41. ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா
மக்கீ, வசனங்கள்: 54

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
41:1
41:1 حٰمٓ‌ ۚ‏
حٰمٓ‌ ۚ‏ ஹா மீம்
41:1. ஹா, மீம்.
41:1. ஹா மீம்.
41:1. ஹாமீம்
41:1. ஹாமீம்.
41:2
41:2 تَنْزِيْلٌ مِّنَ الرَّحْمٰنِ الرَّحِيْمِ‌ۚ‏
تَنْزِيْلٌ இறக்கப்பட்ட வேதமாகும் مِّنَ الرَّحْمٰنِ பேரன்பாளனிடமிருந்து الرَّحِيْمِ‌ۚ‏ பேரருளாளன்
41:2. அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்டது;
41:2. அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன் (ஆகிய அல்லாஹ்) இடமிருந்து இது இறக்கப்பட்டுள்ளது.
41:2. இது அளவிலாக் கருணையும், இணையிலாக் கிருபையும் உடைய இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்டதாகும்.
41:2. அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடமிருந்து இறக்கப்பட்டுள்ளது.
41:3
41:3 كِتٰبٌ فُصِّلَتْ اٰيٰتُهٗ قُرْاٰنًا عَرَبِيًّا لِّقَوْمٍ يَّعْلَمُوْنَۙ‏
كِتٰبٌ வேதமாகும் فُصِّلَتْ விவரிக்கப்பட்டன اٰيٰتُهٗ இதன் வசனங்கள் قُرْاٰنًا குர்ஆன் عَرَبِيًّا அரபி மொழியிலான لِّقَوْمٍ மக்களுக்காக يَّعْلَمُوْنَۙ‏ அறிகின்றார்கள்
41:3. அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளது.
41:3. இது குர்ஆன் என்னும் வேதமாகும். அறிவுள்ள மக்களுக்காக இதன் வசனங்கள் அரபி மொழியில் விவரிக்கப்பட்டுள்ளன.
41:3. இது எத்தகைய வேதமெனில், அதனுடைய வசனங்கள் நன்கு விவரிக்கப்பட்டிருக்கின்றன; அரபி மொழியிலுள்ள குர்ஆன் ஆகவும் இருக்கின்றது; அறிவுள்ள மக்களுக்கு
41:3. (இது) வேதமாகும், அறிந்து கொள்ளும் சமூகத்தாருக்காக அரபி (மொழி)க் குர் ஆனாக அதனுடைய வசனங்கள் தனித்தனியாக்கப்பட்டு (தெளிவு செய்யப்பட்டு)ள்ளன.
41:4
41:4 بَشِيْرًا وَّنَذِيْرًا‌ ۚ فَاَعْرَضَ اَكْثَرُهُمْ فَهُمْ لَا يَسْمَعُوْنَ‏
بَشِيْرًا நற்செய்தி கூறக்கூடியது وَّنَذِيْرًا‌ ۚ அச்சமூட்டி எச்சரிக்கக் கூடியது فَاَعْرَضَ புறக்கணித்தனர் اَكْثَرُ அதிகமானோர் هُمْ அவர்களில் فَهُمْ இன்னும் அவர்கள் لَا يَسْمَعُوْنَ‏ செவியேற்பதில்லை
41:4. நன்மாராயம் கூறுவதாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும் (அது இருக்கின்றது); ஆனால் அவர்களில் பெரும்பாலோர் புறக்கணிக்கின்றனர்; அவர்கள் செவியேற்பதும் இல்லை.
41:4. (நல்லோருக்கு இது) நற்செய்தி கூறுகிறதாகவும் (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறதாகவும் இருக்கிறது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதைப்) புறக்கணித்து விட்டனர். ஆதலால், அவர்கள் இதற்கு செவி சாய்ப்பதில்லை.
41:4. நற்செய்தி சொல்லக்கூடியதும், எச்சரிக்கை செய்யக்கூடியதுமாகும். ஆனால், இந்த மக்களில் பெரும்பாலோர் (இதனைப்) புறக்கணித்து விட்டனர். மேலும், அவர்கள் செவிமடுப்பதுமில்லை.
41:4. (விசுவாசிகளுக்கு இது) நன்மாராயம் கூறுகின்றதாகவும், (நிராகரித்தோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றதாகவும்_(இருக்கின்றது) பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் (இதனைப்) புறக்கணித்து விட்டனர்_(ஆகவே,) அவர்கள் (இதற்குச்) செவிசாய்க்கமாட்டார்கள்.
41:5
41:5 وَقَالُوْا قُلُوْبُنَا فِىْۤ اَكِنَّةٍ مِّمَّا تَدْعُوْنَاۤ اِلَيْهِ وَفِىْۤ اٰذَانِنَا وَقْرٌ وَّمِنْۢ بَيْنِنَا وَبَيْنِكَ حِجَابٌ فَاعْمَلْ اِنَّنَا عٰمِلُوْنَ‏
وَقَالُوْا அவர்கள் கூறினார்கள் قُلُوْبُنَا எங்கள் உள்ளங்கள் فِىْۤ اَكِنَّةٍ திரைகளில்தான் مِّمَّا எதில் تَدْعُوْنَاۤ நீர் எங்களை அழைக்கின்றீர்களோ اِلَيْهِ அதன் பக்கம் وَفِىْۤ اٰذَانِنَا இன்னும் எங்கள்செவிகளில் وَقْرٌ செவிட்டுத்தனம் وَّمِنْۢ بَيْنِنَا இன்னும் எங்களுக்கு மத்தியிலும் وَبَيْنِكَ உமக்கு மத்தியிலும் حِجَابٌ ஒரு திரை فَاعْمَلْ ஆகவே நீர் செய்வீராக! اِنَّنَا நிச்சயமாக நாங்கள் عٰمِلُوْنَ‏ செய்வோம்
41:5. மேலும் அவர்கள்: “நீர் எதன் பக்கம் எங்களை அழைக்கின்றீரோ அதனை விட்டும் எங்கள் இருதயங்கள் மூடப்பட்டுள்ளன; எங்கள் காதுகளில் மந்தம் இருக்கின்றது; எங்களுக்கிடையிலும் உமக்கிடையிலும் திரை இருக்கிறது; ஆகவே, நீர் (உம் வேலையைச்) செய்து கொண்டிரும்; நிச்சயமாக நாங்கள் (எங்கள் வேலையைச்) செய்து கொண்டிருப்பவர்கள்” என்று கூறினர்.
41:5. மேலும், ‘‘நீர் எதன் பக்கம் எங்களை அழைக்கிறீர்களோ (அதைக் கவனிக்க முடியாதபடி) எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டு விட்டன. (நீர் கூறுவதைச் செவியுற முடியாதவாறு) எங்கள் செவிகள் செவிடாகி விட்டன. எங்களுக்கும் உங்களுக்கும் இடையில் திரையிட(ப்பட்டுத் தடுக்க)ப்பட்டு விட்டது. ஆகவே, நீர் (விரும்பியதைச்) செய்து கொண்டிருப்பீராக. நாங்களும் (நாங்கள் விரும்பியதையே) செய்து கொண்டிருப்போம்'' என்றும், (இவ்வேதத்தை நிராகரிப்பவர்கள்) கூறுகின்றனர்.
41:5. அவர்கள் கூறுகின்றார்கள்; “எதன் பக்கம் நீர் எங்களை அழைத்துக் கொண்டிருக்கின்றீரோ, (அதன் பக்கம் நோக்காதபடி) எங்கள் உள்ளங்கள் உறையிடப்பட்டிருக்கின்றன. எங்கள் காதுகள் செவிடாகிவிட்டிருக்கின்றன. மேலும், எங்களுக்கும் உமக்கும் இடையே ஒரு திரை விழுந்து விட்டிருக்கின்றது. நீர் உமது பணியைச் செய்யும்; நாங்கள் எங்கள் பணியைச் செய்கின்றோம்.”
41:5. அன்றியும், “நீர் எதன்பால் எங்களை அழைக்கின்றீரோ அதைவிட்டும் எங்களுடைய இதயங்கள் திரைகளில் இருக்கின்றன, எங்களுடைய செவிகளில் அடைப்பும் இருக்கிறது, எங்களுக்கும், உமக்குமிடையே திரை இருக்கிறது, ஆகவே, நீர் (உம் காரியத்தைச்) செய்து கொண்டிருப்பீராக! நிச்சயமாக, நாங்களும் (எங்கள் காரியத்தைச்) செய்து கொண்டிருப்போம்” என்றும் (நிராகரிப்போர்) கூறுகின்றனர்.
41:6
41:6 قُلْ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثْلُكُمْ يُوْحٰٓى اِلَىَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ فَاسْتَقِيْمُوْۤا اِلَيْهِ وَاسْتَغْفِرُوْهُ‌ ؕ وَوَيْلٌ لِّلْمُشْرِكِيْنَ ۙ‏
قُلْ கூறுவீராக! اِنَّمَاۤ اَنَا நான் எல்லாம் بَشَرٌ ஒரு மனிதர்தான் مِّثْلُكُمْ உங்களைப் போன்ற يُوْحٰٓى வஹீ அறிவிக்கப்படுகிறது اِلَىَّ எனக்கு اَنَّمَاۤ اِلٰهُكُمْ உங்கள் கடவுள் எல்லாம் اِلٰـهٌ وَّاحِدٌ ஒரே ஒருகடவுள்தான் فَاسْتَقِيْمُوْۤا ஆகவே, நீங்கள் நேர்வழி நடங்கள்! اِلَيْهِ அவன் பக்கமே وَاسْتَغْفِرُوْهُ‌ ؕ இன்னும் அவனிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள்! وَوَيْلٌ لِّلْمُشْرِكِيْنَ ۙ‏ நாசம்தான்/இணைவைப்பவர்களுக்கு
41:6. “நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான் - ஆனால் எனக்கு வஹீ அறிவிக்கப்படுகிறது; நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனேதான், ஆகவே அவனையே நோக்கி நீங்கள் உறுதியாக நிற்பீர்களாக; இன்னும், அவனிடம் நீங்கள் மன்னிப்புக் கேளுங்கள் - அன்றியும் (அவனுக்கு) இணை வைப்போருக்குக் கேடுதான்” என்று (நபியே!) நீர் கூறும்.
41:6. ஆகவே, (நபியே!) நீர் கூறுவீராக: மெய்யாகவே நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். ஆயினும், உங்கள் வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஓர் இறைவன்தான் என்று எனக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால், அவனையே நோக்கி நீங்கள் உறுதியாக நில்லுங்கள். அவனிடம் நீங்கள் பாவ மன்னிப்பும் கேளுங்கள். அவனுக்கு இணைவைப்பவர்களுக்குக் கேடுதான்.
41:6. (நபியே! இவர்களிடம்) கூறும்: நான் ஒரு மனிதன்தான், உங்களைப் போன்று! வஹியின்* மூலம் எனக்கு அறிவிக்கப்படுகின்றது, உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான்; எனவே, நீங்கள் அவனுடைய திசையிலேயே நேராக நிலைகொள்ளுங்கள் அவனிடம் மன்னிப்புக் கோருங்கள். இணைவைப்பாளர்களுக்கு அழிவுதான்!
41:6. (ஆகவே நபியே!) நீர் கூறுவீராக: “நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான், (ஆனால்) உங்களுடைய (வணக்கத்திற்குரிய) நாயன் ஒரே ஒரு நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்படுகிறது, ஆதலால், (செயல்களைக் கலப்பற்றதாக்கி) அவனளவிலேயே நீங்கள் உறுதியாக நில்லுங்கள், அவனிடம் நீங்கள் பிழை பொறுக்கவும் தேடுங்கள், இன்னும், (அவனுக்கு) இணைவைத்துக் கொண்டிருப்போருக்குக் கேடுதான்.
41:7
41:7 الَّذِيْنَ لَا يُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ كٰفِرُوْنَ‏
الَّذِيْنَ لَا يُؤْتُوْنَ எவர்கள்/அவர்கள் கொடுப்பதில்லை الزَّكٰوةَ ஸகாத்தை وَهُمْ இன்னும் அவர்கள் بِالْاٰخِرَةِ மறுமையை هُمْ அவர்கள் كٰفِرُوْنَ‏ நிராகரிக்கின்றனர்
41:7. அவர்கள் தாம் ஜகாத்தைக் கொடுக்காதவர்கள்; மறுமையை நிராகரிப்பவர்களும் அவர்களே!
41:7. அவர்கள் ஜகாத்து கொடுப்பதில்லை. அவர்கள்தான் மறுமையை நிராகரிப்பவர்கள்.
41:7. அவர்களோ, ஜகாத் வழங்குவதில்லை; இன்னும் மறுமையை நிராகரிக்கின்றார்கள்.
41:7. அவர்கள் எத்தகையோரென்றால், ஜகாத்தைக் கொடுக்கமாட்டார்கள், இன்னும், அவர்கள் தாம் மறுமையை நிராகரிக்கக்கூடியவர்கள்.
41:8
41:8 اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ اَجْرٌ غَيْرُ مَمْنُوْنٍ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை لَهُمْ அவர்களுக்கு உண்டு اَجْرٌ நற்கூலி غَيْرُ مَمْنُوْنٍ‏ முடிவற்ற(து)
41:8. “நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு முடிவேயில்லாத (நிலையான) கூலியுண்டு.”  
41:8. (ஆயினும்,) எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்கிறார்களோ (அவர்கள்தான் மறுமையை நம்பக்கூடியவர்கள்.) அவர்களுக்கு நிச்சயமாக (ஒரு காலத்திலும்) முடிவுறாத (நிலையான) கூலியுண்டு.
41:8. ஆனால், எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களுக்குத் திண்ணமாக என்றென்றும் முடிவுறாத கூலி இருக்கின்றது.
41:8. நிச்சயமாக, விசுவாசங்கொண்டு நற்கருமங்களும் செய்கின்றார்களே அத்தகையோர்_அவர்களுக்கு முடிவில்லாத (நிலையான) கூலியுண்டு.
41:9
41:9 قُلْ اَٮِٕنَّكُمْ لَتَكْفُرُوْنَ بِالَّذِىْ خَلَقَ الْاَرْضَ فِىْ يَوْمَيْنِ وَتَجْعَلُوْنَ لَهٗۤ اَنْدَادًا‌ؕ ذٰلِكَ رَبُّ الْعٰلَمِيْنَ‌ۚ‏
قُلْ கூறுவீராக! اَٮِٕنَّكُمْ لَتَكْفُرُوْنَ நீங்கள் நிராகரிக்கின்றீர்களா? بِالَّذِىْ خَلَقَ படைத்தவனை الْاَرْضَ பூமியை فِىْ يَوْمَيْنِ இரண்டு நாள்களில் وَتَجْعَلُوْنَ இன்னும் ஏற்படுத்துகின்றீர்களா? لَهٗۤ அவனுக்கு اَنْدَادًا‌ؕ இணைகளை ذٰلِكَ அவன்தான் رَبُّ இறைவன் الْعٰلَمِيْنَ‌ۚ‏ அகிலங்களின்
41:9. “பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தான் ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்” என்று (நபியே!) கூறுவீராக.
41:9. (நபியே!) கூறுவீராக: “(இவ்வளவு பெரிய) பூமியை இரண்டே நாள்களில் படைத்தவனை நீங்கள் நிராகரித்துவிட்டு (மற்றவற்றை) அவனுக்கு இணையாக்குகிறீர்களா? அவன்தான் உலகத்தார் அனைவரையும் படைத்த இறைவன்.''
41:9. (நபியே! இவர்களிடம்) கேளும்: “நீங்கள் பூமியை இரண்டு நாட்களில் படைத்த இறைவனை நிராகரிக்கின்றீர்களா? மேலும், மற்றவர்களை அவனுக்கு இணையாக்குகின்றீர்களா?” அவன்தானே அகில உலகங்களுக்கும் இறைவன்!
41:9. (நபியே!) நீர் கூறுவீராக: “பூமியை இரண்டே நாட்களில் படைத்தானே அத்தகையவனைத் திட்டமாக நீங்கள் நிராகரித்துவிட்டு, அவனுக்குச் சமமானவர்களையும் நீங்கள் ஆக்குகிறீர்களா? அவன் (தான்) அகிலத்தாரின் இரட்சகனாவான்.”
41:10
41:10 وَجَعَلَ فِيْهَا رَوَاسِىَ مِنْ فَوْقِهَا وَبٰرَكَ فِيْهَا وَقَدَّرَ فِيْهَاۤ اَقْوَاتَهَا فِىْۤ اَرْبَعَةِ اَيَّامٍؕ سَوَآءً لِّلسَّآٮِٕلِيْنَ‏
وَجَعَلَ இன்னும் ஏற்படுத்தினான் فِيْهَا அதில் رَوَاسِىَ மலைகளை مِنْ فَوْقِهَا அதற்கு மேலாக وَبٰرَكَ இன்னும் அருள்வளம் புரிந்தான் فِيْهَا அதில் وَقَدَّرَ இன்னும் திட்டமிட்டு நிர்ணயித்தான் فِيْهَاۤ அதில் اَقْوَاتَهَا அதன் உணவுகளை فِىْۤ اَرْبَعَةِ நான்கு اَيَّامٍؕ நாள்களில் سَوَآءً சரியான பதிலாக لِّلسَّآٮِٕلِيْنَ‏ விசாரிப்பவர்களுக்கு
41:10. அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான்; அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான்; இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான்; (இதைப் பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்).
41:10. அவனே பூமியின் மீது பெரும் மலைகளை அமைத்து, அதில் எல்லா விதமான பாக்கியங்களையும் புரிந்தான். மேலும், அதில் (வசிப்பவர்களுக்கு) வேண்டிய உணவுகளையும் நான்கு நாள்களில் நிர்ணயம் செய்தான். (அதுவும் நல்லவர்கள் தீயவர்கள் என்ற வித்தியாசமின்றி) கேட்பவர்கள் அனைவருக்கும் சமமாகக் கிடைக்குமாறும் செய்தான்.
