50. ஸூரத்து ஃகாஃப்
மக்கீ, வசனங்கள்: 45

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
50:1
50:1 قٓ ۚ وَالْقُرْاٰنِ الْمَجِيْدِۚ‏
قٓ ۚ காஃப் وَالْقُرْاٰنِ குர்ஆன் மீது சத்தியமாக! الْمَجِيْدِۚ‏ கீர்த்திமிக்க(து)
50:1. காஃப், கண்ணியமிக்க இக்குர்ஆன் மீது சத்தியமாக!
50:1. காஃப். (நபியே!) மிக்க மேலான இந்த குர்ஆன் மீது சத்தியமாக! (நீர் நம்மால் அனுப்பப்பட்ட தூதர்தான்).
50:1. காஃப் மாட்சிமை மிக்க குர்ஆனின் மீது ஆணையாக!
50:1. காஃப் கண்ணியமிக்க இக் குர்ஆன் மீது சத்தியமாக! (மரணத்திற்குப்பின் நிச்சயமாக நீங்கள் உயிர்கொடுத்து எழுப்பப்படுவீர்கள்).
50:2
50:2 بَلْ عَجِبُوْۤا اَنْ جَآءَهُمْ مُّنْذِرٌ مِّنْهُمْ فَقَالَ الْكٰفِرُوْنَ هٰذَا شَىْءٌ عَجِيْبٌ‌ۚ‏
بَلْ மாறாக عَجِبُوْۤا ஆச்சரியப்பட்டனர் اَنْ جَآءَ வந்ததால் هُمْ அவர்களிடம் مُّنْذِرٌ ஓர் எச்சரிப்பாளர் مِّنْهُمْ அவர்களில் இருந்தே فَقَالَ ஆகவே, கூறினர் الْكٰفِرُوْنَ நிராகரிப்பாளர்கள் هٰذَا இது شَىْءٌ ஒரு விஷயம் عَجِيْبٌ‌ۚ‏ மிக ஆச்சரியமான
50:2. எனினும்: அவர்களிலிருந்தே, அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒருவர் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர்; ஆகவே, காஃபிர்கள் கூறுகிறார்கள்: “இது ஓர் ஆச்சரியமான விஷயமேயாகும்.”
50:2. ஆயினும், அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒருவர் (-முஹம்மதாகிய நீர்) அவர்களில் இருந்தே (இறைத்தூதராக) அவர்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியப்பட்டு, இந்நிராகரிப்பவர்கள் ‘‘இது மிக அற்புதமான விஷயமென்று'' கூறுகின்றனர்.
50:2. உண்மை யாதெனில், இவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் இவர்களிலிருந்தே வந்திருப்பது பற்றி இவர்கள் வியப்படைந்துள்ளார்கள். மேலும், நிராகரிப்பாளர்கள் கூறத் தொடங்கினார்கள்: “இது வியப்புக்குரிய விஷயம்தான்!
50:2. என்றாலும் அவர்களிலிருந்தே அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் அவர்களுக்கு வந்ததைப்பற்றி அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர், ஆகவே, இது ஆச்சரியமான விஷயம் என்று நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர்.
50:3
50:3 ءَاِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ‌ۚ ذٰ لِكَ رَجْعٌ ۢ بَعِيْدٌ‏
ءَاِذَا مِتْنَا நாங்கள் இறந்துவிட்டாலுமா وَكُنَّا இன்னும் நாங்கள் ஆகிவிட்டாலுமா تُرَابًا ۚ மண்ணாக ذٰ لِكَ அது رَجْعٌ ۢ மீட்சியாகும் بَعِيْدٌ‏ தூரமான(து)
50:3. “நாம் மரணமடைந்து மண்ணாகி விட்டாலு(ம் உயிர் கொடுத்து எழுப்பப்படுவோ)மா? இப்படி மீள்வது (சாத்தியமில்லாத) தொலைவானது” (என்றும் அவர்கள் கூறுகின்றனர்).
50:3. (மேலும், ‘‘இத்தூதர் கூறுகின்றபடி) நாம் இறந்து உக்கி மண்ணாகப் போனதன் பின்னரா (உயிர்கொடுத்து மீட்கப்படுவோம்?) இவ்வாறு மீளுவது வெகு தூரம். (அது நிகழப்போவதில்லை'' என்றும் கூறுகின்றனர்.)
50:3. நாங்கள் மரணமடைந்து மண்ணோடு மண்ணாகி விட்டாலுமா (மீண்டும் எழுப்பப்படுவோம்?) மீண்டும் எழுப்பப்படுவது எனும் இவ்விஷயம் அறிவுக்குப் புறம்பானதாகும்.”
50:3. “நாம் இறந்து (உக்கி) மண்ணாகிவிட்டாலும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவோமா? (அது இயற்கைக்கு மாற்றமானதாகும் ஆகவே,) அது தூரமான மீட்சியாகும்” (என்றும் கூறுகின்றனர்).
50:4
50:4 قَدْ عَلِمْنَا مَا تَنْقُصُ الْاَرْضُ مِنْهُمْ‌ۚ وَعِنْدَنَا كِتٰبٌ حَفِيْظٌ‏
قَدْ திட்டமாக عَلِمْنَا நாம் அறிவோம் مَا تَنْقُصُ குறைப்பதை الْاَرْضُ பூமி مِنْهُمْ‌ۚ அவர்களில் وَعِنْدَنَا நம்மிடம் இருக்கிறது. كِتٰبٌ பதிவு நூல் حَفِيْظٌ‏ பாதுகாக்கக்கூடிய(து)
50:4. (மரணத்திற்குப் பின்) அவர்களிலிருந்து (அவர்கள் உடலை) பூமி எந்த அளவு குறைத்திருக்கின்றதோ அதைத் திட்டமாக நாம் அறிந்திருக்கின்றோம்; நம்மிடம் (யாவும் பதிக்கப் பெற்று) பாதுகாக்கப்பட்ட ஏடு இருக்கிறது.
50:4. (மரணித்த)பின் அவர்களின் தேகத்தை மண் தின்று அழித்துக் கொண்டிருப்பதை நிச்சயமாக நாம் அறிவோம். (எனினும், நாம் விரும்பிய நேரத்தில் மரணித்த அவர்களை உயிர் கொடுத்து எழுப்பிவிடுவோம்.) மேலும், (அவர்களின் செயல்களைப் பற்றிய) பாதுகாக்கப்பட்ட பதிவுப் புத்தகம் நம்மிடத்தில் இருக்கிறது. (அதில் ஒவ்வொன்றும் வரையப்பட்டுள்ளது.)
50:4. (உண்மை யாதெனில்) பூமி, இவர்களின் உடம்பிலிருந்து எவற்றைத் தின்கிறது என்பதையெல்லாம் நாம் அறிந்து வைத்துள்ளோம். மேலும், அனைத்தும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஓர் ஏடு நம்மிடம் இருக்கிறது.
50:4. (இறந்தபின்) அவர்களிலிருந்து (அவர்களின் உடலை எந்த அளவு) பூமி (தின்று) குறைத்திருக்கிறது என்பதைத் திட்டமாக நாம் அறிந்திருக்கிறோம், மேலும், (அவர்களின் செயல்கள் பதியப்பட்டு) பாதுகாக்கப்பட்ட புத்தகம் நம்மிடத்தில் இருக்கின்றது.
50:5
50:5 بَلْ كَذَّبُوْا بِالْحَقِّ لَمَّا جَآءَهُمْ فَهُمْ فِىْۤ اَمْرٍ مَّرِيْجٍ‏
بَلْ மாறாக كَذَّبُوْا அவர்கள் பொய்ப்பித்தனர் بِالْحَقِّ உண்மையை لَمَّا جَآءَ அது வந்த போது هُمْ அவர்களிடம் فَهُمْ அவர்கள் இருக்கின்றனர் فِىْۤ اَمْرٍ ஒரு விஷயத்தில் مَّرِيْجٍ‏ குழப்பமான
50:5. இருப்பினும், சத்திய (வேத)த்தை -அது தம்மிடம் வந்த போது பொய்ப்பிக்(க முற்படு)கிறார்கள்; அதனால், அவர்கள் குழப்பமான நிலையிலேயே இருக்கின்றனர்.
50:5. இவ்வாறிருந்தும் அவர்களிடம் வந்த உண்மையான (வேதத்)தை அவர்கள் பொய்யாக்கி வெறும் குழப்பத்திற்குள்ளாகி விட்டனர்.
50:5. ஆயினும், சத்தியம் இவர்களிடம் வந்தபோது அதனை இவர்கள் வெளிப்படையாகப் பொய்யெனக் கூறிவிட்டார்கள். இதனால்தான் இப்போது இவர்கள் குழப்பத்தில் வீழ்ந்து கிடக்கிறார்கள்.
50:5. மாறாக, உண்மையை_அது அவர்களிடம் வந்தபோது அவர்கள் பொய்யாக்கினார்கள், ஆகவே, அவர்கள் குழப்பமான காரியத்தில் இருக்கிறார்கள்.
50:6
50:6 اَ فَلَمْ يَنْظُرُوْۤا اِلَى السَّمَآءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنٰهَا وَزَ يَّـنّٰهَا وَمَا لَهَا مِنْ فُرُوْجٍ‏
اَ فَلَمْ يَنْظُرُوْۤا அவர்கள் பார்க்கவில்லையா? اِلَى السَّمَآءِ வானத்தை فَوْقَهُمْ தங்களுக்கு மேல் உள்ள كَيْفَ بَنَيْنٰهَا நாம் அதை எப்படி படைத்தோம்? وَزَ يَّـنّٰهَا இன்னும் அதை எப்படி அலங்கரித்தோம்? وَمَا لَهَا அதில் இல்லை مِنْ فُرُوْجٍ‏ பிளவுகள்
50:6. அவர்களுக்கு மேலிருக்கும் வானத்தை நாம் எவ்வாறு அதை (ஒரு கட்டுக் கோப்பாக) அமைத்து, அதை அழகு செய்து, அதில் எவ்வித வெடிப்புகளும் இல்லாமல் (ஆக்கியிருக்கின்றோம்) என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?
