1. அல்ஃபாத்திஹா(தோற்றுவாய்)
மக்கீ, வசனங்கள்: 7
டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்
1:1 بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
بِسْمِ பெயரால் اللهِ அல்லாஹ்வின் الرَّحْمٰنِ பேரருளாளன் الرَّحِيْمِ பேரன்பாளன்
1:1. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
1:1. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)
1:1. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
1:1. அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்).
1:2 اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ
اَلْحَمْدُ எல்லாப் புகழும் لِلّٰهِ அல்லாஹ்விற்கே رَبِّ இறைவன் الْعٰلَمِيْنَۙ அகிலத்தார்களின்
1:2. அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
1:2. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன்தான்) அகிலத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து தகுந்த முறையில் பக்குவப்படுத்துபவன்.
1:2. எல்லாப் புகழும் அனைத்துலகிற்கும் ரப் ஆகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும்.
1:2. அனைத்து புகழும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரியது.
1:3 الرَّحْمٰنِ الرَّحِيْمِۙ
الرَّحْمٰنِ பேரருளாளன் الرَّحِيْمِۙ பேரன்பாளன்
1:3. (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.
1:3. (அவன்தான்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன்,
1:3. அவன் மாபெருங் கருணையாளனாகவும், தனிப்பெருங்கிருபையாளனாகவும், இருக்கின்றான்.
1:3. (அவன்) அளவற்ற அருளாளன்; மிகக் கிருபையுடையவன்.
1:4 مٰلِكِ يَوْمِ الدِّيْنِؕ
مٰلِكِ அதிபதி يَوْمِ நாளின் الدِّيْنِؕ கூலி
1:4. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).
1:4. தீர்ப்பு நாளின் அதிபதி(யும் அவனே).
1:4. இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதியாகவும் இருக்கின்றான்.
1:4. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி.
1:5 اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُؕ
اِيَّاكَ உன்னையே نَعْبُدُ வணங்குவோம் وَاِيَّاكَ இன்னும் உன்னிடமே نَسْتَعِيْنُؕ உதவி தேடுவோம்
1:5. (இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
1:5. (அல்லாஹ்வே!) நாங்கள் உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம்.
1:5. உனக்கே நாங்கள் அடிபணிகிறோம். (இபாதத் செய்கிறோம்.) மேலும், உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம்.
1:5. (எங்கள் இரட்சகா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்;உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
1:6 اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ
اِهْدِنَا எங்களை நேர்வழி நடத்து الصِّرَاطَ பாதையில் الْمُسْتَقِيْمَۙ நேரான
1:6. நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!
1:6. நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!
1:6. எங்களுக்கு நீ நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக!
1:6. நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!
1:7 صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْۙ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ
صِرَاطَ பாதையில் الَّذِيْنَ எவர்கள் اَنْعَمْتَ அருள் புரிந்தாய் عَلَيْهِمْۙ அவர்கள் மீது غَیْرِ அல்லாதவர்கள் الْمَغْضُوْبِ கோபிக்கப்பட்டவர்கள் عَلَیْهِمْ அவர்கள் மீது وَلَا இன்னும் இல்லை الضَّآلِّيْنَ வழிகெட்டவர்கள்
1:7. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.
1:7. (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி. (உன்) கோபத்திற்குள்ளானவர்களோ வழிதவறியவர்களோ சென்ற வழியல்ல.
1:7. (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களின் வழி; உன்னுடைய கோபத்துக்கு ஆளாகாத மற்றும் நெறிதவறிப் போகாதவர்களின் வழி.
1:7. எவர்களின் மீது நீ அருள் புரிந்தாயோ அத்தகையோரின் வழி(யில் நடத்துவாயாக). (அவ்வழி உன்) கோபத்திற்கு உள்ளானவர்களுடையதும் அல்ல; வழி தவறியவர்களுடையதும் அல்ல.