41:10. அவன் (பூமியைப் படைத்த பிறகு) அதன் மேல் மலைகளை அமைத்தான். மேலும், அதில் பாக்கியங்களை அருளினான். கேட்பவர்கள் அனைவருக்காகவும் அவரவரின் விருப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்ப சரியான அளவில் அதனுள் உணவுப் பொருட்களை செய்து வைத்தான். இந்த அனைத்துப் பணிகளும் நான்கு நாட்களில் நிறைவேறின.
41:10. அவனே அதில்_ அதன் மேல் (பகுதியில்) இருந்து உறுதியான மலைகளை அமைத்தான், அதில் அபிவிருத்தியை நல்கினான், மேலும், அதில் அதன் உணவுகளை நான்கு நாட்களில் நிர்ணயம் செய்தான், (இவ்வாறு செய்ததைப் பற்றிக்) கேட்போருக்கு (பதில்) நிறைவாகி விட்டது.
41:11
41:11 ثُمَّ اسْتَـوٰۤى اِلَى السَّمَآءِ وَهِىَ دُخَانٌ فَقَالَ لَهَا وَلِلْاَرْضِ ائْتِيَا طَوْعًا اَوْ كَرْهًا ؕ قَالَتَاۤ اَتَيْنَا طَآٮِٕعِيْنَ‏
ثُمَّ பிறகு اسْتَـوٰۤى அவன் உயர்ந்தான் اِلَى السَّمَآءِ வானத்திற்கு மேல் وَهِىَ அது (இருந்தது) دُخَانٌ ஓர் ஆவியாக فَقَالَ அவன் கூறினான் لَهَا அதற்கு(ம்) وَلِلْاَرْضِ பூமிக்கும் ائْتِيَا நீங்கள் இருவரும் வாருங்கள் طَوْعًا விருப்பத்துடன் اَوْ அல்லது كَرْهًا ؕ வெறுப்புடன் قَالَتَاۤ அவை இரண்டும் اَتَيْنَا நாங்கள் வந்தோம் طَآٮِٕعِيْنَ‏ விருப்பமுள்ளவர்களாகவே
41:11. பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: “நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்” என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் “நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்” என்று கூறின.
41:11. பின்னர், வானத்திற்கு மேல் உயர்ந்தான். அது ஒரு வகை புகையாக இருந்தது. அதையும் பூமியையும் நோக்கி ‘‘நீங்கள் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி (கீழ்ப்படிந்து) என்னிடம் வாருங்கள்'' என்று கூறினான். அதற்கு அவை, ‘‘இதோ நாங்கள் விருப்பத்துடனேயே வந்தோம்'' என்று கூறின.
41:11. பிறகு, அவன் வானத்தின் பக்கம் கவனம் செலுத்தினான். அப்போது அது வெறும் புகையாய் இருந்தது. அவன் வானத்திடமும், பூமியிடமும் கூறினான்: “உருவாகி வாருங்கள்; நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்!” அவை இரண்டும், “நாங்கள் கீழ்ப்படிந்த வண்ணமே வந்துவிட்டோம்” எனக் கூறின.
41:11. பின்னர் வானத்தை_அது புகையாக இருக்கும் நிலையில் அவன் நாடினான், பின்னர், அவன் அதற்கும், பூமிக்கும் “நீங்களிருவரும் கீழ்ப்படிந்தோ, அல்லது நிர்ப்பந்தமாகவோ வாருங்கள்” என்று கூறினான், (அதற்கு) அவை இரண்டும் “நாங்கள் கீழ்ப்படிந்தவர்களாகவே வந்தோம்” என்று கூறின.
41:12
41:12 فَقَضٰٮهُنَّ سَبْعَ سَمٰوَاتٍ فِىْ يَوْمَيْنِ وَاَوْحٰى فِىْ كُلِّ سَمَآءٍ اَمْرَهَا‌ ؕ وَزَ يَّـنَّـا السَّمَآءَ الدُّنْيَا بِمَصَابِيْحَ ‌ۖ  وَحِفْظًا ‌ؕ ذٰ لِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِ‏
فَقَضٰٮهُنَّ ஆக, முடித்தான்/அவற்றை سَبْعَ ஏழு سَمٰوَاتٍ வானங்களாக فِىْ يَوْمَيْنِ இரண்டு நாள்களில் وَاَوْحٰى இன்னும் அறிவித்தான் فِىْ كُلِّ ஒவ்வொரு سَمَآءٍ வானத்திலும் اَمْرَهَا‌ ؕ அதன் காரியத்தை وَزَ يَّـنَّـا இன்னும் அலங்கரித்தோம் السَّمَآءَ வானத்தை الدُّنْيَا சமீபமான(து) بِمَصَابِيْحَ நட்சத்திரங்களால் ۖ  وَحِفْظًا ؕ இன்னும் பாதுகாப்பதற்காக ذٰ لِكَ تَقْدِيْرُ இது/ஏற்பாடாகும் الْعَزِيْزِ மிகைத்தவன் الْعَلِيْمِ‏ நன்கறிந்தவன்
41:12. ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்; ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான்; இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம்; இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம்; இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.
41:12. பின்னர், (அந்த புகையை) இரண்டு நாள்களில் ஏழு வானங்களாக முடிவு செய்ய திட்டமிட்டு, ஒவ்வொரு வானத்திலும் நடைபெறவேண்டிய விஷயங்களை (அவற்றுக்கு) அறிவித்தான். பின்னர், (இவ்வளவும் செய்த) நாமே (பூமிக்குச்) சமீபமான வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்காரமாக்கி வைத்து, (அதை அவற்றுக்குப்) பாதுகாப்பாகவும் ஆக்கினோம். இவையெல்லாம், (அனைவரையும்) மிகைத்தவனும் (அனைத்தையும்) நன்கறிந்தவனுடைய ஏற்பாடுதான்.
41:12. எனவே, அவன் இரண்டு நாட்களுக்குள் ஏழு வானங்களையும் அமைத்தான். மேலும், ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய நியதியை அறிவித்தான். உலகத்தின் அருகில் உள்ள வானத்தை விளக்குகளால் நாம் அலங்கரித்தோம். அதனை நன்கு பாதுகாத்து வைத்தோம். இவையனைத்தும் பேரறிவாளனும், வல்லமை மிக்கவனுமான இறைவன் நிர்ணயித்த அமைப்பாகும்.
41:12. பின்னர், அவன் அவைகளை இரண்டு நாட்களில் ஏழு வானங்களாக சமப்படுத்திமுடித்தான், ஒவ்வொரு வானத்திலும் அதனுடைய காரியத்தை அறிவித்தான், மேலும், நாமே தாழ்வாக உள்ள (முதல்) வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம், (அதனை ஷைத்தான்களை விட்டும்) பாதுகாக்கப்பட்டதாகவும் (ஆக்கினோம்), இது (யாவரையும்) மிகைத்தோன், (யாவையும்) நன்கு அறிந்தோனின் ஏற்பாடாகும்.
41:13
41:13 فَاِنْ اَعْرَضُوْا فَقُلْ اَنْذَرْتُكُمْ صٰعِقَةً مِّثْلَ صٰعِقَةِ عَادٍ وَّثَمُوْدَ ؕ‏
فَاِنْ اَعْرَضُوْا அவர்கள் புறக்கணித்தால் فَقُلْ கூறுவீராக! اَنْذَرْتُكُمْ உங்களுக்கு எச்சரிக்கிறேன் صٰعِقَةً ஒரு பேரழிவை مِّثْلَ போன்ற صٰعِقَةِ (ஏற்பட்ட) பேரழிவை عَادٍ ஆது உடைய وَّثَمُوْدَ ؕ‏ இன்னும் ஸமூது
41:13. ஆகவே, அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின், “ஆது, ஸமூது (கூட்டத்தாரு)க்கு உண்டான (இடி முழக்கம், புயல்) போன்ற வேதனையைப் போல் (இடி முழக்கம், புயல்) கொண்ட வேதனையை நான் உங்களுக்கு அச்சுறுத்துகின்றேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!.
41:13. ஆகவே, (நபியே! இவ்வளவு தூரம் அறிவித்த பின்னும்) அவர்கள் (நம்பிக்கை கொள்ளாது) புறக்கணித்தால், நீர் கூறுவீராக: ‘‘ஆது, ஸமூது என்னும் மக்களுக்கு ஏற்பட்ட இடி முழக்கம் போன்றதொரு இடி முழக்கத்தையே நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன்.''
41:13. இனி, இவர்கள் புறக்கணித்தால் (இவர்களிடம்) கூறிவிடும்: ‘திடீரெனத் தாக்கும் வேதனை குறித்து உங்களை நான் எச்சரிக்கின்றேன்; ஆத் சமுதாயத்தினர் மீதும், ஸமூத் சமுதாயத்தினர் மீதும் இறங்கிய வேதனை போன்று!
41:13. ஆகவே, (நபியே!) அவர்கள் (பின்னும் விசுவாசங்கொள்ளாது) புறக்கணித்து விடுவார்களாயின் அப்போது, “ஆது, ஸமூதுடைய (சமூகத்தார்க்கு ஏற்பட்ட) இடி முழக்கம் போன்றதோர் இடி முழக்கத்தையே, நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கின்றேன்” என்று நீர் கூறுவீராக!
41:14
41:14 اِذْ جَآءَتْهُمُ الرُّسُلُ مِنْۢ بَيْنِ اَيْدِيْهِمْ وَمِنْ خَلْفِهِمْ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ‌ؕ قَالُوْا لَوْ شَآءَ رَبُّنَا لَاَنْزَلَ مَلٰٓٮِٕكَةً فَاِنَّا بِمَاۤ اُرْسِلْتُمْ بِهٖ كٰفِرُوْنَ‏
اِذْ جَآءَتْهُمُ الرُّسُلُ அவர்களிடம் வந்தபோது/தூதர்கள் مِنْۢ بَيْنِ اَيْدِيْهِمْ அவர்களுக்கு முன்னிருந்து(ம்) وَمِنْ خَلْفِهِمْ இன்னும் அவர்களுக்குப் பின்னிருந்து اَلَّا تَعْبُدُوْۤا வணங்காதீர்கள் اِلَّا தவிர اللّٰهَ‌ؕ அல்லாஹ்வை قَالُوْا அவர்கள் கூறினார்கள் لَوْ شَآءَ நாடியிருந்தால் رَبُّنَا எங்கள் இறைவன் لَاَنْزَلَ இறக்கி இருப்பான் مَلٰٓٮِٕكَةً வானவர்களை فَاِنَّا நிச்சயமாக நாங்கள் بِمَاۤ اُرْسِلْتُمْ எதைக் கொடுத்து அனுப்பப்பட்டீர்களோ بِهٖ அதை كٰفِرُوْنَ‏ நிராகரிப்பவர்கள்தான்
41:14. “அல்லாஹ்வையன்றி (வேறு) எதனையும் நீங்கள் வணங்காதீர்கள்” என்று அவர்களுக்கு முன்னாலும், பின்னாலும் அவர்களிடம் தூதர்கள் வந்த போது: “எங்கள் இறைவன் நாடியிருந்தால் அவன் மலக்குகளை(த் தூதர்களாக) இறக்கியிருப்பான். ஆகவேதான், நீங்கள் எதனைக்கொண்டு அனுப்பப்பட்டிருக்கிறீர்களோ அதனை நாங்கள் நிச்சயமாக நிராகரிக்கிறோம்” என்று சொன்னார்கள்.
41:14. அவர்களிடத்தில் (நமது பல) தூதர்கள் அவர்களுக்கு முன்னும் பின்னுமாக வந்து, (அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்வைத் தவிர மற்ற எதையும் வணங்காதீர்கள்'' என்று கூறினர். அதற்கு அவர்கள், ‘‘எங்கள் இறைவன் (மெய்யாகவே எங்களுக்கு ஒரு தூதரை அனுப்ப) விரும்பியிருந்தால், வானவர்களையே (தூதர்களாக) இறக்கி வைத்திருப்பான். ஆகவே, நிச்சயமாக நாங்கள், நீங்கள் கொண்டு வந்த (இத்தூ)தை நிராகரிக்கிறோம்'' என்று கூறினார்கள்.
41:14. இறைவனின் தூதர்கள் அவர்களுக்கு முன்னும் பின்னுமாய் ஒவ்வொரு திசையிலிருந்தும் அவர்களிடம் வந்தார்கள். ‘அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அடிபணியாதீர்கள்’ என அவர்களுக்கு விளக்கினார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவன் நாடியிருந்தால் வானவர்களை அனுப்பியிருப்பானே! எனவே நீங்கள் கொண்டு வந்திருக்கும் தூதுச் செய்தியை நாங்கள் ஏற்பது இல்லை.”
41:14. “அல்லாஹ்வைத் தவிர (மற்ற) எதனையும் நீங்கள் வணங்காதீர்கள்” என்று (கூறி நம்முடைய) தூதர்கள் அவர்களுக்கு முன்பாகவும், அவர்களுக்குப் பின்பாகவும் அவர்களிடத்தில் வந்தபோது, (அத்தூதர்களிடம்) அவர்கள் “எங்கள் இரட்சகன் நாடியிருந்தால், அவன் மலக்குகளை (த்தூதர்களாக) திட்டமாக இறக்கி வைத்திருப்பான், ஆகவே, நிச்சயமாக, நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டிருக்கிறீர்களோ அதை நாங்கள் நிராகரிக்கக் கூடியவர்கள் தாம்” என்று கூறினார்கள்.
41:15
41:15 فَاَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوْا فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوْا مَنْ اَشَدُّ مِنَّا قُوَّةً  ‌ؕ اَوَلَمْ يَرَوْا اَنَّ اللّٰهَ الَّذِىْ خَلَقَهُمْ هُوَ اَشَدُّ مِنْهُمْ قُوَّةً  ؕ وَكَانُوْا بِاٰيٰتِنَا يَجْحَدُوْنَ‏
فَاَمَّا عَادٌ ஆக, ஆது சமுதாயம் فَاسْتَكْبَرُوْا பெருமை அடித்தனர் فِى الْاَرْضِ பூமியில் بِغَيْرِ الْحَقِّ அநியாயமாக وَقَالُوْا இன்னும் கூறினார்கள் مَنْ யார் اَشَدُّ மிக பலசாலி(கள்) مِنَّا எங்களை விட قُوَّةً  ؕ வலிமையால் اَوَلَمْ يَرَوْا இவர்கள் கவனிக்கவில்லையா? اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் الَّذِىْ خَلَقَهُمْ எவன்/படைத்தான்/அவர்களை هُوَ அவன் اَشَدُّ மிக பலசாலி مِنْهُمْ அவர்களை விட قُوَّةً  ؕ வலிமையால் وَكَانُوْا அவர்கள் இருந்தனர் بِاٰيٰتِنَا நமது வசனங்களை يَجْحَدُوْنَ‏ மறுப்பவர்களாக
41:15. அன்றியும் ஆது(க் கூட்டத்தார்) பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டு, “எங்களை விட வலிமையில் மிக்கவர்கள் யார்?” என்று கூறினார்கள் - அவர்களைப் படைத்த அல்லாஹ் நிச்சயமாக அவர்களை விட வலிமையில் மிக்கவன் என்பதை அவர்கள் கவனித்திருக்க வில்லையா? இன்னும் அவர்கள் நம் அத்தாட்சிகளை மறுத்தவாறே இருந்தார்கள்.
41:15. ஆது என்னும் மக்களோ, பூமியில் நியாயமின்றிப் பெருமைகொண்டு, எங்களைவிட பலசாலியாரென்று கூறினார்கள். அவர்களைப் படைத்த அல்லாஹ் நிச்சயமாக அவர்களைவிட பலசாலி என்பதை அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா? (எனினும்,) அவர்கள் நமது (இத்தகைய) அத்தாட்சிகளையும் (தர்க்கித்து) நிராகரித்துக் கொண்டே இருந்தார்கள்.
41:15. ஆத் சமூகத்தாரின் நிலைமை இதுவே: அவர்கள் பூமியில் எவ்வித நியாயமுமின்றி பெருமையடித்துக் கொண்டு திரிந்தார்கள். “எங்களைவிட வலிமை மிக்கவர் யார்?” அவர்களைப் படைத்த இறைவன் அவர்களைவிட வலிமை மிக்கவன் என்பது அவர்களுக்குப் புலப்படவில்லையா? அவர்கள் நம் சான்றுகளை மறுத்துக் கொண்டிருந்தார்கள்.
41:15. ஆகவே, ஆது (கூட்டத்தார்) பற்றிய விளக்கமாவது, அவர்கள் பூமியில் நியாயமின்றிப் பெருமையடித்துக் கொண்டிருந்தார்கள், எங்களைவிட பலத்தால் மிக்கவர் யார்? என்றும் கூறினார்கள், அவர்களை படைத்தானே அத்தகைய அல்லாஹ்_அவன் நிச்சயமாக, அவர்களைவிட பலத்தால் மிக்கவன் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவர்கள் நம்முடைய (இத்தகைய) அத்தாட்சிகளை மறுப்பவர்களாகவும் இருந்தார்கள்.
