911. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ فِي قِصَّةِ الْعَسِيفِ. قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {وَاغْدُ يَا أُنَيْسُ عَلَى اِمْرَأَةِ هَذَا، فَإِنْ اِعْتَرَفَتْ فَارْجُمْهَا..} الْحَدِيثَ. مُتَّفَقٌ عَلَيْهِ.بَابُ الْإِقْرَارِ
911. பணியாள் ஒருவர் தம் மனைவி விபச்சாரம் செய்ததைப் பற்றிக் கூறுகையில், ``உனைஸே! இவரின் மனைவியிடம் செல்! அவள் (தன் குற்றத்தை) ஒப்புக் கொண்டால், கல் எறிந்து (கொன்று) விடு!'' என்று கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஹதீஸ் சுருக்கம்)
நூல்: புகாரீ, முஸ்லிம்
குறிப்பு: ஹதீஸ் முழுவதையும் அறிவதற்கு இந்நூலின் 1232 ஆம் ஹதீஸைக் காண்க!
912. عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ لِي رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {قُلِ الْحَقَّ، وَلَوْ كَانَ مُرًّا} صَحَّحَهُ اِبْنُ حِبَّانَ فِي حَدِيثٍ طَوِيلٍ.بَابُ الْعَارِيَةِ
912. ``கசப்பாய் இருப்பினும், நீர் உண்மையையே பேசும்!'' என்று என்னிடம் இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ தர்(ரலி) அறிவித்தார்.
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
913. عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {عَلَى الْيَدِ مَا أَخَذَتْ حَتَّى تُؤَدِّيَهُ} رَوَاهُ أَحْمَدُ، وَالْأَرْبَعَةُ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
913. ``பிறரிடமிருந்து ஒரு பொருளை வாங்கியவர் அதைத் திரும்பக் கொடுக்காதவரை, அவரே அதற்குப் பொறுப்பாளியாவார்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத் அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
914. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَدِّ الْأَمَانَةَ إِلَى مَنْ اِئْتَمَنَكَ، وَلَا تَخُنْ مَنْ خَانَكَ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَالتِّرْمِذِيُّ وَحَسَّنَهُ، وَصَحَّحَهُ الْحَاكِمُ، وَاسْتَنْكَرَهُ أَبُو حَاتِمٍ الرَّازِيُّ.
914. `` உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருளை உங்களிடம் ஒப்படைத்தவரிடமே கொடுத்துவிடுங்கள். உங்களுக்கு மோசடி செய்தவருக்குக்கூட நீங்கள் மோசடி செய்யாதீர்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இமாம் அபூ தாவூத்(ரஹ்) இதனை ``ஹஸன்'' எனக் குறிப்பிட்டுள்ளார். இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார். இமாம் அபூ ஹாதம் இதனை `முன்கர்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது இரவல் தரும் பொருட்கள் அனைத்திற்கும் பொருந்தும் என ஹதீஸ் கலை வல்லுநர்கள் கூறியுள்ளார்கள்.
915. وَعَنْ يَعْلَى بْنِ أُمَيَّةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا أَتَتْكَ رُسُلِي فَأَعْطِهِمْ ثَلَاثِينَ دِرْعاً"، قُلْتُ: يَا رَسُولَ اللهِ! أَعَارِيَةٌ مَضْمُونَةٌ أَوْ عَارِيَةٌ مُؤَدَّاةٌ؟ قَالَ: بَلْ عَارِيَةٌ مُؤَدَّاةٌ} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.
915. ``உன்னிடம் என் தூதர்கள் வந்தால், அவரிடம் நீ முப்பது கேடயங்களைக் கொடுத்தனுப்பு'' என்று இறைத்தூதர்(ஸல்) என்னிடம் கூறினார்கள்.
``இறைத்தூதர் அவர்களே! இந்த இரவலுக்கு விலை கொடுக்கப்படுமா? அல்லது இது திரும்பக் கொடுக்கப்படும் இரவலா?'' என நான் கேட்டேன்.