50:6. தங்களுக்கு மேலிருக்கும் வானத்தை அவர்கள் கவனித்துப் பார்க்கவில்லையா? நாம் அதை எவ்வாறு ஒரு கட்டுக்கோப்பாக அமைத்து, அதை (நட்சத்திரங்களைக் கொண்டு) அலங்காரமாக்கி வைத்திருக்கிறோம். அதில் எவ்வித வெடிப்புகளும் இல்லை. (ஓட்டை உடைசலும் இல்லை!)
50:6. சரி, இவர்கள் தங்களுக்கு மேலுள்ள வானத்தை எப்பொழுதுமே பார்த்ததில்லையா, என்ன? அதனை நாம் எவ்வாறு அமைத்துள்ளோம்; எவ்வாறு அலங்கரித்துள்ளோம் என்று! அதில் எங்கும் எந்த ஒரு பிளவும் இல்லை.
50:6. தங்களுக்கு மேல் (இருக்கும்) வானத்தின் பால், அதனை நாம் எவ்வாறு (ஒரு கட்டுக்கோப்பாக) அமைத்து, அதனை (நட்சத்திரங்களால்) அலங்காரமாக்கி வைத்துள்ளோம் என்பதை அவர்கள் (கவனித்துப்) பார்க்கவில்லையா? அதில் எத்தகைய வெடிப்புகளும் இல்லை.
50:7
50:7 وَالْاَرْضَ مَدَدْنٰهَا وَاَ لْقَيْنَا فِيْهَا رَوَاسِىَ وَاَنْۢبَتْنَا فِيْهَا مِنْ كُلِّ زَوْجٍۢ بَهِيْجٍ ۙ‏
وَالْاَرْضَ இன்னும் பூமியை مَدَدْنٰهَا நாம் அதை விரித்தோம் وَاَ لْقَيْنَا فِيْهَا இன்னும் அதில் அமைத்தோம் رَوَاسِىَ பெரிய மலைகளை وَاَنْۢبَتْنَا இன்னும் தாவரங்களை முளைக்க வைத்தோம் فِيْهَا அதில் مِنْ كُلِّ زَوْجٍۢ எல்லா வகையான بَهِيْجٍ ۙ‏ அழகான
50:7. மேலும் நாம் பூமியை நீட்டி விரிவாக்கி, அதில் உறுதியான மலைகளை அமைத்துள்ளோம்; மேலும் அதில் அழகிய புற்பூண்டுகளை (ஆண், பெண் வகையுள்ள) ஜோடியாக முளைப்பிக்கவும் செய்திருக்கின்றோம்.
50:7. மேலும், நாமே பூமியை விரித்து, அதில் உறுதியான மலைகளையும் அமைத்து அழகான புற்பூண்டுகள் அனைத்தையும் (ஆண், பெண் கொண்ட) ஜோடி ஜோடியாக முளைப்பித்தோம்.
50:7. மேலும், பூமியை நாம் விரித்தோம். இன்னும் அதில் மலைகளை நாட்டினோம். மேலும், எல்லாவிதமான அழகிய தோற்றமுடைய தாவரங்களையும் முளைக்கச் செய்தோம்.
50:7. மேலும் பூமியை_ நாமே அதை (விரிவாக்கி) விரித்திருக்கிறோம், அதில் உறுதியான மலைகளையும் நாமே அமைத்தோம், அழகான (புற்பூண்டுகளை) ஒவ்வொரு வகையிலிருந்தும் நாம் அதில் முளைப்பித்தோம்.
50:8
50:8 تَبْصِرَةً وَّذِكْرٰى لِكُلِّ عَبْدٍ مُّنِيْبٍ‏
تَبْصِرَةً உற்று நோக்குவதற்காக(வும்) وَّذِكْرٰى படிப்பினை பெறுவதற்காகவும் لِكُلِّ عَبْدٍ எல்லா அடியார்களுக்கும் مُّنِيْبٍ‏ திரும்பக்கூடிய(வர்)
50:8. (இது இறைவன் பக்கம்) திரும்பும் அடியார்கள் எல்லோருக்கும் (அகப்) பார்வை அளிப்பதாகவும், (நினைவூட்டும்) நல்லுபதேசமாகவும் உள்ளது.
50:8. (இது) நம்மை நோக்கி நிற்கும் எல்லா அடியார்களுக்கும் நல்ல உபதேசங்களாகவும் ஒரு படிப்பினையாகவும் (இருக்கிறது).
50:8. மேலும், இவை அனைத்தும் (சத்தியத்தின் பக்கம்) திரும்பக்கூடிய ஒவ்வொரு அடியானுக்கும் அகப்பார்வையையும் படிப்பினையையும் வழங்கக்கூடியதாய் இருக்கின்றன.
50:8. இது (அல்லாஹ்வுக்குப்) பணிந்து அவன் பக்கம் அதிகமாக) மீளக்கூடிய ஒவ்வொரு அடியாருக்கும் பார்(த்துப்படிப்பினை பெறுப)வையாகவும், நினைவூட்டக்கூடியதாகவும் இருக்கின்றது.
50:9
50:9 وَنَزَّلْنَا مِنَ السَّمَآءِ مَآءً مُّبٰـرَكًا فَاَنْۢبَـتْـنَا بِهٖ جَنّٰتٍ وَّحَبَّ الْحَصِيْدِ ۙ‏
وَنَزَّلْنَا இன்னும் நாம் இறக்கினோம் مِنَ السَّمَآءِ வானத்திலிருந்து مَآءً நீரை مُّبٰـرَكًا அருள் நிறைந்த(து) فَاَنْۢبَـتْـنَا முளைக்க வைத்தோம் بِهٖ அதன் மூலம் جَنّٰتٍ தோட்டங்களை(யும்) وَّحَبَّ தானியங்களையும் الْحَصِيْدِ ۙ‏ அறுவடை செய்யப்படும்
50:9. அன்றியும், வானத்திலிருந்து மிக்க பாக்கியமுள்ள தண்ணீரை (மழையை) நாம் இறக்கி வைத்து, அதைக் கொண்டு தோட்டங்களையும், அறுவடை செய்யப்படும் தானியங்களையும் முளைப்பிக்கிறோம்.
50:9. மேகத்திலிருந்து மிக பாக்கியமுள்ள மழையை நாம் பொழியச் செய்து, அதைக்கொண்டு பல சோலைகளையும் (விவசாயிகள்) அறுவடை செய்யும் தானிய மணிகளையும் உற்பத்தி செய்கிறோம்.
50:9. மேலும், நாம் வானத்திலிருந்து அருள்மிக்க நீரினை இறக்கினோம். பின்னர், அதன் மூலம் தோட்டங்களையும், அறுவடைத் தானியங்களையும்,
50:9. வானத்திலிருந்து, மிக்க பாக்கியமுள்ள (மழை) நீரையும் நாம் இறக்கிவைத்தோம், பின்னர், அதனைக்கொண்டு (பல) சோலைகளையும் அறுவடை செய்யப்படும் தானிய மணிகளையும் முளைக்கச் செய்தோம்.
50:10
50:10 وَالنَّخْلَ بٰسِقٰتٍ لَّهَا طَلْـعٌ نَّضِيْدٌ ۙ‏
وَالنَّخْلَ இன்னும் பேரித்த மரங்களையும் بٰسِقٰتٍ உயரமான(வைகள்) لَّهَا அவற்றில் طَلْـعٌ குலைகள் இருக்கின்றன نَّضِيْدٌ ۙ‏ அடர்த்தியான(து)
50:10. அடுக்கடுக்கான பாளைகளைக் கொண்ட (குலைகளையுடைய) நெடிய பேரீச்ச மரங்களையும் (உண்டாக்கினோம்).
50:10. அடுக்கடுக்காய் (கனிகள்) நிறைந்த குலைகளையுடைய நீண்டு வளரும் பேரீச்ச மரங்களையும் (முளைப்பிக்கச் செய்தோம்).
50:10. கனிகள் நிறைந்து, குலைகள் அடுக்கடுக்காய் தொங்குகின்ற நீண்ட நெடிய பேரீச்சை மரங்களையும் முளைக்கச் செய்தோம்.
50:10. அன்றியும், (அந்நீரைக்கொண்டு) நீண்டு வளர்ந்த பேரீச்சமரங்களையும் (நாம் முளைப்பிக்கச் செய்தோம்) அவைகளுக்கு அடுக்கடுக்கான பாளைகளிருக்கின்றன.
50:11
50:11 رِّزْقًا لِّلْعِبَادِ‌ ۙ وَاَحْيَيْنَا بِهٖ بَلْدَةً مَّيْـتًا‌ ؕ كَذٰلِكَ الْخُـرُوْجُ‏
رِّزْقًا உணவாக இருப்பதற்காக لِّلْعِبَادِ‌ ۙ அடியார்களுக்கு وَاَحْيَيْنَا நாம் உயிர்ப்பிப்போம் بِهٖ அதன் மூலம் بَلْدَةً பூமியை مَّيْـتًا‌ ؕ இறந்த(து) كَذٰلِكَ இவ்வாறுதான் الْخُـرُوْجُ‏ வெளியேறுவதும்
50:11. (அவற்றின் கனிகளை) அடியார்களுக்கு உணவாக (அளிக்கிறோம்), மேலும், அதைக் கொண்டு இறந்து கிடந்த ஊரை (பூமியை) நாம் உயிர்ப்பிக்கிறோம், இவ்விதமே, (இறந்தவர்கள் உயிர்ப்பிக்கப் பெற்று) வெளியேறுதலும் இருக்கிறது.