41:16
41:16 فَاَرْسَلْنَا عَلَيْهِمْ رِيْحًا صَرْصَرًا فِىْۤ اَيَّامٍ نَّحِسَاتٍ لِّـنُذِيْقَهُمْ عَذَابَ الْخِزْىِ فِى الْحَيٰوةِ الدُّنْيَا‌ ؕ وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَخْزٰى‌ وَهُمْ لَا يُنْصَرُوْنَ‏
فَاَرْسَلْنَا ஆகவே அனுப்பினோம் عَلَيْهِمْ அவர்கள் மீது رِيْحًا காற்றை صَرْصَرًا கடும் குளிர்(ந்தது) فِىْۤ اَيَّامٍ நாள்களில் نَّحِسَاتٍ துரதிர்ஷ்டமான لِّـنُذِيْقَهُمْ நாம் அவர்களுக்கு சுவைக்க வைப்பதற்காக عَذَابَ வேதனையை الْخِزْىِ கேவலமான فِى الْحَيٰوةِ الدُّنْيَا‌ ؕ இவ்வுலகில் وَلَعَذَابُ வேதனையோ الْاٰخِرَةِ மறுமையின் اَخْزٰى‌ மிக கேவலமானது وَهُمْ لَا يُنْصَرُوْنَ‏ இன்னும் அவர்கள் உதவி செய்யப்படமாட்டார்கள்
41:16. ஆதலினால், இவ்வுலக வாழ்வில் அவர்கள் இழிவு தரும் வேதனையைச் சுவைக்கும்படிச் செய்ய, கெட்ட நாட்களில் அவர்கள் மீது ஒரு கொடிய புயல் காற்றை அனுப்பினோம்; மேலும், மறுமையிலுள்ள வேதனையோ மிகவும் இழிவுள்ளதாகும்; அன்றியும் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்பட மாட்டார்கள்.
41:16. ஆகவே, நாம் அவர்கள் மீது (வந்த வேதனையின்) கெட்ட நாள்களில் கொடிய புயல் காற்றை அனுப்பி, இழிவு தரும் வேதனையை இந்த உலகத்திலேயே அவர்கள் சுவைக்கும்படி செய்தோம். (அவர்களுக்கு) மறுமையிலுள்ள வேதனையோ, (இதைவிட) இழிவு தரக்கூடியதாகும். (அங்கு எவராலும்) அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.
41:16. இறுதியில், அபசகுனமுடைய சில நாட்களில் கடும் புயற்காற்றை அவர்கள் மீது நாம் அனுப்பினோம். உலக வாழ்விலேயே இழிவான வேதனையை அவர்கள் சுவைக்கச் செய்திட வேண்டும் என்பதற்காக! மேலும், மறுமையின் வேதனை இதைவிடவும் இழிவு தரக்கூடியதாகும். அங்கு அவர்களுக்கு உதவி செய்யக்கூடியவர் எவரும் இருக்கமாட்டார்.
41:16. ஆகவே, இவ்வுலக வாழ்வில் இழிவு தரும் வேதனையை அவர்களுக்கு நாம் சுவைக்கச் செய்வதற்காக, துர்ச்சகுனமான நாட்களில் அவர்களின் மீது கொடிய புயல் காற்றை நாம் அனுப்பிவைத்தோம், மறுமையின் வேதனையோ, (இதனைவிட) மிக இழிவு தரக்கூடியதாகும், (அங்கு எவராலும்) அவர்கள் உதவி செய்யப்படவுமாட்டார்கள்.
41:17
41:17 وَاَمَّا ثَمُوْدُ فَهَدَيْنٰهُمْ فَاسْتَحَبُّوا الْعَمٰى عَلَى الْهُدٰى فَاَخَذَتْهُمْ صٰعِقَةُ الْعَذَابِ الْهُوْنِ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‌ۚ‏
وَاَمَّا ثَمُوْدُ ஆக, ஸமூது சமுதாயம் فَهَدَيْنٰهُمْ அவர்களுக்கு நேர்வழிகாட்டினோம் فَاسْتَحَبُّوا (ஆனால்) அதிகம் விரும்பினார்கள் الْعَمٰى குருட்டுத் தனத்தைத்தான் عَلَى الْهُدٰى நேர்வழியை விட فَاَخَذَتْهُمْ ஆகவே, அவர்களைப் பிடித்தது صٰعِقَةُ பேரழிவு الْعَذَابِ வேதனையின் الْهُوْنِ இழிவான بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‌ۚ‏ அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக
41:17. ஸமூது (கூட்டத்தாருக்கோ) நாம் அவர்களுக்கு நேரான வழியைக் காண்பித்தோம், ஆயினும், அவர்கள் நேர்வழியைக் காட்டிலும் குருட்டுத்தனத்தையே நேசித்தார்கள். ஆகவே, அவர்கள் சம்பாதித்துக் கொண்ட(பாவத்)தின் காரணமாக, இழிவான வேதனையாகிய இடி முழக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.
41:17. ஸமூது என்னும் மக்களோ, அவர்களுக்கும் நாம் (நம் தூதரை அனுப்பி) நேரான வழியை அறிவித்தோம். எனினும், அவர்களும் நேரான வழியில் செல்லாது குருடராய் இருப்பதையே விரும்பினார்கள். ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயலின் காரணமாக இழிவான வேதனையைக் கொண்டுள்ள இடி முழக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.
41:17. ஸமூத் சமூகத்தாரின் நிலைமை இதுவே: நாம் அவர்களுக்கு எது நேர்வழி என்பதை எடுத்துக் காட்டினோம். ஆனால், அவர்கள் நேர்வழியைப் பார்ப்பதற்குப் பதிலாக குருடர்களாய் இருக்க விரும்பினார்கள்! இறுதியில், அவர்கள் செய்த தீவினைகளின் காரணமாக இழிவான வேதனை அவர்களைத் திடீரெனத் தாக்கியது.
41:17. இன்னும் ஸமூது (கூட்டத்தார்) பற்றிய விளக்கமாவது அவர்களுக்கு நாம் நேர்வழியைக் காண்பித்தோம், எனினும், அவர்கள் நேர்வழியைவிட குருட்டுத்தனத்தையே விரும்பினார்கள். ஆகவே, அவர்கள் சம்பாதித்துக் கொண்டதன் காரணமாக இழிவான, வேதனையான இடி முழக்கம் அவர்களைப் பிடித்துக்கொண்டது.
41:18
41:18 وَ نَجَّيْنَا الَّذِيْنَ اٰمَنُوْا وَكَانُوْا يَتَّقُوْنَ‏
وَ نَجَّيْنَا நாம் பாதுகாத்தோம் الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கைகொண்டனர் وَكَانُوْا இன்னும் இருந்தார்கள் يَتَّقُوْنَ‏ அஞ்சுபவர்களாக
41:18. ஆனால், ஈமான் கொண்டு பயபக்தியுடன் இருந்தவர்களை நாம் ஈடேற்றினோம்.  
41:18. அவர்களில் நம்பிக்கை கொண்டு (பாவத்திலிருந்து) விலகிக் கொண்டவர்களை நாம் பாதுகாத்துக் கொண்டோம்.
41:18. இறைநம்பிக்கை கொண்டு வழிகேட்டிலிருந்தும், தீய செயலில் இருந்தும் விலகியிருந்தவர்களை நாம் காப்பாற்றிக் கொண்டோம்.
41:18. இன்னும் விசுவாசங்கொண்டு, பயந்துகொண்டிருந்தார்களே, அத்தகையோரை நாம் காப்பாற்றினோம்.
41:19
41:19 وَيَوْمَ يُحْشَرُ اَعْدَآءُ اللّٰهِ اِلَى النَّارِ فَهُمْ يُوْزَعُوْنَ‏
وَيَوْمَ நாளில் يُحْشَرُ ஒன்று திரட்டப்படுகின்றார்(கள்) اَعْدَآءُ எதிரிகள் اللّٰهِ அல்லாஹ்வின் اِلَى النَّارِ நரகத்தின் பக்கம் فَهُمْ ஆகவே, அவர்கள் يُوْزَعُوْنَ‏ நிறுத்தி வைக்கப்படுவார்கள்
41:19. மேலும், அல்லாஹ்வின் பகைவர்கள் (நரகத்)தீயின் பால் ஒன்று திரட்டப்படும் நாளில், அவர்கள் (தனித் தனியாகப்) பிரிக்கப்படுவார்கள்.
41:19. அல்லாஹ்வுடைய எதிரிகளை நரகத்தின் பக்கம் ஒன்று சேர்க்கப்படும் நாளில் (அதன் சமீபமாக வந்ததும்) அவர்கள் (விசாரணைக்காக குழுக்கள் குழுக்களாக) பிரித்து நிறுத்தப்படுவார்கள்.
41:19. அந்த நேரத்தை சற்று நினைவுகூருங்கள்: அப்போது அல்லாஹ்வின் இந்தப் பகைவர்கள் நரகின் பக்கம் கொண்டு செல்வதற்காக ஒன்று திரட்டப்படுவார்கள். அவர்களில் முன்னோர்கள், பின்னோர்கள் வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவார்கள்.
41:19. மேலும், அல்லாஹ்வுடைய விரோதிகள் நரகத்தின்பால் ஒன்று சேர்க்கப்படும் நாளில் (அவர்கள் தொடக்கம் முதல் கடைசி வரையில் உள்ளோரை வரிசைப்படுத்தி ஒருவரையொருவர் முந்திவிடாது மலக்குகளால்) அவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள்.
41:20
41:20 حَتّٰٓى اِذَا مَا جَآءُوْهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَاَبْصَارُهُمْ وَجُلُوْدُهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
حَتّٰٓى இறுதியாக اِذَا مَا جَآءُوْهَا அவர்கள் அதனிடம் வரும் போது شَهِدَ சாட்சி கூறும் عَلَيْهِمْ அவர்களுக்கு எதிராகவே سَمْعُهُمْ அவர்களுடைய செவி(யும்) وَاَبْصَارُهُمْ அவர்களுடைய பார்வைகளும் وَجُلُوْدُهُمْ அவர்களுடைய தோல்களும் بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏ அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி
41:20. இறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்.
41:20. அச்சமயம் (பாவம் செய்த) அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய (உடல்) தோல்களும் அவர்கள் (அவற்றின் மூலம்) செய்தவற்றைப் பற்றி சாட்சி கூறும்.
41:20. இறுதியில், அனைவரும் அங்கு சென்றடையும்போது அவர்களின் காதுகளும், அவர்களின் கண்களும், அவர்களுடைய உடம்பின் தோல்களும் உலகில் அவை என்னென்ன செயல்களைச் செய்து கொண்டிருந்தன என்று அவர்களுக்கு எதிராக சாட்சி கூறும்.
41:20. இறுதியாக (நரகமாகிய) அதன் பால் அவர்கள் வந்தடைந்து விடுவார்களானால், (பாவம் செய்த) அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய செவியும், அவர்களுடைய பார்வைகளும், அவர்களுடைய தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்.
41:21
41:21 وَقَالُوْا لِجُلُوْدِهِمْ لِمَ شَهِدْتُّمْ عَلَيْنَا‌ ؕ قَالُوْۤا اَنْطَقَنَا اللّٰهُ الَّذِىْۤ اَنْطَقَ كُلَّ شَىْءٍ وَّهُوَ خَلَقَكُمْ اَوَّلَ مَرَّةٍ وَّاِلَيْهِ تُرْجَعُوْنَ‏
وَقَالُوْا அவர்கள் கூறுவார்கள் لِجُلُوْدِهِمْ தங்களுடைய தோல்களிடம் لِمَ شَهِدْتُّمْ ஏன் சாட்சிகூறினீர்கள் عَلَيْنَا‌ ؕ எங்களுக்கு எதிராக قَالُوْۤا அவை கூறும் اَنْطَقَنَا எங்களை(யும்) பேச வைத்தான் اللّٰهُ அல்லாஹ் الَّذِىْۤ எவன் اَنْطَقَ பேசவைத்தான் كُلَّ شَىْءٍ எல்லாவற்றையும் وَّهُوَ அவன்தான் خَلَقَكُمْ உங்களைப் படைத்தான் اَوَّلَ مَرَّةٍ முதல் முறையாக وَّاِلَيْهِ இன்னும் அவன் பக்கம்தான் تُرْجَعُوْنَ‏ நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
41:21. அவர்கள் தம் தோல்களை நோக்கி, “எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று கேட்பார்கள்; அதற்கு அவை: “எல்லாப் பொருட்களையும் பேசும் படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசும்படிச் செய்தான்; அவன்தான் உங்களை முதல் தடவையும் படைத்தான்; பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்” என்று கூறும்.
41:21. அதற்கவர்கள், தங்கள் தோல்களை நோக்கி, ‘‘எங்களுக்கு விரோதமாக நீங்கள் ஏன் சாட்சியம் கூறினீர்கள்?'' என்று கேட்பார்கள். அதற்கு அவை, ‘‘எல்லா பொருள்களையும் பேசும்படி செய்கின்ற அல்லாஹ்வே எங்களையும் பேசும்படி செய்தான். அவன்தான் உங்களை முதல் முறையாகவும் படைத்தான். (இறந்த) பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்'' என்றும் அவை கூறும்.
41:21. அவர்கள் தங்கள் தோல்களைப் பார்த்துக் கேட்பார்கள்: “எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி சொன்னீர்கள்?” அதற்கு அவை பதிலளிக்கும்: “ஒவ்வொன்றையும் பேச வைத்த இறைவனாகிய அல்லாஹ்தான் எங்களையும் பேச வைத்தான். அவனே உங்களை முதன் முறையாகப் படைத்தான். மேலும், இப்போது அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு செல்லப்படுகின்றீர்கள்.
41:21. அ(தற்க)வர்கள், தங்களின் தோல்களிடம், “எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்றும் கேட்பார்கள், அதற்கு அவைகள், ஒவ்வொரு பொருளையும் பேசச் செய்தவனாகிய அல்லாஹ்தான் எங்களைப் பேசவைத்தான், அவன் தான் உங்களை முதல் தடவையும் படைத்தான், (இறந்த பின்னரும்) நீங்கள் அவனிடமே திருப்பப்பட்டிருகின்றீர்கள்” என்று கூறும்.
41:22
41:22 وَمَا كُنْتُمْ تَسْتَتِرُوْنَ اَنْ يَّشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ وَلَاۤ اَبْصَارُكُمْ وَلَا جُلُوْدُكُمْ وَلٰكِنْ ظَنَنْتُمْ اَنَّ اللّٰهَ لَا يَعْلَمُ كَثِيْرًا مِّمَّا تَعْمَلُوْنَ‏
وَمَا كُنْتُمْ நீங்கள் இருக்கவில்லை تَسْتَتِرُوْنَ மறைப்பவர்களாக اَنْ يَّشْهَدَ சாட்சி கூறிவிடும் என்பதற்காக عَلَيْكُمْ உங்களுக்கு எதிராக سَمْعُكُمْ உங்கள் செவியும் وَلَاۤ اَبْصَارُكُمْ உங்கள் பார்வைகளும் وَلَا جُلُوْدُكُمْ உங்கள் தோல்களும் وَلٰكِنْ என்றாலும் ظَنَنْتُمْ நீங்கள் எண்ணினீர்கள் اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَا يَعْلَمُ அறியமாட்டான் كَثِيْرًا அதிகமானதை مِّمَّا تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்வதில்
41:22. “உங்கள் காதுகளும், உங்கள் கண்களும், உங்கள் தோல்களும், உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லாமலிருக்கும் பொருட்டு, உ(ங்கள் பாவ)ங்களை நீங்கள் மறைத்துக் கொள்ளவில்லை; அன்றியும், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிகுதமானதை நிச்சயமாக அல்லாஹ் அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணிக்கொண்டீர்கள்.
41:22. உங்கள் செவிகளும், உங்கள் கண்களும், உங்கள் தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் கூறாமல் இருக்க, நீங்கள் (உங்கள் பாவங்களை அவற்றை விட்டும்) மறைக்க முடியவில்லை. எனினும், நீங்கள் செய்பவற்றில் அதிகமானவற்றை அல்லாஹ் அறியவே மாட்டான் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்.
41:22. உலகில் நீங்கள் குற்றங்களை இரகசியமாக செய்து கொண்டிருந்தபோது உங்களுடைய காதுகளும், உங்களுடைய கண்களும், உங்களுடைய தோல்களும் உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லும் எனும் எண்ணமே உங்களுக்கு இருந்ததில்லை. மாறாக, நீங்கள் செய்கின்ற செயல்களில் பெரும்பாலானவற்றை அல்லாஹ்கூட அறிய மாட்டான் என்று நீங்கள் எண்ணியிருந்தீர்கள்.
41:22. “உங்களுடைய செவிப்புலனும், உங்களுடைய பார்வைகளும், உங்களுடைய தோல்களும் உங்களுக்கெதிராக சாட்சியங்கூறாமலிருக்க, நீங்கள் (உங்களுடைய செயல்களை அவைகளுக்கு) மறைத்துக்கொள்ளக் கூடியவர்களாக நீங்கள் இருந்திருக்கவில்லை, எனினும், நீங்கள் செய்பவற்றிலிருந்து அநேகவற்றை நிச்சயமாக அல்லாஹ் அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணிக்கொண்டிருந்தீர்கள்.
41:23
41:23 وَذٰلِكُمْ ظَنُّكُمُ الَّذِىْ ظَنَنْتُمْ بِرَبِّكُمْ اَرْدٰٮكُمْ فَاَصْبَحْتُمْ مِّنَ الْخٰسِرِيْنَ‏
وَذٰلِكُمْ அந்த ظَنُّكُمُ உங்கள் எண்ணம்தான் الَّذِىْ எது ظَنَنْتُمْ எண்ணினீர்கள் بِرَبِّكُمْ உங்கள் இறைவனைப் பற்றி اَرْدٰٮكُمْ உங்களை நாசமாக்கியது فَاَصْبَحْتُمْ ஆகவே, நீங்கள் ஆகிவிட்டீர்கள் مِّنَ الْخٰسِرِيْنَ‏ நஷ்டவாளிகளில்
41:23. ஆகவே, உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் எண்ணிய உங்களுடைய (தவறான) இந்த எண்ணம்தான் உங்களை அழித்து விட்டது; ஆகவே நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிட்டீர்கள் (என்றும் அவை கூறும்).
41:23. நீங்கள் உங்கள் இறைவனைப் பற்றி எண்ணிய உங்கள் (இத்தவறான) எண்ணம்தான் உங்களை அழித்துவிட்டது. ஆதலால், நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகிவிட்டீர்கள்.
41:23. உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் கொண்டிருந்த உங்களுடைய இந்த எண்ணமே உங்களை அழிவில் ஆழ்த்தி விட்டது. அதே காரணத்தால் நீங்கள் இழப்புக்குரியவர்களாய் ஆகிவிட்டீர்கள்.”
