42. ஸூரத்துஷ் ஷூரா (கலந்தாலோசித்தல்)
மக்கீ, வசனங்கள்: 53
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்
42:2 عٓسٓقٓ
عٓسٓقٓ அய்ன் சீன் காஃப்
42:3 كَذٰلِكَ يُوْحِىْۤ اِلَيْكَ وَاِلَى الَّذِيْنَ مِنْ قَبْلِكَۙ اللّٰهُ الْعَزِيْزُ الْحَكِيْمُ
كَذٰلِكَ இவ்வாறுதான் يُوْحِىْۤ வஹீ அறிவித்தான் اِلَيْكَ உமக்கும் وَاِلَى الَّذِيْنَ مِنْ قَبْلِكَۙ உமக்கு முன்னுள்ளவர்களுக்கும் اللّٰهُ அல்லாஹ் الْعَزِيْزُ மிகைத்தவனும் الْحَكِيْمُ மகா ஞானவானும்
42:3. (நபியே!) இது போன்றே அல்லாஹ் உமக்கும், உமக்கு முன் இருந்தவர்(களாகிய நபிமார்)களுக்கும் வஹீ அறிவிக்கின்றான்; அவனே (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.
42:3. (நபியே! இந்த அத்தியாயம் உமக்கு அருளப்படுகிறது.) இவ்வாறே உமக்கும், உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் அனைவரையும் மிகைத்தவனும், மிக்க ஞானவானுமாகிய அல்லாஹ் (தன் வசனங்களை) வஹ்யி மூலம் அறிவித்து வந்திருக்கிறான்.
42:3. வல்லமை மிக்கவனும் நுண்ணறிவாளனுமான அல்லாஹ், உமக்கும் உமக்கு முன் வாழ்ந்து சென்ற (இறைத் தூது)வர்களுக்கும் இவ்வாறே வஹி* அறிவித்துக் கொண்டிருக்கின்றான்.
42:3. (நபியே! யாவரையும்) மிகைத்தவனான, தீர்க்கமான அறிவுடையவனான அல்லாஹ் உமக்கும், உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் இவ்வாறே (தன்னுடைய வசனங்களை) வஹீ மூலம் அறிவிக்கிறான்.
42:4 لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِؕ وَهُوَ الْعَلِىُّ الْعَظِيْمُ
لَهٗ அவனுக்குத்தான் مَا فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவையும் وَمَا فِى الْاَرْضِؕ பூமியில்உள்ளவையும் وَهُوَ அவன்தான் الْعَلِىُّ மிக உயர்ந்தவன் الْعَظِيْمُ மிக மகத்தானவன்
42:4. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே (சொந்தமானவையாகும்!) மேலும் அவன் மிகவும் உயர்ந்தவன், மகத்தானவன்.
42:4. வானங்களில் இருப்பவையும், பூமியில் இருப்பவையும் அவனுக்கே சொந்தமானவை. (அனைவரையும் விட) அவன் மிக மேலானவன்; மிக மகத்தானவன்.
42:4. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனுக்கே உரியவை. அவன் உயர்வுடையோனும் மகத்துவமிக்கவனுமாவான்.
42:4. வானங்களிலுள்ளவைகளும், பூமியிலுள்ளவைகளும் அவனுக்கே உரியவையாகும், (யாவரையும் விட) அவனே மிக்க உயர்வானவன், மிக மகத்தானவன்.
42:5 تَـكَادُ السَّمٰوٰتُ يَتَفَطَّرْنَ مِنْ فَوْقِهِنَّ وَالْمَلٰٓٮِٕكَةُ يُسَبِّحُوْنَ بِحَمْدِ رَبِّهِمْ وَيَسْتَغْفِرُوْنَ لِمَنْ فِى الْاَرْضِؕ اَلَاۤ اِنَّ اللّٰهَ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ
تَـكَادُ நெருங்கி விடுகின்றன السَّمٰوٰتُ வானங்கள் يَتَفَطَّرْنَ (அவை) பிளந்துவிடுவதற்கு مِنْ فَوْقِهِنَّ அவற்றுக்கு மேல் உள்ள وَالْمَلٰٓٮِٕكَةُ வானவர்கள் يُسَبِّحُوْنَ துதிக்கின்றனர் بِحَمْدِ புகழ்ந்து رَبِّهِمْ தங்கள் இறைவனை وَيَسْتَغْفِرُوْنَ இன்னும் பாவமன்னிப்புக் கேட்கின்றனர் لِمَنْ فِى الْاَرْضِؕ பூமியில் உள்ளவர்களுக்காக اَلَاۤ அறிந்துகொள்ளுங்கள்! اِنَّ اللّٰهَ هُوَ நிச்சயமாக அல்லாஹ்தான் الْغَفُوْرُ மகா மன்னிப்பாளன் الرَّحِيْمُ மகாக் கருணையாளன்
42:5. அவர்களுக்கு மேலிருந்து வானங்கள் பிளந்து விடலாம்; ஆனால் மலக்குகள் தங்களுடைய இறைவனின் புகழைக் கொண்டு தஸ்பீஹு செய்து, உலகில் உள்ளவர்களுக்காக மன்னிப்புத் தேடுகின்றனர்; அறிந்து கொள்க! நிச்சயமாக அல்லாஹ்வே மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
42:5. (மனிதர்கள் செய்யும் பாவங்களின் காரணமாக) அவர்கள் மீது வானம் வெடித்து (விழுந்து) விடவும் கூடும். (அந்நேரத்தில்) வானவர்களும் (பயந்து) தங்கள் இறைவனைப் புகழ்ந்து துதிசெய்து, பூமியில் உள்ளவர்க(ளின் குற்றங்க)ளை மன்னிக்குமாறு கோருவார்கள். (மனிதர்கள் பாவத்திலிருந்து விலகி மன்னிப்பைக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் என்பதை (நபியே! நீர்) அறிந்து கொள்வீராக.
42:5. மேலே இருந்து வானங்கள் வெடித்து விடலாம். ஆனால் வானவர்கள் தம் இறைவனைப் புகழ்ந்து துதித்துக் கொண்டிருப்பதுடன் பூமியில் வாழ்வோரின் பாவமன்னிப்புக்காக வேண்டிக் கொண்டுமிருக்கிறார்கள். அறிந்து கொள்ளுங்கள்! உண்மையில், அல்லாஹ்வே பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான்.
42:5. (அல்லாஹ்வின் மகத்துவத்தால்) வானங்கள்_அவற்றின் மேற்புறத்திலிருந்து பிளந்துவிட சமீபிக்கும், மலக்குகளும் (பயந்து) தங்களிரட்சகனின் புகழைக் கொண்டு துதி செய்து, பூமியில் உள்ளவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுகின்றனர், நிச்சயமாக அல்லாஹ்வே, மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையோன் என்பதை (நபியே! நீர்) அறிந்துகொள்வீராக!
42:6 وَالَّذِيْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِيَآءَ اللّٰهُ حَفِيْظٌ عَلَيْهِمْۖ وَمَاۤ اَنْتَ عَلَيْهِمْ بِوَكِيْلٍ
وَالَّذِيْنَ எவர்கள் اتَّخَذُوْا அவர்கள் எடுத்துக் கொண்டார்களோ مِنْ دُوْنِهٖۤ அவனையன்றி اَوْلِيَآءَ உதவியாளர்களாக اللّٰهُ அல்லாஹ்தான் حَفِيْظٌ கண்காணிப்பவன் عَلَيْهِمْۖ அவர்கள் மீது وَمَاۤ اَنْتَ நீர் இல்லை عَلَيْهِمْ அவர்கள் மீது بِوَكِيْلٍ பொறுப்பாளர்
42:6. அவனையன்றி(த் தங்களுக்கு வேறு) பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டார்களே அவர்களை அல்லாஹ் கவனித்தவனாகவே இருக்கின்றான்; நீர் அவர்கள் மேல் பொறுப்பாளர் அல்லர்.
42:6. எவர்கள், அவனையன்றி (மற்றவர்களைத்) தங்களுக்குப் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டார்களோ, அவர்களை அல்லாஹ் கண்காணிக்கிறான். (நபியே!) அவர்களுக்கு நீர் பொறுப்பாளரல்ல.
42:6. எவர்கள் அவனை விடுத்து தமக்கு வேறு சில பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளனரோ அவர்களை அல்லாஹ்வே கண்காணித்துக் கொண்டிருக்கின்றான். நீர் அவர்களுக்குப் பொறுப்பாளர் அல்லர்.
42:6. அன்றியும், அவனைத்தவிர (தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டார்களே அத்தகையவர்கள்_ அல்லாஹ் அவர்(களின் செயல்)களை கவனித்தவனாக இருக்கின்றான், (நபியே!) அவர்கள் (காரியத்தின்) மீது நீர் பொறுப்பாளரும் அல்லர்.
42:7 وَكَذٰلِكَ اَوْحَيْنَاۤ اِلَيْكَ قُرْاٰنًا عَرَبِيًّا لِّـتُـنْذِرَ اُمَّ الْقُرٰى وَمَنْ حَوْلَهَا وَتُنْذِرَ يَوْمَ الْجَمْعِ لَا رَيْبَ فِيْهِؕ فَرِيْقٌ فِى الْجَنَّةِ وَفَرِيْقٌ فِى السَّعِيْرِ
وَكَذٰلِكَ இவ்வாறுதான் اَوْحَيْنَاۤ வஹீ அறிவித்தோம் اِلَيْكَ உமக்கு قُرْاٰنًا குர்ஆனை عَرَبِيًّا அரபி மொழியில் لِّـتُـنْذِرَ நீர் எச்சரிப்பதற்காக اُمَّ الْقُرٰى மக்காவாசிகளை وَمَنْ حَوْلَهَا இன்னும் அதைச் சுற்றி உள்ளவர்களை وَتُنْذِرَ இன்னும் நீர் எச்சரிப்பதற்காக يَوْمَ மறுமை நாளைப் பற்றி الْجَمْعِ ஒன்று சேர்க்கப்படும் لَا رَيْبَ அறவே சந்தேகம் இல்லை فِيْهِؕ அதில் فَرِيْقٌ ஓர் அணி فِى الْجَنَّةِ சொர்க்கத்தில் وَفَرِيْقٌ இன்னும் ஓர் அணி فِى السَّعِيْرِ நரகத்தில்
42:7. அவ்வாறே நகரங்களின் தாய்க்கும், (மக்காவுக்கும்) அதனைச் சுற்றியுள்ளவற்றுக்கும் அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், எவ்வித சந்தேகமுமின்றி (யாவரும்) ஒன்று சேர்க்கப்படும் நாளைப்பற்றி அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், அரபி மொழியிலான இந்த குர்ஆனை நாம் உமக்கு வஹீ அறிவிக்கிறோம்; ஒரு கூட்டம் சுவர்க்கத்திலும் ஒரு கூட்டம் நரகத்திலும் இருக்கும்.
42:7. (நபியே!) இவ்வாறே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் வஹ்யி மூலம் உமக்கு அறிவித்தோம். (இதைக் கொண்டு, அரபி மொழி பேசும் மக்காவாசிகளாகிய) தாய்நாட்டாரையும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவர்களையும், நீர் எச்சரித்து, அனைவரையும் (விசாரணைக்காக) ஒன்று சேர்க்கக்கூடிய நாளைப் பற்றி அச்சமூட்டுவீராக! அந்நாள் வருவதில் சந்தேகமே இல்லை. (அந்நாளில்) ஒரு கூட்டத்தார் சொர்க்கத்திற்கும், ஒரு கூட்டத்தார் நரகத்திற்கும் செல்வார்கள்.
42:7. (ஆம், நபியே! இவ்வாறே நாம்) அரபிமொழியிலுள்ள இந்த குர்ஆனை உமக்கு வஹி அறிவித்துள்ளோம். (மக்காவாகிய) நகரங்களின் தாயையும் அதனைச் சூழ இருப்பவர்களையும் நீர் எச்சரிக்கை செய்ய வேண்டும்; மேலும், ஒன்று திரட்டப்படும் நாளினைப் பற்றி நீர் அச்சுறுத்தவும் வேண்டும் என்பதற்காக! அந்நாள் வருவதில் எவ்வித ஐயமுமில்லை. ஒரு சாரார் சுவர்க்கத்திற்குச் செல்ல இருக்கின்றார்கள்; இன்னொரு சாரார் நரகத்திற்கு!
42:7. மேலும், அவ்வாறே “நகரங்களின் தாய் (ஆகிய மக்காவில் உள்ளோரு)க்கும், அதைச் சூழ உள்ளோ(ராகிய அகிலத்தார் யாவ)ருக்கும், நீர் அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும் அதில் சந்தேகத்திற்கிடமின்றி (மனிதர்கள்) ஒன்று திரட்டப்படும் (மறுமை) நாளைப்பற்றியும் நீர் அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும் அரபி (மொழி)க் குர் ஆனை உமக்கு நாம் (வஹீயின்மூலம்) அறிவித்தோம். (அந்நாளில்) ஒரு கூட்டத்தார் சுவனத்திலும், ஒரு கூட்டத்தார் நரகத்திலும் (இருப்பார்கள்).
42:8 وَلَوْ شَآءَ اللّٰهُ لَجَعَلَهُمْ اُمَّةً وَّاحِدَةً وَّلٰـكِنْ يُّدْخِلُ مَنْ يَّشَآءُ فِىْ رَحْمَتِهٖؕ وَالظّٰلِمُوْنَ مَا لَهُمْ مِّنْ وَّلِىٍّ وَّلَا نَصِيْرٍ
وَلَوْ شَآءَ நாடியிருந்தால் اللّٰهُ அல்லாஹ் لَجَعَلَهُمْ அவர்களை ஆக்கியிருப்பான் اُمَّةً மார்க்கமுடையவர்களாக وَّاحِدَةً ஒரே ஒரு وَّلٰـكِنْ என்றாலும் يُّدْخِلُ நுழைக்கின்றான் مَنْ يَّشَآءُ தான் நாடியவர்களை فِىْ رَحْمَتِهٖؕ தனது அருளில் وَالظّٰلِمُوْنَ அநியாயக்காரர்கள் مَا لَهُمْ அவர்களுக்கு இல்லை مِّنْ وَّلِىٍّ எந்த பாதுகாவலரும் وَّلَا نَصِيْرٍ எந்த உதவியாளரும் இல்லை
42:8. அல்லாஹ் நாடியிருந்தால், நிச்சயமாக அவர்கள் (யாவரையும்) அவன் ஒரே உம்மத்தாக - சமுதாயமாக ஆக்கியிருப்பான்; எனினும் அவன் தான் நாடியவர்களைத் தன்னுடைய ரஹ்மத்தில் - கிருபையில் - நுழைவிப்பான்; அநியாயக்காரர்களுக்குப் பாதுகாவலர்களோ, உதவிபுரிபவர்களோ இல்லை.
42:8. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் அனைவரையுமே (ஒரே மார்க்கத்தைப் பின்பற்றும்) ஒரே சமூகத்தினராக்கி இருப்பான். (எனினும், அவர்கள் அனைவருடைய நடத்தையும் ஒரேவிதமாக இருக்கவில்லை.) ஆகவே, தான் விரும்பியவர்களையே தன் அருளில் புகுத்துகிறான். அநியாயக்காரர்(களைத் தப்பான வழியில் விட்டுவிட்டான். அவர்)களை (அந்நாளில்) பாதுகாப்பவர்களும் இல்லை; (அவர்களுக்கு) உதவி செய்பவர்களும் இல்லை.
42:8. அல்லாஹ் நாடியிருந்தால், அவர்கள் அனைவரையும் ஒரே சமுதாயமாக அமைத்திருப்பான். எனினும், அவன் நாடுகின்றவர்களைத் தன் கருணையில் நுழையச் செய்கிறான். மேலும், கொடுமைக்காரர்களுக்கு எந்தப் பாதுகாவலரும் உதவியாளரும் இலர்.
42:8. அன்றியும் அல்லாஹ் நாடியிருந்தால், அவர்களை (ஒரே மார்க்கத்தையுடைய) ஒரே சமுதாயத்தினராக ஆக்கியிருப்பான், எனினும், தான் நாடியவர்களை தன் அருளில் அவன் புகச் செய்வான், அநியாயக்காரர்களோ_ அவர்களுக்குப் பாதுகாவலனும் இல்லை, எந்த உதவியாளனும் இல்லை.
42:9 اَمِ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِيَآءَۚ فَاللّٰهُ هُوَ الْوَلِىُّ وَهُوَ يُحْىِ الْمَوْتٰى وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
اَمِ اتَّخَذُوْا அவர்கள் எடுத்துக் கொண்டார்களா? مِنْ دُوْنِهٖۤ அவனையன்றி اَوْلِيَآءَۚ பாதுகாவலர்களை فَاللّٰهُ هُوَ அல்லாஹ்தான் الْوَلِىُّ பாதுகாவலன் وَهُوَ இன்னும் அவன்தான் يُحْىِ உயிர்ப்பிப்பான் الْمَوْتٰى இறந்தவர்களை وَهُوَ இன்னும் அவன் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் மீதும் قَدِيْرٌ பேராற்றலுடையவன்
42:9. (நபியே!) அவர்கள் அல்லாஹ்வை அன்றி (வேறு) பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டார்களா? ஆனால் அல்லாஹ்வோ அவன் தான் பாதுகாவலனாக இருக்கின்றான், அவனே இறந்தோரை உயிர்ப்பிக்கிறான் - அவனே எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவன்.
42:9. (நபியே!) அல்லாஹ்வையன்றி (மற்றவர்களைத் தங்கள்) பாதுகாவலர்களாக அவர்கள் எடுத்துக் கொண்டனரா? (அவ்வாறாயின் அது முற்றிலும் தவறாகும்.) அல்லாஹ் (ஒருவன்)தான் உண்மையான பாதுகாவலன். அவனே மரணித்தவர்களை உயிர்ப்பிப்பான். அவன்தான் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன்.
42:9. என்ன, இவர்கள் அவனை விடுத்து பிறரைத் தம் பாது காவலர்களாய் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு அறிவீனர்களாய் இருக்கின்றார்களே! அல்லாஹ்வே பாதுகாவலனாவான். அவனே இறந்தவர்களை உயிர்ப்பிக்கின்றான். மேலும், அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் கொண்டவன் ஆவான்.