50:11. அதை (நம்) அடியார்களுக்கு உணவாக்கி, அவற்றைக்கொண்டு இறந்த பூமியை நாம் உயிர்ப்பிக்கிறோம். இவ்வாறே (மரணித்தவர்கள் சமாதிகளில் இருந்து) வெளியாகுவதும் ஏற்படும்.
50:11. இது மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதற்கான ஏற்பாடாகும். இறந்து கிடக்கும் ஒரு பூமிக்கு நாம் இந்த நீரினால் உயிரூட்டுகின்றோம். (இறந்துவிட்ட மனிதர்கள் பூமியிலிருந்து) வெளிப்படுவதும் இவ்விதமேயாகும்.
50:11. (அதனை நம்) அடியார்களுக்கு ஆகாரமாக (ஆக்கினோம்), இன்னும், அதைக் கொண்டு இறந்துகிடந்த ஊரை (வறண்டபூமியை) நாம் உயிர்ப்பிக்கின்றோம், இவ்வாறே (மரணித்தோர் உயிர்பெற்று) வெளியேறுதலும் (நடந்தேறும்).
50:12
50:12 كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّاَصْحٰبُ الرَّسِّ وَثَمُوْدُۙ‏
كَذَّبَتْ பொய்ப்பித்தனர் قَبْلَهُمْ இவர்களுக்கு முன்னர் قَوْمُ மக்களும் نُوْحٍ நூஹூடைய وَّاَصْحٰبُ الرَّسِّ கிணற்றுடையவர்களும் وَثَمُوْدُۙ‏ ஸமூது மக்களும்
50:12. இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹுடைய சமூகத்தாரும், ரஸ்ஸு (கிணற்று) வாசிகளும், ஸமூது மக்களும் (இவ்வாறு மறுமையை) மறுத்தார்கள்.
50:12. (இவற்றையெல்லாம்) இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹ்வுடைய மக்களும், ரஸ்ஸு (அகழு)டைய மக்களும், ஸமூத் என்னும் மக்களும் பொய்யாக்கினர்.
50:12. இவர்களுக்கு முன்னர் நூஹுடைய சமூகத்தினரும், ‘ரஸ்ஸு’ வாசிகளும், ஸமூத் கூட்டத்தார்களும்,
50:12. இவர்களுக்கு முன்னர் (இருந்த) நூஹ்வுடைய சமூகத்தாரும், ரஸ்ஸு (கிணற்று)வாசிகளும், ஸமூது (சமூகத்தாரும்) பொய்யாக்கினர்.
50:13
50:13 وَعَادٌ وَّفِرْعَوْنُ وَاِخْوَانُ لُوْطٍۙ‏
وَعَادٌ ஆது மக்களும் وَّفِرْعَوْنُ ஃபிர்அவ்னும் وَاِخْوَانُ சகோதரர்களும் لُوْطٍۙ‏ லூத்துடைய
50:13. “ஆது” (சமூகத்தாரும்) ஃபிர்அவ்னும் லூத்தின் சகோதரர்களும் (மறுத்தனர்).
50:13. ஆது என்னும் மக்களும், ஃபிர்அவ்னும், லூத்துடைய சகோதரர்களும் (பொய்யாக்கினர்).
50:13. மற்றும் ஆத் கூட்டத்தார்களும், ஃபிர்அவ்னும், லூத்தின் சகோதரர்களும்
50:13. ஆது (சமூகத்தாரும்), ஃபிர் அவ்னும்,லூத்துடைய சகோதரர்களும்_
50:14
50:14 وَّاَصْحٰبُ الْاَيْكَةِ وَقَوْمُ تُبَّعٍ‌ؕ كُلٌّ كَذَّبَ الرُّسُلَ فَحَقَّ وَعِيْدِ‏
وَّاَصْحٰبُ الْاَيْكَةِ தோட்டக்காரர்களும் وَقَوْمُ மக்களும் تُبَّعٍ‌ؕ துப்பஃ உடைய كُلٌّ எல்லோரும் كَذَّبَ பொய்ப்பித்தனர் الرُّسُلَ தூதர்களை فَحَقَّ ஆகவே, உறுதியாகிவிட்டது وَعِيْدِ‏ என் எச்சரிக்கை
50:14. (அவ்வாறே மத்யன்) தோப்புவாசிகளும், துப்பவுடைய கூட்டத்தாரும் ஆக எல்லோரும் (நம்) தூதர்களைப் பொய்ப்பிக்க முற்பட்டனர்; எனவே (அவர்களைப் பற்றிய) என்னுடைய எச்சரிக்கை உண்மையாயிற்று.
50:14. மேலும், தோப்பில் வசித்தவர்களும், ‘துப்பஉ' என்னும் மக்களும் (பொய்யாக்கினர்). இவர்கள் ஒவ்வொருவரும் (எனது) தூதர்களைப் பொய்யாக்கினர். ஆகவே, (அவர்களை அழிப்போமென்ற) எனது வாக்கு பூர்த்தியாயிற்று.
50:14. மற்றும் ‘அய்கா’ வாசிகள், ‘துப்பஃவு’ சமுதாயத்தார் ஆகிய யாவரும் பொய்யெனத் தூற்றிவிட்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் இறைத்தூதர்களைப் பொய்யர் எனத் தூற்றினார்கள். இறுதியில், எனது எச்சரிக்கை அவர்களின் மீது உண்மையாகிவிட்டது.
50:14. இன்னும் (மத்யன்) தோப்பு வாசிகளும், துப்பஉ வின் சமூகத்தினரும்_ஒவ்வொருவரும் நம்முடைய தூதர்களைப் பொய்யாக்கினர், ஆகவே, (வேதனையைப்பற்றிய) எனது அச்சுறுத்தல் உண்மையாயிற்று.
50:15
50:15 اَفَعَيِيْنَا بِالْخَـلْقِ الْاَوَّلِ‌ؕ بَلْ هُمْ فِىْ لَبْسٍ مِّنْ خَلْقٍ جَدِيْدٍ‏
اَفَعَيِيْنَا நாம் பலவீனமாக ஆகிவிட்டோமா? بِالْخَـلْقِ படைத்ததினால் الْاَوَّلِ‌ؕ முதல் முறை بَلْ மாறாக هُمْ அவர்கள் இருக்கின்றனர் فِىْ لَبْسٍ குழப்பத்தில் مِّنْ خَلْقٍ படைக்கப்படுவதில் جَدِيْدٍ‏ புதிதாக
50:15. எனவே, (எல்லாவற்றையும்) முதலாவதாகப் படைப்பதில் நாம் சோர்வடைந்து விட்டோமா? இல்லை. எனினும், இ(க்காஃபிரான)வர்கள் (நாம்) புதிதாக படைப்பதைப் பற்றி சந்தேகத்தில் இருக்கின்றனர்.  
50:15. (படைப்புகள் அனைத்தையும்) முதல்முறை படைத்ததில் நாம் களைத்து விட்டோமா? (இவர்களை மறுமுறை படைப்பது நமக்குச் சிரமமெனக் கூறுவதற்கு!) எனினும், (மீண்டும் இவர்களை) புதிதாகப் படைக்கும் விஷயத்தில் இவர்கள் சந்தேகத்தில் இருக்கின்றனர்.
50:15. முதல் முறையாய்ப் படைப்பதற்கு நாம் இயலாதவர்களாயிருந்தோமா, என்ன? ஆனால், மீண்டும் புதிதாய்ப் படைப்பது பற்றி இவர்கள் சந்தேகத்தில் ஆழ்ந்து கிடக்கின்றார்கள்.
50:15. (படைப்புகள் யாவற்றையும்) முதலாவதாகப் படைத்ததில் நாம் இயலாமலாகி விட்டோமோ? அவ்வாறன்று! (இறந்தபின் உயிர் கொடுத்து நாம்) புதிதாகப்படைப்பது பற்றி இவர்கள் சந்தேகத்திலிருக்கின்றனர்.
50:16
50:16 وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهٖ نَفْسُهٗ ۖۚ وَنَحْنُ اَقْرَبُ اِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيْدِ‏
وَلَقَدْ திட்டவட்டமாக خَلَقْنَا நாம் படைத்தோம் الْاِنْسَانَ மனிதனை وَنَعْلَمُ இன்னும் நாம் அறிவோம் مَا எதை تُوَسْوِسُ கிசுகிசுக்கிறதோ بِهٖ அதை نَفْسُهٗ ۖۚ அவனது உள்ளம் وَنَحْنُ நாம் اَقْرَبُ மிக நெருக்கமானவர்கள் اِلَيْهِ அவனுக்கு مِنْ حَبْلِ நரம்பைவிட الْوَرِيْدِ‏ கழுத்தின்
50:16. மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்.
50:16. நிச்சயமாக நாம்தான் மனிதனை (முதன் முதலாகவும்) படைத்தோம். அவன் மனதில் உதிக்கும் எண்ணத்தையும் நாம் அறிவோம். பிடரியிலுள்ள இரத்த நரம்பைவிட நாம் அவனுக்கு மிக சமீபமாகவே இருக்கிறோம்.
50:16. நாம் மனிதனைப் படைத்தோம். அவனது உள்ளத்தில் எழுகின்ற ஊசலாட்டங்களைக்கூட நாம் அறிகின்றோம். அவனது பிடரி நரம்பைவிடவும் அதிகமாக நாம் அவனிடம் நெருக்கமாயிருக்கின்றோம்.