41:23. “அதுதான் உங்கள் இரட்சகனைப்பற்றி நீங்கள் எண்ணிக்கொண்டிருந்த உங்களுடைய (தீய) எண்ணமாகும், அது உங்களை அழித்துவிட்டது, ஆதலால் நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிட்டீர்கள்” (என்று அவை கூறும்).
41:24
41:24 فَاِنْ يَّصْبِرُوْا فَالنَّارُ مَثْوًى لَّهُمْ‌ؕ وَاِنْ يَّسْتَعْتِبُوْا فَمَا هُمْ مِّنَ الْمُعْتَبِيْنَ‏
فَاِنْ يَّصْبِرُوْا அவர்கள் பொறுமையாக இருந்தாலும் فَالنَّارُ நரகம்தான் مَثْوًى தங்குமிடமாகும் لَّهُمْ‌ؕ அவர்களுக்குரிய وَاِنْ يَّسْتَعْتِبُوْا அவர்கள் தங்களைத் திருப்புமாறு கோரினால் فَمَا هُمْ مِّنَ الْمُعْتَبِيْنَ‏ அப்படி அவர்கள் திருப்பப்பட மாட்டார்கள்
41:24. ஆகவே, அவர்கள் (வேதனையைச் சகித்துப்) பொறுமையாக இருந்த போதிலும், அவர்களுக்கு (நரக) நெருப்புத்தான் தங்குமிடம் ஆகும் - அன்றி (கூக்குரலிட்டு) அவர்கள் மன்னிப்புக்கேட்ட போதிலும், அவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள்.
41:24. ஆகவே, அவர்கள் (ஏதும் பேசாது சிரமங்களைச்) சகித்துக் கொண்டிருந்த போதிலும், அவர்களுக்கு தங்குமிடம் நரகம்தான். அவர்கள் மன்னிப்புக் கோரியபோதிலும், அவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள்.
41:24. இந்நிலையில் அவர்கள் பொறுமையுடனிருந்தாலும் (இல்லாவிட்டாலும்) நரகமே அவர்களின் இருப்பிடமாகும். மேலும், அவர்கள் திரும்பிச் செல்வதற்கு ஒரு வாய்ப்பை விரும்பினாலும் எந்த வாய்ப்பும் அவர்களுக்குக் கொடுக்கப்படமாட்டாது.
41:24. பின்னர், அவர்கள் பொருத்துக் கொள்வார்களானால், அவர்கள் தங்குமிடம் நரகம்தான், இன்னும், அவர்கள் (நற்செயல்கள் செய்து அல்லாஹ்வைத்) திருப்திப்படுத்தத் தேடினால், (அல்லாஹ்வைத் திருத்திப்படுத்தும் எச்செயலையும் செய்ய) அவர்கள் சிரமப்படுத்தப் படுபவர்களில் உள்ளவர்களல்லர்.
41:25
41:25 وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَآءَ فَزَيَّنُوْا لَهُمْ مَّا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَحَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ فِىْۤ اُمَمٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمْ مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ‌ۚ اِنَّهُمْ كَانُوْا خٰسِرِيْنَ‏
وَقَيَّضْنَا நாம் இலகுவாக்கி அமைத்துக் கொடுத்தோம் لَهُمْ அவர்களுக்கு قُرَنَآءَ சில நண்பர்களை فَزَيَّنُوْا அலங்கரித்துக் காட்டினார்கள் لَهُمْ அவர்களுக்கு مَّا بَيْنَ اَيْدِيْهِمْ அவர்களுக்கு முன்னுள்ளதை(யும்) وَمَا خَلْفَهُمْ அவர்களுக்கு பின்னுள்ளதையும் وَحَقَّ இன்னும் உறுதியாகிவிட்டது عَلَيْهِمُ இவர்கள் மீதும் الْقَوْلُ விதிக்கப்பட்ட அதே விதி فِىْۤ اُمَمٍ சமுதாயங்களுக்கு قَدْ خَلَتْ சென்று விட்டனர் مِنْ قَبْلِهِمْ இவர்களுக்கு முன்னர் مِّنَ الْجِنِّ ஜின்களில் وَالْاِنْسِ‌ۚ மற்றும் மனிதர்களில் اِنَّهُمْ நிச்சயமாக இவர்கள் كَانُوْا இருக்கின்றனர் خٰسِرِيْنَ‏ நஷ்டவாளிகளாக
41:25. நாம் அவர்களுக்கு (தீய) கூட்டாளிகளை இணைத்து விட்டோம்; ஆகவே, (அத்தீய கூட்டாளிகள்) அவர்களுக்கு, முன்னாலிருப்பதையும் பின்னாலிருப்பதையும் அழகாக்கிக் காண்பித்தார்கள்; அன்றியும் அவர்களுக்கு முன்னே சென்று போன ஜின்களும் மனிதர்களுமாகிய சமுதாயத்தார் மீது நம்வாக்கு உறுதியாகிவிட்டது - நிச்சயமாக அவர்கள் நஷ்டவாளிகளாயினர்.  
41:25. நாம் அவர்களுக்கு, இணைபிரியாத (சில கெட்ட) தோழர்களை இணைத்து விட்டோம். அவர்கள், அவர்களுக்கு முன்னும் பின்னுமுள்ள (தீய காரியங்கள்) அனைத்தையும் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து விட்டார்கள். ஆகவே, இவர்கள் மீதும், இவர்களுக்கு முன்சென்ற (இவர்களைப் போன்ற பல) மனித, ஜின் கூட்டத்தினர் மீதும் (அவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள் என்ற) நம் வாக்கு உறுதியாகிவிட்டது. நிச்சயமாக இவர்கள் (அனைவரும்) நஷ்டமடைந்து விட்டனர்.
41:25. அவர்கள் மீது சில நண்பர்களை நாம் சாட்டியிருந்தோம். அவர்களோ அவர்களுக்கு முன்னாலும் பின்னாலுமுள்ள ஒவ்வொன்றையும் அழகுபடுத்திக் காட்டிக் கொண்டிருந்தார்கள். இறுதியில் அவர்களுக்கு முன்பு வாழ்ந்த ஜின் இனத்தின் மீதும் மனித இனத்தின் மீதும் விதிக்கப்பட்ட வேதனையின் தீர்ப்பு அவர்கள் மீதும் விதிக்கப்பட்டு விட்டது. திண்ணமாக, அவர்கள் இழப்புக்குரியவர்களாகி விட்டனர்.
41:25. மேலும், நாம் அவர்களுக்கு (ஷைத்தான்களிலிருந்து) தோழர்களை இணைத்துவிட்டோம், ஆகவே, (அத்தோழர்கள்) அவர்களுக்கு முன்னிருப்பதையும், அவர்களுக்குப் பின்னிருப்பதையும் அவர்களுக்கு அழகாக்கிக் காண்பித்தார்கள், இன்னும், இவர்களுக்கு முன் சென்று போன ஜின்கள், மனிதர்கள், ஆகிய சமூகத்தவர்களுடன் நம்முடைய (வேதனையின்) வாக்கு இவர்களின் மீது உறுதியாகிவிட்டது, நிச்சயமாக இவர்கள் (யாவரும்) நஷ்டமடைந்தவர்களாக ஆகிவிட்டனர்.
41:26
41:26 وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لَا تَسْمَعُوْا لِهٰذَا الْقُرْاٰنِ وَالْغَوْا فِيْهِ لَعَلَّكُمْ تَغْلِبُوْنَ‏
وَقَالَ கூறினார்கள் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பாளர்கள் لَا تَسْمَعُوْا செவியுறாதீர்கள் لِهٰذَا الْقُرْاٰنِ இந்த குர்ஆனை وَالْغَوْا கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்துங்கள்! فِيْهِ அதில் لَعَلَّكُمْ تَغْلِبُوْنَ‏ நீங்கள்வெற்றி பெறுவீர்கள்
41:26. “நீங்கள் இந்த குர்ஆனை செவி ஏற்காதீர்கள். (அது ஓதப்படும் போது) அதில் (குழப்பம் செய்து) கூச்சலிடுங்கள், நீங்கள் அதனால் மிகைத்து விடுவீர்கள்” என்றும் காஃபிர்கள் (தங்களைச் சார்ந்தோரிடம்) கூறினர்.
41:26. நிராகரிப்பவர்கள் (மற்றவர்களை நோக்கி) நீங்கள் ‘‘இந்த குர்ஆனை செவிமடுக்காதீர்கள். (எவர் அதை ஓதியபோதிலும் நீங்கள் அச்சமயம் சப்தமிட்டு) அதில் குழப்பம் உண்டு பண்ணுங்கள். அதனால், நீங்கள் (அவர்களை) வென்று விடுவீர்கள்'' என்றும் கூறினார்கள்.
41:26. சத்தியத்தை நிராகரிக்கும் இவர்கள் கூறுகிறார்கள்: “இந்தக் குர்ஆனை அறவே செவியேற்காதீர்கள். இது ஓதப்பட்டால், அதற்கு இடையூறு செய்யுங்கள்; இதன் மூலம் நீங்கள் வென்றுவிடலாம்.”
41:26. மேலும், நிராகரித்து விட்டார்களே அத்தகையோர்_(மற்றவர்களிடம்) “நீங்கள் இந்தக் குர் ஆனை கேட்காதீர்கள், (அது ஓதப்படும் போது மற்றவர்கள் கேட்காதிருக்க) அதில் (கூச்சலிடுவது போன்ற) வீணானவற்றையும் செய்யுங்கள், நீங்கள் (அதனால்) மிகைத்துவிடலாம்” என்று கூறினர்.
41:27
41:27 فَلَـنُذِيْقَنَّ الَّذِيْنَ كَفَرُوْا عَذَابًا شَدِيْدًاۙ وَّلَنَجْزِيَنَّهُمْ اَسْوَاَ الَّذِىْ كَانُوْا يَعْمَلُوْنَ‏
فَلَـنُذِيْقَنَّ ஆகவே, நிச்சயமாக சுவைக்க வைப்போம் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்களுக்கு عَذَابًا வேதனையை شَدِيْدًاۙ கடுமையான وَّلَنَجْزِيَنَّهُمْ இன்னும் அவர்களுக்கு நிச்சயமாக கூலி கொடுப்போம் اَسْوَاَ மிகக் கெட்ட செயலுக்கு الَّذِىْ كَانُوْا يَعْمَلُوْنَ‏ அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில்
41:27. ஆகவே, காஃபிர்களை நாம் நிச்சயமாக கொடிய வேதனையைச் சுவைக்க செய்வோம் - அன்றியும், நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருந்ததில் மிகத் தீயதை அவர்களுக்குக் கூலியாக கொடுப்போம்.
41:27. ஆகவே, நிச்சயமாக இந்நிராகரிப்பவர்கள் கடினமான வேதனையைச் சுவைக்கும்படி செய்வோம். நிச்சயமாக நாம் இவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயல்களைவிட மிக தீய (கொடிய) வேதனையைக் கூலியாக அவர்களுக்குக் கொடுத்தே தீருவோம்.
41:27. நாம் இந்த நிராகரிப்பாளர்களுக்குக் கடும் வேதனையைச் சுவைக்கச் செய்தே தீருவோம். அவர்கள் செய்து கொண்டிருந்த மிக மோசமான செயல்களுக்குரிய முழுக்கூலியையும் அவர்களுக்கு நாம் கொடுப்போம்.
41:27. ஆகவே, நாம் நிச்சயமாக நிராகரித்துவிட்டோரை கடினமான வேதனையைச் சுவைக்குமாறு செய்வோம். இன்னும், நிச்சயமாக, நாம் அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றில் மிகத்தீயதை அவர்களுக்குக் கூலியாக் கொடுப்போம்.
41:28
41:28 ذٰ لِكَ جَزَآءُ اَعْدَآءِ اللّٰهِ النَّارُ‌ ۚ لَهُمْ فِيْهَا دَارُ الْخُـلْدِ‌ ؕ جَزَآءًۢ بِمَا كَانُوْا بِاٰيٰتِنَا يَجْحَدُوْنَ‏
ذٰ لِكَ இதுதான் جَزَآءُ கூலியாகும் اَعْدَآءِ எதிரிகளுக்குரிய اللّٰهِ அல்லாஹ்வின் النَّارُ‌ ۚ நரகம்தான் لَهُمْ அவர்களுக்கு فِيْهَا அதில் دَارُ الْخُـلْدِ‌ ؕ நிரந்தரமாக தங்கும் இல்லம் جَزَآءًۢ கூலியாக بِمَا كَانُوْا அவர்கள் இருந்ததற்கு بِاٰيٰتِنَا நமது வசனங்களை يَجْحَدُوْنَ‏ மறுப்பவர்களாக
41:28. அதுவேதான் அல்லாஹ்வுடைய பகைவர்களுக்குள்ள கூலியாகும் - அதாவது நரகம்; நம் வசனங்களை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் கூலியாக அவர்களுக்கு நிரந்தரமான வீடு அ(ந்நரகத்)தில் உண்டு.
41:28. அல்லாஹ்வுடைய (இந்த) எதிரிகளுக்கு, (இத்தகைய) நரகம்தான் கூலி ஆகும். நம் வசனங்களை இவ்வாறு அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததற்குக் கூலியாக இவர்களுக்கு நிலையான வீடு நரகத்தில்தான் இருக்கிறது.
41:28. அது நரகமாகும். அல்லாஹ்வின் பகைவர்களுக்கு அது கூலியாகக் கிடைக்கும். அதிலேயே அவர்களுக்கு நிரந்தரமான இருப்பிடம் இருக்கும். நம் சான்றுகளை நிராகரித்து வந்த குற்றத்திற்கான தண்டனை இதுதான்.
41:28. அதுவே, அல்லாஹ்வுடைய விரோதிகளுக்குரிய கூலி(யான) நரகமாகும், நம்முடைய வசனங்களை (இவ்வாறு) அவர்கள் மறுத்துக்கொண்டிருந்ததன் கூலியாக, அவர்களுக்கு நிலையான வீடு அ(ந்நரகத்)தில் இருக்கிறது.
41:29
41:29 وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا رَبَّنَاۤ اَرِنَا الَّذَيْنِ اَضَلّٰنَا مِنَ الْجِنِّ وَالْاِنْسِ نَجْعَلْهُمَا تَحْتَ اَقْدَامِنَا لِيَكُوْنَا مِنَ الْاَسْفَلِيْنَ‏
وَقَالَ கூறுவார்(கள்) الَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பவர்கள் رَبَّنَاۤ எங்கள் இறைவா اَرِنَا எங்களுக்குக் காண்பி الَّذَيْنِ اَضَلّٰنَا எவர்கள்/வழிகெடுத்தனர்/எங்களை مِنَ الْجِنِّ وَالْاِنْسِ ஜின் மற்றும் மனிதர்களில் نَجْعَلْهُمَا அ(வ்விரு)வர்களை ஆக்கிக் கொள்கிறோம் تَحْتَ اَقْدَامِنَا எங்கள் பாதங்களுக்குக் கீழ் لِيَكُوْنَا ஆகிவிடுவதற்காக مِنَ الْاَسْفَلِيْنَ‏ மிகக் கீழ்த்தரமானவர்களில்
41:29. (அந்நாளில்:) காஃபிர்கள்: “எங்கள் இறைவா! ஜின்களிலிருந்தும் மனிதனிலிருந்தும் எங்களை வழி கெடுத்தோரை எங்களுக்குக் காட்டுவாயாக! அவ்விருவரும் தாழ்ந்தவர்களாக ஆவதற்காக நாங்கள் எங்களுடைய கால்களுக்குக் கீழாக்கி (மிதிப்போம்)” எனக் கூறுவார்கள்.
41:29. நிராகரித்தவர்கள் அந்நாளில் (இறைவனை நோக்கி,) ‘‘எங்கள் இறைவனே! எங்களை வழிகெடுத்த மனிதர்களையும், ஜின்களையும் எங்களுக்கு நீ காண்பி. அவர்கள் இழிவுக்குள்ளாகும் பொருட்டு, நாங்கள் அவர்களை எங்கள் கால்களுக்குக் கீழாக்கி மிதிப்போம்'' என்று கூறுவார்கள்.
41:29. அங்கு இந்நிராகரிப்பாளர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! எங்களை வழிகெடுத்த ஜின்களையும், மனிதர்களையும் சற்று எங்களுக்குக் காண்பிப்பாயாக! அவர்களை எங்கள் கால்களுக்குக் கீழே போட்டு மிதித்து விடுகின்றோம், பெரும் கேவலத்தில் அவர்களை ஆழ்த்துவதற்காக!”
41:29. நிராகரிப்போர் (அந்நாளில் அல்லாஹ்விடம்) “எங்கள் இரட்சகனே! ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும், எங்களை வழிகெடுத்த இரு சாராரையும் எங்களுக்கு காண்பிப்பாயாக! அவ்விருவரும் தாழ்ந்தோரில் ஆகிவிடுவதற்காக அவ்விருவரையும் நாங்கள் எங்கள் பாதங்களுக்குக் கீழ் ஆக்குவோம்” என்று கூறுவார்கள்.
41:30
41:30 اِنَّ الَّذِيْنَ قَالُوْا رَبُّنَا اللّٰهُ ثُمَّ اسْتَقَامُوْا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلٰٓٮِٕكَةُ اَلَّا تَخَافُوْا وَلَا تَحْزَنُوْا وَاَبْشِرُوْا بِالْجَـنَّةِ الَّتِىْ كُنْتُمْ تُوْعَدُوْنَ‏
اِنَّ الَّذِيْنَ நிச்சயமாக எவர்கள் قَالُوْا கூறினார்கள் رَبُّنَا எங்கள் இறைவன் اللّٰهُ அல்லாஹ்தான் ثُمَّ பிறகு اسْتَقَامُوْا உறுதியாக இருந்தார்கள் تَتَنَزَّلُ இறங்குவார்கள் عَلَيْهِمُ அவர்கள் மீது الْمَلٰٓٮِٕكَةُ வானவர்கள் اَلَّا تَخَافُوْا நீங்கள் பயப்படாதீர்கள்! وَلَا تَحْزَنُوْا இன்னும் கவலைப்படாதீர்கள்! وَاَبْشِرُوْا நற்செய்தி பெறுங்கள்! بِالْجَـنَّةِ சொர்க்கத்தைக் கொண்டு الَّتِىْ كُنْتُمْ تُوْعَدُوْنَ‏ எது/வாக்களிக்கப்பட்டவர்களாக இருந்தீர்கள்
41:30. நிச்சயமாக எவர்கள்: “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, “நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்” (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்.