``திரும்பக் கொடுக்கப்படும் இரவல்தான்'' என்று கூறினார்கள் என யஃலா இப்னு உமையா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத் மற்றும் நஸயீ
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
916. وَعَنْ صَفْوَانَ بْنِ أُمَيَّةَ؛ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اِسْتَعَارَ مِنْهُ دُرُوعاً يَوْمَ حُنَيْنٍ. فَقَالَ: أَغَصْبٌ يَا مُحَمَّدُ؟ قَالَ: بَلْ عَارِيَةٌ مَضْمُونَةٌ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
916. ஹுனைன் போரின்போது இறைத்தூதர்(ஸல்) சில கேடயங்களைத் தம்மிடம் இரவல் வாங்கியபோது, ``முஹம்மதே! இது (போரின்) கொள்ளைப் பொருளா? அல்லது இரவலா?'' என நான் கேட்டேன்.
``இல்லை! (திரும்பக் கொடுத்துவிடுவதாகப்) பொறுப்பேற்றுக் கொண்ட இரவல்'' என்று இறைத்தூதர்(ஸல்) தன்னிடம் கூறினார்கள் என ஸஃப்வான் இப்னு உமையா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், அஹ்மத் மற்றும் நஸயீ
இம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
917. وَأَخْرَجَ لَهُ شَاهِدًا ضَعِيفًا عَنِ ابْنِ عَبَّاسٍ.بَابُ الْغَصْبِ
917. ``மேற்கண்ட ஹதீஸிற்குச் சான்றாக இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாக `ளயீஃப்' எனும் தரத்தில் ஹதீஸ் ஒன்றையும் இமாம் ஹாகிம்(ரஹ்) பதிவிட்டுள்ளார்.
918. عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ -رَضِيَ اللهُ عَنْهُمَا-؛ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {مَنْ اِقْتَطَعَ شِبْرًا مِنَ الْأَرْضِ ظُلْماً طَوَّقَهُ اللهُ إِيَّاهُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ سَبْعِ أَرَضِينَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
918. ``அநியாயமாக (பிறரின்) பூமியில் ஓர் அங்குலத்தை எடுப்பவனின் கழுத்தில், ஏழு பூமிகளை மாலையாக மறுமையில் அல்லாஹ் போட்டுவிடுவான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
919. وَعَنْ أَنَسٍ؛ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ عِنْدَ بَعْضِ نِسَائِهِ، فَأَرْسَلَتْ إِحْدَى أُمَّهَاتِ الْمُؤْمِنِينَمَعَ خَادِمٍ لَهَا بِقَصْعَةٍ فِيهَا طَعَامٌ، فَكَسَرَتِ الْقَصْعَةَ، فَضَمَّهَا، وَجَعَلَ فِيهَا اَلطَّعَامَ. وَقَالَ: "كُلُوا" وَدَفَعَ الْقَصْعَةَ الصَّحِيحَةَ لِلرَّسُولِ، وَحَبَسَ الْمَكْسُورَةَ} رَوَاهُ الْبُخَارِيُّ.وَالتِّرْمِذِيُّ، وَسَمَّى الضَّارِبَةَ عَائِشَةَ، وَزَادَ: فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {طَعَامٌ بِطَعَامٍ، وَإِنَاءٌ بِإِنَاءٍ} وَصَحَّحَهُ.
919. இறைத்தூதர்(ஸல்) தம் மனைவியர்களில் ஒருவருடன் இருந்தபோது, அவர்களின் மற்றொரு மனைவி தன் பணிப்பெண்ணிடம் ஒரு தட்டில் அவர்களுக்காக உணவு கொடுத்தனுப்பினார். அதனை அவர் (நபியின் மனைவி) கையால் தட்டிவிட்டார். அதனால் அந்தத் தட்டு உடைந்தது. இறைத்தூதர்(ஸல்) அந்தத் தட்டை ஒன்று சேர்த்து, உணவை அதில் போட்டு ``இதனைச் சாப்பிடு!'' என்றார்கள். பின்னர் கொண்டு வந்தவரிடம் ஒரு நல்ல தட்டைக் கொடுத்து விட்டு உடைந்த தட்டை வைத்துக் கொண்டார்கள்.
நூல்கள்: புகாரீ, திர்மிதீ
திர்மிதீயில், ``உடைத்தவர் ஆயிஷா(ரலி) என்றும் ``உணவுக்குப் பதில் உணவு, பாத்திரத்திற்குப் பதில் பாத்திரம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என்றும் `ஸஹீஹ்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
920. وَعَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ زَرَعَ فِي أَرْضِ قَوْمٍ بِغَيْرِ إِذْنِهِمْ، فَلَيْسَ لَهُ مِنَ الزَّرْعِ شَيْءٌ، وَلَهُ نَفَقَتُهُ} رَوَاهُ أَحْمَدُ، وَالْأَرْبَعَةُ إِلَّا النَّسَائِيَّ، وَحَسَّنَهُ التِّرْمِذِيُّ.وَيُقَالُ: إِنَّ الْبُخَارِيَّ ضَعَّفَهُ.
920. ``பிறரின் பூமியில் (நிலத்தில்) அவரின் அனுமதி இன்றிப் பயிரிடுபவருக்கு அதிலிருந்து எதுவும் கொடுக்கப்படாது. அவர் செலவிட்டுள்ள அளவு மட்டுமே கொடுக்கப்படும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ராஃபிவு இப்னு கதீக்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ``ஹஸன்'' எனக் குறிப்பிட்டுள்ளார். இமாம் புகாரீ(ரஹ்) இதனை `ளயீஃப்' எனக் குறிப்பிட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.
921. وَعَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ قَالَ: قَالَ رَجُلٌ مِنَ الصَّحَابَةِ؛ مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِنَّ رَجُلَيْنِ اِخْتَصَمَا إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَرْضٍ، غَرَسَ أَحَدُهُمَا فِيهَا نَخْلًا، وَالْأَرْضُ لِلْآخَرِ، فَقَضَى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْأَرْضِ لِصَاحِبِهَا، وَأَمَرَ صَاحِبَ النَّخْلِ أَنْ يُخْرِجَ نَخْلَهُ. وَقَالَ: " لَيْسَ لِعِرْقٍ ظَالِمٍ حَقٌّ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَإِسْنَادُهُ حَسَنٌ.
921. இரண்டு நபர்கள் ஒரு நிலம் தொடர்பாக இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வழக்குக் கொண்டு வந்தனர். அவர்களில், ஒருவர் மற்றொருவருக்குச் சொந்தமான பூமியில் பேரீச்சை மரம் பயிரிட்டுவிட்டார். நிலத்தை அதன் உரிமையாளரும், விளைச்சலை அதைப் பயிரிட்டவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என கட்டளையிட்டுத் தீர்ப்பளித்தார்கள். பின்னர், ``அநியாயக்காரனுக்கு நிலத்திலுள்ள எதற்கும் உரிமை கிடையாது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என நபித்தோழர்களில் ஒருவர் கூறியதாக உர்வா இப்னு ஜுபைர்(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இதன் அறிவிப்புத் தொடருடன் ``ஹஸன்'' எனும் தரத்தில் உள்ளது.
922. وَآخِرُهُ عِنْدَ أَصْحَابِ "السُّنَنِ" مِنْ رِوَايَةِ عُرْوَةَ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ. وَاخْتُلِفَ فِي وَصْلِهِ وَإِرْسَالِهِ، وَفِي تَعْيِين صَحَابِيِّهِ.
922. மற்றோர் அறிவிப்பில், திர்மிதீ, அபூ தாவூத், நஸயீ மற்றும் இப்னு மாஜா ஆகிய நூல்களில் உர்வா மற்றும் ஸயீத் இப்னு ஸைத் வாயிலாக உள்ள ஹதீஸ் ``மவ்ஸூல்'' மற்றும் ``முர்ஸல்'' என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. ஏனெனில், இதனை அறிவித்த நபித்தோழர் யார் எனத் தெரியவில்லை.
