99. وَلِأَحْمَدَ؛ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ: {أَوْ نَقْعِ مَاءٍ} وَفِيهِمَا ضَعْفٌ.
99. ``அல்லது தண்ணீர் தேங்கும் இடங்களில்'' என்பது இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாக அஹ்மதில் உள்ளது.
மேற்கண்ட இரண்டு ஹதீஸ் களும் `ளயீஃப்' - பலவீனமானவை.
100. وَأَخْرَجَ الطَّبَرَانِيُّ النَّهْيَ عَن ْتَحْتِ الْأَشْجَارِ الْمُثْمِرَةِ، وَضَفَّةِ النَّهْرِ الْجَارِي. مِنْ حَدِيثِ اِبْنِ عُمَرَ بِسَنَدٍ ضَعِيفٍ.
100. ``கனி தரும் மரங்களுக்குக் கீழும், ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றங்கரையிலும் மலஜலம் கழிப்பதை இறைத்தூதர்(ஸல்) தடுத்தார்கள்'' என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: தப்ரானீ
இதனை இமாம் தப்ரானீ(ரஹ்) பலவீனமான அறிவிப்பாளர் தொடரில் பதிவிட்டுள்ளார்.
101. وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا تَغَوَّطَ الرَّجُلَانِ فَلْيَتَوَارَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا عَنْ صَاحِبِهِ، وَلَا يَتَحَدَّثَا. فَإِنَّ اللهُ يَمْقُتُ عَلَى ذَلِكَ} رَوَاهُ.وَصَحَّحَهُ اِبْنُ السَّكَنِ، وَابْنُ الْقَطَّانِ، وَهُوَ مَعْلُولٌ.
101. ``இரண்டு நபர்கள் மலஜலம் கழிக்கச் சென்றால், ஒருவரை ஒருவர் காணாதவாறு மறைத்துக் கொள்ளட்டும். அவர்களில் ஒருவர் மற்றொருவருடன் பேசாதிருக்கட்டும். ஏனெனில், இவ்வாறு பேசுவதால் அல்லாஹ் கோபமடைகிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார் என ஜாபிர்(ரலி)அறிவித்தார்.
நூல்: அஹ்மத்
இதனை இமாம் இப்னுஸ் ஸகன் மற்றும் இமாம் இப்னு கத்தான்(ரஹ்) ஆதாரப்பூர்வமானது எனக் கூறியுள்ளனர். ஆனால், அது மஃலூல் எனும் குறைபாடுள்ள ஹதீஸ் ஆகும்..
102. وَعَنْ أَبِي قَتَادَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا يُمْسِكَنَّ أَحَدُكُمْ ذَكَرَهُ بِيَمِينِهِ، وَهُوَ يَبُولُ، وَلَا يَتَمَسَّحْ مِنَ الْخَلَاءِ بِيَمِينِهِ، وَلَا يَتَنَفَّسْ فِي الْإِنَاءِ} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِمُسْلِمٍ.
102. ``உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது, தன் மர்ம உறுப்பைத் தன் வலக் கையால் பிடிக்க வேண்டாம். மேலும் மலஜலம் கழித்தப் பின் தன் வலக்கையால் சுத்தம் செய்ய வேண்டாம். இன்னும், (தண்ணீர் பருகும்போது) பாத்திரத்தினுள் மூச்சுவிட வேண்டாம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
103. وَعَنْ سَلْمَانَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {لَقَدْ نَهَانَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ بِغَائِطٍ أَوْ بَوْلٍ، أَوْ أَنْ نَسْتَنْجِيَ بِالْيَمِينِ، أَوْ أَنْ نَسْتَنْجِيَ بِأَقَلَّ مِنْ ثَلَاثَةِ أَحْجَارٍ، أَوْ أَنْ نَسْتَنْجِيَ بِرَجِيعٍ أَوْ عَظْمٍ"} رَوَاهُ مُسْلِمٌ.