42:9. (நபியே! அல்லாஹ்வாகிய) அவனைத்தவிர (வேறு) பாதுகாவலர்களை அவர்கள் எடுத்துக்கொண்டனரா? (அது சரியல்ல) ஆகவே, அல்லாஹ் அவன் (ஒருவன்) தான் (உண்மையான) பாதுகாவலன், அவனே மரணித்தோரை உயிர்ப்பிக்கிறான், அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.
42:10 وَمَا اخْتَلَـفْتُمْ فِيْهِ مِنْ شَىْءٍ فَحُكْمُهٗۤ اِلَى اللّٰهِ ؕ ذٰ لِكُمُ اللّٰهُ رَبِّىْ عَلَيْهِ تَوَكَّلْتُۖ وَاِلَيْهِ اُنِيْبُ
وَمَا எது اخْتَلَـفْتُمْ முரண்படுகிறீர்களோ فِيْهِ அதில் مِنْ شَىْءٍ எந்த ஒரு விஷயம் فَحُكْمُهٗۤ அதன் இறுதி தீர்ப்பு اِلَى اللّٰهِ ؕ அல்லாஹ்வின் பக்கம்தான் ذٰ لِكُمُ اللّٰهُ அந்த அல்லாஹ்தான் رَبِّىْ என் இறைவன் عَلَيْهِ அவன் மீதே تَوَكَّلْتُۖ நம்பிக்கை வைத்துள்ளேன் وَاِلَيْهِ இன்னும் அவன் பக்கமே اُنِيْبُ திரும்புகின்றேன்
42:10. நீங்கள் எந்த விஷயத்தில் கருத்து வேற்றுமை கொண்டிருக்கிறீர்களோ, அதன் தீர்ப்பு அல்லாஹ்விடமே இருக்கிறது - அ(த்தகைய தீர்ப்பு வழங்குப)வன் தான் அல்லாஹ் - என்னுடைய இறைவன்; அவன் மீதே நான் முற்றும் நம்பிக்கை வைக்கிறேன்; அன்றியும் அவன் பக்கமே நான் திரும்புகிறேன்.
42:10. (நபியே! அவர்களை நோக்கி நீர் கூறுவீராக:) ‘‘இதில் நீங்கள் எவ்விஷயத்தைப் பற்றித் தர்க்கித்துக் கொள்கிறீர்களோ, அதன் தீர்ப்பு அல்லாஹ்விடமே இருக்கிறது. அந்த அல்லாஹ்தான் எனது இறைவன். அவனையே நான் முற்றிலும் நம்பி அவனையே நான் முன்னோக்கி இருக்கிறேன்.''
42:10. உங்களுக்கிடையே எந்த விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் அதில் தீர்ப்பு வழங்குவது அல்லாஹ்வின் பணியாகும். அந்த அல்லாஹ்தான் என் அதிபதி. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கின்றேன்; மேலும், அவன் பக்கமே நான் திரும்புகின்றேன்.
42:10. இன்னும் (நபியே! அவர்களிடம் நீர் கூறுவீராக!) நீங்கள் எவ்விஷயத்தில் கருத்து வேறுபாடுகொண்டிருக்கிறீர்களோ, அதன் தீர்ப்பு அல்லாஹ்வின் பக்கமே இருக்கின்றது, அந்த அல்லாஹ்தான் என் இரட்சகன், அவன்மீதே (என்னுடைய காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைக்கிறேன், இன்னும் அவனளவிலேயே (வழிபட்டு) நான் திரும்புவேன்.
42:11 فَاطِرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِؕ جَعَلَ لَـكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا وَّ مِنَ الْاَنْعَامِ اَزْوَاجًا ۚ يَذْرَؤُكُمْ فِيْهِ ؕ لَيْسَ كَمِثْلِهٖ شَىْءٌ ۚ وَهُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ
فَاطِرُ படைத்தவன் السَّمٰوٰتِ வானங்களையும் وَالْاَرْضِؕ பூமியையும் جَعَلَ ஏற்படுத்தினான் لَـكُمْ உங்களுக்கு مِّنْ اَنْفُسِكُمْ உங்களிலிருந்தே اَزْوَاجًا ஜோடிகளை(யும்) وَّ مِنَ الْاَنْعَامِ இன்னும் கால்நடைகளில் اَزْوَاجًا ۚ ஜோடிகளை(யும்) يَذْرَؤُ படைக்கின்றான் كُمْ உங்களை فِيْهِ ؕ لَيْسَ அதில்/இல்லை كَمِثْلِهٖ அவனைப் போன்று شَىْءٌ ۚ எதுவும் وَهُوَ அவன்தான் السَّمِيْعُ நன்கு செவியுறுபவன் الْبَصِيْرُ நன்கு பார்ப்பவன்
42:11. வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே; உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான், அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்.
42:11. அவனே வானங்களையும் பூமியையும் படைத்தவன். உங்களிலிருந்தே (உங்கள்) மனைவிகளையும் அவன் உங்களுக்காக படைக்கிறான். (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளையும் ஜோடி ஜோடியாக படைத்து, உங்களைப் பூமியின் பல பாகங்களிலும் பரவிப் பெருகச் செய்கிறான். அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை. அவன் (அனைத்தையும்) செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.
42:11. அவன் வானங்களையும் பூமியையும் படைத்தவன்; அவன்தான் உங்கள் இனத்திலிருந்தே உங்களுக்குத் துணைகளைப் படைத்தான். மேலும், இதேபோல் கால்நடைகளிலும் (அவற்றின் இனங்களிலிருந்தே) இணைகளைப் படைத்தான். மேலும், இவ்விதமாக அவன் உங்கள் சந்ததிகளைப் பெருகச் செய்கிறான். (உலகத்தின்) எந்தப் பொருளும் அவனுக்கு ஒப்பானதாய் இல்லை; அவன் அனைத்தையும் செவியுறுபவனும் பார்ப்பவனும் ஆவான்.
42:11. (அவனே) வானங்களையும், பூமியையும் புதிதாகப் படைத்தவன், உங்களுக்காக உங்களிலிருந்தே ஜோடி(களான மனைவி)களையும், கால்நடைகளிலிருந்து ஜோடிகளையும் அவன் ஆக்கி அதைக்கொண்டு (இன உற்பத்திகளை இவ்வாறே பெருக்கி) உங்களை அவன் அதில் பரவச் செய்கிறான், அவனைப்போன்று எப்பொருளும் இல்லை, அவனே (யாவற்றையும்) செவியேற்கிறவன், பார்க்கிறவன்.
42:12 لَهٗ مَقَالِيْدُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۚ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ وَيَقْدِرُؕ اِنَّهٗ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ
لَهٗ அவனுக்கே உரியன مَقَالِيْدُ சாவிகள் السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِۚ இன்னும் பூமி يَبْسُطُ விரிவாக்குகின்றான் الرِّزْقَ வாழ்வாதாரத்தை لِمَنْ يَّشَآءُ தான் நாடியவர்களுக்கு وَيَقْدِرُؕ இன்னும் சுருக்குகின்றான் اِنَّهٗ நிச்சயமாக அவன் بِكُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் عَلِيْمٌ நன்கறிந்தவன் ஆவான்
42:12. வானங்களுடையவும், பூமியுடையவும் சாவிகள் அவனிடமே இருக்கின்றன; தான் நாடியவர்களுக்கு அவனே உணவு வசதிகளைப் பெருகும் படி செய்கிறான், (தான் நாடியவர்களுக்கு அவனே அளவு படுத்திச்) சுருக்கிவிடுகிறான் - நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவன்.
42:12. வானங்கள், பூமியின் (பொக்கிஷங்களின்) சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவன் விரும்பியவர்களுக்கு உணவை விரிவாக்குகிறான். (அவன் விரும்பியவர்களுக்குச்) சுருக்கி விடுகிறான். நிச்சயமாக அவன் சகல வஸ்துக்களையும் (மக்களின் தன்மைகளையும்) நன்கறிந்தவன். (ஆகவே, அவர்களின் தகுதிக்குத் தக்கவாறு கொடுக்கிறான்.)
42:12. வானங்களிலும் பூமியிலும் உள்ள கருவூலங்களின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. தான் நாடுகின்றவர்களுக்குத் தாராளமாக வாழ்வாதாரம் வழங்குகின்றான். நாடுகின்றவர்களுக்குக் குறைத்துக் கொடுக்கின்றான். திண்ணமாக, அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவன் ஆவான்.
42:12. வானங்கள் மற்றும் பூமியின் (களஞ்சியங்களின்) சாவிகள் அவனுக்கே உரியதாகும். அவன் நாடியவர்களுக்கு உணவை (சம்பத்தை) விரிவாக்குகின்றான், அளவோடும் கொடுக்கிறான். நிச்சயமாக அவன், ஒவ்வொரு பொருளைப் பற்றியும் நன்கறிகிறவன்.
42:13 شَرَعَ لَـكُمْ مِّنَ الدِّيْنِ مَا وَصّٰى بِهٖ نُوْحًا وَّالَّذِىْۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهٖۤ اِبْرٰهِيْمَ وَمُوْسٰى وَعِيْسٰٓى اَنْ اَقِيْمُوا الدِّيْنَ وَ لَا تَتَفَرَّقُوْا فِيْهِؕ كَبُـرَ عَلَى الْمُشْرِكِيْنَ مَا تَدْعُوْهُمْ اِلَيْهِ ؕ اَللّٰهُ يَجْتَبِىْۤ اِلَيْهِ مَنْ يَّشَآءُ وَيَهْدِىْۤ اِلَيْهِ مَنْ يُّنِيْبُ
شَرَعَ சட்டமாக்கினான் لَـكُمْ உங்களுக்கு(ம்) مِّنَ الدِّيْنِ மார்க்கத்தில் مَا எதை وَصّٰى உபதேசித்தானோ بِهٖ அதையே نُوْحًا நூஹூக்கு وَّالَّذِىْۤ இன்னும் எதை اَوْحَيْنَاۤ நாம் வஹீ அறிவித்தோமோ اِلَيْكَ உமக்கு وَمَا இன்னும் எது وَصَّيْنَا நாம் உபதேசித்தோமோ بِهٖۤ அதை اِبْرٰهِيْمَ இப்ராஹீம் وَمُوْسٰى இன்னும் மூஸா وَعِيْسٰٓى இன்னும் ஈஸா(விற்கு) اَنْ اَقِيْمُوا நிலை நிறுத்துங்கள்! الدِّيْنَ இந்த மார்க்கத்தை وَ لَا تَتَفَرَّقُوْا நீங்கள் பிரிந்து விடாதீர்கள்! فِيْهِؕ அதில் كَبُـرَ மிக பாரமாக ஆகிவிட்டது عَلَى الْمُشْرِكِيْنَ இணைவைப்பவர்களுக்கு مَا எது تَدْعُوْ அழைக்கின்றீரோ هُمْ அவர்களை اِلَيْهِ ؕ அதன் பக்கம் اَللّٰهُ அல்லாஹ் يَجْتَبِىْۤ தேர்ந்தெடுக்கின்றான் اِلَيْهِ தன் பக்கம் مَنْ يَّشَآءُ தான் நாடுகின்றவர்களை وَيَهْدِىْۤ இன்னும் வழி காட்டுகின்றான் اِلَيْهِ தன் பக்கம் مَنْ يُّنِيْبُ திரும்புகின்றவர்களுக்கு
42:13. நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான்; ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்ராஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்: “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்” என்பதே - இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது - தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் - (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.
42:13. (நம்பிக்கையாளர்களே!) நூஹ்வுக்கு எதை அவன் உபதேசித்தானோ அதையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கி இருக்கிறான். ஆகவே, (நபியே!) நாம் உங்களுக்கு வஹ்யி மூலம் அறிவிப்பதும், இப்றாஹீம், மூஸா, ஈஸா முதலியவர்களுக்கு நாம் உபதேசித்ததும் (என்னவென்றால், ‘‘நீங்கள் ஒருமித்து ஓரிறை கொள்கையுடைய உண்மையான) மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள். அதில் (பல பிரிவுகளாகப்) பிரிவினை செய்து கொள்ளாதீர்கள் என்பதேயாகும். ஆகவே, அவர்களை எதன் பக்கம் நீங்கள் அழைக்கிறீர்களோ அ(ந்த ஓரிறை கொள்கையான)து, இணைவைத்து வணங்கும் அவர்களுக்குப் பெரும் பளுவாகத் தோன்றும். அல்லாஹ், தான் விரும்பியவர்களையே தன் பக்கம் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். தன்னை முன்னோக்கியவர்களுக்கே தன்னிடம் வரும் வழியையும் அவன் அறிவிக்கிறான்.
42:13. எந்த தீனை வாழ்க்கைநெறியை நூஹுக்கு அவன் வகுத்தளித்திருந்தானோ, மேலும், (முஹம்மதே!) எந்த வாழ்க்கை முறையை உமக்கு நாம் வஹியின் மூலம் அறிவித்திருக்கின்றோமோ, மேலும் எந்த வழிகாட்டலை இப்ராஹீம், மூஸா, ஈஸா ஆகியோருக்கு நாம் வழங்கியிருக்கின்றோமோ அதே தீனை வாழ்க்கை முறையைத்தான் உங்களுக்காக அவன் நிர்ணயித்துள்ளான்; இந்த தீனை நிலைநாட்டுங்கள்; இதில் பிரிந்து போய்விடாதீர்கள்(எனும் அறிவுறுத்தலுடன்)! இந்த இணைவைப்பாளர்களை நீர் எந்த விஷயத்தின் பக்கம் அழைக்கின்றீரோ அது அவர்களுக்கு மிகவும் வெறுப்புக்குரியதாய் இருக்கின்றது. தான் நாடுகின்றவர்களை அல்லாஹ் தனக்குரியவர்களாய்த் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான். மேலும், எவர்கள் அவன் பக்கம் திரும்புகின்றார்களோ அவர்களுக்குத் தன்னிடம் வருவதற்கான வழியை அவன் காண்பிக்கின்றான்.
42:13. (விசுவாசிகளே!) மார்க்கத்திலிருந்து நூஹ்வுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கு அவன் மார்க்கமாக்கி இருக்கின்றான், ஆகவே, (நபியே!) நாம் உமக்கு வஹீமூலம் அறிவித்ததும், இப்றாஹீம் , மூஸா, ஈஸா ஆகியோருக்கு நாம் உபதேசித்ததும் (என்னவென்றால்) “நீங்கள் (ஏகதெய்வக் கொள்கையுடைய சத்திய) மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்தும்விடாதீர்கள் (என்பதேயாகும்), ஆகவே இணைவைத்துக்கொண்டிருப்போர்களுக்கு, அவர்களை எதன் பால் நீர் அழைக்கின்றீரோ அது பளுவாகத் தெரிகிறது. அல்லாஹ் தான் நாடியவர்களை தன் பக்கம் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான், அவன் பக்கம் மீள்வோருக்கு நேர் வழியும் காட்டுகிறான்.
42:14 وَمَا تَفَرَّقُوْۤا اِلَّا مِنْۢ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ بَغْيًاۢ بَيْنَهُمْؕ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى لَّقُضِىَ بَيْنَهُمْؕ وَ اِنَّ الَّذِيْنَ اُوْرِثُوا الْكِتٰبَ مِنْۢ بَعْدِهِمْ لَفِىْ شَكٍّ مِّنْهُ مُرِيْبٍ
وَمَا تَفَرَّقُوْۤا அவர்கள் பல பிரிவுகளாக பிரியவில்லை اِلَّا தவிர مِنْۢ بَعْدِ مَا جَآءَ வந்ததன் பின்னரே هُمُ தங்களிடம் الْعِلْمُ கல்வி بَغْيًاۢ பொறாமையினால்தான் بَيْنَهُمْؕ தங்களுக்கு மத்தியில் وَلَوْلَا இருக்கவில்லை என்றால் كَلِمَةٌ ஒரு வாக்கு سَبَقَتْ முந்தி(யது) مِنْ رَّبِّكَ உமது இறைவன் புறத்தில் இருந்து اِلٰٓى اَجَلٍ ஒரு தவணை வரை مُّسَمًّى குறிப்பிட்ட لَّقُضِىَ தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் بَيْنَهُمْؕ அவர்களுக்கு மத்தியில் وَ اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ اُوْرِثُوا கொடுக்கப்பட்டவர்கள் الْكِتٰبَ வேதம் مِنْۢ بَعْدِ பின்னர் هِمْ இவர்களுக்கு لَفِىْ شَكٍّ சந்தேகத்தில் مِّنْهُ அதில் مُرِيْبٍ பெரிய
42:14. அவர்கள், தங்களிடம் ஞானம் (வேதம்) வந்த பின்னர், தங்களுக்கிடையேயுள்ள பொறாமையின் காரணமாகவேயன்றி அவர்கள் பிரிந்து போகவில்லை; (அவர்கள் பற்றிய தீர்ப்பு) ஒரு குறிப்பிட்ட தவணையில் என்று உம்முடைய இறைவனின் வாக்கு முன்னரே ஏற்பட்டிருக்காவிடில், அவர்களிடையே (இதற்குள்) நிச்சயமாக தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்; அன்றியும், அவர்களுக்கு பின்னர் யார் வேதத்திற்கு வாரிசாக்கப்பட்டார்களோ நிச்சயமாக அவர்களும் இதில் பெரும் சந்தேகத்தில் இருக்கின்றனர்.
42:14. அவர்கள் தங்களிடம் (வேத) ஞானம் வந்ததன் பின்னரும், தங்களுக்கு இடையிலுள்ள பொறாமையின் காரணமாகவே தவிர (உண்மையிலிருந்து) அவர்கள் பிரிந்துவிடவில்லை. (அவர்களுக்குத் தீர்ப்பளிப்பது) ஒரு குறிப்பிட்ட தவணையில்தான் என்று உமது இறைவனுடைய வாக்கு முன்னதாகவே ஏற்பட்டிருக்காவிடில், அவர்களுடைய காரியம் (இதுவரை)முடிவுபெற்றே இருக்கும். மேலும், அவர்களுக்குப் பின்னர், எவர்கள் அவ்வேதத்திற்கு வாரிசுகளாக ஆக்கப்பட்டார்களோ அவர்களும், நிச்சயமாக இதில் பெரும் சந்தேகத்தில்தான் ஆழ்ந்து கிடக்கின்றனர்.
