மஆரிப் அணைக்கட்டு
ஏமன் நாட்டை சேர்ந்த மஆரிப் என்ற ஊருக்கு அருகில் சபவு கோத்திரத்தார் வாழ்ந்து வந்தார்கள்.
அவர்களது ராணியான துப்பவு பரம்பரையில் வந்த பல்கீஸ் ராணியின் தலைமையில் சூரியனை வணங்கி
வந்தனர்.
![]() சபவு கூட்டத்தார் வாழ்ந்த வீடுகள் |
நிச்சயமாக ஸபா நாட்டினருக்கு, அவர்கள் வசித்திருந்த இடங்களில் ஓர் அத்தாட்சி
இருந்தது. (அதன்) வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இரண்டு சோலைகள் இருந்தன. “உங்கள்
இறைவன் அளித்துள்ள ஆகாரத்திலிருந்து புசியுங்கள்; அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள்.
(அது மணமுள்ள) வளமான நகரம்; இன்னும் (அவன்) மன்னிப்பளிக்கும் இறைவன்” (என்று அவர்களுக்குக்
கூறப்பட்டது).
ஆனால் அவர்கள் (இப்போதனையைப்) புறக்கணித்தார்கள்; ஆகவே, அல் அரிம் (என்னும் பெரும்
அணையை உடைக்கும்) கடும் பிரவாகத்தை அவர்கள் மீது அனுப்பினோம், இன்னும் (சுவை மிக்க
கனிகளைக் கொண்ட) அவர்களுடைய இரு தோப்புகளை கசப்பும் புளிப்புமுள்ள பழங்களுடைய மரங்களும்,
சில இலந்தை மரங்களும் உடைய இரு தோட்டங்களாக மாற்றினோம்.
அவர்கள் நிராகரித்ததின் காரணமாக அவர்களுக்கு இக்கூலியை, நாம் கொடுத்தோம். (நன்றி மறந்து)
நிராகரித்தோருக்கன்றி வேறெவருக்கும் நாம் (இத்தகைய) கூலியைக் கொடுப்போமா? அல்குர்ஆன்
34:15-17
![]() உடைந்து போன அணைகட்டின் சிதிலங்கள் |
உடைந்து போன பழைய அணைக்கட்டிற்க்கு சிறிது உயரத்தில் ஐக்கிய அரபு நாடுகளின் தலைவரால் கட்டப்பட்ட அணை இப்பொழுது தண்ணீரை தேக்கி வைக்கப் பயன்படுகிறது.