959. وَعَنْ عَائِشَةَ -رَضِيَ اللهُ عَنْهَا- قَالَتْ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْبَلُ الْهَدِيَّةَ، وَيُثِيبُ عَلَيْهَا} رَوَاهُ الْبُخَارِيُّ.
959. இறைத்தூதர்(ஸல்) அன்பளிப்பைப் பெற்றுக் கொண்டும், அதற்குக் கைம்மாறு செய்து கொண்டும் இருந்தார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
960. وَعَنِ ابْنِ عَبَّاسٍ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: {وَهَبَ رَجُلٌ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَاقَةً، فَأَثَابَهُ عَلَيْهَا، فَقَالَ: " رَضِيتَ" ؟ قَالَ: لَا. فَزَادَهُ، فَقَالَ: "رَضِيتَ"؟ قَالَ: لَا. فَزَادَهُ. قَالَ: "رَضِيتَ" ؟ قَالَ: نَعَمْ.} رَوَاهُ أَحْمَدُ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.
960. நபி(ஸல்) அவர்களுக்கு ஒருவர் ஓர் ஒட்டகத்தை அன்பளிப்புச் செய்தார். அதற்காக அவருக்கு இறைத்தூதர்(ஸல்) கைம்மாறு செய்து, ``மகிழ்வுற்றாயா?'' எனக் கேட்டார்கள்.
``இல்லை'' என அவர் கூறினார்.
இறைத்தூதர்(ஸல்) அவருக்கு இன்னும் அதிகப்படியாகக் கொடுத்து, அதிகப்படியாகக் கொடுத்து, ``மகிழ்வுற்றாயா?'' எனக் கேட்டார்கள்.
``இல்லை'' என அவர் கூறினார்.
இறைத்தூதர்(ஸல்) அவருக்கு இன்னும் அதிகமாகக் கொடுத்து, ``(இப்போது) மகிழ்வுற்றாயா?'' எனக் கேட்டார்கள்.
``ஆம்'' என்று அப்போது கூறினார் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: அஹ்மத்
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
961. وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {الْعُمْرَى لِمَنْ وُهِبَتْ لَهُ} مُتَّفَقٌ عَلَيْهِ.وَلِمُسْلِمٍ: {أَمْسِكُوا عَلَيْكُمْ أَمْوَالَكُمْ وَلَا تُفْسِدُوهَا، فَإِنَّهُ مَنْ أَعْمَرَ عُمْرَى فَهِيَ لِلَّذِي أُعْمِرَهَا حَياً وَمَيِّتًا، وَلِعَقِبِهِ}. وَفِي لَفْظٍ: {إِنَّمَا الْعُمْرَى الَّتِي أَجَازَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَقُولَ: هِيَ لَكَ وَلِعَقِبِكَ، فَأَمَّا إِذَا قَالَ: هِيَ لَكَ مَا عِشْتَ، فَإِنَّهَا تَرْجِعُ إِلَى صَاحِبِهَا}. وَلِأَبِي دَاوُدَ وَالنَّسَائِيِّ: {لَا تُرْقِبُوا، وَلَا تُعْمِرُوا، فَمَنْ أُرْقِبَ شَيْئًا أَوْ أُعْمِرَ شَيْئًا فَهُوَ لِوَرَثَتِهِ}.
961. ``ஆயுட்கால அன்பளிப்புச் செய்யப்பட்டவருக்கே அந்த அன்பளிப்பு உரியதாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்.
முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில், ``நீங்கள் உங்களுக்காக உங்கள் சொத்துக்களை இருப்பில் (வைத்து) கொள்ளுங்கள். அதனை வீணடித்து விடாதீர்கள். ஏனெனில், யாருக்கேனும் ஆயுட்கால அன்பளிப்பு (`உம்றா') கொடுக்கப்பட்டால், அவர் உயிர் வாழும் வரை, அது அவருக்கும், அவர் இறந்தப் பின்னர் அவரின் சந்ததிகளுக்கும் உரியதாகும்'' என உள்ளது.
மற்றோர் அறிவிப்பின்படி, ``இது உனக்கும் உன் சந்ததினருக்குமாகும்'' எனக் கூறி, அன்பளிப்புச் செய்யும் உம்றா எனும் ஆயுட்கால அன்பளிப்பையே இறைத்தூதர்(ஸல்) அனுமதித்தார்கள். ``நீ உயிர் வாழும் காலம் வரை இது உனக்குரியது என ஒருவர் (தெளிவாக) கூறி அன்பளிப்புச் செய்திருந்தால், அது உரிமையாளரிடமே திரும்பச் சென்று சேர்ந்துவிடும்.
