டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம் 84. ஸூரத்துல் இன்ஷிகாக்(பிளந்து போதல்)
மக்கீ, வசனங்கள்: 25
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
84:1 اِذَا السَّمَآءُ انْشَقَّتْۙ
اِذَا போது السَّمَآءُ வானம் انْشَقَّتْۙ பிளந்துவிடும்
84:1. இதஸ் ஸமா'உன் ஷக்கத்
84:1. வானம் பிளந்துவிடும் போது-
84:2 وَاَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْۙ
وَاَذِنَتْ இன்னும் அது செவிசாய்த்தது لِرَبِّهَا தன் இறைவனுக்கு وَحُقَّتْۙ இன்னும் கீழ்ப்படிந்தது
84:2. வ அதினத் லி ரBப்Bபிஹா வ ஹுக்கத்
84:2. தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த வானம்) அடிபணியும் போது-
84:3 وَاِذَا الْاَرْضُ مُدَّتْؕ
وَاِذَا இன்னும் போது الْاَرْضُ பூமி مُدَّتْؕ விரிக்கப்படும்
84:3. வ இதல் அர்ளு முத்தத்
84:3. இன்னும், பூமி விரிக்கப்பட்டு,
84:4 وَاَلْقَتْ مَا فِيْهَا وَتَخَلَّتْۙ
وَاَلْقَتْ இன்னும் எரிந்து(விடும்) مَا فِيْهَا தன்னில் உள்ளவற்றை وَتَخَلَّتْۙ இன்னும் காலியாகிவிடும்
84:4. வ அல்கத் மா Fபீஹா வ தகல்லத்
84:4. அது, தன்னிலுள்ளவற்றை வெளியாக்கி, அது காலியாகி விடும் போது-
84:5 وَاَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْؕ
وَاَذِنَتْ இன்னும் அது செவிசாய்த்து لِرَبِّهَا தன் இறைவனுக்கு وَحُقَّتْؕ இன்னும் கீழ்படிந்து
84:5. வ அதினத் லி ரBப்Bபிஹா வ ஹுக்கத்
84:5. தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த பூமி) அடிபணியும்போது.
84:6 يٰۤاَيُّهَا الْاِنْسَانُ اِنَّكَ كَادِحٌ اِلٰى رَبِّكَ كَدْحًا فَمُلٰقِيْهِۚ
يٰۤاَيُّهَا الْاِنْسَانُ மனிதனே! اِنَّكَ நிச்சயமாக நீ كَادِحٌ சிரமத்தோடு முயற்சிப்பவன் اِلٰى பக்கம் رَبِّكَ உன் இறைவன் كَدْحًا சிரமத்தோடு முயற்சித்தல் فَمُلٰقِيْهِۚ அடுத்து நீ அவனை சந்திப்பாய்
84:6. யா அய்யுஹல் இன்ஸானு இன்னக காதிஹுன் இலா ரBப்Bபிக கத் ஹன் Fபமுலாகீஹ்
84:6. மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக உழைக்கின்றாய் - பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய்.
84:7 فَاَمَّا مَنْ اُوْتِىَ كِتٰبَهٗ بِيَمِيْنِهٖۙ
فَاَمَّا مَنْ ஆகவே, யார் اُوْتِىَ கொடுக்கப்பட்டாரோ كِتٰبَهٗ தன் பதிவேடு بِيَمِيْنِهٖۙ தன் வலக்கரத்தில்
84:7. Fப அம்மா மன் ஊதிய கிதாBபஹூ Bபியமீனிஹ்
84:7. ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப்படுகின்றதோ,
84:8 فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَّسِيْرًا ۙ
فَسَوْفَ يُحَاسَبُ அவர் கணக்குக் கேட்கப்படுவார் حِسَابًا கணக்கு يَّسِيْرًا ۙ இலகுவாகவே
84:8. Fபஸவ்Fப யுஹாஸBப் ஹிஸாBப(ன்)ய் யஸீரா
84:8. அவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான்.