42:14. மக்கள் தங்களுக்கு ஞானம் வந்த பின்னர்தான் பிளவுபட்டுப் போனார்கள்; அதுவும் ஒருவருக்கொருவர் அநீதி இழைக்க நாடிய காரணத்தால்தான்! ஒரு குறிப்பிட்ட காலம் வரை தீர்ப்பு தள்ளிப் போடப்படும் என்று உம் இறைவன் முன்னரே கூறியிருக்காவிட்டால், அவர்களுடைய விவகாரம் தீர்க்கப்பட்டிருக்கும்! மேலும், உண்மை என்னவெனில், அந்த முன்னோர்களுக்குப் பிறகு யார் வேதத்துக்கு வாரிசாக்கப்பட்டார்களோ அவர்களும் அதனைக் குறித்து கடும் மனக்குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய சந்தேகத்தில் உழன்று கொண்டிருக்கின்றார்கள்.
42:14. அவர்கள் தங்களுக்கிடையிலுள்ள பொறாமையால் தங்களிடம் (வேத) அறிவு வந்த பின்னரே தவிர, (இம்மார்க்கத்தில்) அவர்கள் பிரிந்துவிடவில்லை. (அவர்களுக்குரிய தீர்ப்பு) ஒரு குறிப்பிடப்பட்ட தவணைவரைதான் என்று உமதிரட்சகனுடைய வாக்கு முந்தியிருக்காவிடில், அவர்களுக்கிடையில் (இதுவரை) தீர்ப்பளிக்கபட்டிருக்கும், இன்னும் நிச்சயமாக அவர்களுக்குப் பின்னர், அவ்வேதத்திற்கு அனந்தரகாரர்களாக ஆக்கப்பட்டார்களே, அத்தகையோர் அ(வ்வேதத்)திலிருந்து அவநம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய சந்தேகத்தில் இருக்கிறார்கள்.
42:15 فَلِذٰلِكَ فَادْعُ ۚ وَاسْتَقِمْ كَمَاۤ اُمِرْتَۚ وَلَا تَتَّبِعْ اَهْوَآءَهُمْۚ وَقُلْ اٰمَنْتُ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ مِنْ كِتٰبٍۚ وَاُمِرْتُ لِاَعْدِلَ بَيْنَكُمُؕ اَللّٰهُ رَبُّنَا وَرَبُّكُمْؕ لَـنَاۤ اَعْمَالُـنَا وَلَـكُمْ اَعْمَالُكُمْۚ لَا حُجَّةَ بَيْنَنَا وَبَيْنَكُمُؕ اَللّٰهُ يَجْمَعُ بَيْنَنَاۚ وَاِلَيْهِ الْمَصِيْرُؕ
فَلِذٰلِكَ இதன் பக்கமே فَادْعُ ۚ நீர் அழைப்பீராக وَاسْتَقِمْ இன்னும் நீர் நிலையாக நீடித்து இருப்பீராக كَمَاۤ اُمِرْتَۚ நீர் கட்டளையிடப்பட்டது போன்றே وَلَا تَتَّبِعْ நீர் பின்பற்றாதீர் اَهْوَآءَ மன விருப்பங்களை هُمْۚ அவர்களின் وَقُلْ இன்னும் நீர் கூறுவிராக اٰمَنْتُ நான் நம்பிக்கை கொண்டேன் بِمَاۤ اَنْزَلَ இறக்கியதை اللّٰهُ அல்லாஹ் مِنْ كِتٰبٍۚ வேதங்களில் இருந்து وَاُمِرْتُ பணிக்கப்பட்டுள்ளேன் لِاَعْدِلَ நீதமாக நடக்க வேண்டும் என்று بَيْنَكُمُؕ உங்களுக்கு மத்தியில் اَللّٰهُ அல்லாஹ்தான் رَبُّنَا இன்னும் உங்களுக்கு وَرَبُّكُمْؕ இன்னும் உங்கள் அமல்கள் لَـنَاۤ எங்களுக்கு اَعْمَالُـنَا எங்கள் அமல்கள் وَلَـكُمْ இன்னும் உங்களுக்கு اَعْمَالُكُمْۚ உங்கள் அமல்கள் لَا حُجَّةَ சண்டை வேண்டாம் بَيْنَنَا நமக்கு மத்தியிலும் وَبَيْنَكُمُؕ உங்களுக்கு மத்தியிலும் اَللّٰهُ அல்லாஹ்தான் يَجْمَعُ ஒன்று சேர்ப்பான் بَيْنَنَاۚ நமக்கு மத்தியில் وَاِلَيْهِ அவன் பக்கமே الْمَصِيْرُؕ மீளுமிடம்
42:15. எனவே, (நபியே! நேர்வழியின் பக்கம் அவர்களை) நீர் அழைத்துக் கொண்டே இருப்பீராக; மேலும், நீர் ஏவப்பட்ட பிரகாரம் உறுதியுடன் நிற்பீராக! அவர்களுடைய (இழிவான) மனோ இச்சைகளை நீர் பின்பற்றாதீர்; இன்னும், “அல்லாஹ் இறக்கி வைத்த வேதங்களை நான் நம்புகிறேன்; அன்றியும் உங்களிடையே நீதி வழங்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன். அல்லாஹ்வே எங்கள் இறைவனாவான்; அவனே உங்களுடைய இறைவனும் ஆவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு; உங்கள் செயல்கள் உங்களுக்கு; எங்களுக்கும் உங்களுக்குமிடையே தர்க்கம் வேண்டாம் - அல்லாஹ் நம்மிடையே (மறுமையில்) ஒன்று சேர்ப்பான், அவன் பாலே நாம் மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது” என்றும் கூறுவீராக.
42:15. ஆகவே, (நபியே!) அ(ந்)த (உண்மையான மார்க்கத்தி)னளவில் (அவர்களை) நீர் அழைப்பீராக, உமக்கு ஏவப்பட்டபடி நீர் உறுதியாக இருப்பீராக, அவர்களுடைய விருப்பங்களை நீர் பின்பற்றாதீர். மேலும், (அவர்களை நோக்கிக்) கூறுவீராக: அல்லாஹ் வேதமென்று எதை இறக்கி வைத்தானோ அதையே நான் நம்பிக்கை கொள்கிறேன். உங்களுக்கிடையில் (உள்ள விவகாரங்களை) நீதமாகத் தீர்ப்பளிக்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன். அல்லாஹ்தான் எங்கள் இறைவனும் உங்கள் இறைவனுமாவான். எங்கள் செயல்களுக்குரிய பலன் எங்களுக்குக் கிடைக்கும்; உங்கள் செயல்களுக்குரிய பலன் உங்களுக்குக் கிடைக்கும். எங்களுக்கும் உங்களுக்குமிடையில் ஒரு தர்க்கமும் வேண்டாம். நம் அனைவரையும் (மறுமையில்) அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். அவனிடமே (நாம் அனைவரும்) செல்ல வேண்டியதிருக்கிறது.
42:15. (இத்தகைய நிலை உருவாகிவிட்டிருக்கிறது.) எனவே (முஹம்மதே!) இப்போது நீர் அதே தீனின் பக்கம் அழையும்; உமக்கு ஏவப்பட்டபடி அதில் உறுதியுடன் இரும்! மேலும், இம் மக்களின் ஆசாபாசங்களுக்கு இணங்கிவிடாதீர். மேலும் (இவர்களிடம்) கூறிவிடும்: “அல்லாஹ் எந்த வேதத்தை இறக்கியிருக்கின்றானோ அதன்மீது நான் நம்பிக்கை கொண்டேன்; நான் உங்களிடையே நீதி செலுத்த வேண்டும் என கட்டளையிடப்பட்டிருக்கின்றேன். அல்லாஹ்தான் எங்களுக்கும் அதிபதி; உங்களுக்கும் அதிபதி; எங்கள் செயல்கள் எங்களுக்கு உங்கள் செயல்கள் உங்களுக்கு! எங்களுக்கும் உங்களுக்கும் இடையே எந்த தர்க்கமும் இல்லை. அல்லாஹ் ஒருநாள் நம் அனைவரையும் ஒன்று திரட்டுவான். மேலும், அவனிடமே (நாம் அனைவரும்) செல்ல வேண்டியுள்ளது.”
42:15. ஆகவே, அதற்காக(_சத்தியமார்க்கத்தின்பால் அவர்களை) நீர் அழைப்பீராக! நீர் ஏவப்பட்ட பிரகாரம் நிலைத்தும் நிற்பீராக! அவர்களுடைய மனோ இச்சைகளையும் நீர் பின்பற்றாதீர், இன்னும், (அவர்களிடம்) நீர் கூறுவீராக “அல்லாஹ் வேதத்திலிருந்து எதனை இறக்கி வைத்தானோ, அதனையே நான் விசுவாசிக்கின்றேன், உங்களுக்கிடையில் நீதமாகவே தீர்ப்பளிக்குமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன், அல்லாஹ் (தான்) எங்கள் இரட்சகனும் உங்கள் இரட்சகனுமாவான், எங்கள் செயல்கள் எங்களுக்கு, உங்கள் செயல்களோ உங்களுக்கு, எங்களுக்கிடையிலும் உங்களுக்கிடையிலும் யாதொரு தர்க்கமும் இல்லை, நம்மிடையே (மறுமையில்) அல்லாஹ் ஒன்று சேர்ப்பான், அவன்பக்கமே (நாம் யாவரும்) திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கிறது.
42:16 وَالَّذِيْنَ يُحَآجُّوْنَ فِى اللّٰهِ مِنْۢ بَعْدِ مَا اسْتُجِيْبَ لَهٗ حُجَّتُهُمْ دَاحِضَةٌ عِنْدَ رَبِّهِمْ وَعَلَيْهِمْ غَضَبٌ وَّلَهُمْ عَذَابٌ شَدِيْدٌ
وَالَّذِيْنَ يُحَآجُّوْنَ எவர்கள் தர்க்கம் செய்கின்றார்களோ فِى اللّٰهِ அல்லாஹ்வின் விஷயத்தில் مِنْۢ بَعْدِ பின்னர் مَا اسْتُجِيْبَ ஏற்றுக்கொண்டதன் لَهٗ அவனை حُجَّتُهُمْ அவர்களின்வாதங்கள் دَاحِضَةٌ வீணானதே! عِنْدَ رَبِّهِمْ அல்லாஹ்விடம் وَعَلَيْهِمْ இன்னும் அவர்கள் மீது இறங்கும் غَضَبٌ கோபம் وَّلَهُمْ இன்னும் அவர்களுக்கு உண்டு عَذَابٌ வேதனையும் شَدِيْدٌ கடுமையான
42:16. எவர்கள் அல்லாஹ்வை ஒப்புக் கொண்டபின், அவனைப்பற்றி தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடைய தர்க்கம் அவர்களுடைய இறைவனிடத்தில் பயனற்றதாகும்; அதனால் அவர்கள் மீது (அவனுடைய) கோபம் ஏற்பட்டு, கடினமான வேதனையும் அவர்களுக்கு உண்டாகும்.
42:16. எவர்கள் (நம்பிக்கை கொண்டு) அல்லாஹ்வுக்குப் பதில் கூறிய பின்னர், அவனைப் பற்றி (வீணாக)த் தர்க்கித்து(க் குழப்பத்தை உண்டு பண்ணி)க் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடைய தர்க்கம் அவர்களுடைய இறைவனிடத்தில் பயனற்றதாகும். அதனால், அவர்கள் மீது (அவனுடைய) கோபமும் ஏற்பட்டு கடினமான வேதனையும் அவர்களுக்குக் கிடைக்கும்.
42:16. அல்லாஹ்வின் அழைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு (அப்படி ஏற்றுக்கொண்ட மக்களிடம்) எவர்கள், அல்லாஹ்வைப் பற்றி தர்க்கம் செய்கின்றார்களோ அவர்களின் தர்க்கம் அவர்களின் இறைவனிடத்தில் முற்றிலும் ஆதாரமற்றதாகும். மேலும், அவர்களின் மீது அவனுடைய கோபம் உண்டாகிறது. அவர்களுக்குக் கடும் வேதனையும் இருக்கிறது.
42:16. இன்னும், அல்லாஹ்வி(ன் விஷயத்தி)ல் (விசுவாசிகளால்) அவனது அழைப்பிற்கு பதில் கூறப்பட்ட பின்னர் தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்களே அத்தகையோர்_அவர்களுடைய தர்க்கம் அவர்களின் இரட்சகனிடம் வீணானதாகும், அவர்களின் மீது (அல்லாஹ்வின்) கோபமும் உண்டு, கடினமான வேதனையும் அவர்களுக்கு உண்டு.
42:17 اَللّٰهُ الَّذِىْۤ اَنْزَلَ الْكِتٰبَ بِالْحَقِّ وَالْمِيْزَانَؕ وَمَا يُدْرِيْكَ لَعَلَّ السَّاعَةَ قَرِيْبٌ
اَللّٰهُ அல்லாஹ் الَّذِىْۤ எப்படிப்பட்டவன் اَنْزَلَ இறக்கினான் الْكِتٰبَ வேதத்தையும் بِالْحَقِّ சத்தியத்துடன் وَالْمِيْزَانَؕ தராசையும் وَمَا يُدْرِيْكَ உமக்கு எது அறிவிக்கும்? لَعَلَّ السَّاعَةَ மறுமை قَرِيْبٌ மிக சமீபமானது
42:17. அல்லாஹ்தான் இந்த வேதத்தையும் நீதியையும் உண்மையையும் கொண்டு இறக்கி அருளினான்; இன்னும் (நபியே! தீர்ப்புக்குரிய) அவ்வேளை சமீபமாக இருக்கிறது என்பதை நீர் அறிவீரா?
42:17. அல்லாஹ்தான் முற்றிலும் உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை இறக்கி வைத்தான். மேலும், அவனே (நீங்கள் நீதமாக நடந்துகொள்ள) தராசையும் படைத்தான். (நபியே!) மறுமை நெருங்கிவிட்டதென்பதை நீர் அறிவீராக!
42:17. அல்லாஹ்தான் இந்த வேதத்தையும் மீஸானையும் (தராசையும்) சத்தியத்துடன் இறக்கியருளினான். உமக்குத் தெரியுமா என்ன? ஒருக்கால் தீர்ப்புக்குரிய நேரம் அருகிலேயே வந்துவிட்டிருக்கலாம்.
42:17. அல்லாஹ் எத்தகையவனென்றால், அவன்தான் உண்மையைக்கொண்டு (இவ்) வேதத்தையும், நீதத்தையும் இறக்கிவைத்தான், (நபியே!) மறுமை நாள் சமீபத்தில் இருக்கலாம் என உமக்கு அறிவிப்பது எது?
42:18 يَسْتَعْجِلُ بِهَا الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِهَا ۚ وَالَّذِيْنَ اٰمَنُوْا مُشْفِقُوْنَ مِنْهَا ۙ وَيَعْلَمُوْنَ اَنَّهَا الْحَقُّ ؕ اَلَاۤ اِنَّ الَّذِيْنَ يُمَارُوْنَ فِى السَّاعَةِ لَفِىْ ضَلٰلٍۢ بَعِيْدٍ
يَسْتَعْجِلُ அவசரமாகத் தேடுகின்றனர் بِهَا அதை الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِهَا ۚ நம்பிக்கை கொள்ளாதவர்கள்/அதை وَالَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்கள் مُشْفِقُوْنَ பயப்படுகின்றனர் مِنْهَا ۙ அதை وَيَعْلَمُوْنَ இன்னும் அறிவார்கள் اَنَّهَا நிச்சயமாக அது الْحَقُّ ؕ உண்மைதான் اَلَاۤ அறிந்துகொள்ளுங்கள்! اِنَّ الَّذِيْنَ يُمَارُوْنَ நிச்சயமாக தர்க்கிப்பவர்கள் فِى السَّاعَةِ மறுமை விஷயத்தில் لَفِىْ ضَلٰلٍۢ வழிகேட்டில்தான் بَعِيْدٍ வெகு தூரமான
42:18. அதன் மேல் நம்பிக்கை கொள்ளாதவர்கள், அதைப்பற்றி அவசரப்படுகின்றனர்; ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அதனை (நினைத்து) பயப்படுகிறார்கள்; நிச்சயமாக அது உண்மையே என்பதை அவர்கள் அறிகிறார்கள்; அறிந்து கொள்க: அவ்வேளை குறித்து எவர்கள் வீண்வாதம் செய்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள் நெடிய வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.
42:18. மறுமையை நம்பாதவர்கள் அதைப் பற்றி (எப்பொழுது வரும், எப்பொழுது வரும் என்று) அவசரப்படுகின்றனர். ஆயினும், எவர்கள் அதை நம்பியிருக்கிறார்களோ அவர்கள் அதைப் பற்றிப் பயந்து கொண்டிருப்பதுடன், நிச்சயமாக அது (வருவது) உண்மைதான் என்றும் திட்டமாக அறிவார்கள். எவர்கள் மறுமையைப் பற்றிச் சந்தேகத்தில் இருக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக வெகு தூரமானதொரு வழிகேட்டில்தான் இருக்கிறார்கள் என்பதை (நபியே!) அறிந்து கொள்வீராக.
42:18. எவர்கள் அ(து வருவ)தை நம்பவில்லையோ அவர்கள் அதற்காக அவசரப்படுகின்றார்கள். ஆனால், அதன் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அதனைக் குறித்து அஞ்சுகின்றார்கள். மேலும், திண்ணமாக அது வரக்கூடியதே என்று அறிகின்றார்கள். நன்றாக செவிதாழ்த்திக் கேளுங்கள்! எவர்கள் அந்த நேரத்தின் வருகை குறித்து (ஐயத்தை ஏற்படுத்தக்கூடிய) விவாதங்கள் புரிகின்றார்களோ அவர்கள் வழிகேட்டில் வெகுதூரம் சென்றுவிட்டிருக்கின்றார்கள்.
42:18. (மறுமைநாளான) அதனை நம்பிக்கைக் கொள்ளாதவர்கள் அதைப்பற்றி (எப்போதுவரும், என்று) அவசரப்படுகின்றனர், மேலும், விசுவாசம் கொண்டார்களே அத்தகையவர்கள் அதனைப்பற்றி பயந்தவர்களாக இருக்கின்றார்கள்; இன்னும் நிச்சயமாக, அது (வருவது) உண்மைதான் என்றும் அவர்கள் அறிவார்கள், நிச்சயமாக மறுமையைப்பற்றி சந்தேகத்திலிருக்கின்றார்களே அத்தகையவர்கள், வெகு தூரமான வழிகேட்டில்தான் இருக்கிறார்கள் என்பதை (நபியே! நீர்) அறிந்துகொள்வீராக.