103. நாங்கள் மலஜலம் கழிக்கும்போது கிப்லாவை முன்னோக்குவதையும் (பின்னால் ஆக்குவதையும்), வலக் கையால் (உறுப்பைப் பிடித்துக் கொண்டு) சுத்தம் செய்வதையும், மூன்று கற்களுக்கும் குறைவானதால் (மலஜலம் கழித்து விட்டு) சுத்தம் செய்வதையும், விட்டை(சாணம்) மற்றும் எலும்பால் சுத்தம் செய்வதையும் இறைத்தூதர்(ஸல்) தடை செய்துள்ளார்கள் என ஸல்மான்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
104. وَلِلسَّبْعَةِ مِنْ حَدِيثِ أَبِي أَيُّوبَ رَضِيَ اللهُ عَنْهُ {لَا تَسْتَقْبِلُوا الْقِبْلَةَ بِغَائِطٍ وَلَا بَوْلٍ، وَلَكِنْ شَرِّقُوا أَوْ غَرِّبُوا}.
104. ``மலஜலம் (வெட்டவெளியில்) கழிக்கும்போது நீங்கள் கிப்லாவை, முன்னோக்கவோ, பின்னால் ஆகக்கவோ செய்யாதீர்கள். மாறாக நீங்கள் கிழக்கிலோ, மேற்கிலோ (கஅபாவை முன்னோக்காத திசையில்) திரும்பிக் கொள்ளுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ அய்யூப்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம், அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
குறிப்பு: நம் இந்திய நாட்டிற்கு மேற்கு திசையில் கஅபதுல்லாஹ் அமைந்துள்ளது. எனவே, நாம் வெட்டவெளியில் கிழக்கு மேற்கு திசைகளை நோக்கி மலஜலம் கழித்தல் ஆகாது.
105. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا؛ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {مَنْ أَتَى الْغَائِطَ فَلْيَسْتَتِرْ} رَوَاهُ أَبُو دَاوُدَ.
105. ``மலஜலம் கழிக்கச் செல்பவர் தன்னை மறைத்துக் கொள்ளட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
106. وَعَنْهَا رَضِيَ اللهُ عَنْهَا؛ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ مِنَ الْغَائِطِ قَالَ: "غُفْرَانَكَ"} أَخْرَجَهُ الْخَمْسَةُ. وَصَحَّحَهُ أَبُو حَاتِمٍ، وَالْحَاكِمُ.
106. இறைத்தூதர்(ஸல்) மலஜலம் கழித்துவிட்டு வரும்போது, ``(யா அல்லாஹ்!) நான் உன் மன்னிப்பை வேண்டுகிறேன்'' என்று கூறுவார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ, நஸயீ மற்றும் இப்னு மாஜா.
இமாம் அபூ ஹாத்திம் மற்றும் இமாம் ஹாகிம்(ரஹ்) இருவரும் இதனை ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என அறிவித்துள்ளனர்.
107. وَعَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {أَتَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَلْغَائِطَ، فَأَمَرَنِي أَنْ آتِيَهُ بِثَلَاثَةِ أَحْجَارٍ، فَوَجَدْتُ حَجَرَيْنِ، وَلَمْ أَجِدْ ثَالِثًا. فَأَتَيْتُهُ بِرَوْثَةٍ. فَأَخَذَهُمَا وَأَلْقَى الرَّوْثَةَ، وَقَالَ: "هَذَا رِكْسٌ"} أَخْرَجَهُ الْبُخَارِيُّ.زَادَ أَحْمَدُ، وَالدَّارَقُطْنِيُّ: {ائْتِنِي بِغَيْرِهَا}.
