ رَضِيَ اللهُ عَنْهُ اِسْتَأْذَنَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَبِيتَ بِمَكَّةَ لَيَالِيَ مِنًى، مِنْ أَجْلِ سِقَايَتِهِ، فَأَذِنَ لَهُ} مُتَّفَقٌ عَلَيْهِ.
789. மினாவில் தங்கும் இரவுகளில் (அங்கு தங்காமல்) மக்களுக்கு ஜம்ஜம் தண்ணீர் புகட்டுவதற்காக மக்காவில் தங்குவதற்கு, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி) அனுமதி கேட்டார். எனவே, இறைத்தூதர்(ஸல்) அனுமதித்தார்கள் என உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
790. وَعَنْ عَاصِمِ بْنِ عَدِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْخَصَ لِرُعَاة الْإِبِلِ فِي الْبَيْتُوتَةِ عَنْ مِنًى، يَرْمُونَ يَوْمَ النَّحْرِ، ثُمَّ يَرْمُونَ الْغَدِ لِيَوْمَيْنِ، ثُمَّ يَرْمُونَ يَوْمَ النَّفْرِ} رَوَاهُ الْخَمْسَةُ، وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ، وَابْنُ حِبَّانَ.
790. ஒட்டகம் மேய்ப்பவர் பத்தாம் நாள் கல் எறிவதற்காக அன்று இரவு மினாவில் தங்காமல் வேறு இடத்தில் தங்குவதற்கும் பத்தாம் நாளுக்குப் பின்னர் இரண்டு நாள்களில் எறியவேண்டிய கற்களை (மினாவிலிருந்து) புறப்படும் (பதிமூன்றாம்) நாளன்று எறிவதற்கும் இறைத்தூதர்(ஸல்) அனுமதி அளித்தார்கள் என ஆஸிம் இப்னு ஆதீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
791. وَعَنْ أَبِي بِكْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {خَطَبَنَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ النَّحْرِ...} اَلْحَدِيثَ. مُتَّفَقٌ عَلَيْهِ.
791. குர்பானீ நாளன்று எங்களுக்கு இறைத்தூதர்(ஸல்) உரை நிகழ்த்தினார்கள் என அபூ பக்ரா (ரலி) அறிவித்தார். (ஹதீஸ் சுருக்கம்)
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
792. وَعَنْ سَرَّاءَ بِنْتِ نَبْهَانَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {خَطَبَنَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الرُّءُوسِ فَقَالَ: "أَلَيْسَ هَذَا أَوْسَطَ أَيَّامِ التَّشْرِيقِ؟"} اَلْحَدِيثَ رَوَاهُ أَبُو دَاوُدَ بِإِسْنَادٍ حَسَنٍ.
792. தலையை மழிக்கும் நாளன்று இறைத்தூதர்(ஸல்) எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, ``இது அய்யாமுத் தஷ்ரீக்கின் நடு நாள் அல்லவா?'' எனக் கூறினார்கள் என ஸர்ரா பின்த்து நப்ஹான்(ரலி) அறிவித்தார். (ஹதீஸ் சுருக்கம்)
நூல்: அபூ தாவூத்
இதன் அறிவிப்புத் தொடர் ``ஹஸன்'' என இமாம் அபூ தாவூத்(ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.
793. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهَا: {طَوَافُكِ بِالْبَيْتِ وَبَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ يَكْفِيكَ لِحَجِّكِ وَعُمْرَتِكِ} رَوَاهُ مُسْلِمٌ.
793. ``இறைஇல்லம் கஅபாவை நீ ஒரு முறை வலம் வருவதும், ஸஃபா மர்வாவுக்கு இடையே ஓடுவதும், உன் ஹஜ் மற்றும் உம்ராவிற்குப் போதுமானது'' என்று இறைத்தூதர்(ஸல்) என்னிடம் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
794. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَمْ يَرْمُلْ فِي السَّبْعِ الَّذِيْ أَفَاضَ فِيهِ} رَوَاهُ الْخَمْسَةُ إِلَّا التِّرْمِذِيَّ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
794. இறைத்தூதர்(ஸல்) தவாஃபுஸ் ஸியாரத் செய்தபோது ஏழு சுற்றுகளிலும் விரைவாகச் செல்லவில்லை என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ மற்றும் இப்னுமாஜா.
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
795. وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ، ثُمَّ رَقَدَ رَقْدَةً بِالْمُحَصَّبِ، ثُمَّ رَكِبَ إِلَى الْبَيْتِ فَطَافَ بِهِ} رَوَاهُ الْبُخَارِيُّ.
795. இறைத்தூதர்(ஸல்) முஹஸ்ஸப் எனும் இடத்தில் லுஹர், அஸர், மக்ரிப் மற்றும் இஷா தொழுதார்கள். இன்னும் சிறிதும் நேரம் அங்கு தூங்கினார்கள். பின்னர், தம் வாகனத்தில் ஏறி கஅபத்துல்லாஹ் சென்று தவாஃப் செய்தார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
796. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا: {أَنَّهَا لَمْ تَكُنْ تَفْعَلُ ذَلِكَ - أَيْ: النُّزُولَ بِالْأَبْطَحِ - وَتَقُولُ: إِنَّمَا نَزَلَهُ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَنَّهُ كَانَ مَنْزِلاً أَسْمَحَ لِخُرُوجِهِ} رَوَاهُ مُسْلِمٌ.
796. ``ஆயிஷா(ரலி) முஹஸ்ஸபில் இறங்க மாட்டார்கள்'' இது இறைத்தூதர்(ஸல்) மக்காவிலிருந்து மதீனா புறப்படத் தோதுவான இடம் என்பதைத் தவிர (இந்த இடத்தில்) வேறு ஒன்றுமில்லை. அதனால்தான் இறைத்தூதர்(ஸல்) அங்கு இறங்கினார்கள் என ஆயிஷா(ரலி) அவர்களே கூறினார்கள்.
நூல்: முஸ்லிம்
797. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {أُمِرَ النَّاسُ أَنْ يَكُونَ آخِرَ عَهْدِهِمْ بِالْبَيْتِ، إِلَّا أَنَّهُ خَفَّفَ عَنِ الْحَائِضِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
797. ஹஜ்ஜில் இறுதியாக கஅபத்துல்லாஹ்வை தவாஃப் செய்து வரவேண்டும் என கட்டளையிடப்பட்டுள்ளது. ஆனால், மாதவிடாய்ப் பெண்களுக்குச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
798. وَعَنِ ابْنِ الزُّبَيْرِ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ، وَصَلَاةٌ فِي الْمَسْجِدِ الْحَرَامِ أَفْضَلُ مِنْ صَلَاةٍ فِي مَسْجِدِي بِمِائَةِ صَلَاةٍ} رَوَاهُ أَحْمَدُ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.بَابُ الْفَوَاتِ وَالْإِحْصَارِ
798. ``என்னுடைய இந்த இறைஇல்லத்தில் (மஸ்ஜிதுன் னபவி) தொழுவது, மஸ்ஜித் ஹராமைத் தவிர மற்ற இறைஇல்லங்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்தது. இன்னும், மஸ்ஜித் ஹராமில் தொழுவது, என்னுடைய இந்த இறைஇல்லத்தில் தொழும் நூறு தொழுகைகளை விடச் சிறந்தது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு ஜுபைர்(ரலி) அறிவித்தார்.
நூல்: அஹ்மத்
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.