42:19 اَللّٰهُ لَطِيْفٌۢ بِعِبَادِهٖ يَرْزُقُ مَنْ يَّشَآءُۚ وَهُوَ الْقَوِىُّ الْعَزِيْزُ
اَللّٰهُ அல்லாஹ்தான் لَطِيْفٌۢ மிக கருணையும் தயவும் உடையவன் بِعِبَادِهٖ தன் அடியார்கள் மீது يَرْزُقُ உணவளிக்கின்றான் مَنْ يَّشَآءُۚ தான் நாடுகின்றவர்களுக்கு وَهُوَ அவன்தான் الْقَوِىُّ மிக வலிமை உள்ளவன் الْعَزِيْزُ மிகைத்தவன்
42:19. அல்லாஹ் தன் அடியார்கள் பால் அன்பு மிக்கவனாக இருக்கிறான்; தான் நாடியவர்களுக்கு (வேண்டிய) உணவளிக்கிறான்; அவனே வலிமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன்.
42:19. அல்லாஹ் தன் அடியார்களை அன்பாகக் கவனித்து வருபவன் ஆகவே, அவன் நாடியவர்களுக்கு (வேண்டிய) உணவளித்து வருகிறான். அவன்தான் மிக பலமுள்ளவனும் (அனைவரையும்) மிகைத்தவனும் ஆவான்.
42:19. அல்லாஹ் தன் அடிமைகள் மீது மிகவும் கிருபையுள்ளவன் ஆவான். யாருக்கு எதைக் கொடுக்க வேண்டுமென்று நாடுகின்றானோ அதைக் கொடுக்கின்றான். அவன் பெரும் வல்லமை மிக்கவனும் யாவற்றையும் மிகைத்தவனும் ஆவான்.
42:19. அல்லாஹ், தன் அடியார்களை அன்பாகக் கவனித்து வருபவன். (ஆகவே) அவன் நாடியவர்களுக்கு (வேண்டிய) உணவளிக்கிறான்; அவனே பலமிக்கவன் (யாவரையும்) மிகைத்தோன்.
42:20 مَنْ كَانَ يُرِيْدُ حَرْثَ الْاٰخِرَةِ نَزِدْ لَهٗ فِىْ حَرْثِهٖۚ وَمَنْ كَانَ يُرِيْدُ حَرْثَ الدُّنْيَا نُؤْتِهٖ مِنْهَا وَمَا لَهٗ فِى الْاٰخِرَةِ مِنْ نَّصِيْبٍ
مَنْ யார் كَانَ இருப்பாரோ يُرِيْدُ நாடுகின்றவராக حَرْثَ விளைச்சலை الْاٰخِرَةِ மறுமையின் نَزِدْ நாம் அதிகப்படுத்துவோம் لَهٗ அவருக்கு فِىْ حَرْثِهٖۚ அவருடைய விளைச்சலில் وَمَنْ இன்னும் யார் كَانَ இருப்பாரோ يُرِيْدُ நாடுகின்றவராக حَرْثَ விளைச்சலை الدُّنْيَا உலகத்தின் نُؤْتِهٖ அவருக்கு நாம் கொடுப்போம் مِنْهَا அதில் இருந்து وَمَا இல்லை لَهٗ அவருக்கு فِى الْاٰخِرَةِ மறுமையில் مِنْ نَّصِيْبٍ எவ்வித பங்கும்
42:20. எவர் மறுமையின் விளைச்சலை விரும்புகிறாரோ அவருடைய விளைச்சலை நாம் அவருக்காக அதிகப்படுத்துவோம்; எவர் இவ்வுலகின் விளைச்சலை மட்டும் விரும்புகிறாரோ, அவருக்கு நாம் அதிலிருந்து ஓரளவு கொடுக்கிறோம் - எனினும் அவருக்கு மறுமையில் யாதொரு பங்கும் இல்லை.
42:20. எவன் மறுமைக்காகப் பயிரிட விரும்புகிறானோ, அவனுடைய பயிரின் விளைச்சலை நாம் அதிகப்படுத்துகிறோம். எவன் இம்மைக்காக (மட்டும்) பயிரிட விரும்புகிறானோ, நாம் அவனுக்கும் அதிலிருந்து ஓரளவு கொடுக்கிறோம். எனினும், அவனுக்கு மறுமையில் ஒரு பாக்கியமுமில்லை.
42:20. எவன் மறுமையின் விளைச்சலை விரும்புகின்றானோ அவனுக்கு அந்த விளைச்சலை நாம் அதிகரிக்கச் செய்கின்றோம். எவன் இம்மையின் விளைச்சலை விரும்புகின்றானோ அவனுக்கு அதனை இம்மையிலேயே அளிக்கின்றோம். ஆனால், மறுமையில் அவனுக்கு எந்தப் பங்கும் இல்லை.
42:20. (தன் செயலின் மூலம்) எவர் மறுமையின் விளைச்சலை (பயனை) நாடுகின்றாரோ, அவருடைய விளைச்சலில் நாம் அவருக்காக அதிகப்படுத்துவோம், இன்னும் எவர் இம்மையின் விளைச்சலை_(பயனை மட்டும்) நாடுகின்றாரோ, நாம் அவருக்கு அதிலிருந்து கொடுக்கின்றோம், அவருக்கு மறுமையில் யாதொரு பாத்தியதையுமில்லை.
42:21 اَمْ لَهُمْ شُرَكٰٓؤُا شَرَعُوْا لَهُمْ مِّنَ الدِّيْنِ مَا لَمْ يَاْذَنْۢ بِهِ اللّٰهُؕ وَلَوْلَا كَلِمَةُ الْفَصْلِ لَقُضِىَ بَيْنَهُمْؕ وَاِنَّ الظّٰلِمِيْنَ لَهُمْ عَذَابٌ اَلِيْمٌ
اَمْ لَهُمْ இவர்களுக்கு உண்டா? شُرَكٰٓؤُا இணைதெய்வங்களும் شَرَعُوْا சட்டமாக்(கு)கி(ன்ற)னர் لَهُمْ இவர்களுக்கு مِّنَ الدِّيْنِ மார்க்கத்தில் مَا لَمْ يَاْذَنْۢ எதை/அனுமதிக்கவில்லையோ بِهِ அதை اللّٰهُؕ அல்லாஹ் وَلَوْلَا كَلِمَةُ الْفَصْلِ தீர்ப்பின் வாக்கு மட்டும்/இல்லை என்றால் لَقُضِىَ தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் بَيْنَهُمْؕ அவர்களுக்கு மத்தியில் وَاِنَّ நிச்சயமாக الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்கள் لَهُمْ அவர்களுக்கு உண்டு عَذَابٌ வேதனை اَلِيْمٌ வலி தரக்கூடியது
42:21. அல்லது: அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணை(த் தெய்வங்)கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? மேலும், (மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்க கூலி கொடுக்கப்படும் என்னும் இறைவனின்) தீர்ப்புப் பற்றிய வாக்கு இல்லாதிருப்பின் (இதுவரை) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் - நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.
42:21. அல்லாஹ் அனுமதிக்காத எதையும் அவர்களுக்கு மார்க்கமாக்கி வைக்கக்கூடிய தெய்வங்களும் அவர்களுக்கு இருக்கின்றனவா? (ஒவ்வொரு செயலுக்கும் தக்க) கூலி கொடுப்பது மறுமையில்தான் என்று இறைவனுடைய தீர்மானம் ஏற்பட்டிருக்காவிடில், (இதுவரை) அவர்களுடைய காரியம் முடிவு பெற்றேயிருக்கும். நிச்சயமாக (இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனை உண்டு.
42:21. அல்லாஹ் அனுமதி அளிக்காத தீனின் தன்மை கொண்ட ஒரு வழிமுறையை வகுத்துக் கொடுக்கின்ற இணைக்கடவுள்கள் இவர்களுக்கு இருக்கின்றனவா! தீர்ப்பு பற்றிய வாக்கு முடிவு செய்யப்படாமல் இருந்திருந்தால் இவர்களின் விவகாரம் எப்போதோ தீர்க்கப்பட்டிருக்கும். திண்ணமாக, இந்தக் கொடுமைக்காரர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கின்றது.
42:21. மார்க்கத்தில் அல்லாஹ் எதற்கு அனுமதியளிக்கவில்லையோ அதை அவர்களுக்கு மார்க்கமாக்கி வைக்ககூடிய இணையாளர்கள் அவர்களுக்கு இருக்கின்றார்களா? (கூலி கொடுப்பது மறுமை நாளில்தான் என்ற) தீர்ப்புப்பற்றிய (அல்லாஹ்வுடைய) வாக்கு இல்லாதிருந்தால், அவர்களுக்கிடையில் (இது வரையில்) தீர்ப்பளிக்கப்பட்டே இருக்கும், நிச்சயமாக (இத்தகைய) அநியாயக்காரர்கள்_அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
42:22 تَرَى الظّٰلِمِيْنَ مُشْفِقِيْنَ مِمَّا كَسَبُوْا وَهُوَ وَاقِعٌۢ بِهِمْؕ وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فِىْ رَوْضَاتِ الْجَـنّٰتِۚ لَهُمْ مَّا يَشَآءُوْنَ عِنْدَ رَبِّهِمْؕ ذٰلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِيْرُ
تَرَى நீர் பார்ப்பீர்! الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்களை مُشْفِقِيْنَ பயந்தவர்களாக مِمَّا كَسَبُوْا அவர்கள் செய்தவற்றின் காரணமாக وَهُوَ وَاقِعٌۢ அது நிகழ்ந்தே தீரும் بِهِمْؕ அவர்களுக்கு وَالَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை فِىْ رَوْضَاتِ சோலைகளில் الْجَـنّٰتِۚ சொர்க்கங்களின் لَهُمْ அவர்களுக்கு உண்டு مَّا يَشَآءُوْنَ அவர்கள் நாடுகின்றவை عِنْدَ رَبِّهِمْؕ அவர்களின் இறைவனிடம் ذٰلِكَ هُوَ இதுதான் الْفَضْلُ சிறப்பாகும் الْكَبِيْرُ மிகப் பெரிய
42:22. (அந்நாளில்) அநியாயக்காரர்கள் தாங்கள் சம்பாதித்த (தீய)தைப் பற்றி பயந்து கொண்டிருப்பதை நீர் பார்ப்பீர்; ஆனால் அது அவர்கள் மீது நிகழவே செய்யும்; ஆனால் எவர் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்கள் சுவர்க்கப் பூங்காவனங்களில் இருப்பார்கள்; அவர்கள் விரும்பியது அவர்களுடைய இறைவனிடம் கிடைக்கும். அதுவே பெரும் பாக்கியமாகும்.
42:22. (நபியே!) வரம்பு மீறிய இவர்கள், தங்கள் செயலின் காரணமாக(த் தங்களுக்கு என்ன தண்டனை கிடைக்குமோ என்று) பயந்து கொண்டிருப்பதை (அந்நாளில்) நீர் காண்பீர். அது அவர்களுக்குக் கிடைத்தே தீரும். எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்கள், சொர்க்கங்களில் உள்ள பூங்காவனங்களில் இருப்பார்கள். அவர்கள் விரும்பியதெல்லாம் அவர்கள் இறைவனிடம் அவர்களுக்குக் கிடைக்கும். இதுதான் மிகப் பெரும் சிறப்பாகும்.
42:22. அந்நேரத்தில் கொடுமைக்காரர்கள் தாங்கள் சம்பாதித்தவற்றின் தீய விளைவு குறித்து அஞ்சிக் கொண்டிருப் பதை நீர் காண்பீர். ஆயினும், அது அவர்கள் மீது வந்தே தீரும். ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்கள் சுவனத்தோட்டங்களில் இருப்பார்கள். அவர்கள் விரும்புகின்றவை அனைத்தையும் தம் இறைவனிடம் பெற்றுக் கொள்வார்கள். இதுவே மிகப்பெரும் அருளாகும்.
42:22. (நபியே!) அநியாயக்காரர்களை_ தங்கள் சம்பாதித்ததிலிருந்து (தங்களுக்கு என்ன ஏற்படுமோ என) பயந்து கொண்டிருப்பவர்களாக (அந்நாளில்) நீர் காண்பீர். அதுவோ அவர்களுக்கு நிகழக்கூடியதாக உள்ளது, இன்னும் விசுவாசங்கொண்டு; நற்கருமங்களும் செய்கின்றார்களே அத்தகையவர்கள், சுவனபதிகளின் பூங்காவனங்களில் இருப்பார்கள், அவர்களுடைய இரட்சகனிடத்தில் அவர்கள் நாடியவை அவர்களுக்குண்டு, அதுவே மிகப்பெரும் பேரருளாகும்.
42:23 ذٰ لِكَ الَّذِىْ يُبَشِّرُ اللّٰهُ عِبَادَهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِؕ قُلْ لَّاۤ اَسْــٴَــــلُـكُمْ عَلَيْهِ اَجْرًا اِلَّا الْمَوَدَّةَ فِى الْقُرْبٰىؕ وَمَنْ يَّقْتَرِفْ حَسَنَةً نَّزِدْ لَهٗ فِيْهَا حُسْنًا ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ شَكُوْرٌ
ذٰ لِكَ இது الَّذِىْ எது يُبَشِّرُ நற்செய்தி கூறுகின்றான் اللّٰهُ அல்லாஹ் عِبَادَهُ தன் அடியார்களுக்கு الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِؕ நன்மைகளை قُلْ கூறுவீராக! لَّاۤ اَسْــٴَــــلُـكُمْ நான் உங்களிடத்தில் கேட்கவில்லை عَلَيْهِ இதற்காக اَجْرًا எந்த கூலியையும் اِلَّا الْمَوَدَّةَ அன்பைத் தவிர فِى الْقُرْبٰىؕ உறவினால் உள்ள وَمَنْ يَّقْتَرِفْ யார் செய்வாரோ حَسَنَةً அழகிய அமலை نَّزِدْ அதிகப்படுத்துவோம் لَهٗ அவருக்கு فِيْهَا அதில் حُسْنًا ؕ அழகை اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் شَكُوْرٌ நன்றியறிபவன்
42:23. ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல அமல்கள் செய்துவரும் தன் அடியார்களுக்கு அல்லாஹ் நன்மாராயங் கூறுவதும் இதுவே: (நபியே!) நீர் கூறும்: “உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத் தவிர, இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை!” அன்றியும், எவர் ஒரு நன்மை செய்கிறாரோ, அவருக்கு நாம் அதில் பின்னும் (பல) நன்மையை அதிகமாக்குவோம்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நன்றியை ஏற்றுக் கொள்பவனாகவும் இருக்கின்றான்.
42:23. நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்த தன் (நல்) அடியார்களுக்கு அல்லாஹ் நற்செய்தி கூறுவதும் இதுவே. (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘இதற்காக நான் ஒரு கூலியும் கேட்கவில்லை, உறவினர்களை நேசிப்பதைத் தவிர, எவர் நற்செயல்களைத் தேடிக் கொள்கிறாரோ, அவருக்கு நாம் அதில் நன்மையை அதிகரிக்கச் செய்கிறோம். ''நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், நன்றியை(யும்) அங்கீகரிப்பவனும் ஆவான்.
42:23. இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்த தன் அடியார்களுக்கு இதைப் பற்றிதான் அல்லாஹ் நற்செய்தி சொல்கிறான். (நபியே! இவர்களிடம்) கூறிவிடும்: ‘நான் இந்தப் பணிக்காக உங்களிடமிருந்து எந்தக் கூலியையும் கேட்கவில்லை. ஆயினும், உறவினர்கள் மீது அன்பு காட்டுவதைக் கண்டிப்பாக நான் விரும்புகின்றேன். ஒருவர் ஏதேனும் நன்மை செய்வாராகில் நாம் அவருக்காக அந்நன்மையுடன் இன்னும் பல நன்மைகளை அதிகமாக்கிக் கொடுப்போம். திண்ணமாக, அல்லாஹ் மிகவும் பிழை பொறுப்பவனாகவும் மதிப்பவனாகவும் இருக்கின்றான்.’
42:23. விசுவாசங்கொண்டு, நற்கருமங்களும் செய்த தன் அடியார்களுக்கு அல்லாஹ் நன்மாராயங் கூறுவதும் அதுவே! (நபியே!) நீர் கூறுவீராக: “பந்துக்களில் நட்பைத் தவிர இதற்காக நான் யாதொரு கூலியையும் கேட்கவில்லை, எவர் ஒரு நன்மை செய்கிறாரோ அவருக்கு நாம் அதில் (மேலும்) நன்மையை அதிகப்படுத்துவோம், நிச்சயமாக அல்லாஹ், மிக்க மன்னிக்கிறவன், நன்றி பாராட்டுகிறவன்.
42:24 اَمْ يَقُوْلُوْنَ افْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا ۚ فَاِنْ يَّشَاِ اللّٰهُ يَخْتِمْ عَلٰى قَلْبِكَ ؕ وَيَمْحُ اللّٰهُ الْبَاطِلَ وَيُحِقُّ الْحَقَّ بِكَلِمٰتِهٖۤ ؕ اِنَّهٗ عَلِيْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ
اَمْ يَقُوْلُوْنَ கூறுகிறார்களா? افْتَـرٰى இட்டுக்கட்டினார் عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது كَذِبًا ۚ பொய்யை فَاِنْ يَّشَاِ நாடினால் اللّٰهُ அல்லாஹ் يَخْتِمْ முத்திரையிட்டு விடுவான் عَلٰى قَلْبِكَ ؕ உமது உள்ளத்தின் மீது وَيَمْحُ இன்னும் அழித்துவிடுவான் اللّٰهُ அல்லாஹ் الْبَاطِلَ பொய்யை وَيُحِقُّ இன்னும் உறுதிப்படுத்துவான் الْحَقَّ சத்தியத்தை بِكَلِمٰتِهٖۤ ؕ தனது கட்டளைகளைக் கொண்டு اِنَّهٗ நிச்சயமாக அவன் عَلِيْمٌۢ நன்கறிந்தவன் بِذَاتِ الصُّدُوْرِ நெஞ்சங்களில் உள்ளதை
42:24. அல்லது (உம்மைப் பற்றி) அவர்கள்: “அவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டிக் கூறுகிறார்” என்று சொல்கிறார்களா? அல்லாஹ் நாடினால் அவன் உம் இருதயத்தின் மீது முத்திரையிட்டிருப்பான்; அன்றியும் அல்லாஹ் பொய்யை அழித்து, தன் வசனங்களைக் கொண்டு உண்மையை உறுதிப்படுத்துகிறான்; நிச்சயமாக நெஞ்சங்களிலிருப்பதை அவன் மிக அறிந்தவன்.
