110. ஸூரத்துந் நஸ்ர் (உதவி)
மதனீ, வசனங்கள்: 3
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்
110:1 اِذَا جَآءَ نَصْرُ اللّٰهِ وَالْفَتْحُۙ
اِذَا جَآءَ வந்தால் نَصْرُ உதவி اللّٰهِ அல்லாஹ்வுடைய وَالْفَتْحُۙ இன்னும் வெற்றி
110:1. அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,
110:1. (நபியே! உமக்கு) அல்லாஹ்வுடைய உதவியும், (மக்காவின்) வெற்றியும் கிடைத்து,
110:1. அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் வந்து விடும்போது
110:1. (நபியே! உமக்கு) அல்லாஹ்வுடைய உதவி மற்றும் (மக்காவின்) வெற்றி வரும்போது-
110:2 وَرَاَيْتَ النَّاسَ يَدْخُلُوْنَ فِىْ دِيْنِ اللّٰهِ اَفْوَاجًا ۙ
وَرَاَيْتَ இன்னும் நீர் பார்த்தால் النَّاسَ மக்களை يَدْخُلُوْنَ நுழைபவர்களாக فِىْ دِيْنِ மார்க்கத்தில் اللّٰهِ அல்லாஹ்வுடைய اَفْوَاجًا ۙ கூட்டம் கூட்டமாக
110:2. மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,
110:2. அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதையும் நீர் கண்டால்,
110:2. மேலும் (நபியே!) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் திரள்திரளாக நுழைவதை நீர் காணும்போது
110:2. இன்னும், மனிதர்களை – அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் கூட்டங்கூட்டமாக பிரவேசிப்பவர்களாக (நபியே) நீர் காணும்போது-
110:3 فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ؔؕ اِنَّهٗ كَانَ تَوَّابًا
فَسَبِّحْ துதித்து தூய்மைப்படுத்துவீராக بِحَمْدِ புகழை رَبِّكَ உம் இறைவனின் وَاسْتَغْفِرْهُ ؔؕ இன்னும் அவனிடம் மன்னிப்புக் கோருவீராக اِنَّهٗ நிச்சயமாக அவன் كَانَ இருக்கிறான் تَوَّابًا மகா மன்னிப்பாளனாக
110:3. உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.
110:3. (அதற்கு நன்றி செலுத்துவதற்காக) உமது இறைவனைப் புகழ்ந்து துதி செய்து, அவனுடைய (அருளையும்) மன்னிப்பையும் கோருவீராக! நிச்சயமாக அவன் (பிரார்த்தனைகளை அங்கீகரித்து) மன்னிப்புக் கோருதலை(யும்) அங்கீகரிப்பவனாக இருக்கிறான்.
110:3. நீர் உம் இறைவனைப் புகழ்ந்து கொண்டு அவனைத் துதிப்பீராக! மேலும், அவனிடம் பாவமன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அவன், பாவமன்னிப்புக் கோரிக்கையை பெரிதும் ஏற்பவனாக இருக்கின்றான்.
110:3. அப்போது, (அதற்கு நன்றி செலுத்தும் பொருட்டு) உமதிரட்சகனின் புகழைக் கொண்டு துதி செய்வீராக! மேலும், அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக! நிச்சயமாக அவன் தவ்பாவை (பாவமன்னிப்புக் கோருதலை) மிகவும் ஏற்றுக்கொள்பவனாக இருக்கிறான்.