108. ஸூரத்துல் கவ்ஸர் (மிகுந்த நன்மைகள்)
மக்கீ, வசனங்கள்: 3
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்
108:1 اِنَّاۤ اَعْطَيْنٰكَ الْكَوْثَرَؕ
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَعْطَيْنٰكَ உமக்குக் கொடுத்தோம் الْكَوْثَرَؕ ‘கவ்ஸர்’ ஐ
108:1. (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம்.
108:1. (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘கவ்ஸர்' என்னும் நீர் தடாகத்தை கொடுத்திருக்கிறோம்.
108:1. (நபியே!) நாம் உமக்கு ‘கவ்ஸரை’* அருளினோம்.
108:1. (நபியே!) நிச்சயமாக நாம் கவ்ஸரை (எண்ணற்ற நன்மைகளை) உமக்குக் கொடுத்திருக்கின்றோம்.
108:2 فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ؕ
فَصَلِّ ஆகவே தொழுவீராக لِرَبِّكَ உம்இறைவனுக்காக وَانْحَرْ ؕ இன்னும் அறுத்துப் பலியிடுவீராக
108:2. எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.
108:2. ஆகவே, (அவற்றுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீர் உமது இறைவனைத் தொழுது, குர்பானி (பலி) கொடுத்து வருவீராக.
108:2. எனவே, நீர் உம் இறைவனுக்காகவே தொழுவீராக! பலி (குர்பானி)யும் கொடுப்பீராக!
108:2. ஆகவே, நீர் உமதிரட்சகனைத் தொழுது இன்னும் (குர்பானியும் கொடுத்து அதை) அறுப்பீராக.
108:3 اِنَّ شَانِئَكَ هُوَ الْاَبْتَرُ
اِنَّ நிச்சயமாக شَانِئَكَ هُوَ உம் பகைவன்தான் الْاَبْتَرُ நன்மையற்றவன்
108:3. நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன்.
108:3. நிச்சயமாக உமது எதிரிதான் சந்ததியற்றவன்.
108:3. திண்ணமாக உம் பகைவன்தான் வேரறுந்தவன் ஆவான்.
108:3. நிச்சயமாக உம் பகைவன் எவனோ அவன்தான் சந்ததியற்றவன்.