42:24. (நபியே!) அல்லாஹ்வின் மீது நீர் பொய்யைக் கற்பனை செய்து கூறுவதாக அவர்கள் (உம்மைப் பற்றிக்) கூறுகின்றனரா? (அவ்வாறாயின், நம் இவ்வேதத்தை அவர்களுக்கு நீர் ஓதிக்காண்பிக்க முடியாதவாறு) அல்லாஹ் நாடினால், உமது உள்ளத்தின் மீது முத்திரையிட்டு இருப்பான். (ஆகவே, அவர்களுடைய இக்கூற்று முற்றிலும் தவறானதாகும்.) அல்லாஹ்வோ, பொய்யை அழித்துத் தன் வசனங்களைக் கொண்டே உண்மையை உறுதிப்படுத்துவான். நிச்சயமாக அவன், உள்ளங்களில் (ரகசியமாக) உள்ளவற்றையும் நன்கறிந்தவன்.
42:24. அல்லது “இந்த மனிதர் அல்லாஹ்வின் மீது பொய் புனைந்துரைக்கிறார்” என்று இவர்கள் கூறுகின்றார்களா? அல்லாஹ் நாடினால், உம்முடைய இதயத்தின் மீது முத்திரையிட்டிருப்பான். அவன் பொய்மையை அழித்துத் தன் வார்த்தைகளால் மெய்மையை நிலைநாட்டுபவனாயிருக்கிறான். திண்ணமாக, உள்ளங்களில் மறைந்திருக்கும் இரகசியத்தை அவன் நன்கு அறிகின்றான்.
42:24. (நபியே!) அல்லாஹ்வின் மீது அவர் பொய்யைக் கற்பனை செய்(து கூறு)கிறார் என்று அவர்கள் (உம்மைப்பற்றிக்) கூறுகின்றார்களா? அல்லாஹ் நாடினால், உமது இதயத்தில் முத்திரையிட்டுவிடுவான், அல்லாஹ்வோ பொய்யை அழித்துவிடுகிறான், இன்னும், தன் வார்த்தைகளைக்கொண்டு உண்மையை நிலைநிறுத்துவான், நிச்சயமாக அவன், நெஞ்சங்களில் உள்ளவைகளை நன்கறிகிறவன்.
42:25 وَهُوَ الَّذِىْ يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهٖ وَيَعْفُوْا عَنِ السَّيِّاٰتِ وَيَعْلَمُ مَا تَفْعَلُوْنَ ۙ
وَهُوَ அவன் الَّذِىْ எப்படிப்பட்டவன் يَقْبَلُ ஏற்றுக்கொள்கிறான் التَّوْبَةَ திருந்துவதை عَنْ عِبَادِهٖ தனது அடியார்களிடமிருந்து وَيَعْفُوْا இன்னும் மன்னிக்கிறான் عَنِ السَّيِّاٰتِ பாவங்களை وَيَعْلَمُ இன்னும் நன்கறிகின்றான் مَا تَفْعَلُوْنَ ۙ நீங்கள் செய்வதை
42:25. அவன்தான் தன் அடியார்களின் தவ்பாவை - பாவ மன்னிப்புக் கோருதலை - ஏற்றுக் கொள்கிறான்; (அவர்களின்) குற்றங்களை மன்னிக்கிறான். இன்னும், நீங்கள் செய்வதை அவன் நன்கறிகிறான்.
42:25. அவன்தான் தன் அடியார்களின் மன்னிப்புக்கோரலை அங்கீகரித்துக் குற்றங்களையும் மன்னித்து விடுகிறான். நீங்கள் செய்பவற்றையும் அவன் நன்கறிகிறான்.
42:25. மேலும், அவனே தன் அடிமைகளின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொள்கின்றான். மேலும், அவர்களின் குற்றங்களைப் பொறுத்தருளுகின்றான். இன்னும் உங்கள் செயல்கள் அனைத்தையும் அவன் நன்கு அறிகின்றான்.
42:25. மேலும், அவன் எத்தகையவனென்றால், தன் அடியார்களின் தவ்பாவை (_பாவமீட்சியை) அவனே ஏற்றுக்கொள்கிறான், தீயவைகளை மன்னித்தும் விடுகின்றான், நீங்கள் செய்பவகளையும் அவன் நன்கறிகிறான்.
42:26 وَيَسْتَجِيْبُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَيَزِيْدُهُمْ مِّنْ فَضْلِهٖؕ وَالْكٰفِرُوْنَ لَهُمْ عَذَابٌ شَدِيْدٌ
وَيَسْتَجِيْبُ இன்னும் பதில் அளிக்கின்றான் الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை وَيَزِيْدُ இன்னும் அதிகம் கொடுப்பான் هُمْ அவர்களுக்கு مِّنْ فَضْلِهٖؕ தனது அருளால் وَالْكٰفِرُوْنَ நிராகரிப்பாளர்கள் لَهُمْ அவர்களுக்கு உண்டு عَذَابٌ வேதனை شَدِيْدٌ கடுமையான(து)
42:26. அன்றியும் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல் செய்பவர்(களின் பிரார்த்தனை)களையும் ஏற்று அவர்களுக்குத் தன் அருளை அதிகப்படுத்துகிறான்; இன்னும், நிராகரிப்பவர்களுக்கு கடுமையான வேதனையுண்டு.
42:26. நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களின் பிரார்த்தனைகளையும் அங்கீகரித்து, அவர்களுக்குத் தன் அருளை அதிகப்படுத்துகிறான். நிராகரிப்பவர்களுக்குக் கடினமான வேதனைதான் கிடைக்கும்.
42:26. இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிவோரின் இறைஞ்சுதலை அவன் ஏற்றுக் கொள்கின்றான். தனது அருளிலிருந்து அவர்களுக்கு இன்னும் அதிகம் வழங்குகின்றான். நிராகரிப்பவர்களுக்கோ கடும் தண்டனை அவர்களுக்கு இருக்கின்றது.
42:26. அன்றியும் விசுவாசங்கொண்டு, நற்கருமங்களும் செய்தோர் (களின் பிரார்த்தனை)களுக்கும் பதிலளித்து, தன்னுடைய பேரருளிலிருந்து (இன்னும்) அவர்களுக்கு அதிகப்படுத்துகின்றான், இன்னும் நிராகரிப்போர்_அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு.
42:27 وَلَوْ بَسَطَ اللّٰهُ الرِّزْقَ لِعِبَادِهٖ لَبَغَوْا فِى الْاَرْضِ وَلٰكِنْ يُّنَزِّلُ بِقَدَرٍ مَّا يَشَآءُ ؕ اِنَّهٗ بِعِبَادِهٖ خَبِيْرٌۢ بَصِيْرٌ
وَلَوْ بَسَطَ விசாலமாக்கினால் اللّٰهُ அல்லாஹ் الرِّزْقَ வாழ்வாதாரத்தை لِعِبَادِهٖ தனது அடியார்களுக்கு لَبَغَوْا அவர்கள் எல்லை மீறி விடுவார்கள் فِى الْاَرْضِ பூமியில் وَلٰكِنْ என்றாலும் يُّنَزِّلُ இறக்குகின்றான் بِقَدَرٍ அளவுடன் مَّا يَشَآءُ ؕ தான் நாடியதை اِنَّهٗ நிச்சயமாக அவன் بِعِبَادِهٖ தன் அடியார்களை خَبِيْرٌۢ ஆழ்ந்தறிபவன் بَصِيْرٌ உற்று நோக்குபவன்
42:27. அல்லாஹ் தன் அடியார்களுக்கு, உணவு (மற்றும் வசதிகளை) விரிவாக்கி விட்டால், அவர்கள் பூமியில் அட்டூழியம் செய்யத் தலைப்பட்டு விடுவார்கள்; ஆகவே அவன், தான் விரும்பிய அளவு கொடுத்து வருகின்றான்; நிச்சயமாக அவன் தன் அடியார்களை நன்கறிபவன்; (அவர்கள் செயலை) உற்று நோக்குபவன்.
42:27. அல்லாஹ் தனது (எல்லா) அடியார்களுக்கு(ம் கூடுதல் குறைவின்றி) பொருளை விரித்து(க் கொடுத்து) விட்டால், அவர்கள் பூமியில் அநியாயம் செய்யத் தலைப்பட்டு விடுவார்கள். ஆகவே, (அவர்களின் தகுதிக்குத் தக்கவாறு)தான் விரும்பிய அளவே (அவர்களுக்குக்) கொடுத்து வருகிறான். நிச்சயமாக அவன் தன் அடியார்களின் தன்மையை நன்கறிந்தவனும், (அவர்களுடைய செயலை) உற்று நோக்குபவனும் ஆவான்.
42:27. அல்லாஹ் தன் அடிமைகள் அனைவருக்கும் தாராளமாக வாழ்வாதாரத்தை வழங்கியிருந்தால், அவர்கள் பூமியில் அராஜகப் புயலை பரவச் செய்திருப்பார்கள். ஆகவே அவன் ஒரு கணக்குப்படி, தான் விரும்புகிற அளவில் இறக்கி வைக்கின்றான். திண்ணமாக, அவன் தன் அடிமைகள் பற்றி நன்கு புரிந்தவனாகவும், அவர்களைக் கவனிப்பவனாகவும் இருக்கின்றான்.
42:27. அல்லாஹ் தன் அடியார்களுக்கு (அவர்களின் தேவைக்குமேல்) உணவை (சம்பத்தை) விரிவாக்கி(க் கொடுத்து) விட்டால், அவர்கள் பூமியில் அட்டூழியம் செய்துவிடுவார்கள். எனினும், (அவர்களின் தேவைக்குத் தக்கவாறு) தான் நாடிய அளவைக்கொண்டு (வானத்திலிருந்து) இறக்கிவைக்கிறான், நிச்சயமாக அவன், தன் அடியார்களைப்பற்றி நன்கு உணர்பவன், (அவர்களுடைய செயலைப்) பார்க்கிறவன்.
42:28 وَهُوَ الَّذِىْ يُنَزِّلُ الْغَيْثَ مِنْۢ بَعْدِ مَا قَنَطُوْا وَيَنْشُرُ رَحْمَتَهٗ ؕ وَهُوَ الْوَلِىُّ الْحَمِيْدُ
وَهُوَ அவன்தான் الَّذِىْ எப்படிப்பட்டவன் يُنَزِّلُ இறக்குகின்றான் الْغَيْثَ மழையை مِنْۢ بَعْدِ مَا قَنَطُوْا அவர்கள் நிராசை அடைந்த பின்னர் وَيَنْشُرُ இன்னும் பரப்புகின்றான் رَحْمَتَهٗ ؕ தனது அருளை وَهُوَ அவன்தான் الْوَلِىُّ பாதுகாவலன் الْحَمِيْدُ மகா புகழாளன்
42:28. அவர்கள் நிராசையான பின்னர் மழையை இறக்கி வைப்பவன் அவனே; மேலும் அவன் தன் ரஹ்மத்தை (அருளை)ப் பரப்புகிறான்; இன்னும் அவனே புகழுக்குரிய பாதுகாவலன்.
42:28. (மனிதர்கள்) நம்பிக்கையிழந்ததன் பின்னரும், அவன்தான் மழையை இறக்கி வைத்துத் தன் அருளை (பூமியில்) பரப்புகிறான். அவனே பாதுகாவலன்; என்றும் புகழுக்குரியவன்.
42:28. மக்கள் நிராசை அடைந்த பின்னர் மழையைப் பொழிவிப்பவனும் அவனே; மேலும், தன் கருணையைப் பரப்புகின்றான். அவனே மிகப் பெரும் புகழுக்குரிய பாதுகாவலன் ஆவான்.
42:28. இன்னும், அவன் எத்தகையவனென்றால், அவர்கள் நிராசையடைந்து விட்ட பின்னர், மழையை அவன் இறக்கிவைக்கின்றான், மேலும், தன்னுடைய அருளைப் பரப்புகிறான். அவனே புகழுக்குரிய பாதுகாவலன்.
42:29 وَ مِنْ اٰيٰتِهٖ خَلْقُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَثَّ فِيْهِمَا مِنْ دَآبَّةٍ ؕ وَهُوَ عَلٰى جَمْعِهِمْ اِذَا يَشَآءُ قَدِيْرٌ
وَ مِنْ اٰيٰتِهٖ அவனது அத்தாட்சிகளில் خَلْقُ படைத்திருப்பது السَّمٰوٰتِ وَالْاَرْضِ வானங்களையும் பூமியையும் وَمَا இன்னும் எவற்றை بَثَّ பரத்தி இருக்கின்றானோ فِيْهِمَا அவ்விரண்டில் مِنْ دَآبَّةٍ ؕ உயிரினங்களில் இருந்து وَهُوَ عَلٰى جَمْعِهِمْ அவன் அவர்களை ஒன்று சேர்ப்பதற்கு اِذَا يَشَآءُ அவன் நாடுகின்றபோது قَدِيْرٌ பேராற்றலுடையவன்
42:29. வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும், அவையிரண்டிலும் உயிரினங்களை பரப்பி வைத்திருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும் - ஆகவே, அவன் விரும்பியபோது அவற்றை ஒன்று சேர்க்க பேராற்றலுடையவன்.
42:29. வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், அவற்றில் கால்நடை (முதலிய பல உயிரினங்)களை (ஆங்காங்கு) பரப்பி வைத்திருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைகளாகும். ஆகவே, அவன் விரும்பியபோது (மரணித்த பின்னரும்) அவற்றை ஒன்று சேர்க்க ஆற்றுலுடையவன் ஆவான்.
42:29. இந்த வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், இவற்றில் பரந்து காணப்படுகின்ற உயிரினங்களும் அவனுடைய அத்தாட்சிகளுள் உள்ளவையாகும். அவன் விரும்பும்போது அவற்றை ஒன்றுதிரட்டும் பேராற்றல் கொண்டவனாக இருக்கின்றான்.
42:29. வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும், ஊர்வனவற்றிலிருந்து அவை இரண்டிலும் பரவச் செய்திருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும், இன்னும், அவன் நாடியபோது (அவை இறந்தபின்னர்) அவைகளை ஒன்று சேர்ப்பதின் மீது ஆற்றலுடையவன்
42:30 وَمَاۤ اَصَابَكُمْ مِّنْ مُّصِيْبَةٍ فَبِمَا كَسَبَتْ اَيْدِيْكُمْ وَيَعْفُوْا عَنْ كَثِيْرٍؕ
وَمَاۤ எது اَصَابَكُمْ உங்களுக்கு ஏற்பட்டதோ مِّنْ مُّصِيْبَةٍ சோதனைகளில் فَبِمَا كَسَبَتْ செய்தவற்றினால்தான் اَيْدِيْكُمْ உங்கள் கரங்கள் وَيَعْفُوْا இன்னும் மன்னித்துவிடுகிறான் عَنْ كَثِيْرٍؕ அதிகமான தவறுகளை
42:30. அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம், அது உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால் தாம், எனினும், பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான்.
42:30. ஒரு தீங்கு உங்களை வந்தடைவதெல்லாம், உங்கள் கரங்கள் தேடிக் கொண்ட (தீய) செயலின் காரணமாகவேதான். ஆயினும், (அவற்றில்) அனேகமானவற்றை அவன் மன்னித்தும் விடுகிறான்.
42:30. உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் எந்த ஒரு துன்பமானாலும் அது உங்கள் கைகள் சம்பாதித்தவைதான். மேலும், அவன் பெரும்பாலான பிழைகளைப் பொருட்படுத்தாமல் விட்டுவிடுகின்றான்.
42:30. மேலும், துன்பத்தால் எது உங்களை வந்தடைந்தாலும், உங்கள் கரங்கள் சம்பாதித்துக் கொண்ட (காரணத்)தினாலாகும். (உங்களைப் பிடிக்க வேண்டியவற்றிலிருந்து) பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தும் விடுகிறான்.
42:31 وَمَاۤ اَنْـتُمْ بِمُعْجِزِيْنَ فِى الْاَرْضِ ۖۚ وَمَا لَـكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِىٍّ وَّلَا نَصِيْرٍ
وَمَاۤ اَنْـتُمْ بِمُعْجِزِيْنَ நீங்கள் தப்பித்துவிட முடியாது فِى الْاَرْضِ ۖۚ இந்த பூமியில் وَمَا لَـكُمْ இன்னும் உங்களுக்குஇல்லை مِّنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி مِنْ وَّلِىٍّ எந்த பாதுகாவலரும் وَّلَا نَصِيْرٍ எந்த உதவியாளரும் இல்லை
42:31. இன்னும், நீங்கள் பூமியில் (எங்கு தஞ்சம் புகுந்தாலும்) அவனை இயலாமல் ஆக்குபவர்கள் இல்லை; மேலும், உங்களுக்கு அல்லாஹ்வைத் தவிர, பாதுகாவலனோ, உதவிபுரிபவனோ இல்லை.
42:31. நீங்கள் பூமியில் (ஓடி ஒளிந்து) அவனை தோற்கடித்துவிட முடியாது. மேலும், அல்லாஹ்வையன்றி (உங்களை) காப்பாற்றுபவனும் (உங்களுக்கு) இல்லை; உதவி செய்பவனும் (உங்களுக்கு) இல்லை.
42:31. நீங்கள் பூமியில் (உங்கள் இறைவனைத்) தோல்வியுறச் செய்யக்கூடியவர்கள் அல்லர். மேலும், அல்லாஹ்விற்கு எதிரில் எந்த ஆதரவாளனும் உதவியாளனும் உங்களுக்கு இல்லை.
