84. ஸூரத்துல் இன்ஷிகாக்(பிளந்து போதல்)
மக்கீ, வசனங்கள்: 25
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்
84:1 اِذَا السَّمَآءُ انْشَقَّتْۙ
اِذَا போது السَّمَآءُ வானம் انْشَقَّتْۙ பிளந்துவிடும்
84:1. வானம் பிளந்துவிடும் போது-
84:1. (உலகம் அழியும் சமயத்தில்) வானம் பிளந்து விடும்போது,
84:1. வானம் பிளக்கின்றபோது
84:1. வானம் பிளந்து விடும்போது-
84:2 وَاَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْۙ
وَاَذِنَتْ இன்னும் அது செவிசாய்த்தது لِرَبِّهَا தன் இறைவனுக்கு وَحُقَّتْۙ இன்னும் கீழ்ப்படிந்தது
84:2. தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த வானம்) அடிபணியும் போது-
84:2. அது தன் இறைவனின் கட்டளைக்கு செவிசாய்த்துவிடும் போது. (அவ்வாறே) அதற்கு விதிக்கப்பட்டுள்ளது.
84:2. மேலும், அது தன்னுடைய அதிபதியின் கட்டளையை செயல்படுத்தும்போது, இது(தன் அதிபதியின் கட்டளைக்கு முழுமையாகப் பணிவது)தான் அதற்கு ஏற்றதாகும்.
84:2. அது (பிளந்து விடவேண்டுமெனும்) தன் இரட்சகனின் கட்டளைக்குச் செவிசாய்த்தும் விட்டது; (அவ்வாறு செவி சாய்ப்பது) அதற்குக் கடமையாகவும் ஆக்கப்பட்டுவிட்டது.
84:3 وَاِذَا الْاَرْضُ مُدَّتْؕ
وَاِذَا இன்னும் போது الْاَرْضُ பூமி مُدَّتْؕ விரிக்கப்படும்
84:3. இன்னும், பூமி விரிக்கப்பட்டு,
84:3. மேலும், பூமி விரிக்கப்படும்போது,
84:3. மேலும், பூமி பரப்பப்பட்டு விடும்போது
84:3. பூமியும் (நீண்டதாக) விரிக்கப்பட்டுவிடும்போது-
84:4 وَاَلْقَتْ مَا فِيْهَا وَتَخَلَّتْۙ
وَاَلْقَتْ இன்னும் எரிந்து(விடும்) مَا فِيْهَا தன்னில் உள்ளவற்றை وَتَخَلَّتْۙ இன்னும் காலியாகிவிடும்
84:4. அது, தன்னிலுள்ளவற்றை வெளியாக்கி, அது காலியாகி விடும் போது-
84:4. மேலும், அது தன்னிடம் உள்ளவற்றையெல்லாம் எறிந்து வெறுமனே ஆகிவிடும்போது,
84:4. இன்னும், அது தன்னுள் இருப்பவை அனைத்தையும் வெளியில் எறிந்துவிட்டு, ஏதுமற்றதாய் ஆகிவிடும்போது
84:4. அது தன்னுள்ளிருப்பதை வெளிப்படுத்தி அது வெறுமையாகியும் விடும்போது-
84:5 وَاَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْؕ
وَاَذِنَتْ இன்னும் அது செவிசாய்த்து لِرَبِّهَا தன் இறைவனுக்கு وَحُقَّتْؕ இன்னும் கீழ்படிந்து
84:5. தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த பூமி) அடிபணியும்போது.
84:5. மேலும், அது தன் இறைவனின் கட்டளைக்கு செவிசாய்த்து விடும் (போது மனிதன் தன் செயலுக்குரிய கூலியைப் பெறுவான்). (அவ்வாறே) அதற்கு விதிக்கப்பட்டுள்ளது.
84:5. மேலும், அது தன் அதிபதியின் கட்டளையைச் செயல்படுத்தும்போது, இது (தன் அதிபதியின் கட்டளைக்கு முழுமையாகப் பணிவது)தான் அதற்கு ஏற்றதாகும்.
84:5. அது (தன்னுள்ளிருப்பதை வெளிப்படுத்திவிட வேண்டுமெனும்) தன் இரட்சகனின் கட்டளைக்குச் செவிசாய்த்தும்விட்டது; (அவ்வாறு செய்வது) அதற்க்குக் கடமையாகவும் ஆக்கப்பட்டுவிட்டபோது..
