971. وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عُثْمَانَ التَّيْمِيِّ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ لُقَطَةِ الْحَاجِّ} رَوَاهُ مُسْلِمٌ.
971. ஹாஜிகள் தவறவிட்டபொருட்களை (மக்கா நகர அரசு ஊழியர்கள் தவிர) பிறர் எடுப்பதை இறைத்தூதர்(ஸல்) தடை செய்தார்கள் என அப்துர் ரஹ்மான் இப்னு உஸ்மான்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
972. وَعَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَلَا لَا يَحِلُّ ذُو نَابٍ مِنَ السِّبَاعِ، وَلَا الْحِمَارُ الْأَهْلِيُّ، وَلَا اللُّقَطَةُ مِنْ مَالِ مُعَاهَدٍ، إِلَّا أَنْ يَسْتَغْنِيَ عَنْهَا} رَوَاهُ أَبُو دَاوُدَ.بَابُ الْفَرَائِضِ
972. ``அறிந்து கொள்ளுங்கள்! மிருகங்களில் கோரைப் பற்கள் உள்ளவற்றையும், நாட்டுக் கழுதையும் அனுமதிக்கப்பட்டதல்ல. அவ்வாறே, இஸ்லாமிய அரசின் கீழ் ஒப்பந்தம் செய்து வாழ்பவரின் காணாமல் போன பொருள் அவனுக்குத் தேவை இல்லை என்கிற பட்சத்திலே தவிர அனுமதிக்கப்பட்டதல்ல'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என மிக்தாம் இப்னு மஃதீ கரிப்(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
973. عَنِ ابْنِ عَبَّاسٍ - رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَلْحِقُوا الْفَرَائِضَ بِأَهْلِهَا، فَمَا بَقِيَ فَهُوَ لِأَوْلَى رَجُلٍ ذَكَرٍ} مُتَّفَقٌ عَلَيْهِ.
973. ``வாரிசுகளுக்கு அவர்களுக்குரிய பங்கை கொடுத்துவிடுங்கள். அதில் மீதம் இருப்பவற்றை (இறந்தவரின்) நெருங்கிய உறவுக்கார ஆணுக்குக் கொடுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
974. وَعَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ - رَضِيَ اللهُ عَنْهُمَا- أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {لَا يَرِثُ الْمُسْلِمُ الْكَافِرَ، وَلَا يَرِثُ الْكَافِرُ الْمُسْلِمَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
974. ``எந்த முஸ்லிமும் இறைமறுப்பாளருக்கு வாரிசாக மாட்டான்(அவ்வாறே) இறைமறுப்பாளர் யாரும் முஸ்லிமிற்கு வாரிசாக மாட்டார்.'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
975. وَعَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ فِي بِنْتٍ، وَبِنْتِ اِبْنٍ، وَأُخْتٍ - {قَضَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ" لِلِابْنَةِ النِّصْفَ، وَلِابْنَةِ اَلِابْنِ السُّدُسَ - تَكْمِلَةَ الثُّلُثَيْنِ- وَمَا بَقِيَ فَلِلْأُخْتِ} رَوَاهُ الْبُخَارِيُّ.
975. மூன்றில் இரண்டு பங்கை முழுமையாக்குவதற்காக, (இறந்தவரின்) மகளுக்கு அரைப் பங்கையும், (இறந்தவரின்) மகன் வழிப் பேத்திக்கு ஆறில் ஒரு பங்கையும் கொடுக்க வேண்டும். அதில் மீதம் உள்ளது (இறந்தவரின்) சகோதரிக்கு உரியதாகும் என்று இறைத்தூதர்(ஸல்) தீர்ப்பு அளித்தார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
976. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو - رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا يَتَوَارَثُ أَهْلُ مِلَّتَيْنِ} رَوَاهُ أَحْمَدُ، وَالْأَرْبَعَةُ إِلَّا التِّرْمِذِيَّ.وَأَخْرَجَهُ الْحَاكِمُ بِلَفْظِ أُسَامَةَ. وَرَوَى النَّسَائِيُّ حَدِيثَ أُسَامَةَ بِهَذَا اللَّفْظِ.