41:30. எனினும், எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து இருந்தார்களோ அவர்களிடம் நிச்சயமாக வானவர்கள் வந்து (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (ஒன்றுக்கும்) பயப்படாதீர்கள்; கவலைப்படாதீர்கள். உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தைக் கொண்டு சந்தோஷமடையுங்கள்'' என்றும்,
41:30. எவர்கள் “அல்லாஹ் எங்கள் இறைவன்” என்று கூறி பின்னர் அதில் உறுதியாக நிலைத்து நின்றார்களோ திண்ணமாக, அவர்கள் மீது வானவர்கள் இறங்குகின்றார்கள். மேலும், அவர்களிடம் கூறுகின்றார்கள்: “அஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கும் சுவனத்தின் நற்செய்தியினால் மகிழ்ச்சியடையுங்கள்!
41:30. (எனினும்) நிச்சயமாக “எங்கள் இரட்சகன் அல்லாஹ்தான் என்று கூறி பின்னர், (அதன் மீது) உறுதியாக நிலைத்துமிருந்தார்களே அத்தகையோர்_அவர்களின் மீது மலக்குகள் (மரண வேளையில்) இறங்கி (செல்ல இருக்கும் மறுமையைப் பற்றி) நீங்கள் பயப்படாதீர்கள், (நீங்கள் இவ்வுலகில் விட்டுச் செல்லும் மனைவி, மக்கள், சொத்து சுகம் யாவற்றையும் பற்றி) கவலையும்படாதீர்கள். நீங்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தீர்களே, அத்தகைய சுவனபதியைக் கொண்டு நன்மாராயம் பெறுங்கள்” (எனக் கூறுவார்கள்).
41:31
41:31 نَحْنُ اَوْلِيٰٓـؤُکُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَفِى الْاٰخِرَةِ ۚ وَلَـكُمْ فِيْهَا مَا تَشْتَهِىْۤ اَنْفُسُكُمْ وَلَـكُمْ فِيْهَا مَا تَدَّعُوْنَ ؕ‏
نَحْنُ اَوْلِيٰٓـؤُکُمْ நாங்கள் உங்கள் பொறுப்பாளர்கள் فِى الْحَيٰوةِ வாழ்க்கையிலும் الدُّنْيَا இந்த உலக وَفِى الْاٰخِرَةِ ۚ மறுமையிலும் وَلَـكُمْ உங்களுக்கு உண்டு فِيْهَا அதில் مَا எதை تَشْتَهِىْۤ விரும்புகின்றது اَنْفُسُكُمْ உங்கள் மனங்கள் وَلَـكُمْ உங்களுக்கு உண்டு فِيْهَا அதில் مَا تَدَّعُوْنَ ؕ‏ எதை/கேட்கின்றீர்கள்
41:31. “நாங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள்; மேலும் (சுவர்க்கத்தில்) உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கிறது - அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்.
41:31. ‘‘நாங்கள் அவ்வுலக வாழ்க்கையிலும் உங்களுக்கு நண்பர்களாக இருந்தோம்; மறுமையிலும் (நாங்கள் உங்களுக்கு நண்பர்களே). சொர்க்கத்தில் உங்கள் மனம் விரும்பியதெல்லாம் உங்களுக்கு உண்டு. அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்''
41:31. நாங்கள் உங்களுக்கு உற்ற துணையாய் இருப்போம்; இந்த உலக வாழ்விலும் மறுமையிலும்! அங்கு நீங்கள் விரும்புகின்றவை அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் கேட்கக்கூடிய ஒவ்வொன்றும் உங்களுடையதாகிவிடும்.
41:31. நாங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள், அ(ச்சுவனத்)தில் உங்கள் மனம் விரும்பியவை உங்களுக்குண்டு, இன்னும், அதில் நீங்கள் தேடுகின்றவை உங்களுக்குண்டு.
41:32
41:32 نُزُلًا مِّنْ غَفُوْرٍ رَّحِيْمٍ‏
نُزُلًا விருந்தோம்பலாக مِّنْ இருந்து غَفُوْرٍ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٍ‏ மகா கருணையாளன்
41:32. “மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவனிடமிருந்துள்ள விருந்தாகும்” (இது என்று கூறுவார்கள்).  
41:32. ‘‘பாவங்களை மன்னித்து மகா கருணை செய்பவனின் விருந்தாளியாக (அதில் தங்கி) இருங்கள்'' என்றும் (வானவர்கள்) கூறுவார்கள்.
41:32. பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையாளனாகவும் உள்ள இறைவனிடமிருந்து கிடைக்கும் விருந்தாகும் இது!”
41:32. (பாவங்களை) மிகவும் மன்னிப்பவனான, பெருங்கிருபையுடையோனிடமிருந்துள்ள விருந்தாக_(இது உங்களுக்குண்டு என்று மலக்குகள் கூறுவார்கள்).
41:33
41:33 وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَى اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِىْ مِنَ الْمُسْلِمِيْنَ‏
وَمَنْ யார்? اَحْسَنُ மிக அழகானவர் قَوْلًا பேச்சால் مِّمَّنْ ஒருவரைவிட دَعَاۤ அழைத்தார் اِلَى اللّٰهِ அல்லாஹ்வின் பக்கம் وَعَمِلَ இன்னும் செய்தார் صَالِحًا நல்லதை وَّقَالَ இன்னும் கூறுகின்றார் اِنَّنِىْ நிச்சயமாக நான் مِنَ الْمُسْلِمِيْنَ‏ முஸ்லிம்களில் உள்ளவன்
41:33. எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” (இருக்கின்றார்?)
41:33. எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து(த் தானும்) நற்செயல்களைச் செய்து ‘‘நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் பணிந்து வழிப்பட்டவர்களில் ஒருவன்'' என்றும் கூறுகிறாரோ, அவரைவிட அழகான வார்த்தை கூறுபவர் யார்?
41:33. எவர் அல்லாஹ்வின் பக்கம் அழைத்தாரோ, நற்செயல் புரிந்தாரோ, மேலும், நான் முஸ்லிம் (இறைவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவன்) என்று கூறினாரோ, அவரைவிட அழகிய வார்த்தை கூறுபவர் யார் இருக்கிறார்?
41:33. எவர் அல்லாஹ் அளவில் (மனிதர்களை) அழைத்து(த் தாமும்) நற்கருமங்களையும் செய்து, நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்த) முஸ்லிம்களில் உள்ளேன் என்றும் கூறுகின்றாரோ, அவரைவிடச் சொல்லால் மிக்க அழகானவர் யார்?
41:34
41:34 وَلَا تَسْتَوِى الْحَسَنَةُ وَ لَا السَّيِّئَةُ ؕ اِدْفَعْ بِالَّتِىْ هِىَ اَحْسَنُ فَاِذَا الَّذِىْ بَيْنَكَ وَبَيْنَهٗ عَدَاوَةٌ كَاَنَّهٗ وَلِىٌّ حَمِيْمٌ‏
وَلَا تَسْتَوِى சமமாகாது الْحَسَنَةُ நன்மையும் وَ لَا السَّيِّئَةُ ؕ தீமையும் اِدْفَعْ தடுப்பீராக! بِالَّتِىْ هِىَ اَحْسَنُ மிக அழகியதைக் கொண்டு فَاِذَا அப்போது الَّذِىْ எவர் بَيْنَكَ உமக்கு இடையில் وَبَيْنَهٗ ஒருவருக்கும் عَدَاوَةٌ பகைமை كَاَنَّهٗ போல்/அவர் وَلِىٌّ ஓர் உறவுக்காரரை حَمِيْمٌ‏ நெருக்கமான
41:34. நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார்.
41:34. நன்மையும் தீமையும் சமமாகிவிடாது. (ஆதலால், நபியே! தீமையை) நீர் மிக அழகியதைக் கொண்டு தடுத்துக் கொள்வீராக. அவ்வாறாயின், உமது கொடிய எதிரியை அதே சமயத்தில் உமது உண்மையான, மிக்க நெருங்கிய நண்பனைப் போல் காண்பீர்.
41:34. (நபியே!) நன்மையும் தீமையும் சமமாகமாட்டா. மிகச் சிறந்த நன்மையைக் கொண்டு நீர் தீமையைத் தடுப்பீராக! அப்போது உம்முடன் கடும் பகைமை கொண்டிருந்தவர்கூட உற்ற நண்பராய் ஆகிவிடுவதைக் காண்பீர்.
41:34. நன்மையும் தீமையும் சமமாகிவிடாது (ஆதலால், நபியே!) எது மிக அழகானதோ அதைக்கொண்டு (தீமையை) தடுத்துக்கொள்வீராக! அப்பொழுது எவருக்கும் உமக்குமிடையே பகைமை இருந்ததோ அவர், உம்முடைய உற்ற சிநேகிதரைப் போல் ஆகிவிடுவார்.
41:35
41:35 وَمَا يُلَقّٰٮهَاۤ اِلَّا الَّذِيْنَ صَبَرُوْا‌ۚ وَمَا يُلَقّٰٮهَاۤ اِلَّا ذُوْ حَظٍّ عَظِيْمٍ‏
وَمَا يُلَقّٰٮهَاۤ இதை கொடுக்கப்பட மாட்டார்கள் اِلَّا தவிர الَّذِيْنَ صَبَرُوْا‌ۚ பொறுமையாளர்கள் وَمَا يُلَقّٰٮهَاۤ இன்னும் இதை கொடுக்கப்பட மாட்டார்கள் اِلَّا ذُوْ حَظٍّ عَظِيْمٍ‏ பெரும் பாக்கியம் உடையவர்கள் தவிர
41:35. பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்.
41:35. பொறுமையுடையவர்களைத் தவிர மற்றெவரும் இதை அடைய மாட்டார்கள். மேலும், பெரும் பாக்கியமுடையவர்களைத் தவிர மற்றெவரும் இதை அடைய மாட்டார்கள்.
41:35. பொறுமை கொள்வோரைத் தவிர வேறெவர்க்கும் இந்தக் குணம் வாய்க்கப் பெறுவதில்லை. பெரும் பேறு பெற்றவர்களைத் தவிர வேறெவர்க்கும் இந்த உயர் தகுதி கிட்டுவதில்லை.
41:35. பொறுமையாய் இருந்தார்களே அத்தகையோரைத் தவிர, (வேறு) எவரும் அதனை அடையமாட்டார்கள், மேலும், மகத்தான பாக்கியத்தையுடையோரைத் தவிர, (மற்ற) எவரும் அதனை அடையமாட்டார்கள்.
41:36
41:36 وَاِمَّا يَنْزَغَنَّكَ مِنَ الشَّيْطٰنِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللّٰهِ‌ؕ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏
وَاِمَّا يَنْزَغَنَّكَ நிச்சயமாக உம்மைத் தூண்டினால் مِنَ الشَّيْطٰنِ ஷைத்தானிடமிருந்து نَزْغٌ தீய எண்ணம் فَاسْتَعِذْ பாதுகாவல் தேடுவீராக! بِاللّٰهِ‌ؕ அல்லாஹ்விடம் اِنَّهٗ هُوَ நிச்சயமாக அவன்தான் السَّمِيْعُ நன்கு செவியுறுபவன் الْعَلِيْمُ‏ நன்கறிந்தவன்
41:36. உங்களுக்கு ஷைத்தானிடத்திலிருந்து ஏதேனும் ஊசலாட்டம் (தீயதைச் செய்ய) உம்மைத் தூண்டுமாயின், உடனே அல்லாஹ்விடம் காவல் தேடிக் கொள்வீராக! நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்.
41:36. (நபியே!) ஷைத்தானுடைய ஓர் ஊசலாட்டம் (தீய காரியங்களைச் செய்யும்படி) உம்மைத் தூண்டும் சமயத்தில் (உம்மை அதிலிருந்து) பாதுகாத்துக் கொள்ளும்படி அல்லாஹ்விடத்தில் நீர் கோருவீராக! நிச்சயமாக அவன்தான் (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிபவன். (ஆதலால், அவன் உம்மை பாதுகாத்துக் கொள்வான்.)
41:36. மேலும், ஷைத்தானின் தரப்பிலிருந்து ஏதேனும் தூண்டுதலை நீர் உணர்ந்தால் அல்லாஹ்விடம் பாதுகாவல் கோரும். திண்ணமாக, அவன் அனைத்தையும் கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான்.
41:36. மேலும், (நபியே!) ஷைத்தானிலிருந்து ஏதேனுமொரு ஊசாட்டம் உம்மைத் தொட்டுவிடுமாயின் தாமதமின்றி அல்லாஹ்விடத்தில் நீர் காவல் தேடிக் கொள்வீராக! நிச்சயமாக அவனே, (யாவரையும்) செவியேற்பவன், நன்கறிபவன்.
41:37
41:37 وَمِنْ اٰيٰتِهِ الَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ‌ؕ لَا تَسْجُدُوْا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوْا لِلّٰهِ الَّذِىْ خَلَقَهُنَّ اِنْ كُنْتُمْ اِيَّاهُ تَعْبُدُوْنَ‏
وَمِنْ اٰيٰتِهِ அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதான் الَّيْلُ இரவு وَالنَّهَارُ பகல் وَالشَّمْسُ சூரியன் وَالْقَمَرُ‌ؕ சந்திரன் لَا تَسْجُدُوْا சிரம் பணியாதீர்கள்! لِلشَّمْسِ சூரியனுக்கும் وَلَا لِلْقَمَرِ சந்திரனுக்கும் وَاسْجُدُوْا சிரம் பணியுங்கள் لِلّٰهِ அல்லாஹ்விற்கு الَّذِىْ خَلَقَهُنَّ இவற்றைப் படைத்தவன் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் اِيَّاهُ அவனை تَعْبُدُوْنَ‏ வணங்குபவர்களாக
41:37. இரவும், பகலும்; சூரியனும், சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதாம். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையே வணங்குகிறவர்களாக இருந்தால் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஸுஜூது செய்யாதீர்கள் - இவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்யுங்கள்.
41:37. ‘‘இரவும், பகலும், சூரியனும், சந்திரனும் அவனுடைய (வல்லமையை அறிவிப்பதற்குரிய) அத்தாட்சிகளில் உள்ளவை. ஆகவே, மெய்யாகவே நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குபவர்களாக இருந்தால் சூரியனுக்கும் (சிரம் பணியாதீர்கள்;) சந்திரனுக்கும் சிரம் பணியாதீர்கள். இவற்றை படைத்தவன் எவனோ அவனுக்கே சிரம் பணியுங்கள்'' (என்று நபியே! கூறுவீராக.)
41:37. இந்த இரவும் பகலும், சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளுள் உள்ளவையாகும். நீங்கள் சூரியனுக்கும், சந்திரனுக்கும் சிரம் பணியாதீர்கள். மாறாக, அவற்றைப் படைத்த இறைவனுக்கே சிரம் பணியுங்கள், நீங்கள் உண்மையில் அவனையே வணங்குபவர்களாய் இருந்தால்!
41:37. இரவும், பகலும், சூரியனும், சந்திரனும் (அல்லாஹ்வைப்பற்றி அறிவிக்கக்கூடிய) அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும், நீங்கள் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஸஜ்தா செய்யவேண்டாம், நீங்கள் அவனையே வணங்குபவர்களாக இருந்தால், அவற்றை படைத்தவனாகிய அல்லாஹ்விற்கே ஸஜ்தா செய்யுங்கள்.
41:38
41:38 فَاِنِ اسْتَكْبَرُوْا فَالَّذِيْنَ عِنْدَ رَبِّكَ يُسَبِّحُوْنَ لَهٗ بِالَّيْلِ وَالنَّهَارِ وَهُمْ لَا يَسْــٴَــمُوْنَ۩
فَاِنِ اسْتَكْبَرُوْا அவர்கள் பெருமையடித்து விலகினால் فَالَّذِيْنَ عِنْدَ رَبِّكَ உமது இறைவனிடம் இருக்கின்றவர்கள் يُسَبِّحُوْنَ துதிக்கின்றனர் لَهٗ அவனை بِالَّيْلِ இரவிலும் وَالنَّهَارِ பகலிலும் وَهُمْ அவர்கள் لَا يَسْــٴَــمُوْنَ۩‏ சோர்வடைய மாட்டார்கள்
41:38. ஆனால் (அல்லாஹ்வை வணங்காது எவரேனும்) பெருமையடித்தவர்களாக இருப்பின் (அவனுக்கு நஷ்டமில்லை), உம் இறைவனிடம் இருப்பவர்கள் (வானவர்கள்) இரவிலும் பகலிலும் அவனை தஸ்பீஹு செய்து (துதித்துக்) கொண்டேயிருக்கிறார்கள்; அவர்கள் (அதில்) சோர்வடைவதுமில்லை.
41:38. ஆகவே (நபியே!) இவர்கள் கர்வம் (கொண்டு இறைவனை வணங்காது விலகிக்) கொள்வார்களாயின், (அதனால் அவனுக்கு ஒரு நஷ்டமும் இல்லை.) உங்கள் இறைவனிடத்தில் உள்ளவர்(களாகிய வானவர்)கள் இரவும் பகலும் அவனைத் துதி செய்து புகழ்ந்துகொண்டே இருக்கின்றனர். (இதில்) அவர்கள் சோர்வடைவதே இல்லை.