42:31. நீங்களோ பூமியில் (அல்லாஹ்வாகிய அவனை) இயலாமையில் ஆக்கிவிடுபவர்களல்லர், மேலும், அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த பாதுகாவலனும், உதவி புரிபவனும் இல்லை,.
42:32 وَمِنْ اٰيٰتِهِ الْجَوَارِ فِى الْبَحْرِ كَالْاَعْلَامِؕ
وَمِنْ اٰيٰتِهِ அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதான் الْجَوَارِ மிதந்து செல்லக்கூடிய கப்பல்கள் فِى الْبَحْرِ கடலில் كَالْاَعْلَامِؕ மலைகளைப் போன்று
42:32. இன்னும், மலைகளைப் போல் கடலில் செல்பவையும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும்.
42:32. கடலில் செல்லும் மலைகளைப் போன்ற கப்பல்களும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும்.
42:32. கடலில், மலைகளைப் போல் காட்சி தரும் இந்தக் கப்பல்களும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையே!
42:32. இன்னும், மலைகளைப்போன்று கடலில் செல்லும் கப்பல்களும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும்.
42:33 اِنْ يَّشَاْ يُسْكِنِ الرِّيْحَ فَيَظْلَلْنَ رَوَاكِدَ عَلٰى ظَهْرِهٖؕ اِنَّ فِىْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّـكُلِّ صَبَّارٍ شَكُوْرٍۙ
اِنْ يَّشَاْ அவன் நாடினால் يُسْكِنِ அமைதியாக்கி விடுவான் الرِّيْحَ காற்றுகளை فَيَظْلَلْنَ ஆகிவிடும் رَوَاكِدَ அசையாமல் நிற்கக்கூடியதாக عَلٰى ظَهْرِهٖؕ அதன் மீதே اِنَّ நிச்சயமாக فِىْ ذٰلِكَ இதில் இருக்கின்றன لَاٰيٰتٍ பல அத்தாட்சிகள் لِّـكُلِّ எல்லோருக்கும் صَبَّارٍ பெரும் பொறுமையாளர்கள் شَكُوْرٍۙ நன்றி உள்ளவர்கள்
42:33. அவன் விரும்பினால் காற்றை (வீசாமல்) அமர்த்தி விடுகிறான். அதனால் அவை (கடலின்) மேற்பரப்பில் அசைவற்றுக் கிடக்கும், நிச்சயமாக இதில், பொறுமையாளர், நன்றி செலுத்துவோர் யாவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன.
42:33. அவன் விரும்பினால், காற்றை நிறுத்திவிடுவான். கப்பல்கள் கடலில் இருந்தவாறே அசையாது நின்றுவிடும். (அத்தகைய சிரமங்களை அனுபவித்துச்) சகிப்பவர்களும் (கரை சேர்ந்தபின், மகிழ்ச்சியடைந்து இறைவனுக்கு) நன்றி செலுத்துபவர்களும் ஆகிய அனைவருக்கும் நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
42:33. அல்லாஹ் நாடினால் காற்றை அசைவற்றதாக்கி விடுவான்; பிறகு அவை கடலின் மேற்பரப்பில் அப்படியே நின்று போய்விடும். அதிக அளவு பொறுமையைக் கடைப்பிடிக்கக்கூடிய மேலும், நன்றி செலுத்தக் கூடிய ஒவ்வொருவருக்கும் இதில் நிறைய சான்றுகள் இருக்கின்றன.
42:33. அவன் நாடினால் காற்றை நிறுத்திவிடுவான், அப்போது அதன் மேல் பரப்பின் மீது (இருந்தவாறே அசைவற்று) நின்றவையாக அவை ஆகிவிடும், அதிகமாகப் பொறுமை கொள்வோர், நன்றி செலுத்துவோர் ஆகிய ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
42:34 اَوْ يُوْبِقْهُنَّ بِمَا كَسَبُوْا وَيَعْفُ عَنْ كَثِيْرٍ
اَوْ அல்லது يُوْبِقْهُنَّ அவற்றை அவன் அழித்து விடுவான் بِمَا كَسَبُوْا அவர்கள் செய்தவற்றின் காரணமாக وَيَعْفُ இன்னும் மன்னித்து விடுகிறான் عَنْ كَثِيْرٍ அதிகமான தவறுகளை
42:34. அல்லது அவர்கள் சம்பாதித்த (தீ)வினையின் காரணத்தினால் அவற்றை அவன் மூழ்கடிக்கச் செய்து விடுவான்; மேலும் அவன் பெரும்பாலானவற்றை மன்னித்தருளுகிறான்.
42:34. அல்லது அவர்களின் (தீய) செயலின் காரணமாக, அவற்றை (கடலில்) அழித்திருப்பான். ஆயினும், (அவர்களுடைய தவறுகளில்) அதிகமானவற்றை மன்னித்து விடுகிறான்.
42:34. அல்லது (அதில் பயணம் செய்வோரின்) எண்ணற்ற பாவங்களை மன்னித்து விடும் நிலையிலேயே அவர்களின் ஒரு சில தீவினைகள் காரணமாக அவர்களை மூழ்கச் செய்தும் விடுகின்றான்.
42:34. அல்லது அவர்கள் தேடிக் கொண்ட (தீ) வினையின் காரணமாக, அவைகளை(க் கடலில்) அவன் (மூழ்கடிக்கச் செய்து) அழித்துவிடுவான், (அவர்கள் செய்த பாவங்களில்) அனேகவற்றை அவன் மன்னித்தும் விடுகின்றான்.
42:35 وَّيَعْلَمَ الَّذِيْنَ يُجَادِلُوْنَ فِىْۤ اٰيٰتِنَا ؕ مَا لَهُمْ مِّنْ مَّحِيْصٍ
وَّيَعْلَمَ அவன் நன்கறிவான் الَّذِيْنَ يُجَادِلُوْنَ தர்க்கிப்பவர்களை فِىْۤ اٰيٰتِنَا ؕ நமது வசனங்களில் مَا لَهُمْ அவர்களுக்கு இல்லை مِّنْ مَّحِيْصٍ தப்பிக்கும் இடம் ஏதும்
42:35. அன்றியும், நம்முடைய வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்து கொண்டிருப்போர் - அவர்களுக்கு (தப்பித்துக் கொள்ள) புகலிடம் ஏதுமில்லை என்பதை அறிவார்கள்.
42:35. அவனுடைய வசனங்களில் (வீணாகத்) தர்க்கிப்பவர்களையும் அவன் நன்கறிவான்; (அவனுடைய வேதனையிலிருந்து) அவர்களுக்கு தப்ப வழி ஏதும் இல்லை.
42:35. அந்நேரத்தில் நம்முடைய அத்தாட்சிகள் குறித்து தர்க்கம் புரிவோருக்குத் தெரிந்துவிடும், தங்களுக்கு எந்தப் புகலிடமும் இல்லை என்று!
42:35. மேலும், நம்முடைய அத்தாட்சிகளில் தர்க்கம் செய்கின்றார்களே அத்தகையோர் (நம்முடைய பிடியிலிருந்து) தப்ப அவர்களுக்கு எந்த வழியுமில்லை என்பதை அறிந்து கொள்வார்கள்.
42:36 فَمَاۤ اُوْتِيْتُمْ مِّنْ شَىْءٍ فَمَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَاۚ وَمَا عِنْدَ اللّٰهِ خَيْرٌ وَّاَبْقٰى لِلَّذِيْنَ اٰمَنُوْا وَعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَۚ
فَمَاۤ اُوْتِيْتُمْ நீங்கள் கொடுக்கப்பட்டுள்ள எல்லாம் مِّنْ شَىْءٍ பொருள்கள் فَمَتَاعُ இன்பமாகும் الْحَيٰوةِ வாழ்க்கையின் الدُّنْيَاۚ இவ்வுலக وَمَا எது உள்ளதோ عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் خَيْرٌ மிகச் சிறந்தது(ம்) وَّاَبْقٰى மிக நிரந்தரமானது(ம்) لِلَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்களுக்கு وَعَلٰى رَبِّهِمْ இன்னும் தங்கள் இறைவனையே يَتَوَكَّلُوْنَۚ சார்ந்திருப்பார்கள்
42:36. ஆகவே, உங்களுக்குக் கொடுக்கப் பட்டிருப்பதெல்லாம், இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) சுகங்களேயாகும்; ஈமான் கொண்டு, தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பவர்களுக்கு, அல்லாஹ்விடம் இருப்பது மிகவும் மேலானதும் நிலையானதுமாகும்.
42:36. (இங்கு) உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதெல்லாம் (நிலையற்ற) இவ்வுலக வாழ்க்கைக்குரிய அற்ப இன்பங்களே! நம்பிக்கை கொண்டு, தங்கள் இறைவனையே நம்பியிருப்பவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் உள்ளவையோ மிக்க மேலானவையும் நிலையானவையும் ஆகும்.
42:36. உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதெல்லாம் இந்த உலகின் சிலநாள் வாழ்க்கைக்குரிய சாதனங்கள்தாம். ஆனால், அல்லாஹ்விடம் இருப்பதோ சிறந்ததும் நிலையானதுமாகும். அது, நம்பிக்கை கொண்டவர்களாயும் தங்கள் இறைவனை முழுவதுஞ் சார்ந்தவர்களாயும் யார் இருக்கின்றார்களோ அவர்களுக்குரியதாகும்.
42:36. ஆகவே, எப்பொருளிலிருந்தும் நீங்கள் கொடுக்கப்பட்டிருப்பது (நிலையற்ற) இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) சுகங்களே! விசுவாசங்கொண்டு, தங்கள் இரட்சகனின் மீது (தங்கள் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைப்போருக்கு அல்லாஹ்விடத்தில் உள்ளது மிக்க மேலானதும், மிக நிலையானதுமாகும்.
42:37 وَالَّذِيْنَ يَجْتَنِبُوْنَ كَبٰٓٮِٕرَ الْاِثْمِ وَالْفَوَاحِشَ وَاِذَا مَا غَضِبُوْا هُمْ يَغْفِرُوْنَۚ
وَالَّذِيْنَ يَجْتَنِبُوْنَ இன்னும் /எவர்கள்/விலகிவிடுவார்கள் كَبٰٓٮِٕرَ الْاِثْمِ பெரும் பாவங்களை விட்டும் وَالْفَوَاحِشَ மானக்கேடான விஷயங்களை விட்டும் وَاِذَا مَا غَضِبُوْا هُمْ அவர்கள் கோபப்படும்போது يَغْفِرُوْنَۚ மன்னித்து விடுவார்கள்
42:37. அவர்கள் (எத்தகையோரென்றால்) பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள்.
42:37. (அல்லாஹ்வை நம்பிய) அவர்கள் பெரும்பாவமான காரியங்களையும், மானக்கேடான விஷயங்களையும் விட்டு விலகி (இருப்பதுடன், பிறரின் தகாத செயல்களால்) கோபமடையும் சமயத்தில் (கோபமூட்டியவர்களை) மன்னித்து விடுவார்கள்.
42:37. மேலும், அவர்கள் பெரும் பாவங்களையும் மானக்கேடான செயல்களையும் தவிர்த்துக் கொள்கின்றார்கள். கோபம் வந்துவிட்டால் பொறுத்துக் கொள்கிறார்கள்.
42:37. மேலும், அவர்கள் எத்தகையோரென்றால் பெரும் பாவங்களையும், மானக்கேடான விஷயங்களையும் தவிர்த்துக்கொள்வர், இன்னும் அவர்களுக்குக் கோபம் ஏற்பட்டால் (பழி தீர்க்காது) மன்னித்து விடுவார்கள்.
42:38 وَالَّذِيْنَ اسْتَجَابُوا لِرَبِّهِمْ وَاَقَامُوْا الصَّلٰوةَ وَاَمْرُهُمْ شُوْرٰى بَيْنَهُمْ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَۚ
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் اسْتَجَابُوا பதில் அளிப்பார்கள் لِرَبِّهِمْ தங்கள் இறைவனுக்கு وَاَقَامُوْا இன்னும் நிலைநிறுத்துவார்கள் الصَّلٰوةَ தொழுகையை وَاَمْرُهُمْ இன்னும் அவர்களது காரியம் شُوْرٰى ஆலோசிக்கப்படும் بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் وَمِمَّا رَزَقْنٰهُمْ இன்னும் அவர்களுக்கு நாம் கொடுத்தவற்றில் இருந்து يُنْفِقُوْنَۚ தர்மம் கொடுப்பார்கள்
42:38. இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் - அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள்.
42:38. மேலும், அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளைகளை அங்கீகரித்துத் தொழுகையையும் நிலை நிறுத்துவார்கள். அவர்களுடைய ஒவ்வொரு காரியத்தையும் தங்களுக்குள் ஆலோசனைக்குக் கொண்டு வருவார்கள். நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து தானமும் செய்வார்கள்.
42:38. மேலும், அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளையை ஏற்றுக் கொள்கின்றார்கள். தொழுகையை நிலைநாட்டுகின்றார்கள். மேலும், அவர்கள் தங்களின் செயல்களை ஒருவருக்கொருவர் ஆலோசனை செய்து நடத்துகின்றார்கள். மேலும், நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவு செய்கிறார்கள்.
42:38. இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் இரட்சகனின் கட்டளைகளை ஏற்று தொழுகையையும் நிறைவேற்றுவார்கள், (இத்தகையோர்) இவர்களின் காரியமோ தங்களுக்குள் கலந்தாலோசித்தலாக இருக்கும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தர்மமாகச்) செலவும் செய்வார்கள்.
42:39 وَالَّذِيْنَ اِذَاۤ اَصَابَهُمُ الْبَغْىُ هُمْ يَنْتَصِرُوْنَ
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் اِذَاۤ اَصَابَهُمُ அவர்களுக்கு நிகழ்ந்தால் الْبَغْىُ அநியாயம் هُمْ يَنْتَصِرُوْنَ அவர்கள் பழிவாங்குவார்கள்
42:39. அன்றியும். அவர்களுக்கு அக்கிரமம் செய்யப்பட்டால் (அதற்கு எதிராக நீதியாகத் தக்க முறையில்) பழி தீர்ப்பார்கள்.
42:39. அவர்களுக்கும் கொடுமை நிகழ்ந்தால், அதற்கு அவர்கள் (சரியான) பழிவாங்கியும் விடுவார்கள்.
42:39. மேலும், அவர்கள் தங்கள் மீது அநீதி இழைக்கப்படும்போது அதை எதிர்த்துப் போராடுகின்றார்கள்
42:39. இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், அவர்களுக்கு (மற்றவர்களால்) அக்கிரமம் ஏற்பட்டால், அதற்கு அவர்கள் (வரம்பு மீறாமல் தனக்கு அக்கிரமம் செய்தவர்களைத் தண்டிப்பதில்) உதவி பெறுவர்.
42:40 وَجَزٰٓؤُا سَيِّئَةٍ سَيِّئَةٌ مِّثْلُهَاۚ فَمَنْ عَفَا وَاَصْلَحَ فَاَجْرُهٗ عَلَى اللّٰهِؕ اِنَّهٗ لَا يُحِبُّ الظّٰلِمِيْنَ
وَجَزٰٓؤُا தண்டனை سَيِّئَةٍ தீமையின் سَيِّئَةٌ தீமைதான் مِّثْلُهَاۚ அது போன்ற فَمَنْ யார் عَفَا மன்னிப்பாரோ وَاَصْلَحَ இன்னும் சமாதானம் செய்வாரோ فَاَجْرُهٗ அவரது கூலி عَلَى اللّٰهِؕ அல்லாஹ்வின் மீது اِنَّهٗ நிச்சயமாக அவன் لَا يُحِبُّ நேசிக்க மாட்டான் الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்களை
42:40. இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.
42:40. தீமைக்குக் கூலியாக அதைப்போன்ற தீமையையே செய்வார்கள். (அதற்கு அதிகமாக அல்ல.) எவரேனும் (பிறரின் அநியாயத்தை) மன்னித்து, அவருடன் சமாதானம் செய்து கொண்டால், அவருடைய கூலி அல்லாஹ்வின் மீது (கடமையாக) இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் (இதற்கு மாறாக) அநியாயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
42:40. தீமையின் கூலி அதே போன்ற ஒரு தீமையே ஆகும். இனி எவர் மன்னித்துவிடுகின்றாரோ மேலும், சீர்திருத்தம் செய்கின்றாரோ அவருடைய கூலி அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது. திண்ணமாக, அல்லாஹ் கொடுமைக்காரர்களை நேசிப்பதில்லை.
42:40. தீமைக்குக் கூலி (யாக) அதைப் போன்ற தீமையேயாகும், ஆனால் எவரேனும் (பிறரின் அக்கிரமத்தை) மன்னித்து (அவருடன்) சமாதானம் செய்து கொண்டால், அவருடைய கூலி அல்லாஹ்வின் மீது (கடமையாக) இருக்கின்றது, நிச்சயமாக, அவன் (இதற்கு மாறாக) அநியாயம் செய்வோர்களை நேசிக்கமாட்டான்.
42:41 وَلَمَنِ انْتَصَرَ بَعْدَ ظُلْمِهٖ فَاُولٰٓٮِٕكَ مَا عَلَيْهِمْ مِّنْ سَبِيْلٍؕ
وَلَمَنِ யார் انْتَصَرَ பழிவாங்குவாரோ بَعْدَ ظُلْمِهٖ தனக்கு அநீதி இழைக்கப்பட்ட பின்னர் فَاُولٰٓٮِٕكَ مَا عَلَيْهِمْ அவர்கள் மீது இல்லை مِّنْ سَبِيْلٍؕ எவ்வித குற்றமும்
42:41. எனவே, எவரொருவர் அநியாயம் செய்யப்பட்டபின், (அதற்கு எதிராக நீதியாக) பழி தீர்த்துக் கொள்கிறாரோ, அ(த்தகைய)வர் மீது (குற்றம் சுமத்த) யாதொரு வழியுமில்லை.
42:41. எவரேனும் (தனக்கிழைக்கப்பட்ட) அநியாயத்திற்கு (அதே அளவு) பழிவாங்கினால், அதனால் அவர் மீது ஒரு குற்றமுமில்லை.
42:41. எவர்கள் தம் மீது கொடுமை இழைக்கப்பட்ட பின் பழி வாங்குகின்றார்களோ அவர்கள் மீது ஆட்சேபணை கூற முடியாது.