50:16. மேலும், நிச்சயமாக, நாம்தான் மனிதனைப் படைத்தோம், (நன்மை, தீமை ஆகியவற்றிலிருந்து) அவன் மனம் எதை ஊசலாடச் செய்கிறது (பேசுகிறது) என்பதையும் நாம் நன்கறிவோம், இன்னும், நாம் பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பைவிட அவனுக்கு மிகச்சமீபமாகவே இருக்கின்றோம்.
50:17
50:17 اِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيٰنِ عَنِ الْيَمِيْنِ وَعَنِ الشِّمَالِ قَعِيْدٌ‏
اِذْ يَتَلَقَّى சந்திக்கின்ற போது الْمُتَلَقِّيٰنِ சந்திக்கின்ற இரு வானவர்கள் عَنِ الْيَمِيْنِ வலது பக்கத்திலும் وَعَنِ الشِّمَالِ இடது பக்கத்திலும் قَعِيْدٌ‏ கண்காணிப்பவர்
50:17. (மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது-
50:17. வலது புறத்தில் ஒருவரும், இடது புறத்தில் ஒருவருமாக இருவர் (அவன் செய்யும் செயலைக்) குறிப்பெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
50:17. (இவ்வாறு நாம் நேரடியாய் அறிவதுடன்) இரு எழுத்தர்கள் அவனுடைய வலப்புறமும், இடப்புறமும் அமர்ந்து ஒவ்வொன்றையும் பதிவு செய்து கொண்டிருக்கின்றார்கள்.
50:17. வலது புறத்திலும் இடது புறத்திலும் அமர்ந்து (செயல்களை) எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் சமயத்தில்_
50:18
50:18 مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَيْهِ رَقِيْبٌ عَتِيْدٌ‏
مَا يَلْفِظُ பேச மாட்டான் مِنْ قَوْلٍ பேச்சில் எதையும் اِلَّا தவிர لَدَيْهِ அவனிடம் இருந்தே رَقِيْبٌ கண்காணிப்பாளர் عَتِيْدٌ‏ ஆஜராகி இருப்பவர்
50:18. கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை.
50:18. (மனிதன்) எதைக் கூறியபோதிலும் அதை எழுதக் காத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமலில்லை. (அவன் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகிறது.)
50:18. எந்தச் சொல்லையும் அவன் சொல் வதில்லை; அதனைப் பாதுகாப்பதற்குத் தயாராக உள்ள ஒரு கண்காணிப்பாளர் அவனிடத்தில் இல்லாத நிலையில்!
50:18. அவனிடம் (அதை) எழுத எதிர்பார்த்து தயாராக இருக்கின்ற கண்காணிப்பாளர் இருந்தே தவிர சொல்லால் எதையும் அவன் மொழிவதில்லை; (அவன் கூறுபவை அனைத்தும் பதியப்படுகின்றது.)
50:19
50:19 وَ جَآءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَـقِّ‌ؕ ذٰلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِيْدُ‏
وَ جَآءَتْ வந்துவிட்டது سَكْرَةُ மயக்கம் الْمَوْتِ மரணத்தின் بِالْحَـقِّ‌ؕ உண்மையாக ذٰلِكَ அதுதான் مَا எது كُنْتَ நீ இருந்தாய் مِنْهُ அதை விட்டு تَحِيْدُ‏ விலகி ஓடுபவனாக
50:19. மரண வேதனை சத்தியத்தைக் கொண்டு (மெய்யாகவே) வருகின்றது; (அப்போது அவனிடம்) நீ எதை விட்டும் விரண்டோடிக் கொண்டிருந்தாயோ அது தான் (இந்நிலை என்று கூறப்படும்)
50:19. மரணத்தின் சிரமம் மெய்யாகவே வந்துவிடும் சமயத்தில் (அவனை நோக்கி) ‘‘நீ தப்பிவிடக் கருதியது இதுதான்'' (என்று கூறப்படும்.)
50:19. (இன்னும் பாருங்கள்) மரணவேதனை உண்மையைக் கொண்டு வந்துவிட்டது. “எதிலிருந்து நீ விரண்டோடிக் கொண்டிருந்தாயோ அதுதான் இது!”
50:19. மரண மயக்கம் உண்மையாகவே வந்துவிட்டது, (அவனிடம்) அது, நீ எதை விட்டும் வெருண்டோடிக் கொண்டிருந்தாயோ அதுவாகும் (என்று கூறப்படும்).
50:20
50:20 وَنُفِخَ فِى الصُّوْرِ ‌ؕ ذٰ لِكَ يَوْمُ الْوَعِيْدِ‏
وَنُفِخَ ஊதப்படும் فِى الصُّوْرِ ؕ சூரில் ذٰ لِكَ يَوْمُ அதுதான்/நாள் الْوَعِيْدِ‏ எச்சரிக்கப்பட்ட
50:20. மேலும் ஸூர் (எக்காளம்) ஊதப்படும். அதுதான் அச்சுறுத்தி எச்சரிக்கப்பட்ட நாளாகும்.
50:20. எக்காளம் ஊதப்பட்டால் (அவனை நோக்கி ‘‘உனக்குப்) பயமுறுத்தப்பட்டு வந்த (விசாரணை) நாள் இதோ (வந்துவிட்டது)'' என்று கூறப்படும்.
50:20. மேலும், எக்காளம் ஊதப்பட்டது. “உனக்கு எச்சரிக்கப்பட்டு வந்தநாள் இதுதான்!”
50:20. மேலும், குழல் ஊதப்படும், (அப்போது அவனிடம் உனக்கு) இது அச்சுறுத்தப்பட்ட (விசாரணை) நாளாகும் (என்று கூறப்படும்.)
50:21
50:21 وَجَآءَتْ كُلُّ نَفْسٍ مَّعَهَا سَآٮِٕقٌ وَّشَهِيْدٌ‏
وَجَآءَتْ வரும் كُلُّ எல்லா نَفْسٍ ஆன்மாவும் مَّعَهَا அதனுடன் இருக்கின்ற நிலையில் سَآٮِٕقٌ ஓட்டிவருபவரும் وَّشَهِيْدٌ‏ சாட்சி சொல்பவரும்
50:21. அன்றியும், (அந்நாளில்) ஒவ்வோர் ஆன்மாவும் தன்னை அழைத்து வருபவர், சாட்சியாளர் ஆகியோருடன் வரும்.
50:21. (அந்நாளில்) ஒவ்வொரு ஆத்மாவையும், அதன் சாட்சியுடன் ஒருவர் ஓட்டிக் கொண்டு வருவார்.
50:21. ஒவ்வொரு மனிதனும் வந்து சேர்ந்து விட்டான்; அவனுடன் விரட்டிக்கொண்டு வருபவர் ஒருவரும் சாட்சியளிப்பவர் ஒருவரும் இருப்பார்.
50:21. (அந்நாளில்) ஒவ்வோர் ஆத்மாவும் _(அதை) அழைத்துச் செல்பவரும், சாட்சி கூறுபவரும் அதனுடன் இருக்கும் நிலையில்_வரும்.
50:22
50:22 لَقَدْ كُنْتَ فِىْ غَفْلَةٍ مِّنْ هٰذَا فَكَشَفْنَا عَنْكَ غِطَآءَكَ فَبَصَرُكَ الْيَوْمَ حَدِيْدٌ‏
لَقَدْ திட்டவட்டமாக كُنْتَ நீ இருந்தாய் فِىْ غَفْلَةٍ மறந்த நிலையில் مِّنْ هٰذَا இதை فَكَشَفْنَا நாம் அகற்றினோம் عَنْكَ உன்னை விட்டும் غِطَآءَكَ உனது திரையை فَبَصَرُكَ ஆகவே, உனது பார்வை الْيَوْمَ இன்றைய தினம் حَدِيْدٌ‏ மிகக் கூர்மையானதாக
50:22. “நீ இதைப் பற்றி அலட்சியத்தில் இருந்தாய்; (இப்பொழுது) உன் (பார்வையை) விட்டு உனது திரையை நாம் அகற்றி விட்டோம். எனவே, இன்று உன் பார்வை கூர்மையாக இருக்கிறது.” (என்று கூறப்படும்).
50:22. அவனை நோக்கி, ‘‘நிச்சயமாக நீ இதைப் பற்றிக் கவலையற்றிருந்தாய். உன் பார்வையை மறைத்துக் கொண்டிருந்த திரையை உன்னை விட்டும் நாம் நீக்கி விட்டோம். இன்றைய தினம் உன் பார்வை கூர்மையாயிருக்கிறது. (ஆகவே, நீ மறுத்துக் கொண்டிருந்ததை உன் கண் திறந்து பார்'' என்று கூறப்படும்.)
50:22. இந்த விஷயத்தைப் பற்றி நீ அலட்சியத்தில் இருந்தாய்! உனக்கு முன்பாக இருந்த திரையை நாம் அகற்றிவிட்டோம். மேலும், இன்று உனது பார்வை நன்கு கூர்மையாய் உள்ளது.
50:22. (அதனிடம்) திட்டமாக நீ இதனைப்பற்றி மறதியில் இருந்தாய், ஆகவே, (மறுமையில் நடந்தேறும் காரியங்கள் பற்றி மறைத்துக்கொண்டிருந்த) உன்திரையை உம்மை விட்டும் நாம் நீக்கிவிட்டோம், எனவே, உன்னுடைய பார்வை இன்று கூர்மையாயிருக்கின்றது (ஆகவே, நீ இதனைப் பார் என்று கூறப்படும்).
50:23
50:23 وَقَالَ قَرِيْـنُهٗ هٰذَا مَا لَدَىَّ عَتِيْدٌ ؕ‏
وَقَالَ கூறுவார் قَرِيْـنُهٗ அவனுடைய நண்பன் هٰذَا இது مَا எது لَدَىَّ என்னிடம் عَتِيْدٌ ؕ‏ தயாராக
50:23. அப்போது அவனுடன் இருப்பவர் (மலக்கு) “இதோ (இம்மனிதனின் ஏடு) என்னிடம் சித்தமாக இருக்கிறது” என்று கூறுவார்.