அபூ தாவூத் மற்றும் நஸயீயின் மற்றோர் அறிவிப்பின்படி ``நீங்கள் ருக்பா, உம்றா, செய்யாதீர்கள். ஏனெனில், ருக்பா, உம்றா' செய்யக்கூடிய பொருள் யாருக்கு (அன்பளிப்பு) செய்யப்படுகிறதோ, அவரின் சந்ததியினருக்கே உரியதாகும்'' என உள்ளது.
962. وَعَنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {حَمَلْتُ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللهِ، فَأَضَاعَهُ صَاحِبُهُ، فَظَنَنْتُ أَنَّهُ بَائِعُهُ بِرُخْصٍ، فَسَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ. فَقَالَ: " لَا تَبْتَعْهُ، وَإِنْ أَعْطَاكَهُ بِدِرْهَمٍ …} اَلْحَدِيثَ. مُتَّفَقٌ عَلَيْهِ.
962. அல்லாஹ்வின் பாதையில் அவர் சவாரி செய்து கொள்வதற்காக ஒருவருக்கு நான் குதிரை ஒன்றைக் கொடுத்தேன். ஆனால், அவர் அதனை வீணடித்து (குறைந்த விலைக்கு விற்க முற்பட்டு) விட்டார். அவர் அதைக் குறைந்த விலைக்கு விற்றுவிடுவார் என நான் எண்ணியதால் அதனை நானே வாங்கிக் கொள்வது குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன்.
``அவர் ஒரு திர்ஹத்திற்கேனும் அதனை விற்றாலும் அதனை நீ வாங்காதே!'' என்று கூறினார்கள் என உமர்(ரலி) அறிவித்தார். (ஹதீஸ் சுருக்கம்)
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்.
குறிப்பு: இந்த ஹதீஸை முழுமையாக அறிந்திட காண்க: புகாரீ ஹதீஸ் எண் 2623
963. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {تَهَادُوْا تَحَابُّوا} رَوَاهُ الْبُخَارِيُّ فِي " اَلْأَدَبِ اَلْمُفْرَدِ " وَأَبُو يَعْلَى بِإِسْنَادٍ حَسَنٍ.
963. `` நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பளிப்புச் செய்து, உங்களுக்கிடையே அன்பை அதிகரித்துக் கொள்ளுங்கள்!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இது இமாம் புகாரீ(ரஹ்) அவர்களின் `அல் அதபுல் முப்ஃரத்'' எனும் நூலிலும் பதிவாகியுள்ளது. `அபூ யஃலா' எனும் நூலில் ``ஹஸன்'' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
964. وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {تَهَادَوْا، فَإِنَّ الْهَدِيَّةَ تَسُلُّ السَّخِيمَةَ} رَوَاهُ الْبَزَّارُ بِإِسْنَادٍ ضَعِيفٍ.
964. ``நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பளிப்புச் செய்து கொள்ளுங்கள். ஏனெனில், அது உங்கள் மனக்குறைகளை அகற்றிவிடும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
பலவீனமான அறிவிப்பாளர் தொடருடன் இதனை இமாம் பஸ் ஸார்(ரஹ்) பதிவிட்டுள்ளார்.
965. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {يَا نِسَاءَ الْمُسْلِمَاتِ ! لَا تَحْقِرَنَّ جَارَةٌ لِجَارَتِهَا وَلَوْ فِرْسِنَ شَاةٍ} مُتَّفَقٌ عَلَيْهِ.
965. ``முஸ்லிம் பெண்களே! ஒருவருக்கு அவரின் அண்டைவீட்டார் ஆட்டுக் காலின் குளம்பைக் கொடுத்தாலும் அதனை இழிவாகக் கருதவேண்டாம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
966. وَعَنِ ابْنِ عُمَرَ -رَضِيَ اللهُ عَنْهُمَا-، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {مَنْ وَهَبَ هِبَةً، فَهُوَ أَحَقُّ بِهَا، مَا لَمْ يُثَبْ عَلَيْهَا} رَوَاهُ الْحَاكِمُ وَصَحَّحَهُ، وَالْمَحْفُوظُ مِنْ رِوَايَةِ اِبْنِ عُمَرَ، عَنْ عُمَرَ قَوْلُه ُبَابُ اللُّقَطَةِ
966. ``அன்பளிப்புச் செய்தவருக்கு பதில் (அன்பளிப்பு) அளிக்கப்படாதவரை அவரிடம் (அன்பளிப்புப் பெற்றவரிடம்) அவர் (அன்பளிப்புச் செய்தவர்) அதிகம் உரிமை பெற்றுள்ளார்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: ஹாகிம்
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனை உமர்(ரலி) அவர்களிடமிருந்து இப்னு உமர்(ரலி) அறிவித்தார் என்பதே சரியானது.
967. عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَمْرَةٍ فِي الطَّرِيقِ، فَقَالَ: " لَوْلَا أَنِّي أَخَافُ أَنْ تَكُونَ مِنَ الصَّدَقَةِ لَأَكَلْتُهَا"} مُتَّفَقٌ عَلَيْهِ.
967. வழியில் (கீழே கிடந்த) ஒரு பேரீச்சம் பழத்தை இறைத்தூதர்(ஸல்) கடந்து சென்றபோது, ``இது தர்மப் பொருளாக இருக்கக் கூடும் என நான் அஞ்சவில்லை என்றால், இதனை நான் சாப்பிட்டிருப்பேன்'' என்று கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்.
968. وَعَنْ زَيْدِ بْنِ خَالِدٍ اَلْجُهَنِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ عَنِ اللُّقَطَةِ ؟ فَقَالَ: " اِعْرِفْ عِفَاصَهَا وَوِكَاءَهَا، ثُمَّ عَرِّفْهَا سَنَةً، فَإِنْ جَاءَ صَاحِبُهَا وَإِلَّا فَشَأْنُكَ بِهَا". قَالَ: فَضَالَّةُ الْغَنَمِ ؟ قَالَ: "هِيَ لَكَ، أَوْ لِأَخِيكَ، أَوْ لِلذِّئْبِ ". قَالَ: فَضَالَّةُ الْإِبِلِ ؟ قَالَ: " مَا لَكَ وَلَهَا ؟ مَعَهَا سِقَاؤُهَا وَحِذَاؤُهَا، تَرِدُ الْمَاءَ، وَتَأْكُلُ الشَّجَرَ، حَتَّى يَلْقَاهَا رَبُّهَا} مُتَّفَقٌ عَلَيْهِ.
968. ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து (வழியில்) கண்டெடுக்கும் பொருட்கள் குறித்து வினவினார். ``அதன் பை மற்றும் சுருக்கிடும் கயிற்றை அறிவிப்புச் செய்து, பின்னர் ஓராண்டு காலம் காத்திரு! அந்தப் பொருளுக்குரியவர் வந்து விட்டால் அது அவருக்கே உரியதாகும். இல்லையெனில், அதனை நீ பயன்படுத்திக் கொள்!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
பின்னர், ``காணாமல் போன ஆடு?'' குறித்து அவர் கேட்டார். ``அது உனக்கு அல்லது உன் சகோதரனுக்கு அல்லது ஓநாய்க்குரியதாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
பின்னர், ``காணாமல் போன ஒட்டகம்?'' குறித்து அவர் கேட்டார்.
``உனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? அதனுடன் அதன் வயிறும் கால்களும் இருக்கின்றன. அதனை அதன் எஜமானன் காணும் வரை அது தண்ணீரைப் பருகிக் கொண்டும், மரங்களைத் தின்று கொண்டும் திரியும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஸைத் இப்னு ஃகாலித் அல் ஜுஹனீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
969. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ آوَى ضَالَّةً فَهُوَ ضَالٌّ، مَا لَمْ يُعَرِّفْهَا} رَوَاهُ مُسْلِمٌ.
969. ``காணாமல் போன கால்நடைக்கு அபயம் அளித்தவர் அதனை (பகிரங்கமாக) அறிவிக்காத வரை வழிகேட்டில் உள்ளவராவார்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஸைத் இப்னு ஃகாலித் அல் ஜுஹனீ(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
970. وَعَنْ عِيَاضِ بْنِ حِمَارٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ وَجَدَ لُقَطَةً فَلْيُشْهِدْ ذَوَيْ عَدْلٍ، وَلْيَحْفَظْ عِفَاصَهَا وَوِكَاءَهَا، ثُمَّ لَا يَكْتُمْ، وَلَا يُغَيِّبْ، فَإِنْ جَاءَ رَبُّهَا فَهُوَ أَحَقُّ بِهَا، وَإِلَّا فَهُوَ مَالُ اللهُ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ} رَوَاهُ أَحْمَدُ، وَالْأَرْبَعَةُ إِلَّا التِّرْمِذِيَّ، وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ، وَابْنُ الْجَارُودِ، وَابْنُ حِبَّانَ.