42:41. இன்னும், எவர், தமக்கு அக்கிரமம் இழைக்கப்பட்ட பின் (அதே அளவு பழி தீர்த்துக் கொள்வதற்கு) உதவி பெற்றுகொண்டோரோ_ அத்தகையோர் அவர்களின் மீது (குற்றம் சுமத்த) யாதொரு வழியும் இல்லை.
42:42 اِنَّمَا السَّبِيْلُ عَلَى الَّذِيْنَ يَظْلِمُوْنَ النَّاسَ وَ يَبْغُوْنَ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَقِّؕ اُولٰٓٮِٕكَ لَهُمْ عَذَابٌ اَلِيْمٌ
اِنَّمَا السَّبِيْلُ குற்றமெல்லாம் عَلَى الَّذِيْنَ يَظْلِمُوْنَ அநியாயம் செய்பவர்கள் மீதும் النَّاسَ மக்களுக்கு وَ يَبْغُوْنَ இன்னும் வரம்பு மீறுகிறார்கள் فِى الْاَرْضِ பூமியில் بِغَيْرِ الْحَقِّؕ அநியாயமாக اُولٰٓٮِٕكَ لَهُمْ அவர்களுக்கு உண்டு عَذَابٌ வேதனை اَلِيْمٌ வலிதரக்கூடியது
42:42. ஆனால் எவர்கள் மக்களுக்கு அநியாயம் செய்து நீதமின்றி பூமியில் அட்டூழியம் செய்கிறார்களோ, அவர்கள் மீது தான் (குற்றம் சுமத்த) வழியிருக்கிறது - இத்தகையோருக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு.
42:42. குற்றமெல்லாம் அளவு மீறி மனிதர்கள் மீது அநியாயம் செய்து, நியாயமின்றிப் பூமியில் கொடுமை செய்பவர்கள் மீதுதான். இத்தகையவர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு.
42:42. ஆட்சேபணைக்குரியவர்கள் யாரெனில், இதர மக்கள் மீது கொடுமை இழைப்பவர்களும் இன்னும் நியாயமின்றி பூமியில் அதீத செயல்கள் புரிபவர்களும்தாம். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது.
42:42. (குற்றம் சுமத்த) வழி ஏற்படுவதெல்லாம் மனிதர்களுக்கு அநியாயம் செய்து நியாயமின்றி பூமியில் கொடுமை செய்கிறார்களே, அவர்கள் மீது தான், அத்தகையோர்_ அவர்களுக்கு மிகத்துன்புறுத்தும் வேதனையுண்டு.
42:43 وَلَمَنْ صَبَرَ وَغَفَرَ اِنَّ ذٰلِكَ لَمِنْ عَزْمِ الْاُمُوْرِ
وَلَمَنْ صَبَرَ யார் பொறுமையாக இருப்பாரோ وَغَفَرَ இன்னும் மன்னிப்பாரோ اِنَّ ذٰلِكَ நிச்சயமாக அது لَمِنْ عَزْمِ الْاُمُوْرِ மிக வீரமான காரியங்களில் உள்ளதாகும்
42:43. ஆனால், எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும்.
42:43. எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக்கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக இது வீரமிக்க செயலாகும்.
42:43. ஆயினும், யார் பொறுமையை மேற்கொள்ளவும் மன்னித்துவிடவும் செய்கின்றார்களோ அவர்களின் இந்தச் செயல் திண்ணமாக உறுதி மிக்க (வீரச்) செயலைச் சேர்ந்ததாகும்.
42:43. மேலும், எவரொருவர் (பிறரால் பாதிக்கப்பட்ட பின்) பொறுத்துக் கொண்டு, மன்னித்தும்விட்டால், நிச்சயமாக காரியங்களில் மிக்க உறுதியானதாகும்.
42:44 وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ وَّلِىٍّ مِّنْۢ بَعْدِهٖ ؕ وَتَرَى الظّٰلِمِيْنَ لَمَّا رَاَوُا الْعَذَابَ يَقُوْلُوْنَ هَلْ اِلٰى مَرَدٍّ مِّنْ سَبِيْلٍۚ
وَمَنْ யாரை يُّضْلِلِ வழிகெடுத்தானோ اللّٰهُ அல்லாஹ் فَمَا இல்லை لَهٗ அவனுக்கு مِنْ وَّلِىٍّ எந்தப் பாதுகாவலரும் مِّنْۢ بَعْدِهٖ ؕ அவனுக்குப் பிறகு وَتَرَى நீர் காண்பீர்! الظّٰلِمِيْنَ பாவிகளை لَمَّا رَاَوُا அவர்கள் பார்க்கும் போது الْعَذَابَ வேதனையை يَقُوْلُوْنَ அவர்கள் கூறுவார்கள் هَلْ اِلٰى مَرَدٍّ திரும்புவதற்கு உண்டா? مِّنْ سَبِيْلٍۚ ஏதேனும் வழி
42:44. “இன்னும் எவரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அதற்குப்பின் அவனுக்குப் பாதுகாவலர் எவருமில்லை, அநியாயம் செய்தவர்கள் வேதனையைக் காணும் போது; (இதிலிருந்து) தப்பித்து மீள்வதற்கு ஏதாகிலும் வழியுண்டா?” என்று கூறும் நிலையை நீர் காண்பீர்.
42:44. எவர்களையேனும் (அவர்களின் பாவத்தின் காரணமாக) அல்லாஹ் அவர்களைத் தவறான வழியில் விட்டுவிட்டால், அதற்குப் பின்னர் அவர்களை பாதுகாப்பவர் ஒருவரும் இருக்கமாட்டார். (நபியே!) வரம்பு மீறி அநியாயம் செய்தவர்கள் வேதனையைக் கண்ணால் கண்ட சமயத்தில் ‘‘இதிலிருந்து தப்ப ஏதேனும் வழி உண்டா?'' என்று அவர்கள் கூறுவதை நீர் காண்பீர்.
42:44. எவரையாவது அல்லாஹ்வே வழிகேட்டில் ஆழ்த்திவிட்டால் அவரைப் பாதுகாப்பவன் அல்லாஹ்வுக்குப் பிறகு வேறுயாரும் இல்லை. நீர் காண்பீர்: இந்தக் கொடுமைக்காரர்கள் வேதனையைப் பார்க்கும் போது, “இனி திரும்பிச் செல்வதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா?” என்று கேட்பார்கள்.
42:44. இன்னும் எவரை அல்லாஹ் தவறான வழியில் விட்டுவிடுகிறானோ அதற்குப் பின்னர், அவருக்குப் பாதுகாவலர் எவருமில்லை, மேலும், (நபியே! வரம்பு மீறி) அநியாயம் செய்தவர்கள், வேதனையைக் கண்டுவிட்ட சமயத்தில், “(அங்கிருந்து) திரும்பிச் செல்ல ஏதாகிலும் வழியுண்டா?” என்று அவர்கள் கூறுவதை நீர் காண்பீர்.
42:45 وَتَرٰٮهُمْ يُعْرَضُوْنَ عَلَيْهَا خٰشِعِيْنَ مِنَ الذُّلِّ يَنْظُرُوْنَ مِنْ طَرْفٍ خَفِىٍّ ؕ وَقَالَ الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّ الْخٰسِرِيْنَ الَّذِيْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ وَاَهْلِيْهِمْ يَوْمَ الْقِيٰمَةِ ؕ اَلَاۤ اِنَّ الظّٰلِمِيْنَ فِىْ عَذَابٍ مُّقِيْمٍ
وَتَرٰٮهُمْ நீர் காண்பீர்/அவர்களை يُعْرَضُوْنَ சமர்ப்பிக்கப்படுவர்களாக عَلَيْهَا அதன் முன் خٰشِعِيْنَ தலைகுனிந்தவர்களாக مِنَ الذُّلِّ இழிவினால் يَنْظُرُوْنَ அவர்கள் பார்ப்பார்கள் مِنْ طَرْفٍ பார்வையால் خَفِىٍّ ؕ திருட்டு وَقَالَ இன்னும் கூறுவார்கள் الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்கள் اِنَّ நிச்சயமாக الْخٰسِرِيْنَ நஷ்டவாளிகள் الَّذِيْنَ خَسِرُوْۤا நஷ்டமிழைத்தவர்கள்தான் اَنْفُسَهُمْ தங்களுக்கு(ம்) وَاَهْلِيْهِمْ தங்கள்குடும்பத்திற்கும் يَوْمَ الْقِيٰمَةِ ؕ மறுமை நாளில் اَلَاۤ அறிந்துகொள்ளுங்கள்! اِنَّ நிச்சயமாக الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்கள் فِىْ عَذَابٍ வேதனையில் مُّقِيْمٍ நிலையான
42:45. மேலும், சிறுமைப்பட்டுத் தலை கவிழ்ந்தவர்களாகவும், (மறைவாகக்) கடைக்கண்ணால் பார்த்த வண்ணமாகவும் அவர்கள் (நரகத்தின் முன்) கொண்டுவரப் படுவதை நீர் காண்பீர்; (அவ்வேளை) ஈமான் கொண்டவர்கள் கூறுவார்கள்: “எவர் தங்களுக்கும், தம் குடும்பத்தாருக்கும் நஷ்டத்தை தேடிக் கொண்டார்களோ, கியாம நாளில் நிச்சயமாக அவர்கள் முற்றிலும் நஷ்டவாளர்தாம்.” அறிந்து கொள்க! நிச்சயமாக அநியாயக்காரர்கள் நிலையான வேதனையில் இருப்பார்கள்.
42:45. மேலும், சிறுமைப்பட்டுத் தலை கவிழ்ந்தவர்களாகவும், (வேதனையைக்) கடைக் கண்ணால் பார்த்தவண்ணம் அவர்களை நரகத்தின் முன் கொண்டு வரப்படுவதையும் நீர் காண்பீர். மேலும், நம்பிக்கை கொண்டவர்கள் (அவர்களை நோக்கி) ‘‘எவர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் (இம்மையில்) நஷ்டத்தைத் தேடிக் கொண்டார்களோ அவர்கள் மறுமையில் நிச்சயமாக முற்றிலும் நஷ்டத்தை அடைந்தவர்கள்தான்'' என்று கூறுவார்கள். நிச்சயமாக (இத்தகைய) அநியாயக்காரர்கள் நிலையான வேதனையில் தங்கிவிடுவார்கள் என்பதை நீர் அறிந்துகொள்வீராக.
42:45. மேலும் நீர் காண்பீர்: நரகத்தின் முன் இவர்கள் கொண்டு வரப்படும்போது, அவமானத்தால் தலைகுனிந்து விடுவார்கள். (மேலும் அந்நரகத்தை) கடைக்கண்ணால் பார்ப்பார்கள். (அந்நேரத்தில்) எவர்கள் இறைநம்பிக்கை கொண்டிருந்தார்களோ அவர்கள் கூறுவார்கள்: “மறுமைநாளாகிய இன்று தம்மையும் தம்மைச் சார்ந்தவர்களையும் நஷ்டத்தில் ஆழ்த்திக் கொண்டவர்கள் யாரோ, அவர்கள்தாம் உண்மையில் இழப்புக்குரியவர்கள்!” எச்சரிக்கையாயிருங்கள்! கொடுமைக்காரர்கள் நிரந்தரமான தண்டனையில் வீழ்வார்கள்.
42:45. இன்னும், சிறுமையினால் (தலை தாழ்த்திப்) பணிந்தவர்களாக மறைவாகக் கடைக் கண்ணால் நோட்டமிட்டவர்களாக (நரகமாகிய) அதன் மீது அவர்கள் எடுத்துக்காட்டப்படுபவர்களாக அவர்களை (நபியே! நீர்) காண்பீர்; இன்னும், விசுவாசங்கொண்டோர், “நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள், மறுமை நாளில் தங்களுக்கும், தம் குடும்பத்தினருக்கும் நஷ்டத்தை தேடிக் கொண்டவர்கள்தான்” என்று (அப்போது) கூறுவார்கள், நிச்சயமாக (இத்தகைய) அநியாயக்காரர்கள் நிலையான வேதனையில் இருப்பார்கள் என்பதை அறிந்து கொள்வீராக!
42:46 وَمَا كَانَ لَهُمْ مِّنْ اَوْلِيَآءَ يَنْصُرُوْنَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِؕ وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ سَبِيْلٍؕ
وَمَا كَانَ இருக்க மாட்டார்கள் لَهُمْ அவர்களுக்கு مِّنْ اَوْلِيَآءَ பாதுகாவலர்கள் யாரும் يَنْصُرُوْنَهُمْ அவர்களுக்கு உதவுகின்ற(னர்) مِّنْ دُوْنِ اللّٰهِؕ அல்லாஹ்வையன்றி وَمَنْ யாரை يُّضْلِلِ வழிகெடுப்பானோ اللّٰهُ அல்லாஹ் فَمَا لَهٗ அவருக்கு இல்லை مِنْ سَبِيْلٍؕ எந்த வழியும்
42:46. (அந்நாளில்) அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு உதவிபுரியும் உபகாரிகளில் எவரும் இருக்கமாட்டார்கள்; அன்றியும், அல்லாஹ் எவரை வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அவருக்கு வேறு வழியொன்றுமில்லை.
42:46. அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய நண்பர்கள் (அந்நாளில்) அவர்களுக்கு இருக்கமாட்டார்கள். எவர்களை அல்லாஹ் தவறான வழியில் விட்டுவிடுகிறானோ, அவர்களுக்கு(த் தப்ப) ஒரு வழியுமில்லை.
42:46. மேலும், அல்லாஹ்விற்கு எதிராக அவர்களுக்கு உதவுகிற எந்த ஓர் ஆதரவாளரும் அவர்களுக்கு இருக்கமாட்டார்கள். எவரையாவது அல்லாஹ் வழிகேட்டில் ஆழ்த்திவிட்டால் பிறகு அவனைக் காப்பாற்றுவதற்கு எந்த வழியும் இல்லை.
42:46. (அந்நாளில்) அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு உதவிசெய்கின்ற பாதுகாவலர்கள் அவர்களுக்கு இருக்கவுமாட்டர்கள், இன்னும், எவரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விட்டானோ, அவருக்கு (அதிலிருந்து விடுபட) யாதொரு வழியுமில்லை.
42:47 اِسْتَجِيْبُوْا لِرَبِّكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ يَوْمٌ لَّا مَرَدَّ لَهٗ مِنَ اللّٰهِؕ مَا لَكُمْ مِّنْ مَّلْجَاٍ يَّوْمَٮِٕذٍ وَّمَا لَكُمْ مِّنْ نَّكِيْرٍ
اِسْتَجِيْبُوْا நீங்கள்பதில் அளியுங்கள்! لِرَبِّكُمْ உங்கள் இறைவனுக்கு مِّنْ قَبْلِ முன் اَنْ يَّاْتِىَ வருவதற்கு يَوْمٌ ஒரு நாள் لَّا مَرَدَّ அறவே தடுத்துவிட முடியாது لَهٗ அதை مِنَ اللّٰهِؕ அல்லாஹ்விடமிருந்து مَا لَكُمْ உங்களுக்கு இருக்காது مِّنْ مَّلْجَاٍ ஒதுங்குமிடம் எதுவும் يَّوْمَٮِٕذٍ அந்நாளில் وَّمَا لَكُمْ இன்னும் உங்களுக்கு இருக்க மாட்டார் مِّنْ نَّكِيْرٍ தடுப்பவர் யாரும்
42:47. அல்லாஹ்வை விட்டும் தப்பித்துச் செல்ல போக்கில்லாத (கியாம) நாள் வருவதற்கு முன், உங்கள் இறைவனுடைய (ஏவலுக்கு) பதிலளியுங்கள் - அந்நாளில் உங்களுக்கு ஒதுங்குமிடம் எதுவும் இராது; (உங்கள் பாவங்களை) நீங்கள் மறுக்கவும் முடியாது.
42:47. அல்லாஹ்விடமிருந்து தட்டிக்கழிக்க முடியாத ஒரு நாள் வருவதற்கு முன்னதாகவே, உங்கள் இறைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள். அந்நாளில் உங்களுக்குத் தப்புமிடம் கிடைக்காது. (உங்கள் குற்றத்தை) நீங்கள் மறுக்கவும் முடியாது.
42:47. அந்த ஒருநாள் வருவதற்கு முன்பு உங்கள் இறைவனின் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளுங்கள். அந்நாளைத் தடுத்து நிறுத்துவதற்கான எந்த முகாந்திரமும் அல்லாஹ்வின் சார்பிலிருந்து இல்லை. அந்நாளில் உங்களுக்கு எந்தப் புகலிடமும் இருக்காது; உங்கள் நிலைமையை மாற்ற முயல்வோர் எவரும் உங்களுக்கு இருக்கமாட்டார்.
42:47. அல்லாஹ்விடமிருந்து மற்றெவராலும் தடுக்கமுடியாத (கியாம) நாள் வருவதற்கு முன்னதாகவே உங்கள் இரட்சகனுக்குப் பதிலளியுங்கள், அந்நாளில் உங்களுக்கு யாதொரு ஒதுங்குமிடமும் இராது, (உங்கள் பாவங்களை) நீங்கள் மறுப்பதும் உங்களுக்கில்லை.