976. ``இரண்டு வேறுபட்ட மதத்தினர் ஒருவருக்கொருவர் வாரிசாக முடியாது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
உஸாமா(ரலி) வாயிலாக ஹாகிமிலும், நஸயீயிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.
குறிப்பு: இந்த ஹதீஸின் அடிப்படையில் இரண்டு வேறுபட்ட மதத்தவரில் ஒருவருக்கொருவர் வாரிசாக முடியாது. ஆனால், உதவிகள் மற்றும் மரண சாசனம் செய்து கொள்ளலாம்.
977. وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَينٍ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: {إِنَّ اِبْنَ اِبْنِي مَاتَ، فَمَا لِي مِنْ مِيرَاثِهِ ؟ فَقَالَ: " لَكَ السُّدُسُ " فَلَمَّا وَلَّى دَعَاهُ، فَقَالَ: "لَكَ سُدُسٌ آخَرُ" فَلَمَّا وَلَّى دَعَاهُ. فَقَالَ: " إِنَّ السُّدُسَ الْآخَرَ طُعْمَةٌ} رَوَاهُ أَحْمَدُ وَالْأَرْبَعَةُ، وَصَحَّحَهُ التِّرْمِذِيُّوَهُوَ مِنْ رِوَايَةِ الْحَسَنِ الْبَصْرِيِّ عَنْ عِمْرَانَ، وَقِيلَ: إِنَّهُ لَمْ يَسْمَعْ مِنْهُ.
977. ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ``என் மகன் வழிப் பேரன் இறந்துவிட்டான். அவனுடைய சொத்தில் எனக்குரிய பங்கு என்ன?'' எனக் கேட்டார்.
``ஆறில் ஒரு பங்கு உனக்குரியது'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
அவர் திரும்பிச் சென்றபோது அவரை (மறுபடியும்) அழைத்து, ``உனக்கு மற்றும் ஓர் ஆறில் ஒரு பங்கு உண்டு'' எனக் கூறினார்கள்.
பின்னர், (அவர் மறுபடியும்) திரும்பிச் சென்றார். இறைத்தூதர்(ஸல்) அவரை (மறுபடியும்) அழைத்து, ``இந்த மற்றோர் ஆறில் ஒரு பங்கு உனக்கு அதிகப்படியாகக் கிடைப்பதாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இம்ரான் இப்னு ஹுசைன்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது ஹஸன் பஸரி வாயிலாக இம்ரானிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இம்ரான்(ரலி) அவர்களிடமிருந்து ஹஸன் பஸரி(ரஹ்) ஹதீஸ் களைச் செவுயுற்றதற்கு ஆதாரமில்லை எனக் கூறப்படுகிறது.
978. وَعَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ؛ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَعَلَ لِلْجَدَّةِ السُّدُسَ، إِذَا لَمْ يَكُنْ دُونَهَا أُمٌّ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ، وَابْنُ الْجَارُودِ، وَقَوَّاهُ اِبْنُ عَدِيٍّ.
978. (இறந்தவருக்கு) தாய் இல்லை எனில் பாட்டிக்கு ஆறில் ஒரு பங்கை இறைத்தூதர்(ஸல்) உரிமையாக்கினார்கள் என புரைதரா(ரலி) தம் தந்தையிடமிருந்து அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத் மற்றும் நஸயீ
இமாம் இப்னு குஸைமா மற்றும் இமாம் இப்னுல் ஜாரூத்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இமாம் இப்னு அதீ(ரஹ்) இதனை பலமான ஹதீஸ் எனக் கூறியுள்ளார்.
979. وَعَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اَلْخَالُ وَارِثُ مَنْ لَا وَارِثَ لَهُ} أَخْرَجَهُ أَحْمَدُ، وَالْأَرْبَعَةُ سِوَى التِّرْمِذِيِّ، وَحَسَّنَهُ أَبُو زُرْعَةَ الرَّازِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ، وَالْحَاكِمُ.
979. ``வாரிசு இல்லாதவருக்கு அவரின் தாய்மாமன் வாரிசாவார்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அல் மிக்தாம் இப்னு மஃதீயக்ரப்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ மற்றும் இப்னு மாஜா
இதனை இமாம் அபூ ஸர்ஆ அர்ராஸீ(ரஹ்) `ஹஸன்' என்றும், இமாம் ஹாகிம் மற்றும் இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) ஸஹீஹ் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
980. وَعَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلٍ قَالَ: {كَتَبَ مَعِي عُمَرُ إِلَى أَبِي عُبَيْدَةَ - رَضِيَ اللهُ عَنْهُمْ- ؛ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " اللهُ وَرَسُولُهُ مَوْلَى مَنْ لَا مَوْلَى لَهُ، وَالْخَالُ وَارِثُ مَنْ لَا وَارِثَ لَهُ} رَوَاهُ أَحْمَدُ، وَالْأَرْبَعَةُ سِوَى أَبِي دَاوُدَ، وَحَسَّنَهُ التِّرْمِذِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.
980. ``பொறுப்பாளர் இல்லாதவருக்கு அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் பொறுப்பாளராவர். இன்னும் வாரிசு இல்லாதவருக்கு அவரின் தாய்மாமன் வாரிசாவார்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ உபைதா(ரலி) அவர்களுக்கு உமர்(ரலி) எழுதினார்கள் என அபூ உமாமா இப்னு ஸஹ்ல்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை `ஹஸன்' எனக் குறிப்பிட்டுள்ளார். இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
981. وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {إِذَا اِسْتَهَلَّ الْمَوْلُودُ وُرِّثَ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.
981. ``பிறந்த குழந்தை (அழுது) சத்தம் எழுப்பிவிட்டால் (அதன் பின்னர் அது இறந்துவிட்டாலும்) அது வாரிசுரிமை பெற்றதாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
982. وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَيْسَ لِلْقَاتِلِ مِنَ الْمِيرَاثِ شَيْءٌ} رَوَاهُ النَّسَائِيُّ، وَالدَّارَقُطْنِيُّ، وَقَوَّاهُ اِبْنُ عَبْدِ الْبَرِّ، وَأَعَلَّهُ النَّسَائِيُّ، وَالصَّوَابُ: وَقْفُهُ عَلَى عُمَرَ.
982. ``கொலைகாரனுக்கு (கொலை செய்யப்பட்டவனிடமிருந்து) சொத்துரிமை எதுவும் இல்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு தம் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவித்தார்.
நூல்கள்: நஸயீ மற்றும் தாரகுத்னீ
இமாம் இப்னு அப்தில் பர்(ரஹ்) இதனை பலமானது என்றும், இமாம் நஸயீ மஃலூல் எனும் குறை உள்ளது என்றும், இது `மவ்கூஃப்' எனும் தரத்தில் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
983. وَعَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: {مَا أَحْرَزَ الْوَالِدُ أَوِ الْوَلَدُ فَهُوَ لِعَصَبَتِهِ مَنْ كَانَ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ، وَابْنُ مَاجَهْ، وَصَحَّحَهُ اِبْنُ الْمَدِينِيِّ، وَابْنُ عَبْدِ الْبَرِّ.
983. ``தந்தை அல்லது பிள்ளைகள் வீட்டிற்கு எதைக் கொண்டு வந்தாலும் அதில் (வீட்டிலுள்ள) உறவினர் ஒவ்வொருவருக்கும் உரியதாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூற நான் செவியுள்றுள்ளேன் என உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ மற்றும் இப்னு மாஜா.