970. ``ஒரு பொருளைக் கண்டெடுத்தவர் அதற்கு நீதமான இரண்டு சாட்சிகளை நியமித்துக் கொள்ளட்டும். இன்னும், அதன் பை மற்றும் கயிற்றை நினைவில் வைக்கட்டும். அதனை அவர் மறைக்கவோ - ஒழிக்கவோ கூடாது. அதன் உரிமையாளர் வந்துவிட்டால், அவரே அதில் முன்னுரிமை பெறுகிறார். அதன் உரிமையாளர் யாரும் வராதபட்சத்தில், அது அல்லாஹ்வின் சொத்தாகும். அவன் அதனை விரும்பியவருக்கு அளிக்கிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இயாள் இப்னு ஹிமார்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ மற்றும் இப்னு மாஜா.
இமாம் இப்னு குஸைமா, இமாம் இப்னுல் ஜாரூத் மற்றும் இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
971. وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عُثْمَانَ التَّيْمِيِّ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ لُقَطَةِ الْحَاجِّ} رَوَاهُ مُسْلِمٌ.
971. ஹாஜிகள் தவறவிட்டபொருட்களை (மக்கா நகர அரசு ஊழியர்கள் தவிர) பிறர் எடுப்பதை இறைத்தூதர்(ஸல்) தடை செய்தார்கள் என அப்துர் ரஹ்மான் இப்னு உஸ்மான்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
972. وَعَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَلَا لَا يَحِلُّ ذُو نَابٍ مِنَ السِّبَاعِ، وَلَا الْحِمَارُ الْأَهْلِيُّ، وَلَا اللُّقَطَةُ مِنْ مَالِ مُعَاهَدٍ، إِلَّا أَنْ يَسْتَغْنِيَ عَنْهَا} رَوَاهُ أَبُو دَاوُدَ.بَابُ الْفَرَائِضِ
972. ``அறிந்து கொள்ளுங்கள்! மிருகங்களில் கோரைப் பற்கள் உள்ளவற்றையும், நாட்டுக் கழுதையும் அனுமதிக்கப்பட்டதல்ல. அவ்வாறே, இஸ்லாமிய அரசின் கீழ் ஒப்பந்தம் செய்து வாழ்பவரின் காணாமல் போன பொருள் அவனுக்குத் தேவை இல்லை என்கிற பட்சத்திலே தவிர அனுமதிக்கப்பட்டதல்ல'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என மிக்தாம் இப்னு மஃதீ கரிப்(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
973. عَنِ ابْنِ عَبَّاسٍ - رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَلْحِقُوا الْفَرَائِضَ بِأَهْلِهَا، فَمَا بَقِيَ فَهُوَ لِأَوْلَى رَجُلٍ ذَكَرٍ} مُتَّفَقٌ عَلَيْهِ.
973. ``வாரிசுகளுக்கு அவர்களுக்குரிய பங்கை கொடுத்துவிடுங்கள். அதில் மீதம் இருப்பவற்றை (இறந்தவரின்) நெருங்கிய உறவுக்கார ஆணுக்குக் கொடுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
974. وَعَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ - رَضِيَ اللهُ عَنْهُمَا- أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {لَا يَرِثُ الْمُسْلِمُ الْكَافِرَ، وَلَا يَرِثُ الْكَافِرُ الْمُسْلِمَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
974. ``எந்த முஸ்லிமும் இறைமறுப்பாளருக்கு வாரிசாக மாட்டான்(அவ்வாறே) இறைமறுப்பாளர் யாரும் முஸ்லிமிற்கு வாரிசாக மாட்டார்.'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
975. وَعَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ فِي بِنْتٍ، وَبِنْتِ اِبْنٍ، وَأُخْتٍ - {قَضَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ" لِلِابْنَةِ النِّصْفَ، وَلِابْنَةِ اَلِابْنِ السُّدُسَ - تَكْمِلَةَ الثُّلُثَيْنِ- وَمَا بَقِيَ فَلِلْأُخْتِ} رَوَاهُ الْبُخَارِيُّ.