107. இறைத்தூதர்(ஸல்) மலஜலம் கழிக்கச் சென்றபோது மூன்று கற்களைக் கொண்டு வருமாறு என்னைப் பணித்தார்கள். எனக்கு இரண்டு கற்கள் மட்டுமே கிடைத்தன. மூன்றாவது கல் கிடைக்கவில்லை. எனவே, (குதிரை கழுததை போன்றவற்றில்) காய்ந்த ஒரு விட்டைத் துண்டையும் கொண்டு வந்தேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அந்த இரண்டு கற்களையும் எடுத்துக் கொண்டு, விட்டையை எறிந்துவிட்டு, ``இது அசுத்தமானது'' என்று கூறினார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
இதனைத் தவிர்த்து வேறொன்றைக் கொண்டு வா!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அஹ்மத் மற்றும் தாரகுத்னீயில் அதிகப்படியாக உள்ளது.
108. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى "أَنْ يُسْتَنْجَى بِعَظْمٍ، أَوْ رَوْثٍ" وَقَالَ: "إِنَّهُمَا لَا يُطَهِّرَانِ"} رَوَاهُ الدَّارَقُطْنِيُّ وَصَحَّحَهُ.
108. எலும்பு மற்றும் விட்டையால் (மலஜலம் கழித்து விட்டு) சுத்தம் செய்வதை இறைத்தூதர்(ஸல்) தடுத்துள்ளார்கள். மேலும், ``நிச்சயமாக அவை இரண்டும் தூய்மைப்படுத்தாது'' என்று கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: தார குத்னீ
இமாம் தார குத்னீ(ரஹ்) இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எனக் கூறியுள்ளார்.
109. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اِسْتَنْزِهُوا مِنَ الْبَوْلِ، فَإِنَّ عَامَّةَ عَذَابِ الْقَبْرِ مِنْهُ} رَوَاهُ الدَّارَقُطْنِيُّ.
109. ``சிறுநீர் கழித்து விட்டு சுத்தம் செய்யாமல் இருப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், மண்ணறை வேதனைகளில் பெரும்பாலனவை அதன் காரணத்தால்தான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: தார குத்னீ.
110. وَلِلْحَاكِمِ: {أَكْثَرُ عَذَابِ الْقَبْرِ مِنَ الْبَوْلِ} وَهُوَ صَحِيحُ الْإِسْنَادِ.
110. ``மண்ணறையில் கிடைக்கும் தண்டனைகளில் பெரும்பாலனவை சிறுநீர் (கழித்து சுத்தம் செய்யாத) காரணத்தால்தான் ஏற்படுகின்றன'' எனும் வாசகத்தோடு `ஸஹீஹ்' எனும் தரத்தில் ஹாகிமில் உள்ளது.
இதன் அறிவிப்பாளர் தொடர் ஆதாரப்பூர்வமானது.
111. وَعَنْ سُرَاقَةَ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {عَلَّمْنَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْخَلَاءِ: " أَنَّ نَقْعُدَ عَلَى الْيُسْرَى، وَنَنْصِبَ الْيُمْنَى"} رَوَاهُ الْبَيْهَقِيُّ بِسَنَدٍ ضَعِيفٍ.
111. ``நாங்கள் மலம் கழிக்கையில் இடக்காலில் அமர்ந்து கொண்டு, வலக் காலை நிற்க வைக்குமாறு இறைத்தூதர்(ஸல்) எங்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள்'' சுராக்கா இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நூல்: பைஹகீ
இமாம் பைஹகீ(ரஹ்) பலவீனமான அறிவிப்பாளர் தொடரில் இதனைப் பதிவிட்டுளளார்.
112. وَعَنْ عِيسَى بْنِ يَزْدَادَ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا بَالَ أَحَدُكُمْ فَلْيَنْثُرْ ذَكَرَهُ ثَلَاثَ مَرَّاتٍ} رَوَاهُ اِبْنُ مَاجَه بِسَنَدٍ ضَعِيفٍ.