84:9 وَّيَنْقَلِبُ اِلٰٓى اَهْلِهٖ مَسْرُوْرًا ؕ
وَّيَنْقَلِبُ இன்னும் திரும்புவார் اِلٰٓى பக்கம் اَهْلِهٖ தன் குடும்பத்தார் مَسْرُوْرًا ؕ மகிழ்ச்சியானவராக
84:9. வ யன்கலிBபு இலா அஹ்லிஹீ மஸ்ரூரா
84:9. இன்னும், தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான்.
84:10 وَاَمَّا مَنْ اُوْتِىَ كِتٰبَهٗ وَرَآءَ ظَهْرِهٖۙ
وَاَمَّا مَنْ இன்னும் ஆக, யார்? اُوْتِىَ கொடுக்கப்பட்டானோ كِتٰبَهٗ தன் பதிவேடு وَرَآءَ பின்னால் ظَهْرِهٖۙ தன் முதுகுக்கு
84:10. வ அம்மா மன் ஊதிய கிதாBபஹூ வரா'அ ளஹ்ரிஹ்
84:10. ஆனால், எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றதோ-
84:11 فَسَوْفَ يَدْعُوْا ثُبُوْرًا ۙ
فَسَوْفَ يَدْعُوْا அவன் கூவுவான் ثُبُوْرًا ۙ நாசமே
84:11. Fபஸவ்Fப யத்'ஊ துBபூரா
84:11. அவன் (தனக்குக்) “கேடு” தான் எனக் கூவியவனாக-
84:12 وَّيَصْلٰى سَعِيْرًا ؕ
وَّيَصْلٰى இன்னும் பொசுங்குவான் سَعِيْرًا ؕ சயீர் என்ற நரகத்தில்
84:12. வ யஸ்லா ஸ'ஈரா
84:12. அவன் நரகத்தில் புகுவான்.
84:13 اِنَّهٗ كَانَ فِىْۤ اَهْلِهٖ مَسْرُوْرًا ؕ
اِنَّهٗ நிச்சயமாக அவன் كَانَ இருந்தான் فِىْۤ اَهْلِهٖ தன் குடும்பத்தில் مَسْرُوْرًا ؕ மகிழ்ச்சியானவனாக
84:13. இன்னஹூ கான Fபீ அஹ்லிஹீ மஸ்ரூரா
84:13. நிச்சயமாக அவன் (இம்மையில்) தன்னைச் சார்ந்தோருடன் மகிழ்வோடு இருந்தான்.
84:14 اِنَّهٗ ظَنَّ اَنْ لَّنْ يَّحُوْرَ ۛۚ
اِنَّهٗ நிச்சயமாக அவன் ظَنَّ எண்ணினான் اَنْ لَّنْ يَّحُوْرَ ۛۚ திரும்பிவரவே மாட்டான் என
84:14. இன்னஹூ ளன்ன அன் ல(ன்)ய் யஹூர்
84:14. நிச்சயமாக, தான் (இறைவன் பால்) “மீளவே மாட்டேன்” என்று எண்ணியிருந்தான்.
84:15 بَلٰٓى ۛۚ اِنَّ رَبَّهٗ كَانَ بِهٖ بَصِيْرًا ؕ
بَلٰٓى ۛۚ ஏனில்லை اِنَّ நிச்சயமாக رَبَّهٗ அவனுடைய இறைவன் كَانَ இருக்கிறான் بِهٖ அவனை بَصِيْرًا ؕ உற்றுநோக்குபவனாக
84:15. Bபலா இன்ன ரBப்Bபஹூ கான Bபிஹீ Bபஸீரா
84:15. அப்படியல்ல; நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனைக் கவனித்து நோக்குகிறவனாகவே இருந்தான்.