41:38. ஆனால், இவர்கள் கர்வம் கொண்டு தம் போக்கிலேயே பிடிவாதமாய் இருந்தால் பரவாயில்லை; உம் இறைவனிடம் நெருக்கமாய் உள்ள வானவர்கள் அல்லும் பகலும் அவனைத் துதித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் களைப்படைவதில்லை.
41:38. (நபியே!) பின்னும், இவர்கள் பெருமையடித்துக் (கொண்டு அல்லாஹ்வை வணங்காது விலகிக்) கொள்வார்களாயின், அப்போது உமதிரட்சகனிடத்தில் உள்ளவர் (களாகிய மலக்கு)கள் இரவிலும், பகலிலும் அவனைத் துதிசெய்து (புகழ்ந்து) கொண்டேயிருக்கின்றனர், அவர்கள் (அதில்) சோர்வடையவும் மாட்டார்கள்.
41:39
41:39 وَمِنْ اٰيٰتِهٖۤ اَنَّكَ تَرَى الْاَرْضَ خَاشِعَةً فَاِذَاۤ اَنْزَلْنَا عَلَيْهَا الْمَآءَ اهْتَزَّتْ وَرَبَتْ‌ؕ اِنَّ الَّذِىْۤ اَحْيَاهَا لَمُحْىِ الْمَوْتٰى ؕ اِنَّهٗ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
وَمِنْ اٰيٰتِهٖۤ இன்னும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான் اَنَّكَ நிச்சயமாக நீர் تَرَى பார்க்கின்றீர் الْاَرْضَ பூமியை خَاشِعَةً காய்ந்ததாக فَاِذَاۤ اَنْزَلْنَا பிறகு, நாம் இறக்கினால் عَلَيْهَا அதன் மீது الْمَآءَ நீரை اهْتَزَّتْ செழிப்படைகிறது وَرَبَتْ‌ؕ இன்னும் அது வளர்கிறது اِنَّ நிச்சயமாக الَّذِىْۤ اَحْيَاهَا எவன்/உயிர்ப்பித்தான்/அதை لَمُحْىِ உயிர்ப்பிப்பவன் الْمَوْتٰى ؕ மரணித்தவர்களை(யும்) اِنَّهٗ நிச்சயமாக அவன் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் மீதும் قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
41:39. பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும்; அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது; (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன்; நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்.
41:39. (நபியே! பயிர்கள் கருகி) பூமி வெட்ட வெளியாக இருப்பதை நீர்காண்பதும் மெய்யாகவே அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். அதன் மீது நாம் மழையை இறக்கினால், அது (செடி கொடிகளால்) பசுமையாகி வளர்கிறது. (இவ்வாறு இறந்து போன) பூமியை எவன் உயிர்ப்பிக்கிறானோ அவன்தான் மரணித்தவர்களையும் மெய்யாகவே உயிர்ப்பிப்பான். நிச்சயமாக அவன் (அனைத்தின் மீதும்) பேராற்றலுடையவன்.
41:39. பூமி வறண்டு கிடப்பதையும் நீர் காண்கிறீர். அதில் நாம் மழையைப் பொழிந்தவுடன் அது சட்டென்று உயிர்பெறு வதையும் தழைத்தோங்குவதையும் நீர் காண்கின்றீர். இது அல்லாஹ்வின் சான்றுகளில் ஒன்றாகும். திண்ணமாக, இறந்துவிட்ட இப்பூமிக்கு எந்த இறைவன் உயிரூட்டினானோ அந்த இறைவன், இறந்தவர்களுக்கும் உயிரூட்டக் கூடியவன் ஆவான். திண்ணமாக, அவன் ஒவ்வொன்றின் மீதும் ஆற்றல் கொண்டவன் ஆவான்.
41:39. (நபியே!) காய்ந்து விட்டதாக பூமியை நிச்சயமாக நீர் காண்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும், அதன் மீது நாம் நீரை இறக்கி வைத்தால், அது செழிப்படைந்து வளர்கிறது, அதை நிச்சயமாக உயிர்ப்பித்தானே அத்தகையவன் மரணித்தோரையும் உயிர்ப்பிக்கக் கூடியவனாவான், நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.
41:40
41:40 اِنَّ الَّذِيْنَ يُلْحِدُوْنَ فِىْۤ اٰيٰتِنَا لَا يَخْفَوْنَ عَلَيْنَا ؕ اَفَمَنْ يُّلْقٰى فِى النَّارِ خَيْرٌ اَمْ مَّنْ يَّاْتِىْۤ اٰمِنًا يَّوْمَ الْقِيٰمَةِ‌ ؕ اِعْمَلُوْا مَا شِئْتُمْ‌ ۙ اِنَّهٗ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ يُلْحِدُوْنَ தடம் புரளுபவர்கள் فِىْۤ اٰيٰتِنَا நமது வசனங்களில் لَا يَخْفَوْنَ மறைந்துவிட மாட்டார்கள் عَلَيْنَا ؕ நம்மீது اَفَمَنْ يُّلْقٰى போடப்படுபவர் ? فِى النَّارِ நரகத்தில் خَيْرٌ சிறந்தவரா اَمْ அல்லது مَّنْ يَّاْتِىْۤ வருகின்றவரா? اٰمِنًا நிம்மதி பெற்றவராக يَّوْمَ الْقِيٰمَةِ‌ ؕ மறுமை நாளில் اِعْمَلُوْا செய்துகொள்ளுங்கள்! مَا شِئْتُمْ‌ ۙ நீங்கள் நாடியதை اِنَّهٗ நிச்சயமாக அவன் بِمَا تَعْمَلُوْنَ நீங்கள் செய்வதை بَصِيْرٌ‏ உற்று நோக்குபவன்
41:40. நிச்சயமாக எவர்கள் நம்முடைய வசனங்களில் குறை காண்கிறார்களோ அவர்(களுடைய செயல்)கள் நமக்கு மறைக்கப்படவில்லை - ஆகவே, நரகத்தில் எறியப்படுபவன் நல்லவனா? அல்லது கியாம நாளன்று அச்சம் தீர்ந்து வருப(வன் நல்ல)வனா? நீங்கள் விரும்பியதைச் செய்து கொண்டிருங்கள் - நிச்சயமாக அவன் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவனாகவே இருக்கிறான்.
41:40. நிச்சயமாக எவர்கள் நம் வசனங்களில் தப்பர்த்தங்களை(த் தங்கள் தீய செயல்களுக்கு ஆதாரமாக)க் கற்பிக்கிறார்களோ, அவர்களுடைய செயல்களில் (ஒன்றுமே) நிச்சயமாக நமக்குமறைந்து விடாது. மறுமையில் நரகத்தில் எறியப்படுபவன் நல்லவனா? அல்லது பயமற்றவனாக(ச் சொர்க்கத்திற்கு) வருபவன் மேலானவனா? (மனிதர்களே!) நீங்கள் விரும்பியதைச் செய்து கொண்டிருங்கள். நீங்கள் செய்பவற்றை நிச்சயமாக அவன் உற்று நோக்குகிறான்.
41:40. எவர்கள் நம் வசனங்களுக்கு மாறுபட்ட பொருள் கற்பிக்கின்றார்களோ அவர்கள் நம்மைவிட்டு மறைந்திருப்பவர் அல்லர். நீங்களே சிந்தியுங்கள். நரகத்தில் எறியப்படுபவன் சிறந்தவனா? அல்லது மறுமைநாளில் நிம்மதியாக வருகைதருபவன் சிறந்தவனா? செய்து கொண்டிருங்கள் நீங்கள் விரும்பியவற்றை! உங்கள் செயல்கள் அனைத்தையும் திண்ணமாக, அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
41:40. நிச்சயமாக, நம்முடைய வசனங்களில் (அனர்த்தம் கூறி பிழை சேர்க்க பொய்யின்பால்) சாய்ந்து விடுகின்றார்களே அத்தகையோர்_நம்மிலிருந்து அவர்கள் மறைந்து விடமாட்டார்கள், ஆகவே, (மறுமையில்) நரகத்தில் எறியப்படுபவன் சிறந்தவனா? அல்லது மறுமை நாளில் எத்தகைய பயமுமற்றவனாக வருப(வன் மேலான)வனா (மனிதர்களே!) நீங்கள் நாடியதைச் செய்துகொண்டிருங்கள், நீங்கள் செய்பவற்றை நிச்சயமாக, அவன் பார்க்கக் கூடியவன்.
41:41
41:41 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا بِالذِّكْرِ لَمَّا جَآءَهُمْ‌ۚ وَاِنَّهٗ لَـكِتٰبٌ عَزِيْزٌۙ‏
اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا நிச்சயமாக நிராகரித்தவர்கள் بِالذِّكْرِ இந்த வேதத்தை لَمَّا جَآءَ அது வந்த போது هُمْ‌ۚ அவர்களிடம் وَاِنَّهٗ நிச்சயமாக இது لَـكِتٰبٌ வேதமாகும் عَزِيْزٌۙ‏ மிக கண்ணியமான
41:41. நிச்சயமாக, எவர்கள் நல்லுபதேசம் (குர்ஆன்) தம்மிடம் வந்த போது அதை நிராகரித்தார்களோ (அவர்கள் உண்மையை உணர்வார்கள்); ஏனெனில் அதுவே நிச்சயமாக மிகவும் கண்ணியமான வேதமாகும்.
41:41. நிச்சயமாக எவர்கள் தங்களிடம் வந்த நல்லுபதேசத்தை நிராகரிக்கிறார்களோ (அவர்கள் மறுமையில் தங்கள் நிலைமையை உணர்ந்து கொள்வார்கள். ஏனென்றால்) நிச்சயமாக இது மிக கண்ணியமான வேதமாகும்.
41:41. இவர்கள் தங்களிடம் அறவுரை வந்தபோது அதனை நிராகரித்துவிட்டவர்கள்! ஆனால், உண்மையில் இது ஓர் ஆற்றல் மிக்க வேதமாகும்.
41:41. நிச்சயமாக, (குர் ஆனாகிய) நல்லுபதேசத்தை_அது அவர்களிடம் வந்தபோது நிராகரிக்கின்றார்களே அத்தகையோர்_(அவர்கள் மறுமையில் தங்கள் நிலையை அறிந்துகொள்வார்கள்,) மேலும், நிச்சயமாக இது, மிக்க கண்ணியமானதொரு வேதமாகும்.
41:42
41:42 لَّا يَاْتِيْهِ الْبَاطِلُ مِنْۢ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهٖ‌ؕ تَنْزِيْلٌ مِّنْ حَكِيْمٍ حَمِيْدٍ‏
لَّا يَاْتِيْهِ அதனிடம் வரமாட்டார்(கள்) الْبَاطِلُ பொய்யர்(கள்) مِنْۢ بَيْنِ يَدَيْهِ அதற்கு முன்னிருந்தும் وَلَا مِنْ خَلْفِهٖ‌ؕ அதற்குப் பின்னிருந்தும் تَنْزِيْلٌ இறக்கப்பட்ட வேதம் مِّنْ حَكِيْمٍ حَمِيْدٍ‏ மகா ஞானவான், மகா புகழுக்குரியவனிடமிருந்து
41:42. அதனிடம், அதற்கு முன்னிருந்தோ அதற்குப் பின்னிருந்தோ உண்மைக்குப் புறம்பான எதுவும் நெருங்காது; (இது) புகழுக்குரிய ஞானம் மிக்கவன் - (அல்லாஹ்)விடமிருந்து இறங்கியுள்ளது.
41:42. இதற்கு முன்னும் சரி, இதற்குப் பின்னும் சரி உண்மைக்கு மாறான ஒரு விஷயமும் (திரு குர்ஆனாகிய) இதை (அணுகவே) அணுகாது. மிக்க புகழும் ஞானமும் உடையவனால் (இது) இறக்கப்பட்டது.
41:42. அசத்தியம் இதன் முன்னாலிருந்தும் வர முடியாது; பின்னாலிருந்தும் வர முடியாது. நுண்ணறிவாளனும், மிகுந்த புகழுக்குரியவனுமான இறைவனால் இறக்கியருளப்பட்டதாகும் இது!
41:42. (குர் ஆனாகிய இதில்) இதற்கு முன்னிருந்தோ, இதற்குப் பின்னிருந்தோ பொய் இதனிடம் வராது, தீர்க்கமான அறிவுடைய, மிக்க புகழுக்குரியவனிடமிருந்து (இது) இறக்கப் பட்டுள்ளதாகும்.
41:43
41:43 مَا يُقَالُ لَـكَ اِلَّا مَا قَدْ قِيْلَ لِلرُّسُلِ مِنْ قَبْلِكَ ‌ؕ اِنَّ رَبَّكَ لَذُوْ مَغْفِرَةٍ وَّذُوْ عِقَابٍ اَ لِيْمٍ‏
مَا يُقَالُ சொல்லப்படாது لَـكَ உமக்கு اِلَّا தவிர مَا எது قَدْ திட்டமாக قِيْلَ சொல்லப்பட்டதோ لِلرُّسُلِ தூதர்களுக்கு مِنْ قَبْلِكَ ؕ உமக்கு முன்னர் اِنَّ நிச்சயமாக رَبَّكَ உமது இறைவன் لَذُوْ مَغْفِرَةٍ மன்னிப்புடையவன் وَّذُوْ عِقَابٍ இன்னும் தண்டனைஉடையவன் اَ لِيْمٍ‏ வலி தரக்கூடியது
41:43. (நபியே!) உமக்கு முன்னர் வந்த தூதர்களுக்குக் கூறப்பட்டதேயன்றி உமக்குக் கூறப்படவில்லை; நிச்சயமாக உம்முடைய இறைவன் மிக மன்னிப்போனாகவும் நோவினை செய்யும் வேதனை செய்யக் கூடியோனுமாக இருக்கின்றான்.
41:43. (நபியே!) உமக்கு முன் வந்த தூதர்களுக்குக் கூறப்பட்டது எதுவோ, அதைத் தவிர (வேறொன்றும் புதிதாக) உமக்குக் கூறப்படவில்லை. (ஆகவே, இவர்கள் கூறும் நிந்தனைகளைப் பற்றி நீர் கவலைப்படாதீர்.) நிச்சயமாக உமது இறைவன் (நல்லவர்களுக்கு) மிக மன்னிப்புடையவன், (தீயவர்களுக்கு) துன்புறுத்தும் வேதனையளிப்பவன்.
41:43. (நபியே!) உமக்கு முன் சென்ற தூதர்களுக்குக் கூறப்படாத எந்த ஒன்றும் இதில் இல்லை. ஐயமின்றி உம்முடைய இறைவன் பெரிதும் பிழை பொறுப்பவன் ஆவான். (அத்துடன்) துன்புறுத்தும் தண்டனை அளிக்கக்கூடியவனுமாவான்.
41:43. (நபியே!) உமக்கு முன் (வந்த) தூதர்களுக்குத் திட்டமாகக் கூறப்பட்டதைத் தவிர (வேறெதுவும்) உமக்குக் கூறப்படவில்லை, நிச்சயமாக, உமதிரட்சகன் மன்னிப்புடையவன், துன்புறுத்தும் தண்டனையுடையவன்.
41:44
41:44 وَلَوْ جَعَلْنٰهُ قُرْاٰنًا اَعْجَمِيًّا لَّقَالُوْا لَوْلَا فُصِّلَتْ اٰيٰتُهٗ ؕ ءَؔاَعْجَمِىٌّ وَّعَرَبِىٌّ‌  ؕ قُلْ هُوَ لِلَّذِيْنَ اٰمَنُوْا هُدًى وَشِفَآءٌ‌  ؕ وَ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ فِىْۤ اٰذَانِهِمْ وَقْرٌ وَّهُوَ عَلَيْهِمْ عَمًى‌ ؕ اُولٰٓٮِٕكَ يُنَادَوْنَ مِنْ مَّكَانٍۢ بَعِيْدٍ‏
وَلَوْ جَعَلْنٰهُ நாம் இதை ஆக்கி இருந்தால் قُرْاٰنًا குர்ஆனாக اَعْجَمِيًّا அரபி அல்லாத மொழி لَّقَالُوْا கூறியிருப்பார்கள் لَوْلَا فُصِّلَتْ விவரிக்கப்பட்டிருக்க வேண்டாமா? اٰيٰتُهٗ ؕ இதன் வசனங்கள் ءَؔاَعْجَمِىٌّ அரபி அல்லாத ஒரு மொழியிலா! وَّعَرَبِىٌّ‌  ؕ இன்னும் அரபி ஆயிற்றே ! قُلْ கூறுவீராக! هُوَ இது لِلَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்களுக்கு هُدًى நேர்வழி(யும்) وَشِفَآءٌ‌  ؕ நிவாரணமும் وَ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ எவர்கள்/நம்பிக்கை கொள்ளவில்லையோ فِىْۤ اٰذَانِهِمْ அவர்களின் காதுகளில் وَقْرٌ செவிட்டுத்தனம் وَّهُوَ அது عَلَيْهِمْ அவர்கள் மீது عَمًى‌ ؕ மறைந்திருக்கிறது اُولٰٓٮِٕكَ அவர்கள் يُنَادَوْنَ அழைக்கப்படுவார்கள் مِنْ مَّكَانٍۢ இடத்தில் இருந்து بَعِيْدٍ‏ மிக தூரமான
41:44. நாம் இதை (குர்ஆனை) அரபியல்லாத வேறு மொழியில் இறக்கியிருந்தால்; இதன் வசனங்கள் தெளிவாக விளக்கப்பட்டிருக்கக் கூடாதா? (சொல்) அஜமீ (வேற்று மொழி); (தூதர்)) அரபியரா?” என்று அவர்கள் கூறியிருப்பார்கள். “இது ஈமான் கொண்டவர்களுக்கு ஒரு வழிகாட்டியும், (அரு) மருந்துமாகும்” என்று கூறுவீராக! ஆனால் ஈமான் கொள்ளாதவர்களுக்கு, அவர்களுடைய காதுகளில் செவிட்டுத்தன்மை இருக்கிறது; இன்னும், அவர் (கண்)களில் குருட்டுத்தனமும் இருக்கிறது; எனவே அவர்கள் வெகு தொலைவான இடத்திலிருந்து அழைக்கப்படுபவர்கள் (போல் இருக்கின்றனர்).  
