பக்கம் - 147 -
நான் ஒருமுறை பள்ளிக்குச் சென்றபோது கஅபா அருகே நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அருகில் நானும் சென்று நின்று கொண்டேன். அவர்களது சில பேச்சை நான் கேட்டே ஆகவேண்டுமென்று அல்லாஹ் நாடிவிட்டான் போலும். அவர்களிடமிருந்து மிக அழகிய பேச்சைக் கேட்ட நான், எனக்குள் “எனது தாய் என்னை இழக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் திறமைமிக்க புத்திசாலியான கவிஞன். நல்லது எது? கெட்டது எது? என்று எனக்கு மிகத் தெளிவாகவே தெரியும். அப்படியிருக்க அவர் கூறுவதைக் கேட்காமல் இருக்க எது என்னைத் தடை செய்ய முடியும்? அவர் நன்மையைக் கூறினால் நான் ஏற்றுக் கொள்வேன். அவர் கெட்டதைக் கூறினால் நான் விட்டுவிடுவேன்” என்று மனதிற்குள் சமாதானம் கூறிக் கொண்டேன்.

சிறிது நேரத்திற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் வீட்டிற்கு சென்றவுடன் நானும் அவர்களது வீட்டிற்குச் சென்றேன். நான் இந்த ஊருக்கு வந்தது, மக்கள் என்னிடம் எச்சரித்தது, காதில் துணியை வைத்து அடைத்துக் கொண்டது, பிறகு குர்ஆன் ஓதியதைக் கேட்டது என அனைத்துச் செய்திகளையும் விரிவாகக் கூறி, உங்கள் மார்க்கத்தைப் பற்றி எனக்கு எடுத்துக் கூறுங்கள். மேலும், நீங்கள் எனக்கு இஸ்லாமைப் பற்றி விளக்குங்கள் எனக் கூறினேன். அவர்கள் எனக்கு இஸ்லாமைப் பற்றி விளக்கி குர்ஆனையும் ஓதிக் காட்டினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டியதை விட அழகானதையோ, நீதமானதையோ நான் கேட்டதில்லை. உடனே நான் இஸ்லாமை ஏற்றுக் கொண்டேன். மேலும், “நபியே எனக்கு எனது கூட்டம் கட்டுப்படுவார்கள். நான் அவர்களிடம் சென்று அவர்களை இஸ்லாமின் பக்கம் அழைப்பேன். எனவே, அல்லாஹ் எனக்கு ஒரு அத்தாட்சியைத் தரவேண்டும் என துஆ செய்யுங்கள்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் எனக்காக பிரார்த்தனையும் செய்தார்கள். பிறகு நான் மக்காவிலிருந்து புறப்பட்டேன்.

நான் எனது கூட்டத்தாருக்கு அருகாமையில் சென்றபோது, அல்லாஹ் எனது முகத்தில் விளக்கைப் போன்று ஒரு வெளிச்சத்தை ஏற்படுத்தினான். நான் “அல்லாஹ்வே! எனக்கு வேறு ஓர் இடத்தில் இதை ஏற்படுத்துவாயாக! மக்கள் இதைப் பார்த்து இது தண்டனையால் ஏற்பட்டது என்று கூறிவிடுவார்கள் என நான் பயப்படுகிறேன்” என்று வேண்டியவுடன் அந்த ஒளி எனது கைத்தடிக்கு மாறிவிட்டது. நான் எனது தந்தையையும், எனது மனைவியையும் இஸ்லாமின் பக்கம் அழைக்கவே அவர்கள் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்கள். சிறிது தாமதித்த எனது கூட்டத்தாரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்கள்.

இவர் கந்தக் யுத்தம் (அகழ் போர்) நடந்து முடிந்தபின் தங்களது கூட்டத்தால் எழுபது அல்லது எண்பது குடும்பங்களுடன் மதீனாவிற்கு ஹிஜ்ரா செய்து வந்தார். இஸ்லாமிற்காக மாபெரும் தியாகங்களைச் செய்த அன்னார் யமாமா போரில் எதிரிகளால் கௌ;ளப்பட்டார். (இப்னு ஹிஷாம்)

5) ழிமாத் அஸ்தீ: இவர் யமனிலுள்ள அஜ்து ஷனாஆ கிளையைச் சேர்ந்தவர். இவர் மந்திரித்துப் பார்க்கும் பழக்கம் உள்ளவராக இருந்தார். இவர் மக்காவிற்கு வந்தபோது அங்குள்ள மூடர்கள் “முஹம்மது பைத்தியக்காரர்” என்று கூறக் கேட்கவே நான் அவரைச் சந்தித்து அவருக்கு மந்தித்தால் அல்லாஹ் என் கையால் அவருக்கு சுகமளிக்கலாம் என்று தனக்குள் கூறிக்கொண்டு நபி (ஸல்) அவர்களை சந்தித்தார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் “முஹம்மதே! நான் ஷைத்தானின் சேட்டைகளிலிருந்து மந்திப்பவன். உனக்கு மந்தித்துப் பார்க்கவா?” என்று கேட்கவே, நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: