83. ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் (அளவு நிறுவையில் மோசம் செய்தல்)
மக்கீ, வசனங்கள்: 36

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
83:1
83:1 وَيْلٌ لِّلْمُطَفِّفِيْنَۙ‏
83:1. அளவிலும், எடையிலும் குறைவு செய்பவர்களுக்குக் கேடுதான்.
83:2
83:2 الَّذِيْنَ اِذَا اكْتَالُوْا عَلَى النَّاسِ يَسْتَوْفُوْنَۖ‏
83:2. அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும்போது நிறைவாக (அளந்து) வாங்குகின்றனர்.
83:3
83:3 وَاِذَا كَالُوْهُمْ اَوْ وَّزَنُوْهُمْ يُخْسِرُوْنَؕ‏
83:3. (ஆனால்,) தாங்கள் அவர்களுக்கு அளந்து, அல்லது அவர்களுக்கு நிறுத்துக் கொடுக்கும்போது குறைக்கிறார்கள்.
83:4
83:4 اَلَا يَظُنُّ اُولٰٓٮِٕكَ اَنَّهُمْ مَّبْعُوْثُوْنَۙ‏
83:4. நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்கள் என்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா?
83:5
83:5 لِيَوْمٍ عَظِيْمٍۙ‏
83:5. மகத்தான ஒரு நாளுக்காக,
83:6
83:6 يَّوْمَ يَقُوْمُ النَّاسُ لِرَبِّ الْعٰلَمِيْنَؕ‏
83:6. அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள்.
83:7
83:7 كَلَّاۤ اِنَّ كِتٰبَ الْفُجَّارِ لَفِىْ سِجِّيْنٍؕ‏
83:7. அல்ல! நிச்சயமாக தீயோர்களின் பதிவேடு ஸிஜ்ஜீனில் இருக்கிறது.
83:8
83:8 وَمَاۤ اَدْرٰٮكَ مَا سِجِّيْنٌؕ‏
83:8. ஸிஜ்ஜீன் என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?
83:9
83:9 كِتٰبٌ مَّرْقُوْمٌؕ‏
83:9. (அது செயல்கள்) எழுதப்பட்ட ஏடாகும்.
83:10
83:10 وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَۙ‏
83:10. பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
83:11
83:11 الَّذِيْنَ يُكَذِّبُوْنَ بِيَوْمِ الدِّيْنِؕ‏
83:11. அவர்கள் எத்தகையோரென்றால், நியாயத்தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள்.
83:12
83:12 وَمَا يُكَذِّبُ بِهٖۤ اِلَّا كُلُّ مُعْتَدٍ اَثِيْمٍۙ‏
83:12. வரம்பு மீறிய பெரும்பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார்.
83:13
83:13 اِذَا تُتْلٰى عَلَيْهِ اٰيٰتُنَا قَالَ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَؕ‏
83:13. நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், "அவை முன்னோர்களின் கட்டுக்கதைகளே" என்று கூறுகின்றான்.
83:14
83:14 كَلَّا ٚ ‌ بَلْ رَانَ عَلٰى قُلُوْبِهِمْ مَّا كَانُوْا يَكْسِبُوْنَ‏
83:14. அப்படியல்ல! மாறாக, அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இதயங்கள் மீது துருவாகப் படிந்துவிட்டன.
83:15
83:15 كَلَّاۤ اِنَّهُمْ عَنْ رَّبِّهِمْ يَوْمَٮِٕذٍ لَّمَحْجُوْبُوْنَ‌ؕ‏
83:15. அப்படியல்ல! (தீர்ப்புக்குரிய) அந்நாளில் அவர்கள் தங்கள் இறைவனை விட்டும் திரையிடப்பட்டவர்களாவார்கள்.
83:16
83:16 ثُمَّ اِنَّهُمْ لَصَالُوا الْجَحِيْمِؕ‏
83:16. பின்னர், நிச்சயமாக அவர்கள் நரகில் புகுவார்கள்.
83:17
83:17 ثُمَّ يُقَالُ هٰذَا الَّذِىْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَؕ‏
83:17. "எதை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டு இருந்தீர்களோ, அதுதான் இது" என்று பின் அவர்களுக்குச் சொல்லப்படும்.
83:18
83:18 كَلَّاۤ اِنَّ كِتٰبَ الْاَبْرَارِ لَفِىْ عِلِّيِّيْنَؕ‏
83:18. அப்படியல்ல! நிச்சயமாக நல்லோர்களின் பதிவேடு இல்லிய்யூனில் இருக்கிறது.
83:19
83:19 وَمَاۤ اَدْرٰٮكَ مَا عِلِّيُّوْنَؕ‏
83:19. 'இல்லிய்யூன்' என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?
83:20
83:20 كِتٰبٌ مَّرْقُوْمٌۙ‏
83:20. (அது செயல்கள்) எழுதப்பட்ட ஏடாகும்.