975. மூன்றில் இரண்டு பங்கை முழுமையாக்குவதற்காக, (இறந்தவரின்) மகளுக்கு அரைப் பங்கையும், (இறந்தவரின்) மகன் வழிப் பேத்திக்கு ஆறில் ஒரு பங்கையும் கொடுக்க வேண்டும். அதில் மீதம் உள்ளது (இறந்தவரின்) சகோதரிக்கு உரியதாகும் என்று இறைத்தூதர்(ஸல்) தீர்ப்பு அளித்தார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
976. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو - رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا يَتَوَارَثُ أَهْلُ مِلَّتَيْنِ} رَوَاهُ أَحْمَدُ، وَالْأَرْبَعَةُ إِلَّا التِّرْمِذِيَّ.وَأَخْرَجَهُ الْحَاكِمُ بِلَفْظِ أُسَامَةَ. وَرَوَى النَّسَائِيُّ حَدِيثَ أُسَامَةَ بِهَذَا اللَّفْظِ.
976. ``இரண்டு வேறுபட்ட மதத்தினர் ஒருவருக்கொருவர் வாரிசாக முடியாது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
உஸாமா(ரலி) வாயிலாக ஹாகிமிலும், நஸயீயிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.
குறிப்பு: இந்த ஹதீஸின் அடிப்படையில் இரண்டு வேறுபட்ட மதத்தவரில் ஒருவருக்கொருவர் வாரிசாக முடியாது. ஆனால், உதவிகள் மற்றும் மரண சாசனம் செய்து கொள்ளலாம்.
977. وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَينٍ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: {إِنَّ اِبْنَ اِبْنِي مَاتَ، فَمَا لِي مِنْ مِيرَاثِهِ ؟ فَقَالَ: " لَكَ السُّدُسُ " فَلَمَّا وَلَّى دَعَاهُ، فَقَالَ: "لَكَ سُدُسٌ آخَرُ" فَلَمَّا وَلَّى دَعَاهُ. فَقَالَ: " إِنَّ السُّدُسَ الْآخَرَ طُعْمَةٌ} رَوَاهُ أَحْمَدُ وَالْأَرْبَعَةُ، وَصَحَّحَهُ التِّرْمِذِيُّوَهُوَ مِنْ رِوَايَةِ الْحَسَنِ الْبَصْرِيِّ عَنْ عِمْرَانَ، وَقِيلَ: إِنَّهُ لَمْ يَسْمَعْ مِنْهُ.
977. ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ``என் மகன் வழிப் பேரன் இறந்துவிட்டான். அவனுடைய சொத்தில் எனக்குரிய பங்கு என்ன?'' எனக் கேட்டார்.
``ஆறில் ஒரு பங்கு உனக்குரியது'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
அவர் திரும்பிச் சென்றபோது அவரை (மறுபடியும்) அழைத்து, ``உனக்கு மற்றும் ஓர் ஆறில் ஒரு பங்கு உண்டு'' எனக் கூறினார்கள்.
பின்னர், (அவர் மறுபடியும்) திரும்பிச் சென்றார். இறைத்தூதர்(ஸல்) அவரை (மறுபடியும்) அழைத்து, ``இந்த மற்றோர் ஆறில் ஒரு பங்கு உனக்கு அதிகப்படியாகக் கிடைப்பதாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இம்ரான் இப்னு ஹுசைன்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது ஹஸன் பஸரி வாயிலாக இம்ரானிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இம்ரான்(ரலி) அவர்களிடமிருந்து ஹஸன் பஸரி(ரஹ்) ஹதீஸ் களைச் செவுயுற்றதற்கு ஆதாரமில்லை எனக் கூறப்படுகிறது.
978. وَعَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ؛ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَعَلَ لِلْجَدَّةِ السُّدُسَ، إِذَا لَمْ يَكُنْ دُونَهَا أُمٌّ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ، وَابْنُ الْجَارُودِ، وَقَوَّاهُ اِبْنُ عَدِيٍّ.
978. (இறந்தவருக்கு) தாய் இல்லை எனில் பாட்டிக்கு ஆறில் ஒரு பங்கை இறைத்தூதர்(ஸல்) உரிமையாக்கினார்கள் என புரைதரா(ரலி) தம் தந்தையிடமிருந்து அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத் மற்றும் நஸயீ
இமாம் இப்னு குஸைமா மற்றும் இமாம் இப்னுல் ஜாரூத்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இமாம் இப்னு அதீ(ரஹ்) இதனை பலமான ஹதீஸ் எனக் கூறியுள்ளார்.