84:6 يٰۤاَيُّهَا الْاِنْسَانُ اِنَّكَ كَادِحٌ اِلٰى رَبِّكَ كَدْحًا فَمُلٰقِيْهِۚ
يٰۤاَيُّهَا الْاِنْسَانُ மனிதனே! اِنَّكَ நிச்சயமாக நீ كَادِحٌ சிரமத்தோடு முயற்சிப்பவன் اِلٰى பக்கம் رَبِّكَ உன் இறைவன் كَدْحًا சிரமத்தோடு முயற்சித்தல் فَمُلٰقِيْهِۚ அடுத்து நீ அவனை சந்திப்பாய்
84:6. மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக உழைக்கின்றாய் - பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய்.
84:6. மனிதனே! நீ உன் இறைவனிடம் செல்லும் வரை (நன்மையோ தீமையோ பல வேலைகளில் ஈடுபட்டு) சிரமத்துடன் முயற்சி செய்துகொண்டே இருக்கிறாய். (பின்னர், மறுமையில்) அவனை நீ சந்திக்கிறாய்.
84:6. “மனிதனே! நீ இடைவிடாமல் பாடுபட்டு உன் இறைவனின் பக்கம் சென்று கொண்டிருப்பவனாகவும் அவனை நீ சந்திக்கக் கூடியவனாகவும் இருக்கின்றாய்.
84:6. மனிதனே! நீ உன் இரட்சகனிடம் செல்லும் வரையில் (நன்மையோ, தீமையோ பல வேலைகளில் ஈடுபட்டு) கஷ்டத்துடன் முயற்சி செய்து கொண்டே இருக்கின்றாய்; பின்னர் (மறுமையில்) அவனை நீ சந்திக்கிறவனாக இருக்கிறாய்.
84:7 فَاَمَّا مَنْ اُوْتِىَ كِتٰبَهٗ بِيَمِيْنِهٖۙ
فَاَمَّا مَنْ ஆகவே, யார் اُوْتِىَ கொடுக்கப்பட்டாரோ كِتٰبَهٗ தன் பதிவேடு بِيَمِيْنِهٖۙ தன் வலக்கரத்தில்
84:7. ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப்படுகின்றதோ,
84:7. ஆகவே, (அந்நாளில்) எவருடைய வலது கையில் அவருடைய செயலேடு கொடுக்கப்படுகிறதோ,
84:7. எவருடைய வினைப்பட்டியல் அவர் வலக்கையில் கொடுக்கப்படுமோ
84:7. எனவே (அந்நாளில்) எவர் அவருடைய பதிவுப்புத்தகத்தை அவருடைய வலக்கையில் கொடுக்கப்பட்டாரோ-
84:8 فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَّسِيْرًا ۙ
فَسَوْفَ يُحَاسَبُ அவர் கணக்குக் கேட்கப்படுவார் حِسَابًا கணக்கு يَّسِيْرًا ۙ இலகுவாகவே
84:8. அவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான்.
84:8. அவர் மிக்க இலகுவாகக் கேள்வி கணக்குக் கேட்கப்படுவார்.
84:8. அவரிடம் எளிதான கணக்கு வாங்கப்படும்.
84:8. அவர் மிக்க இலகுவான கேள்வி கணக்காக கணக்குக் கேட்கப்படுவார்.
84:9 وَّيَنْقَلِبُ اِلٰٓى اَهْلِهٖ مَسْرُوْرًا ؕ
وَّيَنْقَلِبُ இன்னும் திரும்புவார் اِلٰٓى பக்கம் اَهْلِهٖ தன் குடும்பத்தார் مَسْرُوْرًا ؕ மகிழ்ச்சியானவராக
84:9. இன்னும், தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான்.
84:9. அவர் மகிழ்ச்சியடைந்தவராக(ச் சொர்க்கத்திலுள்ள) தன் குடும்பத்தார்களிடம் திரும்புவார்.
84:9. மேலும், அவர் தம் குடும்பத்தாரை நோக்கி மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்வார்.
84:9. இன்னும், அவர் மகிழ்ச்சியுடன் (சுவனத்திலுள்ள) தன்னுடைய குடும்பத்தாரிடம் திரும்புவார்.