923. وَعَنْ أَبِي بَكْرَةَ؛ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فِي خُطْبَتِهِ يَوْمَ النَّحْرِ بِمِنًى{إِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ عَلَيْكُمْ حَرَامٌ، كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا} مُتَّفَقٌ عَلَيْهِ.بَابُ الشُّفْعَةِ
923. ``உங்களின் இந்நாள் (புனிதமானது) போல, இம்மாதம் (புனிதமானது) போல, உங்களின் இந்நகரம் (புனிதமானது) போல உங்களின் இரத்தமும், உங்களின் சொத்தும் புனிதமானவை'' என்று இறைத்தூதர்(ஸல்) துல் ஹஜ் மாதம் பத்தாம் நாள் மினாடிவில் உரையாற்றியபோது கூறினார்கள் என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
924. عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {قَضَى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالشُّفْعَةِ فِي كُلِّ مَا لَمْ يُقْسَمْ، فَإِذَا وَقَعَتِ الْحُدُودُ وَصُرِّفَتِ الطُّرُقُ فَلَا شُفْعَةَ} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِلْبُخَارِيِّ.
924. ``பிரித்தளிக்கப்படாத (தனக்குச் சேர வேண்டிய) ஒவ்வொரு பொருளிலும் ஷுஃப்ஆவிற்கு இறைத்தூதர்(ஸல்) அனுமதி அளித்தார்கள். ஆனால், எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு பாதைகள் குறிக்கப்பட்டுவிட்டால்; அதில் ஷுஃஆ இல்லை'' என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு புகாரீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
குறிப்பு: இருவருக்குச் சொந்தமான சொத்தில் ஒரு தன்னுடைய பங்கை விற்க விரும்பினால், பிறரைவிட தம் பங்குதாரருக்கே முன்னுரிமை அளித்தல் ஷுஃப்ஆ எனப்படும்.
925. وَفِي رِوَايَةِ مُسْلِمٍ: {الشُّفْعَةُ فِي كُلِّ شِرْكٍ: أَرْضٍ، أَوْ رَبْعٍ، أَوْ حَائِطٍ، لَا يَصْلُحُ أَنْ يَبِيعَ حَتَّى يَعْرِضَ عَلَى شَرِيكِهِ}. وَفِي رِوَايَةِ الطَّحَاوِيِّ: قَضَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالشُّفْعَةِ فِي كُلِّ شَيْءٍ، وَرِجَالُهُ ثِقَاتٌ.
925. ``நிலத்தில் இருப்பினும், வீடு அல்லது நான்கு சுவர்களுக்கு மத்தியிர் இருப்பினும் ஒவ்வொரு கூட்டிலும் ஷுஃஆ உள்ளது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் உள்ளது.
``தன் பங்குதாரரிடம் சமர்ப்பிக்காதவரை (தன் பங்கை) விற்பது கூடாது'' என மற்றோர் அறிவிப்பில் ``உள்ளது.
இறைத்தூதர்(ஸல்) ஒவ்வொரு பொருளிலும் ஷுஃப்ஆவிற்கு அனுமதி அளித்தார்கள் என தஹாவியில் உள்ளது.
இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்.
926. وَعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {جَارُ الدَّارِ أَحَقُّ بِالدَّارِ} رَوَاهُ النَّسَائِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ، وَلَهُ عِلَّةٌ.
926. ``அண்டை வீட்டுக்காரரே (ஒரு வீட்டை வாங்குவதில்) அதிக உரிமை பெற்றுள்ளார்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நூல்: நஸயீ
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதில் மஃலூல் எனும் குறைபாடு உள்ளது.
இதில் மஃலூல் எனும் குறைபாடு உள்ளது.