41:44. இதை அரபி அல்லாத (வேறு) மொழியில் உள்ள குர்ஆனாக இறக்கி வைத்திருந்தால், (இந்த மக்காவாசிகள்) இதனுடைய வசனங்கள் (நமது அரபி மொழியில்) விவரித்துக் கூறப்பட்டிருக்க வேண்டாமா? என்றும், இதுவோ அரபி அல்லாத (வேறு) மொழி (நாமோ அதை அறியாத அரபிகள்) என்றும் கூறுவார்கள். (நபியே!) கூறுவீராக: ‘‘இது (அவர்களுடைய அரபி மொழியில் இருப்பதுடன்) நம்பிக்கை கொண்டவர்களுக்கு நேரான வழியாகவும், (சந்தேக நோயுள்ள உள்ளங்களுக்கு) நல்லதொரு பரிகாரமாகவும் இருக்கிறது. எவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுடைய காதுகளுக்கு செவிடாகவும், அவர்களுடைய பார்வையை போக்கக் கூடியதாகவும் இருக்கிறது. அவர்கள் (உமது சமீபத்திலிருந்த போதிலும்) வெகு தொலை தூரத்திலிருந்து அழைக்கப்படுகிறார்கள் (போல் இருக்கின்றது).
41:44. நாம் இதனை அரபி மொழியல்லாத குர்ஆனாக ஆக்கி அனுப்பியிருந்தால் இவர்கள் கூறியிருப்பார்கள்: “இதன் வசனங்கள் ஏன் தெளிவாக விவரிக்கப்படவில்லை? வசனங்களோ அரபியல்லாத மொழியில்! அவை எடுத்துரைக்கப்படுவதோ அரபிகளிடம்! என்ன விந்தை இது!” இவர்களிடம் கூறும்: “இந்த குர்ஆன் இறைநம்பிக்கை கொண்டவர்களுக்கு வழிகாட்டியும் அருமருந்தும் ஆகும். ஆனால், எவர்கள் இறைநம்பிக்கை கொள்ளவில்லையோ, இது அவர்களின் காதுகளுக்கு அடைப்பும் கண்களுக்குத் திரையுமாகும். ஆகையால் அவர்களின் நிலைமை தொலைவிலிருந்து அழைக்கப்படுபவர்கள் போன்று இருக்கின்றது.
41:44. மேலும், “அரபி அல்லாத (மொழியின்) குர் ஆனாக இதனை நாம் ஆக்கி வைத்திருந்தால், (இந்த மக்காவாசிகள்) இதனுடைய வசனங்கள் (நம் மொழியில்) விவரித்துக் கூறப்பட்டிருக்க வேண்டாமோ? (வேதம்) அரபி அல்லாத (மொழியுடைய)தும், (நபியோ) அரபியருமா? என்று கூறுவார்கள். (நபியே!) நீர் கூறுவீராக, இது (அரபி மொழிவேதமாக இருப்பதுடன்) விசுவாசங்கொண்டவர்களுக்கு நேர்வழியாகவும், (உடல் மற்றும் மனநோய்களை) குணப்படுத்துவதாகவும் இருக்கின்றது, இன்னும் விசுவாசங்கொள்ளவில்லையே அவர்களுடைய காதுகளில் அடைப்பு இருக்கின்றது, இது அவர்கள் விஷயத்தில் குருட்டுத்தனத்தையுடையதாகவும் இருக்கிறது (ஆகவே, அவர்கள் இதன் உண்மையைப் பார்க்கமாட்டார்கள்) அவர்கள் வெகு தொலை தூரத்திலிருந்து அழைக்கப்படு(பவர்கள் போன்று கேட்காதவர்களாக இருக்)கின்றனர்.
41:45
41:45 وَلَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ فَاخْتُلِفَ فِيْهِ‌ؕ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَـقُضِىَ بَيْنَهُمْ‌ؕ وَاِنَّهُمْ لَفِىْ شَكٍّ مِّنْهُ مُرِيْبٍ‏
وَلَقَدْ திட்டவட்டமாக اٰتَيْنَا நாம் கொடுத்தோம் مُوْسَى மூஸாவிற்கு الْكِتٰبَ வேதத்தை فَاخْتُلِفَ ஆனால் முரண்பாடு செய்யப்பட்டது فِيْهِ‌ؕ அதில் وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ ஒரு வாக்கு முந்தியிருக்கவில்லை என்றால் مِنْ رَّبِّكَ உமது இறைவனிடமிருந்து لَـقُضِىَ தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் بَيْنَهُمْ‌ؕ அவர்களுக்கு மத்தியில் وَاِنَّهُمْ இன்னும் நிச்சயமாக அவர்கள் لَفِىْ شَكٍّ சந்தேகத்தில்தான் مِّنْهُ இதில் مُرِيْبٍ‏ மிக ஆழமான
41:45. நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம்; ஆனால், அதில் மாறுபாடுகள் செய்யப்பட்டு விட்டன; அன்றியும் உமது இறைவனிடமிருந்து ஏற்கனவே வாக்கு ஏற்படாது போயிருந்தால், அவர்களுக்கிடையே தீர்ப்பு அளிக்கப்பட்டே இருக்கும் - நிச்சயமாக அவர்களும் ஆழ்ந்த சந்தேகத்திலேயே இருக்கின்றனர்.
41:45. நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (தவ்றாத்) வேதத்தைக் கொடுத்திருந்தோம். (அவருடைய மக்களால்) அதில் பல பிரிவுகள் உண்டு பண்ணப்பட்டது. (‘‘அவர்களை விசாரித்துத் தீர்ப்புக் கூறுவது மறுமையில்தான்' என்று) உமது இறைவனின் வாக்கு முன்னதாகவே ஏற்பட்டிருக்காவிடில், அவர்களுடைய காரியம் (இதுவரை) முடிந்தே போயிருக்கும். நிச்சயமாக இவர்களும் அதில் பெரும் சந்தேகத்தில் ஆழ்ந்து கிடக்கின்றனர்.
41:45. இதற்கு முன்னால் நாம் மூஸாவுக்கு வேதத்தை வழங்கியிருந்தோம். அதுபற்றியும் இதே கருத்துவேறுபாடு தான் ஏற்பட்டிருந்தது. உம் இறைவன் முன்பே ஒரு விஷயத்தை முடிவு செய்திராவிட்டால், கருத்து வேறுபாடு கொண்ட அம்மக்களிடையே தீர்ப்பு எப்பொழுதோ வழங்கப்பட்டிருக்கும். நிச்சயமாக இம்மக்கள் அதுபற்றி கடும் மனக் குழப்பத்தைத்தரும் சந்தேகத்தில் உழன்று கொண்டிருக்கின்றார்கள்.
41:45. மேலும், திட்டமாக நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம், அதில் மாறுபாடுகள் செய்யப்பட்டுவிட்டன, (அவர்களின் விசாரணை மறுமையில்தான் என்று) உமதிரட்சகனிடமிருந்து வாக்கு முந்தியிருக்காவிடில், அவர்களுக்கிடையில் (இம்மையில்) திட்டமாக தீர்ப்பளிப்பக்கப்பட்டிருக்கும், நிச்சயமாக அவர்களும் (_குர் ஆனாகிய) இதில் அவநம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய சந்தேகத்தில் இருக்கிறார்கள்.
41:46
41:46 مَنْ عَمِلَ صَالِحًـا فَلِنَفْسِهٖ‌ وَمَنْ اَسَآءَ فَعَلَيْهَا‌ؕ وَمَا رَبُّكَ بِظَلَّامٍ لِّلْعَبِيْدِ‏
مَنْ عَمِلَ யார் செய்வாரோ صَالِحًـا நல்லதை فَلِنَفْسِهٖ‌ அது அவருக்குத்தான் நன்மையாகும் وَمَنْ இன்னும் யார் اَسَآءَ தீயதை செய்வாரோ فَعَلَيْهَا‌ؕ அது அவருக்குத்தான் கேடாகும் وَمَا இல்லை رَبُّكَ உமது இறைவன் بِظَلَّامٍ அநியாயம் செய்பவனாக لِّلْعَبِيْدِ‏ அடியார்களுக்கு
41:46. எவர் ஸாலிஹான (நல்ல) அமல் செய்கிறாரோ (அது) அவருக்கே நன்மையாகும், எவர் பாவம் செய்கிறாரோ (அது) அவருக்கே கேடாகும் - அன்றியும் உம்முடைய இறைவன் (தன்) அடியார்களுக்குச் சிறிதும் அநியாயம் செய்பவன் அல்லன்.  
41:46. எவர் நன்மைகள் செய்கிறாரோ, அது அவருக்கே நன்று. எவர் பாவம் செய்கிறாரோ, அது அவருக்கே கேடாகும். உமது இறைவன் (தன்) அடியார்கள் எவருக்கும் அறவே தீங்கு செய்வதில்லை. (அவர்கள்தான் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனர்.)
41:46. யாரேனும் நற்செயல் புரிந்தால் அவர் தனக்கே நன்மை செய்து கொள்கின்றார். மேலும், யாரேனும் தீமை செய்தால் அதன் தீய விளைவு அவரையே சாரும். உம் இறைவன் தன் அடிமைகளுக்கு கொடுமை இழைப்பவன் அல்லன்.
41:46. எவர் நல்ல செயல் செய்கிறாரோ, (அது) அவருக்கே (நன்மையாகும்), எவரேனும் தீமை செய்தால் அவருக்கே (அது) கேடாகும், மேலும், உமதிரட்சகன் (தன்) அடியார்களுக்கு அநியாயம் செய்பவன் அல்லன்!
41:47
41:47 اِلَيْهِ يُرَدُّ عِلْمُ السَّاعَةِ‌ؕ وَمَا تَخْرُجُ مِنْ ثَمَرٰتٍ مِّنْ اَكْمَامِهَا وَمَا تَحْمِلُ مِنْ اُنْثٰى وَلَا تَضَعُ اِلَّا بِعِلْمِهٖ‌ؕ وَيَوْمَ يُنَادِيْهِمْ اَيْنَ شُرَكَآءِىْۙ قَالُـوْۤا اٰذَنّٰكَۙ مَا مِنَّا مِنْ شَهِيْدٍ‌ۚ‏
اِلَيْهِ அவன் பக்கமே يُرَدُّ திருப்பப்படுகிறது عِلْمُ அறிவு السَّاعَةِ‌ؕ மறுமையைப் பற்றிய وَمَا تَخْرُجُ வெளிவருவதில்லை مِنْ ثَمَرٰتٍ பழங்களில் எதுவும் مِّنْ اَكْمَامِهَا அவற்றின் பாலைகளில் இருந்து وَمَا تَحْمِلُ கர்ப்பமடைவதுமில்லை مِنْ اُنْثٰى பெண்களில் எவரும் وَلَا تَضَعُ இன்னும் குழந்தை பெற்றெடுப்பதுமில்லை اِلَّا بِعِلْمِهٖ‌ؕ அவனது ஞானமில்லாமல் وَيَوْمَ நாளில் يُنَادِيْهِمْ அவர்களை அவன் அழைக்கின்ற اَيْنَ எங்கே شُرَكَآءِىْۙ எனது இணைகள் قَالُـوْۤا அவர்கள்கூறுவார்கள் اٰذَنّٰكَۙ நாங்கள் உனக்கு அறிவித்து விட்டோம் مَا مِنَّا எங்களில் இல்லை مِنْ شَهِيْدٍ‌ۚ‏ சாட்சி சொல்பவர் யாரும்
41:47. (இறுதித் தீர்ப்பின்) வேளைக்குரிய ஞானம் அவனுக்கு சொந்தமானது; இன்னும், அவன் அறியாமல் பழங்களில் எதுவும் அவற்றின் பாளைகளிலிருந்து வெளிப்படுவதில்லை; (அவன் அறியாது) எந்தப் பெண்ணும் சூல் கொள்வதுமில்லை; பிரசவிப்பதுமில்லை; (இறுதித் தீர்ப்புக்கான) அந்நாளில் அவன் “எனக்கு இணையாக்கப்பட்டவை எங்கே?” என்று அவர்களிடம் கேட்பான்; அப்போது அவர்கள் “எங்களில் எவருமே (அவ்வாறு) சாட்சி கூறுபவர்கள் இல்லை” என்று நாங்கள் உனக்கு அறிவித்துவிடுகிறோம்” என்று கூறுவார்கள்.
41:47. (நபியே! ‘‘விசாரணைக் காலமாகிய மறுமை எப்பொழுது வரும்?'' என அவர்கள் அடிக்கடி உம்மிடம் கேட்கின்றனர். அதற்கு நீர் கூறுவீராக:) மறுமையைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே விடப்பட்டுள்ளது. (ஆகவே, அதைப் பற்றி நான் ஒன்றும் கூறுவதற்கில்லை.) அவன் அறியாமல் ஒரு கனி அதன் மொட்டிலிருந்து வெளிப்படுவதில்லை; ஒரு பெண் கர்ப்பமாவதுமில்லை; பிரசவிப்பதுமில்லை. (ஆகவே, அவை அனைத்தையும் அவனே நன்கறிவான். விசாரணைக் காலமாகிய) அந்நாளில் (இறைவன் அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் எனக்கு இணையாக்கியவை(யாகிய பொய்யான தெய்வங்கள்) எங்கே?'' என்று கேட்பான். அதற்கு அவர்கள் (எங்கள் இறைவனே!) அவ்வாறு சாட்சி கூறுபவர்கள் ‘‘எங்களில் ஒருவருமே (இன்றைய தினம்) இல்லையென்று உனக்கு அறிவித்து விடுகிறோம்'' என்று கூறுவார்கள்.
41:47. அந்த நேரத்தைப் பற்றிய ஞானம் அல்லாஹ்வுக்கே சொந்த மானது. மொட்டுக்களிலிருந்து வெளிவருகின்ற கனிகள் பற்றியெல்லாம் அவன்தான் அறிகின்றான். எந்தப் பெண் கருவுற்றிருக்கிறாள், எவள் குழந்தை பெறுகின்றாள் என்பதையும் அவன் அறிகின்றான். இறைவன் இம்மக்களை அழைத்து, “எனக்கு இணையாக ஏற்படுத்தப்பட்டவை (கடவுளர்) எங்கே?” என்று கேட்கும் நாளில் இவர்கள் கூறுவார்கள்: “எங்களில் (இதற்கு) சாட்சியம் அளிப்பவர் எவரும் இலர் என்று நாங்கள் உனக்கு அறிவித்து விட்டோம்.”
41:47. (நபியே!) மறுமை நாள் பற்றிய அறிவு அவன் பக்கமே திருப்பப்படும், அவன் அறிவில் இல்லாது, கனிகளில் எதுவும் அதன் பாளைகளிலிருந்து வெளியாவதுமில்லை, யாதொரு பெண்ணும் கர்ப்பமாவதுமில்லை, அவள் பிரசவிப்பதுமில்லை, மேலும் என்னுடைய இணையாளர்கள் எங்கே? என்று அவன் அவர்களை அழைக்கும் நாளில், “எங்களில் (அதற்கு) சாட்சி கூறுவோர் ஒருவருமே இல்லையென்று நாங்கள் உனக்கு அறிவித்துவிடுகின்றோம்” என்று அவர்கள் கூறுவார்கள்.
41:48
41:48 وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَدْعُوْنَ مِنْ قَبْلُ‌ وَظَنُّوْا مَا لَهُمْ مِّنْ مَّحِيْصٍ‏
وَضَلَّ இன்னும் மறைந்துவிடும் عَنْهُمْ அவர்களை விட்டும் مَّا كَانُوْا يَدْعُوْنَ அவர்கள் பிரார்த்தித்துக் கொண்டிருந்தவை مِنْ قَبْلُ‌ இதற்கு முன்னர் وَظَنُّوْا இன்னும் அறிந்து கொள்வார்கள் مَا لَهُمْ தங்களுக்கு இல்லை مِّنْ مَّحِيْصٍ‏ தப்பிப்பதற்குரிய இடம் எதுவும்
41:48. அன்றியும், முன்னால் அவர்கள் (தெய்வங்கள் என) அழைத்துக் கொண்டிருந்தவை அவர்களை விட்டும் மறைந்துவிடும். எனவே அவர்களுக்குப் புகலிடமில்லை என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
41:48. இதற்கு முன்னர் அவர்கள் (இறைவனென) அழைத்துக் கொண்டிருந்தவையெல்லாம் அவர்களை விட்டும் மறைந்து போய்விடும். தங்களுக்குத் தப்ப வழியில்லை என்பதையும் அவர்கள் நன்கு அறிந்துகொள்வார்கள்.
41:48. அப்பொழுது இதற்கு முன்பு இவர்கள் அழைத்துக் கொண்டிருந்த கடவுளர் அனைவரும் இவர்களை விட்டுக் காணாமல் போய்விடுவார்கள். மேலும் அப்பொழுது தங்களுக்கு இப்போது எந்தப் புகலிடமும் இல்லை என்பதை இந்த மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.
41:48. இன்னும் (இதற்கு) முன்னர் அவர்கள் (வணக்கத்திற்குரிய தெய்வங்களென) அழைத்துக் கொண்டிருந்தவை(யாவும்) அவர்களை விட்டு மறைந்து விடும், தங்களுக்கு(த் தப்பி) ஓடுமிடமும் இல்லை என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
41:49
41:49 لَا يَسْــٴَــمُ الْاِنْسَانُ مِنْ دُعَآءِ الْخَيْرِ وَاِنْ مَّسَّهُ الشَّرُّ فَيَــٴُــوْسٌ قَنُوْطٌ‏
لَا يَسْــٴَــمُ சடைவடையமாட்டான் الْاِنْسَانُ மனிதன் مِنْ دُعَآءِ பிரார்த்திப்பதில் الْخَيْرِ நன்மைக்காக وَاِنْ مَّسَّهُ அவனுக்கு நிகழ்ந்தால் الشَّرُّ தீமைகள் فَيَــٴُــوْسٌ நிராசை அடைந்தவனாக قَنُوْطٌ‏ நம்பிக்கை இழந்தவனாக
41:49. மனிதன் (நம்மிடம் பிரார்த்தனை செய்து) நல்லதைக் கேட்பதற்குச் சோர்வடைவதில்லை; ஆனால் அவனைக் கெடுதி தீண்டுமாயின் அவன் மனமுடைந்து நிராசையுள்ளவனாகின்றான்.