இமாம் இப்னுல் மதீனீ(ரஹ்) மற்றும் அப்துல் பர்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
984. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ - رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اَلْوَلَاءُ لُحْمَةٌ كَلُحْمَةِ النَّسَبِ، لَا يُبَاعُ، وَلَا يُوهَبُ} رَوَاهُ الْحَاكِمُ: مِنْ طَرِيقِ الشَّافِعِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ، عَنْ أَبِي يُوسُفَ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ، وَأَعَلَّهُ الْبَيْهَقِيُّ.
984. ``வலா எனும் உரிமையின் தொடர்பு, நெருங்கிய உறவினர்களின் தொடர்பைப் போன்றது. அது விற்கப்படவோ, அன்பளிப்பாக அளிக்கப்படவோ கூடாது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
முஹம்மத் இப்னுல் ஹஸன் அபூ யூசுஃபிடமிருந்து அஷ்ஷாஃபியீ வழியாக ஹாகிமில் இது பதிவு செய்யப் பட்டுள்ளது. இன்னும் இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார். இமாம் பைஹகீ(ரஹ்) இதனை மஃலூல் எனக் குறிப்பிட்டுள்ளார்.
985. وَعَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَفْرَضُكُمْ زَيْدُ بْنُ ثَابِتٍ} أَخْرَجَهُ أَحْمَدُ، وَالْأَرْبَعَةُ سِوَى أَبِي دَاوُدَ، وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ، وَابْنُ حِبَّانَ، وَالْحَاكِمُ، وَأُعِلَّ بِالْإِرْسَالِ.بَابُ الْوَصَايَا
985. ``உங்களில் வாரிசுரிமைச் சட்டம் குறித்து அதிகம் அறிந்தவர் ஜைது இப்னு ஸாபித் தாம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அனஸ்(ரலி) வாயிலாக அபூ கிலாபா அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இமாம் திர்மிதீ, இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும், இது முர்ஸல் எனும் தரத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
986. عَنِ ابْنِ عُمَرَ - رَضِيَ اللهُ عَنْهُمَا- ؛ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {مَا حَقُّ اِمْرِئٍ مُسْلِمٍ لَهُ شَيْءٌ يُرِيدُ أَنْ يُوصِيَ فِيهِ يَبِيتُ لَيْلَتَيْنِ إِلَّا وَوَصِيَّتُهُ مَكْتُوبَةٌ عِنْدَهُ} مُتَّفَقٌ عَلَيْهِ.
986. ``தன்னிடம் பொருள் இருந்து, அது குறித்து (வஸிய்யத்) மரண சாசனம் எழுத விரும்பிய நிலையில், அந்த மரண சாசனம் எழுதப்படாமலேயே இரண்டு இரவுகளைக் கழிப்பது எந்த ஒரு முஸ்லிமான ஆணுக்கும் சரியல்ல'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லீம்
987. وَعَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قُلْتُ: {يَا رَسُولَ اللهِ ! أَنَا ذُو مَالٍ، وَلَا يَرِثُنِي إِلَّا اِبْنَةٌ لِي وَاحِدَةٌ، أَفَأَتَصَدَّقُ بِثُلُثَيْ مَالِي؟ قَالَ: " لَا " قُلْتُ: أَفَأَتَصَدَّقُ بِشَطْرِهِ ؟ قَالَ: " لَا " قُلْتُ: أَفَأَتَصَدَّقُ بِثُلُثِهِ ؟ قَالَ: " الثُّلُثُ، وَالثُّلُثُ كَثِيرٌ، إِنَّكَ أَنْ تَذَرَ وَرَثَتَكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَذَرَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
987. ``இறைத்தூதர் அவர்களே! என்னிடம் செல்வம் உள்ளது. எனக்கு வாரிசாக என் ஒரே பெண்ணைத் தவிர வேறுயாரும் இல்லை. எனவே, நான் என் சொத்தில் மூன்றில் இரண்டு பங்கை தர்மம் செய்து விடட்டுமா?'' என நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்டேன்.