927. وَعَنْ أَبِي رَافِعٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اَلْجَارُ أَحَقُّ بِصَقَبِهِ} أَخْرَجَهُ الْبُخَارِيُّ، وَفِيهِ قِصَّةٌ.
927. ``பக்கத்து வீட்டை வாங்குதற்கு அண்டை வீட்டாரே அதிகம் உரிமை பெற்றுள்ளார்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ராஃபிவு(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ
இது நீண்ட சம்பவத்திலுள்ள ஒரு பகுதியாகும். காண்க: புகாரீ ஹதீஸ் எண் 225.
928. وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اَلْجَارُ أَحَقُّ بِشُفْعَةِ جَارِهِ، يُنْتَظَرُ بِهَا - وَإِنْ كَانَ غَائِبًا - إِذَا كَانَ طَرِيقُهُمَا وَاحِدًا} رَوَاهُ أَحْمَدُ، وَالْأَرْبَعَةُ، وَرِجَالُهُ ثِقَاتٌ.
928. ``ஷுஃப்ஆவில் அண்டை வீட்டாரே அதிகம் உரிமை பெற்றுள்ளார். (எனவே) அவர் ஊரில் இல்லாவிட்டாலும், அவர் வரும் வரை காத்திருந்து, பிறகுதான் விற்கவேண்டும். இருவரின் (வீட்டுப்) பாதையும் ஒன்றாக இருக்கும் வரையே இந்த நிபந்தனை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்.
929. وَعَنِ ابْنِ عُمَرَ -رَضِيَ اللهُ عَنْهُمَا-، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {الشُّفْعَةُ كَحَلِّ الْعِقَالِ} رَوَاهُ اِبْنُ مَاجَهْ وَالْبَزَّارُ، وَزَادَ: " وَلَا شُفْعَةَ لِغَائِبٍ " وَإِسْنَادُهُ ضَعِيفٌ.بَابُ الْقِرَاضِ
929. ``ஷுஃப்ஆ என்பது (ஒட்டகத்தைக் கட்டவிழ்த்துவிடுவது போன்று வியாபாரத்தில்) கட்டவிழ்த்து விடுவதாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: இப்னுமாஜா, பஸ்ஸார்
``ஊரில் இல்லாதவருக்கு ஷுப்ஆவின் உரிமை இல்லை'' என்று மற்றோர் அறிவிப்பும் உள்ளது. இது `ளயீஃப்' எனும் தரம் பெற்றதாகும்.
குறிப்பு: உடனடியாக ஷுஃப்ஆவின் உரிமையை ஒருவர் பயன்படுத்தாவிட்டால், அதை அவர் இழந்துவிடுவார். அதாவது கட்டி வைத்துள்ள ஒட்டகத்தை அவிழ்த்துவிட்டதும் அது ஓடிவிடுவதைப் போல ஷுஃப்ஆ எனும் உரிமை போய்விடும் என்பதே இதன் பொருள்.
930. عَنْ صُهَيْبٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {ثَلَاثٌ فِيهِنَّ الْبَرَكَةُ: اَلْبَيْعُ إِلَى أَجَلٍ، وَالْمُقَارَضَةُ، وَخَلْطُ الْبُرِّ بِالشَّعِيرِ لِلْبَيْتِ، لَا لِلْبَيْعِ} رَوَاهُ اِبْنُ مَاجَهْ بِإِسْنَادٍ ضَعِيفٍ.
930. ``குறிப்பிட்ட கால அவகாசத்துடன் வியாபாரம் செய்தல், கூட்டு வியாபாத்திற்காகக் கொடுக்கப்படும் கடன் மற்றும் வியாபாரத்திற்கு அல்லாது வீட்டில் கோதுமையுடன் வாற் கோதுமையைக் கலந்து வைத்தல் ஆகிய மூன்றில் அருள் வளம் உள்ளது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஸுஹைப்(ரலி) அறிவித்தார்.
இதனை இமாம் இப்னு மாஜா பலவீனமான அறிவிப்புத் தொடருடன் பதிவிட்டுள்ளார்.