84:16 فَلَاۤ اُقْسِمُ بِالشَّفَقِۙ
فَلَاۤ اُقْسِمُ ஆகவே சத்தியமிடுகிறேன் بِالشَّفَقِۙ செம்மேகத்தின்மேல்
84:16. Fபலா உக்ஸிமு Bபிஷ்ஷFபக்
84:16. இன்னும், அந்திச் செவ்வானத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
84:17 وَالَّيْلِ وَمَا وَسَقَۙ
وَالَّيْلِ இரவின் மீது சத்தியமாக وَمَا وَسَقَۙ ஒன்று சேர்த்தவை மீது சத்தியமாக
84:17. வல்லய்லி வமா வஸக்
84:17. மேலும், இரவின் மீதும், அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும்,
84:18 وَالْقَمَرِ اِذَا اتَّسَقَۙ
وَالْقَمَرِ சந்திரன் மீது சத்தியமாக اِذَا اتَّسَقَۙ அது முழுமையடையும் போது
84:18. வல்கமரி இதத் தஸக்
84:18. பூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்).
84:19 لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍؕ
لَتَرْكَبُنَّ நிச்சயமாக பயணிக்கிறீர்கள் طَبَقًا ஒரு நிலைக்கு عَنْ طَبَقٍؕ ஒரு நிலையிலிருந்து
84:19. லதர்கBபுன்ன தBபகன் 'அன் தBபக்
84:19. நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள்.
84:20 فَمَا لَهُمْ لَا يُؤْمِنُوْنَۙ
فَمَا ஆகவே என்ன لَهُمْ அவர்களுக்கு لَا يُؤْمِنُوْنَۙ அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை
84:20. Fபமா லஹும் லா யு'மினூன்
84:20. எனவே, அவர்களுக்கு என்ன (நேர்ந்தது?) அவர்கள் ஈமான் கொள்ளவதில்லை.
84:21 وَاِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْاٰنُ لَا يَسْجُدُوْنَ ؕ ۩
وَاِذَا قُرِئَ இன்னும் ஓதப்பட்டால் عَلَيْهِمُ அவர்கள் மீது الْقُرْاٰنُ அல்குர்ஆன் لَا يَسْجُدُوْنَ ؕ ۩ அவர்கள் சிரம் பணிவதில்லை
84:21. வ இதா குரி'அ 'அலய்ஹிமுல் குர்'ஆனு லா யஸ்ஜுதூன்
84:21. மேலும், அவர்களிடத்தில் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள் ஸுஜூது செய்வதில்லை.
84:22 بَلِ الَّذِيْنَ كَفَرُوْا يُكَذِّبُوْنَ ۖ
بَلِ மாறாக الَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பாளர்கள் يُكَذِّبُوْنَ ۖ பொய்ப்பிக்கின்றனர்
84:22. Bபலில் லதீன கFபரூ யுகத்திBபூன்
84:22. அன்றியும் நிராகரிப்பவர்கள் அதைப் பொய்ப்பிக்கின்றனர்.
84:23 وَاللّٰهُ اَعْلَمُ بِمَا يُوْعُوْنَ ۖ
وَاللّٰهُ அல்லாஹ் اَعْلَمُ மிக அறிந்தவன் بِمَا يُوْعُوْنَ ۖ அவர்கள் சேகரிப்பதை
84:23. வல்லாஹு அஃலமு Bபிமா யூ'ஊன்
84:23. ஆனால் அல்லாஹ், அவர்கள் (தங்களுக்குள்ளே சேகரித்து) மறைத்து வைத்திருப்பவற்றை நன்கு அறிந்திருக்கின்றான்.
84:24 فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِيْمٍۙ
فَبَشِّرْ ஆகவே நற்செய்தி கூறுவீராக هُمْ அவர்களுக்கு بِعَذَابٍ வேதனையைக் கொண்டு اَلِيْمٍۙ துன்புறுத்தும்
84:24. FபBபஷ்ஷிர்ஹும் Bபி'அதாBபின் அலீம்
84:24. (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயங் கூறுவீராக.
84:25 اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ اَجْرٌ غَيْرُ مَمْنُوْنٍ
اِلَّا தவிர الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்கள் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நற்செயல்கள் لَهُمْ அவர்களுக்கு اَجْرٌ நன்மை (கூலி) غَيْرُ مَمْنُوْنٍ முடிவுறாத
84:25. இல்லல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லஹும் அஜ்ருன் கய்ரு மம்னூன்
84:25. எவர்கள் ஈமான்கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - அவர்களுக்கு முடிவேயில்லாத நற்கூலி உண்டு.