41:49. (பிரார்த்தனை செய்து) நன்மையைக் கேட்பதில் மனிதன் (ஒருபொழுதும்) சடைவதில்லை. எனினும், அவனை ஒரு தீங்கு அணுகினால் அவன் மனமுடைந்து நம்பிக்கையிழந்து விடுகிறான்.
41:49. நன்மையை வேண்டுவதில் மனிதன் எப்போதும் சோர்வுறுவதில்லை. ஏதேனும் துன்பம் அவனைத் தொட்டு விட்டால், நம்பிக்கை இழந்தவனாகவும் மனம் நொந்தவனாகவும் ஆகிவிடுகின்றான்.
41:49. (பிரார்த்தித்து) நன்மையைக் கேட்பதில் மனிதன் (ஒரு பொழுதும்) சோர்வடையமாட்டான், இன்னும், அவனை (ஒரு) தீமை தொடுமானால் அப்பொழுது அவன் நம்பிக்கையிழந்தவன், நிராசையானவன்.
41:50
41:50 وَلَٮِٕنْ اَذَقْنٰهُ رَحْمَةً مِّنَّا مِنْۢ بَعْدِ ضَرَّآءَ مَسَّتْهُ لَيَقُوْلَنَّ هٰذَا لِىْ ۙ وَمَاۤ اَظُنُّ السَّاعَةَ قَآٮِٕمَةً  ۙ وَّلَٮِٕنْ رُّجِعْتُ اِلٰى رَبِّىْۤ اِنَّ لِىْ عِنْدَهٗ لَـلْحُسْنٰى‌ ۚ فَلَـنُنَـبِّـئَنَّ الَّذِيْنَ كَفَرُوْا بِمَا عَمِلُوْا وَلَـنُذِيْقَنَّهُمْ مِّنْ عَذَابٍ غَلِيْظٍ‏
وَلَٮِٕنْ اَذَقْنٰهُ நாம் அவனுக்கு சுவைக்க வைத்தால் رَحْمَةً ஓர் அருளை مِّنَّا நம் புறத்தில் இருந்து مِنْۢ بَعْدِ பின்னர் ضَرَّآءَ தீங்குக்கு مَسَّتْهُ அவனுக்கு நிகந்ததது لَيَقُوْلَنَّ இன்னும் கூறுகிறான் هٰذَا இது لِىْ ۙ எனக்குரியது وَمَاۤ اَظُنُّ நான் எண்ணவில்லை السَّاعَةَ மறுமை قَآٮِٕمَةً  ۙ நிகழும் وَّلَٮِٕنْ رُّجِعْتُ நான் திரும்பக் கொண்டு வரப்பட்டாலும் اِلٰى رَبِّىْۤ என் இறைவனிடம் اِنَّ لِىْ நிச்சயமாக எனக்கு عِنْدَهٗ அவனிடம் لَـلْحُسْنٰى‌ ۚ சொர்க்கம் உண்டு فَلَـنُنَـبِّـئَنَّ நாம் நிச்சயமாக அறிவிப்போம் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்களுக்கு بِمَا عَمِلُوْا அவர்கள் செய்ததை وَلَـنُذِيْقَنَّهُمْ இன்னும் நிச்சயமாக அவர்களுக்கு சுவைக்க வைப்போம் مِّنْ عَذَابٍ غَلِيْظٍ‏ கடுமையான வேதனையை
41:50. எனினும் அவனைத் தீண்டியிருந்த கெடுதிக்குப் பின் நாம் அவனை நம் ரஹ்மத்தை - கிருபையைச் சுவைக்கச் செய்தால், அவன் “இது எனக்கு உரியதே யாகும்; அன்றியும் (விசாரணைக்குரிய) வேளை ஏற்படுமென நான் நினைக்கவில்லை; நான் என்னுடைய இறைவனிடம் திருப்பி அனுப்பப்பட்டாலும், நிச்சயமாக அவனிடத்தில் எனக்கு நன்மையே கிடைக்கும்” என்று திடமாகச் சொல்கிறான். ஆகவே காஃபிர்கள் செய்தவற்றை அவர்களுக்கு நிச்சயமாக நாம் தெரிவிப்போம்; மேலும் நாம் அவர்களை நிச்சயமாக, கடுமையான வேதனையைச் சுவைக்கச் செய்வோம்.
41:50. மனிதனைப் பிடித்திருந்த துன்பத்தை நீக்கிய பின்னர், நம் அருளை அவன் சுவைக்கும்படி நாம் செய்தாலோ இது எனக்கு வரவேண்டியதாக இருந்ததே வந்துள்ளது. மறுமை ஏற்படும் என்று நான் நம்பவேயில்லை. அவ்வாறே (மறுமை ஏற்பட்டு) எனது இறைவனிடம் நான் கொண்டு போகப்பட்டாலும், அவனிடத்திலும் நிச்சயமாக எனக்கு நன்மையே கிடைக்கும் என்று கூறுகிறான். ஆனால், எவர்கள் நிராகரிக்கிறார்களோ, அவர்கள் செய்த (தீய) காரியங்களை அந்நாளில் நாம் நிச்சயமாக அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பிப்போம். கடினமான வேதனையை அவர்கள் சுவைக்கும்படியும் நிச்சயமாக நாம் செய்வோம்.
41:50. ஆனால், அவனைப் பீடித்திருந்த துன்பம் அவனைவிட்டு நீங்கிய பிறகு நாம் நம்முடைய அருளை அவனுக்குச் சுவைக்கக் கொடுத்தால் அப்போது அவன் கூறுகின்றான்: “நான் இதற்கு அருகதையுள்ளவன் ஆவேன். மேலும், மறுமைநாள் எப்பொழுதேனும் வரும் என்று நான் நினைக்கவில்லை. இனி, உண்மையில் என் அதிபதியிடம் நான் திரும்பக் கொண்டு செல்லப்பட்டாலோ அங்கேயும் எனக்கு இன்பம்தான் கிடைக்கும்!” எனினும் நிராகரிப்போருக்கு அவர்கள் என்ன செய்துவிட்டு வந்திருக்கிறார்கள் என்பதை அவசியம் நாம் காண்பித்துத் தருவோம். மேலும், அவர்களை மிகவும் அருவருக்கத்தக்க வேதனையைச் சுவைக்கச் செய்வோம்.
41:50. அவனைத் தொட்டிருந்த கெடுதிக்குப் பின்னர், நம்மிடமிருந்து அருளை அவனுக்கு நாம் சுவைக்கச் செய்தால் இது எனக்குரியதே என்றும், மறுமை நாள் நிலைபெறக்கூடியது என நான் எண்ணவில்லை என்றும், (அவ்வாறு மறுமை ஏற்பட்டு) என் இரட்சகனிடம் நான் திருப்பிக் கொண்டு போகப்பட்டாலும், அவனிடத்தில் நிச்சயமாக எனக்கே நன்மை உண்டு என்றும் திடமாகக் கூறுகிறான், எனவே, நிராகரித்தோர்க்கு அவர்கள் செய்தவற்றை (அந்நாளில்) நிச்சயமாக நாம் தெரிவிப்போம், அன்றியும், கடினமான வேதனையிலிருந்து அவர்களை நிச்சயமாக நாம் சுவைக்கச் செய்வோம்.
41:51
41:51 وَاِذَاۤ اَنْعَمْنَا عَلَى الْاِنْسَانِ اَعْرَضَ وَنَاٰ بِجَانِبِهٖ‌ۚ وَاِذَا مَسَّهُ الشَّرُّ فَذُوْ دُعَآءٍ عَرِيْضٍ‏
وَاِذَاۤ اَنْعَمْنَا நாம் அருள் புரிந்தால் عَلَى الْاِنْسَانِ மனிதன் மீது اَعْرَضَ புறக்கணித்து செல்கிறான் وَنَاٰ بِجَانِبِهٖ‌ۚ தூரமாகி விடுகிறான் وَاِذَا مَسَّهُ இன்னும் அவனுக்குநிகழ்ந்தால் الشَّرُّ தீங்கு فَذُوْ دُعَآءٍ பிரார்த்தனை உடையவனாக عَرِيْضٍ‏ மிக அதிகமான
41:51. அன்றியும், மனிதனுக்கு நாம் அருள் புரிந்தால் அவன் (நன்றியுணர்வின்றி) நம்மைப் புறக்கணித்து, விலகிச் செல்கிறான் - ஆனால் அவனை ஒரு கெடுதி தீண்டினால் நீண்ட பிரார்த்தனை செய்(பவனா)கின்றான்.
41:51. மனிதனுக்கு நாம் (ஒரு) அருள் புரிந்தால், அவன் (நமக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாக நம்மையும் நம் கட்டளைகளையும்) புறக்கணித்து (நம்மை விட்டும்) விலகி விடுகிறான். அவனை ஒரு தீங்கு தொடர்ந்தாலோ, வெகு அகல-நீளமான பிரார்த்தனை செய்(து அதை நீக்குமாறு நம்மிடம் கோரு)கிறான்.
41:51. மனிதனுக்கு நாம் அருட்பேறுகளை வழங்கும்போது அவன் புறக்கணிக்கின்றான். கர்வத்துடன் நடந்து கொள்கின்றான். ஆனால், அவனை ஏதேனும் ஆபத்து தீண்டிவிடும்போது நீண்ட நெடிய இறைஞ்சுதல்களைப் புரியத் தொடங்குகின்றான்.
41:51. இன்னும், நாம் அருட்கொடையை மனிதனுக்கு நல்கினால் (நம்மை) அவன் புறக்கணித்து, தன் பக்கமே (திரும்பி முற்றிலும் நன்றி செய்யாது) தூரமாகி விடுகிறான். மேலும், அவனை (ஏதும்) கெடுதி தொட்டால், வெகு நீண்ட பிரார்த்தனையுடையவனாகின்றான்.
41:52
41:52 قُلْ اَرَءَيْتُمْ اِنْ كَانَ مِنْ عِنْدِ اللّٰهِ ثُمَّ كَفَرْتُمْ بِهٖ مَنْ اَضَلُّ مِمَّنْ هُوَ فِىْ شِقَاقٍۢ بَعِيْدٍ‏
قُلْ கூறுவீராக! اَرَءَيْتُمْ நீங்கள் அறிவியுங்கள் اِنْ كَانَ இருந்தால் مِنْ عِنْدِ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து ثُمَّ பிறகு كَفَرْتُمْ நீங்கள் நிராகரித்து விட்டால் بِهٖ அதை مَنْ யார்? اَضَلُّ மிகப் பெரிய வழிகேடன் مِمَّنْ ஒருவனைவிட هُوَ அவன் فِىْ شِقَاقٍۢ முரண்பாட்டில் بَعِيْدٍ‏ வெகு தூரமான
41:52. “(இந்த வேதம்) அல்லாஹ்விடமிருந்துள்ளதாக இருந்தும், இதை நீங்கள் நிராகரித்தால், உங்கள் நிலை என்னவாகும்; தூரமான விரோதத்திலுள்ளவர்(களாகிய உங்)களை விட, அதிக வழிகேடன் யார் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?” என்று (நபியே!) நீர் கேளும்.
41:52. ‘‘(உண்மையான வேதமாகிய) இது அல்லாஹ்விடமிருந்து வந்திருந்தும், அதை நீங்கள் நிராகரித்து விட்டால் (அதன் மீது) கடினமான விரோதத்திலிருக்கும் உங்களைவிட வெகுதூரமான வழிகேட்டிலிருப்பவர்கள் யார்? என்பதை நீங்கள் கவனித்தீர்களா?'' என்று (நபியே!) நீர் (அவர்களைக்) கேட்பீராக.
41:52. (நபியே! இவர்களிடம்) கூறும்: “நீங்கள் ஒருபோதும் சிந்திப்பதில்லையா? இந்தக் குர்ஆன் உண்மையில் இறைவனிடமிருந்து வந்திருந்தும், இன்னும் இதனை நீங்கள் ஏற்க மறுக்கின்றீர்களெனில், இதனை எதிர்ப்பதில் வெகுதூரம் சென்றுவிட்டவனைவிட அதிகம் வழிதவறிய மனிதன் வேறு யார் இருக்க முடியும்?”
41:52. அ(வ் வேதமான)து அல்லாஹ்விடமிருந்துள்ளதாக இருந்து, பின்னர் இதை நீங்கள் நிராகரித்துவிட்டால், (உங்கள் நிலை என்னவாகும் இவ்வாறு) தூரமான பிரிவினையில் இருக்கும் அவனைவிட மிக வழிகெட்டவன் யார் என்பதை எனக்குத் தெரிவியுங்கள் என்று (நபியே!) நீர் கேட்பீராக!
41:53
41:53 سَنُرِيْهِمْ اٰيٰتِنَا فِى الْاٰفَاقِ وَفِىْۤ اَنْفُسِهِمْ حَتّٰى يَتَبَيَّنَ لَهُمْ اَنَّهُ الْحَـقُّ‌ ؕ اَوَلَمْ يَكْفِ بِرَبِّكَ اَنَّهٗ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدٌ‏
سَنُرِيْهِمْ விரைவில் அவர்களுக்கு நாம் காண்பிப்போம் اٰيٰتِنَا நமது அத்தாட்சிகளை فِى الْاٰفَاقِ பல பகுதிகளிலும் وَفِىْۤ اَنْفُسِهِمْ அவர்களிலும் حَتّٰى இறுதியாக يَتَبَيَّنَ தெளிவாகிவிடும் لَهُمْ அவர்களுக்கு اَنَّهُ நிச்சயமாக இதுதான் الْحَـقُّ‌ ؕ உண்மை اَوَلَمْ يَكْفِ போதாதா? بِرَبِّكَ உமது இறைவனுக்கு اَنَّهٗ நிச்சயமாக தான் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் شَهِيْدٌ‏ நன்கு பார்ப்பவனாக
41:53. நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம்; (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா?
41:53. நிச்சயமாக இவ்வேதம் உண்மையானதுதான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு, நம் அத்தாட்சிகளை (உலகத்தின்) பல பாகங்களிலும் காண்பிப்பதுடன், அவர்களுக்குள்ளாகவும் அதிசீக்கிரத்தில் நாம் (நமது அத்தாட்சிகளைக்) காண்பிப்போம். (நபியே!) உமது இறைவன் நிச்சயமாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது (உமக்கு) போதாதா?
41:53. அதிவிரைவில் நாம் இவர்களுக்கு நம்முடைய சான்றுகளை அனைத்துத் திசைகளிலும் அவர்களுக்குள்ளேயும் காண்பித்துக் கொடுப்போம் இந்தக் குர்ஆன் சத்தியமானது எனும் உண்மை இவர்களுக்குத் தெளிவாகிவிடும் வரையில்! உம் இறைவன் ஒவ்வொன்றுக்கும் சாட்சியாக இருக்கின்றான் என்பது போதுமானதா, இல்லையா?
41:53. நிச்சயமாக (வேதமாகிய) இது, உண்மையானதுதான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் வரையில், (உலகின்) பல பாகங்களிலும், அவர்களிலும் நம்முடைய அத்தாட்சிகளை அவர்களுக்கு நாம் காண்பிப்போம், (நபியே!) உமதிரட்சனுக்கு, நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் (அதுபற்றி நன்கறிந்து) சாட்சியாக இருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா?
41:54
41:54 اَلَاۤ اِنَّهُمْ فِىْ مِرْيَةٍ مِّنْ لِّقَآءِ رَبِّهِمْ‌ؕ اَلَاۤ اِنَّهٗ بِكُلِّ شَىْءٍ مُّحِيْطٌ‏
اَلَاۤ அறிந்துகொள்ளுங்கள்! اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் فِىْ مِرْيَةٍ சந்தேகத்தில் இருக்கின்றனர் مِّنْ لِّقَآءِ சந்திப்பதில் رَبِّهِمْ‌ؕ தங்கள் இறைவனை اَلَاۤ அறிந்து கொள்ளுங்கள்! اِنَّهٗ நிச்சயமாக அவன் بِكُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் مُّحِيْطٌ‏ சூழ்ந்தவன்
41:54. அறிந்து கொள்க: நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பது குறித்துச் சந்தேகத்தில் இருக்கிறார்கள்; அறிந்து கொள்க: நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்து (அறிந்தவனாக) இருக்கிறான்.
41:54. நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பதைப் பற்றியும் சந்தேகத்தில் இருக்கிறார்கள் என்பதை நீர் அறிந்துகொள்வீராக. அவன் எல்லாவற்றையும் (தன் ஞானத்தால்) சூழ்ந்து (அறிந்து) கொண்டுமிருக்கிறான் என்பதையும் நிச்சயமாக (நபியே! நீர்) அறிந்துகொள்வீராக.
41:54. பாருங்கள்! இந்த மக்கள் தங்கள் இறைவனை சந்திக்கும் விஷயத்தில் ஐயம் கொண்டிருக்கின்றார்கள். கேட்டுக் கொள்ளுங்கள். திண்ணமாக, அவன் ஒவ்வொரு பொருளையும் சூழ்ந்தவனாக இருக்கின்றான்.
41:54. நிச்சயமாக அவர்கள், தங்கள் இரட்சகனை சந்திப்பதைப்பற்றி சந்தேகத்தில் இருக்கிறார்கள் என்பதை (நபியே! நீர்) அறிந்து கொள்வீராக! நிச்சயமாக அவன், ஒவ்வொரு பொருளைப்பற்றியும் (தன் அறிவால்) சூழ்ந்து (அறிந்து) கொண்டிருக்கிறான் என்பதையும் அறிந்து கொள்வீராக!