83:21
83:21 يَّشْهَدُهُ الْمُقَرَّبُوْنَؕ‏
83:21. (அல்லாஹ்விடம்) நெருங்கிய (கண்ணியம் மிக்க வான)வர்கள் அதைப் பார்ப்பார்கள்.
83:22
83:22 اِنَّ الْاَبْرَارَ لَفِىْ نَعِيْمٍۙ‏
83:22. நிச்சயமாக நல்லவர்கள் சுகபோகத்தில் இருப்பார்கள்.
83:23
83:23 عَلَى الْاَرَآٮِٕكِ يَنْظُرُوْنَۙ‏
83:23. ஆசனங்களின் மீதிருந்து (சுவர்க்கக் காட்சிகளையும்) பார்ப்பார்கள்.
83:24
83:24 تَعْرِفُ فِىْ وُجُوْهِهِمْ نَضْرَةَ النَّعِيْمِ‌ۚ‏
83:24. அவர்களுடைய முகங்களில் சுகபோகத்தின் செழிப்பை நீர் அறிவீர்.
83:25
83:25 يُسْقَوْنَ مِنْ رَّحِيْقٍ مَّخْتُوْمٍۙ‏
83:25. (பரிசுத்த) முத்திரையிடப்பட்ட தெளிவான மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள்.
83:26
83:26 خِتٰمُهٗ مِسْكٌ ‌ؕ وَفِىْ ذٰلِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُوْنَ‏
83:26. அதன் முத்திரை கஸ்தூரியாகும்; எனவே, அதற்காக முந்திக்கொள்பவர்கள், முந்திக்கொள்ளட்டும்.
83:27
83:27 وَ مِزَاجُهٗ مِنْ تَسْنِيْمٍۙ‏
83:27. இன்னும், அதனுடைய கலவை (உயரத்திலிருந்து ஊற்றப்படும் சிறந்த நீரூற்றான) தஸ்னீமில் இருந்துள்ளதாகும்.
83:28
83:28 عَيْنًا يَّشْرَبُ بِهَا الْمُقَرَّبُوْنَؕ‏
83:28. அது (தஸ்னீம், ஓர் இனிய) நீர்ச்சுனை; அதிலிருந்து நெருங்கியவர்கள் அருந்துவார்கள்.
83:29
83:29 اِنَّ الَّذِيْنَ اَجْرَمُوْا كَانُوْا مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا يَضْحَكُوْنَ  ۖ‏
83:29. நிச்சயமாக, குற்றமிழைத்தவர்களே அவர்கள், நம்பிக்கை கொண்டவர்களைப் பார்த்து (உலகில்) சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
83:30
83:30 وَاِذَا مَرُّوْا بِهِمْ يَتَغَامَزُوْنَ  ۖ‏
83:30. அன்றியும், அவர்கள் அண்மையில் சென்றால், (ஏளனமாக) ஒருவருக்கொருவர் கண்சாடை செய்துகொள்வார்கள்.
83:31
83:31 وَاِذَا انْقَلَبُوْۤا اِلٰٓى اَهْلِهِمُ انْقَلَبُوْا فَكِهِيْنَ  ۖ‏
83:31. இன்னும், அவர்கள் தம் குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்றாலும், (தாங்கள் செய்தது பற்றி) மகிழ்வுடனேயே திரும்பிச் செல்வார்கள்.
83:32
83:32 وَاِذَا رَاَوْهُمْ قَالُوْۤا اِنَّ هٰٓؤُلَاۤءِ لَـضَآلُّوْنَۙ‏
83:32. மேலும், (நம்பிக்கையாளர்களாகிய) அவர்களை இவர்கள் பார்த்தால், "நிச்சயமாக இவர்களே வழி தவறியவர்கள்" என்றும் கூறுவார்கள்.
83:33
83:33 وَمَاۤ اُرْسِلُوْا عَلَيْهِمْ حٰفِظِيْنَۙ‏
83:33. (நம்பிக்கையாளர்களின் மீது) அவர்கள் பாதுகாவலர்களாக அனுப்பப்படவில்லையே!
83:34
83:34 فَالْيَوْمَ الَّذِيْنَ اٰمَنُوْا مِنَ الْكُفَّارِ يَضْحَكُوْنَۙ‏
83:34. ஆனால், (மறுமை நாளான) இன்று நம்பிக்கை கொண்டவர்கள் அந்நிராகரிப்பாளர்களைப் பார்த்துச் சிரிப்பார்கள்.
83:35
83:35 عَلَى الْاَرَآٮِٕكِۙ يَنْظُرُوْنَؕ‏
83:35. ஆசனங்களின் மீதிருந்து (அவர்கள் நிலையைப்) பார்ப்பார்கள்.
83:36
83:36 هَلْ ثُوِّبَ الْكُفَّارُ مَا كَانُوْا يَفْعَلُوْنَ
83:36. நிராகரிப்பாளர்களுக்கு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்குத் தக்க கூலி கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்கப்படும்)