50:23. (சாட்சி கூற) அவனுடன் வந்தவர் ‘‘இதோ (அவனுடைய பதிவேடு, அவனுடைய நடவடிக்கையின் குறிப்பு) என்னிடம் (தயாராக) இருக்கிறது'' என்று கூறுவார்.
50:23. அவனுடன் இருந்தவர் பணிந்து கூறினார்: “என் பொறுப்பில் இருந்தவன், இதோ ஆஜராகி இருக்கின்றான்!”
50:23. (சாட்சி கூற) அவனுடன் இருப்பவர் “இதோ (அவனுடைய பதிவேடு) என்னிடமிருப்பது தயாராக இருக்கின்றது” என்று கூறுவார்.
50:24
50:24 اَلْقِيَا فِىْ جَهَنَّمَ كُلَّ كَفَّارٍ عَنِيْدٍۙ‏
اَلْقِيَا நீங்கள் இருவரும் தள்ளுங்கள்! فِىْ جَهَنَّمَ நரகத்தில் كُلَّ எல்லோரையும் كَفَّارٍ நிராகரிப்பாளர் عَنِيْدٍۙ‏ முரண்டு பிடிப்பவர்
50:24. “மனமுரண்டாக நிராகரித்துக் கொண்டிருந்தோர் எல்லோரையும் நீங்கள் இருவரும் நரகில் போடுங்கள்.
50:24. (உடனே இரு காவலர்களை நோக்கி) ‘‘நிராகரித்துக் கொண்டிருந்த (ஷைத்தானையும்) ஒவ்வொரு வம்பனையும் நரகத்தில் தள்ளுங்கள்'' (என்று கூறப்படும்).
50:24. (கட்டளையிடப்பட்டது:) “வீசி எறியுங்கள் நரகத்தில், ஒவ்வொரு நிராகரிப்பாளனையும்! அவனோ, சத்தியத்துடன் பகைமை பாராட்டுபவனாகவும்,
50:24. (உடனே இரு காவலர்களிடம்) “மனமுரண்டாக நிராகரித்துக் கொண்டிருந்த ஒவ்வொருவரையும் நீங்கள் இருவரும் நரகத்தில் போட்டுவிடுங்கள்” (என்று கூறப்படும்).
50:25
50:25 مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ مُّرِيْبِ ۙ‏
مَّنَّاعٍ தடுப்பவர் لِّلْخَيْرِ செல்வத்தை مُعْتَدٍ எல்லை மீறுபவர் مُّرِيْبِ ۙ‏ சந்தேகிப்பவன்
50:25. “(அவன்) நன்மையை தடுத்துக் கொண்டேயிருந்தவன்; (இந்நாளைப் பற்றி) சந்தேகிப்பவனாக, வரம்பு மீறிக் கொண்டும் இருந்தான்.
50:25. (‘‘அவன்) நன்மையான காரியங்களைத் தடுத்துக்கொண்டு, (இந்நாளைச்) சந்தேகித்து வரம்பு மீறிக்கொண்டுமிருந்தான்'' என்றும்,
50:25. நன்மையைத் தடுப்பவனாகவும், வரம்புமீறி நடப்பவனாகவும், சந்தேகத்தில் உழல்பவனாகவும்,
50:25. (அவன்) நன்மையை அதிமாகத் தடுத்துக் கொண்டிருந்தவன், (அட்டூழியம் செய்வதில்) வரம்புமீறிக் கொண்டிருந்தவன், (இந்நாளை) சந்தேகித்துக் கொண்டிருந்தவன்.
50:26
50:26 اۨلَّذِىْ جَعَلَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَاَ لْقِيٰهُ فِى الْعَذَابِ الشَّدِيْدِ‏
اۨلَّذِىْ எவர் جَعَلَ ஏற்படுத்தினாரோ مَعَ اللّٰهِ அல்லாஹ்வுடன் اِلٰهًا اٰخَرَ வேறு ஒரு கடவுளை فَاَ لْقِيٰهُ அவரையும் தள்ளுங்கள்! فِى الْعَذَابِ வேதனையில் الشَّدِيْدِ‏ கடுமையான(து)
50:26. “அவன் அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை ஏற்படுத்தினான். ஆகவே நீங்களிருவரும் இவனை மிகக் கடுமையான வேதனையில் போட்டு விடுங்கள்” (என்றுங் கூறப்படும்).
50:26. ‘‘இவன் அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளை ஏற்படுத்தினான் என்றும், ஆகவே, நீங்களிருவரும் இவனைக் கொடிய வேதனையில் போட்டுவிடுங்கள்'' (என்றும் கூறப்படும்).
50:26. அல்லாஹ்வுடன் இதர கடவுளை ஏற்படுத்துபவனாகவும் இருந்தான். எனவே, வீசுங்கள் அவனை, கடுமையான வேதனையில்!”
50:26. அவன் எத்தகையவனென்றால், அல்லாஹ்வுடன் வேறொரு (வணக்கத்திற்குரிய) நாயனை (இணையாக) ஆக்கினான். ஆகவே, நீங்களிருவரும் இவனை மிகக் கொடிய வேதனையில் போட்டுவிடுங்கள் (என்றும் கூறப்படும்).
50:27
50:27 قَالَ قَرِيْنُهٗ رَبَّنَا مَاۤ اَطْغَيْتُهٗ وَلٰـكِنْ كَانَ فِىْ ضَلٰلٍۢ بَعِيْدٍ‏
قَالَ கூறுவான் قَرِيْنُهٗ அவனுடைய நண்பன் رَبَّنَا எங்கள் இறைவா! مَاۤ اَطْغَيْتُهٗ நான் அவனை மீறச்செய்யவில்லை وَلٰـكِنْ எனினும் كَانَ இருந்தான் فِىْ ضَلٰلٍۢ வழிகேட்டில் بَعِيْدٍ‏ தூரமான(து)
50:27. (அப்போது ஷைத்தானாகிய) அவனுடைய கூட்டாளி கூறுவான்: “எங்கள் இறைவா! நான் இவனை வழி கெடுக்கவில்லை; ஆனால், அவனே தூரமான வழி கேட்டில் தான் இருந்தான்-”
50:27. (அச்சமயம்) இவனுடைய இணை பிரியாத சினேகிதன் (ஆக இருந்த ஷைத்தான் இறைவனை நோக்கி,) ‘‘என் இறைவனே! நான் இவனை வழிகெடுக்கவில்லை. தானாகவே அவன் வெகு தூரமான வழிகேட்டில் சென்றுவிட்டான்'' என்று கூறுவான்.
50:27. அவனுடைய தோழன் கூறினான்: “எங்கள் இறைவா! இவனை வரம்புமீறக் கூடியவனாக நான் ஆக்கவில்லை. ஆயினும், அவனேதான் வழிகேட்டில் எல்லையைக் கடந்து விட்டிருந்தான்.”
50:27. (அச்சமயம்) இவனுடைய (இணை பிரியாத) சிநேகிதன் (ஆக இருந்த ஷைத்தான் அல்லாஹ்விடம்), “எங்கள் இரட்சகனே! நான் இவனை வழிகெடுக்க வில்லை, ஆனால், (தானாக) அவனே வெகுதூரமான வழிகேட்டில் இருந்து விட்டான்!” என்று கூறுவான்.
50:28
50:28 قَالَ لَا تَخْتَصِمُوْا لَدَىَّ وَقَدْ قَدَّمْتُ اِلَيْكُمْ بِالْوَعِيْدِ‏
قَالَ கூறுவான் لَا تَخْتَصِمُوْا தர்க்கம் செய்யாதீர்கள் لَدَىَّ என்னிடம் وَقَدْ திட்டமாக قَدَّمْتُ முற்படுத்திவிட்டேன் اِلَيْكُمْ உங்களுக்கு بِالْوَعِيْدِ‏ எச்சரிக்கையை
50:28. “என் முன்னிலையில் நீங்கள் வாக்குவாதம் செய்யாதீர்கள்; (இதைப்பற்றி என் அச்சுறுத்தலை முன்னரே விடுத்திருக்கிறேன்” என்று (அல்லாஹ்) கூறுவான்.
50:28. (ஆகவே, இறைவன் அவர்களை நோக்கி,) ‘‘என் முன்பாக நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருக்க வேண்டாம். ஏற்கனவே (இதைப் பற்றி) உங்களுக்கு (எச்சரித்துப்) பயமுறுத்தியிருந்தேன்.
50:28. (பதில் கூறப்பட்டது:) “என் முன்னிலையில் தர்க்கம் செய்யாதீர்கள். தீயகதியைப் பற்றி முன்பே நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்திருந்தேன்.
50:28. (ஆகவே அல்லாஹ் அவர்களிடம், கணக்கு நாளாகிய இன்று) “என்னிடம் நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருக்க வேண்டாம், (இது பற்றிய) அச்சுறுத்தலை நிச்சயமாக உங்களின் பால் (நீங்கள் உலகிலிருந்தபோதே என் தூதர்கள் மூலமாக) நான் முற்படுத்தியும் விட்டேன்” என்று கூறுவான்.
50:29
50:29 مَا يُبَدَّلُ الْقَوْلُ لَدَىَّ وَمَاۤ اَنَا بِظَلَّامٍ لِّلْعَبِيْدِ‏
مَا يُبَدَّلُ மாற்றப்படாது الْقَوْلُ பேச்சுகள் لَدَىَّ என்னிடம் وَمَاۤ اَنَا நான் இல்லை بِظَلَّامٍ அறவே அநியாயம் செய்பவனாக لِّلْعَبِيْدِ‏ அடியார்களுக்கு
50:29. (எனவே என்னுடைய) அச்சொல் “என்னிடத்தில் மாற்றப்படுவதில்லை - நான் அடியார்களுக்கு அநியாயம் செய்பவனல்லன்” (என்றும் அல்லாஹ் கூறுவான்).  