84:10 وَاَمَّا مَنْ اُوْتِىَ كِتٰبَهٗ وَرَآءَ ظَهْرِهٖۙ
وَاَمَّا مَنْ இன்னும் ஆக, யார்? اُوْتِىَ கொடுக்கப்பட்டானோ كِتٰبَهٗ தன் பதிவேடு وَرَآءَ பின்னால் ظَهْرِهٖۙ தன் முதுகுக்கு
84:10. ஆனால், எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றதோ-
84:10. எவனுடைய செயலேடு அவனுடைய முதுகுப்புறம் கொடுக்கப்பட்டதோ,
84:10. ஆனால், எவனுடைய வினைப்பட்டியல் அவன் முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுமோ
84:10. மேலும், எவர்-அவருடைய பதிவுப்புத்தகத்தை அவருடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்பட்டாரோ-
84:11 فَسَوْفَ يَدْعُوْا ثُبُوْرًا ۙ
فَسَوْفَ يَدْعُوْا அவன் கூவுவான் ثُبُوْرًا ۙ நாசமே
84:11. அவன் (தனக்குக்) “கேடு” தான் எனக் கூவியவனாக-
84:11. அவன், (தனக்குக்) கேடுதான் என்று (அப்படியே) சப்தமிடுவான்,
84:11. அவன் மரணத்தை அழைப்பான்.
84:11. அவர் (தனக்குக் கேடுதான் என்று கூறி அழிவையே) அழைப்பார்.
84:12 وَّيَصْلٰى سَعِيْرًا ؕ
وَّيَصْلٰى இன்னும் பொசுங்குவான் سَعِيْرًا ؕ சயீர் என்ற நரகத்தில்
84:12. அவன் நரகத்தில் புகுவான்.
84:12. நரகத்தில் நுழைவான்.
84:12. பிறகு, கொழுந்து விட்டெரியும் நரகத்தில் போய் வீழ்வான்.
84:12. நரகத்திலும் அவர் நுழைவார்.
84:13 اِنَّهٗ كَانَ فِىْۤ اَهْلِهٖ مَسْرُوْرًا ؕ
اِنَّهٗ நிச்சயமாக அவன் كَانَ இருந்தான் فِىْۤ اَهْلِهٖ தன் குடும்பத்தில் مَسْرُوْرًا ؕ மகிழ்ச்சியானவனாக
84:13. நிச்சயமாக அவன் (இம்மையில்) தன்னைச் சார்ந்தோருடன் மகிழ்வோடு இருந்தான்.
84:13. ஏனென்றால், நிச்சயமாக அவன் (இம்மையிலிருந்த காலமெல்லாம் மறுமையை மறந்து) தன் குடும்பத்தார்களுடன் மிக்க மகிழ்ச்சியாக இருந்தான்.
84:13. அவன் தன்னுடைய குடும்பத்தாரிடம் இன்பத்தில் மூழ்கியிருந்தான்.
84:13. (ஏனென்றால்,) நிச்சயமாக அவர் (இம்மையில்) தன் குடும்பத்தாருடன் மிக்க ஆனந்தமாக இருந்தார்.
84:14 اِنَّهٗ ظَنَّ اَنْ لَّنْ يَّحُوْرَ ۛۚ
اِنَّهٗ நிச்சயமாக அவன் ظَنَّ எண்ணினான் اَنْ لَّنْ يَّحُوْرَ ۛۚ திரும்பிவரவே மாட்டான் என
84:14. நிச்சயமாக, தான் (இறைவன் பால்) “மீளவே மாட்டேன்” என்று எண்ணியிருந்தான்.
84:14. மெய்யாகவே அவன் (தன் இறைவனிடம்) மீளவே மாட்டோம் என்றும் எண்ணிக் கொண்டிருந்தான்.
84:14. (தன்னுடைய இறைவனின் பக்கம்) ஒருபோதும் திரும்பி வர வேண்டியதில்லை என்று அவன் கருதியிருந்தான்.
84:14. நிச்சயமாக அவர் (தன் இரட்சகனின்பால்) மீளவே மாட்டார் என்று எண்ணிக் கொண்டிருந்தார்.
84:15 بَلٰٓى ۛۚ اِنَّ رَبَّهٗ كَانَ بِهٖ بَصِيْرًا ؕ
بَلٰٓى ۛۚ ஏனில்லை اِنَّ நிச்சயமாக رَبَّهٗ அவனுடைய இறைவன் كَانَ இருக்கிறான் بِهٖ அவனை بَصِيْرًا ؕ உற்றுநோக்குபவனாக
84:15. அப்படியல்ல; நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனைக் கவனித்து நோக்குகிறவனாகவே இருந்தான்.