112. ``உங்களில் ஒருவர் சிறுநீர் கழித்தால், அவர் தன் உறுப்பை (இடக் கையால்) மும்முறை அழுத்தவும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஈஸா இப்னு யஸ்தாத் தன் தந்தையிடமிருந்து அறிவித்தார்.
நூல்: இப்னு மாஜா
இமாம் இப்னு மாஜா(ரஹ்) இதனை பலவீனமான அறிவிப்பாளர் தொடரில் பதிவிட்டுள்ளார்.
113. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلَ أَهْلَ قُبَاءٍ، فَقَالُوا: إِنَّا نُتْبِعُ الْحِجَارَةَ الْمَاءَ} رَوَاهُ الْبَزَّارُ بِسَنَدٍ ضَعِيفٍ. وَأَصْلُهُ فِي أَبِي دَاوُدَ، وَالتِّرْمِذِيُّ
113. ``அல்லாஹ் உங்களைப் புகழ்கிறானே (என்ன காரணம்?)'' என குபா வாசிகளிடம் இறைத்தூதர்(ஸல்) கேட்டார்கள்.
``நாங்கள் (மலஜலம் கழித்துவிட்டு) கல்லால் சுத்தம் செய்தப் பின்னர் தண்ணீராலும் சுத்தம் செய்கிறோம்'' என்று பதிலளித்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இது பஜ்ஜாரில் பலவீனமான தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இது அபூ தாவூதிலும் உள்ளது.
114. وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ مِنْ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ بِدُونِ ذِكْرِ الْحِجَارَةِ.بَابُ الْغُسْلِ وَحُكْمِ الْجُنُبِ
114. மேற்கண்ட நபிமொழியில் கல்லைப் பற்றி குறிப்பிடாமல், அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் இப்னு குஸைமாவில் பதிவிடப்பட்டுள்ளது.
இதனை இமாம் இப்னு குஸைமா(ரஹ்) ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
115. عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {اَلْمَاءُ مِنَ الْمَاءِ} رَوَاهُ مُسْلِمٌ. وَأَصْلُهُ فِي الْبُخَارِيِّ.
115. ``விந்து வெளியாவதால் குளிப்பு கடமையாகிறது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
குறிப்பு: பாலுறவு கொண்டு விந்துவெளிப்படாவிட்டால் குறிப்புக் கடமை இல்லை என இந்த ஹதீஸ் தெரிவிக்கிறது. ஆனால், இச்சட்டம் பின்னர் மாற்றப்பட்டதைப் பின்வரும் ஹதீஸில் காண்க!
116. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا جَلَسَ بَيْنَ شُعَبِهَا الْأَرْبَعِ، ثُمَّ جَهَدَهَا، فَقَدْ وَجَبَ الْغُسْلُ} مُتَّفَقٌ عَلَيْهِ.
116. ``உங்களில் ஒருவர், அவளின் நான்கு கிளைகளுக்கு (உங்கள் மனைவியரின் இரண்டு கைகள், இரண்டு கால்களான) இடையில் அமர்ந்து, பின்னர் இயங்கினால் (விந்துவெளிப்படாவிட்டாலும்) அவர் மீது குளிப்பு கடமையாகி விடுகிறது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
117. زَادَ مُسْلِمٌ: "وَإِنْ لَمْ يُنْزِلْ ".
117. ``நீர் (விந்து) வெளிப்படாவிட்டாலும்'' எனும் வாசகம் முஸ்லிமில் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
118. وَعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ -فِي الْمَرْأَةِ تَرَى فِي مَنَامِهَا مَا يَرَى الرَّجُلُ- قَالَ: "تَغْتَسِلُ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
118. ஆண்கள் கனவில் (தூக்கத்தில் விந்து வெளிப்பட்டதை) காண்பதைப் போன்றே, பெண்கள் தங்கள் கனவில் (தூக்கத்தில் வெளிப்பட்டதை) காண்பது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டதற்கு, ``அவள் குளிக்க வேண்டும்'' என்று கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்