50:29. என் கட்டளை மாற்றப்படுவதில்லை; நான் என் அடியார்களுக்கு அறவே அநியாயம் செய்பவனல்ல'' என்றும் கூறுவான்.
50:29. என்னிடத்தில் தீர்ப்பு மாற்றப்படுவதில்லை. மேலும், நான் என் அடிமைகள் மீது கொடுமை இழைப்பவன் அல்லன்.”
50:29. “(என்னுடைய) அச்சொல் என்னிடம் மாற்றப்படமாட்டாது, மேலும், என்னுடைய அடியார்களுக்கு நான் சிறிதும் அநியாயம் செய்பவனில்லை” (என்றும் கூறுவான்).
50:30
50:30 يَوْمَ نَـقُوْلُ لِجَهَـنَّمَ هَلِ امْتَلَـئْتِ وَتَقُوْلُ هَلْ مِنْ مَّزِيْدٍ‏
يَوْمَ நாளில் نَـقُوْلُ நாம் கூறுகின்ற لِجَهَـنَّمَ நரகத்திடம் هَلِ امْتَلَـئْتِ நீ நிரம்பிவிட்டாயா? وَتَقُوْلُ அது கூறும் هَلْ مِنْ مَّزِيْدٍ‏ இன்னும் அதிகம் இருக்கிறதா?
50:30. நரகத்தை நோக்கி, “நீ நிறைந்து விட்டாயா? என்று நாம் கேட்டு, அதற்கு அது “இன்னும் அதிகமாக ஏதும் இருக்கின்றதா?” என்று கேட்கும் அந்நாளை (நபியே! நீர் நினைவுறுத்துவீராக)!
50:30. அந்நாளில் நரகத்தை நோக்கி, ‘‘உன் வயிறு நிறைந்துவிட்டதா?'' என்று நாம் கேட்போம். அதற்கு அது ‘‘இன்னும் ஏதும் இருக்கிறதா?'' என்று கேட்கும்.
50:30. அந்த நாளில் நாம் நரகத்திடம், “உனக்கு நிரம்பிவிட்டதா?” என்று கேட்போம். அது கூறும், “இன்னும் அதிகம் இருக்கிறதா?” என்று!
50:30. நரகத்திடம், “நீ நிரம்பிவிட்டாயா?” என்று நாம் கேட்கும் நாளில் அ(ந்நரகமான)து “இன்னும் அதிகமாக ஏதும் இருக்கின்றதா?” என்று கேட்கும்.
50:31
50:31 وَاُزْلِفَتِ الْجَـنَّةُ لِلْمُتَّقِيْنَ غَيْرَ بَعِيْدٍ‏
وَاُزْلِفَتِ சமீபமாகக் கொண்டு வரப்படும் الْجَـنَّةُ சொர்க்கம் لِلْمُتَّقِيْنَ இறையச்சமுள்ளவர்களுக்கு غَيْرَ بَعِيْدٍ‏ தூரமின்றி
50:31. (அன்றியும் அந்நாளில்) பயபக்தியுடையவர்களுக்கு சுவர்க்கம் தொலைவில்லாத நிலையில் மிகவும் சமீபமாக்கப்படும்.
50:31. (அந்நாளில்) இறையச்சமுடையவர்களுக்கு சொர்க்கம் மிக்க சமீபமாகக் கொண்டு வரப்படும்.
50:31. மேலும், சுவனம் இறையச்சம் கொண்டவர்களின் அருகில் கொண்டுவரப்படும். சிறிதளவு தூரம்கூட இருக்காது!
50:31. மேலும், (அந்நாளில்) பயபக்தியுடையோருக்கு சுவனத்தைத் தொலைவின்றி நெருக்கமாகக் கொண்டுவரப்படும்.
50:32
50:32 هٰذَا مَا تُوْعَدُوْنَ لِكُلِّ اَوَّابٍ حَفِيْظٍ‌ۚ‏
هٰذَا இதுதான் مَا எது تُوْعَدُوْنَ வாக்களிக்கப்படுகிறது لِكُلِّ எல்லோருக்கும் اَوَّابٍ அல்லாஹ்வின் பக்கம் முற்றிலும் திரும்பக்கூடிய(வர்) حَفِيْظٍ‌ۚ‏ பேணக்கூடிய(வர்)
50:32. “இது தான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டதா(ன சுவர்க்கமா)கும்; எப்பொழுதும் இறைவனையே நோக்கி, (பாவத்தை தவிர்த்துப்) பேணி நடந்த ஒவ்வொருவருக்கும் (இது உரியது).”
50:32. ‘‘இதுதான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது'' (என்றும்,) ‘‘எப்பொழுதும் இறைவனையே நோக்கி இருந்து (இறைவனுடைய கட்டளைகளைப்) பேணி நடந்து கொண்ட அனைவருக்கும் இது கிடைக்கும்'' (என்றும்,)
50:32. (கூறப்படும்:) “இதுதான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டு வந்தது. அதிகம் மீளக்கூடியவராகவும் மிகவும் பேணுதலுடன் வாழக்கூடியவராகவும் இருந்த ஒவ்வொருவருக்கும் உரியது.
50:32. இது தான் நீங்கள் வாக்களிக்கபட்டீர்களே அதுவாகும், (இரட்சகனின்பால் தவ்பாச் செய்து) அதிகமாக மீளக்கூடிய, (அல்லாஹ்வுடைய கட்டளைகளைப்) பேணி நடந்து கொண்ட ஒவ்வொருவருக்கு(மாகு)ம்.
50:33
50:33 مَنْ خَشِىَ الرَّحْمٰنَ بِالْغَيْبِ وَجَآءَ بِقَلْبٍ مُّنِيْبِۙ‏
مَنْ எவர் خَشِىَ பயந்தாரோ الرَّحْمٰنَ பேரருளாளனை بِالْغَيْبِ மறைவில் وَجَآءَ இன்னும் வந்தாரோ بِقَلْبٍ உள்ளத்துடன் مُّنِيْبِۙ‏ அல்லாஹ்வின் பக்கம் முற்றிலும் திரும்பிய(து)
50:33. எவர்கள், மறைவிலும் அர்ரஹ்மானை அஞ்சி நடந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கும் (அவனையே) முற்றிலும் நோக்கிய இதயத்துடன் வருவோருக்கும் (இது வாக்களிக்கப்பட்டிருக்கிறது).
50:33. எவர்கள், மறைவிலும் ரஹ்மானுக்குப் பயந்து நடந்து (ரஹ்மானையே முற்றிலும்) நோக்கிய மனதுடன் வருகிறார்களோ...
50:33. அவரோ பார்க்காமலேயே கருணைமிக்க இறைவனுக்கு அஞ்சிக் கொண்டிருந்தார். மேலும், அவன் பக்கம் திரும்பக்கூடிய உள்ளத்துடனும் வந்திருக்கின்றார்.
50:33. எவர்கள் மறைவில் அர்ரஹ்மானுக்கு பயந்து நடந்து, (அவன்பால்) மீளக்கூடிய (பரிசுத்த) மனத்துடன் வருகின்றார்களோ (அவர்களுக்குச் சுவனம் நெருக்கமாக்கப்பட்டு அவர்களிடம்),
50:34
50:34 اۨدْخُلُوْهَا بِسَلٰمٍ‌ؕ ذٰلِكَ يَوْمُ الْخُلُوْدِ‏
اۨدْخُلُوْهَا நீங்கள் அதில் நுழையுங்கள்! بِسَلٰمٍ‌ؕ பாதுகாப்புடன் ذٰلِكَ இதுதான் يَوْمُ நாள் الْخُلُوْدِ‏ நிரந்தர
50:34. “ஸலாமுடன் - சாந்தியுடன் - இ(ச் சுவர்க்கத்)தில் பிரவேசியுங்கள்; இதுதான் நித்தியமாக நீங்கள் தங்கியிருக்கும் நாளாகும்” (என்று கூறப்படும்).
50:34. (அவர்களை நோக்கி,) ‘‘ஈடேற்றம் பெற்று நீங்கள் இதில் நுழைந்து விடுங்கள். இது நிரந்தரமான நாளாகும்'' (என்றும் கூறப்படும்).
50:34. நுழைந்துவிடுங்கள் சுவனத்தில், முழு அமைதியுடன்! அந்த நாள் நிரந்தர வாழ்வுக்குரிய நாளாகும்.
50:34. சாந்தியுடன் நீங்கள் இதில் நுழையுங்கள், இது நிரந்தர நாளாகும் (என்றும் அவர்களுக்கு கூறப்படும்).
50:35
50:35 لَهُمْ مَّا يَشَآءُوْنَ فِيْهَا وَلَدَيْنَا مَزِيْدٌ‏
لَهُمْ அவர்களுக்கு مَّا எவை يَشَآءُوْنَ அவர்கள் நாடுகின்றனர் فِيْهَا அதில் وَلَدَيْنَا இன்னும் நம்மிடம் உண்டு مَزِيْدٌ‏ மேலதிகமும்
50:35. அவர்கள் விரும்பியதெல்லாம், அதில் அவர்களுக்கு இருக்கிறது; இன்னும் (அதற்கு) அதிகமும் நம்மிடம் இருக்கிறது.
50:35. அவர்கள் விரும்பியதெல்லாம் அதில் அவர்களுக்குக் கிடைக்கும். மேலும், நம்மிடமிருந்து (அவர்கள் கேட்காததும் இன்னும்) அதிகமாகக் கொடுக்கப்படும்.