84:15. அது சரியன்று! நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனை உற்று நோக்குபவனாகவே இருந்தான்.
84:15. ஏன் திரும்பி வர வேண்டியதில்லை? அவனுடைய இறைவன் அவனுடைய இழிசெயல்களைப் பார்த்துக் கொண்டுதானே இருந்தான்!
84:15. ஆம்! (அவர் மீளத்தான் போகிறார்.) நிச்சயமாக அவருடைய இரட்சகன் அவரைப் பார்க்கக்கூடியவனாக இருந்தான்.
84:16 فَلَاۤ اُقْسِمُ بِالشَّفَقِۙ
فَلَاۤ اُقْسِمُ ஆகவே சத்தியமிடுகிறேன் بِالشَّفَقِۙ செம்மேகத்தின்மேல்
84:16. இன்னும், அந்திச் செவ்வானத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
84:16. (மாலை நேர) செம்மேகத்தின் மீது சத்தியமாக!
84:16. அவ்வாறில்லை! அந்தி நேரத்துச் செவ்வானத்தின் மீதும்,
84:16. அந்தி நேரத்துச் செவ்வானத்தின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.
84:17 وَالَّيْلِ وَمَا وَسَقَۙ
وَالَّيْلِ இரவின் மீது சத்தியமாக وَمَا وَسَقَۙ ஒன்று சேர்த்தவை மீது சத்தியமாக
84:17. மேலும், இரவின் மீதும், அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும்,
84:17. இரவின் மீதும், அது மறைத்துக் கொண்டிருப்பவற்றின் மீதும் (சத்தியமாக!)
84:17. இரவின் மீதும், மேலும், அது ஒன்றுதிரட்டி வைத்துக் கொண்டிருப்பவற்றின் மீதும்
84:17. இரவின் மீதும், அது அணைத்துக் கொண்டிருப்பவற்றின் மீதும் (சத்தியம் செய்கிறேன்).
84:18 وَالْقَمَرِ اِذَا اتَّسَقَۙ
وَالْقَمَرِ சந்திரன் மீது சத்தியமாக اِذَا اتَّسَقَۙ அது முழுமையடையும் போது
84:18. பூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்).
84:18. பூரணச் சந்திரன் மீது சத்தியமாக!
84:18. மேலும், முழுமையாய் மலர்ந்து விடும் சந்திரன் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.
84:18. சந்திரன் மீதும் அது பூரணமாகிவிட்டபோது(ம் சத்தியம் செய்கிறேன்.)
84:19 لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍؕ
لَتَرْكَبُنَّ நிச்சயமாக பயணிக்கிறீர்கள் طَبَقًا ஒரு நிலைக்கு عَنْ طَبَقٍؕ ஒரு நிலையிலிருந்து
84:19. நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள்.
84:19. (ஒரு நிலைமையிலிருந்து மற்றொரு நிலைமைக்கு) நிச்சயமாக நீங்கள் படிப்படியாகக் கடக்க வேண்டியதிருக்கிறது.
84:19. திண்ணமாக, நீங்கள் படிப்படியாய் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குக் கடந்து செல்ல வேண்டியுள்ளது.
84:19. (ஒரு நிலைமையிலிருந்து மற்றொரு நிலைமைக்கு நிச்சயமாக நீங்கள் படிப்படியாக ஏறிச்செல்வீர்கள்.
84:20 فَمَا لَهُمْ لَا يُؤْمِنُوْنَۙ
فَمَا ஆகவே என்ன لَهُمْ அவர்களுக்கு لَا يُؤْمِنُوْنَۙ அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை
84:20. எனவே, அவர்களுக்கு என்ன (நேர்ந்தது?) அவர்கள் ஈமான் கொள்ளவதில்லை.
84:20. ஆகவே, (இதை மறுத்துக் கொண்டிருக்கும்) அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் இதை நம்பிக்கை கொள்வதில்லை.
84:20. பிறகு, இம்மக்களுக்கு என்ன நேர்ந்தது? நம்பிக்கை கொள்ளாமல் இருக்கிறார்களே!
84:20. ஆகவே, (இதனை மறுத்துக் கொண்டிருக்கும்) அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் நம்புவதில்லை.
84:21 وَاِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْاٰنُ لَا يَسْجُدُوْنَ ؕ ۩
وَاِذَا قُرِئَ இன்னும் ஓதப்பட்டால் عَلَيْهِمُ அவர்கள் மீது الْقُرْاٰنُ அல்குர்ஆன் لَا يَسْجُدُوْنَ ؕ ۩ அவர்கள் சிரம் பணிவதில்லை
84:21. மேலும், அவர்களிடத்தில் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள் ஸுஜூது செய்வதில்லை.
