101. ஸூரத்து அல்காரிஆ(திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி)

மக்கீ, வசனங்கள்: 11

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
اَلْقَارِعَةُ ۟ۙ
اَلْقَارِعَةُ ۙ‏திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது
அல் காரி'அஹ்
முஹம்மது ஜான்
திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).
அப்துல் ஹமீது பாகவி
(மரணித்தவர்களையும்) திடுக்கிடச் செய்யும் சம்பவம்!
IFT
பயங்கரமான நிகழ்ச்சி!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(தன் அமளியினால் இதயங்களைத்) தட்டக்கூடியது.
Saheeh International
The Striking Calamity -
مَا الْقَارِعَةُ ۟ۚ
مَاஎன்னالْقَارِعَةُ‌ ۚ‏திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது
மல் காரிஅஹ்
முஹம்மது ஜான்
திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன?
அப்துல் ஹமீது பாகவி
(அத்தகைய) திடுக்கிடச் செய்யும் சம்பவம் என்ன?
IFT
அந்த பயங்கரமான நிகழ்ச்சி என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தட்டக்கூடியது என்றால் என்ன?
Saheeh International
What is the Striking Calamity?
وَمَاۤ اَدْرٰىكَ مَا الْقَارِعَةُ ۟ؕ
وَمَاۤஇன்னும் எதுاَدْرٰٮكَஉமக்கு அறிவித்ததுمَاஎன்ன(வென்று)الْقَارِعَةُ ؕ‏திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது
வமா அத்ராக மல் காரி'அஹ்
முஹம்மது ஜான்
திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) திடுக்கிடச் செய்யும் சம்பவம் இன்னதென்று நீர்அறிவீரா?
IFT
அந்தப் பயங்கரமான நிகழ்ச்சி எதுவென்று உமக்குத் தெரியுமா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) தட்டக்கூடியது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
Saheeh International
And what can make you know what is the Striking Calamity?
یَوْمَ یَكُوْنُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوْثِ ۟ۙ
يَوْمَ(அந்)நாளில்يَكُوْنُஆகுவார்கள்النَّاسُமக்கள்كَالْفَرَاشِஈசல்களைப் போன்றுالْمَبْثُوْثِۙ‏பரப்பப்பட்ட
யவ்ம ய கூனுன் னாஸு கல் Fபராஷில் மBப்தூத்
முஹம்மது ஜான்
அந்நாளில் சிதறடிக்கப்படட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில் மனிதர்கள் சிதறிக்கிடக்கும் ஈசல்களைப் போல் ஆகிவிடுவார்கள்.
IFT
அந்நாளில் மக்கள், சிதறிக் கிடக்கும் ஈசல்கள் போலவும்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அந்நாளில் மனிதர்கள் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப்போல் ஆகிவிடுவார்கள்.
Saheeh International
It is the Day when people will be like moths, dispersed,
وَتَكُوْنُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوْشِ ۟ؕ
وَتَكُوْنُஇன்னும் ஆகும்الْجِبَالُமலைகள்كَالْعِهْنِமுடியைப் போன்றுالْمَنْفُوْشِؕ‏சாயம் ஏற்றப்பட்ட
வ த கூனுல் ஜிBபாலு கல் 'இஹ்னில் மன்Fபூஷ்
முஹம்மது ஜான்
மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.
அப்துல் ஹமீது பாகவி
கொட்டப்பட்ட பஞ்சுகளைப்போல் மலைகள் ஆகிவிடும்.
IFT
மேலும், மலைகள் கடையப்பட்ட வண்ண வண்ணக் கம்பளியைப் போலவும் ஆகிவிடும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் மலைகள் கொட்டப்(பட்டு சாயம் ஏற்றப்)பட்ட பஞ்சைப்போன்று ஆகிவிடும்.
Saheeh International
And the mountains will be like wool, fluffed up.
فَاَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِیْنُهٗ ۟ۙ
فَاَمَّا مَنْஆகவே, யார்ثَقُلَتْகனத்தனவோمَوَازِيْنُهٗ ۙ‏அவருடைய நிறுவைகள்
Fப-அம்மா மன் தகுலத் ம-வாZஜீனுஹ்
முஹம்மது ஜான்
எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ-
அப்துல் ஹமீது பாகவி
எவருடைய (நன்மையின்) எடை கனத்ததோ,
IFT
பிறகு, எவருடைய எடைத்தட்டுகள் கனத்திருக்குமோ
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, எவருடைய (நன்மையின்) எடை கனத்ததோ,
Saheeh International
Then as for one whose scales are heavy [with good deeds],
فَهُوَ فِیْ عِیْشَةٍ رَّاضِیَةٍ ۟ؕ
فَهُوَஅவர்فِىْ عِيْشَةٍவாழ்க்கையில்رَّاضِيَةٍ ؕ‏திருப்தியான
Fபஹுவ Fபீ 'இஷதிர் ராளியஹ்
முஹம்மது ஜான்
அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்.
அப்துல் ஹமீது பாகவி
அவர் திருப்தியுள்ள வாழ்க்கையில் (சுகமாக) வாழ்ந்திருப்பார்.
IFT
அவர் மனத்திற்குகந்த வாழ்வைப் பெறுவார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர் திருப்தியுள்ள வாழ்க்கையில் (சுகமாக வாழ்ந்து கொண்)டு இருப்பார்.
Saheeh International
He will be in a pleasant life.
وَاَمَّا مَنْ خَفَّتْ مَوَازِیْنُهٗ ۟ۙ
وَاَمَّاஆக,مَنْயார்?خَفَّتْஇலேசாகி விட்டனவோمَوَازِيْنُهٗ ۙ‏அவருடைய நிறுவைகள்
வ அம்ம மன் கFப்Fபத் ம-வாZஜீனுஹ்
முஹம்மது ஜான்
ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ-
அப்துல் ஹமீது பாகவி
எவனுடைய (நன்மையின்) எடை இலேசாகி(ப் பாவ எடை கனத்து) விட்டதோ,
IFT
மேலும், எவருடைய எடைத்தட்டுகள் இலேசாக இருக்குமோ
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், எவருடைய (நன்மையின்) எடை இலேசாகி)ப் பாவ எடை கனத்துவிட்டதோ,
Saheeh International
But as for one whose scales are light,
فَاُمُّهٗ هَاوِیَةٌ ۟ؕ
فَاُمُّهٗஅவருடைய தங்குமிடம்هَاوِيَةٌ ؕ‏ஹாவியா
Fப-உம்முஹு ஹாவியஹ்
முஹம்மது ஜான்
அவன் தங்குமிடம் “ஹாவியா” தான்.
அப்துல் ஹமீது பாகவி
அவன் தங்குமிடம் ஹாவியாதான்.
IFT
அவருடைய தங்குமிடம் ஆழமான படுகுழிதான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர் தங்குமிடம் “ஹாவியா”தான்.
Saheeh International
His refuge will be an abyss.
وَمَاۤ اَدْرٰىكَ مَا هِیَهْ ۟ؕ
وَمَاۤஇன்னும் எதுاَدْرٰٮكَஉமக்கு அறிவித்ததுمَا هِيَهْ ؕ‏அது என்னவென்று
வமா அத்ராக மா ஹியஹ்
முஹம்மது ஜான்
இன்னும் (“ஹாவியா”) என்ன என்று உமக்கு அறிவித்தது எது?
அப்துல் ஹமீது பாகவி
அந்த ஹாவியா இன்னதென்று (நபியே!) நீர் அறிவீரா?
IFT
அது என்னவென்று உமக்குத் தெரியுமா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(ந்த ஹாவியாவான)து என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
Saheeh International
And what can make you know what that is?
نَارٌ حَامِیَةٌ ۟۠
نَارٌநெருப்புحَامِيَةٌ‏கடுமையாக எரியும்
னாருன் ஹாமியஹ்
முஹம்மது ஜான்
அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும்.
அப்துல் ஹமீது பாகவி
(அதுதான்) கனிந்து கொண்டிருக்கும் (நரக) நெருப்பாகும்.
IFT
கொழுந்து விட்டெரியும் நெருப்பு!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதுதான்) கடுமையாக சூடேற்றப்பட்ட (நரக) நெருப்பாகும்.
Saheeh International
It is a Fire, intensely hot.