50:35. அங்கு அவர்களுக்கு அவர்கள் விரும்பும் அனைத்தும் கிடைக்கும். மேலும், நம்மிடம் இதனைவிட அதிகமாக இன்னும் பலவும் (அவர்களுக்காக) இருக்கின்றன.
50:35. அவர்கள் நாடியதெல்லாம் அதில் அவர்களுக்குண்டு, இன்னும், நம்மிடத்தில் (அவர்கள் கேட்டதைவிட) அதிகம் உண்டு.
50:36
50:36 وَكَمْ اَهْلَـكْنَا قَبْلَهُمْ مِّنْ قَرْنٍ هُمْ اَشَدُّ مِنْهُمْ بَطْشًا فَنَقَّبُوْا فِى الْبِلَادِ ؕ هَلْ مِنْ مَّحِيْصٍ‏
وَكَمْ எத்தனையோ اَهْلَـكْنَا நாம் அழித்தோம் قَبْلَهُمْ இவர்களுக்கு முன்னர் مِّنْ قَرْنٍ தலைமுறையினரை هُمْ அவர்கள் اَشَدُّ மிக பலமான(வர்கள்) مِنْهُمْ இவர்களை விட بَطْشًا வலிமை(யுள்ளவர்கள்) فَنَقَّبُوْا அவர்கள் சுற்றினார்கள் فِى الْبِلَادِ ؕ நகரங்களில் هَلْ مِنْ مَّحِيْصٍ‏ தப்பிக்கும் இடம் ஏதும் இருக்கிறதா?
50:36. அன்றியும், (நிராகரிப்போரான) அவர்களைவிட பலசாலிகளாக இருந்த எத்தனையோ தலைமுறையினரை அவர்களுக்கு முன்னர் நாம் அழித்திருக்கின்றோம்; அவர்கள் (அழிவிலிருந்து தப்பித்துக் கொள்ள) பல ஊர்களிலும் (துளைத்துச்) சென்றனர்; ஆனால் அவர்கள் தப்பித்துக் கொள்ள புகலிடம் இருந்ததா?
50:36. இவர்களுக்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தாரை நாம் அழித்திருக்கிறோம். அவர்கள் இவர்களைவிட மிக பலசாலிகளாக இருந்தார்கள். அவர்கள் (தப்பித்துக்கொள்ள) பல தேசங்களில் சுற்றித் திரிந்தார்கள். (அப்போது அவர்களுக்கு) தப்ப இடம் கிடைத்ததா? (இல்லை, கிடைக்காமல் அழிந்து விட்டனர்.)
50:36. நாம் இவர்களுக்கு முன் இவர்களை விட அதிக வலிமை உடைய எத்தனையோ சமுதாயங்களை அழித்து விட்டிருக்கின்றோம். மேலும் அவர்கள் உலக நாடுகளில் (அக்கிரமம் செய்து கொண்டு) சுற்றித் திரிந்தார்கள். இருந்தும் அவர்களால் ஏதேனும் புகலிடத்தைப் பெறமுடிந்ததா, என்ன?
50:36. இவர்களைவிட மிக்க பலசாலிகளாக இருந்த எத்தனையோ தலைமுறையினரை இவர்களுக்கு முன்னர் நாம் அழித்திருக்கின்றோம், அவர்கள் (தப்பித்துக்கொள்ளும் இடத்தை தேடி) பல ஊர்களிலும் சுற்றித்திரிந்தனர், (ஆயினும்) அவர்களுக்குத் தப்பி ஓடுமிடம் இருந்ததா?
50:37
50:37 اِنَّ فِىْ ذٰلِكَ لَذِكْرٰى لِمَنْ كَانَ لَهٗ قَلْبٌ اَوْ اَلْقَى السَّمْعَ وَهُوَ شَهِيْدٌ‏
اِنَّ நிச்சயமாக فِىْ ذٰلِكَ இதில் இருக்கிறது لَذِكْرٰى நல்லறிவுரை لِمَنْ எவருக்கு كَانَ இருக்கின்றது لَهٗ அவருக்கு قَلْبٌ உள்ளம் اَوْ இன்னும் اَلْقَى السَّمْعَ செவி சாய்த்தான் وَهُوَ அவர் شَهِيْدٌ‏ பிரசன்னமாக இருந்து
50:37. எவருக்கு (நல்ல) இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அ(த்தகைய)வருக்கு நிச்சயமாக இதில் நினைவுறுத்தலும் (படிப்பினையும்) இருக்கிறது.
50:37. எவருக்கு (பரிசுத்தமான) உள்ளமிருந்து, ஓர்மைப்பாடான மனதுடன் செவிசாய்க்கிறாரோ, அவருக்கு நிச்சயமாக இதில் நல்ல படிப்பினை இருக்கிறது.
50:37. இதயமுள்ள அல்லது கவனத்தோடு செவிமடுக்கின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் திண்ணமாக, இந்த வரலாற்றில் படிப்பினையூட்டும் பாடம் இருக்கின்றது.
50:37. எவருக்கு (அவர்களை அழித்தது பற்றி சிந்தித்துணரும்) உள்ளமிருக்கிறதோ அவருக்கு, அல்லது மனமுவந்தவராக செவிசாய்க்கின்றாரோ அவருக்கு நிச்சயமாக இதில் (நல்ல) படிப்பினை இருக்கின்றது.
50:38
50:38 وَلَقَدْ خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا فِىْ سِتَّةِ اَيَّامٍ‌ۖ وَّمَا مَسَّنَا مِنْ لُّغُوْبٍ‏
وَلَقَدْ திட்டவட்டமாக خَلَقْنَا நாம் படைத்தோம் السَّمٰوٰتِ வானங்களை(யும்) وَالْاَرْضَ பூமியையும் وَمَا بَيْنَهُمَا அவை இரண்டுக்கும் மத்தியில் உள்ளவற்றையும் فِىْ سِتَّةِ ஆறு اَيَّامٍ‌ۖ நாள்களில் وَّمَا مَسَّنَا நமக்கு ஏற்படவில்லை مِنْ لُّغُوْبٍ‏ சோர்வும்
50:38. நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை.
50:38. நிச்சயமாக நாம்தான் வானங்களையும், பூமியையும் அதற்கு மத்தியில் உள்ளவற்றையும் ஆறே நாட்களில் படைத்தோம். அதனால் நமக்கு ஒரு களைப்பும் (சோர்வும்) ஏற்பட்டு விடவில்லை.
50:38. நாம் வானங்களையும் பூமியையும் அவற்றிற்கிடையேயுள்ள அனைத்தையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்குக் களைப்பேதும் ஏற்படவில்லை.
50:38. இன்னும், திட்டமாக வானங்களையும், பூமியையும், அவை இரண்டிற்கு மத்தியிலுள்ளவைகளையும் ஆறு நாட்களில் நாம் படைத்தோம், (அதனால்) எவ்வித களைப்பும் நம்மை தீண்டவில்லை.
50:39
50:39 فَاصْبِرْ عَلٰى مَا يَقُوْلُوْنَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوْعِ الشَّمْسِ وَقَبْلَ الْغُرُوْبِ‌ۚ‏
فَاصْبِرْ ஆகவே, பொறுமையாக இருப்பீராக! عَلٰى مَا يَقُوْلُوْنَ அவர்கள் பேசுகின்றவற்றின் மீது وَسَبِّحْ இன்னும் துதிப்பீராக! بِحَمْدِ புகழ்ந்து رَبِّكَ உமது இறைவனை قَبْلَ முன்னரும் طُلُوْعِ உதிப்பதற்கு الشَّمْسِ சூரியன் وَقَبْلَ முன்னரும் الْغُرُوْبِ‌ۚ‏ மறைவதற்கு
50:39. எனவே (நபியே!) அவர்கள் கூறுவதைப் பற்றிப் பொறுமையோடிருப்பீராக; இன்னும், சூரிய உதயத்திற்கு முன்னரும், (அது) அஸ்தமிப்பதற்கு முன்னரும் உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு நீர் தஸ்பீஹு செய்வீராக.
50:39. (நபியே!) அவர்கள் (உம்மைக் குறை) கூறுவதைப் பற்றி (கவலைப்படாதீர்;) நீர் பொறுமையாக அதைச் சகித்துக் கொண்டிருந்து, சூரிய உதயத்திற்கும், அது மறைவதற்கும் முன்னர் உமது இறைவனைப் புகழ்ந்து துதி செய்துவருவீராக!
50:39. (நபியே!) இவர்கள் புனைந்துரைக்கும் பேச்சுகள் குறித்து பொறுமையை மேற்கொள்ளும். உம் இறைவனைப் புகழ்வதுடன் அவனைத் துதிப்பீராக; சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும்! மேலும், இரவு நேரத்திலும்!
50:39. எனவே (நபியே!) அவர்கள் (உம்மைக் குறை) கூறுவதைப் பற்றி (பொருட்படுத்தாது) நீர் பொறுமையுடனிருப்பீராக! இன்னும் சூரிய உதயத்திற்கு முன்னரும், (அதன்) அஸ்தமனத்திற்கு முன்னரும் உமதிரட்சகனின் புகழைக் கொண்டு துதி செய்து கொண்டுமிருப்பீராக!
50:40
50:40 وَمِنَ الَّيْلِ فَسَبِّحْهُ وَاَدْبَارَ السُّجُوْدِ‏
وَمِنَ الَّيْلِ இரவிலும் فَسَبِّحْهُ அவனை துதிப்பீராக! وَاَدْبَارَ பிறகும் السُّجُوْدِ‏ தொழுகைகளுக்கு
50:40. இன்னும் இரவிலிருந்தும், ஸுஜூதுக்குப் பின்னரும் அவனைத் தஸ்பீஹு செய்வீராக.
50:40. இரவில் ஒரு பாகத்திலும், ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் அவனைத் துதி செய்வீராக!