84:21. அவர்களுக்கு இந்த குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்ட போதிலும், (இறைவனை) அவர்கள் சிரம் பணிந்து வணங்குவது இல்லை.
84:21. மேலும், இவர்களின் முன்னிலையில் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால், இவர்கள் ஸஜ்தா* செய்வதுமில்லையே!
84:21. மேலும், அவர்களுக்கு இந்தக்குர் ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால் (அல்லாஹ்விற்கு) அவர்கள் சிரம்பணி(ந்து ஸுஜூது செய்)வதில்லை.
84:22 بَلِ الَّذِيْنَ كَفَرُوْا يُكَذِّبُوْنَ ۖ
بَلِ மாறாக الَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பாளர்கள் يُكَذِّبُوْنَ ۖ பொய்ப்பிக்கின்றனர்
84:22. அன்றியும் நிராகரிப்பவர்கள் அதைப் பொய்ப்பிக்கின்றனர்.
84:22. அது மட்டுமா? இந்நிராகரிப்பவர்கள் (இந்த குர்ஆனையே) பொய்யாக்குகின்றனர்.
84:22. மாறாக, இந்த நிராகரிப்பாளர்களோ பொய்யெனத் தூற்றுகின்றார்கள்.
84:22. அன்றியும் நிராகரிப்போர் (இந்தக்குர் ஆனையே) பொய்யாக்குகின்றனர்.
84:23 وَاللّٰهُ اَعْلَمُ بِمَا يُوْعُوْنَ ۖ
وَاللّٰهُ அல்லாஹ் اَعْلَمُ மிக அறிந்தவன் بِمَا يُوْعُوْنَ ۖ அவர்கள் சேகரிப்பதை
84:23. ஆனால் அல்லாஹ், அவர்கள் (தங்களுக்குள்ளே சேகரித்து) மறைத்து வைத்திருப்பவற்றை நன்கு அறிந்திருக்கின்றான்.
84:23. எனினும், இவர்கள் (தங்கள் மனதில்) சேகரித்து (மறைத்து) வைத்திருப்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தே இருக்கிறான்.
84:23. உண்மையில், இவர்கள் (தம் வினைச்சுவடிகளில்) சேர்த்துக் கொண்டிருப்பவற்றை அல்லாஹ் நன்கறிகின்றான்.
84:23. இன்னும், அவர்கள் (தங்கள் மனங்களில் சேகரித்து) மறைத்து வைத்திருப்பவைகளை அல்லாஹ் நன்கறிந்தேயிருக்கின்றான்.
84:24 فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِيْمٍۙ
فَبَشِّرْ ஆகவே நற்செய்தி கூறுவீராக هُمْ அவர்களுக்கு بِعَذَابٍ வேதனையைக் கொண்டு اَلِيْمٍۙ துன்புறுத்தும்
84:24. (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயங் கூறுவீராக.
84:24. ஆகவே, (நபியே!) துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு அவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக.
84:24. எனவே, இவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனைக்கான “நற்செய்தியை” அறிவித்துவிடுவீராக!
84:24. ஆகவே, (நபியே!) துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு அவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!
84:25 اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ اَجْرٌ غَيْرُ مَمْنُوْنٍ
اِلَّا தவிர الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்கள் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நற்செயல்கள் لَهُمْ அவர்களுக்கு اَجْرٌ நன்மை (கூலி) غَيْرُ مَمْنُوْنٍ முடிவுறாத
84:25. எவர்கள் ஈமான்கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - அவர்களுக்கு முடிவேயில்லாத நற்கூலி உண்டு.
84:25. எனினும், இவர்களில் எவர்கள் (தங்கள் பாவத்திலிருந்து திருந்தி) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு (என்றென்றுமே) முடிவுறாத (நற்)கூலியுண்டு.
84:25. ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாகவும் நற்செயல்கள் செய்தவர்களாகவும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு என்றென்றும் முடிவுறாத கூலி இருக்கிறது.
84:25. விசுவாசங் கொண்டு நற்கருமங்களும் செய்தார்களே அத்தகையவர்களைத் தவிர, அவர்களுக்கு முடிவுறாத (நற்) கூலியுண்டு.