``கூடாது'' என அவர்கள் கூறினார்கள்.
பின்னர், ``அரைப் பங்கை'' என நான் கேட்டேன்.
``கூடாது'' என்றே அவர்கள் கூறினார்கள்.
பின்னர், ``மூன்றில் ஒரு பங்கை தர்மம் செய்து விடட்டுமா?'' என கேட்டேன்.
``மூன்றில் ஒரு பகுதி (சரிதான்), (இருப்பினும்) அதுவும் அதிகம்தான். உண்மையில் நீ உன் வாரிசுகளை தேவையுள்ளவராகவும், மக்களிடம் யாசிப்பவராகவும் விட்டுச் செல்வதைவிட செல்வந்தர்களாக விட்டுச் செல்வதே சிறந்ததாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என சஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்.
988. وَعَنْ عَائِشَةَ -رَضِيَ اللهُ عَنْهَا- {أَنَّ رَجُلاً أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: يَا رَسُولَ اللهِ ! إِنَّ أُمِّي اُفْتُلِتَتْ نَفْسُهَا وَلَمْ تُوصِ، وَأَظُنُّهَا لَوْ تَكَلَّمَتْ تَصَدَّقَتْ، أَفَلَهَا أَجْرٌ إِنْ تَصَدَّقْتُ عَنْهَا ؟ قَالَ: " نَعَمْ} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِمُسْلِمٍ.
988. ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ``இறைத்தூதர் அவர்களே! என் தாய் திடீர் என மரணித்துவிட்டார். மரண சாசனம் (வஸிய்யத்) எதுவும் செய்யவில்லை. அவர் (மரண சாசனமாக) ஏதாவது பேசியிருந்தால் தர்மம் செய்திருப் பார் என நான் எண்ணுகிறேன். எனவே, அவர் சார்பாக நான் தர்மம் செய்தால் அவருக்கு (அதற்கான) கூலியுண்டா?'' என கேட்டார்.
``ஆம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
989. وَعَنْ أَبِي أُمَامَةَ اَلْبَاهِلِيِّ رَضِيَ اللهُ عَنْهُ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: {إِنَّ اللهُ قَدْ أَعْطَى كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ، فَلَا وَصِيَّةَ لِوَارِثٍ} رَوَاهُ أَحْمَدُ، وَالْأَرْبَعَةُإِلَّا النَّسَائِيَّ، وَحَسَّنَهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ، وَقَوَّاهُ اِبْنُ خُزَيْمَةَ، وَابْنُ الْجَارُودِ.
989. ``உரிமையுள்ள ஒவ்வொருக்கும் அவருக்குரிய உரிமையை நிச்சயமாக அல்லாஹ் வழங்கிவிட்டான். எனவே, இனி எந்த வாரிசுக்கும் (மற்ற வாரிசைவிட அதிகப்படியாக) மரண சாசனம் எதையும் எழுதக் கூடாது என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ உமாமா அல் பாஹிலீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இமாம் அஹ்மத் மற்றும் இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ``ஹஸன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இமாம் இப்னு குஸைமா மற்றும் இப்னுல்ஜாரூத்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
990. وَرَوَاهُ الدَّارَقُطْنِيُّ مِنْ حَدِيثِ اِبْنِ عَبَّاسٍ - رَضِيَ اللهُ عَنْهُمَا-، وَزَادَ فِي آخِرِهِ: {إِلَّا أَنْ يَشَاءَ الْوَرَثَةُ} وَإِسْنَادُهُ حَسَنٌ.
990. இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாக தாரகுத்னீயின் அறிவிப்பின் இறுதியில், ``வாரிசுகள் நாடினால் தவிர'' எனும் வாசகம் அதிகப்படியாக உள்ளது. இது `ஹஸன்' எனும் தரத்தில் உள்ளது.