50:40. அவனைத் துதிப்பீராக; சிரம்பணிந்து வணங்கி முடிந்த பின்பும் கூட!
50:40. இன்னும், இரவில் ஒரு பாகத்திலும், (ஒவ்வொரு முறையும்) சிரம்பணிந்(து தொழு)ததற்குப் பின்னரும் அவனைத் துதி செய்து கொண்டிருப்பீராக!
50:41
50:41 وَاسْتَمِعْ يَوْمَ يُنَادِ الْمُنَادِ مِنْ مَّكَانٍ قَرِيْبٍۙ‏
وَاسْتَمِعْ நீர் செவியுறுவீராக! يَوْمَ நாளில் يُنَادِ அழைக்கின்ற الْمُنَادِ அழைப்பவர் مِنْ مَّكَانٍ ஓர் இடத்தில் இருந்து قَرِيْبٍۙ‏ சமீபமான(து)
50:41. மேலும், சமீபமான இடத்திலிருந்து கூவி அழைப்பவர் அழைக்கும் நாளை(ப் பற்றி நபியே!) நீர் செவிமடுப்பீராக.
50:41. (நபியே!) நீர் செவிமடுத்துக் கேட்பீராக. (சமாதிகளுக்கு) சமீபமான இடத்திலிருந்து (கொண்டு ‘‘மரணித்தவர்களே! எழும்புங்கள்'' என்று) அழைப்பவர் அழைக்கும் நாளில்,
50:41. மேலும், கேளுங்கள். எந்த நாளில், அழைப்பவர் (ஒவ் வொரு மனிதருக்கும்) அருகிலிருந்து அழைப்பாரோ
50:41. மேலும், சமீபமான இடத்திலிருந்து அழைப்பவர், அழைக்கும் நாளை(ப் பற்றி) செவிமடுப்பீராக!
50:42
50:42 يَوْمَ يَسْمَعُوْنَ الصَّيْحَةَ بِالْحَـقِّ‌ ؕ ذٰ لِكَ يَوْمُ الْخُـرُوْجِ‏
يَوْمَ நாளில் يَسْمَعُوْنَ அவர்கள் செவியுறுகின்ற الصَّيْحَةَ அந்த சப்தத்தை بِالْحَـقِّ‌ ؕ உண்மையில் ذٰ لِكَ அதுதான் يَوْمُ நாளாகும் الْخُـرُوْجِ‏ வெளியேறுகின்ற
50:42. அந்நாளில், உண்மையைக் கொண்டு ஒலிக்கும் பெரும் சப்தத்தை அவர்கள் கேட்பார்கள். அதுதான் (மரித்தோர்) வெளியேறும் நாளாகும்.
50:42. (வானவர்கள் அவர்களை விரட்டி ஓட்டும்) பெரும் சப்தத்தை மெய்யாகவே அவர்கள் அந்நாளில் கேட்பார்கள். அதுதான் (மரணித்தவர்கள் சமாதியிலிருந்து) வெளிப்படும் நாள்.
50:42. எந்நாளில் மக்கள் அனைவரும் ஒன்று திரட்டி எழுப்புவதன் ஓசையை மிகச் சரியாகச் செவியுற்றுக் கொண்டிருப்பார்களோ அந்நாள்தான் பூமியிலிருந்து இறந்தவர்கள் வெளிப்படும் நாளாகும்.
50:42. பெரும் சப்தத்தை உண்மையாகவே, அவர்கள் கேட்கும் நாள், அதுதான் (மரணித்தோர் சமாதியிலிருந்து) வெளிப்படும் நாள் ஆகும்.
50:43
50:43 اِنَّا نَحْنُ نُحْىٖ وَنُمِيْتُ وَاِلَيْنَا الْمَصِيْرُۙ‏
اِنَّا نَحْنُ நிச்சயமாக நாம்தான் نُحْىٖ உயிர்ப்பிக்கின்றோம் وَنُمِيْتُ இன்னும் மரணிக்க வைக்கின்றோம் وَاِلَيْنَا இன்னும் நம் பக்கமே இருக்கின்றது الْمَصِيْرُۙ‏ மீளுமிடம்
50:43. நிச்சயமாக நாமே உயிர் கொடுக்கிறோம்; நாமே மரணிக்கும்படிச் செய்கிறோம் - அன்றியும் நம்மிடமே (எல்லோரும்) மீண்டு வர வேண்டியிருக்கிறது.
50:43. நிச்சயமாக நாம்தான் உயிர்ப்பிக்கிறோம்; நாம்தான் மரணிக்கச் செய்கிறோம்; நம்மிடமே அனைவரும் வரவேண்டியதிருக்கிறது.
50:43. திண்ணமாக, நாமே வாழ்வை அருளுகின்றோம். நாமே மரணத்தை அளிக்கின்றோம். மேலும், அந்த நாளில் அனைவரும் நம் பக்கமே திரும்பி வர வேண்டியிருக்கிறது.
50:43. நிச்சயமாக நாமே, உயிர்ப்பிகின்றோம், மரணிக்குமாறும் நாம் செய்கின்றோம், நம்மிடமே (யாவரும்) திரும்பி வரவேண்டியதிருக்கின்றது.
50:44
50:44 يَوْمَ تَشَقَّقُ الْاَرْضُ عَنْهُمْ سِرَاعًا‌ ؕ ذٰ لِكَ حَشْرٌ عَلَيْنَا يَسِيْرٌ‏
يَوْمَ நாளில் تَشَقَّقُ الْاَرْضُ பூமி பிளந்துவிடும் عَنْهُمْ அவர்களை விட்டும் سِرَاعًا‌ ؕ அதிவிரைவாக வெளியேறுகின்ற ذٰ لِكَ இது حَشْرٌ ஒன்றுதிரட்டல்தான் عَلَيْنَا நமக்கு يَسِيْرٌ‏ இலகுவான
50:44. பூமி பிளந்து, அவர்கள் வேகமாக (வெளியே) வரும் நாள்; இவ்வாறு (அவர்களை) ஒன்று சேர்ப்பது நமக்கு எளிதானதாகும்.
50:44. (மரணித்தவர்களை மூடிக்கொண்டிருக்கும்) பூமி வெகு தீவிரமாக (வெடித்து) அவர்களை விட்டு விலகும் நாளை (நினைவு கூருவீராக). அதுதான் (விசாரணைக்காக அனைவரையும்) ஒன்று சேர்க்கும் நாள். இ(வ்வாறு செய்வ)து நமக்கு மிக்க எளிதானதே.
50:44. அன்று பூமி வெடிக்கும்; மக்கள் (அதனுள்ளிருந்து வெளிப்பட்டு) விரைவாக ஓடிக்கொண்டிருப்பார்கள். இவ்வாறு எழச்செய்வது நமக்கு மிக எளிதானதாகும்.
50:44. பூமி, அவர்களை விட்டும் பிளந்து விடும்நாளில், (அவர்களின் கப்ருகளிலிருந்து வெளியேறி அழைப்பாளரின்பால்) விரைந்தவர்களாக (வருவார்கள்) அது (படைப்பினங்களை) ஒன்று திரட்டுவதாகும், (அது) நமக்கு எளிதானதாகும்.
50:45
50:45 نَحْنُ اَعْلَمُ بِمَا يَقُوْلُوْنَ‌ وَمَاۤ اَنْتَ عَلَيْهِمْ بِجَـبَّارٍ‌ فَذَكِّرْ بِالْقُرْاٰنِ مَنْ يَّخَافُ وَعِيْدِ‏
نَحْنُ اَعْلَمُ நாம் அதிகம் அறிந்தவர்கள் بِمَا يَقُوْلُوْنَ‌ அவர்கள் கூறுகின்றவற்றை وَمَاۤ اَنْتَ நீ இல்லை عَلَيْهِمْ அவர்களை بِجَـبَّارٍ‌ அடக்கக்கூடியவராக فَذَكِّرْ ஆகவே, அறிவுரை வழங்குவீராக! بِالْقُرْاٰنِ இந்த குர்ஆன் மூலமாக مَنْ يَّخَافُ பயப்படுகின்றவருக்கு وَعِيْدِ‏ எனது எச்சரிக்கையை
50:45. அவர்கள் கூறுவதை நாம் நன்கறிவோம் - நீர் அவர்கள் மீது நிர்ப்பந்தம் செய்பவரல்லர், ஆகவே (நம்) அச்சுறுத்தலை பயப்படுவோருக்கு, இந்த குர்ஆனை கொண்டு நல்லுபதேசம் செய்வீராக.  
50:45. (நபியே! உம்மைப் பற்றி) அவர்கள் கூறுவதை நாம் நன்கறிவோம். நீர் அவர்களை நிர்ப்பந்திக்கக்கூடியவரல்ல. எனது வேதனையைப் பயப்படுபவர்களுக்கு இந்த குர்ஆனைக் கொண்டு நீர் நல்லுபதேசம் செய்வீராக!
50:45. (நபியே!) இந்த மக்கள் பேசும் பேச்சுகளை நாம் நன்கு அறிகின்றோம். இவர்களை நிர்ப்பந்தப்படுத்தி ஏற்கச் செய்வது உமது பணியல்ல. என் எச்சரிக்கைக்கு அஞ்சுகின்ற ஒவ்வொருவருக்கும் நீர் இந்தக் குர்ஆனைக் கொண்டு அறிவுரை கூறுவீராக!
50:45. (நபியே! உம்மைப்பற்றி) அவர்கள் கூறுவதை நாம் மிக அறிவோம், மேலும், நீர் அவர்களை அடக்கியாள்பவரல்லர், ஆகவே, (நம்முடைய) அச்சுறுத்தலைப்பயப்படுவோரை இந்த குர் ஆனைக் கொண்டு நீர் நல்லுபதேசம் செய்வீராக!