42:48 فَاِنْ اَعْرَضُوْا فَمَاۤ اَرْسَلْنٰكَ عَلَيْهِمْ حَفِيْظًاؕ اِنْ عَلَيْكَ اِلَّا الْبَلٰغُ ؕ وَاِنَّاۤ اِذَاۤ اَذَقْنَا الْاِنْسَانَ مِنَّا رَحْمَةً فَرِحَ بِهَاۚ وَاِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌۢ بِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ فَاِنَّ الْاِنْسَانَ كَفُوْرٌ
فَاِنْ اَعْرَضُوْا அவர்கள் புறக்கணித்தால் فَمَاۤ اَرْسَلْنٰكَ நாம் உம்மை அனுப்பவில்லை عَلَيْهِمْ அவர்கள் மீது حَفِيْظًاؕ கண்காணிப்பவராக اِنْ عَلَيْكَ உம்மீது கடமை இல்லை اِلَّا தவிர الْبَلٰغُ ؕ எடுத்துரைப்பதை وَاِنَّاۤ நிச்சயமாக நாம் اِذَاۤ اَذَقْنَا சுவைக்க வைத்தால் الْاِنْسَانَ மனிதர்களுக்கு مِنَّا நம்மிடமிருந்து رَحْمَةً ஓர் அருளை فَرِحَ அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்(கள்) بِهَاۚ அதனால் وَاِنْ تُصِبْهُمْ அவர்களுக்கு ஏற்பட்டால் سَيِّئَةٌۢ ஒரு தீங்கு بِمَا قَدَّمَتْ முற்படுத்தியதால் اَيْدِيْهِمْ அவர்களின் கரங்கள் فَاِنَّ الْاِنْسَانَ நிச்சயமாக மனிதன் كَفُوْرٌ மிகப்பெரிய நிராகரிப்பாளன்
42:48. எனினும் (நபியே!) அவர்கள் புறக்கணித்து விட்டால் (நீர் கவலையுறாதீர்); நாம் உம்மை அவர்கள் மீது பாதுகாவலராக அனுப்பவில்லை; (தூதுச் செய்தியை எடுத்துக் கூறி) எத்திவைப்பது தான் உம்மீது கடமையாகும்; இன்னும், நிச்சயமாக நம்முடைய ரஹ்மத்தை - நல்லருளை மனிதர்கள் சுவைக்கும்படிச் செய்தால், அது கண்டு அவர்கள் மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய கைகள் முற்படுத்தியுள்ள (பாவத்தின் காரணத்)தால் அவர்களுக்குத் தீங்கு நேரிட்டால் - நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டு மாறு செய்பவனாக இருக்கின்றான்.
42:48. (நபியே! இவ்வளவு விவரித்துக் கூறிய பின்னரும்) அவர்கள் (உம்மைப்) புறக்கணித்து விட்டால், (அதைப்பற்றி நீர் கவலைப்படாதீர். ஏனென்றால்,) அவர்களைப் பாதுகாப்பவராக நாம் உம்மை அனுப்பவில்லை. (அவர்களுக்கு நம் தூதை) எடுத்துரைப்பதைத் தவிர (வேறொன்றும்) உம் மீது கடமை அல்ல. நம் அருளை மனிதன் சுவைக்கும்படி செய்தால், அதைப் பற்றி அவன் சந்தோஷப்படுகிறான். அவனுடைய கரங்கள் தேடிக் கொண்ட (தீய) செயலின் காரணமாக அவனுக்கொரு தீங்கு ஏற்பட்டால் நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டவனாகி (இறைவனையே எதிர்க்க ஆயத்தமாகி) விடுகிறான்.
42:48. இனியும் இந்த மக்கள் புறக்கணிக்கின்றார்களெனில், (நபியே!) இவர்களைப் பாதுகாப்பவராய் உம்மை நாம் அனுப்பி வைக்கவில்லை. தூதுச் செய்தியைச் சேர்ப்பிப்பது மட்டுமே உமது பொறுப்பு. மனிதனின் நிலை எவ்வாறு உள்ளதெனில் அவனுக்கு நாம் நம்முடைய அருட்பேற்றைச் சுவைக்கச் செய்தால் அதன் பேரில் அவன் பூரிப்படைகின்றான். மேலும், அவனுடைய கைகள் செய்த தீவினையின் காரணத்தினால், ஏதேனும் துன்பம் அவனைத் தொட்டுவிட்டால், அவன் மிகவும் நன்றி கெட்டவனாகி விடுகின்றான்.
42:48. ஆகவே, (நபியே!) அவர்கள் புறக்கணித்துவிட்டால் (நீர் கவலையுறாதீர், ஏனென்றால்,) அவர்களைப் பாதுகப்போராக நாம் உம்மை அனுப்பவில்லை, (நம் தூதை) எத்தி வைப்பதைத் தவிர (வேறெதுவும்) உம்மீதில்லை, இன்னும், நிச்சயமாக நாம் நம்மிடமிருந்து அருளை மனிதனுக்கு நாம் சுவைக்கச் செய்தால், அதனைக்கொண்டு அவன் மகிழ்ச்சி அடைகிறான், அவர்களுடைய கரங்கள் முற்படுத்திய (பாவத்தின் காரணத்)தால், அவர்களைத் தீங்கு பிடித்தால், நிச்சயமாக மனிதன் (நன்றி கெட்டவனாகி அல்லாஹ்வையே) நிராகரிப்பவனாக இருக்கிறான்.
42:49 لِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ يَخْلُقُ مَا يَشَآءُ ؕ يَهَبُ لِمَنْ يَّشَآءُ اِنَاثًا وَّيَهَبُ لِمَنْ يَّشَآءُ الذُّكُوْرَ ۙ
لِلّٰهِ அல்லாஹ்விற்கே مُلْكُ ஆட்சி السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ ؕ இன்னும் பூமி(யின்) يَخْلُقُ படைக்கின்றான் مَا يَشَآءُ ؕ தான் நாடுவதை يَهَبُ வழங்குகின்றான் لِمَنْ يَّشَآءُ தான் நாடியவர்களுக்கு اِنَاثًا பெண் பிள்ளைகளை وَّيَهَبُ இன்னும் வழங்குகின்றான் لِمَنْ يَّشَآءُ தான் நாடியவர்களுக்கு الذُّكُوْرَ ۙ ஆண் பிள்ளைகளை
42:49. அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்; தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான்.
42:49. வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே. இவற்றைத் தவிர, அவன் விரும்பியதையும் படைக்கிறான். அவன் விரும்பியவர்களுக்குப் பெண் சந்ததியை மட்டும் கொடுக்கிறான். அவன் விரும்பியவர்களுக்கு ஆண் சந்ததியை மட்டும் கொடுக்கிறான்.
42:49. அல்லாஹ், பூமி மற்றும் வானங்களுடைய ஆட்சியின் உரிமையாளனாவான்; தான் நாடுகின்றவற்றைப் படைக்கின்றான்: தான் நாடுவோருக்குப் பெண்மக்களை வழங்குகின்றான்; தான் நாடுவோருக்கு ஆண்மக்களை வழங்குகின்றான்.
42:49. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியதாகும், அவன் நாடியவற்றை அவன் படைக்கிறான், (ஆகவே) அவன் நாடியவர்களுக்குப் பெண் மக்களை அன்பளிப்புச் செய்கிறான், அவன் நாடியவர்களுக்கு ஆண் மக்களை அன்பளிப்புச் செய்கிறான்.
42:50 اَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَّاِنَاثًا ۚ وَيَجْعَلُ مَنْ يَّشَآءُ عَقِيْمًاؕ اِنَّهٗ عَلِيْمٌ قَدِيْرٌ
اَوْ அல்லது يُزَوِّجُهُمْ அவர்களுக்கு கலந்து கொடுக்கின்றான் ذُكْرَانًا ஆண் பிள்ளைகளை وَّاِنَاثًا ۚ இன்னும் பெண் பிள்ளைகளை وَيَجْعَلُ இன்னும் ஆக்குகின்றான் مَنْ يَّشَآءُ தான் நாடுகின்றவர்களை عَقِيْمًاؕ மலடுகளாக اِنَّهٗ நிச்சயமாக அவன் عَلِيْمٌ நன்கறிந்தவன் قَدِيْرٌ பேராற்றலுடையவன்
42:50. அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான் - நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன்.
42:50. அல்லது ஆணையும் பெண்ணையும் கலந்தே கொடுக்கிறான். அவன் விரும்பியவர்களை (சந்ததியற்ற) மலடாகவும் ஆக்கிவிடுகிறான். நிச்சயமாக அவன் (அவரவர்களின் தகுதியை) நன்கறிந்தவனும், (தான் விரும்பியவாறு செய்ய) பேராற்றலுடையவனும் ஆவான்.
42:50. தான் நாடுவோருக்கு ஆண்மக்களையும், பெண்மக்களையும் சேர்த்து வழங்குகின்றான். மேலும், தான் நாடுவோரை மலடுகளாகவும் ஆக்குகின்றான். திண்ணமாக, அவன் அனைத்தையும் அறிந்தவனும் யாவற்றின் மீதும் பேராற்றல் கொண்டவனும் ஆவான்.
42:50. அல்லது, ஆண்மக்களையும், பெண்மக்களையும் கலந்தே கொடுக்கின்றான், அன்றியும், அவன் நாடியவர்களை மலடாகவும் ஆக்கி விடுகின்றான், நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன், (தான் விரும்பியதைச் செய்ய) மிக்க ஆற்றலுடையவன்.
42:51 وَمَا كَانَ لِبَشَرٍ اَنْ يُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْيًا اَوْ مِنْ وَّرَآىٴِ حِجَابٍ اَوْ يُرْسِلَ رَسُوْلًا فَيُوْحِىَ بِاِذْنِهٖ مَا يَشَآءُؕ اِنَّهٗ عَلِىٌّ حَكِيْمٌ
وَمَا كَانَ முடியாது لِبَشَرٍ ஒரு மனிதருக்கு اَنْ يُّكَلِّمَهُ அவரிடம் நேரடியாகபேசுவது اللّٰهُ அல்லாஹ் اِلَّا தவிர وَحْيًا வஹீ அறிவிப்பதன் மூலம் اَوْ அல்லது مِنْ وَّرَآىٴِ பின்னால் இருந்து حِجَابٍ திரைக்கு اَوْ அல்லது يُرْسِلَ அனுப்புவான் رَسُوْلًا ஒரு தூதரை فَيُوْحِىَ வஹீ அறிவிப்பான் بِاِذْنِهٖ தனது உத்தரவின்படி مَا يَشَآءُؕ தான் நாடுவதை اِنَّهٗ நிச்சயமாக அவன் عَلِىٌّ மிக உயர்ந்தவன் حَكِيْمٌ மகா ஞானவான்
42:51. அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹீயாகவோ; அல்லது திரைக்கப்பால் இருந்தோ; அல்லது தான் விரும்பியதைத் தன் அனுமதியின் மீது வஹீயை அறிவிக்கக் கூடிய ஒரு தூதரை அனுப்பியோ அன்றி (நேரிடையாகப்) பேசுவதில்லை; நிச்சயமாக அவன் உயர்ந்தவன்; ஞானமுடையவன்.
42:51. அல்லாஹ் (நேருக்குநேர்) பேசுவதற்குரிய தகுதி மனிதரில் ஒருவருக்குமில்லை. எனினும், வஹ்யின் மூலமாகவோ அல்லது திரைக்கு அப்பால் இருந்தோ அல்லது வானவர்களை அனுப்பிவைத்து வஹியின் மூலமாகவோ தனக்கு விருப்பமான கட்டளையை (மனிதனுக்கு) அறிவிக்கிறான். (ஏனென்றால்) நிச்சயமாக அவன் மிக மேலானவனும் மிக ஞானமுடையவனுமாவான்.
42:51. எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவது இல்லை. ஆயினும் வஹியின் (சைக்கினையின்) மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை (வானவரை) அனுப்பிவைத்தோ அல்லாமல் (நேரடியாகப்) பேசுவதில்லை. அவர் அவனுடைய அனுமதி கொண்டு அவன் நாடுவதை அறிவித்துவிடுகிறார். திண்ணமாக, அவன் உயர்வுமிக்கவனும் நுண்ணறிவாளனுமாவான்.
42:51. வஹீயின் மூலமோ, அல்லது திரைக்கு அப்பாலிருந்தோ, அல்லது ஒரு தூதரை அனுப்பியோ தவிர எந்த மனிதருக்கும் அல்லாஹ் அவருடன் பேசுவது (சாத்தியம்) இல்லை. (அத்தூதர்,) அவன் நாடியதை அவன் அனுமதி கொண்டு அவர் அறிவிப்பார், நிச்சயமாக அவன், மிக உயர்ந்தவன், தீர்க்கமான அறிவுடையவன்.
42:52 وَكَذٰلِكَ اَوْحَيْنَاۤ اِلَيْكَ رُوْحًا مِّنْ اَمْرِنَا ؕ مَا كُنْتَ تَدْرِىْ مَا الْكِتٰبُ وَلَا الْاِيْمَانُ وَلٰـكِنْ جَعَلْنٰهُ نُوْرًا نَّهْدِىْ بِهٖ مَنْ نَّشَآءُ مِنْ عِبَادِنَا ؕ وَاِنَّكَ لَتَهْدِىْۤ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍۙ
وَكَذٰلِكَ இவ்வாறுதான் اَوْحَيْنَاۤ வஹீ அறிவித்தோம் اِلَيْكَ உமக்கு رُوْحًا அருளாக مِّنْ اَمْرِنَا ؕ நமதுகட்டளையினால் مَا كُنْتَ நீர் இருக்கவில்லை تَدْرِىْ அறிந்தவராக مَا الْكِتٰبُ வேதம் என்றால் என்ன وَلَا الْاِيْمَانُ ஈமான் என்றால் என்ன وَلٰـكِنْ எனினும் جَعَلْنٰهُ நாம் இதை ஆக்கினோம் نُوْرًا ஓர் ஒளியாக نَّهْدِىْ நாம் நேர்வழி காட்டுகின்றோம் بِهٖ இதன் மூலம் مَنْ نَّشَآءُ நாம் நாடுகின்றவர்களுக்கு مِنْ عِبَادِنَا ؕ நமது அடியார்களில் وَاِنَّكَ நிச்சயமாக நீர் لَتَهْدِىْۤ நேர்வழி காட்டுகின்றீர் اِلٰى பக்கம் صِرَاطٍ பாதையின் مُّسْتَقِيْمٍۙ நேரான
42:52. (நபியே!) இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை (குர்ஆனை) வஹீ மூலமாக உமக்கு அறிவித்திருக்கிறோம்; (அதற்கு முன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்று நீர் அறிபவராக இருக்கவில்லை - எனினும் நாம் அதை ஒளியாக ஆக்கி, நம் அடியார்களில நாம் விரும்பியோருக்கு இதைக் கொண்டு நேர்வழி காட்டுகிறோம் - நிச்சயமாக நீர் (மக்களை) நேரான பாதையில் வழி காண்பிக்கின்றீர்.
42:52. (நபியே!) இவ்வாறே உமக்கு நம் கட்டளையை வஹ்யின் மூலமாக அறிவிக்கிறோம். (இதற்கு முன்னர்) நீர் வேதம் இன்னதென்றும், நம்பிக்கை இன்னதென்றும் அறிந்தவராக இருக்கவில்லை. ஆயினும், (இந்த வேதத்தை உமக்கு நாம் வஹ்யி மூலம் அறிவித்து) அதை ஒளியாகவும் ஆக்கி, நம் அடியார்களில் நாம் விரும்பியவர்களுக்கு அதைக் கொண்டு நேரான வழியைக் காண்பிக்கிறோம். (நபியே!) நிச்சயமாக நீர் (அதன் மூலம் மக்களுக்கு) நேரான வழியைக் காண்பிக்கிறீர்.
42:52. மேலும், இவ்வாறே (நபியே!) நம் கட்டளையின் வாயிலாக ஒரு ரூஹை* உமக்கு வஹி அறிவித்தோம். வேதம் என்பதென்ன, ஈமான் (இறைநம்பிக்கை) என்றால் என்ன என்பதெல்லாம் உமக்குத் தெரியாதிருந்தது. ஆனால் அந்த ரூஹை நாம் ஒளியாக ஆக்கினோம். நம் அடியார்களில் நாம் நாடுவோருக்கு அதன்மூலம் வழிகாட்டுகிறோம். திண்ணமாக, நீர் நேரியவழியைக் காட்டிக் கொண்டிருக்கின்றீர்.
42:52. (நபியே!) இவ்வாறே உமக்கு நம்முடைய கட்டளையின் (குர் ஆனாகிய) உயிரானதை வஹீ மூலமாக அறிவிக்கின்றோம், (இதற்கு முன்னர்) நீர் வேதம் என்றால் என்ன, இன்னும் விசுவாசம் என்றால் என்ன என்பதை அறிந்தவராக இருக்கவில்லை, ஆயினும், (இவ்வேதத்தை உமக்கு வஹீ மூலம் அறிவித்து) இதனைப் பிரகாசமாகவும் ஆக்கி, நம் அடியார்களில் நாடியவர்களுக்கு இதனைக்கொண்டு நாம் நேர் வழி செலுத்துகின்றோம், (நபியே!) நிச்சயமாக நீர், (மனிதர்களுக்கு) நேரான வழியின்பால் வழிகாட்டுவீர்.
42:53 صِرَاطِ اللّٰهِ الَّذِىْ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِؕ اَلَاۤ اِلَى اللّٰهِ تَصِيْرُ الْاُمُوْرُ
صِرَاطِ பாதையின் பக்கம் اللّٰهِ அல்லாஹ்வின் الَّذِىْ எப்படிப்பட்டவன் لَهٗ அவனுக்கே مَا فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவை وَمَا فِى الْاَرْضِؕ இன்னும் பூமியில் உள்ளவை(யும்) اَلَاۤ அறிந்துகொள்ளுங்கள்! اِلَى اللّٰهِ அல்லாஹ்வின் பக்கமே تَصِيْرُ திரும்புகின்றன الْاُمُوْرُ காரியங்கள்
42:53. (அதுவே) அல்லாஹ்வின் வழியாகும்; வானங்களில் இருப்பவையும், பூமியில் இருப்பவையும் (யாவும்) அவனுக்கே சொந்தம் - அறிந்து கொள்க! அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீண்டு வருகின்றன.
42:53. அதுதான் அல்லாஹ்வுடைய வழி. வானங்களிலும், பூமியிலும் இருப்பவை அனைத்தும் அவனுக்குச் சொந்தமானவையே. சகல காரியங்களும் அவனிடம் வந்தே தீரும் என்பதை (நபியே!) அறிந்து கொள்வீராக!
42:53. வானங்கள், பூமி ஆகியவற்றிலுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் உரிமையாளனாகிய அல்லாஹ்வின் வழியை தெரிந்து கொள்ளுங்கள்! எல்லா விவகாரங்களும் அல்லாஹ்விடமே திரும்புகின்றன.
42:53. (திட்டமாக இது தான்) அல்லாஹ்வுடைய வழி, அவன் எத்தகையவனென்றால் வானங்களில் இருப்பவையும் பூமியில் இருப்பவையும் அவனுக்கே உரியன; சகல காரியங்களும் அல்லாஹ்வின் பக்கமே சேரும் என்பதை (நபியே! நீர்) அறிந்து கொள்வீராக!